தேவராட்டம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு…. தேவராட்டம் ஆடி போராட்டம் !!
By Selvanayagam PFirst Published 26, Nov 2018, 9:53 PM IST
devarattam protest against devarattam
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் தேவராட்டம்' என்ற படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி, தேவராட்டம் ஆடி நுாதன போராட்டம் நடைபெற்றது.
கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், டைரக்டர் முத்தையா இயக்கி நடிகர் கவுதம் கார்த்திக், நடிக்கும் திரைப்படத்துக்கு தேவராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பெயர் தெய்வீக கலையை கொச்சைப்படுத்தி, வன்முறையை துாண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பெயரை மாற்ற வேண்டும் எனவும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
தேவராட்டம் என்பது ராஜகம்பள நாயக்கர் குலத்தின் பாரம்பரிய இசை நடனம். குடும்பத்தில் நடக்கும், சுக, துக்க நிகழ்வுகளிலும், கோவில் விழாக்களிலும் தேவராட்டம் கட்டாயம் இடம்பெறும். இன்றளவும், இந்த நடைமுறை தொடர்கிறது.
பல நுாற்றாண்டுகளாக தெய்வீக கலையாக நாங்கள் போற்றி வருவதை, கொச்சைப்படுத்தும் வகையில், ஞானவேல்ராஜன் தயாரிப்பில், டைரக்டர் முத்தையா, நடிகர் கவுதம் கார்த்திக், 'தேவராட்டம்' என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர்.
இதனைக் கண்டித்து உடுமலை குட்டை திடலில், உருமி இசை ஒலிக்க, பாரம்பரிய கலையான தேவராட்டத்தை ஆடி, 100க்கும் மேற்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்படத்தின் டீசர், வன்முறையை துாண்டும் வகையிலும், நடனத்தை வேறு விதமாக சித்தரிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, படத்தின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். படக்குழு மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என போராட்டத்தில் ஈடுபட்ட கம்பளத்து நாயக்கர் இன மக்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக