தேவதுந்துமி ....இசைக்கருவி ..
அழிந்து வரும் கம்பளத்து கலைகளை கையில் எடுக்கும் ...இன்றைய இளைஞர்கள் ..கம்பளத்தாரின் இசை வாத்தியம் தேவதுந்துமி(உருமி) இதை இசைக்கும் போது கம்பளத்தார்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்தம் சூடேரி தேவராட்டம் ஆடினால், கட்டந்தரையும் புழுதி பறக்கும். அவ்வளவு ஏன் கம்பளத்தார்களின் நடைபழகும் தொட்டில் குழந்தையின் கால் கூட தானாக ஆட்டம் போடும்... தூக்கி வைத்திருக்கும் கைக்குழந்தையும் களத்தில் இறக்கி விட அடம் பிடிக்கும்....
தேவதுந்துமி தேவராட்டதற்கு உயிர் கலந்த இசை ஓசை ..தேவதுந்துமி கருவி எப்படி செய்யப்படுகிறது ...
உருண்டை வடிவமான தோற்றம் கொண்ட பலகை வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது
இந்த உருண்டை வடிவமான பலகையில் இரண்டுபக்கம் இருக்கும் தோல்பகுதி ..மூன்று மாதம் இருக்கும் வெள்ளாட்டு தோலில் நன்றக காயவைத்து ..வட்டமாக கத்தரித்து வேங்கைமரபலகையில் கட்டவேண்டும்
கட்டும்போது முறையாக நிதானமாக கட்டவேண்டும் ..கொஞ்சம் இழுத்து கட்டினால் ..தோல்பகுதி சிதிலடைந்துவிடும் ..
உறுமி இசை கருவிக்கு ஒலி வருவதற்கு இரண்டு குச்சிகள் தயாரிப்பதற்கு நொச்சி குச்சி எனும் மரத்தில் செய்யப்படுகிறது
உறுமி இசை ஒலி வருவதற்கு கருவியில் இருக்கும் தோலில் உண்ணங்குடி பால் வரும் பசை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும் ..ஒலி இசை வருவதற்கு இந்த உண்ணங்குடி பால் மிக முக்கியம் ..எப்பேர்ப்பட்ட பனி ,மழை காலங்களில் கூட இந்த உண்ணங்குடி பால் கருவியின் தோலில் தேய்த்தால் ஒலி அதிர்வு பத்து ஊர் பக்கம் கேக்கும் .
வேங்கைமரம் பலகையை சுற்றி இருக்கும் இசை அளவுகளை கொஞ்சம் கூட்ட ,குறைக்க உதவும் கருப்பு கயிறு .. முடியால் செய்யப்படுகிறது ..
இந்த தேவதுந்துமி இசைக்கருவி தயாரிக்க செலவு மதிப்பு மட்டும் தெரியவில்லை .இதன் மகிமை .தெரிந்தவர்கள் கூறலாம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக