வெள்ளி, 7 மார்ச், 2025

மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰 நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

 மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰


நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

மகளிர் தினம்
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும்
உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...

திருமதி சிவரஞ்சனி -வழக்கறிஞர் -கோவை 

கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எப்பொழுதும் உண்டு ..கம்பள விருட்சத்தின் முதல் உறுப்பினர் ...செயல் துணைத்தலைவர் ..பொறுப்பாக தன பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே.. 

திருமதி .சுமதி மோகன் -கடவூர் இளவரசி 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்வி ,தொழில் முன்னேற்ற கருத்துக்கள் ..வாழக்கையில் வளர்வதற்கான சிந்தனைகள் ,ஆலோசனைகள் ,வழங்கி நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ,கௌரவ ஆலோசகராக உள்ளார் . ..இவரின் இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களுடன் சில தினங்களில் பகிர்கிறேன் .

திருமதி .நீலவேணி ரமேஷ் -பேராசிரியர் -உடுமலை 
கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..இவர் GVG பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் ..இவர் கம்பள சமுதாய  தளத்தில் அதிகம் வருவதில்லை..கல்லூரி சேருவதற்கு செல்லும்பொழுது அங்கு சேருவதற்கான தன்னாலான உதவிகள் செய்து தருவார் ..கல்வி சம்பந்தமான மேற்படிப்பு தகவல்களை தந்து நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து தருவார் ..
 
திருமதி .சத்யா பரமசிவம்  ...-தனியார் துறை -கோவை 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நல்ல திறமைசாலியான ,தைரியம் மிக்க பெண்மணி ...கடந்தகாலங்களில் திருமணத்திற்கு பின் ...பெண் தொழில்முனைவோராக இருந்தவர் ..இமயமலை அளவுக்கு வாழ்க்கையில் உயர்நதவர் .. தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார் ..இவரிடம் தையரியத்தையும் ,விடாமுயற்சியும் கற்று கொள்ளலாம் .

திருமதி .காயத்திரி செந்தில்குமார் -விவசாயம் -அடிவள்ளி 

கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..பட்டப்படிப்பு பெற்றதும் பணிக்கு செல்லாமல் ..விவசாயம் என் உயிர் மூச்சு ..என்று தற்பொழுது புது புது விவசாய தொழில்நுணுக்கங்களை கற்று ..விவசாயத்தில் பசுமை புரட்சியை செய்துகொண்டுள்ளார் ...தற்காலத்தில் விவசாயத்தை மறக்கும் சூழ்நிலையில் தன் கடுமையான உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது எங்களுக்கு பெருமை ..இவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் புது உறுப்பினர் ..

திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் -உடுமலை 

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர்  உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் -Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் )-உடுமலை ஜிலேபி நாயக்கன் பாளையம் ..
தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில்  நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம்  செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி  அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு  இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார்..கம்பள விருட்சத்தின் உறுப்பினர் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு தொழில் முனைவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் .. 

திருமதி .கார்த்திகேயனி முருகராஜ் -தொழில்முனைவோர் -பொம்மு நகலகம் .வழக்கறிஞர் அலுவுலகம் -திருப்பூர் 

தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..கார்த்திகேயனி முருகராஜ் அவர்கள்  ,தன் ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார்  ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ..கம்பள விருட்சத்தின் புது உறுப்பினர் ..


திருமதி .ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் சிறு அறிமுகம்
Lic Agent &  Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி...  அதிகபட்சமானது அப்பொழுது.   இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...தற்பொழுது கம்பள விருட்சத்தின் ஆலோசனை குழுவில் வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...


திருமதி கோமதி மணி -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை 
இவர் பள்ளி படிப்பு ..பெரியகோட்டை கிராம பஞ்சாயத்து வார்டு ஆலசோகராக பணிபுரிந்து உள்ளார் ..இவரின் பணிகள் நல்ல திட்டங்கள் மூலம் அந்த கிராமங்களுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் .


திருமதி ஆண்டாள் சந்திரன் -பஞ்சாயத்து போர்டு தலைவர் -ஜிலேபி நாயக்கன்பாளையம் -

கல்வி பள்ளிப்படிப்பு ...இவரின் பணிகள் நம் சமுதாயம் அதிகம் உள்ள மக்கள் கொண்ட jn பாளையத்தில் ..வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி உள்ளார் ..

திருமதி .சுசிலா -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை 
கல்வி பள்ளிப்படிப்பு ..இவர் பெரியகோட்டை கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ..இவர் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்துகொண்டு ..தங்கள் ஊரில் இருக்கும் பொது மக்களுக்கும் ,நம் சொந்தங்களுக்கும் தனியார் வங்கிகளில் சுய உதவி குழுக்கள் நிதியை பெற்று இன்றைய காலகட்டத்துக்கு பொருளாதார நிதி  உதவி செய்துகொண்டுள்ளார்.இவர் கம்பள சமுதாயத்தில் வரன் தேடுபவர்களுக்கு .வர பிரசாதமாக நல்ல படித்த ,படிக்காத இளைய சொந்தங்களுக்கு திருமண ஜாதகம் பெற்று பரிமாறி கொண்டு இன்று முடிய நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார். இவரின் கம்பள சமுதாய பணி ஈடுஇல்லாதது ....  

திருமதி .பிரேமலதா -எஸ் .அம்மாபட்டி -உடுமலைப்பேட்டை 

கல்வியில் இளநிலை  பட்டம் பெற்றவர் ..இவர் நமது கீர்த்திவீரர் வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு ஆரம்பித்து நம் சமுதாய சொந்தங்களை ஒருங்கிணைக்க மதிப்பு மிக்க பகிரளி மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்பள சொந்தங்களை இணைத்து இன்று பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் குழுவிற்கு இவரின் சரியான படைப்பாற்றல் ,யோசனை வெகு அருமை ..யாரும் சிந்திக்காத சிந்தனையை உருவாக்கி கம்பள செய்திகளை பரிமாறி கொண்டிருப்பதற்கு இவரின் மதிப்புமிக்க யோசனை என்றும் மறவாது ..

திருமதி  .மகாலக்ஷ்மி -தனியார் துறை -உடுமலைப்பேட்டை -கரப்பாடி 
கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் உறுப்பினர் ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் அறக்கட்டளையின் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து பணிபுரிந்து வருகிறார் 

திருமதி .வீரலட்சுமி ராஜவேல் ..(ஆண்டிபட்டி )

சாப்டூரில் பிறந்து  நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உள்ள  பள்ளியில் சிறப்பான கல்வி கற்கும் பாக்கியம் பெற்றும் பெண்பிள்ளைகள் அதிக படிப்பு தேவை இல்லை என்ற குடும்ப  சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக  படிப்பை தொடரமுடியாமல் இருந்து . 

திருமணத்திற்கு பிறகு என் கணவரின் உதவியோடு மேல் படிப்பு படித்து முதுநிலை பட்டதாரி ஆகி  16 மாணவர்களுடன் தொடங்கிய ஒரு சிறிய தனியார் பள்ளியில் முதல்வராக சேர்ந்து 10 ஆண்டுகளில் 1000 க்கு மேல் மாணவர்கள் படிக்கும் பள்ளியாகவும்  சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் self confidence, நேர்மறை சிந்தனை  மேம்படுத்தும் இடமாகவும் உருவாக்கியது.

மேலும் 20 ஆண்டுகளாக  பணி செய்த 2 பள்ளியிலும் நல்ல திறன் மிகுந்த முதல்வர் என்று மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேர் பெற்றுள்ளேன்.
 
பிறந்த வீடான சாப்டூர் பாளையம் பற்றிய வரலாற்று செய்திகளை திரட்டுவதில் ஆர்வம் உண்டு.


திருமதி.செல்வராணி..எஸ் .அம்மாபட்டி .உடுமலைப்பேட்டை .
குமரேசன்.
விவசாயபண்ணை
நிர்வாகஇயக்குனர்.
எஸ்அம்மாபட்டி
படிப்பு: பள்ளிபடிப்பு 
1998ல்.தமிழ்மொழிப்
பாடதேர்வில்முதல்பரிசுவென்றவர்.
அழிந்து வரும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு
நிகழ்வு களைபாதுகாக்க
முழுமுயற்சியில்தன்னை
ஈடுபடுத்திக்
கொண்டிருப்பவர்.
கீர்த்தி வீரர் எத்தலப்பர்குழுமற்றும்கம்பளத்துப்பெண்கள்
குழுவில்இணைந்து
வரலாறு மற்றும் அன்றாட நிகழ்வுகளை அனைவரும்அறிந்து 
கொள்ள மிகுந்த முயற்சி மேற்கொள்பவர்.குறுகியகாலகட்டத்தில் தமது

நட்பு வட்டாரத்தை
பெருக்கிக்கொண்டவர்.
தன்னம்பிக்கை தைரியம்
எழுத்தாற்றல் மிக்கவர்📗✒️✒️🤝🥰செல்வராணி
சிம்மராசி
இவர் ஆணாகப்பிறக்க
வேண்டியவர்
கற்பனை வளம்
சிந்தனைஆற்றல்
எழுத்தார்வம் மிக்கவர்,தன்னால் தனது சமூகம் உயரவேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவர்,தமிழகத்தின் இரும்பு பெண்மணி  ஜெயலலிதாவுக்கும் சிம்மராசி தான் மகம் நட்சத்திரம்,கம்பளம் சமுதாயத்தில் உள்ள அனைத்து உறவுகள் பற்றி அறிய
முயற்சி மேற்கொண்டுள்ளவர்,ஆண் பெண் பேதம் அற்றவர்,சிம்ம ராசி உள்ளவர்கள் அதிகம் தன் சொந்தங்களை நேசிப்பவர்,வீரமிக்கவர்கள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் ஆண் பெண் எத்தனை கூட்டமாக இருந்தாலும் தன்  பேச்சால் அனைவரையும் தனது கருத்துகளால் ஆளுபவர் ✒️📗📗🤝🥰📡🎙️🎙️


திருமதி அனிதா ஜெயராமன் ( பொன்னாலம்மன் சோலை -உடுமலைப்பேட்டை )
வளர்ந்து வரும் விவசாய தொழில்முனைவோர் 
தன் சகோதரருடன் இணைந்து  தொழில்முனைவோராக திகழ்வதுடன் பொதுதளத்தில் சமுதாய முன்னேற்றங்களிலும் எதிர் காலச் சூழ்நிலைகளுக்கு தகந்த கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படுகிறார்...


திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை 
இவர் விவசாய பண்ணை நிறுவன மேலாளர் ,விவசாய தொழில்முனைவோர் ஆவார்,விவசாய பண்ணையில் தென்னை மரங்கள் ,மற்றும் ஊடுபயிர்கள் அதற்கு தகந்த ஆலோசனைகள் வழங்கிநீர்மேலாண்மையை கற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து இலாபத்துடன் மேலாண்மை செய்பவர் .குறைந்த இடத்தில நேரம் கிடைக்கும் பொழுது ,காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு தொழிலை கற்று நிர்வாகம் செய்து ஆலோசனை வழங்குபவர் .கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் ,மேலும் இவர் தன் கணவரின் டைல்ஸ் காண்டிராக்ட் தொழிலுக்கு பக்க பலமாக இருந்து கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாக செயல்படுபவர் ..
 
எஸ் .தெய்வநாயகி (கே .வல்லகொண்டபுரம் -உடுமலைப்பேட்டை )முதுகலை பட்டதாரி .
பொள்ளாச்சி கலை கல்லூரியில்  பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கணிதத்தில் முனைவர் படிப்பு படித்து வருகிறார்...நம் பெண் குழந்தை சொந்தங்களுக்கு கல்வி விழுப்புணர்வு மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார் .

நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் 

நாளையும் தொடரும் ...உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸப் எண் ...👍🌷🌷🌷🌷🌷





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக