வியாழன், 31 மே, 2018

தலைவரின் தகுதிகள் ....

உலகில் உயிர் வாழ்க்கை என்பது மூச்சு விடுவதால் மட்டும் நிலைபெறுமா என்ன ? எவரேனும் ஓர் அரிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அது சுவாசித்து உயிர் வாழ்வதைவிட மேலானதாகும். ஒருவர் அரிய, அழகிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அவரின் முன்மாதிரி பிறரால் பின்பற்றத் தக்கதாகவும் இருக்க வேண்டும். வழிகாட்டி எனப்படுபவரின் நடிப்பு வாழ்க்கையால் நல்ல விளைவு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. தலைவர் என்பவர் தன் குறைபாடுகளின் மீது தானே காரி உமிழ்ந்து கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்வதில்தான் உயர்வின் உச்ச நிலைக்குச் செல்கின்றார். இதற்குத் தடையாக நிற்பது மனித மனம்தான். அதைத் தடுப்புகளால் கட்டுப்படுத்தியவர்தான் உண்மையான தலைவராக முடியும்.
.
உண்மையான தலைவர் என்பவர், உள்ளங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட எல்லைகளைக் கடந்த நிலைகளை அடைவதற்காகவும் பாடுபடுவார். எப்போதும் மிகச் சரியானது எது என்பதைக் தேடிக் கொண்டே இருப்பார். பரம்பரை பரம்பரையாக உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார். அந்த தலைவர் என்ன விலை கொடுத்தாவது, உண்மைக்கு உடந்தையாகவே இருப்பார்.
.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒன்றும் இயலாதவர்களுக்கும், உரிமையை இழந்தவர்களுக்கும், ஆதரவாக அவர் இருக்க வேண்டும்; அவர்களை நசுக்க நினைப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இவை அனைத்தும், தகைமை மிக்க தலைவரின் மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகும்.
.
தனிப்பட்ட முறையில், தலைவர் என்பவர் நம்பத் தகுந்தவராக இருக்க வேண்டும். மக்களும், அவரைப் பின்பற்றினால் நமக்கு நன்மை உண்டு என்று கருத வேண்டும். தலைமைத்துவம் என்பதன் இலக்கணமே, அனைத்திலும் முன்னிலை வகிப்பதுதான். எனவே, தலைமை ஏற்பது என்பது, இறைவனையன்றி எதற்கும் அஞ்சாதிருப்பதாகும். பொது மக்களின் எழுச்சி என்பது சிறிய எதிர்பார்ப்புகளுக்காக அல்லாமல், பெரிய எதிர்பார்ப்பே அவர்களைப் பொங்கியெழச் செய்யும். மேல் நோக்கிப் பார்க்கப்படுபவரே தலைமைக்குத் தகுதியானவர்; கீழாகப் பார்க்கப்படுவர் அல்லர்.
.
அதே வேளை, தலைவர் என்பவர் தொலை நோக்குப் பார்வையும், அதில் தெளிவும் உடையவராக இருக்க வேண்டும். பெரும்பெரும் குறிக்கோள்களை அடைவதற்கான வழி தெரியாவிட்டால், அவை பற்றிக் கனவு காண்பது வீண் வேலை. தான் கண்ட கனவின் பக்கம் தன் ஆளுகையின் கீழ் இருப்பவர்களை முறையாக வழி நடத்திச் செல்லும் திறமை படைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும். பலமைல்கற்களைக் கடந்து, தான் கண்ட கனவை நனவாக்குவதில் அந்தத் தலைவர் முனைப்பாய் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, தனது இலட்சியத்தை அடையும் பலமுனைச் செயல்பாடுகளை இயற்றுவதற்குத் தகுதி படைத்த செயலாளர்கள் பலரை உருவாக்குவதும் அவருடைய பணியே ஆகும். ஏனெனில், எல்லாப் பணிகளையும் தான் ஒருவரே செய்யத் தலைவரால் இயலாது. மிகத் தகுதி வாய்ந்த, தான் கண்ட கனவை நனவாக்க திறமையுள்ள செயல் வீரர்களை உருவாக்குவது தலைவருக்கான பொறுப்புகளுள் தலையாயதாகும். தன்னிகரற்ற தலைவரானவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட செயல் வீரர்கள் தான் வழங்கிய பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுகின்றார்களா என்பதை அவர்களுக்கு அருகில் இருந்தே கண்காணித்து வரவேண்டும்.
.
இறுதியாக, தான் மென்னெடுத்துச் சென்ற நற்பனிகள் தான் மறைந்த பின்னரும் வழிவழியாகத் தன் சமுதாயத்தால் அவர்களின் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றப்படுவதை ஆதரவு வைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும்; அதற்கான உபதேசங்களைச் செய்து வரவும் வேண்டும். ஏனெனில், தலைவர் ஒருவருக்குப் பின்னால் அவருடைய போதனைகள் செயலுருப் பெறாமல் செத்து மடிந்து விடுமானால், அது அவருக்கும் அவர் உருவாக்கிய சமூகத்துக்கும் இழுக்கே ஆகும். எந்தச் சித்தாந்தமும் வெற்றிப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டுமாயின், அது மக்களால் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு சித்தாந்தமும் அல்லது வாழ்க்கை நெறியும் வெற்றியடைய வேண்டுமாயின், அதன் தலைவரின் நடைமுறை முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது போதனையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அத்தகைய முன்மாதிரி மட்டும் அமையாவிட்டால், அவரின் சித்தாந்தம் அந்தத் தலைவரின் தலைமுறையைத் தாண்டிப் பயணப்படும் வாய்ப்பை இழந்து, மறைந்தும் போய்விடும்....

இதைத்தான் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையில்  ...நம் மாப்பிள்ளைகள் ,தங்கைகள் தம்பிகள் ,
அண்ணன்கள் மற்றும் நம்  உறவு சொந்தங்களுடன் தலைவர் என்றமுறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன் ..ஒரு சிறுகுறிப்பு நான் தலைவர் என்று ஓரிடத்தில் கூட சொன்னதும் இல்லை .சொல்லவும் விருப்பம் இல்லை .என்றும் களப்பணியாளராக செயல்பட்டுக்கொண்டு உள்ளேன் இனிமேலும் அப்படிதான் செயல்படுவேன் ..நம் சமுதாய வளர்ச்சிக்கு ..தொடரும் என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....



வியாழன், 24 மே, 2018

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் ...

கடந்த 5 மாதங்களாக நூல் விழாவிற்கான ஏற்பாடுகள்(நிதி துறையில் மட்டும் நான் பொறுப்பேற்கவில்லை ) நம்ம மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ,நம் சமுதாய தலைவர்கள் ,நம் சொந்தங்கள் ,நண்பர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என்று இடைவிடாமல் பயணம் ...சென்றமாதம் மறைந்த எனது தந்தை யின் இழப்பு(கிருஷ்ணசாமி -உடுமலைப்பேட்டை ) ,என் பெரியம்மா திருமலையம்மாள் (தளி ஜல்லிபட்டி )...இரண்டுபேரும் இருந்திருந்தால் எத்தலப்பர் நூல் வெளியிட்டு விழாவை பார்த்து மகிழ்ச்சியும் ,பெருமையும் அடைந்த இருப்பார்கள் ...நூல்வெளியிட்டு விழா எந்த ஒரு தடையும் இல்லாமல் ,மனதில் நெருக்கடியை காட்டிக்கொள்ளாமல் மலர்ந்த முகத்துடன் ..வெற்றி விழாவாக  நடத்திகாட்டிய  அனைத்து நம் சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்  ......

ஒரு சமுதாய வளர்ச்சிக்கு என்னதான் உழைத்தாலும் ...பணி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தேடுவது அப்பாவைதான் ...ஏன் சொல்கிறேன் என்றால் ..எதுலப்பர் வரலாற்று நூலை கொண்டுவருவதற்கு என் அப்பாவின் பெரும் பங்கு உள்ளது ...கடந்த 5 வருடங்களாக களப்பணிக்கு போய்விட்டு வந்தது ...நான் எடுத்த புகைப்படங்கள் ,நம் சொந்தங்களின் ஊர்கள் ,நம் சொந்தங்களை பார்த்து பேசியது ஒன்றுவிடாமல் அவர்களிடம் கலந்துரையாடுவேன் ...அவர்களை பற்றி சிறு குறிப்பு தந்து உதவுவார் ...அதுவும் இந்த இரண்டு வரலாற்று நூல்களுக்கு பெரும் உதவியாக இருந்தது ...இந்த விழாவை அவர் மறையாமல் பார்த்து இருந்தால் ...கொஞ்சம் மனதில் சந்தோசம் இருந்திருக்கும் ....வரலாற்று நூலும் வெளிவந்துவிட்டது ,..

ஆனால் இப்பொழுது வீட்டுக்கு வந்தவுடன் தனியாக தனிமையை இப்போது உணர்கிறேன்
Being alone is very difficult.
 — feeling alone...மூன்று தெய்வங்களுக்கு நன்றி ..எனது தந்தை கிருஷ்ணசாமி ,எனது தமிழ் பேராசிரியர் இந்திரஜித் ,பாவலர் பழனிச்சாமி,தளிஜல்லிபட்டி  அவர்களின் ஆசிர்வாதத்துடன் ..என்றும் என்னுடன் இருப்பார்கள் .....இருந்தாலும் எனது அம்மாவுடன் நம்பிக்கையுடன் ,தன்னம்பிக்கையுடன் ,அடுத்தகட்ட பயணத்திற்கு பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் ....மனதில் புத்துணர்ச்சியுடன் ,உற்சாகத்துடன் ....என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....

செவ்வாய், 22 மே, 2018

2014....மலரும் நினைவுகள் ..
இன்று, நான் இருக்கும் கோவை நகரத்தில் உள்ள அனைத்து சிறுவர்பாடசாலைக்குமான ஓட்டப்போட்டி, சுமார் 2 km தூரம் ஓடிமுடிக்கவேண்டும். காலையிலையே எனது மகன் மிக ஆர்வத்துடன் barcelona football உடுப்புதான் போடணும் என்று அடம்பிடித்தும் சப்பாத்துகளில் jordan போட்டால்தான் காலுக்கு சௌகரியமாய் இருக்கும் என்றும் சொல்லி ஆயத்தமாகிப்போனான். அவன் தோற்றம் ஒரு வீரனுக்குரிய அம்சங்களுடன் நிறைந்திருந்தது எனக்கு இருப்புக்கொள்ளவில்லை, அவனுக்கு ஆச்சரியம் கொடுப்போமே என்றெண்ணி அவ்விடத்துக்கு நானும் போயிருந்தேன். அவனது வயதை ஒத்த 133 சிறுவர்கள் ஓடும் நேரமும் வந்தது. வரிசையில் நிற்கும்போது என்னை கண்டு கை அசைத்தான். துப்பாக்கியில் இருந்து ஒலி வரும் வரை அவன் நின்ற வேகம் காட்டிய ஆர்வம் எல்லாமே எனக்கு நம்பிக்கையை தந்தது. இதோ வெடி,, ஓடினான் ஓடினான் அவ்வளவு வேகம்,முகத்தில் இதுவரை நான் கண்டிராத ஒரு கடினத்தன்மை,கைகள் இரண்டும் முன்னோக்கி தூக்கி கால்கள் அவன் இடுப்பு உயரத்துக்கும் மேலாக எழும்பி அவன் வேகம் எடுத்தது குதிரைப்பாய்ச்சல்தான். 1km ஓடிவரும் இடத்துக்கு அவனைவிட வேகமாக நான் ஓடிப்போய் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட 50 பிள்ளைகள் வரை வந்துவிட்டார்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணோம். பிள்ளை விழுந்துட்டானோ என எண்ணி பதறியபடி நான் நிற்க தூரத்தில் அவனுடன் 5 சிறுவர்கள் சேர்ந்த போல நடந்துவந்தார்கள். அவனது முகத்தில்லிருந்த கடினம், ஆர்வம்,வெற்றி நோக்கிய வெறி எல்லாம் வியர்வையுடன் வழிந்துவிட்டிருந்தது. காற்றாட நடந்து காலின் கீழ் கிடக்கும் கற்களை பந்துகளாக்கி ஐவரும் கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஷியாம்  ஓடு ஓடு என்று நான் கத்த,, அவன் என் அருகில் மிக நிதானமாய் வந்து பார்த்தீங்களா அப்பா  முதல் அரைவாசி தூரம் நாங்கள் தான் முன்னுக்கு வந்தோம். இப்போ நாங்கள் களைத்துவிட்டோம் பின்னுக்கு வந்தவங்கள் ஓடுறாங்கள். அடுத்த முறை பின்னுக்கு ஓடிட்டு கடைசியில பிடிக்கணும் என்று அடுத்தவருட ஆசையை எனக்குள் விதைத்துவிட்டு ஓடினான். மொத்தமும் ஓடிமுடித்து வந்து இன்னுமொன்றும் சொன்னான், ''வெல்லுறது முக்கியமில்லை பங்குபெறுவதுதான் முக்கியம்'' என ஆசிரியர் சொன்னதாய். அவனை கட்டியணைத்து முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு வந்தேன்.

திங்கள், 21 மே, 2018

தேவதுந்துமி ....இசைக்கருவி ..

அழிந்து வரும் கம்பளத்து கலைகளை கையில் எடுக்கும் ...இன்றைய இளைஞர்கள் ..கம்பளத்தாரின் இசை வாத்தியம் தேவதுந்துமி(உருமி) இதை இசைக்கும் போது கம்பளத்தார்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்தம் சூடேரி தேவராட்டம் ஆடினால், கட்டந்தரையும் புழுதி பறக்கும். அவ்வளவு ஏன் கம்பளத்தார்களின் நடைபழகும் தொட்டில் குழந்தையின் கால் கூட தானாக ஆட்டம் போடும்... தூக்கி வைத்திருக்கும் கைக்குழந்தையும் களத்தில் இறக்கி விட அடம் பிடிக்கும்....

தேவதுந்துமி தேவராட்டதற்கு உயிர் கலந்த இசை ஓசை  ..தேவதுந்துமி கருவி எப்படி செய்யப்படுகிறது ...
உருண்டை வடிவமான தோற்றம் கொண்ட பலகை வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது
இந்த உருண்டை வடிவமான பலகையில் இரண்டுபக்கம் இருக்கும் தோல்பகுதி ..மூன்று மாதம் இருக்கும் வெள்ளாட்டு தோலில் நன்றக காயவைத்து ..வட்டமாக  கத்தரித்து வேங்கைமரபலகையில் கட்டவேண்டும்
கட்டும்போது முறையாக நிதானமாக கட்டவேண்டும் ..கொஞ்சம் இழுத்து கட்டினால் ..தோல்பகுதி சிதிலடைந்துவிடும் ..
உறுமி இசை கருவிக்கு ஒலி வருவதற்கு இரண்டு குச்சிகள் தயாரிப்பதற்கு நொச்சி குச்சி எனும் மரத்தில் செய்யப்படுகிறது

உறுமி இசை ஒலி வருவதற்கு கருவியில் இருக்கும் தோலில் உண்ணங்குடி பால் வரும் பசை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும் ..ஒலி இசை வருவதற்கு இந்த உண்ணங்குடி பால் மிக முக்கியம் ..எப்பேர்ப்பட்ட பனி ,மழை காலங்களில் கூட இந்த உண்ணங்குடி பால் கருவியின் தோலில் தேய்த்தால் ஒலி அதிர்வு பத்து ஊர் பக்கம் கேக்கும் .

வேங்கைமரம் பலகையை சுற்றி இருக்கும் இசை அளவுகளை கொஞ்சம் கூட்ட ,குறைக்க உதவும் கருப்பு கயிறு .. முடியால் செய்யப்படுகிறது ..

இந்த தேவதுந்துமி இசைக்கருவி தயாரிக்க செலவு மதிப்பு மட்டும் தெரியவில்லை .இதன் மகிமை .தெரிந்தவர்கள் கூறலாம் .

ஞாயிறு, 20 மே, 2018

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலையில், வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்றுத்திருவிழா நேற்று நடந்தது. கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜூ 'தென்கொங்குநாட்டின் முதல் விடுதலைப்போர்' என்ற நுாலை வெளியிட்டு பேசியதாவது:சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்ட தியாகிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் சிறப்பை அடுத்த தலை
முறைக்கு எடுத்துச்செல்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது.
உடுமலை அடுத்த தளியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தவர் எத்தலப்பர். கட்டபொம்மன், வாஞ்சிநாதன் வரிசையில் எத்தலப்பருக்கும் முக்கிய இடமுண்டு. சுதந்திர போராட்டத்துக்காக, அவர் செய்த பணிகள் குறித்து வெளியிடப்பட்ட இந்த நுால், அனைத்து பொதுத்துறை நுாலகங்களிலும் கிடைக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் ராஜூ பேசினார்.

நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேவராட்டம் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி :தினமலர் ....20-05-2018


திருப்பூர்
தளி எத்தலப்பருக்கு மணிமண்டபம் கட்டப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் மன்னர் தளி எத்தலப்பருக்கு உடுமலையில் மணி மண்டபம் கட்டப்படும் என்று செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், உடுமலை அருகே தளியில் 1801ஆம் ஆண்டு ஆண்ட்ரோ கேதிசு என்ற ஆங்கிலேயரை தூக்கிலிட்ட தமிழ் மன்னர் எத்தலப்பருக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரியும், தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்' நூல் வெளியீட்டு விழாவும் உடுமலையில் முப்பெரும் விழாவாக சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். விழாவில் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
உடுமலை அருகே தளி பாளையப்பட்டு பகுதியை குறு நில மன்னரான எத்தலப்ப நாயக்கர் 1,800களில் ஆண்டு வந்தார். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த எத்தலப்ப நாயக்கர் விடுதலைப் போராட்டத்தில் வாஞ்சிநாதனைப் போன்று மிக முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவராவார்.
எனவே, எத்தலப்ப நாயக்கருக்கு தமிழக அரசு சார்பில் உடுமலையில் மணிமண்டபம் கட்ட உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். இந்த விழாவில் வெளியிடப்பட்டதென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்' நூல் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தளி எத்தலப்ப நாயக்கரின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து பேசினார்.
தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்' நூலை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட அதை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய நடனமான தேவராட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடனம் ஆடினர்.
முன்னதாக, உடுமலை குட்டைத் திடலில் உள்ள உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேல், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நன்றி .தினமணி ...
தென்கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர் ...களப்பணி ...2015...என் தமிழ் பேராசிரியர் .க.இந்திரசித்து...மற்றும் பாவலர் பழனிசாமி ...
உடுமலை வரலாறு 
August 10, 2015 · 
உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் மூன்றாம் கட்ட களப்பணி ----- சல்லிபட்டி 
-------------------------------------------------------------
09.08.2015 ஞாயிறன்று உடுமலை வரலாற்றுக்குழுவின் களப்பணி சல்லிபட்டி நுாலக வளாகத்தில் நடைபெற்றது. புகழ் வீரன் எத்தலப்பன் பற்றிய தரவுகளுக்காக வரலாற்றுக்குழுவின் சிவகுமார் மூலம் முன்பே அந்தப் பகுதி மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு பழனிசாமி என்னும் 78 அகவையுள்ள பெரும்பாவலர் நேர்காணல் காலை 10.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரையிலும் மீண்டும் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மிகச்சிறப்பானதொரு முனைவர் க.இந்திரசித்து வழி பதிவு செய்யப்பட்டது. 
எத்தலப்பன் பற்றிய செய்திகளை தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள பதிவுகளில் சல்லிபட்டி பாளையம் என்னும் பகுதியில் அச்சாக வெளிவந்ததையும் பத்திரிகை செய்தி நகல்களையும் நமக்கு ஆவணமாகக் கொடுத்து எத்தலப்பன் பற்றிய செய்திகளை கதைப்பாடல்களாக பாடிக்காட்டினார் பாவலர் பழனிசாமி. 
பிற்பகல் திருப்பூரிலிருந்து வருகை புரிந்த ராமகிருஷ்ணன் மேலும் எத்தலப்பன் பற்றிய தரவுகளை உறுதிப்படுத்தினார்.
மேலும் அந்த நூலகத்தில் கல்வித்தந்தை காமராசர் வருகை புரிந்த நிகழ்வையும் அங்குக் குழந்தைகளுக்கு பல ஆளுமைப் பயிற்சிகளையும் திறன்களையும் கற்றுக்கொடுக்கும் அய்யா இலட்சுமணசாமி அவர்களும் நிறைய தரவுகளைக் கொடுத்து உதவினார்.
-----------------------------------------------
இவர்களைப் போன்று நல்ல உள்ளம் படைத்த 
நண்பர்களால் எங்களது உடுமலை வரலாற்று ஆவணப்பணி மிகவும் விரைவாகவும் மன நெகிழ்வுடனும் செல்கிறது. இந்த நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்த நண்பர் சிவகுமார் அவர்களுக்கு நன்றி. 
பேராசிரியர் கண்டிமுத்து ஆசிரியர் மனோகரன் அவர்களுக்கும் நன்றிகள். .........
சிறப்பான உணவு கொடுத்த பாவலர் பழனிசாமி குடும்பத்தினருக்கும் நன்றி. இலட்சுமணசாமி அவர்களுக்கும் நன்றி. ..
மிக விரைவில் புகழ் வீரன் எத்தலப்பன் குறித்த குறுநூல் ஒன்று உடுமலை வரலாற்று ஆய்வுக் குழுவின் சார்பில் வெளியிடப்படும். அது பள்ளி .கல்லுர்ரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எத்தலப்பன் பற்றிய செய்திகள் சென்று சேரும் வகையில் அமையும். 
காலை முதல் மாலை வரை எடுத்த அனைதது ப் பதிவுகளும் காணொளியாகப் பதிவு செய்யய்பட்டுள்ளது.


வெள்ளி, 18 மே, 2018

தளி எதுலப்ப மன்னர் -நூல் வெளியிட்டு விழா


வரலாற்று சிறப்புமிக்க ...தளி எதுலப்ப மன்னரின் நூல் வெளியீட்டுக்கு வரும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் ..பொது செயலாளர் -நீதியரசர் .வி .தங்கராஜ் .M .A .,M .L ., அவர்கள் .
நல்லாசிரியர் மு .சங்கரவேலு .,அவர்களை மனதார வரவேற்கிறோம்  ..

தளி எதுலப்ப மன்னர் -நூல் வெளியிட்டு விழா

இடம் :தேஜஸ் மகால் ...நாள் :19.05.2018...நேரம் .3.30 மணி மாலை .

இங்ஙனம் ...
மாநில செயல்தலைவர்
மாவட்ட தலைவர்கள்
கிளை ஒன்றியத்தலைவர்கள் .

தமிழ்நாடு வீரபாண்டிய பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை 

புதன், 16 மே, 2018

மக்கள் வாழ்வில் ஒரு இடத்திற்காக போராடுபவர் போராடுவார். மக்கள் உங்களை மதிக்கிறார்கள், எப்போதும் உங்களுக்காக ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள் ...

உடுமலைப்பேட்டை

உடுமலை நோக்கி வரும் நம் சொந்தங்களை இரு கரம் கூப்பி வணங்கி

வரவேற்கிறோம் ............


உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்  நடத்தும்

இருபெரும் வரலாற்று திருவிழா ..

பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவியின்
பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் ,

1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ  கேதீசு  எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட தமிழ் மன்னன் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க கோரியும் மே 19 சனிக்கிழமை  அன்று உடுமலை தளி பாதையில் அமைந்துள்ள ...
தேஜஸ் மகாலில் (நகராட்சி திருமண மண்டபம் ) நடைபெறும்

தலைமை :
மாண்புமிகு .உடுமலை .கே .ராதாகிருஷ்ணன் .பி .காம்
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு .கடம்பூர் .ராஜு அவர்கள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

மதிப்பு மிகு சி.மகேந்திரன் .எம் .ஏ
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .இரா .ஜெயராமகிருஷ்ணன் .பி .எஸ் .சி .பி .எல்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .நீதி அரசர் .வி .தங்கராஜ் .எம் .ஏ .,எம் .எல்

மதிப்பு மிகு .கே கே .எம் .மோகன் குமார் .
கடவூர் .ஜமீன்தார்

ஆகியோர் பங்கேற்க ..உடுமலை வரலாற்றில் முதன் முறையாக ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஓரணியாய் நின்று எத்தலப்பர் புகழ் பாடும் போர் பரணி ..மாபெரும் தேவராட்ட பெருவிழா


நாள் : மே 19 சனிக்கிழமை .மாலை 3.30 மணி முதல்

அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ..

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்
271,தளி சாலை ,உடுமலைப்பேட்டை
பேசி .9842091244,9944066681,9698082028,

குறிப்பு :..குட்டை திடலில் நடைபெற இருந்த தேவராட்டம் நிகழ்வு ..
மழை காரணமாக ...உடுமலை தளி பாதையில் அமைந்த ..தேஜஸ் மகாலில் ..விழா நிகழ்வு நடைபெறும் ...


இதே ...மண்டபத்தில் தான் ....5 வருடங்களாக ..களப்பணியாற்றி எதுலப்பர் நாயக்கருக்கு வரலாற்று நூலை வெளியிடும் அளவுக்கு ..கொண்டு வந்து இருக்கிறேன் ..இனப்பற்றுடன் ...



திங்கள், 14 மே, 2018

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்  நடத்தும்

இருபெரும் வரலாற்று திருவிழா ..

பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவியின்
பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் ,

1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ  கேதீசு  எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட தமிழ் மன்னன் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க கோரியும் மே 19 சனிக்கிழமை  அன்று உடுமலை தளி பாதையில் அமைந்துள்ள ...
தேஜஸ் மகாலில் (நகராட்சி திருமண மண்டபம் ) நடைபெறும்

தலைமை :
மாண்புமிகு .உடுமலை .கே .ராதாகிருஷ்ணன் .பி .காம்
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு .கடம்பூர் .ராஜு அவர்கள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

மதிப்பு மிகு சி.மகேந்திரன் .எம் .ஏ
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .இரா .ஜெயராமகிருஷ்ணன் .பி .எஸ் .சி .பி .எல்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .நீதி அரசர் .வி .தங்கராஜ் .எம் .ஏ .,எம் .எல்

மதிப்பு மிகு .கே கே .எம் .மோகன் குமார் .
கடவூர் .ஜமீன்தார்

ஆகியோர் பங்கேற்க ..உடுமலை வரலாற்றில் முதன் முறையாக ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஓரணியாய் நின்று எத்தலப்பர் புகழ் பாடும் போர் பரணி ..மாபெரும் தேவராட்ட பெருவிழா


நாள் : மே 19 சனிக்கிழமை .மாலை 3.30 மணி முதல்

அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ..

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்
271,தளி சாலை ,உடுமலைப்பேட்டை
பேசி .9842091244,9944066681,9698082028,

குறிப்பு :..குட்டை திடலில் நடைபெற இருந்த தேவராட்டம் நிகழ்வு ..
மழை காரணமாக ...உடுமலை தளி பாதையில் அமைந்த ..தேஜஸ் மகாலில் ..விழா நிகழ்வு நடைபெறும் ...

ஞாயிறு, 13 மே, 2018

நமது சமுதாய சொந்தம் ஒருவர் பொதுவாழ்வுக்கு வந்து 25 வருடம் பணியாற்றியதற்கு...தற்பொழுது நம் சமுதாய பணிக்கு பணியாற்றி கொண்டு உள்ளார் ...அதற்காக ஒரு சிறப்பு செய்வதற்கு ... 

சனி, 12 மே, 2018

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...வாட்ஸாப்ப் எண் 9944066681
சுயநலம் இல்லாத ஜீவன் ....
பெத்தவங்கள ஏன் ...............
"அம்மா" 
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?
அ – உயிரெழுத்து. 
ம் – மெய்யெழுத்து . 
மா – உயிர் மெய்யெழுத்து.
அ – உயிரெழுத்து. 
ப் – மெய்யெழுத்து . 
பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
சுயநலம் இல்லாத ஜீவன் ....சிறு வயதில் தாயையும் ,தந்தையையும் இழந்த எனது தந்தையின் இறுதி மூச்சுவரை தன் கண் இமையை காத்து சுயநலம் இல்லாத பணிவிடை செய்தது தாய்மை ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..வாட்ஸாப்ப் எண் 994466681....

வெள்ளி, 11 மே, 2018

என் அன்புக்கும் பாசத்துக்கும் .உரிய முத்தையா பேராசிரியரை ..எனக்கு ..சுமார் ஆறு வருடங்கள்  ..பழக்கம் இல்லை ...பேராசிரியர் ..முத்தையாவிடம் பேசியதில்லை ...காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் ..நம் சமுதாய மாணவ சொந்தங்களை புதிதாக படிக்க இவரிடம் பேசியது இல்லை ..இவரின் சேவை ஆட்டம் .தேவராட்டம் ...புத்தகம் படித்தது இல்லை ..வேந்தர் டிவி யில் ..இவரின் நிகழ்வுகளை பார்த்தது இல்லை ..இவரை உடுமலை பகுதிக்கு அழைத்து வந்து ..நம் நடுகல் வழிபாடுகளை காட்டியது இல்லை ...இவரின் தொலைபேசி எண் கூட என்கிட்ட இல்லை ...தோழரே ...


நான்கு பேர் ......

கம்பள சமுதாயத்தின் ...
தொலை நோக்கு திட்டங்கள் ...
வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் ...
வேகமான தொழிநுட்ப வளர்ச்சியின் மூலம் ...
கம்பள சமூக ஊடகத்தின் மூலம் ...
எதிர்கால வளரும் கம்பள இளைய தலைமுறையினர் வளர்ச்சிக்கு
களப்பணியாற்ற இன்று உடுமலையில் சிறிய சந்திப்பு ...

மாப்பிள்ளைகள் ,தம்பிகளின் மாலை  பணிநேரம் முடிந்த பிறகு ....கிடைக்கும் சில மணி நேரத்தில் தான் சமுதாய வளர்ச்சி பற்றி தான் ...எங்களின் கலந்துரையாடல் இருக்கும் ...இடம் முக்கியமல்ல தோழரே ...

எங்களின் ...களப்பணி தேடல்கள் ...அபாயகரமான விலங்குகள் இருக்கும் மலையில் கூட இருக்கும் ...இடம் முக்கியம் இல்லை தோழரே ...

உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை .,மாப்பிள .....நீங்கள் நினைப்பது ...வெறும் வார்த்தைகளால் ...


பறையாட்டகலை பட்டய படிப்பு
எழுத்தளார் பாமரன் அவர்கள் நிமிர்வு கலையகம் முன்னெடுப்பில் தமிழ்கல்லூரியின் உதவியோடு பாரதியார் பல்கலைகழகத்தில் தொலைத்தூர ஓராண்டு பறை படிப்பாக பறையாட்டகலை அங்கீகரிக்கபட்டது குறித்து பேசியுள்ள சிறு காணொளி தொகுப்பு...
நடப்புகல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
இறுதிநாள் -20-5-2018
பறை கற்போம்...
nimirvu kalaiyagam...
நாம் எப்போது ...நம் உறுமி கலையை ..தேவராட்ட கலையை ...பட்டய படிப்பாக எப்போது கொண்டு வரப்போகிறாம் ...
நம் எதுலப்ப நாயக்கரின் வரலாற்றை கொண்டு வரவே ...ஆயிரத்து எட்டு தடைகள் ...அதுவும் நம் சமுதாய மக்களின் எதிர்ப்புகளே ...உள்ள நிலையில் ...நம் சமுதாய கலைகள் வளருமா ...விடைகளை தேடி ....தேடி பார்க்கிறேன் ...பெரும் மூச்சு மட்டும் வருகிறது .....

நன்றி ...சில சமயங்களில் மனதில் கொஞ்சம் தளர்வு வருகிறது ...

நம் தேவராட்ட கலையை ...உறுமி ..கலையை ...மற்றும் ..சேவையாட்டம் ......இதற்கான முயற்சிகள் ...பொது சமூக செயற்பாட்டாளர்களின் மூலம் ஆவணப்படுத்துவற்கு முயற்சி எடுத்து வருகிறேன் ...பார்க்கலாம் ..அதற்கான காலம் கனியும் ...நம்பிக்கையுடன் பயணம் ...

எழுத்தாளர் ...பாமரனுடன் ...

அதற்கான நேரம் ,காலம் வரும்போது சொல்கிறேன் ....


பறையர் ..பள்ளர் எல்லாம்...கல்வி ..வேலைவாய்ப்பில் முன்னேறி விட்டார்கள் ....பறையை எல்லாம் அவர்கள் அடிப்பதில்லை ...அமெரிக்காவில் ...உயர்சாதியினர் அடித்துக்கொண்டு உள்ளார்கள் ...


நம்மவர்கள் எழுதிய வரலாறுகளை கூறுங்கள் ....எனக்கு தெரியவில்லை ...அருமையான திட்டம் ...செயல்படுத்தலாம் ...அப்பாடா ...இந்த எழுச்சியை தான் எதிர்பார்தேன் ...கம்பளத்தான் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை ...கூட்டம் ....புகைப்பட கலைஞர் தம்பி ...அந்த கூட்டத்தை ...நம்ம தேவராட்ட நிகழ்வுக்கு கொண்டு வரணும் ....


வியாழன், 10 மே, 2018

அடாது மழை பெய்தாலும் விடாது ...தேவராட்டம் நடைபெறும்
திட்டமிட்டு செயல்படுவோம் ...திட்டமிட்டபடி செயல்படுவோம் ..
19-05-2018 சனிக்கிழமை  மாலை ..குட்டை திடலில் அதிரட்டும்
ஆயிரம் பேர் ஓரணியாய்  நின்று முரசு கொட்டும் போர்ப்பரணி ..
பொதுமக்களே ...நீங்கள் தேவராட்டதை காண வாருங்கள் ..
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின்
அரும்பெரும் பணி ....
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ,சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள்
கலந்துகொள்ளும்போது ...நாமும் கலந்துகொள்வோம் ..
நமக்கு தெரிந்த நண்பர்களையும் ,உறவினர்களையும்
வரவழைப்போம் ..வாருங்கள் ..வரலாற்று நிகழ்வுக்காக

வரலாறு படைப்போம் ..வாருங்கள் நண்பர்களே ....
45.....வயதினிலே
நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் எப்படி மாறியுள்ளது என்பதனை எனக்குப் புரிய வைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அவர் மேலாளர்  அறைக்கு முன் காத்துக் கொண்டிருந்தார்.

அவர் கட்டாயம் மாதத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து விடுவார். பாதி நாட்களுக்கு மேல் தாமதாகத்தான் வந்து சேர்வார். பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல நிர்வாகம் இறுதி எச்சரிக்கை கொடுத்தது. அப்போது தான் அவரின் குடும்பச் சூழ்நிலை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது.

அவர் மனைவியும் வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்க இவர் தான் அவர்களின் மகன், மகளின் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக இருந்துள்ளார். இது இயல்பானது தான். ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்குச் செல்லும் போது யாரோ ஒருவர் மற்ற பொறுப்புகளைப் பார்ப்பது இயல்பானது தான் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தைகளின் மருத்துவமனை, பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலும் இவர் மட்டும் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் மனைவி அலுவலகத்தில் விடுப்பு அனுமதிக்க மாட்டார்கள் என்றார்கள்.

எங்கேயோ பிசிறு தட்டுகின்றதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் நான் அவரிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

மீண்டும் ஒரு முறை பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். மதியம் தான் வருவேன் என்று அலைபேசி வாயிலாக அனுமதி கேட்ட போது நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மனைவியிடம் அழைத்துப் பேசிய அலுவலகப் பெண்மணி என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நிகழ்காலத்தின் மாறிய சூழலின் வேறொரு பரிணாமத்தை எனக்குக் காட்டியது. "என் பொண்ணும் பையனும் எனக்கிட்ட ஒட்டவே மாட்டார்கள். அவருதான் ஆரம்பத்திலேயிருந்து அவங்களைப் பார்த்துக்குறாரு. நான் கண்டு கொள்வதே இல்லை. அதனால் தான் அவர் லீவு எடுக்கிற மாதிரி ஆயிடுது" என்று அவர் சொன்ன போது தான் அம்மா என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள பாசம், பிரியம் போன்றவை எப்படி மாறியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.

இதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் குணாதிசியங்கள் சார்ந்த பலவிசயங்கள் இருந்தாலும் முழுமையாகப் பொறுப்புகளைத் துறப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாக எனக்குத் தெரிந்தது. இதே போல மனைவி பணிபுரிய கணவன்மார்கள் நிறுவன வேலைக்குச் அடிக்கடி விடுமுறை எடுக்கும் காரணம் புரிந்தது ...

வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரம் மிக முக்கியம். ஆனால் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றை இழந்து கொண்டே வரும் நிலையில் தற்போதைய குடும்ப வாழ்க்கை உள்ளது.

குழந்தைகளைக் கவனிக்க முடியாமலும், கற்றுக் கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியாத போது குழந்தைகள் தீவாக வளர்கின்றார்கள். கடைசியில் பலவற்றை இழந்து சிலவற்றைப் பெறும் வாழ்க்கை அமைகின்றது. அதுவே வாழும் முறையாகவும் மாறிவிடுகின்றது.

••••••••••

"என் மகனின் கணினி அறிவு பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே? அவன் ஒரு கில்லாடி சார்? என்று எப்போதும் என்னிடம் வந்து சொல்லும் அலுவலக நண்பர் அன்று சோகத்துடன் வந்து பகிர்ந்த செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள கணினியை தொடக்கத்தில் விளையாட்டு, படிப்பு என்று பயன்படுத்தி வந்தவனுக்கு நண்பர்களின் வழிகாட்டல் வழியை மாற்றியுள்ளது.

தொழில் நுட்பங்கள் தந்த வளர்ச்சி எதுவும் தவறில்லை என்ற கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. வயதும், வளர்ச்சியும் படிப்படியாக நிகழ்பவை. ஆனால் இப்போதுள்ள சூழல் குழந்தைகளின் அடிப்படை குணாதிசியங்களை மாற்றுகின்றது. பஞ்சு போன்ற மனதில் நஞ்சு கலந்து விட வாழ வேண்டிய வயதில் கருகிவிடுகின்றார்கள்.

அவரவர் கையில் வைத்துள்ள அலைபேசி என்பது நாசகார ஆயுதமாக மாறியுள்ளது. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற புரிதல் இல்லாத காரணத்தால் அசிங்கங்களைச் சிங்கமெனக் கருதிக் கொள்கின்றார்கள். கல்விக்கென்று ஒரு வயது. கலவிக்கென்று ஒரு வயது என்பது தலைகீழாக மாறும் போது இங்கே ஒவ்வொரு நாளும் வக்கிரம் அரங்கேறுகின்றது. வயதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லாத நிலையில் அது நேரிடையாகவே குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கின்றது.

நம் வாழ்வில் ஒரு லட்ச ரூபாய் என்பது நம் உழைப்பின் மூலம் பெற்றுச் சேமிப்பது என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால் இன்று கல்லூரி நுழைவதற்கு முன்பே மகனின் பைக் ஆசையை நிறைவேற்றுபவர் அதிகம். நரம்புகள் முறுக்கேற, நிலையில்லாத சிந்தனையோட்டத்தில் அவன் மட்டும் அழிவதில்லை. கூடவே பலரையும் காவு வாங்கி விட்டே செல்கின்றான். இந்த மாற்றங்கள் எதுவும் முன்பு எப்போதும் நிகழ்ந்தது இல்லை.

••••••••

ஒரு நாள் என் மகன்  எங்கள் மிஸ் அலைபேசி எண் என்று சொல்லி என் அலைபேசியில் சேமிக்கச் சொல்லியிருந்தார். எதற்காகவது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைத்தேன். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது அவரின் மிஸ் உருவாக்கிய வாட்ஸ் அப் குரூப் ல் இவரும் ஒரு அங்கத்தினராக மாறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டு நான் உள்ளே வந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு இதுவே முக்கிய வேலையாக இருந்தது. கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் எடுத்துப் பார்த்த போது ஒன்றுக்கும் உதவாத, அரட்டைச் சமாச்சாரங்களும், அவரவர் நடிகர்களின் வீர தீர பிரதாபங்களும் மீம்ஸ்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

இவர்களைக் குறைசொல்வதை விடக் குழுமத்தில் சேர்த்த ஆசிரியை அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். அன்றொரு நாள் காலாண்டு தேர்வு முடிவுகள் என்று சொல்லி பெற்றோர் வந்து கையொப்பமிட வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நூறு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் சந்திக்க விரும்பிய ஆசிரியை அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன்.

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத 45 வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால்.

அப்படியென்றால் இங்கு நல்லதே இல்லையா? என்ற கேள்வி வரும். நல்லது நிறைய உள்ளது. நம்பமுடியாத வாய்ப்புகளை வழங்கத் தயாராகவே உள்ளது. ஆனால் அதனைச் சுற்றிலும் உள்ள கெட்டவைகளை கடந்து வரவேண்டிய கட்டாயச் சூழலும் தற்போதைய குழந்தைகளுக்கு உள்ளது என்பதனை நாம் உணர்ந்து இருக்க வேண்டும்.

கல்வி பரவலாக்கப்படாமல் இருந்த காலகட்டத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விட்டு இறங்கினால் நம் குழந்தைகள் சந்திக்கும் ஒவ்வொருவரும் போட்டியாளர்களாகத்தான் தெரிகின்றார்கள். மனிதாபிமானம் அறவே தேவை இல்லை என்று ஆழ்மனதில் உருவாவது இந்த இடத்தில் தான். முறைப்படியான வாய்ப்பு வழங்காமல் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் வாழ்வில் தோற்றவர்களின் பட்டியல் இங்கு வெகு நீளம்.

குடும்ப வாழ்க்கையில் முக்கிய அங்கத்தினராக இருக்கும் மகன், மகளின் விருப்பங்கள், தேவைகள் என்று பாரபட்சமின்றி இப்போதைய பெற்றோர்களால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. இதுவே எதுவும் எளிதில் கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. கிடைக்காத போது தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள்.

பதின்ம பருவம், வளரிளம் பருவம், வளர்ந்த பருவம் என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்வோம்.

எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என்ற நிலை என்பது ஒரு இளைஞனின் வாழ்வில் முதலில் வரும். கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நானும் முயற்சித்தும் பார்ப்பேன் என்ற இரண்டாவது நிலையில் தான் அனுபவம் தன் பாடங்களை நடத்தத் தொடங்குகின்றது. மூன்றாவது நிலையில் என் அப்பா கோபக்காரர் ஆனால்? என்று தன் தந்தையைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கின்றது.

அந்த நிலையில் நிச்சயம் கல்லூரி வாழ்க்கை முடித்து அவர்களுக்குண்டான வாழ்க்கையைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குள் பெற்றோர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவம் சரியாகத் தெரியாவிட்டால் ஒவ்வொரு நாளும் மரணக்குழிக்குள் இறங்கி ஏற வேண்டியதாக இருக்கும்.

கிராமச் சூழலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை நகர்ப்புறத்திற்கு மாறினாலும் அவர்கள் பெரும்பாலும் மனதளவில் கிராமவாசிகளாகவே வாழ்கின்றனர். சிந்தனை, நோக்கம், செயல்பாடுகள் என்று அனைத்திலும் கிராமத்தின் தாக்கத்தை ஏதோவொரு நிலையில் பார்க்க முடியும். ஆனால் கிராமம் என்றே தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையென்பது முற்றிலும் புதிது.

வீட்டில் அரிசி சாப்பாடு என்றால் பணக்காரர் என்று பார்த்து வாழ்ந்த வாழ்க்கையில் இன்று அரிசி சாப்பாட்டை உங்கள் நோய்க்காகக் குறைத்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு உணவு முதல் உடைகள் வரைக்கும் மிதமிஞ்சி அனுபவிக்கும் நிலையில் இருக்கும் அந்தக் காலம் போல வராது. இப்ப எல்லாமே மோசம் சார்? என்பதைச் சொல்ல முடியுமா?

ஒவ்வொரு 45  வயதுக்காரர்களும் இருபது வயதுக்குள் இருப்பவர்கள், அதனைக் கடந்து வாழ்பவர்கள் என்று அடுத்த இரண்டு தலைமுறைகளுடன் வாழ்ந்தே ஆக நிலையில் உள்ளனர். 45 தைக் கடந்தவர்களின் அறிவென்பது இருபதைக் கடந்தவர்களுக்கு விளங்க முடியாததாக இருக்கும். அதுவே இருபதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.

இந்த இரண்டையும் கடந்து வரத் தெரிந்தவர்களுக்கும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை புரிந்தவர்களுக்கும் தலைமுறை இடைவெளி பெரிய அளவு பாதிப்பை உருவாக்காது. இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் சிறுசுங்க எல்லாம் எங்கே நம்ம பேச்சை கேட்குது என்ற புலம்பல் மொழி கட்டாயம் வரத்தான் செய்யும்.

இறுதியாக,

இங்கு எல்லாமே என் சொந்தம். கடைசி வரைக்கும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் முன்பு குடும்பத்தை வளர்க்க உதவியது. அதுவே இப்போது குடும்பங்கள் பிரிவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 15 வயதில் என் உரிமை இது? என்று பேசத் தொடங்கும் குழந்தைகளிடம் உங்கள் உரிமைகளை வார்த்தைகளாகப் பேசாதீர்கள். உரிமை என்பதற்கும் கடமை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். செயல் தான் முக்கியம்.

என் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் குழந்தைகளிடம் உடனே எதையும் புரிய வைக்க முயலாதீர்கள். அவர்களுக்குக் காலம் கற்றுக் கொடுக்கும் நேரம் வரவில்லை என்பதனை சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.

இப்போது நேருக்கு நேர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவரவர் குழந்தைகளின் பத்து வயதிற்குள் முடிந்து விடுகின்றது என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். சுருங்கிய உலகத்தில் மனமும் சுருங்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆசிரியர்களைத் தேடவில்லை. அறிவுரை தேவையில்லை. அவர்களுக்கான உலகத்தில் வாழ அவர்கள் தான் அவர்களின் தேவையைக் கண்டறிய முடியும்.

இவையெல்லாம் மாயம் என்பதனை அவர்கள் உணர பலசமயம் உங்கள் வாழ்க்கை முழுமையையும் அவர்களுக்காகப் பணயம் வைத்து ஆக வேண்டும். அது போன்ற சமயங்களில் அதற்காக உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து அவர்களுக்காகக் காவு கொடுத்து விடாதீர்கள். செல்வம் இருந்தாலும் ஆரோக்கியம் இழந்து நடைபிணமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

காலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள்.

காலம் மருந்து போடும்.

"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்....

( எனது 45 வயது ஆரம்ப  பயணம் முடிவடைந்தது. தொடர் வாசிப்புக்கு நன்றி...அடுத்த தொடர் ..எனது தந்தையின் வாழ்க்கை பயணம் ..குறைந்த காலம் எனக்கு தேவைப்படுகிறது ...உங்களின் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகம் அளிக்கும் .. )...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681.....வாட்ஸாப்ப் ..

செவ்வாய், 8 மே, 2018

மத்தியானம் தான் 
வெயிலு என்னா வெயிலு!!!
ஷ்ஷ்ஷஷஷப்ப்பாபாபா!!😰😰😰

45.....வயதினிலே

அப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும் நான் யோசிப்பதுண்டு. நம்பிக்கைகளுடன் தொடங்கும் திருமண வாழ்க்கை அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றி அடைந்ததாகச் சொல்லி விட முடியாது. முன்பு வெளியே தெரியாமல் இருந்தது. இப்போதும் அனைத்தும் வெளியே வந்து விடுகின்றது.

பொருத்தங்கள் என்பதனை அவரவர் நம்பிக்கைகள் வைத்துத் திருமணத்திற்கு முன்பு பார்த்தாலும் வாழும் சூழல் என்பதும், அவரவர் வளர்ந்த விதங்களின் காரணமாகப் பொருந்திப் போவதில்லை. பணம் இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுக்காத தம்பதியினரும், எல்லாமே இருந்தும் வெவ்வேறு துருவமாக வாழும் வாழ்க்கை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.

தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகின் மறுபுறம் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அடுத்த நொடியில் நம் பார்வைக்கு வந்து விடும் இந்த நேரத்தில் அந்தரங்கம் என்பதே இல்லாத சூழலில் நம் அனைவரின் செயல்பாடுகளும் ஏதோவொரு வழியில் வெளியே வந்து விடுகின்றது. பொத்திப் பொத்தி பாதுகாத்த குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் ஏதோவொரு சமயத்தில் பொது வெளிக்கு வந்து விடுகின்றது. திருமணம் முடிந்து சில வருடங்களில் அவரவர் குணாதிசியங்கள் முழுமையாக வெளியே தெரியத் தொடங்கும் சமயத்தில் தான் குழந்தைகள் குடும்பத்தில் வந்து சேர்கின்றார்கள்.

அரசியல், நிறுவனம், அமைப்புத் தொடங்கிக் குடும்பம் வரைக்கும் நம் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் எவரோ? அவர்களைத் தான் நாம் விரும்பச் செய்கின்றோம். நாம் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அனுமதிக்கவும் மாட்டோம். இது நேற்று இன்றல்ல. வாழையடி வாழையாக வந்த மரபு சார்ந்த பிரச்சனை. ஆனால் உலகம் வளர்ந்ததும், வளர்ந்த உலகத்தில் மாறிய நாகரிகத்திற்கும் முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியக் காரணமென்பது மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதே.

மற்ற நாடுகளை விட நம் குடும்ப அமைப்பு வலிமையானது, நெறிமுறையான வாழ்க்கையை நமக்குத் தந்தது என்பதனை நாம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் இந்த வலிமை என்ற வார்த்தைக்குள் வெளியே தெரியாத அடக்குமுறை இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தான் காலம் காலமாக இந்த அமைப்பைக் கொண்டு செலுத்திக் கொண்டு வந்தது. "அப்பா சொன்னது தான் இறுதி முடிவு" என்ற நிலையில் இருந்த குடும்ப வாழ்க்கை இப்போது மாறி விட்டது. "அம்மா முடிவெடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்பது இப்போது பாரபட்சமாகப் பார்க்கப்படுகின்றது.

காலம் ஒவ்வொரு சமயத்திலும் பலவிதமான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே தான் வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழல் கடந்த எந்த நூற்றாண்டிலும் கண்டிராத மாற்றங்களை, நம்பமுடியாத ஆச்சரியங்களைக் கொண்டு வந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. கடந்து சென்ற மாற்றங்கள் அனைத்தும் மனித மூளையின் மூலம் நடந்தது. இப்போது எந்திரங்கள் மூலம் நடக்கின்றது.

சிலருக்குப் புரட்சியாகப் பலருக்கு மிரட்சியாக உள்ளது. ஆச்சரியமாகத் தெரியும் பல மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அவலமாகவும் தெரிகின்றது.. எது சரி? எது தவறு? என்பதனையெல்லாம் மீறி இவையெல்லாம் எனக்குத் தேவை? இது என் பார்வையில் சரிதான் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றோம். நடந்த மாற்றத்திற்கு யாரோ ஒரு தலைவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதில் பொது நலம் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நபரும் மாற்றத்திற்கான காரணமாக இருக்கின்றார்கள்.

சூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது. மாற்றங்கள் என்ற பெயரில் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றிலும் உள்ள சுயநலம் உள்ளே இருப்பதைத் தெரிந்தே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் நமக்கான வாய்ப்பைத் தேடுகின்றோம். அதையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கின்றோம். இது நேரிடையாக மறைமுகமாக ஒவ்வொருவர் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை உருவாக்குகின்றது.

இங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது.

எதனால் இது நடந்தது? என்பதனை யோசிக்கும் முன்பு இருப்பதை இழந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. உழைப்பு என்பதின் வரையறை மாறியுள்ளது. முடிவெடுக்கும் திறனில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது என்று அறிவுரையாகப் போதிக்கப்படுகின்றது. முதல் முடிவு மாறும் போது அடுத்த முடிவுக்குச் செல்ல வேண்டும் என்று பாடங்களை உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சோர்ந்து போனவன் பின்னுக்குச் சென்றுவிடக் காரணக் காரியத்தைச் சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனின் உலகமாக மாறியுள்ளது.

இந்த இடத்தில் தான் மற்றொரு பிரச்சனை உருவாகின்றது. நம் தாத்தா அப்பாவைக் குறை சொன்னார். அது அப்பாவின் அணுகுமுறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று நாம் மகன்,மகள்களைக் குறை சொல்கின்றோம். அது அவர்களின் மாறிய பழக்கவழக்கங்கள் குறித்தே இருக்கின்றது. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது,

ஐம்பது வயதாகியும் கற்ற அனுபவங்கள் எதுவும் நமக்கு உதவவில்லையே? என்ற ஆதங்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமலும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒன்று சேர்ந்து அழுத்தச் சமாளிக்க முடியாமல் தடுமாறத் தொடங்குகின்றோம்.

தலைமுறை இடைவெளி என்பது எல்லாச் சமயங்களிலும் உருவாகின்ற ஒன்று தான். ஆனால் மாற்றத்தின் காரணமாக உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் பின்னாலும் ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. நான் முக்கியம். என் வாழ்க்கை மற்ற அனைத்தையும் விட முக்கியம். இந்தக் கேள்வி குடும்பத்தில் உருவாகும் போது, மகள், மகள் வாயிலிருந்து வார்த்தைகளாக வரும் போது தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தான் தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கின்றது.

சுதந்திரம் என்ற பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. அதன் வரையறை குறித்து யாருக்கும் கவலையில்லை.

இங்கேயிருந்து உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கையில் அதிகளவு தடுமாற வைக்கின்றது. காரணம் நம் வாழ்க்கை முறையின் அமைப்பு அந்த அளவுக்கு நேசம், பாசம் போன்ற வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கலந்திருப்பதால் அதன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் மரண வாதையாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்குரிய சொத்துக்களை மட்டும் சேர்ப்பதில்லை. அதில் ஒரு அங்கமாகக் குழந்தைகளையும் வைத்துள்ளனர்.

அவர்கள் திருமணம் ஆகி வேறோர் இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெற்றோர்களுக்கு மரணம் வரைக்கும் பழி சொல்லாகவே உள்ளது. இந்த வாழ்க்கை முறையில் தான் தற்போது உருவாகியுள்ள மாற்றங்கள் பேரிடியை நிகழ்த்தி உள்ளது.

குறிப்பாகப் பெண்கள் குறித்த பார்வையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் சிந்தனைகள் மாறிய சூழலில் காலாவதியாகி விட்டது என்பதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். பெற்றோர்களும், கணவனும் தான் வாழ்க்கை என்ற தத்துவம் மாறி அவர்கள் கற்ற கல்வி நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலைகள் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. வட்டத்திற்குள் நின்றவர்கள் வெளியே வந்து விடச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தடுமாறத் தொடங்குகின்றார்கள்.

கூட்டுக்குள் அடங்காத பறவைகளில் பாய்ச்சல் இங்கே பலருக்கும் பயமுறுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி நான் வாழ்வது என் குழந்தைகளுக்காகவே என்று வாழ்ந்த பெற்றோர்களுக்குப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.

பற்றாக்குறை என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பது வயதில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

வாங்கும் சம்பளம், கற்றுக் கொள்ள முடியாத நுட்பங்கள், விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடல் ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலும் ஏதோவொரு இடத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் பற்றாக்குறை இருந்தே தான் தீரும். முழுமை என்பது மனதோடு சம்மந்தப்பட்டது என்றாலும் அது உணர முடியாத சூழல் தான் நம்மைக் கொண்டு செலுத்துகின்றது. வெறும் வார்த்தைகளும், வாசிப்புகளும் இவற்றைத் தந்து விடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது.

நிஜமென்பதும் எதார்த்தமென்பது சூட்றெரிக்கும். நேசித்தவற்றை விட்டு விலக முடியாமலும் நிஜமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அனுதினமும் தடுமாறும் சமயங்களில் உடன் இருக்கும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாதபட்சத்தில் நொடிக்கு நொடி மரண அவஸ்தை தான்.

ஆண், பெண்ணின் அங்கீகாரமென்பதைத் திருமணம் என்று இங்குள்ள சமூகச் சூழல் தீர்மானித்து வைத்துள்ளது. அதுவே அவரவர் வாழ்வில் குழந்தைகளின் வரவுக்குப் பிறகே முழுமையடைவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளது.

தவமாய்த் தவமிருந்தேன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தருபவர்கள் பிறக்கும் குழந்தைகளை வரம் தந்த சாமி போலப் பார்க்கப்படுகின்றார்கள். மகன்களை அடைந்தவர்களின் பார்வையும் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நோக்கமும் சமூகத்தால் வேறு விதமாகப் புரிய வைக்கப்படுகின்றது. எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் அழுத்தங்கள் என்பது வாழும் வரைக்கும் படிப்படியாக அவரவர் மனதிற்குள் புகுத்தப்படுகின்றது. இதனையே இங்குள்ள கலாச்சாரம், கடமை என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

குழந்தைகள் வந்தவுடன் அங்கீகாரம். வளரத் தொடங்கும் போது மகிழ்ச்சி, வாழ்க்கையைத் தொடங்கும் போது கடமை நிறைவேறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு சமயத்திலும் இல்லாத தலைகீரிடத்தில் ஒரு பூ சூட்டப்படுகின்றது. பாசம் சேர்த்துப் பக்குவமாகச் சமைத்த சமையல் பலசமயம் குலைந்து போகின்ற சமயத்தில் மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையிருமாகத் துடித்துவிடுகின்றது.

இவையெல்லாமே ஐம்பது வயதில் தாக்கும். தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றதோ இல்லையோ சமூகத்தால் கேலியாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்தவர்களின் பார்வையில் நாம் எப்படியிருக்க வேண்டும்? என்று உருவாக்கியிருந்த கட்டுமானம் உடைபடும் போது அணை உடைந்து வெளியே தாறுமாறாகப் பாயும் வெள்ளநீர் போல ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

நாம் வாழுமிடம் பொறுத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நாமே ஒவ்வொரு பெயர்களைக் கொடுத்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மகள், மகனின் கல்வி, குடும்ப வாழ்க்கையென்பது அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற நோக்கமே இன்னமும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாக உள்ளது. இது பெற்றோர்களின் உளவியலைச் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்துகின்றது.

இந்தச் சமயங்களில் தான் அப்பாக்களின் ஆதிக்கம் நொறுங்கிப் போய் விடுகின்றது. அம்மாக்களின் வாழ்க்கையென்பது நான் வளர்த்த விதம் தவறா? என்று கூனிக்குறுகி விட வைக்கின்றது.

இன்றைய சூழலில் கடினமானதும், சவாலானதும், ஒருவரை சாதனையாளராகக் காட்டுவதும் அவரவர் குழந்தைகள் வளர்ப்பு தான் என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.

பணம் சேர்த்து வாழ்வில் வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் குடும்பம் முதல் மிகச் சாதாரணக் குடும்பம் வரைக்கும் இன்று நீக்கமற நிறைந்திருப்பதும் சந்ததிகள் சார்ந்த பிரச்சனைகள் தான். தகுதியான வேலை கிடைக்கவில்லை என்பதில் தொடங்குகின்றது. தரமான தொடர்பில்லாமல் தரங்கெட்டு அலைகின்றானே என்பது வரைக்கும் சொல்லித் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இங்கே ஏராளமுண்டு. இதற்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் சுனாமியை உருவாக்கிக் கொண்டிருப்பது காதல் என்ற வார்த்தை.

நம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் வென்றவர்கள் தோற்றவர்கள் நம் முன் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள். சந்தர்ப்பங்கள் மீண்டும் சரியாக அமைந்தால் மீண்டு வரக்கூடிய வாய்ப்பதிகம். மீண்டு வந்தவர்களும் நம் முன்னால் ஏராளனமான பேர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது?

நாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும் நம் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் ஒப்பு நோக்கி விடுவோம்.

நேற்று கூட ...ஒரு தந்தையின் பாசத்தை கேட்க முடிந்தது ...தந்தை ..ஒரு இறப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறார் ...அங்கு தான் பெற்ற மகனை காண்கிறார் ..நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தை பார்க்க எத்தனிக்கிறார் ...தன் தாயுடன் தற்பொழுது வாழும் மகன் ..பயத்துடன் தன் முகத்தை வேறுபக்கம் பார்த்துக்கொண்டு உள்ளார் ...அந்தஇறப்பு வீட்டுகுள் சென்று வருவதற்குள் தன் தாயும் ,தாயின் குடும்பத்தினர் மகனை வேறுபக்கம் பார்க்க முடியாமல் அனுப்பி விடுகின்றனர் ...அந்த பிஞ்சு மனதில் எப்படி விஷத்தை ஊற்றி வளர்க்க முடிகிறது ...தற்பொழுது தங்களின் சுயநலத்துக்கு குழந்தைகளை எப்படியும் வளைக்க முடிகிறது ..சமூகம் கற்றுத்தரும் பாடம் இது தானா ...சிலருக்கு புரிவதில்லை ...இந்த வளர்ப்பு முறையே பிற்காலத்தில் அவர்களை தாக்கும் என்று தெரிவது இல்லையென்று ...கண்முன்னே சிதிலடைந்த கட்டிடங்கள் கற்று தரும் பாடங்களை கற்றுக்கொள்வதில்லை ...காலம் கற்றுக்கொடுக்கும் ..

காலம் கெட்டுப் போச்சு? என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது?

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....முகநூல் sivakumar  kumar ...





ஞாயிறு, 6 மே, 2018

இந்த மாதம் மே -2018....கம்பள விருட்சம் அறக்கட்டளை செயல்குழு கூட்டத்தில்
தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சந்தா தொகையை உயர்த்துவது குறித்து  கலந்துரையாடல் மற்றும் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது. சந்த தொகையை மாதாந்திர சந்தா 100 ஆகவும், ஆறு மாதத்திற்று ஒருமுறை 600 என்றோ அல்லது வருடாந்திர சந்தா 1200 என பிரித்து மூன்று முறைகளில் சந்தா வசூலிக்கலாம் என்றும் மற்றும் நம் உறு ப்பினர்களின் திருமண வரியாக ரூ.500 ம் வசூலிக்க கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்தலாம் என்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அணைத்து நம் இன மாணவ மாணவிகளுக்கும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுப்பது பற்றியும் நம் உறுப்பினர்களின் வீடுகளில் சுக துக்க (பிறப்பு மற்றும் இறப்பு) நிகழ்ச்சிகளில் அறக்கட்டளை சார்பாக பங்கேற்று 1000 ரூபாய் உதவித்தொகை  கொடுப்பது பற்றியும் ஆலோசனை மற்றும் தங்கள் மேலனா கருத்துகளை தெரிவிக்கமாறு கேட்டுகொள்கிறேன்....

தமிழரசன்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை -பொருளாளர்..
தொடர்பு எண் ..95247 77030

நம் கம்பள சமுதாய தலைவர்களின் நூல் வெளியீடு ....

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று எனும் வள்ளுவன் வாக்கிற்கு அடையாளமாய் வாழும் நம் இன தலைவர்களின் புகழ்பரப்பும் பொருட்டும் நம் இன தலைவர்களை அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தும் பொருட்டும் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக  பொதுவாழ்வில் 25 வருடம் ஓய்வு இல்லாமல் பணியாற்றி கொண்டிருக்கும் ..வெள்ளிவிழா கானும் நம் கம்பளத்தார் காவலரும் திருப்பூர் தொழிலாளர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. இராமகிருஷ்ணண் மற்றும்     கடவூர் சமஸ்தானத்தின்  பாளையக்காரரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான தெய்வத்திரு கே. கே. ஜி  முத்தையா
ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் பொதுவாழ்வில் ஆற்றிய சமூதாய பணிகளை உள்ளடக்கிய நூல்களை மிகவிரைவில் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வெளியிட நாங்கள் பெருமை கொள்கிறோம்


அன்று ...கடவூர் .K K G முத்தையா அவர்கள் பெரியாரை சந்தித்தார் ....

இன்று அவர் வழியில் வந்த முத்துப்பிள்ளைகளாக கி. வீரமணி அவர்களை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலராரை ..உடுமலைபேட்டையில் வரும் 19 ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும்  தேவராட்ட திருவிழா ..மற்றும் தளி எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்கு ...அழைப்பிதழ் அளித்து அழைத்தபோது ...மிக்க மகிழ்ச்சி ..

சனி, 5 மே, 2018

45 வயதினிலே ..

காலை 9
மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று என் நினைவில் வந்து போகும். மாறும் உடல் இயக்கச் செயல்பாடுகள் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுமா? அல்லது அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலை இயக்கும் மனத்தின் கட்டுப்பாடு மாற்றிவிடுமா? பதிலை தேடிக் கொண்டிருந்த எனக்கு இரண்டு விதமாகப் பதில் கிடைத்தது. 

வாரம் தோறும் தினமும் 16 முதல் 17 மணி நேரம் உழைத்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை. 

ஒவ்வொரு நாளும் உற்சாகமாகத்தான் வருகின்றார்கள். அவர்களின் வேலை செய்யும் திறன் மட்டுமே பாதிக்கப்படுகின்றது. செய்யும் வேலையில் தெளிவு என்பது மாறி ஏனோதானோ என்று பணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பேற்றுகின்றனர். இதையே மற்றொரு விதமாக ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பு அமைந்தது. அன்றொரு நாள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் மூலம் வேறொரு விடை கிடைத்தது. 

தீராத ஒற்றைவலியுடன் இருக்கும் அவரின் இந்தப் பிரச்சனை அலுவலகம் முழுவதும் அறிந்ததே. ஆனால் இதற்கான காரணத்தை வேறொருவர் மூலம் கண்டறிந்த போது அவர் குடும்ப வாழ்க்கை கொடுக்கும் அழுத்தம் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணவரின் வருமானத்தை மீறி ஆசைப்படும் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத அழுத்தங்கள் உள்ளே சேர்ந்து சேர்ந்து ஒவ்வொரு நோய்களாக உருவாகத் தொடங்கியுள்ளது. 

அவரின் அலுவலகப் பாரங்கள் என்பது அடுத்த நாள் தீர்ந்து விடக்கூடியது. ஆனால் மனம் சார்ந்த தீராப் பிரச்சனைகள் ஆரோக்கியத்தைக் காவு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் மனம் என்பது ஆரோக்கியத்தில் இங்கே முக்கியப் பங்காற்றுகின்றது என்பதனை உணர்ந்த நாளது. 

பொருத்தங்கள் பார்த்து, கௌரவம் சேர்த்து மனங்களைச் சேர்த்து வைத்து உருவாக்கப்படும் திருமணத்தின் வரையறை இன்று மாறியுள்ளது. இரண்டு பக்கத்திலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. விருப்பங்களின் நோக்கங்கள் முற்றிலும் திசை மாறியுள்ளது. திருமணத்திற்கான வயதும் மாறியுள்ளது. இவை அனைத்தும் வாழும் சூழலே தீர்மானிக்கின்றது. இவற்றைப் போலவே குடும்ப வாழ்க்கையின் தற்போதைய இலக்கணம் முழுமையாகப் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. 

சரியான வயதில் திருமணம் முடிந்திருந்தாலும், முப்பது வயதுக்குள் பரஸ்பரம் உடல் இச்சைகள் தீர்ந்து விட உடனே வந்து சேரும் குழந்தைகள் மூலம் கவலைகளும், கடமைகளும் வரவேற்கின்றது. பேச்சு குறைகின்றது. வாழ்க்கை தடம் மாறுகின்றது. இருவரின் உள்ளார்ந்த விருப்பங்கள் வெளியே நிற்கின்றது. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கடைசி வரையிலும் சேர்ந்தே வாழ்ந்து ஆக வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் அழுத்தி வைக்கின்றது. 

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது வீட்டில் யாரோ ஒருவர் தான் பேசும்படி வாழ்க்கை மாறுகின்றது. அது பெரும்பாலும் மனைவியாகத்தான் இருக்கின்றார்கள். கணவனின் எண்ணமும் நோக்கமும் வேறு பாதையில் செல்கின்றது. இது பணம் சார்ந்ததாகவும், தனிப்பட்ட மனம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. 

இங்கிருந்து தான் ஆணின் மனம் ,பெண்ணின் மனம் ,ஊர் மேயத் தொடங்குகின்றது. 

இந்தச் சமயத்தில் தான் இருவரிடத்திலும் ஒரே ஆதங்கம் வெளிவரும். 

"நான் யாருக்காக இந்த அளவு பாடுபடுறேன்?"

"நான் யார்?" "நீ யார்?" என்ற ஈகோ விஸ்வரூபம் எடுக்கின்றது. 

உள்ளார்ந்த புரிதலின்றிப் பேசத் தொடங்கும் போதே வாதங்கள் திசைமாறி வாக்குவாதத்தில் சென்று நிற்கும். இனியும் ஏன் நான் பேச வேண்டும்? என்ற எண்ணம் ஒருவனுக்குத் தோன்றும் போது நாய் போல நாற்பது வயதில் மனம் அலைபாயத் தொடங்கும். கட்டுப்பாடு என்ற வார்த்தையை மதிப்பவர்கள் உள்ளும் புறமும் உருவாகும் இழப்புகளை மீறி தங்கள் கடமையை உணர்கின்றனர். எல்லைக் கோடுகளைத் தாண்டி வாழ நினைப்பவர்களின் வாழ்க்கை அதற்குப் பிறகு முட்டுச் சந்தில் போய் நிற்பதைத் தவிர்க்க இயலாது. 

இவை இங்கே சகல வசதிகளுடன் இருப்பவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு என்று பாரபட்சமில்லாமல் நடக்கும் நிகழ்விது. மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் கணவனும், மனைவியும் பேசாமல் வாழும் கொடுமை, காமத்தை நோயாக மாற்றிக் கொண்டவர்கள் என்று சுட்டிக் காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உண்டு. 

"மூன்று மணிக்கு முழிப்பு வந்து விடும். வாரத்தில் ஏதோவொரு நாள் தான் வீட்டில் முழுமையாகத் தங்கும் நிலையில் அருகே படுத்திருக்கும் மனைவியை எழுப்பிப் பேசத் தொடங்கினால் பத்து நிமிடத்தில் வாக்குவாதமாக மாறி நிற்கும். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு வந்து நிற்கும்." 

தொழில் வாழ்க்கையில் வென்று கோடீஸ்வராக இருக்கும் முதலாளி சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. 

தொழில் உலகில் கடைபிடிக்கும் அதிகாரம் என்பது தான் நம் அடையாளம் என்பதனை கருதிக் கொள்பவர்கள் அதனைக் குடும்ப வாழ்க்கையிலும் காட்ட முற்படும் போது குடும்பத்தில் குதுகலம் மறைந்து விடுகின்றது. உருவாகும் காயங்கள் அனைத்தும் மனதை ஆற்ற முடியாத ரணங்களாக மாற்றி விடுகின்றது. பணக்கார தோரணையில் கௌரவத்தைச் சுமந்து கொண்டு வாழும் வரைக்கும் வெளியே சொல்ல முடியாத சோகங்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து முடிக்க வேண்டியது தான். 

பதவி உயரும் போது வார்த்தைகளைக் குறைத்துக் கொள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அதை விட முக்கியம் வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசும் போது அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் வார்த்தைகளும் மனதளவில் நிரந்தர விலகலை கணவன் மனைவி இருவரிடமும் உருவாக்கி விடுகின்றது. இதற்கு மேல் தான் இரண்டு பக்கமும் நடிப்பு வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது. 

"என்ன செய்தாய்? என்ன இழந்தாய்? என்ன சாதித்தாய்? உனக்கு என்ன தகுதியிருக்கு? ஏன் இவை உன்னால் முடியவில்லை?" 

இந்தப் பஞ்ச சீல கொள்கைகள் குடும்ப வாழ்க்கையைப் பணால் ஆக்கும். நம் குடும்பத்துக்குள் அன்றாடம் நடக்கும் உரையாடலாக மாறும் போது குடும்ப வாழ்க்கை தெருவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். மேலே சொன்ன ஐந்துக்கும் அடிப்படை பணம். ஐந்திலும் நுழைய மறுப்பது மனம். கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. 

"குழந்தைகளுக்காகத் தான் பொறுத்துக்கிட்டு வாழ்றேன். குழந்தைகள் இல்லைன்னா எங்கேயாவது போய்த் தொலைந்திருப்பேன்." 

இரண்டு பக்க வசனமும் வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையைத் தொழில் போல நினைத்து வாழ விரும்புபவர்களின் லாப நட்ட கணக்கு இது. 

பணம் படைத்தவர்கள், அதிகாரம், புகழ் அடைந்தவர்கள் என்று எவராயினும் குடும்பக் கோட்டுக்குள் வந்து நிற்பவர்கள் சிலவற்றை இழந்து தான் சிலவற்றைப் பெற முடியும். வெளியே நம் முகம் ஒவ்வொருவர் பார்வையிலும் வெவ்வேறு விதமாகத் தெரியும். ஆனால் நம்முடைய மொத்த முகத்தையும் ஒன்றாக அறிந்தவர் மனைவி மட்டுமே. நம் ராஜதந்திரங்கள் எல்லாச் சமயங்களிலும் வென்றிடாது. தயக்கத்தை உடைத்து மயக்கமின்றிச் சரணாகதி தத்துவம் தான் உதவும். 

வீட்டில் நம் பத்து வயது குழந்தை கேட்கும் கேள்வியென்பது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்து விடலாமா? என்று எண்ணத் தோன்றும். ஏன் கேட்டாய்? என்று கேட்க முடியாது. புரிய வைக்கலாம். ஆனால் நம் நிலையைப் புரிந்தும், புரியாதது போலக் கேட்கும் மனைவியின் வார்த்தைகளைத் தனியாகப் பிரித்துப் பார்த்து நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். 

விழித்திருக்கும் மனநிலையில் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தனித்திருக்கத் தான் வேண்டும். இவை இரண்டையும் கடந்து வந்தாலும் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டில் கோபத்தில் சாப்பிட முடியாத நேரத்தில் பசித்திரு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் எல்லாவற்றுக்கும் காலத்திடம் மருந்து உண்டு. காத்திருக்கத்தான் வேண்டும். 

வாழ்ந்த காலம் முழுக்கக் கிடைக்காத அங்கீகாரம், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடலுறுப்புகள் என்பதோடு, நமக்கு வாழ்நாளில் கிடைத்தது வெறும் அனுபவங்கள் மட்டுமே என்று எண்ணம் கொண்டவரா நீங்கள்? இறக்கும் வரையிலும் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி உங்கள் எதிர்கால விருப்பங்களுக்குத் திறமை இருந்தும் காலம் ஒத்துழைக்கவில்லை என்ற ஆதங்கம் கொண்டவரா நீங்கள்? 

உங்களுக்குத் தெரிந்த பிரபல்யங்கள், தொழிலதிபர்களின் இறுதி நாட்களில் அவர்கள் பேசியுள்ள வார்த்தைகளை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். அவை உங்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதல்ல. காலம் உங்களுக்கு வழங்கிய வட்டத்திற்குள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கணக்கீடு செய்யாது? எப்படிப் பயன்படுத்திக் கொண்டாய் என்று தீர்மானம் செய்யும். 

அந்தத் தீர்மானம் தான் உங்கள் அடுத்தத் தலைமுறைக்குப் பாடமாக மாற்றப்படுகின்றது. இவர் வாழ்க்கை எப்போது முடியும்? என்று குடும்ப உறுப்பினர்களே காத்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர் எதனை வென்றவர்? எதில் தோற்றவர்? 

என் சுதந்திரம் எனக்கு முக்கியம் என்று கருதி கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்கள். என் ஆதிக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று கடைசி வரைக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத ஆண்கள் என்று பரஸ்பரம் உருவாக்கிக் கொண்ட யுத்தத்திற்கான பெயர் இல்வாழ்க்கை எனில் வாழ்க்கை முழுக்க எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை எப்படிச் சொல்வீர்கள்? 

"வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" என்று வாழ்ந்தவர்கள் அவரவர் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றது கொலையும், தற்கொலைகளும் மட்டுமே. மனதில் காயத்தை உருவாக்கி விட்டுச் சென்ற அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் சந்ததிகளுக்கானது மட்டுமல்ல. சந்ததிகள் சேர்ந்து வாழப்போகும் சமூகத்திற்கும் உரியது. சிலவற்றை மாற்ற முடியும். சிலரை எந்நாளும் மாற்றவே முடியாது என்பதனை உணர்ந்திருந்தால் உங்களின் நாற்பத்தைந்து  வயதில் கூட இளைஞரைப் போலவே மனதாலும் உடலாலும் வாழமுடியும் என்ற எளிய தத்துவத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்தியிருக்கும். 

நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம். 

வென்றோம். தோற்றுவிட்டோம் என்று. 

அவரவருக்கான வேஷம் கலையும் நேரம் வரும் போது கூட்டம் கலைந்து விடும். வெட்ட வெளி ஆகாயம் போல எல்லாமே மாறி விடும். இயற்கையோடு கலந்தார் என்று வாசிக்கும் போது அதுவரையிலும் செயற்கையாய் செய்த செய்கைகள் அனைத்தும் சிரிப்பாய் சிரிக்கும். 

நம் வாழ்க்கையும் அடுத்தவரின் சிரிப்புக்குப் பலியாக வேண்டுமா..

அதனால் தான் ...தந்தையின் கடைசி மூச்சு வரை ...எந்த இடர்பாடுகள் இல்லாமல்  என் தாய் பார்த்துக்கொண்டார் ...என் தாயை பார்க்கவேண்டிய பொறுப்பு இன்னும் கூடுதல் ஆகிறது ..என் வாழ்க்கை ...என் சமுதாயம் ..என் பொது வாழ்வு ..நான் பணிபுரியும் மதிப்புமிக்க நிறுவனம் ..என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொண்டேன் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ..முகநூல் sivakumar  kumar ...

வெள்ளி, 4 மே, 2018

45 வயதினிலே......

"நீங்க எப்படிச் சார் முடிவு செய்ய முடியும்? 45 வயசாச்சுன்னா சுறுசுறுப்பா வேலை செய்ய முடியாதென்று?" 

என் முன்னால் அமர்ந்திருந்தவர் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு நான் பணியில் இருக்கும் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு துறைக்குப் பல நபர்கள் வந்து கொண்டேயிருந்தனர். பல முகங்கள். பல பேச்சுகள். பலவிதமான எதிர்பார்ப்புகள். நிறுவனம் அறிவுறுத்தி இருந்த அடிப்படை விசயங்களை வைத்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் ஆட வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் குறைவான சம்பளத்தில் அதிக உழைப்புக்குத் தயாராக இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும். 

இது போன்ற நேர்முகத்தேர்வில் நிச்சயம் ஒன்றைப் பார்க்க முடியும். நிகழ்கால இளைஞர் சமூகத்தின் மொத்த அவலத்தையும் வருகின்றவர்கள் மூலம் கண்டறிய முடியும். கல்லூரி முடித்து வெளியே வந்தவர்கள் தொடங்கி அறுபது வயது வரைக்கும் உள்ளவர்கள் இன்னமும் வேலை தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். 

இப்போது என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகள் நமக்கு முக்கியம்? 

"எங்களைப் போன்ற அனுபவசாலிகள் இந்த உலகத்திற்குத் தேவையில்லையா?" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.

நேர்முகத் தேர்வில் கடைசி நபராக அவர் உள்ளே வந்தார். தோற்றமும், பேச்சும் அவரின் முதிர்ச்சியை உணர்த்தியது. 

அவரின் வயது 51 கடந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால் வார்த்தைகளில் இளைஞனின் வேகம் இருந்தது. அவர் பேசிய ஐந்து நிமிடத்திலும் நான் குறுக்கிடவே இல்லை. அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தேன். 

நிறுவனம் எதிர்பார்த்த திறமைகள் அவரிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதே அளவுக்குக் கோபமும் ஆதங்கமும் கொப்பளித்து. ஒவ்வொரு இடங்களிலும் அவரைப் புறக்கணித்த வலியின் வேதனைகள் அவர் வார்த்தைகளில் சினமாகச் சீறியது. 

நான் எப்போதும் போல "இறுதிகட்ட தேர்வுக்கு உங்களை அழைப்பார்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தேன். 

அடுத்து சில நாட்கள் அவர் பேசிய ஒவ்வொன்றும் என் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஐம்பது வயது என்பது தொழில் உலகத்தில் ஒதுக்கப்பட வேண்டிய வயதா? வாழ்க்கையில் ஒதுங்கியிருக்க வேண்டிய வயதா? இன்னும் இது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. 

காரணம் என் வயதை ஒற்றிய நபர்களின் வாழ்க்கையை அதிகம் கவனித்துக் கொண்டிருப்பதால் ஐம்பது வயது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. 

விவசாயம் சார்ந்த வேலைகளும், அதற்கு உதவக்கூடியதாக இருந்த துணை வேலைகளும் சமூக மாற்றத்தில் காணாமல் போய்விட்டது. மக்கள் தொகை பெருகவில்லை. பிதுங்கி எல்லையைத்தாண்டி வெளியே வந்து விட்டது. கிராமங்களின் முகம் மாறிவிட்டது. மாறாத இடங்களை அரசாங்கமே கூறு போட்டுக் கொள்கை ரீதியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தனி மனிதர்களின் வாழ்க்கையும் நெல்லிக்காய் போலச் சிதறிக் கிடக்கின்றது. ஏதோவொரு ஊர். ஏதொவொரு இடமென உலகமே சுருங்கிவிட்டது. 

தற்போது ஐம்பது வயதைத் தொட்டவர்கள் பிறந்த போது இருந்த ஜனத்தொகை என்பது அப்படியே இரட்டிப்பாக மாறியுள்ளது. உருவான, உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்பது வேறொரு தளத்திற்குச் சென்று விட்டது. விரும்பிய வாழ்க்கை கிடைக்காதவர்களும், விருப்பமில்லாமலே வாழும் வாழ்க்கையை வாழ்பவர்களும் தான் இங்கே அதிகம். 

ஆட்கள் தேவையில்லை. எந்திரங்கள் போதும் என்ற சூழலில் உருவான தலைகீழ் மாற்றங்கள் சமூக விதிகளையே புரட்டிப் போட்டு விட்டது. இங்குத் தான் வளர்ச்சியும் அதற்குப் பின்னால் உள்ள மனங்களின் வீழ்ச்சியும் தொடங்கியது. 

அரசு வேலைகள், அரசு சார்ந்த வேலைகள், முறைப்படுத்தப்பட்ட பெரிய தனியார்கள் நிறுவனங்கள், இதனைச் சார்ந்து செயல்படும் துணை நிறுவனங்கள் தாண்டி மீதி இருப்பது சிறு, குறு தொழில்கள் மட்டுமே. சுய பொருளாதாரக் காவு கொடுக்கப்பட்டு விட்டது. தன் சுயத்தையே இழந்து சுகமாய் வாழ்வது எப்படி? என்பதே இங்கே முக்கியமாக மாறியுள்ளது. 

இங்கேயிருந்து தான் பிரச்சனை தொடங்குகின்றது. அந்தப் பிரச்சனை விஸ்ரூபமாக எடுத்து நிற்பது அவரவர் ஐம்பது வயதில் தான் தெரியத் தொடங்குகின்றது. 

அரசு சார்ந்த நிறுவனங்களில் அறுபது வயதுக்கு அருகே வந்தவர்களைச் சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கின்றார்கள். அவரவர் சம்பளத்தில் பிடித்து வைத்துள்ள பாக்கித் தொகையைக் கொடுத்து "இனி உன் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து கொள்" என்பது போன்று வழியனுப்பி வைக்கின்றார்கள். 

ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் கதி? முறைப்படுத்தப்பட்டு இருக்கும் தனியார் நிறுவனங்கள் என்பது வேறு. சிறு, குறு தொழிற்சாலைகளின் நிர்வாக அமைப்பு என்பது வேறு. சக்கை போலப் பிழியப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் குப்பையாக வெளியே எறியப்படுகின்றார்கள். 

இப்படியொரு நிலைதான் ஆயத்த ஆடைத்துறையும். 

ஆயத்த ஆடைத்துறையில் தேவைப்படும் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தேவைப்படும் தகுதியை குறிப்பிட்டு வயதையும் குறிப்பிடும் பழக்கம் உண்டு. அதிக பட்சம் நாற்பது வயதுக்கு மேல் வேண்டாம் என்று குறிப்பிடுவார்கள். சில விதிவிலக்குள் உண்டு. ஆனால் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொது விதிகள் மாறுவதில்லை. இந்த இடத்தில் தான் நான் வாழும் சமூகத்தின் நிகழ்காலப் போக்கின் கொடுமைகளும் கொடூரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒருவரின் இளமைப் பருவம் எப்போது முடிகின்றது? நாற்பதா? ஐம்பதா? ஏதேனும் வரையறை உண்டா? 

வாழும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லோராலும் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை மீறிச் சேமிக்க முடிவதில்லை. அவரவர் அடிப்படை வாழ்க்கை வாழ்விற்கே சம்பாரிக்கும் பணம் சரியாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் சவாலாகவே உள்ளது? தங்கள் ஓய்வு காலத்திற்கெனச் சேமிக்க முடியாத பணப் பிரச்சனைகளின் காரணமாக மீதி காலமும் உழைத்துத் தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முழுமையாக எழுதிப் புரிந்து வைத்து விட முடியாது. அதுவொரு நரக வாழ்க்கையின் தொடக்கம். 

வயதின் காரணமாகத் திறமை இருந்தாலும் மதிப்பு இருக்காது. மதிப்பு இருந்தாலும் ஆரோக்கியம் ஒத்துழைக்காது. 

இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள் துறை சார்ந்த கல்வித்திறமையை வைத்துக் குறிப்பிட்ட சிலருக்குத் தான் தொழில் வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி கிடைத்து ஏற்றப் பாதை தொடங்குகின்றது. படிப்படியாக வளர்கின்றார்கள். தொடர்ந்து திருமணம், சேமிப்பு, விரும்பிய வீடு வசதிகள் அமைகின்றது. குழந்தைகளின் கல்வியும் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற பாதையையும் உருவாக்க முடிகின்றது. வழிகாட்டியாக இருந்து செயல்பட முடிகின்றது. இந்த நிலைக்கு வரும் போதே ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு அருகே வாழ்க்கை வந்து நிற்கும். 

ஆனால் இங்கே எல்லோருக்கும் இந்த வாழ்க்கை அமைவதில்லை. கல்வி வாழ்க்கை முடிந்து அடுத்த ஐந்து வருடங்களில் சரியான பாதை அமையாதவர்களுக்கும், அமைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கும் கடைசி வரைக்கும் நித்தமும் பிரச்சனை தான். எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுவே சமூகத்தில் கேலிப்பார்வையில் கொண்டு வந்து நிறுத்துகின்றது. 

ஐம்பது வயதுக்கு அருகே வந்தவர்களும், கடந்து சென்று கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை எப்படியுள்ளது?அவர்களின் மனநிலை, வாழ்நிலை அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சூழ்நிலைகள் எப்படி உள்ளது? 

தனி மனித வாழ்க்கையில் பொருளாதாரப் பலம் என்பது முக்கியமானது. இதுவே முதன்மையானது. ஆனால் இதிலும் சில ஆச்சரியங்கள் உண்டு. பணம் என்ற மாயமானை துரத்திக் கொண்டு தன் வாழ்க்கையில் தேடிக் கொண்டு இருப்பவர்களும், தேவையான பணத்தைச் சேர்த்து அதனைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே வாழ்க்கை என்பதாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்க்கும் போது பல கேள்விகள் என்னுள் எழுகின்றது. 

கடந்த சில மாதங்களாகப் பல தளங்களில் இருந்து அவரவர் வாழ்க்கையின் வாயிலாகக் கவனிக்கும் ஆர்வம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என்று தொடங்கி நான் தினந்தோறும் சந்திக்கும் தொழிலாள வர்க்கம் வரைக்கும் பலரையும் பார்த்தேன். பேசினேன். பலவற்றையும் உள்வாங்கிக் கொண்டேன். 

அடிப்படை வசதிகளுக்குப் பிரச்சனையில்லாமல் வாழ்பவர்கள் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் வாழும் விதங்களை அலசி ஆராய முடிந்தது. 

உடல்நலம், மனநலம், மாறும் சிந்தனை மாற்றங்கள், ஆரோக்கியம் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்த போது சில ஆச்சரியங்களும் பல அதிர்ச்சிகளும் கிடைத்து. குடும்பமும், சுற்றியுள்ள சமூகமும் கொடுக்கும் அழுத்த விதிகள் தற்போதைய சமூகச் சூழலில் எந்த அளவுக்கு ஐம்பது வயதில் இருப்பவர்களைப் பாதிக்கின்றது? அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றது? வாழ்வுக்கும் சாவுக்கும் உண்டான மெல்லிய கோட்டில் அவர்கள் பயணம் செய்யும் வித்தைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகளில் கூட முதியோர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு இருந்த போதிலும் அவர்கள் மன, உடல் ரீதியாக அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்கா. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் கல்லூரி முடித்து வெளியே வந்த பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் செயல்பாட்டிலும் வெளியே தெரியாத இரத்தக் கசிவு கட்டாயம் இருக்கும். 

ஆனால் இந்தியாவில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மனநலம் குன்றியவர்கள் போன்ற வகையில் வரும் அத்தனைபேர்களும் இங்கே எந்நாளும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையைத் தான் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. 

இதனையும் தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் சந்திக்கும் ஐம்பது வயது பிரச்சனைகள் ஏராளம். 

ஐம்பது வயதென்பது வெறும் வயதல்ல. நாம் அதுவரையிலும் சரியான நேரத்தில் எடுக்காத முடிவுகள் தந்த பரிசு. தன் கொள்கைகள் தான் பெரிது என்று தன்மானத்தைக் கடைப்பிடித்த பிடிவாதம் தந்த வெகுமானம் . மனைவி ஒரு பக்கம். வளரும் குழந்தைகள் மறுபக்கம் என அவர்களின் தேவைகள் தரும் அழுத்தம் என்று மொத்தமாக நம்மை மூழ்கடித்து நமக்குள் உருவாகும் ரசாயன மாற்றங்களில் தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. கடைபிடித்த கொள்கைகள் காற்றில் கலந்து விடுகின்றது. காணும் காட்சிகளில் அதுவரையிலும் பார்த்த பார்வைகளின் எண்ணமும் மாறுகின்றது. நாம் விரும்பிய அனைத்தும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுகின்றது. விரும்பாத அனைத்தும் நம் தோளில் வந்து அமர்ந்து விடுகின்றது. 

மொத்தமாக வாழும் சமூகத்தின் சராசரி பிரதிபலிப்பாக நாமும் மாறத் தொடங்குகின்றோம். 

இதுவரையிலும் இந்தச் சமூகத்துடன் எப்படி வாழ்ந்தோம்? என்பதற்கு இந்தச் சமூகம் தரும் கேள்வித்தாளை அப்போது தான் வாசிக்கத் தொடங்குகின்றோம். சிலருக்கு முதியோர் கல்வித்திட்டம் போன்று தோன்றலாம். பலருக்கு முதிர்ந்த ஞானத்திற்குப் பிறகு உருவாகும் வெற்றியின் தொடக்கப் பாதையாகவும் மாறலாம். 

இந்த வயதில் குறைந்தபட்சம் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் அதுவே பெரிய வரமாக இருக்கும். காரணம் அதுவரையிலும் கற்று வைத்திருந்த பழக்கங்கள், விட முடியாத கொள்கைகள், நிராசை கனவுகள் என ஒவ்வொன்றும் பலருக்கும் முகத்தின் வழியாகத் தெரியும். சிலருக்கு அவரவர் உடல் ஆரோக்கியத்தின் வாயிலாகத் தெரியும். 

இந்த வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இது போன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதனை பலவிதங்களில் யோசித்த போது இந்தத் தொடரை எழுத வேண்டும் என்று தோன்றியது. 

எனக்கு  திருமணமான வயது ..32...என்னால் முடிந்த அளவு 10 வருட உழைப்பு ...பணியும் கூட சரியாக அமைந்த நேரம் ..10 வருட உழைப்பில் இடம் ..காரு ...வீடு ..குழந்தைச்செல்வம் ..மனைவியின் பெயரில் சிறு வளரும் நிறுவனம் என்று அனைத்தும் பெற்று வளர்ந்த நேரம் ...நிறுவன பணி என்பது ஒரு குறிப்பிட்ட காலம் தான் ...அதன் பிறகு ...சொந்த தொழில் தான் கைகொடுக்கும் என்று திட்டமிட்டு சரியான வழியில் சரியாக வாழ்க்கை பயணம் தொடருந்துகொண்டு வந்தது ...மனிதர்களுக்கு சில நேரங்களில் தடம் பிறழ செய்யுமோ ..ரயில் பெட்டிகள் எப்படி தடம் புரளமோ ...அது போன்று நடந்து ...42 வயதிலிருந்து மறுபடியும் முதலில் இருந்து வாழ்க்கை பயணத்தை தொடரவேண்டிய சூழ்நிலை ...நம்பிகையுடன் பயணம் தொடர்கிறது ...

ஐம்பது வயதென்பது சாதிக்க முடியாத வயதா? இல்லை வாழ்நாள் ஆசையின் முடிவா? ....நம்பிக்கை தானே வாழ்க்கை ...வாழ்ந்துதான் பார்ப்போமே ....

என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681.....