சனி, 5 ஏப்ரல், 2025

உடுமலை ஹாக்கி விளையாட்டு வீரர் சுபாஷ் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 






உடுமலை ஹாக்கி விளையாட்டு வீரர் சுபாஷ் தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


சுபாஷ் தமிழக ஜூனியர் ஹாக்கி அணிக்காக தேர்வாகி விளையாடி உள்ளார் . 13 வருட காலத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரியை சேர்ந்த ஹாக்கி வீரர் தமிழக அணிக்கு தேர்வானது சிறப்பாகும். ஒடிசாவில் ஜூனியர் நேஷனல் போட்டிகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி உள்ளார் .தற்பொழுது மேற்படிப்புக்கு கோவில்பட்டியில் புகழ் பெற்ற கல்லூரியில் படித்துக்கொண்டு தேசிய அளவில் நடக்கும் ஹாக்கி போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிக்கொண்டு உள்ளார் .

உடுமலை ஹாக்கி விளையாட்டு வீரர் சுபாஷ் தம்பி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🥰🏑🏑🏑

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஊத்துக்குளி கவின் சின்னசாமி தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 ஊத்துக்குளி கவின் சின்னசாமி தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

தனது கடின உழைப்பு விடா முயற்சியால் மருத்துவ துறையில் கோவை ,திருப்பூர் ஊட்டி மாவட்டங்களின் பன்னாட்டு நிறுவனத்தில்




மருத்துவ துறை மேலாளராக பயணம் எண்ணற்ற மருத்துவர்களை யும் மருந்தாளுநர்களையும் ,சந்தித்து தனது துறைக்கும் தன்னுடைய வாழ்க்கை முன்னேற்றதற்கும் களப்பயணம் மேற்கொண்டு தனது பணிகளை செய்து கொண்டு ..தனது பணி நேரம் போக தன் சமூகத்திற்கு வளரும் தலைமுறைக்கு கல்வி ,பொருளாதாரம் ,வேலை வாய்ப்புகளை உதவி செய்யும் தம்பி உடுமலை கண்டுடெடுத்த ஊத்துக்குளி தம்பி ..இந்த சிறு வயதிலும் கம்பள சமூக பண்பாடு ,கலாச்சாரம்  கம்பள ஆன்மீகத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லும் உலக புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் கவின் சின்ன சாமி கண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..தம்பியின் நட்பு என் பள்ளி தோழர் உடுமலை கதிரேசன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் நட்பு வட்டம் கிடைத்தது ..நண்பரின் மூலம் கிடைத்த நட்பு சொந்தமாக கிடைத்ததற்கு நன்றிகள் பல .....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681....

என் இனிய நண்பர் .... கோவை ஈஸ்டன் செல்வகுமார் அவர்களுக்கு ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 என் இனிய நண்பர் .... கோவை ஈஸ்டன் செல்வகுமார் அவர்களுக்கு ..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...16 வருடங்கள் அலுவலக நட்பு வட்டம் தொடரும் பந்தம்  ..அலுவுலக நட்பு வட்டங்கள் என்றும் பிரிவதில்லை  பிரிவதில்லை ...என்னுடைய சுகம் துக்கம் அனைத்திலும்..பங்கெடுக்கும் இனிய நண்பருக்கு என்னுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..




புதன், 2 ஏப்ரல், 2025

 கேள்வி : 

மகனைக் கேட்காமலேயே கடன்களை வாங்கிக் குவித்து விட்டு, மகன் வேலைக்குப் போகும் பொழுது (அ) தமது வயோதிகத்தில், ஒரு பெரும் கடனைக் கட்டவேண்டும் என்று அவனிடம் ஓர் பேரிடி போல் சொல்லும் சிலரின் செயல் சரியா? அம்மகன்கள் வாழ்வு தந்தையர் கடன்களைக் கட்டத்தானா?


பதில் :


  • மகனைக் கேட்காமலேயே கடன்களை வாங்கிக் குவிப்பது, பின்னர் மகன் வேலைக்குப் போகும் பொழுது அல்லது வயோதிகத்தில், கடனை அடைக்கச் சொல்வது சரியான செயல் அல்ல. இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்:
  • மகனின் வருமானத்தை முழுக்கக் கடனை அடைக்கச் சொல்வது நியாயமற்றது. இது அவரது எதிர்காலத் திட்டங்களையும், குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கும்.
  • மகனிடம் கலந்தாலோசிக்காமல் கடன் வாங்கியது உறவில் மனக்கசப்பை ஏற்படுத்தும். நம்பிக்கை இழப்பு மற்றும் கோபம் போன்ற உணர்வுகள் உருவாகலாம்.
  • திடீரெனப் பெரும் கடனை அடைக்கச் சொல்வது மகனுக்குப் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
  • கடனை அடைக்க முடியாத பட்சத்தில், நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இது குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்.
  • இதுபோன்ற செயல்கள் குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர மரியாதை குறையும்.
  • மகனின் வாழ்க்கை தந்தையின் கடன்களை அடைக்க மட்டுமே உரியதல்ல. அவருக்கும் சொந்த வாழ்க்கை, எதிர்காலத் திட்டங்கள், குடும்பப் பொறுப்புகள் உள்ளன. தந்தையின் கடன்களால் அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது.
  • தந்தை தனது கடன்களை அடைக்க முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். மகனுடன் கலந்து பேசி, கடனை அடைக்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இருவரும் இணைந்து கடனை அடைக்க முயற்சிப்பது நல்லது.
  • ஆக, கடன்களை வாங்கும் முன் குடும்பத்தினருடன் கலந்தாலோசிப்பது, வெளிப்படையான தகவல்தொடர்பு, மற்றும் பொறுப்புணர்வோடு செயல்படுவது அவசியம்.ஒரு ஆரோக்யமான குடும்பத்தில் இது மாதிரி பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை.

    எந்த குடும்பத்தில் வெளிப்படை தன்மை transparency இல்லையோ அங்கெல்லாம் இது மாதிரி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

    அம்மகன்கள் வாழ்வு தந்தையர் கடன்களைக் கட்டத்தானா?"… பெற்றோர் வாங்கிய கடன் வேறு வழி இல்லை. ஒரு வேளை அந் கடன் பிள்ளைகள் படிப்பிற்க்காகவும் வாங்கியிருக்கலாம். ஆனால் ஒன்று தன் குடும்ப நிதி நிலை பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் எதற்க்காக கடன் வாங்கப் பட்டது என்பது தெரிந்திருக்குமே. அளவுக்கு மீறி.கடன் வாங்கப் படும் போது அதை தடுத்திருக்க.வேண்டும். சரி மகன்களுக்கு தெரியவில்லை. அப்பாக்களுக்கு தெரியாதா தங்கள் கடன் சுமையும் தாங்களின் முதுமையும்.பொறுப்பற்ற பெற்றோர் சொத்துகளை குழந்தைகளுக்கு விட்டு செல்லாவிட்டாலும் கடனை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்.

    சட்டரிதியாக யாரும் surety கையெழுத்து போடாவிட்டால் அப்பாக்கள் வாங்கிய கடனை அடைக்கும் பொறுப்பு மகன்களுக்கு இல்லை. ஆனால் கட்டாயமாக ஒர தார்மீக பொறுப்பு இருக்கிறத. அதில் மாற்று கரூத்து கிடையாது.

    குடும்பத்தில் day to day expenses தவிர எல்லா நிதி நிலைமையும் எல்லோருக்கும் தெரியும். இந்த நிமிடத்தில் நான் இறந்தாலும் மனைவிக்கோ மகனுக்கோ எந்த பிரச்சனையும் இருக்காது இது மாதிரி நிதிவிஷயங்களில். எங்கள் முதலீடு எங்கு எவ்வளவு போன்ற எல்லா விவரங்களும் ஒவ்வொருவருக்கும் தெரியும். 

புதன், 26 மார்ச், 2025

உடுமலை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டி ...

உடுமலை கல்லூரி  முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டி ...


நேற்று எங்கள் அமைப்பின் சார்பில் நேற்று கல்லூரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்விக்காகவும் ,வரலாறு தொல்லியியல் சார்ந்த நிகழ்வுக்காக கையெழுத்து ஆகியது .மிக்க மகிழ்ச்சி ..நேற்று முதல்வருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவரின் இந்த துறைக்கு வந்ததற்கு அவரின் வழிகாட்டி நம் சமுதாய கல்வி வளர்ச்சிக்கு காரணமான கரப்பாடி பூபாளம் முருகேச பாண்டியன் அய்யா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும் என்றார் .அவர் சிறு வயதில் தன் தந்தையுடன் பூபாளம் முருகேசபாண்டியன் அவர்களை சந்திக்க என் தந்தையுடன் செல்லும் பொழுது தன் தனி தன்மையை தமிழ் துறையில் சிறந்து விளங்குவார் இத்துறையை படிக்கவேண்டும் வழிகாட்டியவர் அவரின் வழிகாட்டுதலில் இந்த முதல்வர் பணிக்கு வந்துள்ளேன் என்று கூறியது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சியாக இருந்தது ..முதல்வரின் ஊரு கரப்பாடி அருகே இருக்கும் கொல்லப்பட்டி காளியபுரம் எனும் கிராமம் .பள்ளிப்படிப்பு  காளியபுரம் ,கல்லூரி படிப்பு கோவை சி பி எம் கல்லூரி யில் முடித்து .பேராசிரியராக ஹிந்துஸ்தான் கல்லூரி பணிபுரிந்து தற்பொழுது உடுமலை வித்யா சாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார் .அதுவும் உங்களின் உடுமலை வரலாறு அமைப்புடன் கல்வி மற்றும் வரலாறு தொல்லியியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வாய்ப்பு கிடைத்து எங்கள் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு என்று கூறி நன்றி தெரிவித்தார் ..


குறிப்பு :நம் கம்பள சமுதாயத்தில் அருமையான கல்வியாளர் கவிஞர் பூபாளம் முருகேச பாண்டியன் அய்யா அவர்கள்   பல தரப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது பெருமையே .வாழ்த்துக்கள் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 




வெள்ளி, 21 மார்ச், 2025

கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா?

 கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா? 

என் பதில் : 📚📚✍️✍️

வீட்டு மனை வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்கும். அதில் சில பல அம்சங்கள் உள்ளன.

அது வீட்டு மனையாக இருக்க வேண்டும்.

விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

பொதுவாக, மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இது கிடையாது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது. அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை இருக்கலாம். இதற்கு மாறாக, வீட்டுக்கடன் 30 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம்.

வீட்டு மனையுடன் வீடு கட்டுவதற்கான கடன் வாங்கும் போது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்,உதாரணமாக 2 வருடங்கள், வீடு கட்டி முடித்திருக்க வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காவிடில், அது வீட்டுக் கடனாக கருதப்படாமல், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.

வீட்டு மனைக் கடனுக்கு காலவரையறை குறைவாகையால், மாதாந்திர தவணை அதிகமாக இருக்கும்.

வீட்டுக் கடனை விட, வீட்டு மனைக் கடனுக்கு வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

குறிப்பு : இடத்தின் மதிப்பு என்றும் இறங்காது ...அதன் மதிப்பு நீண்டகாலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ..உடனே பணமாக மாற்றமுடியாது ..

நன்றி ..🏠

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)

Question: Is a bank loan available to buy a Site House ? My answer: 📚📚✍️✍️

 Question: Is a bank loan available to buy a Site House ?

My answer: 📚📚✍️✍️

A bank loan is available to buy a  site house. There are several features in it.

It must be a house.

It must not be agricultural land.

It must come under the control of any municipality, corporation, etc.

Generally, a loan is given only up to 70% of the value of the land.

There is no government tax exemption.

Must be a citizen of India.

This is not the case for overseas Indians.

Unlike a home loan, a long term is not given. It can be up to a maximum of 15 years. In contrast, a home loan can be up to 30 years.

When taking a loan to build a house with a house, the house must be completed within a certain number of years, for example 2 years. If the construction is not completed, it will not be considered a home loan and the interest rate will be increased.

Since the term of a home loan is short, the monthly installment will be higher.

The interest rate for a home loan is slightly higher than a home loan.

Note: The value of the land never depreciates...its value is useful for the long term..it cannot be converted into cash immediately..

Thank you..🏠

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)

புதன், 19 மார்ச், 2025

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )

 பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )









புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!








(மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம்.


 (மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம். கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாயம் உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது. சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம். அது பள்ளியோ வீடு வீதியோ பூங்கவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் நாளை கதை சொல்வோம். நாளை தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும். Happy Story Telling.

என் ஷியாம் செல்ல குட்டி ..தூங்குவதற்கு முன் ...ஷ்யாமுடன் பிறந்த 2 வருடங்களிருந்து கவனிக்கும்கேட்க்கும் திறன் எல்லா குழந்தைகளுக்கு வருவதுபோல் ...கூரிய திறன் மூலம் நான் கதை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன் ...அவனுக்கு பிடித்த ராஜா ராணி ,அம்புலிமாமா கதைகள் ..பாட்டி வடை சுட்ட கதைகள் இரவு தூங்காவதற்கு முன் சொல்லிக்கொண்டு பழக்கப்படுத்தி இருந்தேன் ...பள்ளியில் சேர்ந்த வுடன் ..இன்று வகுப்பில் நடந்த நிகழ்வுகள் ..ஆசிரியர் சொல்லி கொடுத்தா கதைகள் ...சகா நண்பர்கள் சொன்ன செய்திகள் ...அவருடைய பாணியில் பேசி தூங்கவைப்பேன் ..அதுவும் அவருக்கு வளர்ந்த 6 வயது முடிய கதைகள் கேட்டு என் தோளில் கட்டிபிடித்தி தூங்கியவன் என் செல்ல ஷியாம் குட்டி ...
கனவு.........(ஷ்யாம் அப்பா ....)
கண்ணு தூங்கிட்டியாப்பா.....
இன்னும் இல்லப்பா... தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.
கதை கேட்டு தூங்கிய காலமெல்லாம் ...வாழ்வின் வழியை ..கனவை ..எதிர்காலத்தில் கதைகள் சொல்லி தூங்கவைப்போமா .என்று தெரியவில்லை ...ஷியாம் பிறந்த உடுமலை லட்சுமி மருத்துவமனை ..அவன் வளர்ந்த கோவை வடவள்ளி ....என் ஷ்யாமின் நினைவுகள் என்றும் மறைவது இல்லை ...என்றும் அன்புடன் சிவக்குமார்

சனி, 15 மார்ச், 2025

 தம்பி .நேற்று பெரியப்பா வின் புகைப்படம் பற்றி பெருமைகளை பகிருங்கள் என்று கூறி இருந்தீர்கள் ..அருமை ..வாழ்த்துக்கள் ..எனக்கு நேரம் கிடைக்கும்பொழுது பகிர்கிறேன் ..அதற்கு முன் நீங்கள் அவரிடம் நேர்காணல் போன்று இயல்பாக பேசுங்கள் 

பெரிய அப்பா ..தோட்ட வேலை ..உழவு சம்பந்தப்பட்ட செய்திகளை  பேசும்பொழுது  அவரிடம் கேட்கவேண்டும் .(இயல்பாக பேசவேண்டும் ,செய்தியாக கேட்க கூடாது .நேரடியாக கேட்கும் பொழுது சொல்ல மாட்டார்கள் .இது எல்லாம் எதற்கு என்று விரும்ப மாட்டார்கள் .உழவு என்ன என்ன வகை உள்ளது .மண் னின் தன்மை  செம்மண்ணில் உழுவதற்கும் கரிசல் மண்ணின் உழுவுதற்கும் வேறுபாடு உள்ளது . .வெள்ளாமைக்கு உகந்த காலம் உள்ளது ..

உழும் மாடுகள் பற்றி அவைகளின் தன்மை ..அதன் வகைகளில் பற்றி  கேளுங்கள் நோட்டில் எழுதி வையுங்கள் அதை மொபைலில் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து கொள்ளுங்கள் ..நேரம் கிடைக்கும் பதிவிடலாம் .புகைப்படம்  எடுக்கும்பொழுது இயல்பாக எடுக்கவேண்டும் போட்டோக்கு போஸ் கொடுத்து எடுக்க கூடாது . 


நீங்களே நேர்காணல் செய்து பதிவிடலாம் ..உங்களுக்கும் தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு . நேர்காணல் செய்து தட்டச்சு செய்து எனக்கு அனுப்புங்கள் ஏதாவது திருத்தம் செய்து அனுப்புகிறேன் 


நம்மை சுற்றி ஏராளமான தகவல் கிடைக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு .

இது எல்லாம் நமக்கு கிடைக்கும் நேர மேலாண்மை யில் இது போன்ற தகவலை பதிவிடலாம் ..





வெள்ளி, 14 மார்ச், 2025

என் பார்வையில் .. தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்


 என் பார்வையில் ..

தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட் 

, நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அரசு நடத்தும் மதுபானக் கழகமான டாஸ்மாக்-ல் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்காக அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது.


முக்கிய சிறப்பம்சங்கள்:


-வீட்டுவசதித் திட்டம்: கலைஞர் கனவு இல்லம் வீட்டுவசதித் திட்டத்திற்கு ₹3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது மாநிலம் முழுவதும் உள்ள வறிய குடிமக்களுக்கு ஒரு லட்சம் புதிய வீடுகளை வழங்கும் ¹.

-கல்வி கடன்கள்: ஒரு லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் கல்விக் கடன்களுக்கு ₹2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ¹.

-குளோபல் சிட்டி: சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு உலகளாவிய நகரம் உருவாக்கப்படும், உள்கட்டமைப்பை மேம்படுத்தி வீட்டு வசதிகள், அகலமான சாலைகள் மற்றும் பூங்காக்களை வழங்கும் ¹.

-பெண்கள் நலன்: மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ₹3,600 கோடியும், மகளிர் உரிமை தோகை திட்டத்திற்கு ₹13,027 கோடியும், புதுமை பெண் திட்டத்திற்கு ₹420 கோடியும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

-உள்கட்டமைப்பு மேம்பாடு: உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு பட்ஜெட் முன்னுரிமை அளிக்கிறது.


சிவக்குமார் V K 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை .



என் பார்வையில் ... தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்,

 


என் பார்வையில் ...

தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட், 

நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்குகிறது. புதிய விமான நிலையம் மற்றும் செயற்கைக்கோள் நகரம் உட்பட பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் மற்றும் நகர்ப்புற திட்டங்கள் போன்ற முதன்மைத் திட்டங்களில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.


முக்கிய சிறப்பம்சங்கள்:


- நலத்திட்டங்கள்: அரசு நடத்தும் மதுபான நிறுவனமான டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பெண்கள் நலன் மற்றும் மாணவர் முயற்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி.

-உள்கட்டமைப்பு மேம்பாடு: பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்தல்.

-கல்வி*: தேசிய கல்விக் கொள்கை (NEP) மீதான கருத்து வேறுபாடுகள் காரணமாக தொழிற்சங்க நிதி வெட்டுக்கள் இருந்தபோதிலும், கல்விக்கான தொடர்ச்சியான ஆதரவு.

-பொருளாதார வளர்ச்சி: உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.


பட்ஜெட் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகள் அரசாங்க ஊழல்களையும், தேசிய கல்விக் கொள்கையை மாநிலம் நிராகரித்ததையும் விமர்சிக்கின்றன. இருப்பினும், திமுக அரசு அதன் நலன் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு உறுதியுடன் உள்ளது


சிவக்குமார் .V K 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை .

ஞாயிறு, 9 மார்ச், 2025

திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை















 திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை
இவர் விவசாய பண்ணை நிறுவன மேலாளர் ,விவசாய தொழில்முனைவோர் ஆவார்,விவசாய பண்ணையில் தென்னை மரங்கள் ,மற்றும் ஊடுபயிர்கள் அதற்கு தகந்த ஆலோசனைகள் வழங்கிநீர்மேலாண்மையை கற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து இலாபத்துடன் மேலாண்மை செய்பவர் .குறைந்த இடத்தில நேரம் கிடைக்கும் பொழுது ,காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு தொழிலை கற்று நிர்வாகம் செய்து ஆலோசனை வழங்குபவர் .கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் ,