உடுமலையில் புதைந்திருக்கும் வரலாற்று சின்னங்கள்: இணைய தளத்தில் வெளியிட கோரிக்கை
உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை காக்கவும், இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் வகையிலும், திருப்பூர் மாவட்ட இணைய தளத்தில் வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் குறித்த தகவல்களை திரட்டி, மாவட்ட இணைய தளத்தில் சேர்க்க, கலெக்டர் சமயமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த இணைய தளத்தில், உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சமணர்கள் கால கல்வெட்டு உள்ளது. பல அடி உயரத்துக்கு உள்ள கல்வெட்டில் சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததை குறிக் கும் வகையில் நிலா மற்றும் கமண்டலத்துடன் கூடிய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் இருபுறங்களிலும் அதிகளவில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள மிக பழமையான கல் வெட்டு, தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியின் தொன் மையை விளக்கும் வகையில் உள்ள இக்கல்வெட்டை இணைய தளத்தில் வெளியிடுவதன் மூலம் இப்பகுதியின் பழமை வெளிப் படும். தகவல்களை இணைய தளத்தில் வெளியிடுவதால் கல் வெட்டு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் வாய்ப்புள்ளது
பழமைவாய்ந்த குடிமங்கலம் சோழிஸ்வரர் கோவில், கோட்டமங்கலத்தில் உள்ள சிற்பங்கள் நிறைந்த கல்தூண், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் ஆகியவற்றையும் இணைய தளத் தில் வெளியிட இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு உயிர் இழந்த, தளி பாளையக்காரர் எத்தலப்பன் வம்சாவளியினர் சிலைகள், திருமூர்த்தி மலை காண்டூர் கானல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்கு போராடிய எத்தலப்பன் வரலாறு குறித்து, திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரியாத நிலை உள்ளது.
இச்சிலைகள் குறித்த விழிப்புணர்வு கிடைக்க, மாவட்ட இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளின் வரலாறு தெரியவருவதுடன் வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். எனவே, உடுமலை பகுதியில் உள்ள பழமையான சின்னங் களை மாவட்ட இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக