வெள்ளி, 13 நவம்பர், 2020

 திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் (ஜெய்வந்த் ஏஜென்சிஸ் )-உடுமலைபேட்டை

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர் உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

இன்று திருமதி .செல்வி விஜயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 14-11-2020

ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ்...வக்கீல் நாகராஜன் வீதி ,(BSNL அலுவலகம் எதிரில்)உடுமலைப்பேட்டை,தொடர்பு எண் : .94891 87696. 👍🌱🌱🎂🎂


திங்கள், 9 நவம்பர், 2020

 

கேள்வி : மென்திறன்கள்  என்றால் என்ன ?..ஒரு சிறு விளக்கம் அளிக்க முடியுமா ..?


என் பதில் :..


மென்திறன்கள் என்பது ஒருவர் மற்றொருவரோடு பேசிப் பழகும் தன்மை, சமூகத்தில் பழகும் திறன், தொடர்புத் திறன், ஆளுமை பண்புகள், அணுகுமுறைகள், தொழில் சார்ந்த பண்புக்கூறுகள், உணர்வுகள் சார்ந்த திரன் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மேற்கண்ட பண்புகளைப் பயன்படுத்தி ஒருவர் தாங்கள் செய்யும் தொழிலில் யுத்திகளை கையாள்வது, குழுக்களில் பணிபுரியும் பொழுது அதற்கேற்ற பண்புகளை வெளிப்படுத்துவது போன்றவற்றின் மூலம் தங்களுடைய இலக்கை அடைவது அவசியமாகிறது.


காலின்ஸ் ஆங்கில அகராதியில், மென்திறன்கள் பற்றி நான் படித்து தெரிந்த கொண்ட விளக்கம் ..


"மென்திறன்கள் என்பது சில பணிகளுக்கு தேவைப்படும் ஏட்டு அறிவைச் சாராத பொது அறிவு அல்லது இயல்பு அறிவு சார்ந்த பண்புகள், மக்களை கையாளும் விதம் மற்றும் நேர்மறையான நெகிழ்வான அணுகுமுறை ஆகும்"


தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினாலும் மென்திறன்கள் அற்றவர்களை நிறுவனங்கள் ஏற்கத் தயங்குகின்றன.


2020 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்காணலில் பின்வரும் மென் திறன்களை உடையவர்களையே பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.


தொடர்புத் திறன்

சுயமுயற்சி

தலைமைப்பண்பு

குழுப்பணியாற்றுதல்

பொறுப்பேற்று செயலாற்றுவது

பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் திறன்

முடிவெடுக்கும் ஆற்றல்

கடினமான பணியையும் ஏற்று செய்யும் திறன்

நேரத்தை நிர்வகிக்கும் திறன்

பணியில் வளைந்து கொடுக்கும் தன்மை

பலருடன் கலந்துரையாடி ஒப்பந்தம் செய்து முடிவெடுக்கும் திறன்

இவற்றுள் உங்களுக்கு இருக்கும் மென்திறனை கண்டறிந்து அதை உங்கள் தற்குறிப்பில் இணையுங்கள்.


நேர்காணலில் உங்களுடைய மென்திறனைப் பற்றிய கேள்விகள் எழும்பொழுது உங்களுடைய மென்திறனை விளக்கும் படியான உங்கள் வாழ்க்கையில் நடந்த எடுத்துக்காட்டுகளைப் பகிருங்கள்.


உங்கள் திறமை உலகறிய மென்திறன் தேவை!


மென்திறன்கள் பயில்வோம்! சாதனை படைப்போம்!


நன்றி ...வாழ்த்துக்கள் ..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



சனி, 7 நவம்பர், 2020

 மாலகோவில் ...🐂🐐🥰🌱🌳


தைமாதம் ..சித்திரை மாதமும் ..கால்நடைகளை இங்கு இருக்கும் குட்டையில் குளிப்பாட்டி ...இந்த மாலகோவிலில் வருடம் தவறாமல் வழிபாடு செய்வது ஒரு சமூக மக்களின் பண்பாடு ..பாரம்பரியம் ...

கோழிக்குட்டை ..பண்ணைக்கிணறு அருகே ..புதுப்பாளையம் செல்லும் வழியில் 


உடுமலைப்பேட்டை .. 📚📚✍️✍️🌱🌳⚔️🏹🐐🐂🐂

 


திருமண வரவேற்பு நிகழ்வு ..


என் அருமை மாப்பிள்ளை A .தினேஷ் பாபு -D .ரேவதி 

புதுமண தம்பதிகளுக்கு ..வாழ்த்துக்கள் ..

நாள் :10-11-2020

கிழமை :செவ்வாய் கிழமை ...

இடம் :GK மஹால் .சோமவாரப்பட்டி -பெதவை -உடுமலைப்பேட்டை 

நேரம் : மாலை - 6  மணிமுதல் 10 மணிவரை 


மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .

இங்ஙனம் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 

உடுமலைப்பேட்டை ..

வெள்ளி, 6 நவம்பர், 2020

திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை


திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி -பாப்பனூத்து -உடுமலைப்பேட்டை 

பொறுப்புகள் 

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் மாநில மகளிர் அணி செயலாளர் 

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் 

நமது கம்பள பெண் சமுதாயத்தில் நமது சொந்தங்களுடன் சிறு சிறு சமுதாய பணிகள் செய்து இந்த அளவிற்கு முன்னேறியது ஒரு வழிகாட்டல்களாக எடுத்துக்கொள்ளலாம் ..தனக்கு திருமணம் முடித்ததும் ..தன் தாயின் இழப்புடன் ..தன் கணவர் ராமசாமி அவர்கள் ,டைல்ஸ்வியாபாரத்திற்கு ,தரை, கூரை மற்றும் சுவர்களின் முக்கிய கட்டுமான அங்கமாகத் திகழ்பவை டைல்ஸ். உள்கட்டுமானம், வெளிக்கட்டுமானம் இரண்டுக்குமே அழகியலைச் சேர்ப்பதில் உதவுவன. பொருளாதாரச் சந்தை ஏறி இறங்கினாலும், கட்டுமானப் பொருள்களுக்கான சந்தை என்பது அதற்குரிய லாபத்தை எட்டத் தவறுவதில்லை எனலாம். இதில் டைல்ஸுக்கும் பங்குண்டு.வியாபாரத்திற்கு முழுமூச்சுடன் ஒத்துழைத்து தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் தன் கூட பிறந்த தம்பிகளின் கல்விக்கும் தன் கணவரின் ஒத்துழைப்போடும் ,பொறுப்புடன் வளர்த்து கல்வி தான் நம் சமுதாயத்திற்கு வளர்ச்சிக்கு உதவும் என்று ஆணித்தரமாக எண்ணி கல்லூரி படிப்பு முடிய வாழக்கையில் உயர்த்தி ..இரண்டு தம்பிகளின் திருமண பந்தத்தில் ஒன்றிணைத்து பொறுப்புடன் இன்று நம் கம்பளசமுதாயத்தில் தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும்  முன்னேற்றம்  அடைய வைத்து  நம் கம்பள சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக உள்ளது .திருமதி மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இரண்டு ஆண் செல்வங்களை பள்ளிப்படிப்பிற்கு உறுதுணையாக ,குடும்ப சக்கரத்தை பொறுப்புடன் நகர்த்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..

இந்த வளர்ச்சியை கண்கூட பார்த்த நம் சமுதாய தலைவர்கள் ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தில் ..திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு ..மாநில மகளிர் அணி செயலாளர் பதிவு கொடுத்து .நமது சமுதாய சொந்தங்கள் இருக்கும் ஊர்களில் நிகழ்வுகள் நடக்கும்பொழுது இவரும் கலந்துகொண்டு சிறப்பு செய்வது மகிழ்ச்சி ..மேலும் இவர் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு சிறு கல்விக்கான நிதிகளையும் நம் சொந்தங்களுக்கு அளித்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ..


இன்று திருமதி .மகுடீஸ்வரி ராமசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...உடுமலைப்பேட்டை ..





 

வியாழன், 5 நவம்பர், 2020

 Sivakumar Kumar........கார் இன்சூரன்ஸ் -9944066681

கேள்வி : வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம்

என் பதில் :.

வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம் என்பதை நாம்  

தெரிந்து வைத்திருப்பது நல்லது. 

அவ்வாறு இழப்பீடு பெறுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்: 

1) மூன்றாவது தரப்பினருக்கு ஏற்படும் உடல் சேதம் அல்லது பொருள் சேதம். அல்லது,

2) காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இந்த சுய சேத 

இழப்பீட்டைப் பெற அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம். 

மூன்றாம் தரப்புக்கான இழப்பீடு உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம். அல்லது வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். வாகன காப்பீடு செய்திருக்கும் நபர்கள் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்து அறிந்து வைத்திருத்தல் அவசியம். 

சுய சேதத்திற்கான இழப்பீடு வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும். விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது. வாகனத்தை எடுத்துச் செல்ல உத்தரவு கிடைத்த பின் அவ்வாறு செய்தல் நன்று. உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும். இந்த சேவை இருந்தாலும் இல்லாவிடினும் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.

திருட்டுக்கான காப்பீடு உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம். காப்பீடு ஆவணத்தை பெற்ற உடனேயே இழப்பீடு பெறுவதற்கான முறைகளையும், ஆவணக்கோப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs,CAR INSURENCE) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com


CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

கேள்வி : ஆயிரம் சதுர அடியில், பதினைந்து லட்சத்தில் 2 பெட்ரூம் வீடு கட்ட முடியுமா?

என் பதில் : 

 எங்கே வீடு கட்ட போகிறீர்கள்.
சென்னை போன்ற நகரமா ?
அல்லது மதுரை, கோவை போன்ற இரண்டாவது நகரமா?
பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை ..யா .அல்லது       கிராமத்தில் கட்ட போறீங்களா?

உங்கள் வரைபடம் எங்கே?
நிலம் எவ்வளவு?

நிலம் 1000 sft - அல்லது கட்டிடம் 1000 sft ?
ஒரு மாடியா ? இரண்டு மாடியா?

உங்கள் நிலத்துக்கு அருகில் உள்ள சாலையின் அகலம் என்ன ?

உங்கள் நிலத்தில் எது போன்ற மண்..(ஜி..நிலமே இன்னும் வாங்க வில்லை)
நல்ல செம்மண் போல இருக்குமா? களிமண் போல இருக்குமா?
அல்லது குப்பைகள் போல மூடி உள்ள இடமா ? சதுப்பு நிலம் போன்ற இடமா ?

கம்பௌண்ட் சுவர் கட்ட வேண்டுமா? இல்லை பக்கத்தில் உள்ள நிலத்தில் ஏற்கனவே சுவர் உள்ளதா?

செப்டிக் டேங்க் கட்ட வேண்டுமா? அல்லது நகராட்சியின் கழிவுநீர் திட்டம் (line) ஏற்கனவே உள்ளதா ?

கீழ் நிலை தொட்டி (underground tank) கட்ட வேண்டுமா?

இது எதுவுமே இல்லாமல் ஒரு estimate கேட்டு உள்ளீர்கள்.

எதுவும் இல்லை..சும்மா கேள்வி கேட்ட வேண்டும் என்று கேட்டு உள்ளீர்களா?

பதில் எடுத்து கொள்ளுங்கள்.

கோவை  போன்ற 2வது நகரம் என்று வைத்து கொள்ளுங்கள்.

இன்னும் தெளிவாக வேண்டும் என்றால் ஒரு கட்டிட Architect அவர்களிடம் சென்றால் அவர் உங்களுக்கு தெளிவான வரைபடம் வரைந்து குடுப்பார்.

_______

Option 1 - விருப்பத்தேர்வு 1
Option - 2 - விருப்பத்தேர்வு 2
Option - 3 (Land 900 to 1000 sft) - விருப்பத்தேர்வு 3
வரைபடம் இணைத்துள்ளேன் ..பார்க்கவும் .
சரியான திட்டமிடல் (Planning) உடன் பண்ணினால் 15 லட்சத்தில் கட்ட முடியும்.

நீங்களே சொந்தமாக, உங்கள் மேற்பார்வையில் கட்ட வேண்டும். 6 மாதம் வீட்டுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும்.
வீட்டுக்கு குறைந்த செலவினால் ஆன tile மட்டும் தான் கட்டப்பட வேண்டும். (35 to 80 sft விலையில்)
ஜன்னல் மற்றும் கதவுகளை எண்ணிக்கை சற்று குறைவாக வைக்க வேண்டும் (அடுப்படியில் கதவு தவிர்க்க வேண்டும்…அது போல சில விசயங்கள்).
வீட்டின் உயரம், சாலையில் இருந்து 2 அடி உயரம் தான் இருக்கும். (I.e . வீட்டின் உட்புறம் ..தரையின் அளவு சாலையை விட 2 அடி தான் உயரம்..நீங்கள் இந்த உயரத்தை ஏற்றினால் செலவு அதிகரிக்கும்
ஜன்னலின் மரத்தை வேப்ப மரம் உபயோகப்படுத்தலாம். தேக்கு மரம் விலை உயர்வு.
வீட்டின் cupboard எல்லாம் பின்னாடி செய்து கொள்ள வேண்டும். (15 லட்சத்தில் இது சேராது.)
நிலம் வாங்கும் போது, செவ்வக வடிவ நிலத்தை விட சதுரவடிவ நிலம் வாங்கினால் வரைபடம் வடிவமைப்பு (Design) செய்யும்போது மிக சிறந்த Design / Elevation அமையும்.

நன்றி ...உங்கள் கனவு வீடு அமைய வாழ்த்துக்கள் 

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

செவ்வாய், 3 நவம்பர், 2020

 திருமண வாழ்த்துக்கள் ..04-11-2020

என் அருமை மாப்பிள்ளை S .பாலகுமார் -என் அருமை மகள் N .வசந்தா 

உடுமலைப்பேட்டை ,கே .வல்லகொண்டபுரம், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் திருக்கோவிலில் . நேரம் :காலை  6.00 மணிக்குமேல் 7.25 ..குள் ..நடைபெறும் திருமணத்திற்கு ..புதுமண தம்பதிகளுக்கு . திருமண வாழ்த்துக்கள் 


கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 




ஞாயிறு, 1 நவம்பர், 2020

ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-11-2020)

 இன்றைய ஞாயிறு ...01-11-2020


ராஜபாட்டை ...வணிக பெருவழி (01-110-2020)


இன்றைய பயணம் வளம் கொழிக்கும் மருத நிலம் ...கரை வழி நாடு ...மேய்த்தல் நிலங்கள் உள்ள பகுதி ..தன் மக்களுக்கு வாரிக்கொடுத்த குமணன் வள்ளல் வாழந்த பகுதி ..வணிக வழி கால்நடை ,அழகன் குளம் முதல் கல்லாபுரம் பெருவழி சந்தை ..R .வாடிப்பட்டி அருகே பார்த்த வணிக குறியீடு கொண்ட நடுகல் ...ஏழூர் அம்மன் தரிசனம் ..குமணன் தவம் செய்த வழியில் ஆண்டிபட்டி மலை அடிவாரம் பெருமாள் கோவில் ...பழனி வையாபுரியில் இருக்கும் அம்மன் வழிபாடு ...பயணம் முடித்ததும் ..பெருமழை  30 நிமிடம் நனைந்து  உடுமலை வந்தது மிக்க மகிழ்ச்சி ...




சனி, 31 அக்டோபர், 2020

கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?

 கேள்வி : உலகை முற்றிலும் மாற்றிய கண்டுபிடிப்புகள் என்ன?


பதில்:..என் இனிய நண்பர் ..Dr.Andrew Peter Leon-Genetics and Plant Breeding இல் PhD, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (2020 ஆண்டு பட்டம் பெற்றார்)


கடந்த 2019 டிசம்பரில் ஹி ஹியான்குய் என்ற சீன ஆய்வாளர் ஆய்வு அறங்களை மீறியதற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் செய்த தவறு (மிகப்பெரிய), தான்தோன்றித்தனமாக ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை மனிதக் கருவில் சோதித்துப் பார்த்தது! அவரின் ஆய்வின் படி பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி வைரசுக்கு எதிர்ப்புத்திறன் பெற்றிருக்கும்!


அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் தான் நவீன உலகை முற்றிலும் மாற்றக்கூடிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு பெயர் 'Designer Baby technology' என்றழைக்கப்படும் கிறிஸ்பர்-கேஸ் (CRISPR-Cas). உயிரியல் ஆய்வுகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுபவராக இருந்தால் கவனித்திருப்பீர்கள்: 2014-க்கு பிறகு கிறஸ்பர்-கேஸ் தான் மிக அதிகமாகப் பேசப்பட்ட, படுகின்ற தொழில்நுட்பமாக இருக்கும்.


அப்படி என்ன தொழில்நுட்பம் அது?


பாக்டீரியாக்கள் எப்போதும் தங்களிடம் அதிசயிக்கத்தக்க உயிரியல் மற்றும் மரபியல் செயல்பாடுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன. இந்த செயல்பாடுகளால்தாம் இவற்றால் மனிதர்கள் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அதீத சூழ்நிலைகளிலும் தப்பி வாழ முடிகிறது.


இயற்கையில் பாக்டீரியாக்களின் முக்கிய எதிரிகள் பாக்டீரியோபேஜ் எனும் வைரசுகள். சானிடைசர் வாங்க வழியில்லாததால் அவை வேறு பல நுட்பமான செயல்முறைகளால் பாக்டீரியோபேஜ்களைத் தோற்கடிக்கின்றன. அவற்றில் ஒன்று கிறிஸ்பர்-கேஸ்.


ஒரு பாக்டீரியோபேஜ் முதன்முறையாகத் தாக்கும்போது பாக்டீரியாக்கள் அவற்றின் மரபுத் தொடர்களை படி எடுத்து தங்கள் மரபுக்கூறுகளுடன் சேமித்து வைத்துக்கொள்கின்றன. இதுக்குப் பேர்தான் சுருக்கமாக ‘கிறிஸ்பர்’ (CRISPR:clustered regularly interspaced short palindromic repeats). கேஸ் என்பதற்கு ‘கிறிஸ்பர் சார்ந்த’ என்ற பேர் (Cas-CRISPR associated). இது ஒரு கிறிஸ்பர் சார்ந்த, டி.என்.ஏக்களை துண்டுபோடும் புரதத் தொகுப்பு (restriction enzyme - Molecular scissors).


இப்போதான் ஆட்டம் ஆரம்பம். அதாவது, மறுமுறையாக ஒரு பாக்டீரியோபேஜ் தாக்கினால், முந்தையத் தலைமுறையில் சேமித்த மரபுத்தகவல் இருக்கிறதல்லவா? அந்தத் தகவலை வைத்துக் கொண்டு, இந்த கேஸ் என்சைம் பாக்டீரியோபேஜ்களின் டி.என்.ஏ-வை ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்திவிடும். அதாவது பரம்பரை பரம்பரையாகத் தங்கள் எதிரியை அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல் பெறுகின்றன.


இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா. இந்த கிறிஸ்பர்-கேஸ் 1980 களிலேயே கண்டறியப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆய்வாளர்களும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தக் கேஸ் புரதத்தொகுப்பைக் கூர்ந்து பார்க்கையில் அது வைரசின் டி.என்.ஏ என்றில்லாமல் எந்த டி.என்.ஏ வையும் துண்டுபோடும் ரவுடி என்பது தெளிவானது. மற்றபடி இதை ஒழுங்குபடுத்தத்தான் பாக்டீரியாக்கள் வைரசின் டி.என்.ஏக்களை சேமித்து வைக்கின்றன. அதாவது, சேமித்து வைக்கப்பட்டுள்ள வைரசின் டி.என்.ஏ-விற்கு பதிலாக நாம் விரும்பும் டி.என்.ஏ பகுதியை இணைத்தால் அந்த இடத்தை அடையாளம் கண்டு கேஸ் 'சம்பவம்' செய்துவிடும்.


கேஸ் என்சைம் - எவனா இருந்தாலும் வெட்டுவேன்!


ரொம்ப எளிதாக விளக்கவேண்டுமானால், காவல்துறையிடம் இருக்கும் டி.என்.ஏ வை அழித்துவிட்டு வேறு ஒருவரின் டி.என்.ஏ வை வைத்து மாட்டி விடுவது போன்றது.


இதைத்தான் 2010 வாக்கில் (2012-ல் அறிவியல் இதழ்களில் பதிவாகின) Jennifer Doudna மற்றும் குழுவினரும், Feng Zhang மற்றும் குழுவினரும் தன்னிச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு காப்புரிமை பெற்றனர். (இந்தக் காப்புரிமை பெறுவதற்காக எழுந்த போட்டியே, இந்த தொழில்நுட்பம் எவ்வளது முக்கியமானது என்பதை உணர்த்தும்!).


இதில் என்ன சிறப்பு?


உயிரினங்களின் இயக்கங்கள் மரபுப்பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மரபுப்பொருட்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை விளைவிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இயற்கையில் இப்படி நடக்கும் மாற்றத்தைத்தான் நாம் சடுதி மாற்றம் (mutations) என்கிறோம் - இதுவே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.


ஆனால், இந்த சடுதி மாற்றத்தை அதிதுல்லியமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் (ஜீன்) நடத்தும்போது நோய் எதிர்ப்புத்திறன் போன்ற உயர் பண்புகளைப் பெற வழியிருக்கிறது. கிறிஸ்பர்-கேஸ் இந்தச் செயல்களை முன் எப்போதும் இல்லாத வகையில் எளிதாகவும் செலவற்றதாகவும் மாற்றிவிட்டது. முக்கியமாக, வேளாண்மைத் துறையில் மரபு-மாற்றியப் பயிர்கள் தீவிர எதிர்ப்பைச் சந்தித்து வரும் காலகட்டத்தில் இத்தொழில்நுட்பம் நம்பிக்கை தருவதாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது (நம்புங்கள்-கிறிஸ்பர் இல்லாமல் வருங்கால வேளாண் இரகங்கள் இல்லை!). ஏற்கனவே நாளானாலும் கருத்துப் போகாத காளான் வகைகள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன.


எச்சரிக்கை மணி!


எப்போதும் போலவே, பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கிறிஸ்பர் போன்றத் தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியமானது. காப்புரிமை பெறும் காலகட்டத்திலேயே யு.சி. பெர்க்லி பல்கலைக்கழகத்துக்குக் கொடுக்காமல் தனியார் சார்ந்த பிராடு (Broad Institute) ஆராய்ச்சி நிலையத்துக்குக் காப்புரிமை வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.


Feng Zhang, சீன ஆய்வாளரின் தன்னிச்சையான எச்.ஐ.வி ஆய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பல நாடுகளும் சட்டங்கள் வகுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.


கிறிஸ்பர் குறித்து ஒரு கண்காட்சியில் விளக்கிக்கொண்டிருக்கும் போது, ஒரு மாணவர் 'டிசைனர் பேபி' என்று சொல்கிறீர்களே - எனக்கு ஒரு ஆண்குழந்தை 'Blue Eyes'-உடன் வேண்டும், முடியுமா? என்றார். வேடிக்கையாகத் தோன்றினாலும் வில்லங்கம் புரிகிறதா!


அறிவியலின் கண்டுபிடிப்பு ..நன்றி ..

செவ்வாய், 27 அக்டோபர், 2020

உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

 அன்புள்ள திரு சிவகுமார் மாமா அவர்களுக்கு, தங்களுடைய சொந்த விஷயம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தங்களது சொந்த விஷயங்கள் சம்பந்தப்பட்ட தளத்திலோ அல்லது தனித்தனியாகவோ பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் இத்தளத்தில் சமுதாய சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் பதிவிடுவது சிறந்தது என கருதுகிறேன்.

நீங்கள் பதிவிடும் அத்தனை பதிவுகளையும் பெரும்பாலும் முழுவதுமாக படிக்கவும் மாட்டார்கள்.பெரும்பாலோர்க்கு படிக்கவும் நேரமும் இருக்காது என கருதுகிறேன்.

தாங்கள் நமது சமுதாய பதிவுகள் இல்லாமல் மற்ற பதிவுகள் பதிவிட்டால் நிறையபேர் என்னிடம் யாருங்க அந்த சிவக்குமார்? சம்பந்தமே இல்லாத பதிவுகளப்போட்டுட்டு வெறுப்பேத்தறாரு.நாங்கள்ளெல்லாம் குரூப்ல இருக்கறதா?இல்ல லெஃப்ட் ஆகிடறதான்னு கேட்கிறாங்க.

தாங்களால் நிறையபேர் லெஃப்ட் ஆகிடற வருத்தமான சூழ்நிலைக்கு ஏன் கொண்டு வர்றீங்க? 

இதை என்கிட்ட கேட்கறவங்களுக்கு உங்களபத்தி நான் எப்படிங்க பதில் சொல்லமுடியும்?

   புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கிறேன் மாமா.


அன்பு நண்பருக்கு

 உங்களைக் கேள்வி கேட்டவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில்...

இது நமது சமுதாயம் சார்ந்த குழு என்பது உண்மையே..ஆனால் சமுதாயம் சார்ந் பதிவுகளை இட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களைத்தான் பதிவு செய்யக்கூடாது என்பது கொள்கை. இதுநாள் வரையிலும் சிவா மாமா அவர்கள் இது மாதிரி சமுதாயத்திற்க்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிடுவதில்லை.

.

ஒரே ஒரு சின்ன விஷயம் மற்ற சமுதாயத்திலிருந்து நாம் இன்னமும் முன்னேறாதிருப்பதற்க்கு காரணம் என்னவென்றால்   எத்தனையோ நல்ல விஷயங்களை பகிரும் போது பாராட்டாத நாம் எப்போதாவது வேறு ஏதாவது பகிரப்பட்டால் அதைப் பெரிதாக பேசிக்கொண்டிருப்பதுதான்.. எத்தனையோ நல்ல

நம் சமுதாயம் சார்ந்த விஷயங்களை  பகிரும் போது பாராட்டாத நாம் குறை சொல்வதற்க்கு நேரத்தை ஒதுக்குவது இன்னும் நம் சமுதாயத்தை அதள பாதாளத்தில் தள்ளுகிறது..

இங்கு அரசியல் பேசுகிறார்கள் 

உடல் ஆரோக்கிய குறிப்புகள் வருகிறது 

வேலை வாய்ப்பு தகவல்கள் இடம்பெறுகிறது

தம் உழைப்பால் முன்னேறிய நம் சமுதாய   நண்பர்களைப் பற்றிய பதிவுகள் வருகிறது..பல்வேறு துறைகளில் முன்னேறிய நம்

நம் சமுதாய மகளிர் ஆண்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன..

இதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ளுங்கள்...

பிற சமுதாயத்தவர்கள் (கவுண்டர் வண்ணியர் நாயுடு இன்னும் பல) இவர்களெல்லாம் நமக்கு பின் இருந்தவர்கள்தான் ஆனால் அவர்கள் முன்னேறியததன் காரணம் பிற சமுதாயதத்திலிருந்து கற்ற பாடங்கள்தான்..கொங்கு அமைப்பில் ஒரு முக்கிய மனிதர் சொன்னது என்னவென்றால் நான் தீரன்சின்னமலையை நேசித்து போற்றி விழா எடுப்பதற்க்கு ஊக்கமளித்தது கட்டபொம்மனுக்கு நீங்கள் எடுக்கும் பிரமாண்ட விழாதான் என்று சொல்லி இருக்கிறார் அவர்கள் நம்மை பின்பற்றுகிறார்கள்..

ஆனால் நாம் பிற பதிவுகளைப் போடுவதற்க்கு தடை வருகிறது இன்னமும் நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகத்தான் இருந்துகொண்டு வருகிரோமே தவிற நமக்கான முன்னேற்றத்தை இதன் மூலம் தேட தவறுகிறோம் ..

ஆனால் சிவக்குமார் மாமா அவர் போடும் பதிவுகளுக்குப் பின்னால் நம் சமுதாய நண்பர்களின் உயர்வு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்..

அன்றாடம் நாம் பார்க்கும் பழகும் நண்பர்கள் பெரிய மனிதர்கள் பல்வேறு துறைகளைச்சார்ந்த நண்பர்கள் ஆகியோருடனா பயணம் நம் வாழ்க்கைக்கும் நம் உயர்வுக்கும் உதவும் என்பதற்க்குதான் தான் செய்யும் வேலைகள் போகும் இடங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவுகளாக இடுகிறாரரே தவிற சுய விளம்பரம் கிடையாது...

இந்த குரூப்பில் இருக்கும் சில பேர் சொல்லி இருக்கிறார்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு செய்தித்தாள் படிப்பதை போல இருக்கிறது குருப்பில் வரும் தகவல்கள் என்று ....எனவே தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவைப்படாத விஷயங்களை விட்டு விடுங்கள்.....


நன்றி....📚✍️✍️Jayaraman.🤭😲

அன்பு உறவுகளே... சக உறவினர் ஒருவர் சிவகுமார் சார் குறித்து

அன்பு உறவுகளே...

சக உறவினர் ஒருவர்

சிவகுமார் சார் குறித்து

எழுதிய பதிவு என்னை

அதிர்வுக்குள்ளாக்கியது

நாங்கள் வேறு ஒரு

அமைப்பை நடத்தி

வந்தாலும் மனப்பூர்வமான  இதய

சுத்தியோடு சொல்கிறேன் நம் சமுதாய உணர்வோடு

வலம் வரும் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமையும் அக்கறையும் கொண்ட

மிகச் சில தலைவர்களில் திரு.

சிவகுமார் சார் அவர்களும் உண்டு.

KVE குழுமத்தில் நம்

சமுதாய மக்களின் நலனுக்காக தானே

ஒவ்வொரு விடயத்தையும் தேடித்

தேடி எழுதி வருகிறார்.

நூலகர் வட்டம் அகழாய்வு பாரம்பரிய

கோவில்கள் நம்மவர்களின் திருமண

விழாக்கள் குழுவினரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் இனத்தின் பூர்விக

வரலாறு பூர்விக பாடல்கள் சடங்கு

சம்பிரதாயங்கள் இவையெல்லாம் சமுதாய விஷயங்கள்

தானே? இது போக

தன்னம்பிக்கை தரும்

செய்திகள் அன்றாடம்

வாழ்வில் எதிர்கொள்ளும் கடன்

முதலீடு காப்பீடு மற்றும்

வீட்டுக்கடன் போன்ற

பதிவுகள் நம் சமுதாய

மக்களுக்கு பயன்படாதா?

நண்பரே எது உங்களுக்கு வேண்டாம்

என்று எனக்கு புரியவில்லை.

எல்லாம் சரியாவே

இருக்கின்றது.

சமுதாய செய்திகளோடு

நாட்டு நடப்புகளையும்

விவாதித்து செய்திகள்

அளிப்பது தவறா?

வேண்டாம் தோழரே

கண்ணியம் மிக்க

ஒருவரை காயப்படுத்த

வேண்டாம்.

திரு சிவகுமார் அவர்களின் ஆத்மார்த்தமான பணியில் நம்மையும்

இணைத்துக் கொண்டு

ஒற்றுமையுடன் ‌நம்

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக

மட்டுமே பாடுபட

உறுதி ஏற்போம்



அன்புடன்

சௌந்தரபாண்டியன்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱



அந்த தீபாவளி நினைவுகள்...😍❤⛱⛱

தீவாளி வரப்போகுது....சின்னவயசுல தீபாவளி கொண்டாடிய அந்த பசுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாலே சுகமாக இருக்கிறது...

ஒரு மாசத்துக்கு முந்தியோ பக்கத்து வீட்டுப் அக்காமார்களும் ,தங்கச்சிமார்களும் எல்லாம் சேலை,தாவணி ,பட்டுப்பாவாடைனு , எடுத்து எல்லாருக்கும் பெருமையா காட்ட ஆரம்பிச்சுடுவாங்க...எனக்கு சட்டை, டவுசருன்னு கேட்டு கேட்டு சலிச்சுப்போய்டும், ஒருவழியா ஒருவாரத்துக்கு முன்னாலே பழனி ரோட்டுல இருக்கிற குறிஞ்சி துணிக்கடையில துணியெடுக்க கூட்டிடுப்போவாங்க..எந்த துணிய எடுத்துப்போட்டாலும் இது உனக்கு ரொம்ப நல்லாருக்கும்ன்னு சொல்லி, சொல்லி ஏதாவது ஒன்னை தலையில கட்டுறதுலேயே குறியாருப்பரு காதர் பாய் அண்ணா ..ஒரு வழியா துணியெடுது வர்ற வழியிலேயோ நம்ம குடும்ப டெய்லர் காந்தி சவுக் மாடர்ன் டெய்லர் அண்ணாகிட்ட துணிய தக்க குடுப்போம்..ரெண்டு நாள்ள வாங்கிக்கோங்கன்னு சொல்லி வாங்கி வைச்சுக்கிட்டு அளவெடுப்ப்பாரு...அவ்வள்வுதான் அப்புறம் அத மறந்துடுவாரு...டெய்லி தளி ரோட்ல வரும்போது போம்போதெல்லாம் நாமதான் ஞாவப்படுத்தணும்..எப்ப கேட்டடலும் தம்பி வெட்டியாச்சு, காலர்மட்டுத்தான் பாக்கி, காஜா போடனும் அப்படி இப்படின்னு, நாளைக்கு சொல்லி நாள கடத்துறதுல கில்லாடி...

நாலு நாளைக்கு முன்னாலேயே தளி ரோட்ல இருக்கிற கோமதி ஏஜென்சிஸ் ல பட்டாசு கடை போட்டுருவாங்க..சுத்தி நின்னு வேடிக்க பாக்குற கூட்டந்தான் அதிகமா இருக்கும். கூடபடிக்கிற சிலபோர் கூடவே இருந்து வியாரமும் செய்வாங்க...கம்பிமத்தாப்பு, அனுகுண்டு, ராக்கெட்டு, ரயிலு, லச்சுமிவெடி, யானை,சரம், சாட்டை, 7சாட் பூஞ்சரம்(புஸ்வானம்), பாம்பு, துப்பாக்கி, தரசக்கரம் இப்படி பல வகையான் வெடி இருக்கும். வெடி கம்பெனி போஸ்டரே பாக்கிறதுக்கு சூப்பரா இருக்கும். நம்ம வீட்டுலே எல்லா வருசமும் தீவாளிக்கு முதனாலுதான் வெடி பர்சேஸ் எல்லாம். எல்லா வெரைட்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பர்சேஸ் பண்னிக்கிட்டு வீட்டுக்கு நடந்து போம்பேது ஒரு சந்தோசம் இருக்குமே...ஆஹா.....

முதனாள் நைட்டுமாடர்ன் டெய்லர் கடையில போய் உக்காந்து போராடி சட்டை துணிமணிய வீட்டுக்கு வாங்கிட்டு வந்தாதான் நிம்மதி...அம்மா வீடு வாசல்லாம் அலச ஆரம்பிச்சுவாங்க...நெறைய பேர் முதநாள் நைட்டே வெடிபோட ஆரம்பிச்சுவாங்க..அதுல நம்க்குவேற சரியா தூக்கம் வராது....காலையிலே நாலு மணிக்கெல்லாம் எழுந்து நல்லென்ணை தேச்சு குளிச்சு புதுச்சட்டைக்கும், டவுசருக்கும் மஞ்ச தடவி வெடப்பா போட்டுக்கிட்டு செய்ற முதகாரியம் வெடி பெட்டிய தூக்குறது தான். பொம்பளைப்புள்ளகல்லாம் பட்டுப்பவாடை, தாவணியில தக தகன்னு ஜொலிப்பக...
⛱⛱⛱

நாமெல்லாம் வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குருவி வெடின்னு வெடிக்க விட்டு தெருவெல்லாம் போட்டி போட்டு குப்பையாக்கினாத்தான் நமக்கெல்லாம் நிம்மதி. யானைவெடியெல்லாம் சும்மா அசால்ட்டா பத்தவச்சுட்டு அப்புறமா தெனாவட்டா தூக்கிப்போடுவாங்க நம்ம குரூப்பு..

பெருசுக காது அதிர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு பயந்து ஒதுங்கி நிக்கவச்ச சாதனைகளும் நடத்திருக்கு..

பக்கத்து வீட்டு அக்கா ஆசைக்கு ஒண்ணு பத்தவக்க நடுங்கிகிட்டே போகும். கை நடுங்கிகிட்டே திரி பக்கத்திலே போகும்போது "டம்" ன்னு வாயலே வெடிபோட்டு திரும்ப வர வச்சிடுவோம்.. இட்லி, பலகாரம்ன்னு சாப்புட்டுட்டு ஒரு மிதப்பா 10 மணி க்கு கல்பனா தியேட்டர் ல கமல் படம் புன்னகை மன்னன் சினிமாவுக்கு 8.30 மணிக்கே கிளம்பிடுவோம் கையிலே துப்பாக்கி, ரோல், கேப்வெடி எல்லாம் எடுத்துக்கிட்டு.

கியுவிலெ காத்துக்கிடந்து, டிக்கெட் எடுத்து தியெட்டருக்குள்ளேயும் துப்பாக்கி சரமாரியா வெடிக்கும்..தியேட்டரெல்லாம் புதுச்சட்ட ஆசாமிகதான். இடைவேளைக்கு கலர் சேடா, பால் ஐய்சு, சமோசாவுக்கு கூட்டம் அலை மோதும்...

நைட்டெல்லாம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, தீப்பெட்டின்னு, தரசக்கரம், ராக்கெட்டுன்னு கொளுத்தி ஒரே அமர்களந்தான். இது மட்டுமா? வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து, கரி மருந்த ஒண்ணா ஒரு போப்பரிலே கொட்டி பேப்பரேட கொளுத்தினா ஒரே புகை மண்டலமாயிரும் தெருவு...

இப்படி ஒருவழியா சந்தோசமா எந்த கவலையுமில்ல போனது தாங்க நம்ம சின்னவயசு தீபாவளி...

இது எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது நடுவீட்டுக்குள்ள இருக்குற டிவி பொட்டிதானுங்க....தியேட்டர்ல்லாம் இல்ல..

கொஞ்சமா பேருக்கு வெடி வெடிச்சு புஸ்சுன்னு போச்சு அந்த பழய சந்தோசம்....

உங்க சின்ன வயசு தீபாவளிய கொஞ்சம் அசைபோட்டு சொல்லுங்க மலரும் நினைவுகளை ...

என்றும் அன்புடன் தீபாவளி வாழ்த்துக்களுடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..👍❤❤❤❤⛱⛱⛱✒✒🏡🏡