சனி, 15 மார்ச், 2025

 தம்பி .நேற்று பெரியப்பா வின் புகைப்படம் பற்றி பெருமைகளை பகிருங்கள் என்று கூறி இருந்தீர்கள் ..அருமை ..வாழ்த்துக்கள் ..எனக்கு நேரம் கிடைக்கும்பொழுது பகிர்கிறேன் ..அதற்கு முன் நீங்கள் அவரிடம் நேர்காணல் போன்று இயல்பாக பேசுங்கள் 

பெரிய அப்பா ..தோட்ட வேலை ..உழவு சம்பந்தப்பட்ட செய்திகளை  பேசும்பொழுது  அவரிடம் கேட்கவேண்டும் .(இயல்பாக பேசவேண்டும் ,செய்தியாக கேட்க கூடாது .நேரடியாக கேட்கும் பொழுது சொல்ல மாட்டார்கள் .இது எல்லாம் எதற்கு என்று விரும்ப மாட்டார்கள் .உழவு என்ன என்ன வகை உள்ளது .மண் னின் தன்மை  செம்மண்ணில் உழுவதற்கும் கரிசல் மண்ணின் உழுவுதற்கும் வேறுபாடு உள்ளது . .வெள்ளாமைக்கு உகந்த காலம் உள்ளது ..

உழும் மாடுகள் பற்றி அவைகளின் தன்மை ..அதன் வகைகளில் பற்றி  கேளுங்கள் நோட்டில் எழுதி வையுங்கள் அதை மொபைலில் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து கொள்ளுங்கள் ..நேரம் கிடைக்கும் பதிவிடலாம் .புகைப்படம்  எடுக்கும்பொழுது இயல்பாக எடுக்கவேண்டும் போட்டோக்கு போஸ் கொடுத்து எடுக்க கூடாது . 


நீங்களே நேர்காணல் செய்து பதிவிடலாம் ..உங்களுக்கும் தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு . நேர்காணல் செய்து தட்டச்சு செய்து எனக்கு அனுப்புங்கள் ஏதாவது திருத்தம் செய்து அனுப்புகிறேன் 


நம்மை சுற்றி ஏராளமான தகவல் கிடைக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு .

இது எல்லாம் நமக்கு கிடைக்கும் நேர மேலாண்மை யில் இது போன்ற தகவலை பதிவிடலாம் ..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக