செவ்வாய், 9 மே, 2017


நம் கம்பள சமுதாயத்தில் இப்படி ஒரு கர்நாடக  சங்கீத இசைமேதை வாழ்ந்திருக்கிறார்.....

‘இசை மகாசமுத்திரம்’ விளாத்திகுளம் சுவாமிகள் நூல் மற்றும் ஆவணப்படம் வெளியீட்டு விழா


‘இசை மகாசமுத்திரம்’ என்று அனைத்து இசைக் கலைஞர்களாலும் போற்றிப் புகழப்பட்ட கர்நாடக சங்கீத ஜாம்பவான் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் ஆவார். நாதஸ்வர சக்கரவர்த்திகளான திருவாடுதுறை T.N.ராஜரத்தினம், அவரது சீடர் காருக்குறிச்சி அருணாச்சலம், திரு. M.K. தியாகராஜ பாகவதர், திரு. சீர்காழி S.கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் போன்ற பல இசைமேதைகள், விளாத்திகுளம் சுவாமிகளின் இசைப் போராற்றலை கண்டும் கேட்டும் பரவசமடைந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே பல குருமார்கள் இருந்தபோதிலும் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகளையே தங்களது மானசீக குருவாக எண்ணி வாழ்ந்து சாதித்தார்கள்.
சென்ற தலைமுறைகளிலும் இந்த தலைமுறையிலும் உள்ள இசைமேதைகள் அனைவரும் மனதார ஒப்புக்கொண்ட ஒரே விஷயம், ‘விளாத்திகுளம் சுவாமிகளைப் போல் ‘இராக ஆலாபனை’ செய்யவும் பாடவும் இதுவரை யாரும் பிறக்கவில்லை, அவரது குரலுக்கும் ஈடு இணையில்லை’ என்பதாகும். ‘எப்படியாவது கடுமையான பயிற்சி செய்தால் விளாத்திகுளம் சுவாமிகள் பாடிய அளவில் ஒரு பத்து சதவிகிதம் எட்டிப் பிடிக்கலாம். அவ்வளவுதான்!’ என்று தலைவணங்கி அவரைப் போற்றுகின்றனர்.
சங்கீத உலகமே வணங்கும் ஒப்பற்ற கலைஞன் இசை மகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள் முறைப்படி எந்த குருவிடமும் சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. எந்த இடத்தில் கச்சேரிகள் நடந்தாலும் முதல் ஆளாக அமர்ந்து முழு ஈடுபாட்டுடன் ரசித்து, அதனை கிரகித்துக்கொண்டு தனது அற்புத நினைவாற்றலால் இடைவிடாமல் ‘அசுர சாதகம்’ செய்து தனது தனித்திறனை வளர்த்துக்கொண்டார். இராக ஆலாபனைகளை ஐந்து நாட்கள் வரை இடைவிடாமல் செய்து சாதனை புரிந்துள்ளார். இதனால் ‘ஆலாபனை அரசன்’ என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.
சங்கீத சக்கரவர்த்தியான விளாத்திகுளம் சுவாமிகள் பிறப்பிலும் ராஜபரம்பரைதான். காடல்குடி மன்னர் ‘வீரகஞ்செய பாண்டியன்’ வம்சாவழியில் வந்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் தாய்வழி சொந்தமாவார்.
பிறப்பிலும் வளர்ப்பிலும் வாழ்ந்த விதத்திலும் சிறப்புப்பெற்ற சுவாமிகள் 76 ஆண்டுகள் இசைக்காகவே வாழ்ந்தவர் என்றே கூறலாம். அத்தகைய மகானது வாழ்க்கைக் குறிப்புகள் ‘இசைமகாசமுத்திரம் விளாத்திகுளம் சுவாமிகள்’ என்ற பெயரில் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
நல்லப்ப சுவாமிகளின் அபரிமிதமான இசையைக்கேட்டு பிரமித்த N.A.S. சிவகுமார் என்பவர், அந்த மகானின் அருமை பெருமைகளை அனைவரும் அறியவேண்டும் என்ற சீர்மிகுந்த எண்ணத்துடன் இந்த நூலை தொகுத்துள்ளார். இந்த அரிய தொகுப்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா), ரசிகமணி T.K.C, வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி, கோவில்பட்டி சிவானந்தம், ஜி.வெங்கடாச்சலம், கவி.சத்திய சாமுவேல். தூத்துக்குடி பி.இசக்கி, ஸ்ரீ V.G. தெய்வேந்திரன், கு. அழகிரிசாமி, S. நல்லசிவம் பிள்ளை, பா. வேலப்பன், காருகுறிச்சி அருணாசலம் ஆகியோர் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள், சாதனைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர பல அரிய புகைப்படங்கள், சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழா விளாத்திகுளம் சுவாமிகளின் 128-வது பிறந்த நாளான 24-09-2016 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு T.N. ராஜரத்தினம் கலையரங்கத்தில் நிகழ்ந்தது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்ததுபோல் நாச்சியார்கோவில் N.R.P. ரவிச்சந்திரன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி அமைந்திருந்ததும் ஒரு சிறப்பாகும்.
மேலும் இந்த அரிய புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விளாத்திகுளம் சுவாமிகளின் பாடல்களும் ஆலாபனைகளும் அடங்கிய ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இது இசைப்பிரியர்களுக்கு மற்றுமொரு வரப்பிரசாதமாகும். இந்த ஆவணப்படத்தை சி.மகேந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் பல விருதுகளை பெற்ற திரைப்பட மற்றும் ஆவணப்பட இயக்குனர் திரு. அம்ஷன் குமாரிடம் 16 வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவராவார்.
இந்த விழாவில் பங்கேற்ற மாண்புமிகு நீதியரசரும் இசையரசி K.B. சுந்தராம்பாளின் மருமகளுமான K.B.K வாசுகி அவர்கள் புத்தகத்தை வெளியிட கலைப்புரவலர் திரு. நல்லிகுப்புசாமி செட்டியார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். ஆவணப்படத்தை பிரபல பாடகர் திருச்சி லோகநாதனின் தவப்புதலவர் திரு T.L. மகராசன் வெளியிட, அந்த குறுந்தகடை பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி G. சிவசிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாம் தலைமுறை வாரிசான V.V.J.S வீமராஜா அவர்களும், காடல்குடி மன்னரின் ஏழாம் தலைமுறை வாரிசான P. பால்ராஜா சுவாமிகளின் மகள் வழிப்பேரன் திரு. சாமித்துரை மற்றும் இயக்குனர் அம்ஷன்குமார், படத்தொகுப்பாளர் B.லெனின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புத்தகம் மற்றும் ஆவணப்படம்
தொடர்புக்கு:-
N.A.S. சிவக்குமார்,
2/286, 14, முத்துச்சாமி நகர்,
பொங்கலூர் போஸ்ட்,
பல்லடம் தாலுக்கா,
திருப்பூர் மாவட்டம்.
PIN – 641 667
கைப்பேசி – 91596 59788

வியாழன், 6 ஏப்ரல், 2017




கம்பள விருட்சம் அறக்கட்டளை ....உடுமலைப்பேட்டை
பதிவு நாள் -10-04-2017

வரும் திங்கள் கிழமை நமது அறக்கட்டளை பதிவு வரும் ஏப்ரல் 10 ஆம் நாள்  திங்கட்கிழமை அன்று நடை பெற இருப்பதால் .பதிவிற்கு காலை சுமார் 10 மணி  அளவில் .நம் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் ..

இடம் :பத்திர பதிவு அலுவுலகம் ...கச்சேரி வீதி ,உடுமலைப்பேட்டை

அதற்கு முன்னதாக நம் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் கழக அலுவுலகத்தில் (வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டை )சரியாக காலை 10 மணி அளவில் அனைவரும் ஒன்று கூடி
கலந்தாய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு பதிவு அலுவுலகம் செல்வோம்

பதிவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு மதிய உணவு ஸ்ரீ பாலாஜி (வக்கீல் நாகராஜன் வீதி )உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது....

இங்ஙனம்
கம்பள விருட்சம் அறக்கட்டளை ....
நிர்வாகக்குழு .

மேலும் தகவலுக்கு :திருப்பதி தேவராஜன் -99409 15913 கார்த்தி SR -9698082028




ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ....உடுமலைப்பேட்டை

இன்று 02.04.2017  ம்  தேதி ஞாயிறு மதியம் 1.00 அளவில் நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை யின் பொதுக்குழு கூட்டம் இனிதாக அறக்கட்டளையின் நோக்கங்களுடனும் ,செயல்படும் முறைகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு மகிழுச்சியுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது .

வெள்ளிக்கிழமை பொதுக்குழு கூட்டம் என்று சொன்னவுடன் ஒரு நாள் தான் இடைவெளி உறுப்பினர்கள் வரமுடியுமா கேள்விக்குறியுடன் என் மனதில் ஓடியது...ஒரு நாள் என்றாலும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடத்தி ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ...

முதல் பொதுக்குழு கூட்டம் அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் அலுவுலகத்தில் இடம் அளித்து ,பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ,தேநீர் அளித்து உபசரித்ததுக்கு மனமார்ந்த நன்றிகள் .

கௌரவ தலைவர் வழக்கறிஞர் .முருகராஜ் அவர்கள் ,நம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து சந்தேகங்களை நிவர்த்திசெய்தமைக்கு நன்றிகள் .

இன்றைய மதியம் முதல் மாலைவரை நம் சமுதாயம் உயர்வதற்கு திட்டங்களும் ,செயல்பாடுகளும் கலந்துரையாடிய நம் உறுப்பினர்களின் மதிப்புமிக்க நேரத்தையும் ஒதுக்கியதற்கு மறுபடியும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...



செவ்வாய், 21 மார்ச், 2017

நமக்கு எப்படியும் பொண்ணு அமஞ்சுரும்னு
கொஞ்சநஞ்ச நம்பிக்க இருந்துச்சு...
 நீயாநானா ப்ரோக்ராம் பாத்தேன்...
இப்பவே ஆன்மீக பயணத்துல அடியெடுத்து
வெக்கறது நல்லதுனு தோனுது...

சிரிக்க ...சிந்திக்க மட்டும் ....

திங்கள், 20 மார்ச், 2017

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம்,தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில்  )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!



பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!

வெள்ளி, 17 மார்ச், 2017

கோவை ,திருப்பூர் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

தமிழ்நாட்டில் ஏன் சிறந்த மாவட்டமாக விளங்க காரணம்...
மாநில செயல்தலைவர் திரு .முருகவேல் ,
மாநில கௌரவ ஆலோசாகர் திரு .ராமகிருஷ்ணன்
கழக தலைவர்கள் எல்லாரும் இளைஞர்களை நியமித்ததுதான் நன்றாக செயல்பட காரணம்...

திரு .ராமு
திரு .சந்திரசேகர்
திரு .கோபாலசாமி
திரு .கருணாநிதி
திரு .டிஜிட்டல் ராஜேந்திரன்
திரு .ஜெகதீஷ்
திரு.தீபம் தண்டபாணி
திரு .மாசிதுரை
திரு .முருகராஜ்
திரு .ஜெய்கணேஷ்
திரு .முத்துசாமி
திரு .முத்துராஜ்
திரு  .செல்வம்


விரைவான செயல்பாட்டுக்கு முன்னோடியாக திகழ்கிறார்கள்

எனக்கு தெரிந்து 55 கிளை கழகங்கள் கொண்ட மாவட்டமாக திகழ காரணம்
கழகத்தில் இருக்கும் ஒற்றுமை ,குழுவாக செயல்பட காரணமாகும் .

இனி வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ,வியாபார வளர்ச்சி சம்மந்தமாக கலந்துரையாடி வழிவகை செய்யப்படும் .
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

 உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

 மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
 மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

வியாழன், 16 மார்ச், 2017

இன்று மூன்று  வருடங்களுக்கு பிறகு கோவையில் என் மூத்த வழக்கறிஞர் நண்பர்களை என் வியபார சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தேன்

திரு .சுந்தரவடிவேல் (சிபிஐ மூத்த வழக்கறிஞர் )பந்தையசாலை
திருமதி .ஷர்மிளா -கோபாலபுரம்
திரு .ஸ்ரீனிவாசன் -கோபாலபுரம்
திரு .குருசாமி -ஜவான்ஸ் building
திரு .நவீன்குமார் -வடவள்ளி
திரு .சரவணன் -கணபதி
திரு .சிவகுமார் -RSPURAM
திரு .தொல்காப்பியன் -கோபாலபுரம்
திரு .ராமகிருஷ்ணன் -AIRINDIA
இன்னும் என் வழக்கறிஞர் நண்பர்களை சந்திக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன் ..

இதில் மதிய நேர உணவை கோர்ட் வளாகத்தில் உள்ள விலை குறைந்த ருசிமிக்க உணவை ஸ்ரீனிவாசன் நண்பருடன் பகிர்ந்துண்டது மகிழ்ச்சியே .
வடவள்ளி செல்லும்பொழுது மட்டும் மனதை கல்லாக்கி கொண்டு தான் சென்றேன் .. என் ஷ்யாமுடன் விளையாடிய ,பள்ளி சென்ற  நினைவுகளால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.வியாபார விஷயமாக செல்லும்பொழுது எந்த ஒரு மன நிலைக்கும் ஆட்படக்கூடாது கூடாது என்று மனதை கல்லாகி கொண்டேன் .

இன்று விலைமதிப்பு மிக்க நேரம் சென்றதே தெரியவில்லை ..கோபாலபுரம் பகுதி முதலில் எல்லாம் சினிமா விநியோகஸ்தர்கள் அதிகம் உள்ளபகுதியாக இருந்தது .இப்போது சுற்றியும் வழக்கறிஞர் அலுவலகமாக காட்சி அளிக்கிறது .கோர்ட் வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள அன்னபூர்ணாவில் சுவைமிக்க காபி சுவைத்துவிட்டு விலைபட்டியலை பார்க்கும்போது கொஞ்சம் ஜெர்க்குதான் ..




புதன், 15 மார்ச், 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

ஞாயிறு, 5 மார்ச், 2017


Sivakumar Kumar added 9 new photos — feeling happy with Afzal Noor in Udumalaippettai.
Just now ·

என் கல்லூரி நாட்கள்..Vidyasagar College of Arts and Science-Udumalpet
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு-05-03-2017
கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.
அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
கல்லூரியின் முதல் வகுப்பு ...பேராசிரியர் .பங்கஜம் அவர்களின் மேலாண்மை வகுப்பு ..முதல் நாள் வகுப்பு முடிந்தவுடன் ..ஏதோ ஒரு கம்பனிக்கு நிர்வாகி ஆனதுபோல் போன்ற உணர்வு.. வணிகவியலக்கு பேராசிரியர் சுடலைமுத்து ,மரகதம்,நாராயணன் அவர்கள் ,கணக்கு பாடப்பிரிவுக்கு பேராசிரியர் சத்தியநாதன் ,தனுசு கோடி அவர்களிடம் கற்றகல்வி ,இன்று உயர்வான தொழில்முனைவோர்களையும்,தொழில் அதிபர்களையும்,அறிஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு நம் கல்லூரியில் படித்த கல்வியறிவு என் வாழ்க்கையும் உயர்த்திருக்கிறது ..
தமிழுக்கு அமுது என்று பெயர் போல் ..பேராசிரியர் இந்திரஜித் அய்யா அவர்களின் தமிழ் வகுப்பு ..அனைத்து தகவலையும் உள்ளடக்கிய வகுப்பாக அமைந்தது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் ..
இன்று கல்லூரியில் படித்த நண்பர்களை கண்ணன் ,ஸ்ரீனிவாசன் ,செல்வராஜ் ,பாலகுமார் ,சுதாகர் ,விஜயசேகர் ,பாலகிருஷ்ணன், 20 வருடங்கள் கழித்து பார்க்கும்போது கல்லூரியின் மலரும் நினைவுகள்.வாழ்வின் பொன்நாள்.
நமது நண்பர் வெளிநாட்டில் வசிக்கும் அப்சல் நூரின் கவிதையை வசித்து முடித்தவுடன் மாணவர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது .வாழ்த்துக்கள்.
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள் நம்பிக்கை உள்ளது
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த நமது கல்லூரியின் தாளாளர் .திரு .சத்தியநாதன் ,மற்றும் கல்லூரியின் தலைவர் .சு .சுப்பிரமணியன் ,மற்றும் கல்லூரியின் முதல்வர் .மருதுபாண்டியன் அவர்களுக்கும் .என் மனமார்ந்த நன்றிகள் .,...









புதன், 1 மார்ச், 2017

இன்று செந்தில்குமார் -கௌசல்யா -கொடிங்கியம் ஆவல்பட்டி அரண்மனையாரின் திருமணவரவேற்பு நிகழ்வு நம் இளையசமுதாயம் சிரிப்பு சத்தம் ..கலாய்ப்பு களும்  இப்போது இருக்கிற இறுக்கமான சூழ்நிலையை மனதை வெகுஇலகுவாக்கிறது ..பில்லா நாய்க்கன் சாலையூர் சமையல் கலைஞரின் கைவண்ணத்தில் மல்லிகை சாதம் ,இயற்கை கம்மங்கூழ்  திருமணவரவேற்பு சாப்பாடு அருமை ..

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல்தலைவர் .முருகவேல் ,சாமிகுணம் ,செந்தில் ராம் ,திருப்பூர் கார்த்தி மற்றும் நம் சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புன்னைகையுடன் விடைபெற்றோம்.... 



செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

‘ட்ரஸ்ட் எப்படி ஆரம்பிப்பது?   எப்படி பணம் கிடைக்கிறது?

இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேரிடுகிறது. ‘ட்ரஸ்ட் எப்படி ஆரம்பிப்பது?’ என்னை ஆல் இன் ஆல் அழகுராஜாவாக உணரச் செய்யும் கேள்வி இது. பந்தாவாக பேச ஆரம்பித்துவிடுவேன். மாதம் ஒருவராவது இது குறித்து விசாரிக்கிறார்கள்.

‘ஆடிட்டரை பாருங்க..அவர்கிட்ட அறக்கட்டளையின் நோக்கங்களைக் கொடுத்துடுங்க..ஆவணம் தயாரானவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தால் போதும்’ என்கிற ரீதியில் ஆரம்பித்து PAN எண்ணை வாங்குதல் வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கான முஸ்தீபுகள் பற்றியெல்லாம் அளந்துவிடுவது வாடிக்கை. இதென்ன பெரிய வானியல் ரகசியமா? யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு. அறக்கட்டளையின் பதிவு ஆவணம் உட்பட அத்தனையும் என் சீனியர் நண்பர்களையும் ,நிதி மேலாண்மை படித்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுகிறேன். .

கடந்த சில மாதங்களாகவே மதுரைலிருந்து  ஒரு அமைப்பினர் அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ‘ஃபோனிலேயே கேளுங்க...சொல்லிவிடுகிறேன்’ என்று சொன்னால் கேட்பதேயில்லை. நேரில் வர வேண்டும் என்றார்கள். உடுமலை ,கோவை,என்றாலும் பரவாயில்லை என்றார்கள். ஒரு மணி நேரம் என்றாலும் ஃபோனிலேயே பேசுவதற்குத் தயாராக இருந்தாலும் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சொன்னால் உறுத்தத்தானே செய்யும்? சென்னை வரும் போது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதுவும் அறக்கட்டளையின் தலைவர் பேச மாட்டார். அவருக்கு ஒரு பி.ஏ. அவர்தான் அழைப்பார்.

‘உங்களை சார் பார்க்கணும்ன்னு சொல்லுறாரு’ என்பார். பி.ஏ வைத்துக் கொண்டு பேசுகிற ஆட்களைப் பார்த்தாலே அலர்ஜியாக இருக்கும். தேவையென்றால் நேரடியாகப் பேச வேண்டியதுதானே? அவர்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்கிறார்களாம். ஒரு நாள் நானேதான் ஃபோனை எடுத்தேன்.

‘நான் ஐயாவோட பி.ஏ பேசறேன்’ என்றார். செமக் கடுப்பு. ‘நான் ,சிவா அய்யாவோட பி.ஏ பேசறேன்..அய்யா ஒரு மீட்டிங்ல இருக்காரு’ என்று சொல்லித் துண்டித்துவிட்டேன்.

அதன் பிறகு வெகு நாட்களுக்கு அழைக்கவே இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு நேற்று பிடித்துவிட்டார்கள். உடுமலை வந்தவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக சனி,ஞாயிறுகளில் வெளியூர் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டேன். அதற்கு வேறொரு கதை இருக்கிறது. தனியாகச் சொல்கிறேன். வழமையான சில விசாரிப்புகளுக்குப் பிறகு அறக்கட்டளை பற்றி விசாரித்தார்கள்.

எல்லாவற்றையும் சொன்ன பிறகு தாங்கள் ஏற்கனவே அறக்கட்டளையைப் பதிவு செய்துவிட்டதாகச் சொன்னார்கள். வங்கிக் கணக்கும் தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு பெரிய கோப்பு ஒன்றை வைத்திருந்தார்கள். கண்ணசைத்ததும் பி.ஏ எடுத்து நீட்டினார். நோட்டுப் புத்தகங்கள் வழங்கியது, இலவச வேஷ்டி சேலை வழங்கியது என பெரிய கோப்பு இது. ‘போன வருஷம் மட்டும் நாற்பதாயிரம் ரூபாய்க்கு செஞ்சிருக்கோம்’ என்றார்கள். அந்த கோப்பு, நிழற்படங்கள் எல்லாம் கணக்குப் போட்டால் ஐந்தாறாயிரம் தேறிவிடும்.

அறக்கட்டளையும் பதிவு செய்துவிட்டார்கள், வேலையையும் ஆரம்பித்துவிட்டார்கள் வேறு என்ன விவரங்களை எதிர்பார்க்கிறார்கள் என்று சற்று குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை நம்முடன் இணைந்து பணி புரிய விரும்புகிறார்களாக இருக்குமோ என்று யோசிக்கும் போதே தொண்டையைக் கணைத்துக் கொண்டு ‘உங்க ட்ரஸ்ட்டுக்கு நிறையப் பணம் வர்றதா சொன்னாங்க..’ என்றார்.

‘யார் சொன்னாங்க?’ என்றேன். அவர்கள் என் வலைத்தளம்  படிப்பதில்லை என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிந்தது.

‘ஒரு ஃப்ரெண்ட் சொன்னாருங்க’ என்றார். பெயரைச் சொல்லவில்லை. மற்ற எந்த விவரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவரிடமிருந்தே அலைபேசி எண்ணையும் வாங்கியிருக்கிறார்கள்.

‘அதான் உங்களை நேர்ல பார்த்து பணம் எப்படி வசூல் பண்ணுறதுன்னு கேட்கலாம்ன்னு வந்தோம்’ என்றார்.

‘எனக்கே தெரியாதுங்க’ என்று பதில் சொன்னால் நம்பவா போகிறார்கள்? நமக்கென்றே இப்படியெல்லாம் சத்திய சோதனை வந்து சேர்கிறது என நினைத்துக் கொண்டேன்.

‘தினமும் நெட்ல எழுதறேங்க...அதைப் படிக்கறவங்க கொடுக்கிறாங்க’என்றேன்.

தினமும் எழுதினால் பணம் கொடுப்பார்களா என்ற கேள்வி அவரது கண்களில் தெரிந்தது. தினமும் கோவில் வாசலில் அமர்ந்தால் பணம் கிடைக்கும் என்றுதான் அவர் இதுவரை கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

‘இண்டர்நெட் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..வேற எப்படி வசூல் பண்ணுறீங்க?’என்று இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. விடமாட்டார் போலத் தெரிந்தது. கத்தியை எடுத்துட்டு போய் கழுத்துல வைத்துவிடுங்கள் என்று சொல்லித்தான் தப்பிக்க வேண்டும் போலத் தெரிந்தது.

உண்மையிலேயே இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. திடீரென்று யாரும் பணம் கொடுத்துவிட மாட்டார்கள். தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே நம்பிக்கையை உண்டாக்க முடியும். நம்பிக்கையை உண்டாக்குவதற்கு முடிந்தவரை முகமூடி அணியாமல் இருக்க வேண்டும். அரசியல், சமூகம், மதம் என எல்லாவற்றிலும் நாம் நினைப்பதை அப்படியே வெளிப்படையாகக் கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படி ஓட்டைவாயாக இருப்பதனால் முத்திரைகள் விழாமல் தவிர்க்க வாய்ப்பில்லை. திமுக அனுதாபி, பாஜக ஆதரவாளன், ஜெயலலிதா விசுவாசி, காங்கிரஸூக்கு வேலை செய்வதவன் என்று எனக்கு எல்லா கட்சி சார்ந்தும் முத்திரை உண்டு. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்வார்கள். அதைப் பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. நம்மை திடீரென்று பார்க்கிறவர்கள் அந்தச் சமயத்தில் நாம் சொன்ன கருத்துப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் தொடர்ந்து நம்மைப் பின் தொடர்கிறவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். ஆனால் நம்மைத் தொடர்ந்து பின் தொடரச் செய்ய நம்மிடம் ஏதாவதொரு சுவாரஸியம் இருக்க வேண்டும்.

வாசித்து, படம் பார்த்து, மனிதர்களை உற்று நோக்கி என ஹோம்வொர்க் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். தலையில் கொம்பு முளைக்கும் போதெல்லாம் தயவு தாட்சண்யமில்லாமல் முறித்துக் கொள்ள வேண்டும். பொதுவெளியில் முத்திரைகளைத் தாண்டி நம்மைப் பற்றி உருவாகிற நம்பகத் தன்மைதான் முக்கியமானது. அப்படியானதொரு நம்பகம் கொண்டவர்கள்தான் நிதியளிக்கிறார்கள்.

விலாவாரியாகச் சொன்னேன். ‘எப்படி ப்லாக் ஆரம்பிப்பது?’ என்றார். இப்போதைக்கு விடமாட்டார்கள் போலத் தெரிந்தது. அதற்கு ஒரு அரை மணி நேரம். ஏழரை மணி ஆகியிருந்தது. கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

ஏதோவொரு அரசியல் கட்சியில் இருக்கிறார். உள்ளூர் மக்களுக்கு அதையும் இதையும் செய்து கொண்டிருக்கிறார். பணம் வசூலிக்க விரும்புகிறார். பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தேன்.

இத்தகைய மனிதர்களிடம் சொல்வதற்கு ஒன்றேயொன்றுதான் இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் Passion ஒளிந்து கிடக்கும். இதுதான் என்னுடைய Passion என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. எழுதுவது, ஓவியம் வரைவது, நிழற்படங்கள் என்று எதையாவது நாம் வெளியில் சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அதுதான்  உண்மையானதா என்று நமக்கே தெரியாது. மனதுக்கு பிடித்த காரியத்துக்கு தினசரி அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். அது என்ன செயலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அரை மணி நேரமாவது ஒதுக்கியே தீர வேண்டும். அப்படியான அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருந்தால் அது நம்மை இழுத்துச் சென்றுவிடும். அதுதான் நம் பாதை என்று உறுதியாக நம்பலாம்.

வேறொரு இலக்கை லட்சியமாக வைத்துக் கொண்டு அதை அடைவதற்கு இதைச் செய்வோம் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தினால் இலக்கும் தப்பிவிடும் நிகழ்காலமும் சொதப்பிவிடும். அடுத்தவர்கள் அவரவர் பாதையில் செல்லட்டும். அடுத்தவர்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதைச் செய்தால் போதும். நம்முடைய செயலுக்கும் தகுதிக்கும் ஏற்ற இடத்திற்கு நம்முடைய Passion கொண்டு போய் நிறுத்திவிடும். அவ்வளவுதான்.


நம்  கம்பள விருட்சம் உறுப்பினர்களின் ,ஆர்வம் ,குழு மனப்பான்மை ,நம் சமுதாயம் முன்னேறவேண்டும் என் ஒரு உந்துதல் ...நம் எதிர்கால சந்ததிகளுக்கு இப்போதைக்கு சிறு நம்பிக்கை அளிக்கவேண்டும்...நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் ...செயல்படுவோம் ..

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தளி எத்தலப்ப மன்னர்
262ஆம்
பிறந்த நாள் விழா ..

திருவள்ளுவர் ஆண்டு 2048,
சுறவம் (தை) : 30

12.02.2017..
ஞாயிறு..நேரம் காலை 10.30 மணி அளவில் .


தளி எதுலப்ப மன்னர் 262 ஆவது பிறந்த நாள் விழா திருமூர்த்தி மலை பயணீர் விடுதிக்கு  முன்புறம் உள்ள எதுலப்பர் நினைவிடத்தில் நடைபெற்றது .

இந்த நிகழ்விற்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்பியல் தலைவர் .திரு.சுபாசு கிருட்டிணசாமி முன்னிலை வகித்து தளி எதுலப்பர் மன்னரின் நீர்மேலாண்மை குறித்தும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு எதிர்வினை செய்த மாபெரும் வீரன் எதுலப்ப மன்னர் எனப்புகழாரம் சூட்டிப் பேசினார் .
முனைவர் ஜ .மஞ்சுளாதேவி தலைமை வகித்து இந்திய வரலாற்றில் தென் இந்திய விடுதலைப்போரில் மருதுபாண்டியர் ,வேலுநாச்சியார் ,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,திருமலை நாய்க்கர் ,தீரன் சின்னமலை ஆகியோரும் இந்த தமிழ்மண் எதுலப்ப மன்னரையும் இனிமேல் நினைவுகூர்ந்து  இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கூறினார் .

உடுமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் .மா .மதியழகன் தனது ஆய்வுரையில் 1791 முதல் 1805 வரையிலான காலத்தில் உடுமலை பகுதியில் எதுலப்ப மன்னரின் செயல்பாடுகள் ஆங்கிலேயர்க்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததையும்  உடுமலைப்பேட்டை வரலாறு கி .பி 1300 வரையிலான பதிவுகள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்ட ஆய்வேடாக பதிவு செய்யப்பட்டு நூலாக வெளியிடுவதற்கு தகுதி உள்ளதையும் தெரிவித்தார் .
திரு. சிவசக்தி இராமசாமி அவர்கள் எதுலப்ப மன்னரின் கதைப்பாடல் குறித்து பேசினார் .

மேலும் பேராசிரியர்கள் ,ர .சிறீ பிரியா ,குப்புலட்சுமி ,வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் ,மற்றும் தலைவர்கள் முருகவேள் ,ராமகிருஷ்ணன் ,வழக்கறிஞர் .முருகராஜ் ,சபரி முத்துவேல் ,ராமு ,கோபால்சாமி  மற்றும் பலர் கலந்துகொண்டனர் .

சுற்றுலா மாளிகை முன்புறம் தளி எதுலப்ப மன்னருக்கு மணிமண்டபம் மற்றும் நினைவுத் தூண் அமைக்க அரசுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

நிகழ்வினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சிவக்குமார் ,கொழுமம் ஆதி ,அருட்செல்வன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் .