புதன், 19 மார்ச், 2025

(மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம்.


 (மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம். கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாயம் உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது. சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம். அது பள்ளியோ வீடு வீதியோ பூங்கவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் நாளை கதை சொல்வோம். நாளை தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும். Happy Story Telling.

என் ஷியாம் செல்ல குட்டி ..தூங்குவதற்கு முன் ...ஷ்யாமுடன் பிறந்த 2 வருடங்களிருந்து கவனிக்கும்கேட்க்கும் திறன் எல்லா குழந்தைகளுக்கு வருவதுபோல் ...கூரிய திறன் மூலம் நான் கதை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன் ...அவனுக்கு பிடித்த ராஜா ராணி ,அம்புலிமாமா கதைகள் ..பாட்டி வடை சுட்ட கதைகள் இரவு தூங்காவதற்கு முன் சொல்லிக்கொண்டு பழக்கப்படுத்தி இருந்தேன் ...பள்ளியில் சேர்ந்த வுடன் ..இன்று வகுப்பில் நடந்த நிகழ்வுகள் ..ஆசிரியர் சொல்லி கொடுத்தா கதைகள் ...சகா நண்பர்கள் சொன்ன செய்திகள் ...அவருடைய பாணியில் பேசி தூங்கவைப்பேன் ..அதுவும் அவருக்கு வளர்ந்த 6 வயது முடிய கதைகள் கேட்டு என் தோளில் கட்டிபிடித்தி தூங்கியவன் என் செல்ல ஷியாம் குட்டி ...
கனவு.........(ஷ்யாம் அப்பா ....)
கண்ணு தூங்கிட்டியாப்பா.....
இன்னும் இல்லப்பா... தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.
கதை கேட்டு தூங்கிய காலமெல்லாம் ...வாழ்வின் வழியை ..கனவை ..எதிர்காலத்தில் கதைகள் சொல்லி தூங்கவைப்போமா .என்று தெரியவில்லை ...ஷியாம் பிறந்த உடுமலை லட்சுமி மருத்துவமனை ..அவன் வளர்ந்த கோவை வடவள்ளி ....என் ஷ்யாமின் நினைவுகள் என்றும் மறைவது இல்லை ...என்றும் அன்புடன் சிவக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக