ஞாயிறு, 31 மார்ச், 2019

மாட்டுப்பட்டி அணை ....மூணார் ...மகிழ்ச்சி ..கார் பயணம் ..

ஞாயிறு என்று சொன்னாலே ...ஓய்வு எடுக்க தான் முதலில் ஆர்வம் வரும் ..நம்மை பொறுத்தவரை ...ஞாயிறு என்றவுடன் வாரத்தின் முதல் நாள் என்று கணக்கில் கொண்டு ஏதாவதொரு புதிய பயணங்களில் ...ஏதாவது புதிய இடத்திற்கு சென்று ..நாலு விசயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் ..மலைப்பயணம் வேறு ...கார் பயணம் என்றால் மிக அலாதியானது ..அதுவும் ..கார்ப்பயணம் ..நாமே கார் ஓட்டி செல்வது என்பது தனிசுகம் ,உற்சாகமானது ...தரை மார்க்கமாக கார்ப்பயணம் ..அதிகம் ரிஸ்க் இல்லாதது ..மலைசார்ந்த பயணங்கள் ..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை ..குண்டுமல்லி எஸ்டேட் போகும் பொழுது பயணம் அழகாக அமைந்தது ..பக்கத்தில் செல்ல செல்ல ..கொஞ்சம் ஜெர்க் ஆனது நமக்கு ..நம் மாப்பிளை மனோகர் ..தன்பொறுப்பில் கார் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார் .....நம் பொறியியல் படித்தமனோகர் ,கார்திக்குமார்,   மாப்பிள்ளைகளுடன் ,தம்பி பொன் தமிழுடன் ..இந்த அடியேனுக்கும் நீண்ட தூரம் பயணம் ..அவர்களின் தொழில் சார்ந்து பயணம் அதே சமயம் ..அவர்களின் வேலை முடிந்தவுடன் ஒரு சிறிய பயணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது ..அவர்களின் தொழில்நுற்ப வேலை என்பதால் ..கிடைக்கும் நேரம் இரண்டுமணிநேரம் எனக்கும் அவர்கள் சென்ற குண்டுமல்லி எஸ்டேட்டின் கிராமத்தில் மலைஅரசர்கள் வாழும் ,தேயிலை தொழிலாளர்கள் இயற்கை சார்ந்து வாழும் மக்களின் வாழ்வியலை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது ...கிராமத்து பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது ..மூன்று தலைமுறைகளாக வாழந்து வருவதாக வும் ,தங்களின் மகன் ..பேரன் பேத்திகள் எல்லோரும் படித்து  வெளியூர் சென்றுவிட்டதாக பேச்சின் ஊடே அறியமுடிந்தது ...ஊரின் நடு பகுதியில் அய்யனார் தெய்வம் காவல் காக்கும் கடவுளாக காவலராக உள்ளார் ..யானை கூட்டங்கள் ..அழகாகக வந்துசெல்லும் இடமாக உள்ளது என்றார் ..யாரையும் தொந்தரவு செய்யாது ...என்றார் ..தொழில்நுற்ப பணி முடிந்தவுடன் ..மூணாறை நோக்கி கார் பயணம் தொடங்கியது ..நம் மாப்பிளை கார்திக்குமார் ,பொன் தமிழ் .இரண்டு பெரும் காரின் முழுப்பொறுப்பையும் தன்வசம் ஆக்கிக்கொண்டார்கள் ..மாப்பிள்ளைகள் ,தம்பியும் ..பன்முக தன்மைகொண்ட தொழிநுற்பம் அறிந்த கலைஞர்களாக இருப்பது  இருப்பது எனக்கு பெருமையே ....இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி வருகிறார்கள் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . 
இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து உடுமலைப்பேட்டை வழியாக சின்னார் ,மறையூர்,தலையார் ,மூணார்  செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் மறையூர் என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.

மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள் அப்படின்னு பார்த்தல்
1) மேட்டுபட்டி டேம் ( மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது இங்கே இந்தியா – சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது, பார்வையாளர்கள் நேரம் 0900 – 1100 hrs and 1400 – 1530 hrs. தலைக்கு 5 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசுலீக்கிறார்கள், மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்)
2) போத்தமேடு.
போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப
ஏற்றது.
3) தேவி குளம் ( 7 கிமி தொலைவு முணாரிலிருத்து )
இங்கிருக்கும் சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி trout fishing. கிற்க்கு மிகவும் சிறந்தது.
4) பள்ளிவாசல் ( 8 கிமி தொலைவு முணாரிலிருத்து )
இங்குதான் கேரளாவின் முக்கியமான Hydro Electric Project
5) அட்டுக்கல் ( 9 கிமி தொலைவு முணாரிலிருத்து )
அட்டுக்கல் முணார் மட்டும் பள்ளிவாசல் இடையில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் அருவிகளும் மலை பிரதேசங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை .இன்னும் சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா ( 15 கிமி தொலைவு முணாரிலிருத்து செயல்படுகிறது...
இன்றைய ஞாயிறு அருமையான தினமாக நல்ல கலந்துரையாடலுடன் பயணங்கள் அமைந்தது மிக்க மகிழ்ச்சி ..நன்றி :மனோகர்(SM Engineers -JCB )  கார்த்திக் குமார் ,பொன் தமிழ் பொறியாளர்களுக்கு ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...





வெள்ளி, 29 மார்ச், 2019

அறிவியல், கனவுகள், சமகாலம்,

இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.

அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என அக்கணத்தில் நினைத்தேன்.

இப்பொழுது இந்தக் கட்டுரையை சமகாலத்திற்காக எழுத ஆரம்பித்தபோது அது பற்றி எழுதவும் எண்ணினேன். ஆனால் எத்தனை முயன்றும் அது என்ன கனவு என்பது ஞாபகத்தில் வரவேயில்லை.

கனவுகள் அற்புதமானவை. அதில்தான் எத்தனை வகைகள்

விழித்திருக்கும் போது கனவுகனில் மிதப்போம். பகற்கனவு என்று அதனை எள்ளலும் செய்வோம். ஆழ் தூக்கத்தில் கனவுகள் காண்போம். அவற்றைக் கண்டது பற்றிய நினைவு கூட நித்திரைவிட்டு எழும்பியதும் இருக்காது. ஆனால் பல கனவுகள் எங்கள் துக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும்.

உண்மையில் நாங்கள் ஆழ் தூக்கத்தில் மூழ்கியிருக்கும்போது நினைவுடன் இருப்பதில்லை. நடப்பது எதுவும் தெரியாது. மயக்கத்திற்கு அண்மிய நிலை அது. ஆனால் அதிலிருந்து மீண்டு நினைவுலகிற்கு வந்ததும் வாழ்வின் நாளாந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை ஒன்று இருக்கிறது. நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போதுதான் கனவு காண்பதாக உணர்கிறோம். அதுதான் எனக்கும் நடந்தது.

உண்மையில் இதுதான் எமது நினைவுலகின் மிகவும் மர்மமானதும் வியப்பிற்குரியதும், தெளிவற்றதுமான தருணமாக இருக்கிறது.

உளவியலாளர்களுக்கு இத்தகைய நேரம் ஆய்விற்குரிய முக்கிய கணமாக இருக்கிறது. எமது வாழ்வின் சாயல் அதில் படுவது எவ்வாறு என ஆராய விரும்புகிறார்கள். ஆனால் நினைவிருந்து மறைந்துவிட்ட அவற்றை கனவு காண்டவர்களில் கேட்டு அறிவதும் முடியாதிருக்கிறது. மூளையின் அந்நேர செயற்பாடுகளை கருவிகளின் மூலம் அறிவதன் மூலம் விடை காண முயல்வது மட்டுமே இற்றைவரை சாத்தியமாக இருந்தது.

ஆனால் கனவுலகில் ஆழ்ந்திருக்கும் அவ்வேளையிலேயே அவருடன் தொடர்பு கொள்ளும் ஒரு முற்றிலும் புதுமையான செயன்முறை கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கிறது.

ஆனால் கனவில் இருப்பருடன் தொடர்ப்பு கொள்ளவது எவ்வாறு? தட்டி எழுப்பிக் கேள்விகள் கேட்டால் அவரது கனவு கலைந்துவிடும் அல்லவா?

இந்த நிலையில் தெளிவான கனவுகள் (lucid dream)  ஆய்வுகளுக்கு உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது என்ன தெளிவான கனவு என்கிறீர்களா?


இத்தகைய கனவின் போது ஒருவர் கனவு காண்கிறார். தான் கனவு காண்பதாகவும் உணர்கிறார். அது மாத்திரமல்ல தாங்கள் ஆழ்ந்திருக்கும் அந்த உலகில் தாம் அடுத்து செய்ய வேண்டியது எது என்பதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் தமது வாழ்வில் ஒரிரு தடவைகளாவது அத்தகைய தெளிவான கனவுகளைக் கண்டிருப்பார்கள். ஆனால் அத்தகைய அனுபவங்கள் பரவலானவை அல்ல என்பதையும் சொல்ல வேண்டும்.

இருந்தபோதும் ஒரு சிலரால் அத்தகைய தெளிவான கனவுகளை தாமாகவே வரவழைக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். அத்தகைய ஆற்றல் உள்ள நபர்களே கனவுகளின் உள்ளே புகுந்து விளையாடும் ஆய்வுகளுக்கு கை கொடுக்கிறார்கள்.

ஒருவரது நடத்தை அல்லது அனுபவம் பற்றி ஆராய முற்படும் அறிவாற்றல் சார்பான விஞ்ஞானிகள் ஒருவர் ஏற்கனவே விபரித்த அனுபவங்களை சொல்லளவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செயற்பாட்டு பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி விளங்க முற்படுபர். குறிப்பிட்ட விடயத்தில் அவர்களது செயற்பாடு எவ்வாறானது, எதை எதை நினைவில் கொள்கிறார்கள், எவ்வாறு காரணப்படுத்துகிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கனவுகள் பற்றிய ஆய்வுகளில் இது மிகவும் கடினமானதாகும்.

ஏனெனில் கண் விழித்து நினைவு திரும்பும் வரை அவர்களால் பெரிதளவில் எதையும் சொல்ல முடியாது. கனவுலகில் அவர்கள் செயற்படும் விதத்தை அவர்களது பங்களிப்புடன் பரிசோதனையாகச் செய்து பார்க்கவும் முடியாது.; பக்கவாத்தின் போது அங்கங்கள் செயலற்றுப் போவது போல தூக்கத்தில் உறுப்புகள் தற்காலிகமாக இயங்க முடியாதிருப்பதே (sleep-induced paralysis) இதற்குக் காரணமாகும்.

அங்கங்களை இயங்க வைப்பதற்கான தகவல்கள் மூளையிலிருந்து வரவேண்டும். மூளையின் கலங்களிலிருந்து முண்நாண் வழியாக தசைத் தொகுதிகளுக்கு தவகல்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் தூக்கத்தின் போது அவ்வாறு அனுப்பப்படும் சமிக்கைகள் மூளையின் குறிப்பிட்ட பகுதி நரம்புக் கலங்களால் தடுக்கப்படுகின்றன. இதனால்தான் கனவுகளின் போது நாம் எமது அங்கங்களை அசைத்து நாம் செயப்பட முடியாது போகிறது

இவ்வாறு தடுக்கப்படுவது தூக்கத்தின் துரித கண் இயக்க நிலையின் போது ஆகும்.

இந்த இடத்தில் தூக்கம் பற்றி சற்று அறிந்து கொள்வது நல்லது. தூக்கதில் பல நிலைகள் உண்டு. அதில் துரித கண் இயக்க நிலை(Rapid Eye Movement or REM)  என்பதும் ஒன்று. இந்ந நிலையில் முளையின் செயற்பாடானது உச்ச நிலையில் இருக்கும். அதாவது நினைவு நிலையின்போது மூளையின் செயற்பாடு எவ்வாறு இருக்குமோ அதை ஒத்ததாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்நேரம் தூக்கம் காரணமாக அவர் செயற்படாது கிடப்பார். ஆனால் அவரது கண்கள் மட்டும் தொடர்ச்சியாக அப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஆனால் மேலே கூறிப்பட்டது போல அங்கங்கள் இயக்கமின்றிக் கிடக்கும். அந்த நேரத்தில் தோன்றும் தெளிவான கனவானது ஓடுவது துள்ளுவது அடிப்பது போன்ற கடுமையான உடல் அசைவுகளுடன் கூடியதாக இருந்தாலும் நிசத்தில் உடலால் அசைய முடியாது. ஆக மிஞ்சியது சிறு நடுக்கம் போல இருக்கலாம். இது ஏன் என்பது பற்றிய காரணம் பின்னர் தெளிவாகும்.

அது அவ்வாறிருக்க, இப்பொழுது கனவின் காரிருள் குகைகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சும் ஆய்வுகள் பற்றி சற்று பாரப்போம்.

முன்னரே பரஸ்பரம் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கண்அசைவுககளை சமிக்கைகளாக தெரிவிப்பதன் மூலம் தாங்கள் தெளிவான கனவு காணத் தொடங்குவதை கனவு காண்பவர்கள் ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க முடியும். அதாவது தனது கண்களை இயல்பான ஒரு குறிப்பிட்ட விதத்தில் கனவு காண்பவர் அசைப்பார். அதனைக் கொண்டு அவர் கனவுலக்கில் இறங்குவதை ஆய்வாளர் புரிந்துகொள்வார். மூளையின் செயற்பாடுகளை கனவின் போது பதிவு செய்யும் கருவிகளை உடனடியாகவே ஆய்வாளர் இயக்குவார்

கண் குழியைச் சுற்றி வைக்கப்பட்ட மின்வாய்கள்(electrodes)  மூலம் அவற்றை பதிவு செய்யவும் உறுதி செய்ய அக் கருவிகளால் முடியும். இந்தச் செயன் முறையானது Stephen LaBerge  என்ற தூக்கம் பற்றிய ஆய்வுகளைச் செய்பவரால் முதன் முதலில் கண்டறிந்து பயன்படுத்தி சரியானது என உறுதிப்படு;த்தப்படதாகும்.

கனவுலகின் இயல்புகளையும் அவை எவ்வாறு மூளையின் செயற்பாடாக பிரதிபலிக்கிறது என்பதையும் எளிமையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்க முடிந்தது.

ஆனால், தெளிவான கனவுகள் காண்பவர்களாக சொல்லப்பட்டு இத்தகைய ஆய்வுகளில் உட்படுத்தப்பட்டவர்கள்; உண்மையில் தூங்கவில்லை கனவு காணவில்லை, வெறுமனே தளர்ந்திருந்தார்கள் என அல்லது அவர்கள் கனவு காண்பதாக ஏமாற்றினார்கள் என ஆரம்ப கட்டங்களில், வேறு அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.  மின்வாய்கள் மூலம் மூளையின் செயற்பாட்டை துல்லியமாகக் கண்டறிய முடிந்ததில் இதன் உண்மைத் தன்மை நிரூபணமானது.
அது எத்தகைய உண்மை.
தெளிவான கனவு காணும் தருணத்தின் மூளையின் செயற்பாடானது துரித கண் இயக்க நிலையின் அம்சங்களையே கொண்டிருந்தது என்பது நரம்பியல் உளவியல் நிபுணர்களான Ursula Voss,  Martin Dresler   செய்த ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது.

அது மாத்திரமல்ல தெளிவான கனவுகளின் போதான மூளையின் செயற்பாடானது தனித்துவமானது. அது சாதாரண தூக்கம், ஏனைய கனவுகள், மற்றும் நனவு நிலை ஆகியவற்றின் போதான மூளையின் செயற்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை கண்டறிய முடிந்தது. தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு முடிவுகளை விளங்கிக் கொள்ளும் wishful thinking  அல்ல இது.

கனவுகள் பற்றிய வேறு சில ஆய்வுகள் சுவாரஸ்சமானவை. முன் ஏற்பாடு செய்யப்பட்ட சில செயல்களை துரித கனவுகள் காணும் வேளையில் செய்வித்து, அதே செயற்பாட்டை விழிப்பு நிலையில் செய்ய வைத்து ஒப்பீடு செய்து பார்த்தனர். உதாரணமாக ஒன்று இரண்டு மூன்று என எண்களை எண்ணும் செயற்பாடானது கனவு நிலையிலும் நினைவு நிலையிலும் ஒரே வேகத்தில் நடைபெறுவதை அறிய முடிந்தது. எண்ணுவது என்பது மனத்தின் செயற்பாடு மட்டுமே அதில் உடலின் செயற்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படி ஏறுவது, நடப்பது, எளிமையான உடற் பயிற்சிகளைச் செய்வது போன்ற உடலின் செயற்பாடுகள் கனவு நிலையின் போது நீண்ட நேரம் எடுத்தன.

இதற்குக் காரணம் என்ன? உணர்திறன் சார்ந்த பின்னூட்டு (sensory feedback) வழமைபோல் இல்லாததே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

உணர்திறன்  சார்ந்த பின்னூட்டு என்றால் என்ன’.

உதாரணம் சொல்லலாம். நாம் நடக்கும்போது அது பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் நாம் கால் வைக்கும் தரையானது வழமையானதா வழுவழுப்பானதா ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததா, பாதங்களைக் குத்தக் கூடிய கல் முள் போன்றவை உள்ளதா போன்ற பல விடயங்களை எமது பாதங்களின் சருமம் பகுத்துணர்ந்து அதை மூளைக்கு செய்தியாக அனுப்புகிறது. நடக்கும் தரை ஆபத்தனது அல்ல என்ற செய்தி கிடைத்ததும் கால்கள் வேகமாக நடக்கும்.

நினைவு நிலையில் உணர்திறன் சீர்மையுடன் செயற்படுகிறது. ஆனால் கனவு நிலையில் இத்தகைய உணர்திறன் வழமைபோல இல்லாததாலேயே கனவு நிலையில் உடற் செயற்பாடுகள் வேகங் குறைகின்றன. இதனால்தான் தெளிவான கனவு நிலையின் போதும் மனிதர்களால் நினைவு நிலை போல இயங்;க முடிவதில்லை.

அது சரி கனவுகள் பற்றிய ஆய்வுகளால் பயன் என்ன? நினைவுலகின் ஏனைய தளங்களில் சஞ்சரிப்பதற்கு கனவுகள் பற்றிய ஆய்வின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதில் New Age movement  போன்ற இயக்கத்தினர் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆன்மீக உலகில் நவீன விஞ்ஞான அறிவின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே.

தெளிவான கனவுலகில் நீந்துவதை ஊக்குவிபப்பதற்கு மருந்துகளை உபயோகிக்கும் ஆபத்தான செயலில் இறங்குபவர்களும் இருக்கிறார்கள். பார்க்கின்சன் நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் பகற் கனவுகளில் ஆழ்த்தும் பக்கவிளைவு கொண்டதால் அதனை பயன்படுத்த முனைகிறார்கள்.

தூக்கத்தில் உளறுபவர்கள் விடயத்தில் என்ன நடக்கிறது?

அதுவும் பெரும்பாலும் கனவுலகின் செயற்பாடுதான். மேற் கூறிய தெளிவான கனவுகளின் போது வரலாம். ஆனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நித்திரைக் குறைபாடு போன்ற பிரச்சனைகளிலும்; ஏற்படலாம். கடுமையான காய்ச்சல் மதுப் பாவனையின் பின்னரும் தூக்கத்தில் சிலர் உளறுவார்கள்.

காலைக் கனவு பலிக்கும் என்று நம்புவோர் இன்னமும் பலர் எம்மிடையே இருக்கிறார்கள்.

காலைக் கனவுகள் முற்கூறிய தெளிவான தூக்கத்தில் தோன்றுவதாலாயே நினைவில் நிற்கிறது. ஆனால் அது பலிக்கும் என நம்புவது அர்த்தமற்ற நம்பிக்கையே.
என்ன சொந்தங்களே ..தூக்கம் வருகிறதா ... கனவு காணுங்கள் ...

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்த வாகனங்களை வாங்காதீர்கள்… 



இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனங்களின் பிரேக்கிங் திறனை மேம்படுத்தும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS- Combi Braking System) இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 125 சிசிக்கும் அதிகமாக இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS- Anti-lock Braking System) இடம்பெறுவது கட்டாயம்.

மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் ஆகிய இரண்டு பிரேக்கிங் சிஸ்டம்களும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான முக்கிய பாதுகாப்பு வசதியாகும். இதன் காரணமாகதான் மத்திய அரசு அவற்றை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட டூவீலர்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டும் என பொது மக்களுக்கு ஆர்டிஓ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வாங்கப்படும் இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ், ஏபிஎஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இது தொடர்பான சோதனைகளை நடத்தவும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து புனேவை சேர்ந்த ஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ”புதிய மாடல் இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கும். மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் மாடல்களில் அவற்றை வழங்கி வருகின்றன.

ஆனால் சிபிஎஸ், ஏபிஎஸ் இல்லாத பழைய மாடல் இரு சக்கர வாகனங்களை டீலர்கள் விற்பனை செய்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, டீலர்களிடம் உள்ள பழைய மாடல்களிலும் சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதை இரு சக்கர வாகன நிறுவனங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். விற்பனையாகாமல் டீலர்களிடம் உள்ள பழைய மாடல் இரு சக்கர வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டக்கூடும்.

ஆனால் பழைய மாடல்களிலும் சிபிஎஸ், ஏபிஎஸ் இருப்பதை டீலர்களும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இது தொடர்பான சோதனைகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்” என்றனர். புனே ஆர்டிஓ அதிகாரிகள் சோதனை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளும் இதே பாணியில் சோதனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நீங்கள் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட டூவீலர்களை வாங்கினால், அதில் விதிமுறைப்படி சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாகன பதிவின்போது உங்கள் வாகனத்தின் மீது ஆர்டிஓ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் இதன்மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டங்கள் உதவி செய்யும். இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இவற்றை வழங்குவதால், டூவீலர்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஆனால் பணத்தை காட்டிலும் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது கார்களிலும் இத்தகைய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், டிரைவர் சைடு ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிரைவர் மற்றும் கோ-டிரைவருக்கு சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீட் வார்னிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாகிறது.

ஒரு தலைவன் உருவாக அவனது கிரகங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும்....! 

சந்து பொந்து விடாமல் கட்சி கொடிகள் கட்சி தலைவர்கள் ஈசல் போல் குவிந்து கிடக்கிறார்கள் அதே ஈசல் போல் முளைத்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள் அரசியல் பொது வாழ்வு என தங்களுடைய ஆயுளை தொலைத்த தலைவர்கள் பலர் உண்டு. நமது உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அது போல்ல தான் சிறு கூட்டம் என்றாலும் சரி பெரும் கூட்டம் என்றாலும் சரி தலைவன் என்பவன் முக்கிய முதன்மை நபராக இருக்கிறார்
ஜாதிக்கு ஒரு தலைவன் மதத்திற்கு ஒரு தலைவன் இனத்திற்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் ஊர்க்கு பஞ்சாயத்துக்கு ஒரு தலைவன் தொழிற்சங்கத்துக்கு ஒரு தலைவன் கமிட்டிக்கு ஒரு தலைவன் ஏரியவுக்கு ஒரு தலைவன் காலனிக்கு என தலைவன் படைக்கு ஒரு தலைவன் இப்படி திரும்பிய இடமெல்லாம் தலைவர்கள் அலும்பு தாங்க முடியாதபடி இருந்தாலும் இப்படி ஏகத்துக்கும் தலைவர்கள் உருவாக ஜோதிடத்தில் என்ன கூறுகிறது என்று பார்ப்போமா ....
தலைவன் உருவாகும் கிரகங்கள்
சூரியன்: அரசு அதிகார வர்க்க IAS IPS நீதிபதி ராணுவ அதிகாரி போன்ற துறை சார்ந்த தலைவனைசூரியன் உருவாக்கிறது.
சந்திரன்: பொதுமக்கள் திரட்டி மக்களால் தேர்ந்து எடுக்கும் தலைவனுக்கு சந்திரனே காரணம்
செவ்வாய்: சிறு குறு பெரு தொழிற்சங்கம் தலைவன் போலீஸ் ராணுவ தளபதி போன்ற துறைகளில் தலைவனை உருவாக்க செவ்வாய் காரணமாக உள்ளார்.
புதன் : சிறு குறு பெரு வியாபார சங்கத் தலைவன். மார்கெட் கமிஷன் ஏஜெண்ட் சங்கத் தலைவனை வருவாக்கி தருகிறது புதன்
குரு: பிராமண சங்கம் வங்கி, பைனான்சியர் மடம் சாமியார் மடம் கோவில் அறங்காவலர் கல்வி காலேஜ் டிரஸ்ட் போன்ற இனங்களில் தலைவனை உருவாக்கி தருகிறது குரு
சுக்ரன் : பெண்கள் நடத்தும் அனைத்து சங்கம் . சினிமா கலை இலக்கிய துறை சார்ந்த தலைவனை உருவாக்க சுக்ரனே காரணமாக உள்ளார்.
சனி.. : ஜாதி சங்க தலைவன், ஜாதி கட்சி தலைவன் வாகன போக்குவரத்து துறை ரயில்வே சங்க தலைவனை உருவாக்க சனியே காரணமாக உள்ளார்.
ராகு : திருடர்கள், கொள்ளையர்கள் தாதா தீவிரவாதி கூட்டத்திற்கு தலைவனை உருவாக்க ராகுவே காரணமாக உள்ளார்.
கேது : ஆகோரி ஆன்மீக கூட்டத்தின் தலைவன் தெய்வீக மற்றும் மாய மந்திர வித்தைகளின் கூட்டத் தலைவனை உருவாக்கி தருகிறது கேது
மேற்கண்ட கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் தொடர்பு இருந்தால் அந்த துறைகளில் அவர் தலைவன் என்று பெயர் எடுப்பார்.
தலைவனுக்குரிய தகுதியை தரும் கிரகங்கள்
சூரியன் : ஆளுமை திறன் . கட்டுப் கோப்பான வழி நடத்தும் ஆற்றல்
சந்திரன்: பொதுமக்கள் வசியம் மனத்திடம்
செவ்வாய் : வீரியம் மிக்க ஆற்றல் ரத்த பாய்ச்சல் தலைவன் பேச்சு ரத்தத்தில் கலப்பது
குரு : மறதி இல்லாத ஞானம். அறிவுத்திறன் . ராஜ விசுவாசம் ராஜ ரகசியங்களை காப்பது.
சனி.: ஆண்டான் அடிமை தலைவனுக்காக உயிரை கொடுப்பதும் தற்கொலை செய்வதும்.
இந்த 5 கிரகங்கள் உங்களது ஜாதகத்தில் லக்னம் 5, 7, 9.11. ஆகிய பாவங்களில் ஆட்சி உச்சம் நட்பு நிலைகளில் நின்று இருந்தால் அவர் தான் மாஸ் தலைவன் என்கிற பெருமைக்குரியவர்
ஒருவரது ஜாதகத்தில் குறைந்த பட்சம் நான்கு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் அவர் தான் உலகம் போற்றும் உத்தம தலைவன்.
கம்பளத்தான் ...வாக்கு ....

விளக்கெண்ணெயை......வெயில் காலம் ...
அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தபொழுது ...ஏங்க இன்னைக்கு வரும்பொழுது விளக்கெண்ணெய் வாங்கிட்டு வாங்க என்றார்கள் ...வீட்டுலதான் சாமிக்கு விளக்கே வெக்கறதில்லை அப்பறம் எதுக்கு என்றேன் நான் ...லக லக ...என்ற பார்வைதான் ..ஓகே ஓகே ..வாங்கிட்டு வரேன் என்றேன் ..எதுக்கு விளக்கெண்ணெய் ..ஆயிரம் எண்ணஓட்டங்கள் மனதில் ..
மாலை வந்தவுடன் இந்தம்மா நீ கேட்ட விளக்கெண்ணெய் ...கொடுத்துவிட்டு ..சிறு புன்னகையுடன் ..எதுக்கும்மா ..என்றேன்  ..சொன்னால் தெரிந்துகொள்வேன் ...
வெயில் காலமா ...கண் எரிச்சல் ..இல்லாமல் இருப்பதற்கு ..என்று விளக்கு விளக்கம் தந்தார்கள் ..வீட்டு HOME மினிஸ்டர் ..புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால் பெண்களின் கண்கள் பேசும்போதே தானாகவே புருவங்களும் பேசும். அது அழகிலும் அழகாக இருக்கும். ஆனால் அதே புருவம் முகத்திற்கு தேவையான அளவு அடர்த்தி இல்லாமல் மிகவும் குறைவாக இருக்கும் அது அவர்களின் அழகை சற்றே குறைத்திருக்கும். அதுபோன்ற அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும். என்றார்கள் ..நீங்களும் டெய்லி வெயிலில் சுற்றி கொண்டிருக்கிறீர்கள் ..நீங்கள் உங்கள் கண்களுக்கும் தேய்த்துக்கொள்ளுங்கள் ..கண்களுக்கு பாதுகாப்பு ...சிறு டிப்ஸ் நமக்கு ...அட டா ..இந்த விளக்கெண்ணெய் இத்தனை நாளா தெரியாம போயிருச்சே ...நமட்டு சிறப்புடன் நகரவேண்டியதாக போய்விட்டது ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681....

தம்பி ...சொந்தக்கதை தான் ...இன்னும் நிறைய டிப்ஸ் ...இருக்கு ..மாதம் பியூட்டி பார்லர்க்கே ...தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டும் தம்பி ...மளிகை பொருள் இருக்கு இல்லையோ ..இதற்கு தனிச்செலவு தான் ..இல்லையென்றால் ..லக லக தான் ....

வியாழன், 28 மார்ச், 2019

மாமங்கலையின் மலை....நாயக்கர் குலம்.
ஜெயமோகன் -எழுத்தாளர்
ஷிமோகா ரவி கோவையைச் சேர்ந்த நண்பர் அவர் குடும்பத்திற்குச் சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று ஷிமோகாவில் அமைந்துள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பு அது அரசியல் நிர்வாகக் காரணங்களால் மூடப்பட்டுவிட்டது. நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவ்வழக்கு முடிந்து இப்போது அந்த ஆலையும் அதைச் சார்ந்த நிலங்களும் விற்பனைக்கு உள்ளன. வழக்கை நடத்தி இவ்விற்பனையை முடிக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக ரவி பெங்களூரிலும் ஷிமோகாவிலும் தங்கியிருக்கிறார். ஆகவே நண்பர் வட்டாரத்தில் அவர் ’ஷிமோகா ரவி’ என்றே அழைக்கப்படுகிறார்.
எங்கள் சமண பயணத்தின் போதுதான் ரவி அறிமுகமானார். நாங்கள் அன்று ஷிமோகாவை அடைந்த போது எங்களை சந்தித்து அனைவருக்கும் கம்பளிப் போர்வைகளும் சட்டைகளும் பலநாட்களுக்குத் தேவையான உணவும் அளித்தார் அதன் பின் இன்று வரை விஷ்ணுபுர அமைப்பின் உள்வட்ட நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். ஆ.மாதவனுக்கு விருதளித்த விழாவின்போது நண்பர் கே.பி.வினோதை ரயில்நிலையம் சென்று காரில் அழைத்துவந்தார் ரவி. அறைக்கு பெட்டியையும் கொண்டுசென்று வைத்தார். வினோத் அளித்த ஐம்பது ரூபாய் டிப்ஸையும் ‘சரீங்’ என்று வாங்கிக்கொண்டார்.

ஷிமோகாவுக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது இரவு பதினோரு மணி தாண்டிவிட்டிருந்தது. அவருக்குத் தெரிந்த உணவகம் ஒன்றில் சாப்பிட்டோம். பன்னிரண்டு மணிக்குத்தான் சர்க்கரை ஆலையின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். சென்றதுமே எனக்குத் தூக்கம் சுழற்றிக் கொண்டு வந்தது. மின்னஞ்சல்களைப்பார்த்துவிட்டு உடனே படுத்துவிட்டேன். அதன் பிறகு தான் நண்பர்களின் பேச்சுக் கச்சேரி ஆரம்பித்து இரவு இரண்டு மணிவரைக்கும் கூட தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜமாணிக்கம் அவரது தொழிலில் சந்தித்த மயிர்க்கூச்செரியும் பேய்க்கதைகளை சொன்னதாக கேள்விப்பட்டேன்.
பயணத்தில் பேய்க்கதைகள் மிக நல்ல விளைவைஉருவாக்கும். ஏனெனில் புதிய இடத்தில் சரியாக தூக்கம் வராது. புதிய அயல் ஓசைகள் கனவுகளாக வந்து கொண்டே இருக்கும் அடிமனதில் பேய்க்கதைகளும் இருந்தால் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமான கனவுகளை அடைய முடியும். மறுநாள் செல்வேந்திரனின் கண்கள் டாஸ்மாக் வாடிக்கையாளர் போல தெரிந்தன.’’தூங்கவே இல்லை ஜெ, ஒரே பேய்க்கனவு’’ என்று பீதியுடன் சொன்னார். ’’எஞ்சிய பேய்க்கனவை காண்பதற்கு உகந்த நிலத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்று நான் சொன்னேன்.

காலையில் எழுந்து ஒரு வழியாகக் கிளம்ப ஏழரை மணி ஆகிவிட்டது. செல்லும் வழியிலேயே ஒரு உணவகத்தில் கர்நாடக பாணியிலான சிற்றுண்டி அருந்தினோம். ’பன்சு’ என்று இப்பகுதியில் சொல்லப்படும் உள்ளூர்ரொட்டி எனக்கு மிகப்பிடித்தமானது அரைத்தித்திப்புடன் இட்லியா, பழைய ரொட்டியா இல்லை சற்று நமத்துப் போன அதிரசமா என்றெல்லாம் சந்தேகம் வரும்படி இருக்கும். வழி நெடுகிலும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சென்றோம்.
ஷிமோகா – கொல்லூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது நகரா என்னும் ஊர். இங்குள்ள கோட்டை சாலையிலேயே எங்களை எதிர்கொண்டது. வரலாற்றில் இது பிடனூர் கோட்டை என்று அறியப்படுகிறது. கேளடி வம்சத்தின் தலைநகராக பிடனூர் இருந்திருக்கிறது. பிற்கால நாயக்கர் வரலாற்றில் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் பல்வேறு சிற்றரசர்களான நாயக்கர்குலங்கள் இருந்தன. 1565 ல் விஜயநகரம் அழிக்கப்பட்டுவிட்டபிறகு இந்த ஒவ்வொரு நாயக்கர் குலமும் தனியரசுகளாக மீண்டும் நூறாண்டுகள் நீடித்தன. தமிழகத்தில் செஞ்சி, மதுரை, தஞ்சை என மூன்று நாயக்கர் ஆட்சிகள் அப்போதிருந்தன. பிற இரண்டும் அழிந்து தான் மதுரை நாயக்கர்கள் 1736 ல் சந்தாசாகிப் ராணி மீனாட்சியை வெல்வது வரை நீடித்தது. கர்நாடகத்தில் அப்படி நீடித்த நாயக்க சிற்றரசுகளில் ஒன்று இக்கேரி நாயக்கர் குலம்.

இக்கேரியை 1645ல் பீஜப்பூர் சுல்தான் படைகள் தாக்கியபோது அவர்கள் அதை கைவிட்டுவிட்டு வந்து பிடனூரில் தங்கள் தலைநகரத்தை அமைத்துக் கொண்டனர். வீரபத்ர நாயக்கர் பிடன்னூரில் ஒரு மண்கோட்டையைக் கட்டினார். அதை அவருடைய மருமகனும் வாரிசுமான சிவப்ப நாயக்கர் இப்போதிருக்கும் வடிவில் கட்டினார். சாலையோரமாகவே அமைந்திருக்கிறது இந்த பெருங்கோட்டை. இப்போது கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
பிடன்னூரை நடுத்தர அளவான கோட்டைகளில் ஒன்று என்று சொல்லலாம். பீரங்கி வைப்பதற்குரிய வாய்கள், வீரர்கள் ஒளிந்திருக்கக்கூடிய விளிம்பிதழ்கள் கொண்ட கோட்டை இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் சேற்றுப்பாறைகளினால் ஆனது. அப்பாறை அதிகமாக கிடைத்ததனால்தான் இந்தக்குன்றின்மேல் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றியது. உள்ளே நிலமும் அதே பாறையினால் ஆனது. மையமாக அனைத்து திசைகளுக்கும் திருப்பு வசதி கொண்ட பீரங்கியை நிறுத்தும் வட்ட வடிவமான மேடை ஸ்தூபி போல எழுந்திருந்தது. உள்ளே கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு சிறு அனுமார் ஆலயம் மட்டுமே இருந்தது. நாங்கள் வருவதைக் கண்டு உள்ளிருந்து காதல் இணை ஒன்று முகங்காட்டாமல் கிளம்பிச் சென்றது.

காலையில் வரலாறு நிறைந்து கிடக்கும் ஒரு கோட்டைக்குள் செல்வது உகந்த மனநிலையை உருவாக்கியது. கழிவிரக்கமும் கனவும் கலந்த ஒரு நிலை. அன்றாட வாழ்க்கையின் அனைத்து சில்லறைக் கவலைகளிலிருந்தும் காலத்துயர் ஒன்றுக்கு கடந்து செல்ல அது வழிவகுத்தது. கோட்டையில் எங்களைத்தவிர அப்போது எவருமே இல்லை என்பதும் அக்கனவில் நீடிக்க வழிவகுத்தது.
மேற்கு கடற்கரைக்கு வரும் மலைப்பாதைகள் அனைத்தையும் படை நிறுத்தி பாதுகாத்தமையால் இப்பகுதியை சுதந்திரமாக ஆள நாயக்கர்களால் முடிந்தது. அன்றே இப்பகுதியின் பாக்கு புகழ் பெறத் தொடங்கியிருந்தது. அதை கழுதைப் பாதை வழியாக தெற்கே கோழிக்கோடு அருகில் போப்பூ என்னும் துறைமுகம் வரை கொண்டு செல்ல முடிந்தது. அது இக்கேரி நாயக்கர்களுக்கு நிதி ஆதாரமாக அமைந்தது.

இக்கேரி நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் தான் மேற்கு கடற்கரையின் இப்பகுதியில் உள்ள கோட்டைகள் அமைந்தன. மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் வரும் உயிரே என்ற பாடலில் காணப்படும் புகழ் பெற்ற கடல்கோட்டையாகிய பேக்கல் இக்கேரி நாயக்கர்களின் தெற்கு எல்லைக்கோட்டைகளில் ஒன்று. தன் பாக்கு வணிக வழிகளைப்பாதுகாப்பதற்கே பேக்கல் வரைக்கும் கோட்டைகளைக் கட்டி படைகளை நிறுத்தியிருந்தார். கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகாலம் கேளடி வம்சம் இப்பகுதியில் ஆட்சி செய்தது.
1763ல் மைசூர் சுல்தான் ஹைதர் அலி இக்கோட்டையைக் கைப்பற்றினார். இது ஹைதர் நகர் என்று பெயர் மாற்றப்பட்டது. காலப்போக்கில் வெறும் நகரா என்று அது அழைக்கப்பட்டது.

1672 முதல் 1697 வரை பிடன்னூரை ஆண்ட கேளடி சென்னம்மாஜி கர்நாடக வரலாற்றின் முக்கியமான அரசிகளில் ஒருவர். அவரது கணவர் சோமசேகர் நாயக்கர்  குலப்பூசல்களில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார் தொடர்ந்து சென்னமா ராணி ஆட்சிக்கு வந்தார். கால்நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த சென்னமாஜி பெருவீரமும் கருணையும் கொண்டவர். அவரைப்பற்றி நாட்டார் பாடல்கள் விதந்து பாடுகின்றன. பசவப்ப நாயக்கரை தன் வளர்ப்புமகனாக எடுத்து வளர்த்தார். அவரது இறப்புக்குப்பின் பசவப்ப நாயக்கர் அரசரானார்.
கேளடி சென்னம்மாஜி மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்கவர். சொக்கநாதரின் மறைவுக்குப்பின் ராணி மங்கம்மாள் பதவிக்கு வந்தாள். இன்றைய தென்தமிழ் நாட்டை உருவாக்கியவர் அவரே. உட்பூசல்கள் நிறைந்திருக்கும் ஒரு பெரிய அரசை சற்று முதிர்ந்த அரசி ஒருவர் சிறப்பாக ஆளமுடியும் என்பதை அவர் காட்டினார். பெரும்பாலும் சமரசங்கள் பேச்சு வார்த்தைகள் வழியாகவே நிகழ்ந்த அரசு அது. தென்தமிழ் நாட்டின் மாபெரும் சந்தைகளையும் வணிகப்பாதைகளையும் அமைத்து இன்றிருக்கும் சிவகாசி கோவில்பட்டி விருதுநகர் போன்ற பல நகரங்கள் எழுந்து வரக்காரணமாக அமைந்தவர் ராணி மங்கம்மாள் .இன்று வரை தெற்கத்தி நெடுஞ்சாலை மங்கம்மா சாலை என்று தான் அழைக்கபப்டுகிறது.

சென்னம்மாஜியும் மேற்கு கடற்கரைப்பகுதியின் வணிக வளச்சியிலேயே அதிகமும் கவனம் செலுத்தினார். உட்பூசல்களை பேச்சு வார்த்தை மூலம் தடுத்தார். படையெடுத்து வந்தவர்களை கப்பமோ லஞ்சமோ கொடுத்து திருப்பி அனுப்பினார். 1685ல் சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பின் படைகளிடமிருந்து தப்பி தென்னகம் வந்தபோது இந்தக் கோட்டையில் அவருக்கு சென்னம்மாஜி அடைக்கலம் கொடுத்தார்.
பெரும்பாலும் வணிக,நிர்மாண பணிகளில் ஈடுபட்டிருந்த அரசியைப்பொறுத்தவரை இது தற்கொலைக்கு நிகரான நடவடிக்கை. ஏனெனில் இஸ்லாமிய பெரும்படையின் சினத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் இக்கேரி நாயக்கர்களுக்கு அன்று இருக்கவில்லை. ஆனாலும் அரசியின் தாய்மையின் கருணையாலும் ராஜாராமைத் தவிர்க்க முடியவில்லை. ஔரங்கசீப்பின் படைகள் இந்ந்கரை கைப்பற்றின ராஜாராம் தப்பி தஞ்சைக்கு ஓடினார். சென்னம்மா  ராணி பெரும் கப்பத்தை ஔரங்கசீப்பூக்கு கட்ட வேண்டியிருந்தது.

நாயக்க அரசுகளின் வரலாற்றில் குலப்பூசல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. உண்மையில் விஜயநகரத்தை வீழ்த்தியதே குலப்பூசல்கள் தான், அந்தக்கால அரசியலை வைத்து இப்பூசல்களைப்புரிந்து கொள்ளலாம். நாயக்கர்கள் தொல் சிறப்பு கொண்ட அரசகுடியினர் அல்ல. மத்திய ஆந்திர நிலத்திலும் வடக்கு கர்நாடகத்திலும் வாழ்ந்திருந்த பல்வேறு மேய்ச்சல்நில மக்கள் காலப்போக்கில் போர்க்குலங்களாக மாறி சிறு அரசுகளை அமைத்தனர். அவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே நாயக்கர்பேரரசு.
அதற்குக் காரணம் அன்றைய அரசியல்சூழல். 1311ல் மாலிக்காபூரின் பெரும்படை வந்து தெற்கு நிலத்தின் அனைத்து அரசுகளையும் அழித்து சூறையாடி ராமேஸ்வரம் வரைக்கும் வந்து மீண்டது. புகழ் பெற்றிருந்த அனைத்து மன்னர் குலங்களும் அழிக்கப்பட்டன. அந்த இடைவெளியை நிரப்பியபடி எழுந்து வந்தது நாயக்கர்களின் அதிகாரம். இஸ்லாமிய ஆட்சியின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக வேறு வழியில்லாமல் ஒருங்கிணைந்து அவர்கள் விஜயநகரத்தை உருவாக்கினர்.பொது எதிரி வலுவாக இருந்தவரைத்தான் அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தனர். நாயக்கர்களின் ஆட்சிமுறையே மையத்தில் பலவீனமான ஒர் இணைப்பும் தனியலகுகளின் சுதந்திரமும்தான்.

அவ்வொருங்கிணைப்பை நிகழ்த்தியதில் சிருங்கேரி மடத்தின் தலைவராக இருந்த வித்யாரண்யர் எனும் மாதவரின் பங்கு பெரும் முக்கியத்துவம் கொண்டது. துங்கபத்ரா கரையில் இருந்த ஆனைக்குந்தி என்னும் சிற்றரசின் ஆட்சியாளர்களான ஹரிஹரும் புக்கரும் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தை அமைத்தனர். மெல்ல பிற நாயக்கர்களையும் சேர்த்துக்கொண்டு பேரரசாக ஆயினர்.
ஆனால் இத்தகைய பேரரசுகளில் முதன்மை அரசகுலம் மிகத் தொன்மையானதாகவும். பிறர் எவருக்குமில்லாத தொன்மங்களின் பின்புலம் கொண்டதாகவும் இருக்கும்நிலையில் மட்டுமே அதிகாரப் பூசல்கள் மிஞ்சிப்போனால் அக்குடும்பத்துக்குள் மட்டுமே நிகழும்படி இருக்கும். பிற சிறு அரச குலங்களைச் சேர்ந்த எவரும் பேரரசருக்கு எதிராக பூசலிடமாட்டார்கள். பிறரை மக்களும் மற்ற சிற்றரசர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே காரணம். ஆதிக்கப்பூசலைக்கூட ஒரு அரசகுல வாரிசை முன்வைத்தே செய்தாகவேண்டும்.

உதாரணமாக சோழ அரசகுலம் தொன்மப் பின்புலம் கொண்டது. முற்காலச் சோழர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே தமிழகத்தில் பூம்புகாரையும் உறையூரையும் தலைமையாகக்கொண்டு ஆண்டவர்கள். இருநூற்றைம்பது ஆண்டு காலம் களப்பிரர் ஆட்சியில் சோழர்குலம் சிதறடிக்கப்பட்டாலும் கூட சோழ அரசகுலம் அதன் குருதித் தூய்மையுடன் எப்போதும் பேணப்பட்டது. ஆகவே மீண்டும் விஜயாலய சோழன் வழியாகச் சோழ அரசகுலம் தமிழகத்தில் அரசியல் விசையாக எழுந்து வந்தபோது அவர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை. இறுதியாக 1279ல் பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படும் வரை சோழ அரசகுலத்திற்கெதிரான பூசல்கள் எதுவும் சோழப்பேரரசுக்குள் வரவேயில்லை.
மாறாக ஹரிஹரர்- புக்கருக்குப் பின் புக்கரின் மைந்தர் குமார கம்பணரின் காலத்திலேயே அவருக்கெதிராக பிற நாயக்கச் சிறுமன்னர்களின் எழுச்சிகளும் உட்சதிகளும் நிகழத்தொடங்கின. நாயக்க அரசர்களில் மிகப்பெரும் வல்லமை கொண்டவராகிய கிருஷ்ணதேவராயருக்கெதிராகவே அவருடைய உயிர் நண்பராகிய நாகமநாயக்கர் அதிகாரக் கிளர்ச்சியை தொடங்கினார். கிருஷ்ண தேவராயரின் படைகளுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிய அவர் கிருஷ்ண தேவராயருக்கெதிராகவே மதுரையை தனி நாடாக அறிவித்தார். நாகம நாயக்கரின் சொந்த மகனாகிய விஸ்வநாத நாயக்கரை அனுப்பி கிருஷ்ண தேவராயர் மதுரையை வென்றார்.

விஸ்வநாத நாயக்கருக்கே மதுரையை அளித்து அவர் அதை தனி நாடாக ஆண்டு கொள்ளலாம் என்று கிருஷ்ண தேவராயர் அனுமதி அளித்ததாக வரலாறு சொல்கிறது. அதன்வழியாக அவர் மாபெரும் எதிரி ஒருவர் உருவாகாமல் தடுத்தார். கிருஷ்ண தேவராயரின் மகன் திருமலைராயர் அவருடைய அமைச்சராகிய சாளுவ திம்மராசுவால் கொல்லப்பட்டார். அக்கொலை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தையே அழித்தது.
நாயக்கர்கள் என்று நாம் பொதுவாக சொன்னாலும் கூட அவர்கள் ஒரு ஜாதியோ ஒரு குலமோ அல்ல. நாயக்கர்கள் என்றால் படை வீரர்கள் என்றே பொருள். உள்ளே காப்பு, கம்மா, கம்பளர் போல பல ஜாதிகளும் ஆரவீடு, கொண்டவீடு போன்ற குலங்களும் உண்டு. வெளியே இருந்து கொண்டு அந்தப்பெரும் தொகுதியின் உட்பிரிவுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு சு.வேங்கடேசனின் காவல் கோட்டத்தில் இவை விளக்கப்பட்டுள்ளன.

கோட்டைக்குள் சென்று வறண்டு செந்நிறம் இளவெயிலில் பூத்துக் கிடந்த மலைச்சரிவில் ஏறி பீரங்கி மேடையில் சென்று அமர்ந்தோம் இவ்வருடம் அனேகமாக மழையே இப்பகுதியில் பெய்யவில்லை. இந்தியாவில் அதிகமாக மழைபெறும் நிலங்களில் ஒன்று மேற்குக் கடற்கரை. நூறாண்டுகளுக்குப்பின்பு தான் இந்த வறட்சி வந்திருக்கிறது புற்கள் கருகி பாலைவன தோற்றம் காட்டியது. அனைத்து புகைப்படங்களிலும் பசுமையின் வெவ்வேறு அழுத்தங்களானதாக இந்நிலப்பகுதி பதிவாகியிருக்கிறது. ஒருவேளை இக்காட்சியை மீண்டும் காண இன்னொரு நூறாண்டுகள் ஆகக்கூடும்.
இருந்தும் தொலை தூரம் வரை தெரிந்த மரங்களும் காடுகளும் பசுமையையே காட்டின.  இங்கு தொல் பொருட்கள் எதுவுமில்லை. தொல்லியல் துறையின் காவலோ பேணலோ இல்லை. ஒரு உடைந்த பீரங்கிமட்டுமே அக்காலத்தின் அடையாளமாகக் கிடக்கிறது. சென்ற காலத்தை அசைத்துப்பார்க்க முடியுமா என்று செல்வேந்திரனும் ராஜமாணிக்கமும் முயன்றனர். சற்று நேரத்தில் திரும்பி வந்து “ஒரு அணுகூட அசைக்க முடியவில்லை அண்ணா” என்றார் ராஜமாணிக்கம். என்னால் அசைக்க முடிந்திருந்தால் கூறுகெட்ட அரசர்களுக்கு பதிலாக சின்னம்மாஜியையும் ராணி மங்கம்மாளையும் ராணி ருத்ரம்மாவையும் மட்டும் இந்நாட்டை ஆளச்சொல்லியிருப்பேன் என்று எண்ணிக்கொண்டேன்.
எனது உலகம் .....
எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?..என்று நம்ம மாப்பிளை தம்பி ஒருவர் கேட்டார் ..எப்படி இந்த அளவுக்கு எழுதி பழகினீர்கள் ...சொல்லுங்களேன் என்றார் ..
உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.
ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் ,வாட்ஸாப்பிலும் ..மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது...நான் அடிக்கடி சந்திக்கும் மாப்பிள்ளைகள் ..நண்பர்கள் என்னுடன் பயணிப்பவர்கள் ...உங்களுக்கே தெரியும் ...
என் புகைப்படம் ..எழுத்துக்கள் ...அடிக்கடி தொந்தரவு பண்ணுவதால் ..மெத்த படித்த அறிவாளிகள் ..குறைகூறிக்கொண்டு ..நான் இருக்கும் அமைப்பை ..குறைகூறிக்கொண்டும் ...போன்செய்து வேற ஒரு மணிநேரம் மூளை சலவை செய்வார்கள் ...அதை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படப்போவதில்லை ..எப்போதாவது ..ஏதோ ஒரு செய்தி அவருக்கு பயன்பெற்றுஇருந்தால் சந்தோசமே ...வாழ்த்துக்கள் ...என்னுடன் பயணம் செய்பவர்களுக்கு ..நன்றி 
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்
எலுமிச்சம்பழம்,...

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம்,
மிளகாய் கட்டும் பழக்கம் ஒன்றும் மூட
நம்பிக்கை இல்லையென்று இன்று விஞ்ஞானம்
சொல்லுகிறது!
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக்
அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம்;
மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid)
என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி;
மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை
உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த
வாயுவை வாகனத்தின் போனட்டில் இருந்து
ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட்
(Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான
உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை
கடத்துகிறது, அந்த வாயுவானது ஓட்டுனரை
நித்திரை கொள்ளாமலும், உற்சாகமாகவும்
இருக்கச் செய்வதுடன், பிரேக் ஒயிலையும்
வற்றாமல் பாத்துக்கொள்கிறது!
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால்;
ஒரு வாரம் மட்டுமே இந்த வாயு மேற்சொன்ன
இரசாயனப் பகுப்பால் கிடைக்கப்பெறும்.
அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகள
ில் ஏற்க்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டு
புதிதாகக் கட்டப்படுகின்றது.
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச்
செய்யக்காரணம்; பூமியானது சூரியனுக்கும்
சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய
ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5
டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி
இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம்
நடக்கிறது !!
பாருங்கள் எம் முன்னோர்கள் எவ்வளவு தூரம்
விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிரார்கள்
என்று!! இதனை share செய்து எம்
பெருமையை உலகுக்கு உணர்த்துவோம...


புகைப்படம் -கோவை-வடவள்ளி ..ஷியாம் படிக்கும் பள்ளியின் பேருந்தில் எலுமிச்சை ..மிளகாய் ..கருப்பு கையறு  ஆகியவை  கட்டியிருந்தது ..இதைப்பார்த்தவுடன் .இதன் பயன்பாடு என்று கேட்டு தெரிந்து பதிவிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..







கோல்ட் கிங் மாப்பிள ...இந்த பாடல்களை ..உங்கள் பணி நேரம் முடிந்தவுடன் ..நோட்டு புத்தகத்தில் எழுதி வையுங்கள் ...இதை நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக ...பொதுவெளியில் வெளியிடலாம் ...நமது தெலுங்கு பாடல்களை ஆவணப்படுத்தி வைப்போம் ..நம் எதிர்கால தலைமுறைக்கு ..வாழ்த்துக்கள் மாப்பிள ...நமது கம்பள வரலாற்று நூல்களை ஆவணப்படுத்தி வெளியிட ..மூன்று வரலாற்று நூல்களுக்கான பணிகள் நடந்துகொண்டுள்ளது ...அதை வெளியிடும் பொழுது ..இந்த பாடல் வீடியோவும் வெளியிடலாம் ...ஏதோ அத்திப்பூத்ததுபோல் ஒரு தளி ஜல்லிபட்டி பாவலர் பழனிசாமி மாமா அவர்கள் கிடைத்தார்கள் ...சிறு வரலாற்று நூல் கிடைத்தது ...அவரை போன்று நல்ல மனிதரை இழந்தது நமது சமுதாயர்த்துக்கு பெரிய இழப்பாகும் ...இன்னும் கொஞ்சம் சிலவருடங்கள் இருந்திருந்தால் நீங்கள் பாடிய பாடல்களை போன்று அவரும் நோட்டில் எழுதி வைத்திருந்தார் ...எனக்கு மாமாவின்   நட்புவட்டம் 2015 -இல் கிடைத்தது..இந்த நான்கு வருடகாலத்தில் தளி எதுலப்பரின் வரலாற்றை வெளிக்கொண்டு வரமுடிந்தது ..நமது இந்த நமது வரலாறுகளை தேடுவதற்கு .. செய்வதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை ...எதிர்கால நம் குழந்தைகளுக்கு கம்பள இனம் ஒன்று இருந்தது என்று சொல்வதற்கு நாளும் ஆவணங்கள் வேண்டும் அல்லவா ..இதில் மெத்த படித்த மேன்மக்கள் வேறு ..வரலாறை தெரிந்து என்ன செய்ய போகுறீர்கள் என்று நக்கல் பேச்சு வேறு .இதையெல்லாம் தாண்டி தான் ..நம் கம்பள சமுதாயத்திற்கு சேவைகள் செய்யவேண்டும் மாப்பிள .......சமுதாய தலைவர்கள் என்று சொல்லிகொல்லும் தலைவர்கள் வேறு ... இளையசொந்தங்களை வழிகாட்ட தெரியாத ..பத்து பைசாவுக்கு பிரேயாஜனும் இல்லாத  வாய்த்த  

புதன், 27 மார்ச், 2019

வாழ்வியல் ..இளையதலைமுறை -ஈகோ

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான்

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான்
பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற
அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர் களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் – மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மண முறிவுக்கு க் காரணமாக ஈகோவே உள்ளது.
மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கு ம் போது கணவன் – மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவ ர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக் காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களி டம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.

கடந்த தலைமுறையில் மனைவியைவிட கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனை சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன் றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்ப தால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ (Ego) பிரச்சினை இயல்பாகப் பற்றிக் கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடை யே ஈகோ எடுபடுவதில்லை.

கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட் டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவை தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.
எப்போது உண்மையான வாழ்வியலை கற்றுக்கொள்ளப்போகிறோம் .?

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

செவ்வாய், 26 மார்ச், 2019

தலைமுறை இடைவேளி🤔🤔

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்

சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,😥

டேய் உனக்காவது இது கிடைத்தது ,
நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு
 வசதியில்லை என்று சொன்ன

என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!😉😉

 இன்று ஐந்தாவது  வகுப்பு படிக்கும் என் மகனுக்கு  exam board வாங்க போனபோது

150ரூபாய் மதிப்புள்ள   examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி
இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,

 என் மகனிடம்  பொருமையாக பாருப்பா , அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன்,,

 ink பாட்டில்  வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,

, சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம்  இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

 bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;;

என்று  என் மகனிடம்  நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

 நம்பாமல் நக்கலாக சிரிக்கறான் !!

 நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா)  சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்

 இன்று  அப்பா filter water கேன்
(2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகனியும்  (5 std படிக்கிறான் ) பார்க்கிறேன் 🤔

, இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு  கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு

தாகம் எடுத்தால்  ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி

( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு  தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)

அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்

  நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) ;

 இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?

 என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் ,

 ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!

 இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான்  ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

 இன்று
ஒரு லிட்டர்  gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி  கொண்டு ஓடி இருக்கிறேன்

(காந்தி சவுக் ல இருக்கிற ..கொழும்பு ஸ்டார் கடகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

  boost is secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;

 இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;

நான்  சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔

இது எல்லாம் ..என்  வாழ்கையில்  பட்டது..!!..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

திங்கள், 25 மார்ச், 2019

பழனி முருகன் .....

"நாங்களெல்லாம் அந்தக் காலத்தில எங்க வீட்டுக்காரர் (கணவர்) பெயரைச் சொல்லவே மாட்டோம். இப்ப இருக்கிற பொண்ணுங்க விட்டுக்காரர் பேரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டு இருக்காளுங்க... என்ன நாகரீகமோ... என்ன இழவோ..." - இப்படி வீட்டில் கிடக்கும் பாட்டிகள் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பதை கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் புகுந்த வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பெயரையோ அல்லது ஆண்கள் பெயரையோ வாய் தவறிக் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொன்னால் அவர்களது ஆயுள் (மரியாதையும்தான்) குறைந்து போய் விடுமாம். இதனால் வீட்டில் தனது குழந்தைகளுக்கு மாமனார்-மாமியார் பெயர் வைத்து விட்டால் அந்தக் குழந்தைகளையும் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது. அந்தப் பெயர்களில் முதல் எழுத்தைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விளக்க உரையே வாசித்த காலம் அது. அப்போது பெண்ணாய்ப் பிறந்து விட்டாலே கஷ்ட காலம் தான். பால் என்று ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒருவரின் மனைவி வீட்டுக்குப் பால் வாங்க வேண்டுமென்றால் மிகவும் சிரமப்படுவார். ஆம்! பால் வேண்டும் என்று கேட்க முடியாதே... பால்காரரிடம் "காப்பிக்கு ஊத்தற வெள்ளை" அரை லிட்டர் கொடுங்க என்று கேட்பாராம்.

மணி என்கிற பெயருடையவரின் மனைவி மணி கேட்கவே கஷ்டப்படுவார். அவர் "கடிகாரம் இப்போ என்ன காட்டுது?" என்று கேட்க வேண்டுமாம்.



முருகன் என்ற பெயருடையவரின் மனைவி முறுக்கு வேண்டுமென்றால் முதலில் அவர் நொறுங்கிப் போவார். "வட்டமாச் சுற்றி வச்சிருக்கிற பலகாரம்" கொடுங்கன்னு கேட்டு அவர் அதை வாங்கப் படுகிற கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்.

இப்படி பெயரில் கூட பெண்களைக் கஷ்டப்படுத்திக் காயப்படுத்திய காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் கணவனை பெயரைச் சொல்லி மட்டுமில்லை, வாடா, போடா என்றும் கூட (செல்லமாகத்தான்) அழைக்கிறார்கள்.

இப்படி இந்தக்காலத்துப் பெண்கள் குறும்பாக அழைத்தாலும் அந்தக்காலத்தில் பெருசுங்க பெயர் சொல்ல தடை செய்திருந்தது ஒரு மாபெரும் குறும்புதான்.

புதன், 20 மார்ச், 2019

உடுமலைப்பேட்டை .....கல்திட்டை பாறைகள் பயணம்...(பாலா )
.பயணங்கள் முடிவதில்லை....மதகடிப்புதூர் ..சின்னார் ..தூவானம் ...ஆலம்பட்டி ..மறையூர்

                                         திருச்சியிலிருந்து நான், கண்ணன், தமிழகன் ஐயா ஆகிய மூவரும் காலை ஐந்து மணிக்குக் கிளம்பி பழனி சென்று அங்கிருந்து நாராயணமூர்த்தி அவர்களையும் சேர்த்துக்கொண்டு உடுமலைப்பேட்டையை நோக்கிப் பயமானோம். முதல்நாளே வந்து திருப்பூரில் தங்கியிருந்த சுகவன முருகன், வீரராகவன் ஐயா, சதாசிவம் ,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொதிகை அச்சகம் -அருட்செல்வம் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,சிவக்குமார் ஆகியோர் வேனில் 15 பேர்கொண்ட குழுக்களாக உடுமலைப்பேட்டையிலிருந்து  எங்களுடன் இணைந்துகொண்டனர். ஐவர் மலை ,மதகடிப்புதூர் பாறை ஓவியங்களை பார்வையிட்டு ,பயணத்தை தொடர்ந்தோம் ..அமராவதி அணைக்கு செல்லும் சாலையின் இடப்புறம் சாலை வழியாக  அனைவரும் மறையூர் பயணமானோம்.

அமராவதி அணைக்கு இடப்புறம் பிரிகிற இடத்தில தமிழக வனத்துறை செக்போஸ்ட் ஒண்ணு இருக்கு. அங்கே காரை நிறுத்தி அவங்க வெச்சிருக்கிற லெட்ஜர்ல பேரு அட்ரஸ் வண்டி விவரங்கள் எழுதிட்டு தான் போகணும். அது ரிசர்வ் ஃபாரஸ்டுங்கறதாலும், யானைகளின் வாழ்விடம்ங்கறதாலும் இந்தக் கெடுபிடிகள்.  அங்கே இருக்கிற ஃபாரஸ்ட் ஆஃபீசர்ஸ் சுருக்கமான இன்ஸ்டிரக்ஷன்ஸ் தர்றாங்க. மெதுவா போங்க, காரில் பாட்டு சவுண்டா வெக்காதீங்க, ஹாரன் அடிக்காதீங்க, யானைகளை பார்த்தா டென்சன் ஆகாதீங்க. காரை ஆஃப் பண்ணிட்டு கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டுட்டு சைலண்டா இருங்க. யானை பாட்டுக்கு போயிரும்னாங்க. தனியா போவாதீங்க, எதாவது ஒரு வண்டியோட சேர்ந்தமாதிரி போங்கன்னு என்னமோ போருக்கு போற ரேஞ்சுக்கு அனுப்பி விட்டாங்க. ஏற்கனவே பயமில்லாமல் இருந்த நமக்கு இப்போதுதான் பயமெடுக்க ஆரம்பித்தது.  வண்டி ஓட்டுநரைக் வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேரவேண்டிய இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். ஆங்காங்கே அவர்களை வளப்படுத்தவும் வேண்டியுள்ளது.

              செக்போஸ்ட் வரைக்கும் நன்றாகஇருந்த சாலை, அதுக்கப்புறம்  மோசமா இருந்தது. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் எங்களை ‘அன்புடன்’ வரவேற்றது. நாங்க பயத்தோடயே போனோம். ரெண்டு பக்கமும் அடர்த்தியான காடு. நடுவில் சின்னதா மேடும் பள்ளமும் குண்டும் குழியுமான ரோடு. 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளாக போகவேண்டும் எச்சரிக்கைப் பலகைகளும், அப்பகுதியில் வாழும் விலங்குகளைப்பற்றியும் ஆங்காங்கே எழுதிப்போட்டிருந்தனர். யானைகள் ரெண்டு பக்கமும் இருக்கும் , அப்பப்போ சாலையைக்கடந்து மறுபக்கம் போவும்னு சொல்லியிருந்தாங்க. அதனால ஒவ்வொரு திருப்பத்திலும், திரும்பனதும் யானை நின்னிட்டு இருக்குமோன்ற பயத்திலேயே வண்டி ஓட்டிட்டுப் போனோம்.

      தமிழக கேரள எல்லை வந்ததும் அங்கே  இரண்டு செக்போஸ்ட்.. தமிழ்நாட்டோடது ஒண்ணு, கேரளாவோடது இன்னொண்ணு. தமிழ்நாட்டு செக்போஸ்ட்டில் திரும்பவும் ஒருமுறை டீட்டெயில்ஸ் எண்ட்ரி பண்ணனும். தமிழ்நாடு செக்போஸ்ட் முடிஞ்சு 100 மீட்டர்லேயே கேரளா செக்போஸ்ட்.அங்கேயும் ஒரு எண்ட்ரி. நிறுத்திவைக்கப்பட்ட வண்டிகளின் மேற்கூரைகளின் மீது குரங்குகள் தாவி உணவுப் பொருட்களைத் தேடுகின்றன. எங்க வண்டிக்குள் எட்டிப் பார்த்த குரங்கு ஒன்று என்ன நினைத்ததோ ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டது.

             தமிழக பகுதிகளில் தான் யானை நடமாட்டம் அதிகம். எல்லாமே சமதளமான இடங்கள், ரெண்டுபக்கமும் காடு, இது மலை பகுதி தான். ஆனால் ரெண்டே ரெண்டு ஹேர்பின் பெண்டு தான். மத்தபடி வளைஞ்சும் நெளிஞ்சும் கிட்டத்தட்ட நேரா மேலேறும் ஒற்றை ரோடு தான். அதனால் யானை நடமாட்டம் அதிகம். ஆனால் கேரளா செக்போஸ்டில் இருந்து மேலே போற ரோடு முழுக்க மலைப்பாதை. ஒருபக்கம் மலைப்பாறை, மறுபக்கம் அதல பாதாளம். அதனால் யானை வர வாய்ப்பே இல்லை.  ஒருபக்கம் பள்ளத்தாக்கு என்கிற பயத்தை தவிர வேறே எதுவும் இல்லை.

            அழகுன்னா அழகு, அப்படியொரு அழகு. விதம் விதமான மரங்கள், பறவை சத்தம் , சில்லென்ற காற்று, அருகே வந்து விளையாட்டுக் காட்டும் மேகங்கள் என்று இவையெல்லாம் சேர்ந்து மறக்க முடியாத பயணமாக மாற்றிவிட்டது.

                மறொரு செய்தி கேரளாவைப் பொறுத்தவரை, எல்லா சாலைகளிலும், முறையான தெளிவான அறிவிப்புப் பலகை வெச்சிருக்காங்க. யாரையும் வழி கேட்டு தொந்தரவு செய்ய தேவையில்லை. ஒவ்வொரு சாலை பிரிவு, ஜங்க்சன், ஊர், கிராமம், எல்லாத்தை பத்தியும் தெளிவா போர்டுகள் வெச்சிருக்காங்க.அது என்னமோ தெரிலைங்க நம்ம ஊர்ல "இந்த ரோட்ல போனா மூணாரு வரும் " அப்படிங்கர ரேஞ்சுலேயேதான் மூணாரு பத்தி நம்ம ஆளுகளுக்கு தெரிஞ்சிருக்கு . ஏன் என்று தெரியவில்லை? நம்ம ஊர்க்காரர்கள் அந்த பக்கம் எட்டியே பார்த்ததில்லை .(ஹி...ஹி... நானும் அப்படித்தான் இன்னும் மூணாறே போனதில்லை)

                                மறையூர் கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தின் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இது இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ளஒருஇடமாக விளங்குகின்றது. உடுமலைப்பேட்டையிலிருந்து  கிலோமீட்டர்  தொலைவில் மறையூர்  அமைந்துள்ளது. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் அமைந்த ஒரே பகுதி இதுவாகும். பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும் இப் பகுதியின் கற்காலம் முதலான வரலாற்றைக் கூறி நிற்கின்றன.

           மறையூர் என்னும் பெயர் மறை , ஊர் என்னும் இரண்டு சொற்களால் ஆனது. மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுதியில் வாழ்ந்திருந்ததால் இதற்கு மறையூர் எனப் பெயர் வந்தது என்பது மரபு வழிக் கதை. எனினும் வரலாற்று அடிப்படையில் இதற்கு ஆதாரங்கள் இல்லை.

         மலைகள் நிறைந்த பகுதியாகையால் மலையூர் என்பது திரிந்து மறையூர் ஆகியிருக்கலாம் என்றும், மலைகளால் மறைக்கப்பட்டிருக்கும் ஊர் என்ற வகையில் மறையூர் என்று பெயர் பெற்றது என்றும், கிறிஸ்தவ ஆண்டு முறைத் தொடக்கத்தில் மறவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததனால், மறவூர்,மறையூர் ஆனது என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

              இந்த பகுதி முழுவதுமே கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுக்காவுக்கு உட்பட்டதுன்னாலும், பெரும்பாலானோர் தமிழர்கள் தான். எல்லாருமே தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகள், தமிழகத்தில் வேலை கிடைக்காமல் இங்கே வந்து பிழைப்பை நடத்துவோர்ன்னு தான் இருக்காங்க. எல்லாருமே தமிழ் பேசுறாங்க. இந்தத் தேவிகுளம் தாலுகாவை தமிழ்நாட்டோட சேர்க்கணும்னு பெரிய போராட்டமே 1956ல் நடந்தது. ‘பீர்மேடு, தேவிகுளம் போராட்டம்’ னு சொல்லப்படும் அந்த போராட்டம் மிக பிரபலம். ஆனால் கடைசி வரைக்கும் அந்த போராட்டம் வெற்றிபெறலை.

"தேவியாவது குளமாவது எல்லாமே இந்தியாவுலதானே இருக்குன்ணேன்...."

என்று காமராஜர் சொல்லிவிட்டார். தேவிகுளமும்,பீர்மேடும் கேரளாவுக்கே போயிருச்சு. ஆனாலும், எல்லா இடத்திலும் தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் இருக்கு. கேரள அரசின் அறிவிப்பு பலகைகளும் கூட தமிழில் இருக்கு. வியாபாரம், கடைகள், கைத்தொழில், விவசாயம்,தோட்டத்தொழில், ஹோட்டல். இது தான் அங்கே இருக்கிற பிழைப்பாதாரங்கள்.
               குறிச்சிக்கோட்டையை கடந்தபோது ‘ஒம்பதாறு’  என்ற ஊரைப் பார்த்த உடன் என் கணித மூளை வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒம்பதாறுக்கும் மூணாறுக்கும் இடையே  ‘ஆறாறு’ என்று ஒரு ஊர் வருமே என்று கேட்டேன்.

‘அப்படி ஒரு இடம் கிடையாது’ என்று 'சீரியசாக' பதில் வந்தது.

‘என் கணிதம்’  தோல்வியடைவதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே சின்னாறு கடந்ததும் மலை உயரமும் மலையாளமும் தொடங்கியது.

                கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு நட்சத்திர ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. காரணம் இந்த வனப்பகுதியில் உள்ள சீதோஷண நிலை நட்சத்திர ஆமைகள் வளர்வதற்கு ஏற்றதாக அமைந்து உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள் பிடிப்பட்டால் அவைகள் சின்னார் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம்.

                மறையூருக்கு சற்று முன்பாகவே சாலையின் வலதுபுறத்தில் ஆலம்பெட்டி பாறைஓவியங்கள் என்ற அறிவிப்புப் பலகையும் சில வாகனங்களும் தெரிந்தன. அங்கிருந்து ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வதற்கு குரும்பர் இன பழங்குடிகள் உள்ளனர். அரசே இவர்களுக்கான வேலைவாய்பாக இதை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு ஆளுக்கு 225 ரூபாய் வாங்குகிறார்கள், அதில் கூட்டிப்போகும் குரும்பருக்கு ஒரு பகுதியும், குரும்பர் இன முன்னேற்றத்திற்காக ஒரு பகுதியும் ஒதுக்கிக்கொள்கிறார்கள்.

  இதுபோன்ற திட்டத்தை தமிழகத்திலும் பாறைஓவியங்கள் போன்ற தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு பழங்குடிகளைப் பயன்படுத்தினால். பார்க்கப் போகிறவர்களுக்கும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பாகவும் திகழும் என்று எனக்குத் தோன்றுகிது.

 குரும்பர்கள் நாகராஜ், பழனிச்சாமி ஆகிய இருவரும் நம்மை பாறைஓவியங்கள் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். மலைமீது ஏறும்போது முதலில் டோல்மென்ஸ்(DOLMENS) எனப்படும் கல்திட்டைகள் நிறைய தென்பட்டன. கல்திட்டைகள் என்பவை பெருங்கற்காலத்தில் (MEGALITHIC AGE)வாழ்ந்த மக்கள் ஈமச்சடங்குகள் செய்யும் இடமாகும்.

 மலையேறி நடந்து செல்லும் வழியில் இவை நிறைய தென்பட்டன. நாங்கள் சென்ற வழியில் இருந்த ஒரு அருவியின் இடதுபுறத்தில் உள்ள பாறையில் ஓவியங்கள் உள்ளதை நாகராஜ் நமக்கு காண்பித்தார். அவ்ஓவியங்களில் இரண்டு மனிதர்கள் நிற்பது போன்ற நிலையிலுள்ள மூன்று இடங்களிலும், மான்போன்ற விலங்குகளும் சில குறியீடுகளும் காணப்படுகின்றன.

 இவையனைத்தும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சில உருவங்கள் கருப்பு நிறத்தில் காணப்பட்டாலும் அவை வெள்ளை நிறத்தில் வரையப்பட்டவையே, அவ்விடத்தில் சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட புகையால் அவை கருமையானத் தோற்றமளிக்கலாம்.
    ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குச் செல்லும்போது நாகராஜ், பழனிச்சாமி இருவரிடமும் மாறி மாறி குரும்பர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை நிலைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டேயும் அதற்கு அவர்களின் பதிலை பதிவு செய்துகொண்டேயும் வந்தோம்.ஒரு மலையின் உச்சியை அடைந்தபோது பழனிச்சாமி தொலைவில் கையைக்காட்டி

"அங்க தூரமா பாருங்க அந்த மலையில வீடுங்க இருக்கு தெரியிதா?"

எனக்கேட்டதும் நாங்கள் எல்லோருமே அவர்காட்டிய திசையில் பார்த்தபோது அங்கு குடியிருப்பு பகுதி இருப்பதை நன்றாக பார்க்க முடிந்தது.

"அதுதான் சார் எங்க ஊரு ஆலம்பட்டி"

     இங்கு இருக்கும் பாறைஓவியங்கள் ஆலம்பட்டி ஓவியங்கள் எனஅழைக்கப்பட காரணம் இவ்வூரின் பெயரே. எப்பொழுதும் ஒரு பாறைஓவியத்தை அதன் அருகிலுள்ள ஊரின் பெயரால் அழைப்பது மரபு. வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தில் உள்ள பெயர் பலகையில் 'ஆலம்பெட்டி ' என்று எழுதிப்போட்டிருந்தனர், மலையாளிகளுக்கு 'பட்டி' என்றால் கொஞ்சம் அலர்ஜி என்பதாலோ என்னவோ ! ! !

                மலைகளுக்கிடையே சென்ற ஒத்தையடிப்பாதை வழியே அழைத்துச் சென்றவர்கள், ஒரு மலைச் சரிவில் பெரிய பாறைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த குகைபோன்ற இடத்தினருகே வந்ததும், அனைவரையும் அருகே வரச்சொல்லி அங்கு வரையப்பட்டிருந்த சிவப்பு நிற ஓவியங்களைக் காட்டினார்கள். அப்பகுதியின் மொத்த நீளம் 60 அடியும் உயரம் 20 அடியும் இருக்கும். இயற்கையாகவே மூன்று பகுதிகளாக உள்ள இந்த பாறைகளில் செங்குத்தாக, சமமாக உள்ள பாறைப்பகுதிகளில் இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் இரண்டு மான்கள் மேய்ந்துக் கொண்டிருப்பது போன்ற ஓவியம் அளவில் பெரியதாகவும், அழகாகவும் வரையப்பட்டமை நமக்கு வியப்பை வரவழைத்தது. ஏனெனில்  அவ்வளவு உயரத்தை அடைந்து அங்கு காலத்தை வெல்லும் இத்தகைய ஓவியங்கலை வரைவதென்பது எளியவேலையல்ல என்பது புரிகிறது.

 மற்றொரு பாறையில் யானையோ அல்லது மாடோ செந்நிறத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ளது. இது சற்று சிதைந்த நிலையிலுள்ளதால் இதுபற்றி தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அடுத்தப் பாறையில் பெரிய உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் இல்லை என்றாலும் சிறிய அளவிலான வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் காணப்படுகின்றன. மேலும் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள எறும்புத்தின்னி, ஆமை, தேன்கூடு, மரம் முதலிய உருவங்களையும் காணமுடிகிறது.இவற்றில் எறும்புத்தின்னி, ஆமையின் ஓவியங்கள் மிக நன்றாக வரையப்பட்டுள்ளன.    இவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டு கிளம்பினோம். அடுத்து நம்மை வேறுஒரு மலைக்கு அழைத்துச் சென்றார்கள்,

  மீண்டும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நடந்தோம். தொலைவில் ஒரு மலையைக்காட்டி அங்குதான் போய்கொண்டிருக்கிறோம் என்றார்கள்.இப்போது தொலைவில் பார்த்த மலையின் மேல் பகுதியில் நின்றுகொண்டிருந்தோம். அங்கிருந்து பார்க்கும்போது சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளும் தெளிவாகத் தெரிந்தன. காலையில் நாங்கள் வண்டியில் வந்த சாலை பச்சை வனத்தில் கருமையான மலைப்பாம்பு படுத்துக்கிடப்பது போல தெரிந்தது. மதிய நேரம் ஆகிவிட்டதால் பசியெடுத்தது, ஆனால் எப்போதும் போலவே இம்முறையும் கிளம்பும் ஆர்வத்தில் உணவை எடுத்துவர மறந்துவிட்டோம். காலை உணவு உண்ட உணவகத்தில் எதற்கும் இருக்கட்டுமேயென்று பத்து சப்பாத்தி ஒரு தாளில் மடித்து வைத்தது நினைவில் வந்தது.  பிறகு அங்கேயே சாப்பிட முடிவெடுத்து சப்பாத்தியுடன் அவரவர்கள் எடுத்துவந்த பிஸ்கட்,, கடலைமிட்டாய், காராச்சேவு முதலியவற்றை உண்டு பசியாறிக்கொண்டோம்.

 இந்த ஓய்வு நேரத்தில் நாகராஜ், பழனிச்சாமி ஆகியோரிடம் குரும்பர்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றைக் கேட்டறிந்துக் கொண்டு அவற்றைப் பதிவும் செய்துகொண்டோம். நாங்கள் உட்கார்ந்திருந்த மலையில் சரிவில் சில ஓவியங்கள் இருப்பதாகவும் ஆனால் அங்கு செல்வது ஆபத்து என்றும் வேண்டுமானால் எங்களில் வயதில் குறைந்தவரும் வேகமாக மலையேறுபவரும் ஆபத்தென்றால் ஓடித்தப்பிக்கத் தெரிந்தவருமான ஒருவரை மட்டும் அழைத்துச் செல்ல சம்மதித்தனர். பின்பு அர்களாகவே கண்ணனை தேர்ந்த்தெடுத்து  அவரை நாகராஜ் கூட்டிச்செல்வதாக முடிவெடுத்தனர். நாங்கள் எல்லோரும் எங்களிடமிருந்த கேமராக்களை அவரிடம் கொடுத்தனுப்ப, சரிவில் இறங்கிய அவர்கள் எங்கள் பார்வையிலிருந்து மறைந்தனர்.

 மலைப்பகுதிகளில் நீண்டதொலைவில் நடக்கும் தருனங்களில் , சிறிது ஓய்வெடுத்தாலும் அது நமக்கு புத்துணர்ச்சியையூட்டும். அரைமணி நேரமிருக்கும் போன இருவரும் வந்துவிட்டார்கள். அத்துடன் முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்க ஆம்பித்தோம்.

   வந்த வழியிலேயே இறங்காமல் வேறு பாதையில் கூட்டிப்போனார்கள் எனவே எங்கள் வண்டி நின்ற இடத்தை விட்டு சற்றுத்தள்ளியே சாலையை அடைந்தோம். வரும் வழியில் அவர்கள் இருவரும் காட்டில் உள்ள மூலிகைககளைப் பற்றியும், அவர்களின் மருத்துவ அறிவுப் பற்றியும் கூறிக்கொண்டே வர அனைத்தையும் பதிவு செய்துக்கொண்டோம்.

 மலையிலிருந்தபோது தொலைவிலுள்ள மலையைக் காட்டி அங்கு மற்றொரு பழங்குடி இனம் முதுவன் வசிப்பதாகவும் அவர்கள் எப்போதுமே தலையில் முண்டாசுக் கட்டியிருப்பார்கள் என்றும் எக்காரணம்கொண்டும் அதை கழற்றமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்கள். கீழே இறங்கிவரும்போது சாலையின் ஓரமாக அவர்கள்சொன்ன அடையாளத்தில் ஒருவர் சென்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிச்சென்று அவருடன் பேச ஆரம்பித்தோம்.  

அவர் முதுவன்தானாம், தனது பெயர் .......       என அறிமுகப்படுத்திகொண்ட அவர் முதுவன் இனத்தைப்பற்றி விரிவாகவே பேசினார். முதுவன்கள் அந்தக் காலத்தில் சாமி சிலைகளை முதுகில் சுமந்து  சென்றவர்களாம், இப்போதும் தங்கள் குழந்தைகளை முதுகில் துணியால் கட்டி சுமந்து செல்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளனராம். அவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டிருந்தபோது, வனத்துறை ஜீப் ஒன்று அருகில் வந்து நின்றது. நாம் கையில் மைக்கெல்லாம் வைத்திருப்பதைப்பார்த்த அந்த வனத்துறை அதிகாரி நம்மை பத்திரிக்கைகக்காரர்கள் என்று நினைத்திருப்பார்போல

" ட்ரைபில் பீப்பிள்ச டிஸ்டர்ப் பண்ணாதீர்கள் "

என்று கூற ,நமக்கும் அது சரியெனப்பட அத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டு, நாகராஜ் மனைவி கொடுத்த சூடான சுவையான தேநீரின் சுவையை நாக்கிலும் நாகராஜ், பழனிச்சாமி ஆகியோரின் நினைவுகளை மணத்திலும் தாங்கியவாறு மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

             உடுமலைப்பேட்டை - மூனார் சாலையில் மறையூருக்கு முன்பாக 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது “அழிஞ்சுவாடு” என்னும் சிற்றூர். இங்கு கல்திட்டைகள்(Dolmens) நூற்றுக்கணக்கில் இருப்தாக கூறி சதாசிவம் நம்மை அங்கு அழைத்துச் சென்றார்.
மன்னிக்கவும் சொல்ல மறந்துவிட்டேன் இந்த மொத்த பயணத்தையும் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தியவர் இந்த சதாசிவம், அவருக்கு நம் அறிவோம் அறிவிப்போம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

 இங்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கல்திட்டைகள் இங்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பாவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. ரஷ்யா, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும், பெருமளவில் காணப்படுகின்றன.

இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்லறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். இத்திட்டைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு அடுத்த பிறவியில் தேவைப்படும் உணவுப்பொருட்கள் , அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருப்பார்கள்.

 தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கல்திட்டைகள் பரவலாக காணப்படுகின்றன. கொடைக்கானல் காட்டுப்பகுதியில் மச்சூர், சோலைக்காடு, வில்பட்டி, பெருமாள் மலை, செண்பகனூர், தாண்டிக்குடி ஆகிய இடங்களில் இத்தகைய கல்திட்டைகள் காணப்படுகின்றன. இத்தகைய வரலாற்று சின்னங்களின் மூலமாக அவை உருவாகப்பட்ட காலத்திய சூழல்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகளை நாம் மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், கிருஷ்ணகிரியிலும், கொடைக்கானலிலும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்திட்டைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு மடங்கு எண்ணிக்கை கூட தற்போது இல்லை. மேலும் பல பதுகைகள் சிதைக்கப் பட்டுவருகின்றன. கல்திட்டைகள் அமைந்துள்ள பகுதிகளைக் காணும் பொழுது, அவைகள் எவ்விதமான பாதுகாப்புமின்றி உள்ளன. தொல்லியல் துறையின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதில் அந்த பகுதியின் முக்கியத்துவம், அவைகளின் பின்னணி உள்ளிட்ட எந்த செய்திகளும் இடம்பெறவில்லை.

                  அந்த இடங்கள் பெரும்பாலும் மறைவாக உள்ளதால், எவ்விதமான இடையூறும் இல்லாமல், மது அருந்துவதற்கு ஏதுவான இடமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடங்களைச் சுற்றிலும் காலி மது பாட்டில்கள் கிடக்கின்றன. ஒரு திட்டையில் இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகள், சமையல் பாத்திரங்களையெல்லாம் பார்த்தோம். குடும்பமே நடத்துகிறார்கள் போலிருக்கிறது. இதுவே அயல்நாடுகளில் உள்ள இத்தகைய கல்திட்டைகள் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப்படுகின்றன.

                   பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பாடங்களை இணைத்தல், அதற்கென தனி பாட வேளைகளை கட்டாயமாக்குதல், பள்ளி, கல்லூரி சுற்றுலாவில், பெரிதும் கவனிக்கப்படாத தொன்மையான இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும் வகையில் அரசுகள் உத்தரவு பிறப்பித்தல், பொதுமக்களுக்கும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகேயுள்ள பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குதல்  போன்ற  செயல்பாடுகள் மூலமாக நம் முன்னோர்களின் பழைய வரலாற்று எச்சங்களை நம் அடுத்த தலைமுறைக்கும் நிச்சயமாகக் கொண்டு செல்ல முடியும்.

            மேற்கே சூரியன் மறைய ஆரம்பித்தது. எங்கள் திட்டத்தில் மறையூரிலுள்ள பாறை ஓவியங்களைப் பார்க்க வேண்டியிருந்ததுது. அதை மற்றொரு பயணத்தில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

              மறையூரின் மற்றொரு சிறப்பு அங்கு ஓடும் ஜீப்புகள முன் கண்ணாடியின் மேலாக உள்ளங்கை அளவுக்கு பார்டர் , நடுவில் வெவ்வேறு பெயர்கள் எழுதிய ஜீப்புகள் மறையூருக்கும் மூணாறுக்குமாக டிரிப் அடிக்கின்றன.கேரளாவில் பஸ்களின் பெயரை பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளின் பெயரை பஸ்களுக்கும் வைத்திருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன்.

 ஜீப்புகளும் விதிவிலக்கல்ல என்று அவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகிறது. வாடிக்கையாகப் பயணம் செய்பவர்களை பற்றி ஓட்டுநர்களும் , ஓட்டுநர் மற்றும் ஓனர்களைப் பற்றி பயணிகளும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். குடும்ப விவகாரம் கூட தெரிந்து வைத்திருக்கிறது.

‘’உன் சம்சாரம் பிரசவத்துக்குப் போச்சே வந்திருச்சா?’’ என்கிற ரீதியிலான் கேள்வியும் பதில்களும் அவர்களிடையே இயல்பானது.தங்களது தோராயமான நாற்பது கிலோமீட்டர் பாதையில் உண்ணி அச்சன் வீடு எங்கே இருக்கிறது என்றும் சேட்டன் மாஸ்டர் வீடு எங்கே இருக்கிறது என்றும் ஜீப் ஓட்டிகள் அறிவார்கள்.

         இறங்கிவரும் வழியில் சாலையில் யானைகளைப் பார்க்க வாய்ப்புள்ளதாக சதாசிவம் கூற வண்டியே பரபரப்பானது. அனைவரும் இங்கும் அங்குமாக துளாவ ஆரம்பித்தனர். ஒரே மயான அமைதி.

திடீரென வீரராகவன் ஐயா கத்தினார்

 "அதோ".

ஆமாம் சாலையின் இடதுபுறத்தில் ஒரு யானை தன் குட்டியுடன் நின்றுக் கொண்டு எங்கள் வண்டியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 நாங்கள் சிரித்துவிட்டோம்.ஆமாம் அது கேரள வனத்துறையினர் வைத்திருந்த ஆளுயர 'பேனர்'. ஏனோ அன்றைக்கு யானைகள் நீர் அருந்திவிட்டு குடும்பத்துடன் சாலையைக் கடக்கும் அழகுக் காட்சியை காண முடியாமல் போய்விட்டது.

                ஒரேஒரு காட்டுப்பன்றி்தான் சாலையைக் கடந்தது அதுவும் எங்கே நாம் பார்த்துவிடப் போகிறோமே என்று வேகமாகவேறு ஓடிவிட்டது. ரொம்ப ஆர்வத்தில நண்பர் ஒருவர்  'ஒரு வேளை சின்ன யானை குட்டியாக இருக்குமோ?' என்று கேட்டுவைத்து எங்களை திடுக்கிட வைத்தார். ஒருவழியாக செக்போஸ்ட் வந்து நாங்கள் எங்கள் வண்டியில் திருச்சியை நோக்கியும் மற்றவர்கள் அவர்கள் வண்டியில் திருப்பூரை நோக்கியும் பயணமானோம்.

               பயணம் ...ஆம்... இந்த ஒற்றைச் சொல்லில்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. நாமிருக்கும் இப்புவி சூரியனை சுற்றிப் பயணித்துக் கொண்டிள்ளளது. அதில் இருக்கும் நாமோ அதனுள்ளே பயணிக்கிறோம். என்னைப் பொருத்தவரை பக்கத்துத் தெருவுக்குப் போவதே பயணம்தான். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம். அதனால்தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் அடுத்தப் பயணத்தில் சந்திப்போம்...

பயணங்கள் தொடரும்...

திங்கள், 18 மார்ச், 2019

குழந்தைகளின் முன்னேற்றம் ....

பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்ட‍ங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வருகிறானே! அப்போது ஆரம்பிக்கும் இந்த போராட்ட‍ம் அவன் மரணப்படுக்கையில் படுக்கும்போதுதான் ஓய்ந்து போகும்.

ஒரு குழந்தை, தனது தாயின் கருவரையில் இருந்து வெளியேறிய பிறகு அந்த‌ தாயின் மடியிலும், தந்தையின் மார்பிலும் படுத் துறங்கி, விளையாடி மகிழ்ந்த காலத்தி லிருந்து மெல்ல‍ மெல்ல‍ விடுபட்டு, பள்ளிப் பருவம் அடைகிறது. இந்த பள்ளிப் பருவத்தில், குழந்தை கள் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள‍ அல்ல‍து தெரிந் து கொள்ள‍ அதீத ஆர்வமாக இருப்பார்கள்.

அக்குழந்தையின் பெற்றோரோ! மாநிலத்திலேயே சிறந்த ஒரு தனியார் பள்ளியை தேர்ந்தெடுத்து, அதில் தனது குழந்தைக்கு இடம் கிடைக்க‍ தவமாய் தவமிருந்து கடன்பட்டு, அல்ல‍ல்பட்டு, ஒரு பெருந்தொகையை செலுத் தி, அக்குழந்தையை பள்ளியில் சேர்த்து விடுவர். அப்ப‍டி சேர்த்து விடப்படும் குழந்தை, விளையா ட்டிலோ, அல்ல‍து கலையிலோ, அல்ல‍து இசையிலோ ஆர்வம் கொண்டு கற்க விரும்புவர். இன் னும் சொல்ல‍ப் போனால், சிறு சிறு கண்டு பிடிப்புகளை அவர்களே சுயமாக சிந்தித்து, இளம் விஞ்ஞானிகளாக கூட இருப்ப‍ர். அத்த‍கைய குழந்தைகள் தனது திறமைகளை, முதலில் தனது பெற்றோரிடம் தான் காட்டுவர். அப்போது அவர்களது ஆர்வத்தை புரிந்து கொண்டு, அவர்களை மென்மேலும் ஊக்கு விக்க‍ வேண்டும். அதை விடுத்து, “இதை யெல்லாம் உன்னை யார் செய்ய‍ சொன்ன‍து. போன் எக்ஸாமில் நீ 80 மார்க் எடுத்த, வர்ர எக்ஸாம்ல நீ 100 எடுக்க‍ வேண்டாமா? நீ இப்ப‍டி படிக்காம கண்டதை செய்து கொண்டு இருந்தால் எப்படி மார்க் எடுப்பாய்? இதற்காகவா உன்னை ஊரிலேயே சிறந்த அந்த தனியார் பளியில் சேர்த்து, ஆயிரமாயி ரமாய் கொட்டி அழுதேன்!” என்று அவர்க ளை கடிந்து கொண்டு, அவர்களது கண்டு பிடிப்பு க்களை அல்ல‍து திறமைகளை ஏளனம் செய்வ‌தும், அவர்களை உதாசீனம் செய்வதும் எந்த விததில் நியாயம்?

குழந்தைகளை ஒரு வியாபாரப் பொருளாக, பெற்றோர்கள் பார் க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்க‍ வேண்டும். கல்வி என்பது இன்றைய உலகில் அவசியமான ஒன்றுதான்! அதற் காக அந்த குழந்தையை எந்நேரமும், நீ இதைப்படி, அதைப் படி நச்சரித்துக் கொண் டே இருந்தால், அவர்களது மனதில் அந்த கல்வியின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மையும் உருவாகி, பிற்காலத்தில் தனக்கு விருப்ப‍ம் இல்லாத துறையில் பணியாற்றிக் கொண் டு ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம் என்ற ஒரு அலட்சியப்போக்கு ஏற்பட்டு, வாழ்க்கையில் சாதிக்க‍ வேண்டும் என்ற முனைப்பின்றியும், தனது சிறுவயதில் தனது திறமைகள் அத்த‍னையும் ஒடுக்க‍ப்பட் டுவிட்டதே! என்ற ஏக்க‍மும் அதனால் உண்டாகும் மன அழுதத்திற்கும் ஆட்பட்டு நடை பிணமாக‌ வாழ வேண்டிய நிலைக்கு தள்ள‍ப்படுவார் கள். இவ்வ‍ளவு ஏன்? சிறு வயதில் தனது திறமைகளை அங்கீகரிக்காத அவனது பெற்றோர் களான உங்கள் மீது அவன் மனதில் ஆழ பதிந்து போன ஏக்க‍ங்களும் துயரங்களும், கோவமாக வெளிப்பட்டு உங்களையே கூட அவன் வெறுக்க‍ வாய்ப்பு ஏற்படும்.

கல்வியை ஆர்வமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இதில் எந்தவிதமான சங்கடமுமில்லை. ஆனால், கல்வியை தவிர இதர பிரிவுகளில் தங்களது தனித்திறமையை காட்டும் மாணவர்களுக் கு, அவர்கள் விருப்ப பிரிவை, முத ன்மையாக கொண்டும், கல்வியை இரண்டாம் பட்சமாக ஏற்று, அவர் களது தனித்திறமையுடன் கல்வி யிலும் சிறந்து விளங்கச்செய்ய‍ லாம்.

கூடுகட்டி முட்டை இட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள் கூட, தனது குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைக்கும் வரைதான் எங்கிருந் தோ தான்கொண்டு வந்த உணவை தனது அலகால் தனது குஞ்சு களுக்கு ஊட்டிவிடும்.அந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்து விட்டால், தான் உணவூட்டுவதை நிறுத்திவிட்டு, அந்த குஞ்சுப் பறவைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க் குமாம். கீழே விழுந்த குஞ்சுப்பறவை யோ தான் எங்கே கீழே விழு ந்து பல அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில் தனது சிறகுகளை படபட விரித்து பரந்து விரிந்து கிடக்கும் வானில் பறந்து செல் லுமாம்.ஏனோ இந்த மனிதன் மட்டும்தான்! தனது குழந்தைகள், தனக் கென ஒரு துறையை தேர்வுசெய்து அதில் முன் னேற விரும்பி தனது சிறகுகளை விரி த்து, வானில் பறக்க‍ முற்படும்போது, பெற்றோர்கள் அந்தக் குழந் தையின் சிறகுகளை ஒடித்துவிட்டு, தனது சிறுகுகளை விரி த்து அடைகாத்து வருவதுதான் வேடிக்கையி லும் விநோதம்.குழந்தைகள், தாங்கள் முன்னேற, ஒரு துறையை தேர்ந்தெடுக் கும்போது, அந்தக்குழந்தைகளை ஊக்கு வித்து, அவர்களுடன் நட்பு பாராட்டி, அத்துறையிலேயே அவர்க ளுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து, ஒரு நல்ல‍ சாதனையாளனாக உருவாக‌ பெற் றோர் தங்களது முழு ஒத்துழை ப்பை வழங்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள், பிற்காலத்தில் தங்களது வாழ்க்கையில்  வெற்றிகள் பல குவித் து, முழு மன நிறைவுடன் சாதனை கள் பல படைப்பது திண்ண‍ம்!.

எனது இனிய நண்பர் வினோத் (அதிஷா என்பது புனைபெயர் )..கோவையில் இருக்கும்பொழுது ..தினகரன் நாளிதழில் பணியபுரியும் பொழுது முதல் சந்திப்பு ..புத்தக விழாக்கள் பொழுது சந்திப்புகள் நிகழும் ......கடந்த 10 வருடங்களாக ...





அதிஷா 

ஞாயிறு, 17 மார்ச், 2019

நண்பன் ....(டெக்சாஸ் டு கோவை )


சிவா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது மணி 9.30. ஆங்காங்கே படுத்திருந்த சிலர், காபிக் கோப்பையைக் கையில் பிடித்தபடி நடந்துகொண்டிருந்த பயணிகள், ‘ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு’ குரல்கள், `தண்ணி பாட்டில் வாங்கிட்டு வரட்டுமாடி’ கொஞ்சல்கள், அவசர நடையில் இருப்பவர்களை இலகுவாகக் கடந்தபடி சுமையுடன் ஓடிக்கொண்டிருக்கும்  போர்ட்டர்கள்... எல்லா வற்றையும் தாண்டிப் பத்தாம் நம்பர் பிளாட்பாரத்தை அடைந்தான்.

சேரன் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்டு கோச் நிரம்பி வழிந்தது. அதற்கடுத்தது HA 1... A1 என்று ஆரம்பித்தன கோச் எண்கள். மொபைலைத் திறந்து எஸ்ஸெம்மெஸ்ஸை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். B2 - 24 என்றது ஐஆர்சிடிசி-யின் குறுஞ்செய்தி. ஒவ்வொரு பெட்டியையும் வேடிக்கை பார்த்தபடி B2 கோச்சில் சிவா ஏறும்போது மணி 9.45. இன்னும் 25 நிமிடங்களில் கோவையை நோக்கிப் புறப்பட இருந்தது ரயில்.

வெளியிலிருந்து உள்ளே வந்ததும், ஏசி கோச் இதம் தந்தது. 24-ம் எண்ணைத் தேடியபடியே ரயில்பெட்டிக்குள் நடந்தான். குழந்தை ஒன்று ஜன்னல் இருக்கைக்கு சண்டையிட்டுக்கொண்டிருந்தது. `சீட் மாத்திக்கலாமா?’ என்று ஓர் இளைஞனைக் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.  பெரும்பாலும் எல்லார் கையிலும் மொபைல். அதில் பலரது காதில் இயர்போன். 24-ம் எண் சைடு பர்த்தில், மேலே இருந்தது. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு ஷோல்டர் பேகை மேலே வைத்தான். ஏறி, இருக்கையில் இருந்த பெட்ஷீட்டை விரித்துகொண்டான். இருந்த சின்னத் தலையணையோடு பேகையும் தலைக்கு வைத்துப் படுத்துக்கொண்டு, மொபைலை எடுத்து, நெட்ஃப்ளிக்ஸைத் திறந்து, கொரியன் சீரிஸை விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தான்.
 
சில நிமிடங்களுக்குப் பிறகு ரயில் புறப்பட்டதா என்று பார்க்க கண்களைத் தாழ்த்தினான். இன்னமும் ஆட்கள் ஏறிக்கொண்டிருந்தனர். மணிபார்த்தான். 10.05. இயர்போனைக் காதிலிருந்து எடுத்து, தண்ணீர் பாட்டிலைத் தேடும்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“நான் போய்ட்டு மெசேஜ் பண்றேன். நீங்க கெளம்புங்க.  என்னமோ மொதவாட்டி நான் ஊருக்குப் போறமாதிரி நின்னுட்டே இருக்கீங்க. சொன்னா கேளுங்க. கெளம்புங்க. அஞ்சு நிமிஷத்துல வண்டி எடுத்துருவான்... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கிளம்புங்க...”

சிவாவின் காதுகள் அந்தக் குரலை உள்வாங்கி மூளைக்கு அனுப்பியது. மூளை அது ரம்யாவின் குரல்தான் என்று உறுதிசெய்தது.  நான்கு வருடங்களுக்குப் பிறகு ரம்யாவின் குரலைக் கேட்கிறான் சிவா. அதே மாடுலேஷன். அதே  ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

ரம்யா...!

“ஹேய்ய்... சிவா நாம லாஸ்ட் இயர் இன்டர்காலேஜ் காம்பெடிஷன்ல பார்த்திருக்கோம்ல? பி.எஸ்.ஜி. காலேஜ்தானே நீ? செம்ம டான்ஸுடா.”

கல்லூரி இறுதியாண்டில், ஒரு இன்டர்காலேஜ் விழாவில் ரம்யா சிவாவிடம் பேச ஆரம்பித்தது இப்படித்தான். ஆறு மாதங்கள் மிக நன்றாகவே போனது. அவள் ஹிந்துஸ்தான் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துக்கொண்டிருந்தாள். நன்றாகப் பாடுவாள். படிப்பாள். இருவருக்கும் ஒரு கதையில் நாயகன் - நாயகிக்குத் தேவையான எல்லாப் புரிதல்களும் பிடித்தங்களும் இருந்தன.

கல்லூரிப்படிப்பு முடிந்து ஒரு வருடம் இருவரின் நட்பும் தொடர்ந்தது. ரம்யா நடுவில் கீரநத்தம் செஸ் ஐடி பார்க்கில் வேலைக்குச் சேர்ந்தாள். சிவாவுக்கு ஹோப் காலேஜ் டைடல் பார்க்கில் ஒரு கம்பெனியில் வேலை. திடீரென்று அழைப்பாள்.

“சிவா... எங்க இருக்க? வீட்டுக்கு வா. ப்ரூக்ஸ் போலாம். படத்துக்குப் போகணும்.”

சிங்காநல்லூர் தாண்டி வெள்ளலூர் ரோட்டில் நான்கு கிலோமீட்டருக்கு அப்புறம் சிவா வீடு.  சாய்பாபா காலனி தாண்டி, கவுண்டம்பாளையம் போகும் வழியில் S, Q, W என சிக்கலான எழுத்துகளாக வளைந்து வளைந்து செல்லும் தெருக்கள் தாண்டி ரம்யா வீடு.

மாங்கு மாங்கு எங்கு பைக்கில் விரைவான். இருவரும் படத்துக்குப் போய் ஐபாகோவில் ஐஸ்க்ரீம் எல்லாம் முடித்துவிட்டு, வீட்டில் விட்டுவிட்டு வருவான். வாரம் இரண்டு மூன்று நாள்களாவது குறும்படத் திரையிடல், ஃப்ரெண்ட்ஸ் மீட்,  சினிமா என்று எங்காவது சந்திப்பது தொடர்ந்தது. அவளது பிறந்தநாளுக்கு கிஃப்ட் கொடுத்தபோது கைகள் நீட்டி அணைத்துக்கொண்டு ‘நீ ஸ்பெஷல்டா’ என்றதில் காதலை சிவா  உணர்ந்தான்.

ஒரு வருடத்தில் வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். ரம்யாவுக்கு அவள் தாய்மாமன் என்றால் அவ்வளவு பிரியம். அவர் திருமணமாகி திருப்பூரில் ஒரு கார்மென்ட் ஃபேக்டரி வைத்திருந்தார். அங்கிருந்து டிஷர்ட் எல்லாம் வாங்கி வந்து தருவாள். அந்தத் தாய்மாமன் ஒரு விபத்தில் இறந்துவிட, சுக்குநூறான ரம்யாவை தினமும் சந்தித்துத் தேற்றிக்கொண்டிருந்தான். இருவருக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது அந்தக் காலகட்டத்தில்தான். அப்போதெல்லாம் தூக்கமில்லாமல்  தவிப்பாள். இவனை அழைத்து, எதாவது பேசிக்கொண்டிருக்கச் சொல்வாள். இவன் அன்றைக்குப் படித்த புத்தகம், சினிமா என்று எதையாவது பேசுவான். “நான் பேசிட்டே இருக்கேன். உனக்கு தூக்கம் வந்தா தூங்கிரு. உன்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இல்லைன்னா நீ தூங்கிட்டன்னு புரிஞ்சுக்கிறேன்” என்பான் சிவா. அப்படிப் பல நாள்கள் அவளுடனே இருந்ததைப்போல உணர்ந்திருந்தான். ஆறுமாதங்கள் கழித்து அவள் பழையபடி ஆனாள். மீண்டும் சினிமா, குறும்படங்கள் என்று வார இறுதிகள் கழிய... இவனும் அவளுடனான நெருக்கத்தை ரகசியமாக ரசித்துவந்தான். அந்தக் குறிப்பிட்ட நாள் வரும்வரை.

ரஹ்மான் கான்செர்ட் ஒன்று கோவையில் நடந்தது. அவள் வெறிகொண்ட  ரஹ்மானிச ரசிகை.

``டிக்கெட் வேணும் சிவா... ரொம்ப நாளா ட்ரீட் கேட்கறீல்ல? டிக்கெட் மட்டும் வாங்கிக் குடுத்துடு. சண்டே நைட் ‘பைக் & பேரல்’ போறோம். டீல்?”

எப்படியோ யார் யாரையோ பிடித்து, இரண்டு டிக்கெட் வாங்கி அவளைப் பார்த்துக் கொடுத்ததும் கத்திய கத்தலில் ப்ரூக் ஃபீல்டே திரும்பிப் பார்த்தது.

“ஏய்.. எதுக்கு இப்படிக் கத்தற? எல்லாரும் பார்க்கறாங்க...”

“கார்த்திக்குக்கு ஒரு ரஹ்மான் லைவ் கான்செர்ட் போகணும்கறது வாழ்நாள் கனவு. டிக்கெட்டே கெடைக்காதுன்னு புலம்பினான். வாங்கிக் காட்டறேன்னேன். அதான் இவ்ளோ ஹேப்பி. நீ ஸ்பெஷல்டா” என்று இப்போதும் கட்டிக்கொண்டாள். சிவாவுக்கு எல்லாம் இருளாய்த் தெரிந்தது. அப்படியானால் அந்த ரெண்டாவது டிக்கெட் கார்த்திக்குக்கா?

கார்த்திக்?

ஒரே ஒருமுறை இன்ட்ரோ கொடுத்திருக்கிறாள். அவள் பக்கத்துவீட்டுக்காரன். குடும்ப நண்பன். பெங்களூரில் ஐடி வேலை.

ரம்யா சாதாரணமாகச் சொன்னாள். “சின்ன வயசுல இருந்து அவனைப் பிடிக்கும்டா.”

``யூ மீன்... ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?”

ரம்யா வராத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டவளாய்க் குனிந்தாள். அவளுக்கு அது செட்டே ஆகவில்லை!

“சொல்லவே இல்லையே நீ?”

“இல்ல சிவா... நான் லவ் பண்றேன். அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல. இப்ப நான் பாக்கற புராஜெக்ட் முடியப்போகுதுன்னு அவன்கிட்ட எங்கப்பா சொல்லியிருக்கார். உடனே அவன்  எனக்கும் பெங்களூர்ல - அவன் வொர்க் பண்ற கம்பெனிலயே - வேலை ஏற்பாடு பண்ணியிருக்கான். இப்ப நான் பாக்கறதவிட டபுள் சாலரி. ரெண்டு வாரத்துல இன்டர்வ்யூ. பெங்களூர்க்கு ஸ்லீப்பர் பஸ்லதான் போறோம். கரெக்டா  நாங்க போற அன்னைக்கு அடுத்தநாள் அவனுக்கு பர்த்டே. நைட் 12 மணிக்கு பஸ்ல வெச்சுதான் சொல்லப்போறேன். உன்கிட்டதான் மொதல்ல சொல்றேன். ஏன்னா நீ எப்பவுமே ஸ்பெஷல்” என்றாள்.

‘போடீ!’ என்று ஓங்கி அறையலாம்போல இருந்தது இவனுக்கு.

`இவளுக்கு டிக்கெட் புக் செய்ய, கூப்பிடும்போதெல்லாம் ஓடிப்போய் நிக்க, ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்க, தலைவலிக்குது என்றாலே டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி அழைத்துச்செல்ல... ‘வர்ற வழில சானிடரி நாப்கின் வாங்கிட்டு வாடா’ என்று சொல்வது உட்பட எல்லாவற்றுக்கும் நான்... லவ் பண்ண மட்டும் கார்த்திக்.’

“அவன்கூட இருந்தா ஒரு தனி ஃபீல். என்ன சொல்றதுன்னு தெரியல. அவன் மங்குணி. வேலை வேலை வேலைதான். கம்ப்யூட்டரைப் பிரிச்சு மேய்வான். எங்க ரெண்டு ஃபேமலிக்குமே லைட்டா ஒரு ஐடியா இருக்கு. சின்ன வயசுல இருந்து ஃபேமலி ஃப்ரெண்ட்ஸ் வேற.”

அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க “ஒரு அர்ஜென்ட் வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அந்த ஒன்றரை வருட நாள்களில் சிவா, அப்படி அவளை சடாரென்று விட்டுப் புறப்படுவது அதுதான் முதல்முறை.

வீட்டுக்கு வந்ததும் அவளிடமிருந்து வாட்ஸ் அப் மெசேஜ் வந்திருந்தது. வேண்டுமென்றே அதைப் பார்க்காமல் விட்டான். பிறகு போனை எடுத்து ஆன்லைனில் இருப்பதாய்க் காட்டிக்கொண்டான். ஆன்லைனில் இருந்தும் அவளது மெசேஜைப் பார்க்காமல் இருப்பதை அவள் அறியட்டும் என நினைத்தான். இன்னமும் அவன் மனது நிலைகொள்ளாமல் தவித்தது. இப்போது அவள் மெசேஜுகளைப் பார்த்தான்.

 - என்னாச்சுடா உனக்கு?

 - எவ்ளோ சந்தோஷமா உங்கிட்ட ஷேர் பண்ணினேன்.

 - அப்டியே அம்போனு விட்டுட்டுப் போய்ட்டல்ல? திரும்ப வீட்டுக்குப் போக டாக்ஸிக்குக் காசிருக்கான்னுகூட நீ கேட்கலல்ல? உன்கூட வந்தா எப்பவும் நீ இருக்கன்ற தைரியத்துல வெறுங்கையோடதானே வருவேன்?

`அடே இளிச்சவாயா!’ என்பதைத்தான் இந்தப் பெண்கள் எத்தனை விதங்களில் அழகாகச் சொல்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டான் சிவா.

மெசேஜைப் பார்த்த ப்ளூ டிக் அவளுக்குத் தெரியட்டும். பதில் சொல்லாமல் இருப்போம். கிடந்து தவிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான் சிவா. ஆனால் அவளை ஆன்லைனில் காணவில்லை. வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறுவதும் மீண்டும் வாட்ஸ் அப் வந்து அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்ப்பதுமாய், சிவாதான் நிலைகொள்ளாம லிருந்தான்.

இரண்டு மணிநேரத்தில் குறைந்தது ஐம்பது முறைக்கு மேல் போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான். இரண்டு மணிநேரம் கழித்து,  அவளிடமிருந்து, `நீ என்னமோ சரியில்லை. நாளைக்குப் பேசறேன் உன்கிட்ட. எகெய்ன்... யூ ஆர் ஆல்வேஸ் ஸ்பெஷல் டு மீ. குட்நைட்’ என்ற மெசேஜ் வந்திருந்தது. அடுத்தநாள் அவள் அழைத்தபோது ‘will call later’ என்று மெசேஜ் அனுப்பினான். வெட்டியாக இருந்தாலும் பிஸி என்றான். சரியாக மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பாமல் இருந்தான். அவள் நேரடியாகக் கிளம்பி சிவாவின் வீட்டுக்கு வந்து வெளியே அழைத்துச் சென்றாள். “நீயே என்னைப் புரிஞ்சுக்கலைன்னா வேற யார் புரிஞ்சுப்பா?” என்று சண்டை போட்டாள். ‘உனக்கு என் ஃபீல் புரியவே இல்லையா ரம்யா?’ என்று கத்தவேண்டும் போலிருந்தது சிவாவுக்கு. கார்த்திக் இவர்களைவிட ஏழு வயது சீனியர். நிச்சயம் இவனைவிட அவளுக்குப் பொருத்தமாக இருப்பான் எனும் உண்மைவேறு சிவாவை அசைத்துப் பார்த்தது. பத்துவருட எக்ஸ்பீரியன்ஸ். சீனியர் புராஜெக்ட் மேனேஜர் வேறு. நிச்சயம் இவளுக்கு பெங்களூர் வேலை உறுதி.

அதற்குப் பிறகு இரண்டு வாரங்களில், அவளை அழைக்கும்போது கால்வெய்ட்டிங் வந்தால், சிவாவுக்கு கார்த்திக்கின் முகம் வந்து போகும். அவள் ஆன்லைனில் இருந்து, ப்ளூ டிக் வரவில்லை என்றால் கார்த்திக் மனதுக்குள் உருவமாய் வந்து சிரிப்பான். அப்படியே ப்ளூ டிக் வந்து 30 செகண்டுக்குள் அவளிடமிருந்து பதில் வரவில்லையென்றால் கை பரபரக்கும். ஃபேஸ்புக்கில் கார்த்திக் என்ற பெயரில் இருக்கும் எல்லாரையும் சல்லடை போட்டுத் தேடினான். அவளது ஃப்ரெண்ட்லிஸ்ட்டை இரண்டு மணிநேரம் குடைந்தான். அவளது கார்த்திக்கின் ஐடி எது என்று தெரியவில்லை. எதற்கோ அவள் சிவாவை அழைத்து யோசனை கேட்டபோது  “கார்த்திக்கிட்டயே கேளேன்” என்று சண்டை போட்டான்.

இனி அவள் தனக்கானவளாக மாறப்போவதே இல்லையென்று புரிந்துகொண்டான் சிவா.  “வர்ற சண்டே  ரஹ்மான் கான்செர்ட்... அடுத்த சண்டே பெங்களூர்” என்று அவள் அத்தனை சந்தோஷமாகப்  பகிர்ந்துகொண்டபோது, “என்னை விட்டு அவன்கூடப் போறது உனக்கு ஃபீலே ஆகலையா?” என்று கேட்டான்.

“என்னடா பேசற நீ? நீ வேற அவன் வேறடா. என் லைஃப்ல நீ, அவன் எடத்துக்கு வரலாம். ஆனா உன்னை மாதிரி எல்லாமுமான நண்பனா கார்த்திக்கால மாறவே முடியாது. நீ எப்பவுமே ஸ்பெஷல்” என்றாள். அவள் ‘நீ ஸ்பெஷல்’ என்றாலே இவனுக்குள் எரிச்சல் மூண்டது. பேசிக்கொண்டிருக்கும்போதே போனை நோண்டிக்கொண்டிருந்தது இவனுக்குள் வெறியைத் தூண்டியது. மீண்டும் பலமாக சண்டை ஆரம்பிக்க, அவளும் கோபித்துக்கொண்டு ‘என்னைக்காச்சும் உன்னை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கேனா?’ என்று கேட்டு சண்டை பிடிக்க... பொது இடத்தில் ‘போடீ...’ என்று திட்டிவிட்டு வந்துவிட்டான். அவள், இவன் முதுகில் சொன்ன ‘கெட் லாஸ்ட்’ இவனுக்குக் கிணற்றுக்குரலாய்க் கேட்டது.

அதன்பிறகு அவளை மொத்தமாகத் தவிர்த்தான். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், கால் என்று எல்லாவற்றிலும் பிளாக் செய்தான். ஆபீஸில் ரொம்பநாள் அவர்களாகவே கேட்டுக் கொண்டிருந்த ஆன்சைட்டை ஓகே செய்து டெக்ஸாஸுக்குப் பறந்தான். முழுவதுமாக வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ரம்யாவின் அத்தியாயம் தன் வாழ்வில் முடிந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.

 டெக்ஸாஸில் இருந்தபோது வாரத்துக்கு ஒருமுறை அம்மா அப்பாவிடம் ஃபேஸ்டைமில் பேசுவான். ஆறுமாதங்கள் சென்றிருக்கும்.  ஒருமுறை அம்மா “வீடியோ கால்ல வாடா” என்றாள். எப்போதாவதுதான் அவளாகக் கேட்பாள். சரி என்று வீடியோ கால் செய்தான். இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு, “டேய் ஒருநிமிஷம் யார் வந்திருக்காங்கன்னு பார்டா” என்றாள் அம்மா. டக்கென்று அம்மாவின் முதுகுக்குப் பின்னாலிருந்து ரம்யா வந்தாள். ஒருநிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் சிவா.

“அடேய் கோவக்காரா” என்றாள் ரம்யா. “எல்லாத்துலயும் பிளாக் பண்ணிட்டா சரியாப்போய்டுமா? உலகம் ரொம்பச் சின்னதுடா!” என்று சிரித்தாள். முன்னைவிட சற்றுப் பூசலாகத் தெரிந்தாள். “என் மெய்லுக்குக்கூட நீ ரிப்ளை பண்லைல்ல?” என்றாள்.

நான்கு மாதங்களுக்கு முன் அவளிடமிருந்து மின்னஞ்சல் வந்தது நினைவுக்கு வந்தது.  அப்போதிருந்த கொலவெறி மைண்ட்செட்டில் திறக்காமலே கிடப்பில் போட்டு அப்படியே விட்டுவிட்டான்.

ரம்யா திரும்பி அம்மாவிடம் “அம்மா... ப்ளீஸ்ஸ்ஸ்...” என்றாள். அம்மா புரிந்துகொண்டவளாக “தனியா பேசறியா... சரி கண்ணு...” என்று நகர்ந்து சென்றாள்.

“பாரு. அவங்க வயசுக்கு அவங்க எவ்ளோ புரிஞ்சு நடந்துக்கறாங்க. நீ ஏண்டா இப்படி இருக்க? ஏன் என்னை மொத்தமா அவாய்ட் பண்ற?” என்று கேட்டாள் ரம்யா.

“ப்ச்... விடுப்பா... சொல்லு” என்றான் முழுதாக கோபம் தணியாததைக் காட்டிக்கொள்ளும் குரலில்.

“கண்ண மூடு.”

“எதுக்கு?” என்று கேட்டான்.

``கண்ணமூடு. நான் சொல்றப்ப திற” என்றாள்.

கண்களை மூடினான். அவளிடமிருந்து  “இப்ப தொற” என்ற குரல் கேட்டதும் திறந்தான். வீடியோ காலிங் திரையை முழுவதும் மறைத்தபடி  `கார்த்திக் Weds ரம்யா’ என்றெழுதப்பட்ட திருமணப்பத்திரிகை இருந்தது. சில நொடிகளில், பத்திரிகை விலகி ரம்யா தன் முகம் காட்டினாள்.

“வீட்ல எல்லாரும் காலைல ஈச்சனாரில போய் மொத பத்திரிகை வைக்கறாங்க. நீ நம்பமாட்ட. நான் உடனே உங்கம்மாட்ட வந்து உனக்கு இன்னைக்கு வீடியோ கால் பண்ணச் சொன்னேன். உனக்குத்தான் மொத பத்திரிகை. இன்னும் உங்கம்மாக்குக்கூட ஏன் வந்திருக்கேன், எதுக்கு உன்கிட்ட பேசறேன்னு தெரியாது. நீ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்டா” என்றாள்.

இவனுக்கு முன்பைப்போல கோபமோ ஆற்றாமையோ எதுவுமே இருக்கவில்லை. தன் மனது அமைதியாக இருப்பதைக் கண்டு அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. “கல்யாணத்துக்கு நீ நிச்சயம் வரணும். வர்லைன்னா கொன்னுருவேன்” என்றாள். போகப்போவதில்லை என்றாலும் அப்போதைக்கு சிரித்து “டிரை பண்றேன் ரம்யா” என்றான்.  

அடுத்தநாள் மீண்டும் மனது முன்பைப்போல கேள்விகள் கேட்க ஆரம்பித்தது. மண்டை குடைய, தன்னை ஏன் நிராகரித்தாள் என்பதை மனது அலைபாய்ந்தது. அம்மாவிடம் ``நான் வர்றது கஷ்டம்மா... இப்ப லீவே கேக்க முடியாது. நீ வேணா போய்ட்டுவா. அவளைப் பத்தி என்கிட்ட எதும் பேசாத” என்று சொல்லிவிட்டான்.  மீண்டும் சில மாதங்களிலேயே அவள் நினைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான். இரண்டு வருடங்கள் கழித்து ஒருமுறை கோவை வந்தான். அப்போதும் நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரையும் பார்த்துவிட்டுச் சென்றான். அப்போது நண்பர்களுடன் கழித்த ஒரு  நல்லிரவில் மட்டும் ரம்யா பற்றிய பேச்சு வந்து சென்றது. பெங்களூரிலிருந்து அவர்கள் சென்னைக்கு மாற்றலாகி செட்டில் ஆகிவிட்டார்கள் என்பதை அறிந்தான். ஆனால் கவனமாக, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அதைக் கடந்தான்.

அந்த வீடியோ காலுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்குப் பின் இன்றைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துதான் அவள் குரல் கேட்கிறான் சிவா. ரயில் இப்போது புறப்பட்டது. தனக்கடுத்த வரிசையில் சைடு பர்த்தில் கீழே இருந்தாள் ரம்யா. பேசுவதா வேண்டாமா என்று குழம்பினான். பிறகு தவிர்க்கலாம் என்று முடிவுசெய்து அமைதியாக மொபைலைக் கையில் எடுத்தான்.

சில நிமிடங்களிலேயே டிடிஆர் வந்து கைநீட்டினார். பர்ஸைத்தேடி, பான்கார்டை எடுத்து நீட்டினான். அப்போது அவருக்குப் பின்னால் வந்து, ரம்யா தன் ஐடி கார்டுடன் நின்றதைக் கவனித்தான். மிகச்சரியாக டிடிஆர், ரம்யாவை மறைத்துக்கொண்டிருந்தார்.  டிடிஆர் இவனது ஐடி கார்டை, வாங்கிச் சரிபார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்தார். அவர் இவனிடம் கார்டை நீட்டும்போது கொஞ்சம் நகர்ந்ததில், பின்னால் நின்றுகொண்டிருந்த ரம்யா சிவாவைக் கவனித்துவிட்டாள்.

“ஹேய்ய்ய்ய்ய்... சிவா...” என்றவள் டெசிபல் குறைத்து “வாட் எ சர்ப்ரைஸ்!” என்றாள். அவளது ஹேய்ய்ய்ய்க்கு விழித்து, நிமிர்ந்த சில கண்களிடம் சைகையிலேயே ஸாரி சொன்னவள் சிவாவை `இறங்கு இறங்கு’ என்று கைகாட்டிக்கொண்டே டிடிஆரிடம் கார்டை நீட்டி, சரிபார்த்து வாங்கிக்கொண்டாள்.

பொது இடம் வேறு. என்ன சொல்வதென்று குழம்பிய சிவா, தவிர்க்க முடியாமல் இறங்கினான். “இங்க வா” என்று உரிமையாய் அவன் கைபிடித்து அவளது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தாள்.

கொஞ்சநேரம் அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள சிரமப்பட்டான் சிவா. பாரதிராஜா, பாலுமகேந்திரா தொடங்கி மணிரத்னம், கௌதம் மேனன் என்று பலரும் காதல் காட்சிகளுக்கு ரயிலை சம்பந்தப்படுத்துவதில் ஏதோ நிஜம் இருப்பதாய் அந்த நிமிடத்தில் தோன்றியது அவனுக்கு. ஜன்னலுக்கு வெளியே உலகம் நகர்ந்து கொண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த ரம்யாவின் கண்களில் கோடிசூர்யப்பிரகாசம்.

``ஒருநிமிஷம் இரு” என்றவள் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தாள். “கார்த்திக்... யு நோ ஹூம் ஐ மெட் இன் டிரெய்ன் நவ்... உன்னால கெஸ் பண்ணவே முடியாது” என்றாள்.

“சிவாவா?” என்றான் கார்த்திக் எதிர்முனையில்.

“ஹைய்ய்ய்யோ... ஹைய்ய்யோ... எப்படி கார்த்திக்?” என்று ஆச்சர்யம் கூட்டினாள் ரம்யா.

“வேற எதுக்கு உன் குரல் இவ்ளோ எக்ஸைட் ஆகப்போகுது?” என்றவன் “சிவாட்ட குடு” என்றான்.

சிவா முழுதாகப் புன்னகைக்காமல், மொபைலை வாங்கினான்.

``ஹலோ கார்த்திக், எப்டி இருக்கீங்க?”

“ஹாய் சிவா... பரவால்லியே, பேசறீங்க. அநியாயத்துக்கு இன்ட்ரோவெர்ட்னு கேள்விப்பட்டேன். டெக்ஸாஸ்ல இருந்து எப்ப வந்தீங்க? எவ்ளோ நாள் டிரிப்?”

 “நேத்துதான். மூணுவாரம் இருக்கேன் கார்த்திக்.”

“ஏன் கோவை நேரா போகாம சென்னை டு கோவை?”

“சென்னை ஆபீஸ்ல  ஒருநாள் அபீஷியல் வேலை இருந்தது. அத முடிச்சுட்டு அப்டியே வந்தேன். ஒரு டிரிப் ஆபீஸ் செலவு!”

“ரிட்டர்ன் சென்னைல இருந்தா... இல்ல...”

“இன்னும் டிசைட் பண்ல கார்த்திக்.”

“ஓகே... சென்னைல இருந்துன்னா ஒருநாள் முன்னாடி வந்துரணும். எங்ககூட இருந்துட்டு அப்றம் போலாம்” என்றான் கார்த்திக்.

“ஷ்யூர்” என்றவன் மொபைலை ரம்யாவிடம் கொடுத்தான். “ரொம்ப பயந்துட்டே வழியனுப்பினியே... இனி நிம்மதியா தூங்கு. என் ஸ்பெஷல் ஃப்ரெண்ட் இருக்கான்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் ரம்யா.

``உன்னைப் பத்தி நிறைய சொல்லியிருக்கேன் கார்த்திக்கிட்ட. சரி, நீ சொல்லு... எப்படி இருக்க? எப்ப கல்யாணம்? யாரையாச்சும் பார்த்துட்டியா?” என்று கேள்விகளை அடுக்கியவள், “நீ எங்க பார்த்திருக்கப்போற...” என்று பேச்சை நிறுத்தினாள்.
சிவா அமைதியாக நகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சிவா...”

“சொல்லு...”

“ஏன் என் கல்யாணத்துக்கு வர்ல? ஓகே. அவ்ளோ செலவு பண்ணி வரமுடியாது.  அட்லீஸ்ட் ஒரு விஷ் கூடவா பண்ணத் தோணல?”

சிவா அமைதியாக இருந்தான். அவளை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். என்னதான் அவள் மெதுவான குரலில் பேசினாலும் அந்த இரவின் அமைதிக்கு ஒலி அடங்கவில்லை.

``எனக்குக் கல்யாணமாகி நாலு வருஷமாச்சு சிவா. நீயும் வெளிநாடெல்லாம் போய் வேலை செஞ்சுட்டிருக்க. இனியும் இப்படி எதையும் எக்ஸ்ப்ரஸ் பண்ணாமயே இருக்கப்போறியா?”

சிவா தீர்மானித்தான். இந்த இரவில்... இந்த ரயிலில் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் போதுமென்று தோன்றியது.

“ரம்யா... நான் உன்னை லவ் பண்ணினேன்னு உனக்கு ஃபீல் ஆகவே இல்லையா?”

“இல்லையே. மொதல்ல நீ உன் லவ்வை எக்ஸ்ப்ரஸ் பண்ணியிருக்கியா?”

“உன்கூடப் பழகின ஒன்னரை வருஷத்துல நீ கூப்டப்பலாம் வந்து நின்னது... உனக்கு என்னவும்னா மொத ஆளா நீ எனக்குக் கூப்டறதுலாம்?”

 “அது கேர். அக்கறை. காதல்னு அதை நான் எப்படி எடுத்துக்கறது? நீ சொன்னியா?”

“சொன்னாத்தான் தெரியுமா?”

“ஆமா. சொன்னாத்தான் தெரியும்” தீர்க்கமாகச் சொன்னாள் ரம்யா. “அந்த ஒன்னரை வருஷத்துல எப்பவாச்சும் நீ என்கிட்ட சண்டை போட்டிருக்கியா சிவா? நான் வரச்சொல்லி வராம இருந்திருக்கியா? நான் பண்றது எதாவது பிடிக்கலைன்னு சொல்லியிருக்கியா? அதாவது கார்த்திக் மேல எனக்கு லவ் இருக்குன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி?”

சிவா முழித்தான்.  இல்லையே என்று தலையாட்டினான்.

“இல்லைல்ல? என்கிட்ட எதுக்குமே நீ கோவிச்சுக்கிட்டது இல்லை. சண்டை போட்டதில்லை. `வா’ன்னா சொன்ன நேரத்துக்கு வந்திருக்க. அப்படி இருக்கற ஒருத்தனை எப்படி என்னால லவ்வரா நினைச்சுக்க முடியும். உலகத்துலயே பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கற ஒருத்தனாலதான் அப்படி எல்லாம் நடந்துக்க முடியும். தவிரவும் எப்பவுமே உன் ஃபீலிங்ஸை நீ எக்ஸ்ப்ரஸ் பண்ணினதில்லை நீ. ஆனா அதான் நீ. அதான் உன் ஸ்பெஷாலிட்டி. ஒண்ணு சொல்றேன் சிவா. இந்த உலகத்துல கார்த்திக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. சிவா கிடைக்கறதுதான் ஒரு பொண்ணுக்கு ரொம்பக் கஷ்டம். பாதி சிவாக்களை இவங்களே கார்த்திக் ஆக்கிக்கறாங்க. கார்த்திக்கா ஆக முடியாத சிவாக்கள் என்னத்தையோ இழந்துட்டதா ஃபீல் பண்ணிக்கிட்டுத் திரியறாங்க. அவங்களுக்குத் தெரியறதில்லை... கார்த்திக்கைவிட சிவா ஸ்பெஷல்னு!”

சிவா இப்போது நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் பார்த்தான். நான்கு வருடங்களுக்கு முன்பும் சரி... இப்போதும் சரி. அவள் தெளிவுடன்தான் இருந்திருக்கிறாள் என்று தோன்றியது சிவாவுக்கு. இப்போது இன்னும் அதிக தெளிவு!

“நீ எனக்கு இப்பவும் எப்பவும்  அதே ஸ்பெஷல் சிவாதாண்டா. இன்னும் எத்தனை வருஷம் என்கிட்ட நீ பேசலைன்னாலும் நான் அதே மாதிரி உன்கிட்ட பேசமுடியும். நீ என்னை நேசிச்சதோ, அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணாம விட்டதோ, நான் கார்த்திக்கை லவ் பண்ணினதுக்கு இத்தனை வருஷம் ரியாக்ட் பண்ணினதோ எதையுமே நான் தப்பா சொல்லல. என்னால ரொம்ப நல்லா புரிஞ்சுக்க முடியுது. ஏன்னா, எனக்கு நீ எப்படியோ அப்படி உனக்கும் நான் ஸ்பெஷல் ஃப்ரெண்ட்தானே. அதைக்கூடப் புரிஞ்சுக்கலைன்னா எப்படி?”

இப்போது சன்னமாகப் புன்னகைத்தான். ``சரி... உனக்குக் குழந்தை?” என்றான்.

“ஒரு பையன். பேரு என்ன தெரியுமா?”

`சிவா’வாக இருக்காது என்று உறுதியாகத் தெரியும். ஆனாலும் என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.

“நண்பன்! தமிழ்ப்பேருதான் வைக்கணும்னு அவருக்கு ஆசை. பல பேருக்கு அப்பறம் இதை முடிவு பண்ணினோம். நண்பான்னு எல்லாரும் கூப்டுவாங்கல்ல? திட்றதுன்னாகூட ‘டேய் நண்பா’ன்னு கூப்டுத்தான் திட்டுவாங்க” சிரித்தாள். “எவ்ளோ ஸ்பெஷல் பேருல்ல!”

ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.

“அவனுக்குப் பாட்டின்னா உசிரு. போனவாரம் அம்மா வந்திருந்தாங்க. முந்தாநாள் அவங்க கெளம்பறப்ப அழுதான்னு, சொன்னாக் கேட்காம கூட்டிட்டுப் போய்ட்டாங்க. இன்னைக்கு அங்க போய் அம்மா அம்மான்னு அழுதிருக்கான். போய் ரெண்டு நாள் இருந்துட்டு நான் கூட்டிட்டு வரணும்.”

அதன்பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டி ருந்தார்கள். காலை ஆறு மணிக்கு அவள்தான் எழுப்பிவிட்டாள்.

“தூங்கவேல்லடா. ரொம்ப எக்ஸைட்டடா இருந்தது உன்னைப் பார்த்தது. வீட்டுக்கு வா. பையனப் பாரு. மறுபடியும் மூஞ்சியத் தூக்கிவெச்சுட்டுத்  திரியாதே. மொதல்ல அப்பாம்மா திட்றதெல்லாம் உன்கிட்ட புலம்பிட்டிருந்தேன். இப்ப கார்த்திக்கும் நண்பனும் பண்ற அழிச்சாட்டியமெல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணுவேன். அவ்ளோதான் வித்தியாசம். என் நம்பர் அதேதான். தயவுசெஞ்சு அன்பிளாக் பண்ணு, சரியா?” என்றாள்.

கோவை ரயில் நிலையத்திலிருந்து அவள் தனி டாக்ஸியில் செல்ல, இவனும் வீடு வந்து சேர்ந்தான்.

தூங்கி எழுந்ததும் சென்னை ஆபீஸுக்கு அழைத்தான்.

“ஹெச் ஆரைக் கனெக்ட் பண்ணுங்க.”

ஹெச் ஆர் லைனில் வந்தார். “சார்... நான் சிவா பேசறேன். நேத்து மீட் பண்றப்ப டெக்ஸாஸ்ல இருந்து சென்னை ஆபீஸுக்கு வர இன்டரஸ்ட் இருக்கறதா சொன்னேன்ல? வேணாம் சார். அதப்பத்தி இப்போதைக்கு வி.பி-கிட்ட எதும் பேச வேண்டாம். டெக்ஸாஸ்லயே இன்னும் ரெண்டு மூணு வருஷம் இருக்கேன். அப்பறம் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வேறு சில சம்பிரதாயமாகப் பேசிவிட்டு வைத்தான்.

``எந்திரிச்சுட்டியா” என்று அம்மா வந்தாள். “எத்தனை நாள் இருக்கப்போற?” என்று கேட்டாள்.

“மூணுவாரம்மா. கார் இருக்குல்ல? ஈவ்னிங் ரம்யா வீட்டுக்குப் போய் அவ பையன ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம். நீயும் வா. போறப்ப சென்னை போய்ட்டு அவங்க வீட்ல ஒருநாள் தங்கிட்டுப் போகணும்மா” என்றான்.