ஞாயிறு, 14 ஜூன், 2026


 ஆன்மீக பயணம் ... 

மதுரை அழகர்கோவில் கள்ளழகர்

 கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தின் அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் (விஷ்ணு) கோயிலாகும்

தமிழ் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில்பொ.. 6-லிருந்து 9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது. இது திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது.

கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏழடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயில் ஒரு பெரிய கோட்டையால் சூழப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பாழடைந்துள்ளது.

துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் தென்கலை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறதுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

அழகர் கோயில் (ஆங்கிலம்Alagar Koil) என்ற 'திருமாலிருஞ்சோலை' என்று ஆழ்வார்களால் பாடப் பெற்ற அருள்மிகு சுந்தர ராசப் பெருமாள் என்கின்ற கள்ளழகர் திருக்கோவில்மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இது உலகளவில் பிரசித்தி பெற்ற ஓர் திருமால் கோவிலாகும்.

 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் இதுவே ஆகும்.

தமிழ் சங்க இலக்கியங்கள்சிலப்பதிகாரம்தேவாரம்நாலாயிர திவ்யப் பிரபந்தம், போற்றும் இத்திருத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, பழமுதிர் சோலை, மாலிருங்குன்றம், அழகர்மலை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நங்கள் குன்றம் என்று அழைக்கப்படும் வட்ட வடிவ கருவறையில் (கேரள கோவில்கள் போன்ற அமைப்பு) இறைவனாகிய பெருமாள் ஸ்ரீபரமசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி அழகர் பெருமாள், அல்லது சுந்தரராச பெருமாள் எனப்படுகிறார்.

பாண்டிய மன்னர்கள்விஜயநகர மன்னர்கள்மதுரை நாயக்க மன்னர்கள் ஆகிய பல மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

மலைக்குன்றுகளில் வாழும் சமணர்கள் (ஜைனர்கள்) மதுரையைச் சுற்றிலும் இருந்த யானைமலைகீழவளவுஅரிட்டாபட்டி, பெருமாள் மலை (நாகமலை புதுக்கோட்டை அருகில் முத்துப்பட்டி) எனப் பல இடங்களில் வாழ்ந்தது போன்று அழகர் மலையில் இருந்து 3 மைல் தொலைவிலும் சிறிய அளவில் வாழ்ந்துள்ளனர்.

அழகர் கோயில் நுழைவாயில்

தல புராணம்

கோயிலின் பிராதான வாயில் கோபுரங்கள்

இந்து புராணத்தின்படி, ஒரு சமயம் சுதபஸ் முனிவர் என்பவர் அழகர் மலையில் உள்ள நூபுர கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற துர்வாச முனிவரைக் அவர் கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், சுதபஸ் முனிவரை தவளையாக மாறுமாறு சபித்தார். கள்ளழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் அவதரித்து இச்சாபத்தில் இருந்து சுதபஸ் முனிவரை மீட்டெடுப்பார் என்றும் கூறி மறைந்தார். தவளை வடிவம் காரணமாகமண்டூக மகரிஷிஎன்று பெயர் பெற்ற சுதபஸ் முனிவர்தேனூரில் வேகவதி என்று அழைக்கப்படும் வைகை நதிக்கரையில் தவம் செய்தார். மண்டூக மகரிஷியினை சாபத்திலிருந்து விமோசனமளிக்க எண்ணி பெருமாள் அழகர் மலையில் உள்ள தனது உறைவிடத்திலிருந்து இறங்கி வந்தார். அதுமுதல் மலைப்பட்டிஅலங்காநல்லூர்வயலூர் வழியாக கள்ளழகர் தேனூருக்கு வருவதாக நம்பப்படுகிறது. தேனூர் மண்டபத்தில் இறைவன் முனிவருக்கு சாப விமோசனம் தந்து அவரை மீட்டபின்னர் தனது இருப்பிடத்திற்குச் திரும்பிச் செல்வதாக ஐதீகம்திருமலை நாயக்கர் ஆட்சியின் போது (பொ.. 1623–1659), மண்டூக மகரிஷியின் சாப விமோசன நிகழ்ச்சிகள் வண்டியூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. 1653-ம் ஆண்டு முதல் அங்கு திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட தேனூர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.]

கள்ளழகர் மரணத்தின் கடவுளான யமனால் வணங்கப்பட்டார் என்கிறது மற்றொரு இந்து புராணம். அவர் அந்த இடத்தில் பெருமாளை நிரந்தரமாகத் தங்கும்படி வேண்டிக் கொண்டார் என்றும் தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவின் உதவியுடன் அங்கு ஒரு கோயிலைக் கட்டினார் என்றும் நம்பப்படுகிறது.

சமய நடைமுறைகளும் திருவிழாவும்

வைணவ மரபின் தென்கலை பிரிவின் மரபுகளைப் பின்பற்றி வைகானசம் ஆகமத்தைப் பின்பற்றும் முறை இக்கோயிலில் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற விஷ்ணு கோயில்களைப் போலவே, அர்ச்சகர்கள் பிராமண வகுப்பில் பாதுகாக்கப்பட்ட தனிப்பிரிவான ஆதிவைஷ்ணவர் எனும் வைகாநஸ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோயிலில் தினசரி ஆறுகாலப் பூஜை நாளின் பல்வேறு நேரங்களில் நடத்தப்படுகின்றன மற்றும் பல விழாக்களும் கோவிலில் நடத்தப்படுகின்றன, இதில் தெப்பத் திருவிழா தமிழ் மாதமான மாசியிலும் (பிப்ரவரிமார்ச்), செப்டம்பர்அக்டோபர் மாதங்களில் நவராத்திரியும் மற்றும் மார்கழியின் (டிசம்பர்ஜனவரி) போது வைகுண்ட ஏகாதசியும் நடைபெறுகிறது. கோவிலில் வாராந்திர, மாதாந்திர மற்றும் இரண்டு வார சடங்குகள் செய்யப்படுகின்றன மலையின் உச்சியில் உள்ள நூபுர கங்கை என்ற ஏரியிலிருந்து வரும் நீரைக் கொண்டு மட்டுமே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறதுஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான சித்திரையில்(ஏப்ரல்மே) சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறதுசித்திரைத் திருவிழா என்பது அழகரின் சகோதரி என நம்பப்படும் மீனாட்சியின் திருமணத்தின் ஆண்டு நிகழ்வாகும்.[8] கள்ளழகர் வைகை ஆற்றைக் கடப்பது முக்கிய நிகழ்ச்சியாகும். எதிர் சேவை என்பது அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாகும், இது நான்காம் நாளில் தொடங்குகிறது. இந்த நாளில், அழகர் அல்லது விஷ்ணு தனது தோற்றத்தை கள்ளராக மாற்றிக் கொண்டு கள்ளர் நாடு வழியாக பயணித்து மதுரையில் நுழைகிறார், நகரவாசிகள் அவரை வரவேற்கிறார்கள்.[9] இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்துள்ளனர். கள்ளழகர் ஆற்றில் நுழையும் போது, அவர் தனது சகோதரியின் திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டதை அறிந்து, கருப்பராயர் மண்டபத்திற்குத் திரும்புகிறார், பின்னர் அவர் பத்து அவதாரங்கள் எடுத்து இறுதியாக அழகர் கோவிலுக்குத் திரும்புகிறார். இந்தக் கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் கிடைத்தது, 15 கைவினைஞர்களைக் கொண்ட குழுவைக் கொண்டு வேங்கை மர மரத்தையும், சிற்பங்களுக்கு பர்மா தேக்கு மரத்தையும் பயன்படுத்திக் கட்டப்பட்டது. சோதனை ஓட்டம் 6 ஜூலை 2015 அன்று நடைபெற்றது. இக்கோயில் இப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.

காவல் தெய்வம்

அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி

இக்கோயில் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஆவார்.

கோயில் கலைச் சிறப்புகள்

முழுமை அடையாத இராஜ கோபுரம்அழகர் கோயில் தெப்பக்குளம்பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னதி, அழகர் கோயில்

மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆர்யன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம்கிருஷ்ணன்கருடன்மன்மதன்ரதிதிரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.

வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டைஅழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

அமைவிடம்

மதுரை மாநகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

அருகில் அமைந்த கோயில்கள்

அழகர் மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் மற்றும் ராக்காயி அம்மன் கோயில் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்த நூபுர கங்கை தீர்த்தத்திற்கு ராக்காயி அம்மன் காவல் தெய்வம் ஆவார்.நூபுர கங்கை தீர்த்தம் மலையின் ஒரு வற்றாத ஊற்று பெருகெடுத்து ஓடும் இடத்தில் உற்பத்தி ஆகின்றது. அங்கு பக்தர்கள் கூடி வரிசையில் நின்று நீராடி, குடுவையில் பிடித்துக்கொண்டும் செல்வர்.

மதுரை சித்திரைத் திருவிழா

முதன்மைக் கட்டுரைசித்திரைத் திருவிழா

புராண அடிப்படையில் கள்ளழகர்மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.] கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார்.வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று, அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.

சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவைஎன்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கள்ளழகருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர்.

இன்றய ஞாயிறு இனிதாக கள்ளழகர் கோவில் பயணம் வாழ்வின் மறக்க இயலா ஆன்மீக பயணம் ... ..என்றும் அன்புடன் சிவக்குமார் 

செவ்வாய், 9 ஜூன், 2026

 என் அன்பு சகோதரர் உடுமலை கருணாநிதி அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

நம் நண்பர்கள் ,சொந்தங்கள் உதவி என்று கேட்டால் தன்னலம் கருதாமல் ,கூப்பிட்டகுரலுக்கு ஓடோடி வந்து  முதல்  நபராக உதவி செய்பவர் நிகழ்வின் கடைசி வரை பொறுப்புக்கோளோடு தன் கடமையை செய்து தருபவர் ...அண்ணனுக்கு இனிய பிறந்த வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் சிவக்குமார் 

வழிகாட்டி ஜெய் மாப்பிள்ளை ......


 வழிகாட்டி ஜெய் மாப்பிள்ளை ......

நேற்று நடந்த பத்திரப்பதிவு .ஒரு தந்தை இடத்தில் இருந்து எல்லா தளத்தில் இருந்தும் ஒவ்வுவொரு நிமிடம் எந்த ஒரு பரிதவிப்பும் ,படபடப்பும் இன்றி தன் குழந்தைகள் பாதிக்க கூடாது என்று எல்லோரையும் அரவணைத்து நிம்மதியான ஒரு சொத்தை பதிவு செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி மாப்பிள்ளை  ...பதிவாளர் ஒவ்வுறு நிமிடம் தாமத படுத்தும்போது அருகே சென்று பார்வையிட்டு கொண்டே இருந்தீர்கள் ,எந்த இடத்திலும் தன் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது பார்வையிட்டு கொண்டே இருந்தீர்கள் மாப்பிள்ளை ..இதுவே மிக பெரிய கடவுளாக இருந்து,ஒரு தந்தையாக  கண்காணித்து கொண்டதற்கு சிறப்பான முறையில் பத்திரப்பதிவு முடித்து கொடுத்திறீர்கள் மிக்க நன்றி மாப்பிள்ளை ...பத்திரப்பதிவு சாட்சி இடத்தில் முதல் இடத்தில் என் கையெழுத்து ..மூன்று வருடங்களுக்கு முன் வீடு பதிவு பண்ணும்பொழுது என்னை முன்னிலை படுத்தி இருக்கிறீர்கள் மாப்பிள ..மேலும் என் பொறுப்புகள் கூடிக்கொண்டே போகிறது ..அனாதையாக இருந்த இடத்தில் என்னை  குடும்பத்தில்  ஒருவுராக இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி மாப்பிள .....தொடரும் நம் சொந்தமும் ,பந்தமும் பாசமும் ...நம் தலைமுறைகளோடு ...
என்றும் அன்புடன் சிவக்குமார் 

வழிகாட்டி தந்தை .......

வழிகாட்டி தந்தை .......
நேற்று நடந்த பத்திரப்பதிவு .ஒரு தந்தை இடத்தில் இருந்து எல்லா தளத்தில் இருந்தும் ஒவ்வுவொரு நிமிடம் எந்த ஒரு பரிதவிப்பும் ,படபடப்பும் இன்றி தன் குழந்தைகள் பாதிக்க கூடாது என்று எல்லோரையும் அரவணைத்து நிம்மதியான ஒரு சொத்தை பதிவு செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி சார் ...பதிவாளர் ஒவ்வுறு நிமிடம் தாமத படுத்தும்போது அருகே சென்று பார்வையிட்டு கொண்டே இருந்தீர்கள் ,எந்த இடத்திலும் தன் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது பார்வையிட்டு கொண்டே இருந்தீர்கள் சார்..இதுவே மிக பெரிய கடவுளாக இருந்து,ஒரு தந்தையாக  கண்காணித்து கொண்டதற்கு சிறப்பான முறையில் பத்திரப்பதிவு முடித்து கொடுத்திறீர்கள் மிக்க நன்றி சார் ...தொடரும் பந்தமும் பாசமும் ...
என்றும் அன்புடன் சிவக்குமார் 

ஞாயிறு, 7 ஜூன், 2026

கறவை மாடு ...மூன்று தலைமுறையாக மிளிரும் உடுமலை விளாமரத்துப்பட்டி எஸ் .ஈஸ்வரன் (9942970136)....

 கறவை மாடு ...மூன்று தலைமுறையாக மிளிரும் உடுமலை விளாமரத்துப்பட்டி எஸ் .ஈஸ்வரன் (9942970136)....

கன்றுகள் வளர்ப்பு ;

உடுமலை பகுதியில் அதிக மேச்சல் நிலங்கள் உள்ளதால் கால்நடை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பசுவிற்கும் அதிகபட்ச உற்பத்தியை அடைவதில் கவனம் செலுத்துகின்றன. இதில், சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும் வகையில் அவற்றின் உணவைத் தயாரிப்பதும், பசுக்களைத் திறந்த தொழுவம் அல்லது கட்டுத் தொழுவம் போன்ற ஒரு அடைப்பு முறையில் வைத்திருப்பதும் அடங்கும். இந்தப் பசுக்கள் அவற்றின் பால் சுரக்கும் காலம் முழுவதும் உள்ளரங்கில் தங்கவைக்கப்படுகின்றன, மேலும் மீண்டும் கன்று ஈனுவதற்கு முன்புஅவற்றின் 60-நாள் வறண்ட காலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படலாம் . திறந்த தொழுவ பாணி கொட்டகைகளில், கால்நடைகள் தளர்வாக தங்கவைக்கப்படுகின்றன, அங்கு அவை தீவனம், தண்ணீர் மற்றும் தொழுவங்களை சுதந்திரமாக அணுக முடியும், ஆனால் ஒரு நாளைக்கு பல முறை பால் கறப்பதற்காக கொட்டகையின் மற்றொரு பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன. கட்டுத் தொழுவ அமைப்பில், ஒவ்வொரு முறை பால் கறக்கும்போதும் தோட்டத்துக்கு உரிமையாளர்கள் வீட்டில் இருப்பவர்கள் 

பால் கறக்கும் கருவிகள் பசுக்களிடம் கொண்டு வரப்படுகின்றன. இந்தக் கால்நடைகள் அவற்றின் தொழுவங்களுக்குள் கட்டப்பட்டு, வழங்கப்படும் தண்ணீர் மற்றும் தீவனத்தை சுதந்திரமாக அணுகும் வசதியுடன் இருக்கின்றன. பரந்த அமைப்புகளில், கால்நடைகள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை முக்கியமாக மேய்ச்சல் நிலத்தில் வெளியில் கழிக்கின்றன. இந்தக் கால்நடைகள் பொதுவாக குறைந்த பால் உற்பத்தியைக் கொண்டவை மற்றும் பால் கறப்பதற்காக ஒரு நாளைக்கு பல முறை மந்தையாகக் கொண்டு செல்லப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அமைப்புகள், பண்ணை அமைந்துள்ள  காலநிலை மற்றும் கிடைக்கக்கூடிய தோட்டத்தையும் ,வீட்டையும்  பெரிதும் சார்ந்துள்ளது.

கறவை மாட்டை வாங்கும்போது தலை ஈத்து முதல் 5 ஈத்து வரை வாங்கலாம் . 

கறவை மாட்டை வாங்கும் போது பள்ளு பார்த்து வாங்கவேண்டும் இரண்டு பள்ளு இருப்பதை பார்த்து வாங்கவேண்டும் ...

உணவுமுறை :

கறவை மாட்டுக்கு பசும்புல் தீவனம் அன்றாடம் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு ..அது போக குச்சி தவிடு ,கருக்க தவிடு ,நிலக்கடலை பொடி 5 கிலோ ,கடலை புண்ணாக்கு ,கோதுமை தவிடு ,உளுந்துக்குறணை .பருத்தி கொட்டை புண்ணாக்கு ,தேங்காய் புண்ணாக்கு ,காலை மாலை இரண்டு வேலையும் ஒரு கிலோ வீதம் தரவேண்டும் .

கறவை மாடுகள் விற்பனை ஊர்கள் ..

கறவை மாடுகள் வத்த கறவை ,சினை மாடுகள் உடுமலை சுற்றி இருக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் பொள்ளாச்சி ,ஓட்டஞ்சத்திரம் ,நரிக்கல்பட்டி எலிப்பாறை (பாலக்காடு ) ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வந்து வளர்க்கிறார்கள் .

கறவை மாட்டுக்கு நோய் :

கறவை மாட்டுக்கு கோமாரி நோய் வந்தால் இயற்கை முறையில் விளையும் குறுமிளகு ,சீரகம் ,நல்லஎண்ணெய் கால சூழ்நிலைக்கு தகந்தமாதிரி தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும் .

அஜீரண கோளாறு :

கரும்பு சர்க்கரை ,அரைகிலோ ,நல்லஎண்ணெய் கால்லிட்டர் ,வாழைப்பழம் கலந்து கொடுக்க வேண்டும் .

சுழி :

கறவை மாடுகள் வாங்கும்போது சுழி பார்த்து வாங்கவேண்டும் முதுகு பகுதியில் இருக்கும் சுழி ராஜ சுழி ,நெற்றி சுழி கொம்பு பின் இருக்கும் சுழி ,கழுத்து பகுதியில் இருக்கும் சுழி இரண்டு பக்கமும் இருக்கும் சுழி பார்த்து வாங்கவேண்டும் .

கால்நடை மருத்துவமனை :உடுமலை அருகே பெரிய அளவில் கோழிக்குட்டை பகுதியில் அருமையான சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன .

கறவை மாட்டின் விலை :










கறவை மாட்டின் விலை சுமார் 30,000 ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது .இறைச்சிக்காக விற்க படும் மாடுகள் 5 ஈத்து மேல் உள்ள மாடுகளை குறைந்தது Rs .25,000 மேல் விலை வைத்து விற்பனையும் செய்துவிடுகிறார்கள் ..


வியாழன், 4 ஜூன், 2026

உடுமலை -பெண் கல்வி -ஆராய்ச்சி பட்டப்படிப்பு -பணி .. வாழ்த்துக்கள் செல்வி .சுவேதா திருமலைசாமி-M .Sc மைக்ரோ பயோலாஜி -உடுமலை .பொட்டையம்பாளையம் -கோவை

 உடுமலை -பெண் கல்வி -ஆராய்ச்சி பட்டப்படிப்பு -பணி ..

வாழ்த்துக்கள் செல்வி .சுவேதா திருமலைசாமி-M .Sc மைக்ரோ பயோலாஜி  -உடுமலை .பொட்டையம்பாளையம் -கோவை 

சுவேதா வின் பெற்றோர்கள் கோவை மின்சாதன பொருட்கள் விற்பனையாளர்  திருமலைசாமி ,கோவை பேராசிரியர் ராதாமணி அவர்களின் புதல்வி ..அருமையான பெற்றோர்கள் தன் பெண் குழந்தை செல்வத்தை அறிவியல் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படிக்க வைத்து இன்று ஒரு கேரளா திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி பட்டபடிப்புடன் வேலைவாய்ப்பும் பெற்று பணியாற்றி கொண்டுஇருக்கிறார் ..அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் .

நேற்று தந்தையுடன் வந்த சுவேதா பாப்பாவிடம் பேசினேன் ..ஆராய்ச்சி பட்டப்படிப்பு பற்றி அதன் வேலைவாய்ப்பு பற்றி ஒரு மணிநேரம் உரையாடல் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது ..சுவேதா பாப்பா இந்த வேலைவாய்ப்பில் மனிதகுலத்தை அச்சுறுத்தும் கேன்சர் யை எப்படி அழிப்பது புற்றுநோய் உயிரியல் (Cancer biology) என்பது செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் பரவலைப் பற்றி படிக்கும் அறிவியலாகும். மூலக்கூறு நுட்பங்கள் (Molecular techniques) மற்றும் அடுத்த தலைமுறை வரிசைமுறை (NGS) ஆகியவை புற்றுநோயின் மரபணு மாற்றங்களை மிகத்துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை அளிக்க (Precision medicine) உதவுகின்றன...என்ற பட்டப்படிப்பு ஆராய்ச்சி எப்படி என்னால் மனித குலத்திற்கு உதவமுடியும் என்ற பணியை என்னிடம் சொன்ன போது மிகவும் மகிழ்வுற்றேன் ...பாப்பாவிற்கு என் வாழ்த்துக்களும் என் ஆசிகளும் எப்போதும் உண்டு .

சுவேதா  அப்பா திருமலைசாமி மாப்பிளை என்னை சந்திக்க வேண்டும் இரண்டு மூன்று முறை என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார் ..என் வங்கி பணி கடுமையான சூழலில் இருந்ததால் என்னால் சந்திக்க இயலவில்லை ..முதலில் திருமலைசாமி மாப்பிள ஆன்மீக ஜோதிடர் நான் அறிந்து இருந்தேன் ..இது தொடர்பாக சந்திப்பார் என்று நினைத்து இருந்தேன் ..கல்வி வேலைவாய்ப்பு சம்பந்தமாக தன் மகள் சந்திக்க வேண்டும் என சொல்லி இருந்தால் நானே அவர்கள் இருப்பிடம் சென்று சந்தித்து இருப்பேன் ..காலம் தாழ்த்தி சந்திப்பதற்கு என் தாழ்மையான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் ..மாப்பிள்ளையிடம் பாப்பாவிடம் நேரில் இன்று வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டேன் ..இது போன்ற சந்திப்புகள் உடனே நடக்கவேண்டும் .இந்த சந்திப்பு எனக்கு ஒரு பாடம் ....

சுவேதா பாப்பாவிடம் மேலும் வேலைவாய்ப்பு பற்றி பேசும்பொழுது மேலும் உதவிகள் தேவைப்பட்டால் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன் ..ஏன் என்றால் பாப்பா படித்த வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் என் மதிப்பு மிக்க நண்பர்கள் ,என் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் ...அவர்களின் தொடர்பில் நான் இருக்கிறேன் ..உதவுகிறேன் என்று சுவேதா பாப்பாவிடம் தெரிவித்து கொண்டு விடைபெற்றேன் ..இன்றய  சந்திப்பில் என்னுடன் இயற்கை தென்னை விவசாயி உடுமலை பொன்சோலை தம்பி சிவசக்தி  உடன் இருந்தது மிக்க மகிழ்ச்சி ...


என்றும் அன்புடன் சிவகுமார் ...



சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிக்க டட்சுஜோகு! (DATSUZOKU)

 

சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிக்க டட்சுஜோகு! (DATSUZOKU) 

சலிப்பூட்டும் வழக்கமான அன்றாட நடைமுறை எல்லோரையும் சற்று அலுப்படையத்தான் செய்கிறது.

காலையில் எழுந்திருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் செல்வது, அங்கு ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வது, மீண்டும் வீட்டுக்கு வந்து படுக்கைக்குச் செல்வது – என்ன போர் அடிக்கும் வாழ்க்கை இது என்று அடிக்கடி சொல்லி வருத்தப்படுவது! – இது எல்லோருக்குமான ஒரு அனுபவம் தான்!

இந்த சலிப்பிலிருந்து மீண்டு உற்சாகம் பெற ஏதேனும் ஒரு வழி உண்டா?

உண்டு என்கின்றனர் ஜப்பானியர்.

அதற்கான வழிமுறையின் பெயர் டட்சுஜோகு (DATSUZOKU)

டட்சு என்ற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தம் தப்பிப்பது என்பதாகும்.

ஜோகு என்ற வார்த்தைக்கு அர்த்தம் ரொடீன் – அதாவது அன்றாட நடைமுறை – என்பதாகும்.

அதாவது அன்றாட நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பிப்பது தான் டட்சுஜோகு!

டட்சுஜோகு தருவது இன்பமயமான ஒரு ஆச்சரியத்தைத் தான்!

ஒரு அரைநாள் விடுமுறை கிடைத்தது என்றால் உங்கள் ஊரில் உள்ள ஒரு மியூஸியத்திற்குச் சென்று அங்குள்ளவற்றைப் பார்த்து ஆச்சரியப்படலாம்.

ஒரு டான்ஸ் வகுப்பிற்கோ அல்லது ஒரு இசைப் பள்ளியிலோ சேர்ந்து ஒரு புதிய கலையைக் கற்கலாம்.

ஒரு புதிய க்ளப்பில் சேர்ந்து பல புதிய நண்பர்களைப் பெறலாம். நல்ல ஒரு ஹோட்டலுக்குச் சென்று புதிய உணவு வகை ஒன்றை சாப்பிட்டு மகிழலாம்.

ஒரு புதிய புத்தகத்தைப் படிக்கலாம். பணம் செலவழிக்க வழி இல்லையே என்றால் நூலகம் இருக்கவே இருக்கிறது.

மாலையில் நடைப்பயிற்சி செய்ய  மெரீனா பீச் இருக்கவே இருக்கிறது.

சற்று யோசித்துப் பார்த்தால் ஏராளமான வழிகளால் உங்கள் சலிப்பூட்டும் நடைமுறையை ஒழித்துக் கட்டலாம்.

எதிர்பாரா அழைப்புகள் வந்தால் அதை ஏற்று விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

இந்த உத்தியைப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடைவோரின் அனுபவங்கள் பிரமாதமானவை.

ஒருவர் தன் வீட்டைச் சுற்றி இருந்த வெற்று நிலத்தை அழகிய தோட்டமாக மாற்றினார். அவருக்கு மட்டும் அது ஆச்சரியத்தைத் தரவில்லை, சுற்று வட்டாரமே அவரைப் பார்த்து வியந்து போற்றியது.

இன்னொருவர் ஒரு பக்கக் கதை மட்டும் கட்டுரை எழுத ஆரம்பித்தார். அது அவருக்கு புகழை மட்டும் தரவில்லை. நல்ல ஒரு புதிய வருவாயையும் அளித்தது.

டட்சுஜோகுவினால் அன்றாடம் அந்தக் கணத்தில் வாழ்வது என்ற நல்ல ஒரு நடைமுறையும் உருவாகும். அன்றாடம் புதிய அனுபவங்கள், புதிய சூழ்நிலைகள், சவால்கள், கருத்துக்கள் ஆகியவற்றால் நாம் எதையும் சமாளிக்கும் திறனைப் பெறுகிறோம். ஒரு வலுவும் தானே உருவாகிறது.

சலிப்பில்லாத வாழ்க்கைக்கு ஒரு உன்னத வழி டட்சுஜோகு!