வியாழன், 22 நவம்பர், 2018




உடுமலைப்பேட்டை குட்டைத்திடலில் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ...

அன்பு உறவுகளுக்கு நமது ராஜகம்பள சமூகத்தின் கலைநடன பாரம்பரிய பெயரான தேவராட்ம் என்பதனை திரு. கே.ஈ.ஞானவேல்ராஜா திரைப்படத்தயாரிப்பாளர் ஸ்டுடியோ கீரின் 2 ஆவது தளம் 13ஃ6 தணிகாசலம் ரோடு தி.நகர் சென்னை -600 007 2. திரு.முத்தையா இயக்குநர். 3. திரு.கௌதம் கார்த்திக் நடிகர் சென்னை ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ள சினிமா படத்திற்கு தேவராட்டம் என்று சூட்டியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேற்படி படத்தின் டீசரைப்பார்த்த போது அதில் வன்முறையைத் தூண்டும் விதமாகஅமைந்துள்ளது. அந்த படத்திற்கு சமூகத்தின் கலை நடன பாரம்பரிய பெயரான தேவராட்டம் என சூட்டியிருப்பதை கண்டித்து அதனை திரைப்படத் தணிக்கைக்குழு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் , இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்படத் தணிக்குழு,தமிழக முதலமைச்சர், தமிழக துணை முதலமைச்சர் , தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை , மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை மேற்படி தேவராட்டம் எனும் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் வேதனைக்குரியதாகும். எனவே. நமது சமூக நாயக்கர் மற்றும் நாயுடு சமூகத்தைச் சார்ந்த அனைத்து சங்கங்கள் அறக்கட்டளை, அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து வருகின்ற 25.11.2018 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி சுமாருக்கு உடுமலைப்பேட்டை குட்டைத்திடலில் அமைதியான முறையில் நமது கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம் நமது குல நடன கலையான தேவராட்டத்தை உறுமியுடன் சேர்ந்து ஆடியும் அதே சமயம் மேற்படிபெயரை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றக்கோரியும் ஒரு கண்டன போராட்ட நடத்த உள்ளோம். அது சமயம் நமது நாயக்கர் மற்றும் நாயுடு சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்ததந்த ஊர்கில் உள்ள தேவராட்டக்கலைஞர்களையும் உறுமியுடன் சேர்ந்து அழைத்து வந்து தவறாது கலந்து மேற்படி தேவராட்டத்தை நடத்திக்கொடுக்கும்படி அன்புடன்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
என்றும்சமூக உணர்வுடன்  

கம்பள விருட்ச அறக்கட்டளை
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, விடுதலை களம், நாயக்கர் சேனா, கீர்த்திவீரர் எத்தலப்ப நாயக்கர் இளைஞரணி , கணம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர் நற்பணி மன்றம் , மற்றும் நாயக்கர் நாயுடு இன இளைஞர்கள், சில்லவார் ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சென்னை.வீரபாண்டிய கட்டபொம்மன் கல்விக்கழகம் மற்றும் இன மக்கள் அனைவரும் வாரீர் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக