புதன், 26 மார்ச், 2025

உடுமலை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டி ...

உடுமலை கல்லூரி  முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டி ...


நேற்று எங்கள் அமைப்பின் சார்பில் நேற்று கல்லூரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்விக்காகவும் ,வரலாறு தொல்லியியல் சார்ந்த நிகழ்வுக்காக கையெழுத்து ஆகியது .மிக்க மகிழ்ச்சி ..நேற்று முதல்வருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவரின் இந்த துறைக்கு வந்ததற்கு அவரின் வழிகாட்டி நம் சமுதாய கல்வி வளர்ச்சிக்கு காரணமான கரப்பாடி பூபாளம் முருகேச பாண்டியன் அய்யா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும் என்றார் .அவர் சிறு வயதில் தன் தந்தையுடன் பூபாளம் முருகேசபாண்டியன் அவர்களை சந்திக்க என் தந்தையுடன் செல்லும் பொழுது தன் தனி தன்மையை தமிழ் துறையில் சிறந்து விளங்குவார் இத்துறையை படிக்கவேண்டும் வழிகாட்டியவர் அவரின் வழிகாட்டுதலில் இந்த முதல்வர் பணிக்கு வந்துள்ளேன் என்று கூறியது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சியாக இருந்தது ..முதல்வரின் ஊரு கரப்பாடி அருகே இருக்கும் கொல்லப்பட்டி காளியபுரம் எனும் கிராமம் .பள்ளிப்படிப்பு  காளியபுரம் ,கல்லூரி படிப்பு கோவை சி பி எம் கல்லூரி யில் முடித்து .பேராசிரியராக ஹிந்துஸ்தான் கல்லூரி பணிபுரிந்து தற்பொழுது உடுமலை வித்யா சாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார் .அதுவும் உங்களின் உடுமலை வரலாறு அமைப்புடன் கல்வி மற்றும் வரலாறு தொல்லியியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வாய்ப்பு கிடைத்து எங்கள் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு என்று கூறி நன்றி தெரிவித்தார் ..


குறிப்பு :நம் கம்பள சமுதாயத்தில் அருமையான கல்வியாளர் கவிஞர் பூபாளம் முருகேச பாண்டியன் அய்யா அவர்கள்   பல தரப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது பெருமையே .வாழ்த்துக்கள் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக