வியாழன், 30 மே, 2019


வேரும் மரமும்-உன்னத உறவுகள் ...(வா .மணிகண்டன் )


நண்பரொருவர்  ‘கோயமுத்தூர் வாழ்க்கை பரவாயில்லையா?’ என்று கேட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சொன்னால் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் வாழ்கிறவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது போல ஆகிவிடும். 

அப்பா உயிரோடு இருக்கும் வரைக்கும் வகைதொகை தெரியாமல் திருமணப்பத்திரிக்கைகள் நிறைந்து கிடக்கும். முக்கால்வாசி அழைப்பிதழ்களில் இருக்கும் விவரங்கள் யாருடையது என்று கூட எங்களுக்குத் தெரியாது. அம்மாவுக்கும் அப்படித்தான். ‘அப்பாகிட்ட கேளு’ என்பார். அப்பாவுக்கு அவர்கள் எல்லோரையும் ஏதாவதொருவகையில் கோர்க்கத் தெரிந்திருந்தது. அவர் நூல் பிடித்துக் காட்டினால் ஏதாவதொருவகையில் உறவுக்காரரின் திருமணமாக இருக்கும். துக்ககாரியங்களும் அப்படித்தான். இறந்தவர்களை யாரென்றே எனக்குத் தெரியாது. அப்பா சென்று வருவார். அறுபத்தைந்தாண்டு காலம் ஒரே ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவருக்கு அப்படித்தான் தொடர்புகள் இருக்கும். 

அப்பா இருக்கும் வரையிலும் எதைப்பற்றியும் யோசித்ததில்லை. அப்பாவை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற போதே ஊரை விட்டுத் தள்ளிப் போவது போலத்தான் ஆனது. அது, பெரிய மரம் ஒன்றை வேரோடு தோண்டியெடுத்து எங்கேயோ நடுவது போல. எவ்வளவுதான் நீருற்றிப் பார்த்தாலும் தன்னைத் தேடி வரும் பறவைகளின் ஓசையைக் கேட்க விரும்பும் மரம் போல மெளனம்தான் விரவிக் கிடக்கும்.  

அப்பாவின் மறைவுக்குப் பிறகு திருமணப்பத்திரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போயின. ‘அவங்க பெங்களூர்ல இருக்காங்க’ ‘கொடுத்தாலும் வரவா போறாங்க’ என்று தவிர்த்துவிடுவார்கள்.  ‘அவர் இருக்கிற வரைக்கும் கொடுத்தோம்...பசங்களைத் தெரியாது’ என்றார்கள். துக்க காரியங்கள் பற்றிய செய்திகளே வராது. வந்தாலும் ‘இதுக்கெல்லாம் போகணுமா’ என்று நாங்கள் தவிர்த்துவிடுவோம். ஒரு கட்டத்தில் சொந்த மண்ணைவிட்டு வெகு தூரம் செல்வது போலத் தோன்றியது. எந்த நிகழ்விலும் மூன்று முதல் ஐந்து சதவீதம் பேர்களைத் தாண்டி அறிமுகம் இருக்காது. அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நம்மிடம் பேச மாட்டார்கள். 

கோயமுத்தூர் வந்த பிறகு எவ்வளவோ பரவாயில்லை. அப்பாவின் நண்பர்கள் விலகினாலும் உறவுகள் எப்படியாவது ஒட்டியபடியே இருக்கின்றன. திருமணங்களுக்குச் சென்று வர முடிகிறது. துக்க காரியங்களில் பங்கெடுக்கிறோம். பத்து நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மூன்று நிகழ்வுகளிலாவது  புதிதாக யாரோ அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள். ‘வாசு அண்ணன் பையனா?’ என்று கேட்கிறார்கள். ஆமாம் என்று சொன்னால் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவையெல்லாம் ஏதோ புதிய உலகத்தை அறிவது போல இருக்கிறது.

கிடாவிருந்து, வளைகாப்புக்கெல்லாம் அழைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அட்டெண்ட்ஸ்தான். என்னைவிட பத்து வயது குறைந்தவர்கள் கூட உள்ளூரிலேயே இருக்கிறவர்களுக்கு பரவலாக அறிமுகம் இருக்கிறது. பாதி வயதைத் தாண்டிய பிறகு உள்ளூரில் பழைய உறவுகளைத் தூசி தட்ட ஆரம்பித்திருக்கிறோம். ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும் late is better than never அல்லவா? 

சில நண்பர்களிடம் இதைச் சொன்னால் ‘இதெல்லாம் இல்லாட்டி என்ன’ என்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் இருந்தது. நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினரோ- பத்து பேர் போதும். அதற்கு மேல் யாரும் தேவையில்லை என்றெல்லாம் கூடத் தோன்றியதுண்டு. ஆனால் அப்படியில்லை. அப்பா இறந்த போது வந்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு எந்நேரமும் ஐம்பது பேர்களாவது உடனிருந்தார்கள். அவர்களில் சிலர் சிரித்து, கும்மாளம் கூட அடித்தார்கள். அப்பொழுது கடுப்பாக இருக்கும். ஆனால் நம்மை அந்தச் சூழலிலிருந்து வெளியே இழுத்து வர விதவிதமான மனிதர்கள் தேவை. மனிதர்களின் சகவாசமில்லாமல் இந்த வாழ்க்கையில் நாம் எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. 

படித்த இடங்களில், கல்லூரிகளில், பணியாற்றும் இடங்களில் என ஆயிரம்தான் நட்புகளைச் சேகரித்து வைத்திருந்தாலும் கூட வந்து நிற்பவர்கள் வெகு சொற்பம்தான். பெங்களூருவிலும் சென்னையிலும் எவ்வளவோ சாவு வீடுகளைப் பார்த்தாகிவிட்டது. நடுத்தரக் குடும்பங்கள் என்றால் நாற்பது பேர் வந்து போயிருந்தால் அது பெரிய விஷயம். 

ஏதாவதொருவகையில் ஆறுதலாக வந்து நிற்கவும், கொண்டாட்டத்தில் நம்மோடு சேர்ந்து சிரிக்கவும் மனிதர்கள் தேவை. பொறாமை, வன்மம், வயிற்றெரிச்சல் என சகலமும்தான் விரவிக் கிடக்கும். நம்மைக் கீழே இழுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டும் இருப்பார்கள். எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களின் அருகாமை நமக்குத் தேவை.  பெருநகரங்களில் பணம் சேர்கிறது. வசதிகள் கூடுகின்றன. ஆனால் எப்படியோ மனித உறவுகள் துண்டித்துப் போகின்றன. சக மனிதர்களிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அடுத்த தலைமுறைக்கு என்ன கொடுத்துவிட்டுப் போகப் போகிறோம்? மனிதர்களையும், உறவுகளையும்தானே!

சொந்த ஊர் என்பது ஒரு மாயவித்தைக்காரி. சூட்சமங்களை உள்ளடக்கிய சூனியக்காரக்கிழவி. அதில் வாழ்ந்து பழகிவிட்ட மனிதர்களுக்கு சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப் போலாகாது.

கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பேயோன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழே இருப்பதைப் பதிந்திருந்தார்...

நிச்சயதார்த்தம்
திருமணம்
ரிசப்ஷன்
வளைகாப்பு
கிரகப்பிரவேசம்
பிறந்தநாள் விழா
அரங்கேற்றம்
மீண்டும் பிறந்தநாள் விழா
கெட் டுகெதர்...
உங்களுக்கெல்லாம்
வேறு வேலையே இல்லையாடா?

புதன், 29 மே, 2019

Karthic KVT:
இதுதாங்ங எங்ங ஊரு :-
கொடிங்கியம் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்ட வல்லக்குண்டாபுரம், வளையபாளையம் கிராமம் தாங்ங எங்ங ஊரு ..!!
எங்ங ஊரு காவல் தெய்வம்
உச்சிமாகாளியம்மன் ..!
சுத்துப்பட்டு வட்டாரத்துல இல்லாத அளவுக்கு
நித்தப்பூசை நடக்குற உச்சி மாகாளியம்மன் திருக்கோயில் னா
அது எங்ங ஊர் காளியம்மன் கோவில சொல்லாங்க.!!
எப்பவோ ஒரு காலத்துல கோயில் சாமிகும்பட்ட பிரச்சனையில கருத்துவேறுபாடு வந்து
பிரிஞ்சு வந்த வல்லவநாயக்கரால கள்ளிய வெட்டி கல்லெத்து வெச்சு காளியம்மன் னு கும்பிட ஆரம்பிச்சதா எங்க ஊர் பெரியவங்ங சொல்வாங்க ..!!
மொதல்ல சின்னதா இருந்த தெய்வம் படிப்படியா வளந்து இன்னைக்கி இவ்வளவு பெரிசா நிக்குதும்னு சொல்வாங்ங ..!!

காளியம்மனுக்கும், வளையபட்டியம்மனுக்கும், திருக்கல்யாணம்
ரெட்டப் பொங்கல்
ரெட்ட மாவிளக்கு
ரெட்டக் கெடாய் " செலுத்தலாமுங்கனு
உருமை மகாலிங்கம் ஊரெல்லாம் சாட்டி முடிச்சுட்டுவரவே மணி ரெண்டாயிரும் ..!!
சாட்டிமுடிச்ச கையோட மொத தீர்த்தமா டெம்போவ புடிச்சு தெய்வகொளம் காளியம்மன் கோவிலுக்கு போய் தீர்த்தம் எடுத்துட்டு வருவாங்க ...!!
நோம்பு சாட்டுனதுல இருந்து கறி புளி சேத்தாம
கடுகு தாளிக்காம, எண்ணெய் ஆட்டம, மொளகுபிடியிடிக்காம
வெளியூர்ல போய் தங்கலிருக்காம
சம்பிரதாயம் கடைபிடிக்கிறது வழக்கம் ...!!
கொலுவிருக்குற சாமி நம்ம வீட்டுக்கும் வந்து பாத்துட்டு போகுங்கிறது எங்ங ஐதீகம் .. !!
நித்தமொரு கோயிலு
நெதமொரு தீர்த்தம் னு
ஆத்தாள குளிர்விச்சாலும்
அத்தனையும் விட கொஞ்சம் அதீக
எதிர்பார்ப்பும் எண்ணிக்கையுமா
கலந்துக்கிறது என்னமோ மாவடாப்பு வயிரப்பாட்டன் கோயில் தீர்த்தம்தாங்க ..!
முறைப்படி வனத்துறைகிட்ட அனுமதிவாங்கி அவங்களோட அறிவுறுத்தலோட போய் வர்ரது எல்லாம் இந்தக்காலம்
( மொதல்ல எங்ங பகுதி புலிகளின் சரணாலயமா அறிவிக்காததுக்கு முந்தி வனத்துறையிலும் கொஞ்சம் கட்டுப்பாடு கெடுபிடிகள் தளர்வா இருந்திச்சு அப்பெல்லாம் ராத்திரி கோவிலுக்கு போறோம்னு போய்
அங்க இருக்கீற யானைமுடிக்கி
தெறிச்சு ஓடி முட்டி மொழங்கால பேத்து பத்தாம்நெம்பர் பீடி காயத்த வச்சு பத்துபோட்டுட்டு வந்ததெல்லாம் தனிக்கதைங்க)
கும்பம் தாளிக்கிற அன்னைக்கி சாயங்காலம் 4 மணில இருந்து
சாமிசெலைய கொண்டாந்து கோயில்வீட்டுல வச்சுட்டு
ஊர்நாயக்கர் ஊர்கவுண்டர்
சின்ன ஊர்கவுண்டர் னு அவங்கவுங்கவுங்களுக்கு ஊர்சார்பா செய்ய வேண்டிய மரியாதை செஞ்சு
மொறைப்படி செஞ்சு கோவிலுக்கு கூட்டீட்டு போயி அடுத்த கட்ட வேளைகள பாப்பாங்க ..!!
ஊருக்காரங்க ஒறவுக்காரங்க
நோம்பிக்கு வந்த ஒறமனைக்காரங்க என, கூட வேளை செய்யுற தோழமைகனு வூட்டுக்கு வந்த அத்தனைபேரையும் வரவழைச்சு
பேசிமுடிச்சு சாப்டுட்டு கோயில் போகறதுக்கும்
கும்பம் தாளிக்குற வேலைகள் ஆரம்பிக்கவும் சரியா இருக்குமுங்ங....!!
கலசம் எடுத்துட்டு வந்து அலங்கார பந்தல்ல வெச்சு அலங்காரம் முடிக்கிற வரைக்கும் எங்க ஊருல
இளவட்ட பொடிசுகள்ல இருந்து
பெரிசுகள் வரைக்கும் அத்தனைபேருக்கும் ஒரு பொழுதுபோக்கு
தேவராட்டம் தாங்ங
பத்து பதினைஞ்சுனு இல்லாம
நூறு எறநூறுபேர் சேந்து ஆடுறதும் அன்னைக்கி தாங்ங! !
அலங்காரம் முடிச்சு சக்தியழைக்க ஆரம்பிக்கற நேரத்துல எள்ளுபோட்டா கீழ விழாதளவுல கூட்டம் நெறைஞ்சிருக்குங்ங ....!
கல்திருத்தி மணற்பரப்பி
தென்னம்பாளை விரித்துணர்த்தி னு ஆரம்பிச்சு
ஒவ்வொரு திசையில இருந்து ஒவ்வொரு சாமிய அழைச்சா
அந்த பம்பை அடிக்கும்
உரம மொழக்குத்தும்
அப்படியொரு கொண்டாட்டமா இருக்கும் பாருங்ங ...!!
சுத்தி ஒக்காந்திருக்கிற ஆட்களுக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு சாமி வர்றதும் அதுக்காக ஓடி ஓடீ தீர்த்தம் அடிக்கிறதுக்குக்கும்னே ஒரு குருப் தீவிரமா வேளைசெய்யனும்னா பாத்துகோங்க ...!!
சக்தியழைச்சு சாமி கலசமெடுத்து
பூசாரி தலைல வச்சு விநாயகங் கோவில சுத்தி காளியம்மன் கோவிலுக்கு போறதுக்குள்ளையே
மணி நாலு நாலரைய தொட்டுருமுங்க! !
பிரம்ம மூகூர்த்த நேரத்துல திருக்கல்யாணம் முடிஞ்சு
தீபாராதனை பாத்தகையோட
மாவிளக்கும் எடுத்து முடிப்பாங்ங ..!!
ஒவ்வொரு குருப்பா மாவெளக்கு வந்து சேர மணி பதினொன்ன தொட்டுருங்க..!!
அடுத்து
வேறென்ன னு கேட்கறீகளா? ?
கறி விருந்து தாங்ங ..!!
பதினைஞ்சு நாள கறி புளி சேத்தாம இருந்தவாயி கம்முனா இருக்கும்..!!?
அந்த நாளே அல்லோலப்பட்டு போகுங்ங ..!
எல்லா கறிகடையிலையும் முன்னாடியே சொல்லிவச்சுருவாங்ங..!!
வேண்டுதல் ஏதாவது இருந்தா
கெடாவெட்டும் வச்சிருவாங்ங ..!!
ராத்திரி தூக்கம் முழிச்சதுக்கும்
அடுத்தநாள் கறிவிருந்துக்கும் சேத்தி
புதங்கெழமை நைட்டு ரெஸ்ட் எடுத்திட்டு
வியாழக்கிழமை வந்துசேர்வோங்க..!!
அன்னைக்கி தாங்ங ஆத்த திருக்கலியாணம் முடிஞ்ச கையோட ஊருக்குள்ள பவனி வர்ற நாளு
சப்பாரம் எடுக்கவே வச்சிருக்கிற மரமெடுத்து வேட்டி சுத்தி சிங்கவாகனம் சாமிசிலை எல்லாம் வச்சுகட்டி ஊருக்குள்ள இருக்கிற எல்லா வீதிக்கும் போயிட்டு வர்றதுக்கும் பொழுதுசாயிரக்கும்
நேரம் சரியாயிருக்குங்ங!!!
அன்னைக்கும் அதுக்கடுத்த நாளைக்கும் எங்ங ஊர்ல மஞ்சள் நீராட்டு தாங்க ..!
வியாழக்கிழமை ராத்திரி எதாவது கலைநிகழ்ச்சிகள் போடுவாங்க ..!!
வெள்ளிக்கிழமை காலைல காளிம்மன் சப்பாரம் தெக்கவந்து வலையபட்டி ஆத்தாள போயிட்டு
வடக்க போன கையோட அவிசேக பூஜைய முடிச்சு திருவிழா நிறைவூ செய்யுறது எங்ங ஊர்வழக்கம் ..!!!

செவ்வாய், 28 மே, 2019


ஊர்தியில் நடைபெற்ற சமூக மாற்றத்திற்கான  உரையாடல்
ஆம் .  . .
அறச்சலூர் முதல் புகழுர் எனும் வேலாயுதம்பாளையம் சென்றடைவதற்கு  சுமார்  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மன அயற்சியும், சோர்வும், சங்கடமும் ஏற்படுத்தியது எனில் , அதே பயணத்தை மீண்டும் திரும்ப வரும்போது புகழுர் தொடங்கிய ஊர்தி ஈரோடு வந்ததும் தெரியாமல் ஈரோடு வந்துவிட்டது, பேருந்து நிலையத்திற்கு அருகில்  வண்டி சென்று கொண்டிருக்கிறது என்று பேராசிரியர் கண்டிமுத்து சொன்னபிறகும் தொடர்ந்த ஊர்தியினூடே நடைபெற்ற உரையாடல்  மன உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பயணக் களைப்பையும் மீறி பேச வைத்தது எனில் மிகையாகாது.
சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் தமக்கான இடமாகவும் தமக்கான பங்கினைச் செலுத்தக் கூடிய ஆற்றலாளர்களாக எழுத்தாளர்கள் சமூகப் பற்றாளர்கள் இருப்பார்கள் என்பதை எள் முனையளவு கூட மாறாமல் மிகச் சரியாகவும் பொருத்தமாகவும் பயணத்தைப் பயன்படுத்திய ஆளுமை முனைவர் சமணபௌத்த ஆய்வாளர் அய்யா மகாத்மா செல்வபாண்டியனையே சாரும்.
இந்து மதத்தின் இன்றைய கட்டமைப்பை ஏன் எப்படி எவ்வாறு இவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதற்கான பண்பாட்டுத்தளத்தின் ஆதி அடிநாதமாக விளங்கக்கூடிய உரையாடலை முனைவர் மணிமேகலை அவர்களும், அய்யா செல்வபாண்டியன் பேசியதும் எவ்வளவு ஆழமான செய்தி என்பது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய தெரியக்கூடிய செய்தியாகும்.
சுமணர்களின் சமயப்பற்றும், பௌத்தர்களின் சமயப்பற்றும், தமிழர்களிடையே எவ்வாறு ஊடுருவியது என்பதும் இது திராவிடத்தால் உள்வாங்கப்பட்டது குறித்தும், திராவிட மரபில் மெய்யியல் மரபு, பண்பாட்டு மரபைத் தவிர்த்து வெறுமனே இறை மறுப்பு என்பதையே தற்போதைய தமிழ்த்தேசியவாதிகள் திராவிடத்தால் வீ;ழ்ந்தோம் என்று பேசி வருவது எவ்வளவு பொருத்தமான செய்தி என்பதே முனைவர்களின் ஆழமான உரையாடலிலிருந்து அறிய முடிந்தது.
திராவிட இன மரபில்  இந்துத்துவத்தின் ஊடுருவலும், இதில் சமண பௌத்தத்தின் வீழ்ச்சியும் நாம் இந்த மக்களுக்குச் சொல்லியாகவேண்டிய நிலையில் உள்ளோம்.
இதையேதான் முனைவர்கள் தமது உரையாடல்களில் மிகவும் அழகாகவும், கருத்தாழம் மிக்க உரையாடல்களாக பேசி வந்தனர். அதற்குள் ஈரோடு வந்துவிட்டதே என்ற மனநிலைகூட வந்துவிட்டது. இந்த உரையாடலை  முனைவர் செல்வபாண்டியன் கூறியது போல் காலையிலே தொடங்கியிருந்தால்  இன்னமும் சிறப்பாகவும் பங்கேற்பாளர்களின் பயண அனுபவமாகவும் இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எது எப்படியோ .  . . சமூகத்தேடலில் ஒரு பகுதியினை நாம் தொட்டுவிட்டால் கட்டாயம் அடுத்தபகுதி நமக்குக் கிடைத்துவிடும். அந்த வகையில் முனைவர்களின் உரையாடல் தொடர வேண்டும் . .
இதே போல் பயணத்தில் வந்த அனைத்து நண்பர்களிடமும் இதே போல் ஒரு உரையாடலை  கட்செவி (வாட்சாப்) வழியாக தொடங்க வேண்டும்.
திராவிட  இனத்திற்கு ஒரு பண்பாட்டுத் தளத்தை முனைவர்கள் உருவாக்க வேண்டும். அது அனைத்துத் தளங்களிலும் பேசப்பட வேண்டும். இந்த நல்ல செயலை நமது தமிழ்ப்பேராசிரியர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும். (உரையாடல் தொடங்கவேண்டும் .

வெள்ளி, 24 மே, 2019


நூற்றாண்டு பழமை வாய்ந்த மரத்தினால் வடிவமைக்கப்பட்ட கோபுரம் - தளி ஜல்லிபட்டியில்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நமது உடுமலைப்பேட்டைக்கு அருகில் தளி பாளையப்பட்டின் அருகில் உள்ள கிராமம் ஜல்லிபட்டி இது ராஜகோபால் எனும் சட்டமன்ற உறுப்பினர் பிறந்த ஊர் . மேலும் கல்விக் கண் திறந்த காமராசர் வருகை தந்த கிராமம் மற்றும் உடுமலையிலிருந்து முதன் முதலில் பேருந்து சென்ற கிராமம் என்ற அரிய பெரிய பெருமைகளைக் கொண்ட கிராமம். இந்த கிராமத்தில் தான் கலெக்டர் மாரிஸ்துரை என்பவர் வெள்ளைக்குதிரையில் வந்து கயிறு இழுக்கும் போட்டி நடத்தியதாக அய்யா மரபுக்கவிஞர் தி.குமாரராசா அவர்கள் நினைவுகளைப் பகிர்ந்தார். இப்போதும் அங்கிருக்கும் நியாயவிலை அங்காடிக் கல்லாலான கட்டிடம் 1933 ல் கட்டப்பட்டது இப்பொழுதும் கம்பீரமாய் நிற்கிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மேலும் சுதந்திர இந்தியாவில் முதன் சட்டமன்றத் தேர்தலில் (1952 ல் சட்டமன்றத் தேர்தலில்) உடுமலைப்பேட்டையின் முதல் சட்டமன்ற உறுப்பினரை பெற்ற கிராமம் தளி ஜல்லிபட்டி . . . உடுமலைபேட்டைக்கும் திருமூர்த்தி மலைக்கும் இடையே பழம்பெருமைப் பேசக்கூடிய முக்கியமான கிராமங்களில் தளி ஜல்லிபட்டியும் முன்னிலை வகிக்கிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஜல்லிபட்டிக்கு அருகில் உள்ள சந்தனக்கருப்பனூர், நல்லவநாயக்கன்ஓடை, புலிக்குத்திக்கல், வீரஜக்கம்மா கோயில் , லிங்கம்மாவூர், கொங்குரார் குட்டை, ஓனாக்கல்லூர், கரட்டுப்பெருமாள் கோயில் வரலாற்றுச்சிறப்பு மிக்க பகுதிகளைக் கொண்ட ஊர்தான் தளி ஜல்லிபட்டி. ஜல்லிபட்டிக்குப்பின்புறம் மலைப்பகுதியில் ஆண்டுக்கொரு முறை மலைமேல் உள்ள போடி தாத்தையன் கோயில் வழிபாடு மிகவும் சிறப்புப்பெற்றது

வியாழன், 23 மே, 2019

Home Calling.⛱⛱⛱NRI's...Home Loans...👍👍👍⛱⛱

It is known that Non-Resident Indians (NRIs), Persons of Indian Origin (PIOs) and Foreign National of Non-Indian Origin can acquire Immovable Property (either residential or commercial) in India by way of purchase, gift, inheritance, or share of joint property received upon partition of family/property, etc as per the guidelines laid by the Foreign Exchange Management (Acquisition and Transfer of Immovable Property in India) Regulations, 2000 (FEMA). But, there are some crucial guidelines to be followed while buying property…
Purchase

The Reserve Bank of India (RBI) has permitted the following categories of NRIs/PIOs to acquire Immovable Property (other than agricultural land, plantation or farm-house property) by way of purchase, provided the payment is made out of Foreign Exchange Inward Remittance or any Non Resident Bank Account in India, that is (Non Resident External (NR(E)), Foreign Currency Non Resident Account (FCNR(B)) or Ordinary Non Resident Rupee Account a/c (NRO) in connection with acquisition of Immovable Property in India –

A Non Resident who is a citizen of India
A Non Resident who is a Person of Indian Origin (PIO)
A Non Resident who has established in India a branch office or other place of business (excluding a liaison) office

There are no restrictions on the number of residential/commercial properties that can be purchased.
Gifts

General Permission is granted to acquire any Immovable Property (other than agricultural land, plantation or farmhouse property) by way of gift from a person (donor) who is –

A Person Resident in India, or
A Person Resident outside India (NRI) who is an Indian citizen or foreign citizen of Indian origin.

Provided, applicable Gift Tax if any has been paid at the time the immovable property is being gifted.
Inheritance

General Permission is granted for inheritance of Immovable Property including agricultural land, plantation or farm-house property from –

A Person Resident in India, or
A Person Resident outside India who may be an Indian citizen or Foreign Citizen of Indian Origin provided such person had acquired the said property in accordance with the provisions of FEMA.

Hence, agricultural land, plantation or farmhouse property can be acquired by way of inheritance only.
Acquisition by Foreign Nationals of Non-Indian Origin

The residential status of a foreign national of non-Indian origin determines the ability to acquire immovable property in India. Thus, Foreign Nationals of non-Indian origin can be further divided into

Foreign Nationals of Non-Indian Origin, Resident Outside India
Foreign Nationals of Non-Indian Origin, Resident In India

Acquisition and Sale of Immovable Property

There is no ceiling on the number of immovable properties acquired or sold in India by NRIs and PIOs. However, NRIs/ PIOs belonging to Pakistan, Bangladesh, Sri Lanka, Afghanistan, China, Iran, Nepal and Bhutan require a prior approval of the Reserve Bank of India for acquiring Immovable Property in India.

It is mandatory to file a declaration of the acquired property with the Reserve Bank of India within 90 days of acquisition of property, on the prescribed 'Declaration of Property by NRIs/PIOs Form' - IPI 7. For repatriation of sale proceeds of property or properties credited with NRI/PIO accounts, it is mandatory to file a declaration of the sold property with RBI within 90 days of sale of such property, on IPI Form 8.

Apart from the declaration of property, there are many other tax and legal formalities related to the acquisition of Immovable Property in India which NRIs and PIOs need to adhere to. Formalities of transfer of funds for purchase/sale through accounts facilities available, applicable charges and processes for registration of property documents and applicable stamp duties for all transactions, etc., are procedures that should be complied with.

NRIs and PIOs are also eligible for home loans in India and need to comply with the guidelines for repayment. Along with the official guidelines, NRIs and PIOs also need to follow general dos and don'ts while acquiring property in India.
NRIs....

V.K.Sivkumar...HOme Loans...
Udamalpet...Pollachi...Coimbatore...
mobile...9944066681...👍👍⛱⛱🌷🌷

சனி, 18 மே, 2019

கடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்!

சம்பாதிப்பதில் பாதி வாங்கிய கடன்களுக்கு அசலும் வட்டியும் கட்டவே சரியாகப் போய்விடுகிறது. பிறகு, எதிர்காலத்துக்கு எப்படிச் சேமிக்க முடியும்; எதிர்காலத் தேவைகளை எப்படிக் குறையில்லாமல் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும்?
நமது உடல்நிலை சரியில்லாதபோது, நம் உடம்பு அலாரம் அடித்துச் சொல்கிறமாதிரி, கடன்களால் நம் வாழ்க்கை சூழப்படும்போதும் சிலபல சிக்னல்களைத் தரும். அதைக் கவனித்து,  சுதாரித்துச் செயல்பட்டால், கடன் சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கலாம். அந்த சிக்னல்கள் என்னென்ன?
சிக்னல் 1: 50 சதவிகித்துக்குமேல் இ.எம்.ஐ கட்டுவது

ஒருவருடைய சம்பாத்தியத்தில் 30 சதவிகிதத்துக்கு மட்டுமே கடன்களுக்கான    இ.எம்.ஐ கட்டுவதற்கு ஒதுக்க வேண்டும் என்பது நிதித் திட்டமிடலின் முக்கியமான விதிமுறை. ஆனால், இன்று அந்த விதிமுறையை மீறித்தான் பெரும்பாலானவர்கள் செயல்படுகிறார்கள்.
இன்று எல்லாமே இ.எம்.ஐ-களில் வாங்க முடியும் என்பதால், பணத்தைச் சேமித்தோ அல்லது கையில் காசு இருக்கும்போதோ வாங்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. நுகர்வோர்களைக் கவர்ந்திழுக்க ஆன்லைன் சலுகைகள் நிறையவே விளம்பரப்படுத்தப் படுகின்றன. தேவை இருக்கிறதோ இல்லையோ, சலுகை விலையில் கிடைப்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் நம்மில் பலர் அந்தத் தூண்டிலில் சிக்கிவிடுகிறோம். 
கடனுக்கான இ.எம்.ஐ எப்போது 30 சதவிகிதத்தைத் தாண்டுகிறதோ, அதை உடனே கவனித்து கடன் வாங்குவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை கடன்களை அதிகப்படுத்தாமல், சேமிப்பின் மூலம் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வது நல்லது.

சிக்னல் 2: கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுப்பது

டெபிட் கார்டினைப் பயன்படுத்தி ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதுபோல, கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுக்கும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. ஒருவரிடம் நிதி ஒழுங்கு இருக்கும் பட்சத்தில், சில பொருள்களை கிரெடிட் கார்டுமூலம் வாங்குவதில் தவறில்லை. ஆனால், கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுப்பது மகா தவறு. இது நமது கடன் சுமையைக் கணிசமாக அதிகரிக்குமே தவிர குறைக்காது.
அதுமட்டுமல்லாமல், கிரெடிட் கார்டுமூலம் பொருள்களை வாங்கும்போது விதிக்கப்படும் வட்டியைவிட, பணம் எடுக்கும் போது பணத்திற்கு விதிக்கப்படும் வட்டி அதிகம். ஏறக்குறைய 36% வரை நீங்கள் வட்டி கட்ட வேண்டும் என்பதால், முடிந்தவரை கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுக்காமல் இருப்பதே நீங்கள் நிம்மதியாக இருப்பதற்கு ஒரே வழி.
சிக்னல் 3: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் கடன் வாங்குவது
நம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டு வாடகை, மளிகை செலவுகள், பால், பேப்பர் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பல அத்தியாவசிய தேவைகள் இருக்கும். இதை வருமானத்திலிருந்து தான் பூர்த்தி செய்துகொள்ளவேண்டுமே தவிர, ஒருபோதும் கடன் வாங்கி வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடாது.
வீட்டுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களைக்கூட கடன் வாங்கித் தான் வாங்கவேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒன்று, உங்கள் வருமானம் குறைவாக இருக்க வேண்டும் அல்லது நிதி ஒழுங்குகள் ஏதுமில்லாததால், எடுத்தற்கெல்லாம் கடன் வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த இரண்டுமே உடனே கவனித்துக் களையப்பட வேண்டியவை. தேவைகள் என்பது ஒவ்வொரு மாதமும் இருந்துகொண்டேதான் இருக்கும். நெருக்கடியைச் சமாளிக்க தொடர்ந்து கடன் வாங்குவதை நீங்கள் வழக்கமாகக் கொண்டால், உங்கள் வாழ்க்கையே சிக்கலாகிவிடும்.
சிக்னல் 4: செலவினங்கள் அதிகமாக வைத்திருப்பது
ஒருவருடைய மொத்த வருமானத்தில் 30-50 சதவிகிதத்துக்குமேல் அத்தியாவசிய செலவுகள் இருக்கக்கூடாது. ஆனால், இன்று வருமானத்துக்கு மீறி செலவு செய்துவிட்டு, மாதக் கடைசியில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் கேட்டு நிற்பவர்கள்தான் அதிகம். செலவுகள் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்குக் கடன் பிரச்னைகளும் அதிகம் இருக்கும்.
வீட்டின் அத்தியாவசிய செலவுகளில் யாராலும் கைவைக்கவே முடியாது. அதனால் ஷாப்பிங் மற்றும் இதர அநாவசியச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சுற்றுலா செல்வது, பார்த்ததையெல்லாம் வாங்குவது என்று நீங்கள் செலவு செய்பவராக இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.

சிக்னல் 5: எதிர்கால வருமானத்தைக் காரணம் காட்டி கடன் வாங்குவது!

மார்க்கெட்டில் கூவிக்கூவி காய்கறிகளை விற்பதுபோல, சில வங்கிகளில் கடன் கொடுக்கும் அணுகுமுறை முற்றிலுமாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன்களை வாடிக்கையாளர்களுக்குத் தேடிவந்து தருகின்றன வங்கிகள். எதிர்கால வருமானத்தைக் குறிப்பிட்டு நிறைய வங்கிகள் அதிக கடன் தொகையை தாராளமாகத் தந்துவருகின்றன.
கடன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கும் வாடிக்கையாளர்களும், ‘வருகிற லட்சுமியை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்’ என நினைத்து, கூடுதல் தொகையைக் கடனாகப் பெறுகிறார்கள். கடன் வாங்குவதிலும் சரி, கடன் வழங்குவதிலும் சரி இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.
எதிர்கால வருமானத்தைக் காரணம் காட்டி கடன் வாங்குவது, எக்ஸ்ட்ரா ஆபத்துகளுக்கே வழிவகுக்கும் என்பதைப் புரிந்து கொண்டால், கடன் பிரச்னையில் நாம் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம்!
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
நிதி ஆலோசகர் ..

வெள்ளி, 17 மே, 2019

பெண் பூப்பெய்தல் விழா ....
ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம். 
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்று பளிச்சென்று மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சூலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உறுப்பிருக்கிறதே.
இந்த உறுப்பின் வேலை, சினை பையிலிருந்து வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைப்பற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினைப்பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்று காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையும் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றும், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம். 
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானாள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்ப்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது. 
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள். 
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத காலத்தின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!
எனது கல்வி வளர்ச்சி ...

கலர் பென்சில் ஸ்கெட்ச் டப்பாவுடன் ஆங்கில புத்தகத்திலிருந்த பகவத் சிங் வீரபாண்டிய கட்டபொம்மன் என படம் வரைந்து திரிந்த நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் குடும்பமலர் புத்தக கவிதை ஒன்றினை ஆல்டர் பண்ணி என் தெருவில் வசிக்கும் ஒரு அக்காவிடன் காட்டினேன் அதுவே எனது முதல் ஊக்கம் அவளுக்கு நன்றி ( வரைவது அன்றோடு நின்றுவிட்டது)
அந்த ஊக்கத்தில் காதல் கவிதைகளாய் என நோட்டில் தாள்கள் கிழித்து எழுதி வந்த என்னை அறிந்த அறிவியல் டீச்சர் இந்த வயசுலயே உனக்கு காதல் கவிதை கேட்குதானு ம்ரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அனைவரின் முன்னமும் அத்தனை கவிதைகளையும் கிழித்தெரிந்த அந்த வீனா போனவளுக்கு கண்டனங்கள்
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட என் கிறுக்கல்கள் அறிந்து 12ஆம் வகுப்பு முடிவில் என்னை நட்பு கவிதை எழுத வைத்து மேடையேற்றிய கணக்குப்பதிவியல் ஆசிரியருக்கு நன்றி ( முதலும் கடைசி மேடையும் அது தான்)
கல்லூரியில் எனது எழுத்துக்களை மறந்திருந்த நான், அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தேன் BBM முடித்து ..படிப்பு முடிந்து வேலையில்லா மூன்று மாதத்தில் எதிர்பாராத ஒரு விபத்து என் முதல் வலைப்பூ
அதன் பிறகு தான் ஆர்குட்டில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதில் கவிதை எழுத துவங்கிய காலமது
நான் தூரத்திலிருந்தே வேடிக்கை பார்த்தபடியும் பொறாமையுடனும் போட்டியோடும் எழுதத்துவங்கிய என்னை அடிக்கடி ஊக்குவித்து என்னை வேறு பாதையில் கூட்டிச் சென்ற தேனு தேனப்பன் உதயகுமார் அண்ணனுக்கும் காலாசுரன் ரசிகனுக்கும் இன்றும் தூரத்திலிருந்து நான் ரசிக்கும் இளங்கோ அண்ணனுக்கும் எனது நன்றிகள்
என்னை ஆர்குட்டிலிருந்து பேஸ்புக்கில் எழுத வைத்த உதயா அண்ணனும் பின்னதாய் நடந்த ஒரு சண்டையில் காதல் காமம் தாண்டி நான் எழுதுவேன் 
சீரான எனது பாதையில் புத்தக வாசிப்பு உள்டப்பி ஊக்கம் எனக்கு நான்கு வைர கீரிடம் அளித்த வெங்கடேஷ் அண்ணாவுக்கும் தூரத்திலிருந்தே கவனித்து சரியாக ஒரு கவிதையில் என் கவன சிதறலை மெத்தன போக்கை கண்டித்து என் பார்வையில் தான் இருக்கிறாய் என்று எழுத்தால் நிருபித்த இளங்கோ அண்ணனுக்கும் எனது நன்றி
எனது கவிதைகள் அனைத்தும் முதலில் வாசித்து எஸ் எம் எஸ் ல் பதில் சொல்லி இன்றுவரை தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு நன்றி
எனது தமிழ் பிழைகளை திருத்தி அடிக்கடி சிலாகிக்கும் ஹேமா அக்காவிற்கு நன்றி
தனக்கென ஒரு பாதையில் பயணித்து எழுத்து பாடல் என வசீகரிட்த்து இன்னமும் எழுத தூண்டிய நவின் கண்ணனுக்கு நன்றி
எல்லா நிலையில் என் கவிதைகளை கொண்டாடி என்னை ஊக்குவிக்கும் ஜெயந்தி ரமணி அவர்களுக்கும் எனது நன்றி
ஒரு முறை கூட பேசவில்லையெனினும் அவர் எழுத்தின் பால் கொண்ட ஈர்ப்பில் என்னை போட்டி போட வைத்த ஆறுமுகம் முருகேசன் அண்ணனுக்கும் ஷம்மி முத்துவேல் அவர்களுக்கும் நன்றி
எட்டு மாத காலமாக என் பிழை திருத்தி அறை நண்பனாக தம்பியாக இருந்த கிட்டுவுக்கு நன்றி..கவிதை ,நூல்களை விட .தற்பொழுது உள்ள பொருளாதாரம் சார்ந்த வழிகாட்டி நூல்களை எழுதுவது சிறப்பானதாக இருக்கும் ..

 பள்ளி வாழ்க்கையில் என்னையும்  யாரையும் மதிப்பாய் நடத்தவில்லை ,வழிகாட்டவில்லை என்னையும் மதிக்கவில்லை. ,கொஞ்சம் கொஞ்சமாக ..முகநூல் ,தற்பொழுது வாட்ஸாப்ப் தகவல் தொழில்நுட்பம் மூலம் பதிவுவிடுவது மகிழ்ச்சி ...இனி வரும் காலங்களில் ..என் துறை சார்ந்த சிறு சிறு நூலக வெளியிடலாம் என்று இருக்கிறேன் ...அதற்கான நேரம் தற்பொழுது வந்துள்ளது ...




இன்றய கல்வி நிலை ....

என் அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் நிறுவன ஊழியர்களை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் இணைக்க அருகில் உள்ள பேங்கிற்கு என்னை அனுப்பினார்கள் ..எனக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கிறது .. இல்லாதவர்கள் ஐந்து பேருக்கு உதவ என்னை கூட அனுப்பி வைத்தார்கள்.
நானும் கூட சென்றேன் எங்கள் ஏரியா என்பதால்...கூட வந்தவர்கள் அனைவரும் டிகிரி படித்தவர்கள்.. ஏற்கெனவே சிறு சிறு கம்பெனிகளில் வேலை அனுபவமும் உண்டு..இருவர் பி.காம் வேறு...உடுமலையில்  ஏழெட்டு வருடங்களாக வசிப்பவர்கள் தான்..
ஏற்கனவே கம்பெனி ஏஜெண்ட் மூலம் அகவுண்ட் ஓபன் செய்தாகி விட்டது.. ஒரு நூறு ரூபாய் அகவுண்டில் செலுத்தி ஒரு ஸ்டேட்மெண்ட் எடுத்து வரவேண்டும் அவ்வளவு தான்..
பணம் செலுத்த செலான் கொடுத்தால் யாருக்குமே அதை பூர்த்தி செய்ய தெரியவில்லை...தப்பும் தவறுமாக அடித்து அடித்து எதையோ நிரப்பி தந்தார்கள் ....அதை கரெக்ட் செய்து பணம் செலுத்தியாகிவிட்டது...
ஸ்டேட்மெண்ட் எடுக்க ஒரு ஃபார்ம் கொடுத்தார்கள்..பெயர் , அகவுண்ட் நம்பர் , தேதி, கையெழுத்து அவ்வளவு தான்..அதை கூட சற்றும் நிரப்ப தெரியவில்லை..நான் ஒரு ஃபார்ம் பூர்த்தி செய்து மற்றவர்களை பார்த்து எழுத சொல்லியும், மேலும் கீழும் நிரப்பி வைத்திருந்தார்கள் ...
கையெழுத்து எங்கே போட வேண்டும் என்று குழந்தைத்தனமான கேட்டார்கள்..எனக்கு மிகுந்த ஆச்சரியம்..
பூர்த்தி செய்த படிவத்தை அலுவலக பணியாளரிடம் தந்தால் அதில் பல கரெக்ஷன் ..நானே செய்து கொடுத்து கையெழுத்து மட்டுமே வாங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து கையில் திணித்தேன்...இதில் பணியாளருக்கு தமிழ் தெரியவில்லை.. இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை.... ஏனெனில் அது பிரைவேட் பேங்க்...
அதில் இருவருக்கு கடைசி நேரத்தில் பிரிண்டர் வேலை செய்யாததால் மெயில் அனுப்பட்டுமா ? எடுத்து கொள்கிறீர்களா? என கேட்டார்..
திரு திரு என முழிக்கிறார்கள்... ஆன்லைன் பேங்கிங் தெரியாதாம்.. மெயிலிலிருந்து பென்டிரைவில் காப்பி பண்ண தெரியாதாம்....சரி எப்படியோ எடுத்து கொடுத்தாயிற்று..
டிகிரி வரை நம் கல்விமுறை என்ன தான் சொல்லி கொடுக்கிறது என்று எனக்கு புரியவில்லை... பிராக்டிகல் நாலட்ஜ் தராத கல்வி முறையின் தவறா??அல்லது இவர்கள் சற்று தெளிவில்லாமல் இருக்கிறார்களா என்று எனக்கு புரியவில்லை!!!!!
நான் இவர்களை கிண்டல் செய்யவில்லை...பரிதாப படுகிறேன்!!!
இதில் எங்கும் நான் மிகைபடுத்தி சொல்லவேயில்லை...அனைத்தும் உண்மையே!!! எனக்கே இதை நம்ம முடியவில்லை!!!!

புதன், 15 மே, 2019

வீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது?

மாறுபடும் வட்டி விகிதக் கடன் என்பது, நிலையான வட்டி விகிதக் கடனைக் காட்டிலும் உத்தேசமாக 1 முதல் 2.5% குறைவாக இருக்கும். மாறுபடும் வட்டி
விகிதத்தைத் தேர்வுசெய்வதால், வட்டி விகித சுழற்சியின் ஏற்றத்தாழ்வைப் பொறுத்து, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைக்க முடியும். அதேசமயம், இந்தத் திட்டத்தில் உள்ள பாதகமான அம்சம் என்னவென்றால், கடன் காலத்துக்கான நிதித் திட்டமிடலைச் செய்வது சற்று கடினமானதாக இருக்கும். நீங்கள் செலுத்தவேண்டிய மாதாந்தர கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது சவாலாகவே இருக்கும்.
எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என நீங்கள் எதிர்பார்த்தாலோ அல்லது வட்டி விகித சுழற்சியின் ஏற்றத்தாழ்வு எப்படியிருக்கும் என்பதை நிபுணர்களே கணிக்க முடியாத நிலையில், சந்தை நிலவரத்துக்கேற்ப வட்டி விகிதம் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினாலோ, மாறுபடும் வட்டி விகித முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
கடன் வாங்குவது நிலையான வட்டி விகிதத்திலா அல்லது மாறுபடும் வட்டி விகிதத்திலா என்பதை முடிவுசெய்வது, ஒருவருடைய தனிப்பட்ட விஷயம் மற்றும் உங்களது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது. இரண்டு விதமான வட்டி விகிதங்களிலுமே சாதக பாதகங்கள் இருக்கும்நிலையில், உங்களுடைய தேவைக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ, அதை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். 

நிலையான வட்டி விகிதம், பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நிச்சயம் உங்கள் மனதுக்கும் நிம்மதியை ஏற்படுத்தும். அதேசமயம், மாறுபடும் வட்டி விகித முறை, உங்களுக்கு எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கவும் உதவும்.
இதுதொடர்பாக இறுதி முடிவெடுக்கும்முன், நிதி நிறுவனங்களிடம் இருக்கும் பல்வேறு வகையான வட்டி விகிதத் திட்டங்களை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.  சொந்தமாகத் தொழில் செய்யும் மற்றும் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு என கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டுக் கடன் தீர்வுகளை, சுந்தரம்  BNP பரிபாஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் அளிக்கின்றன. 

உங்களால், உங்களுக்கு ஏற்ற வட்டி விகித முறையைத் தேர்வு செய்ய முடியவில்லையெனில், நிலையான வட்டி விகிதத்தி லிருந்து மாறுபடும் வட்டி விகித முறைக்கு எந்த நேரத்திலும் மாறிக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இந்த வசதியை அளிக்க, உங்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனம் அதற்கென கணிசமான கட்டணத்தை விதிக்கும். எனவே, உங்களது வட்டி விகித தேர்வு முறை, நீங்கள் வாங்கும் சொத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்கூட, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் உங்களது தேவைக்கேற்ப வட்டி விகித முறையை மாற்றிக்கொள்ளும் வசதி உங்களுக்கு உள்ளது என்பதை மறக்காதீர்கள்!
வீ .கே .சிவக்குமார் --(வீட்டுக்கடன் பிரிவு )
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 ...Whatsapp's 
siva19732001@gmail.com...






செவ்வாய், 7 மே, 2019

அக்ஷய திருதியை ஸ்பெஷல் UKP"S அதிஷ்டா -உடுமலைப்பேட்டை !


இன்றைய காலை தாராபுரம் ரோடிலிருந்து அரைகிலோமீட்டர் தூரம் காந்திநகர் III பகுதியில் ..அழகான பசுமை நிறைந்த மாசு இல்லாத இடத்தில் அழகான இடங்களை தேர்வு செய்து ..அழகான இயற்கை சூழந்த வீடுகள் கட்டுவதற்கான விழாவாக இன்றய காலை அமைந்தது ..நான் கோவையில் பணிசெய்து போது ..வாரம் ஒரு அருமையான கட்டுமான நிறுவனங்கள் நான் பணிசெய்யும் நிறுவனம் மூலம் அழைப்பிதழ்கள் வரும் ..தவறாமல் எனது வாடிகையாளர்களுக்கு  பார்த்து ..பிடித்த இடங்களை தேர்வு செய்வதற்கு ஒரு வழிகாட்டும் பணியாளராக உதவியது மிக பக்க பலமாக இருந்தது ...எனது வாடிக்கையாளர்களும் பல்வேறு பணிகள் ,வியாபார தொழில்நிறுவனங்களில் பணிபுரிந்தததால் ...அவர்களுக்கான நேரத்தையும் ..மிச்சப்படுத்தி இடங்களை தேர்வு செய்துகொடுப்பதற்கு உதவியாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ..நான் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் நிதி மேலாண்மை மூலம் நிதி வழங்கி அவர்களுக்கு தக்க சமயத்தில் அழகான வீடுகளை ,அதிஷ்டமான வீடுகளை குடிபெயர்ந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி ...கோவை சுற்றி இருக்கும் 100 கிலோமீட்டர் தூரம் உள்ள இடங்களில் வீடுகள் அமைவது ..2000 வருடங்களில் சுலபமாக இருந்தது ...இன்றும் தூரம்  மட்டும் அதிகமாகியுள்ளது ...தற்பொழுது உடுமலைப்பேட்டை சுற்றி இருக்கும் இடங்கள் நகரை சுற்றி குறைந்த அளவு சுற்றளவுள்ள இடங்களில் வீடுகள் அழகாக அமைகிறது ...அதுவும் இயற்கை சூழந்த இடங்கள் மன நிறைவான இடங்கள் அமைவது வரம் ,பள்ளிகள் ,நகர பேருந்து நிலையம் ,புகைவண்டி நிலையம் ,அங்காடிகள் வெகு அருகில் அமைந்து இருக்கிறது ..இந்த வீட்டுமனைகள் ....இன்று நடைபெற்ற UKP"S அதிஷ்டா -உடுமலைப்பேட்டை ! விழா அதுவும் இன்றைய அக்ஷய திருதி நாளன்று நடைபெற்றது மிக்க மகிழ்ச்சி ..உடுமலையின் வளர்ச்சி பாடுபட்ட மேன் மக்கள் கலந்த கொண்ட விழாவில்   நான் கலந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681(வீட்டு கடன் பிரிவு )
சுந்தரம் பைனான்ஸ் (டிவிஎஸ் குழுமம் )-உடுமலைப்பேட்டை ..