செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கேள்வி : வீட்டுக் கடன் திட்டத்தில் உங்கள் பணத்தை எப்படி சேமிக்கலாம்..?



என் பதில் :


ஒவ்வொருவருடைய வாழ்விலும் வீடு என்பது ஒரு அடிப்படை வசதி என்பதுடன் ஒரு வீட்டைச் சொந்தமாக்குவது பொதுவாக அனைவரின் கனவுகளிலும் ஒன்று. நம்முடைய நிதிநிலைகள் பலமாக இல்லாத நேரங்களில் வீட்டுக் கடன்கள் நம் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க உதவுகின்றன. இன்றைய நிலையில் வீட்டுக்கடன் வாங்குவது எளிதாகிவிட்டாலும், இதனைத் திருப்பிச் செலுத்துவதில் நம்முடைய கஷ்டம் நமக்குத் தான் தெரியும்.

வீட்டுக் கடனும்.. வங்கிகளும்.. இந்நாளில் பெரும்பாலான வங்கிகள் பல்வேறு விதமான வீட்டுக் கடன் திட்டங்களில் மக்களைக் கவரும் விதமாக அவர்களின் வீட்டுக் கனவை பூர்த்திச் செய்ய வழங்குகின்றன. அவை ஒருபுறம் கனவாக இருந்தாலும் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டுக்கடன்கள் ஒரு மிகப்பெரிய சுமையை நம் மீது சுமத்துகின்றன.

நிலையான வட்டி வகிதம்.. வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவை வங்கிகளுக்கு மாறும் தன்மையுடைய வட்டி வீதத்தை (Floating Intrest rates) விளக்கிக் கொள்ளுமாறும் உண்மையான வட்டியை மட்டுமே வசூல் செய்ய அறிவித்துள்ளது.

உறுதி செய்துகொள்ளவும்... வட்டி விகித முறையை மாற்றியதன் மூலம் அபராதத் தொகையை நீக்கியது மட்டும் அல்லாமல் கடன் பெற்றவர்கள் பணத்தைச் சேமிக்கவும் வழி செய்துள்ளது. மேலும் கடன் வாங்கும் போதே வட்டி விகித முறையை உறுதி செய்துகொள்வது உத்தமம்.

சம்பள கணக்கு... உங்கள் கடன் தவணையை உங்கள் சம்பள வங்கிக் கணக்கில் இணைப்பதன் மூலம் அதைச் செலுத்துவதைக் குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் குறிப்பிட்ட தேதியில் தேவையான அளவு பணத்தை உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

ப்ரிபே முறை... தற்போது வங்கிகளில் வீட்டுக்கடன்களில் ப்ரிபே (Prepaying) எனப்படும் முன்கூடியே செலுத்தும் வசதியையும் அளிக்கின்றன. இதன் படி ஒருவர் தான் பெற்ற கடனை முன்கூடியே கூடச் செலுத்தலாம். இதன் மூலம் கடனை செலுத்தும் தவணைக்காலம் மற்றும் வட்டியும் குறையும்.

வரவுத் தொகை இந்த முன்கூடியே செலுத்தும் வசதி மூலம் வரவுத் தொகை ஏதாவது மீதம் இருந்தால் அதனைத் திரும்பப் பெறவும் (Withdrawal) செய்யலாம். ஆனால் குறைந்த வட்டி போன்ற வசதிகளை இது குறைக்கும். இந்த வசதி அடிப்படைப் வட்டி விகிதத்தில் 25-50 புள்ளிகள் அதிகம் செலுத்துவதன் மூலம் கிடைக்கும். இந்த அடிப்படை சாதாரண வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விடச் சற்று அதிகம்.

நன்றி ...

சிவக்குமார் . V. K
Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக