வியாழன், 29 நவம்பர், 2018

வெற்றிக்கு வித்திடும் நிர்வாகத்திறமைகள்........

அலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உயர் பதவி படிக்கட்டுகளில் சரசரவென ஏறி முதலிடம் பிடிக்க கீழ்க்கண்ட மென்திறமைகள் கட்டாயம் தேவை...
நமக்கான இடத்தை நிரப்புதல்:
நம்மை என்ன நோக்கத்திற்காக எடுதார்களே அதை சிறந்த முறையில் செய்து முடிப்பது. சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். ஒவ்வெருவரும் தனக்கான வேலையை சரியாக செய்யும் பட்சத்தில் நிர்வாகம் சரியான முறையில் முன்னேற்றப் பாதையில் இயங்கும்.
விதிகளை பின்பற்றுதல்:
நமக்கு நிர்வாகத்தின் மூலம் என்ன பொறுப்புகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நாம் உயர் அதிகாரி என்பதற்காக 5 நிமிடம் தாமதமாக போனால் பரவாயில்லை என்று எண்ணம் கொண்டிருப்பது மிகத் தவறானது. ஊழியர்களுக்கு என்ன விதி என வகுக்கப்பட்டுள்ளதோ அதைச் சரியாக பின்பற்றுவது. நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
ஆவணப்படுத்தும் திறமை:
பணி குறித்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், அதைப்பற்றி முழுமையாக உள்வாங்குவதோடு, அதை சரியான முறையில் பின்பற்றுதல் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும். இது இங்கு அல்ல வேறு எங்கு பணியாற்றினாலும் பயன்படும்.
அளவீடு செய்யும் திறமை:
அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 100 பேர் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால் அதற்கான தயாரிப்பு என்ன? என்பதில் தொடங்கி இதே வேகத்தில் நகர்ந்தால் நிர்வாகம் இந்தாண்டு இவ்வளவு லாபம் ஈட்டும் என்பது வரை தெளிவாக அளவீடு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் திறன்:
நிர்வாகம் எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கும் என்பதை யாரலும் கணிக்க முடியாது. எனவே எப்போதும் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு, அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து கூறும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
ஒத்துப்போகும் திறன்:
எப்போதும் தனியாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை அதற்காக காலரை தூக்கிவிட்டுக்கொண்டே சுற்றக்கூடாது. எல்லா விஷயங்களில் இல்லாவிட்டாலும் கூட நிர்வாகத்தின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் மட்டுமாவது ஒத்துப்போகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் 'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது போல வீழ்ந்தால் தூக்கிவிட யாரும் இருக்கமாட்டார்கள்.
மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்:
'வீடு எப்படியோ அப்படித்தான் நாடும்' என்பதுபோல் மாற்றங்களை நம்மில் இருந்து கொண்டுவர வேண்டும். இதுதான் ஒரு சரியான முன் மாதிரிக்கான அடையாளம். குறிப்பிட்ட வேலைகளை திட்டமிட்டு சரியாக முடிக்கும் பட்சத்தில் எவ்வித பிரச்னைகளும் எழ வாய்ப்பில்லை. மாற்றத்திற்கான அடையாளமாக திகழ முற்படுங்கள்.
வளைந்து கொடுக்கும் தன்மை:
ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் வேலையில் தாமதம் ஏற்படவே, அல்லது தொய்வு ஏற்படவே வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் எங்கு நம் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, ஊழியர்களிடம் கரராக இருந்து ஒரு புரோஜனமும் இல்லை. நெழிவுசுழிவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்:
ஒரு வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் எதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றார்போல் செயல்பட வேண்டும். நிர்வாகத்தின் சிக்கல் என்ன, ஊழியர்களின் சிக்கல் என்ன போன்ற விஷயங்களை ஆராய்ந்து செயல்படும் போது வெற்றிக்கான காற்று நம் பக்கம் மட்டுமே வீசும்.
குழு நிர்வாகத் திறன்:
இன்று உங்கள் டீம் லீடர் விடுமுறை டீமை நீங்க லீட் பண்ணுங்க என்று ஒரு கட்டளை வந்தால், அதை செயல்படுத்தும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் தலைமைப் பண்பிற்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். எதையும் அணுகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
https://sivashyamsassociates.com

வெற்றிக்கு வித்திடும் திறமைகள்........



அலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உயர் பதவி படிக்கட்டுகளில் சரசரவென ஏறி முதலிடம் பிடிக்க கீழ்க்கண்ட மென்திறமைகள் கட்டாயம் தேவை...
நமக்கான இடத்தை நிரப்புதல்:
நம்மை என்ன நோக்கத்திற்காக எடுதார்களே அதை சிறந்த முறையில் செய்து முடிப்பது. சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். ஒவ்வெருவரும் தனக்கான வேலையை சரியாக செய்யும் பட்சத்தில் நிர்வாகம் சரியான முறையில் முன்னேற்றப் பாதையில் இயங்கும்.
விதிகளை பின்பற்றுதல்:
நமக்கு நிர்வாகத்தின் மூலம் என்ன பொறுப்புகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நாம் உயர் அதிகாரி என்பதற்காக 5 நிமிடம் தாமதமாக போனால் பரவாயில்லை என்று எண்ணம் கொண்டிருப்பது மிகத் தவறானது. ஊழியர்களுக்கு என்ன விதி என வகுக்கப்பட்டுள்ளதோ அதைச் சரியாக பின்பற்றுவது. நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
ஆவணப்படுத்தும் திறமை:
பணி குறித்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால், அதைப்பற்றி முழுமையாக உள்வாங்குவதோடு, அதை சரியான முறையில் பின்பற்றுதல் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும். இது இங்கு அல்ல வேறு எங்கு பணியாற்றினாலும் பயன்படும்.
அளவீடு செய்யும் திறமை:
அது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். 100 பேர் கலந்து கொள்ளும் கூட்டமாக இருந்தால் அதற்கான தயாரிப்பு என்ன? என்பதில் தொடங்கி இதே வேகத்தில் நகர்ந்தால் நிர்வாகம் இந்தாண்டு இவ்வளவு லாபம் ஈட்டும் என்பது வரை தெளிவாக அளவீடு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலைகளை கையாளும் திறன்:
நிர்வாகம் எப்போதுமே சரியான பாதையில் தான் பயணிக்கும் என்பதை யாரலும் கணிக்க முடியாது. எனவே எப்போதும் எதையும், எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு, அதை யாருக்கும் பாதகமில்லாமல் எடுத்து கூறும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
ஒத்துப்போகும் திறன்:
எப்போதும் தனியாக தெரிய வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை அதற்காக காலரை தூக்கிவிட்டுக்கொண்டே சுற்றக்கூடாது. எல்லா விஷயங்களில் இல்லாவிட்டாலும் கூட நிர்வாகத்தின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளில் மட்டுமாவது ஒத்துப்போகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் 'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது போல வீழ்ந்தால் தூக்கிவிட யாரும் இருக்கமாட்டார்கள்.
மாற்றங்களை ஏற்படுத்துபவராகத் திகழுதல்:
'வீடு எப்படியோ அப்படித்தான் நாடும்' என்பதுபோல் மாற்றங்களை நம்மில் இருந்து கொண்டுவர வேண்டும். இதுதான் ஒரு சரியான முன் மாதிரிக்கான அடையாளம். குறிப்பிட்ட வேலைகளை திட்டமிட்டு சரியாக முடிக்கும் பட்சத்தில் எவ்வித பிரச்னைகளும் எழ வாய்ப்பில்லை. மாற்றத்திற்கான அடையாளமாக திகழ முற்படுங்கள்.
வளைந்து கொடுக்கும் தன்மை:
ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் வேலையில் தாமதம் ஏற்படவே, அல்லது தொய்வு ஏற்படவே வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் எங்கு நம் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, ஊழியர்களிடம் கரராக இருந்து ஒரு புரோஜனமும் இல்லை. நெழிவுசுழிவாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
அலசி ஆராய்ந்து சிந்திக்கும் திறன்:
ஒரு வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் எதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றார்போல் செயல்பட வேண்டும். நிர்வாகத்தின் சிக்கல் என்ன, ஊழியர்களின் சிக்கல் என்ன போன்ற விஷயங்களை ஆராய்ந்து செயல்படும் போது வெற்றிக்கான காற்று நம் பக்கம் மட்டுமே வீசும்.
குழு நிர்வாகத் திறன்:
இன்று உங்கள் டீம் லீடர் விடுமுறை டீமை நீங்க லீட் பண்ணுங்க என்று ஒரு கட்டளை வந்தால், அதை செயல்படுத்தும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் தலைமைப் பண்பிற்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். எதையும் அணுகும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

புதன், 28 நவம்பர், 2018


Karthic KVT:
வெள்ளை சொள்ளையாய் வந்து
வேடிக்கை மட்டுமே பார்த்து
வீராப்பாய் வார்த்தை ஜாலம் காட்டிச்செல்லும் தலைவர்கள் மத்தியில்
வெங்காயமாயினும்
சேர்ந்தே உரிப்போம் என
தயங்காமல் களமிறங்கும்
எங்கள் தலைவரையெண்ணி
கர்வம் கொள்கிறேன் ..
சிறந்த செயற்பாட்டாளரை
நாங்கள் பெற்றமைக்காக




 மதிக்கப்படும் உறவுகள்...

சிறுவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது எப்பொழுதும் ஆனந்தமான ஒரு விஷயம் தான். அன்றும் அப்படித் தான் இரண்டு சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி விளையடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சற்று ஓய்வாய் நின்ற பொழுது அவர்களுடைய உரையாடல்

'நளைக்கி எங்க தாத்தா வர்ராங்க. ரொம்ப ஜாலிடா. ஸ்கூட்டரில்ல ஸ்கூலுக்கு வருவேன், அப்புறம் இந்த சைக்கிளை சர்வீஸ் செய்து தருவார். கடைக்கி போகும் போது, கூட போனால் சாக்கலெட் கிடைக்கும். '

'பாட்டியும் தானே வர்ராங்க.'

பாட்டி எப்பப் பார்த்தாலும் டிவி பார்க்கும். என்னைய மட்டும் படி படின்னு சத்தம் போடும். பெரியப்பா விட்டிலே அது இருந்தாகூட நல்லா இருக்கும்.'

தாத்தா மட்டும் மதிக்கப்படும் உறவாக இருக்கிறார். பட்டியோ மதிப்பை இழந்து நிற்கிறார்.

இந்த உரையாடல் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. ஒவ்வொறு உறவுகளையும் நாம் ஏன் மதிக்கிறோம்? யாரெல்லாம் நம் உள்ளத்தில் நிறைந்து நிற்கிறார்கள்?

நம்முடைய அன்றாட வாழ்கையில் எதாவது ஒரு வழியில் பங்கீடு இருந்தால் தான், மதிப்பிற்குரியவராக ஒருவர் மாற முடிகிறது. இல்லையென்றால் எந்த வகையில் சொந்தமானாலும் மதிப்பைப் பெறமுடிவதில்லை.

நாம் சந்திக்கும் ஒவ்வொறுவரின் மதிப்பையும் பெருவது சாத்தியமா?
இது சுலபமான ஒன்றானுலும் நம்மில் அதிகம் பேர் இந்த முறையைக் கையாள்வதில்லை. முழு கவனத்தையும் ஒருவர் பக்கம் திருப்பி புன்னகை புரிவதே இந்த முயற்சியில் முதல் படி. அடுத்து அவருக்கு நம்மால் என்ன பயன் கொடுக்க முடியுமோ அதைச் செய்வது.

ஒரு கடைக்கே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். புன்னகையுடன் கடைக்காரரிடம் பேசிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளையாவது வாங்க ஆர்வம் காண்பியுங்கள். விலை காரணமாகவோ வேறு காரணமாகவோ அவரிடம் பொருள் வாங்க முடியவில்லையென்றால், நசுக்காக நட்புடனே வெளியேறி. விலையைக் குறைக்கச்சொல்லி மன்றாடாதீர்கள். ஜவுளிக் கடைக்குச் சென்றால் வாங்க விரும்புகிற விலையில் மட்டும் துணிகளை எடுத்துப் போடச் சொல்லுங்கள். கடையையே புரட்டிப் போட்டுவிட்டு ஒரு டிசைனும் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டுப் போவதை தவிர்த்துத்தான் பாருங்களேன். வடிக்கையாளர் உரிமை என்று எதையாவதைப் பேசி சண்டைக்கு இழுக்காதீர்கள்.
விடுங்கள்

உறவுகள் மேம்பட என்று 25 விஷயங்களை எழுதி மாட்டி வைத்திருந்தாலும், நம்மால் பிறருக்கு பயனுள்ள படி நடந்து கொள்வதே ஒரே வழி.

இன்றைய கலாச்சாரத்தில் அத்தியாவசியத் தேவைகளாக நியாயப்படுத்தப் படுபவை.

ஒரு வீடு-சில பல லட்சங்கள் மதிப்பில்
கொஞ்சம் இன்னும் இன்னும் கொஞ்சம் தங்கம்
மகன் மகள் இஞ்ஜினியரிங்க் படிப்பு, MBA படிப்பு, மருத்துவக் கல்வி
மகளின் திருமணம், அயல்நாட்டு மாப்பிள்ளை.
மூர்ச்சையாக்கும் மருத்துவச் செலவு.
 கடைசி காலத்திற்காக கொஞ்சம் சேமிப்பு.
இவை அத்தனைக்கும் பொருள் சேர்க்க வேண்டும். இதில் எல்லாம் ஜெயிக்க ஓடும் மக்கள் மத்தியில் உறவுகளைப் பற்றி சிந்திப்பதற்குக் கூட நேரம் இல்லை.

எனவே யாரையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறதோ அவர்கள் தான் நம் உறவு. இதில் உடன் பணி செய்பவர்கள், அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பிரதானமானவர்களாக ஆகியிருப்பதை உணருங்கள்.

கொடுப்பதால் மட்டுமே உறவுகள் செழிக்கும். நீங்கள் மதிக்கப் படுவீர்கள்.

கேளுங்கள் தரப்படும். ஆனால் பெறப்பட்டவை இலவசங்களல்ல.

உங்களுக்கு இருக்கும் ஒவ்வொறு உரிமைகளின் பின்னாலும் ஒவ்வொரு கடமைகள் இறுப்பதை உணருங்கள்.

There is no free lunch -(உணவுகூட இலவசமில்லை) என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய யதார்த்த உண்மை.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..


தேவராட்டம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு…. தேவராட்டம் ஆடி போராட்டம் !!

By Selvanayagam PFirst Published 26, Nov 2018, 9:53 PM IST
devarattam protest against devarattam

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் தேவராட்டம்' என்ற படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி, தேவராட்டம்  ஆடி  நுாதன போராட்டம் நடைபெற்றது.
கே.இ.ஞானவேல்ராஜா  தயாரிப்பில், டைரக்டர் முத்தையா இயக்கி  நடிகர் கவுதம் கார்த்திக், நடிக்கும் திரைப்படத்துக்கு தேவராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பெயர் தெய்வீக கலையை கொச்சைப்படுத்தி, வன்முறையை துாண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்  அப்பெயரை மாற்ற வேண்டும் எனவும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தேவராட்டம் என்பது ராஜகம்பள நாயக்கர்  குலத்தின் பாரம்பரிய இசை நடனம். குடும்பத்தில் நடக்கும், சுக, துக்க நிகழ்வுகளிலும், கோவில் விழாக்களிலும் தேவராட்டம் கட்டாயம் இடம்பெறும். இன்றளவும், இந்த நடைமுறை தொடர்கிறது.

பல நுாற்றாண்டுகளாக தெய்வீக கலையாக நாங்கள் போற்றி வருவதை, கொச்சைப்படுத்தும் வகையில், ஞானவேல்ராஜன் தயாரிப்பில், டைரக்டர் முத்தையா, நடிகர் கவுதம் கார்த்திக், 'தேவராட்டம்' என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர்.

இதனைக் கண்டித்து உடுமலை குட்டை திடலில், உருமி இசை ஒலிக்க, பாரம்பரிய கலையான தேவராட்டத்தை ஆடி, 100க்கும் மேற்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்படத்தின் டீசர், வன்முறையை துாண்டும் வகையிலும், நடனத்தை வேறு விதமாக சித்தரிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, படத்தின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். படக்குழு மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என போராட்டத்தில் ஈடுபட்ட கம்பளத்து நாயக்கர் இன மக்கள் தெரிவித்தனர்

ஞாயிறு, 25 நவம்பர், 2018

கலை உணர்வு ....இனஉணர்வு ....கோபக்கனல் ...(உடுமலைப்பேட்டை )

இந்த புகைப்படம் எடுக்கும் பொழுது ..எனது மனதில் ஆயிரம் மனவேதனைகள் .இந்த பிஞ்சு குழந்தையின் பார்வை ..கோபக்கனல் ...எனக்கு எங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கவேண்டாம் ...இந்த கலை பேரைக்கூட காப்பாற்ற உங்களால் இயலாதா .?.... பண்பட்ட கம்பள சமுதாயம் என்ன பதில் சொல்லப்போகிறது ..இந்த தேவராட்ட வளரும் கலைஞர்க்கு ... .?
நாள் :25-11-2018...நேரம் :12.மணி ....



வியாழன், 22 நவம்பர், 2018




உடுமலைப்பேட்டை குட்டைத்திடலில் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ...

அன்பு உறவுகளுக்கு நமது ராஜகம்பள சமூகத்தின் கலைநடன பாரம்பரிய பெயரான தேவராட்ம் என்பதனை திரு. கே.ஈ.ஞானவேல்ராஜா திரைப்படத்தயாரிப்பாளர் ஸ்டுடியோ கீரின் 2 ஆவது தளம் 13ஃ6 தணிகாசலம் ரோடு தி.நகர் சென்னை -600 007 2. திரு.முத்தையா இயக்குநர். 3. திரு.கௌதம் கார்த்திக் நடிகர் சென்னை ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ள சினிமா படத்திற்கு தேவராட்டம் என்று சூட்டியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேற்படி படத்தின் டீசரைப்பார்த்த போது அதில் வன்முறையைத் தூண்டும் விதமாகஅமைந்துள்ளது. அந்த படத்திற்கு சமூகத்தின் கலை நடன பாரம்பரிய பெயரான தேவராட்டம் என சூட்டியிருப்பதை கண்டித்து அதனை திரைப்படத் தணிக்கைக்குழு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் , இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்படத் தணிக்குழு,தமிழக முதலமைச்சர், தமிழக துணை முதலமைச்சர் , தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை , மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை மேற்படி தேவராட்டம் எனும் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் வேதனைக்குரியதாகும். எனவே. நமது சமூக நாயக்கர் மற்றும் நாயுடு சமூகத்தைச் சார்ந்த அனைத்து சங்கங்கள் அறக்கட்டளை, அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து வருகின்ற 25.11.2018 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி சுமாருக்கு உடுமலைப்பேட்டை குட்டைத்திடலில் அமைதியான முறையில் நமது கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம் நமது குல நடன கலையான தேவராட்டத்தை உறுமியுடன் சேர்ந்து ஆடியும் அதே சமயம் மேற்படிபெயரை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றக்கோரியும் ஒரு கண்டன போராட்ட நடத்த உள்ளோம். அது சமயம் நமது நாயக்கர் மற்றும் நாயுடு சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்ததந்த ஊர்கில் உள்ள தேவராட்டக்கலைஞர்களையும் உறுமியுடன் சேர்ந்து அழைத்து வந்து தவறாது கலந்து மேற்படி தேவராட்டத்தை நடத்திக்கொடுக்கும்படி அன்புடன்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
என்றும்சமூக உணர்வுடன்  

கம்பள விருட்ச அறக்கட்டளை
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, விடுதலை களம், நாயக்கர் சேனா, கீர்த்திவீரர் எத்தலப்ப நாயக்கர் இளைஞரணி , கணம் மேதகு எட்டப்ப மகாராஜாக்கள் இளைஞர் நற்பணி மன்றம் , மற்றும் நாயக்கர் நாயுடு இன இளைஞர்கள், சில்லவார் ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சென்னை.வீரபாண்டிய கட்டபொம்மன் கல்விக்கழகம் மற்றும் இன மக்கள் அனைவரும் வாரீர் ...

புதன், 21 நவம்பர், 2018

கம்பளத்தார் தேவராட்டம் ......(நாட்டுப்புறக்கலைகள் )


கிராமத்தில் அழுத்தமாக ஒலிக்கும் உறுமி சத்தம். ஆட்டக்காரர்களின் அசைவில் அத்தனை ரம்மியமாக வெளிப்படும் சலங்கை ஒலிச் சத்தம். இசையும், நடனமும் ஒருங்கே சேர்ந்த அழகிய நாட்டுப்புறக்கலை. கிராமங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆடி தமிழர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடுகின்றனர். பாரம்பரியம் மாறாத இந்த தேவராட்டக் கலை உடுமலைப்பகுதியின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம்.
தை மாதம் துவங்கும் பொங்கல் விழாவிற்கு உடுமலை பகுதி கிராமங்கள் மார்கழி மாதத்திலேயே தயாராகின்றன. அடர்ந்த பனியை அகற்றி அனலாக உருமிஇசை ஒலிக்கிறது. கொட்டும் பனியில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தேவராட்டம் எனப்படும் உருமி ஆட்டம், சலங்கை மாடு மறித்தல் (சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டங்களை பார்ப்பது மிகவும் அலாதியான அனுபவங்களில் ஒன்று.
தேவராட்டத்திற்காக இரவு நேரங்களில் இசைக்கும் உருமி கிராமம் தோறும் மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் எதிரொலிக்கும். தேவராட்டம் என்பது தேவர்களால் (கடவுளால்) ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும்போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷச காலங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.
தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குத் தேவையான உடற்பயிற்சிகளின் வெளிப்பாடாகவும் உள்ளது.
தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் மினு மினுப்பான தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப சுதி ஏற்றப்படுகிறது.
தேவராட்டம் ஆடப்படும்போது, ஊதப்படும் ஒவ்வொரு விசில் சத்தத்திற்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்களுக்கு விருந்து.
ஆட்டத்தின் துவக்கத்தில் மெதுவாக துவங்கும் அடவு மாற, மாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்குச் செல்கிறது. ஆட்டம் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும்போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது.
இதன் அசைவுகள் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் அசைத்துப் பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாத பனி இரவில் முன் பனி காலத்தில் ஆடப்படுகிறது.
தை பிறந்ததும் ஆட்டக்காரர்கள் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயிலுக்கு சலங்கை மாடு புடைசூழச் சென்று தேவராட்டம் ஆடி தங்களது மார்கழி மாத ஆட்ட விரதத்தை முடிக்கின்றனர். இது இப்பகுதி மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிகழ்வாக இருக்கிறது.
இந்த கலை அழியாமல் இருக்க உடுமலைப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜல்லிப்பட்டி, தளி, பெரிய கோட்டை, ராஜாவூர் ,லிங்கம்மாவூர் ,அம்மாபட்டி ,பூவலபருத்தி ,கம்பாளப்பட்டி,பொன்னேரி ,பொட்டையம்பாளையம் ,கரப்பாடி ,கொடுங்கியம் ,பழனி R வாடிப்பட்டி ,மரிகந்தை ,உப்பிலியனூர் ,ஜமீன் கோடாங்கிபட்டி சுற்றுவட்டாரம் ,எட்டயபுரம்சுற்றுவட்டராம்  ,தேனீ சுற்றுவட்டாரம் ,காளாஞ்சிப்பட்டி ,கடவூர் ,  போன்ற கிராமங்களில் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்போது தேவராட்ட பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

யார் ....அவன் ...?

"நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா.
அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.
நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.
என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.
காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.
அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.
விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.
அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.
நாட்கள் விரைந்தது .
நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.
அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.
நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.
எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.
சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.
செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.
எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .
நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.
எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.
நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .
நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.
இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.
அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?
அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.
கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.
இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.
சொல்கிறேன் கேளுங்கள்.
அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.
அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின் பெயர் கம்ப்யூட்டர்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!!"நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா.
அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.
நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.
என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.
காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.
அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.
விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.
அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.
நாட்கள் விரைந்தது .
நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.
அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.
நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.
எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.
சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.
செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.
எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .
நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.
எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.
நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .
நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.
இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.
அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?
அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.
கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.
இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.
சொல்கிறேன் கேளுங்கள்.
அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.
அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின் பெயர் கம்ப்யூட்டர்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!!

செவ்வாய், 20 நவம்பர், 2018

நமது கம்பள சமுதாய சொந்தங்கள் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் இணைய தள பார்வையாளர்கள் ..நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகிறது ...வரலாறு ..நம் சமுதாய நிகழ்வுகள் ..இணைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுவதால் ...அருமையான விழிப்புணர்வு ..புரிதல் ..அருமையாக உள்ளது ..பதிவுகள் குறித்து ..கருத்து பரிமாற்றங்கள் ..இன்னும் நம் செய்யவேண்டிய பணிகள் ..பொறுப்புகள் கூடிக்கொண்டே போகிறது ..அறக்கட்டளையின் இணையதள நிர்வாகிகள் ..அருமை மாப்பிள்ளை கார்திக்க்குமார் ...அருமை தம்பி ..பொன் தமிழரசன்  மனமார்ந்த நன்றிகள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
www.kambalavirucham.in    

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கோயம்புத்தூரின் வரலாறு

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

கோயம்புத்தூரின் வரலாறு, தமிழ்நாடு மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம், சங்க காலத்தில் தொடங்குகிறது. கொங்கு நாட்டின் அங்கமாக இருந்த இப்பகுதியில் துவக்கத்தில் பழங்குடிகளான கோசர்கள் ஆட்சி புரிந்தனர்; இவர்கள் தலைநகரமாக இருந்த கோசம்பத்தூர் தற்போது கோயம்புத்தூராக மருவியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

தற்போது முதன்மையான வணிக, தொழில் மையமாக விளங்கும் இம்மாநகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அழைக்கப்படுகின்றதுஇந்த இடைப்பட்டக் காலத்தில் கோயம்புத்தூர் பல போர்கள், பிளேக் நோய்த்தாக்கம், பெரும் பஞ்சங்கள், நூற்பாலைகளின் வளர்ச்சி, கல்வி நிறுவனங்களின் பெருக்கம் ஆகியவற்றை கண்டுள்ளது.

வரலாற்றின் துவக்கம்

சங்க காலத்தில் கொங்குநாட்டின் அங்கமாக இருந்த இப்பகுதியை சேர இராச்சியத்தின் கீழ் தன்னாட்சி பெற்றிருந்த சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர். உரோமானியர் நாணயங்களும் பிற கலைப்பொருட்களும் இங்கு கிடைத்துள்ளதைக் கொண்டு உரோமானியர்களுடன் வணிகம் நடத்தப்பட்டிருப்பது புலனாகிறது. "உரோமானியர்களின் வழி எனப்படும்" முசிறியிலிருந்து அரிக்கமேடு செல்லும் வழியில் நடுவில் கோயம்புத்தூர் பகுதி உள்ளது சங்க காலத்தின் முடிவில் இப்பகுதி மேலைக் கங்கர் ஆளுகைக்கீழ் வந்தது.

இடைக்காலச் சோழர்கள் இப்பகுதியை 9ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தனர். அவர்கள் காலத்தில் "ராசகேசரி பெருவழி" அமைக்கப்பட்டது இக்காலகட்டத்தில் கோயம்புத்தூரின் சிற்றரசர்களாக இருளர் ஆண்டு வந்தனர். இவர்களின் தலைவன் கோவன் என்பான் இந்நகரை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது; பேரூரிலுள்ள பட்டீசுவரர் கோவிலுக்கு, சுந்தரமூர்த்தி நாயனாருடன் சமயச்சுற்றுலா வந்த சேர மன்னன் இந்நகரை உருவாக்க கோவனுக்கு ஆணையிட்டதாகவும் குறிக்கப்படுகிறது.  சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கோவை பகுதியை பாண்டியர், மதுரை சுல்தான்கள், போசளர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் மதுரை, தஞ்சை நாயக்கர்களும் ஆண்டு வந்தனர்  நாயக்கர்கள் இப்பகுதியில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினர். கொங்குநாடு முழுவதும் 24 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டன

ஆங்கில-மைசூரு போர்கள்

ஆங்கில-மைசூரு போர்களின் போது கோயம்புத்தூரை தங்கள் வசம் வைத்திருக்க இரு பாலருமே, மைசூரு சுல்தான்களும் பிரித்தானியரும், விரும்பினர் 1768இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் கோவை நகரைக் கைப்பற்றின. ஆனால் துரோகச் செயலால் அவர்களால் தெஎ வைத்துக் கொள்ள இயலவில்லை.[ மீண்டும் இதை 1783இல் கைப்பற்றிய பிரித்தானியர் மங்களூர் உடன்படிக்கையின்படி திப்பு சுல்தானுக்குத் திருப்ப வேண்டியதாயிற்று. மூன்றாவது ஆங்கில மைசூரு போரின்போது, கோயம்புத்தூரை பிரித்தானியர் மீண்டும் கைப்பற்றினர். திப்பு சுல்தான் இருமுறை முற்றுகையிட்டு, முதலில் தோல்வியடைந்தாலும், இரண்டாம் முறை அக்டோபர் 1791இ்ல் கோவையைக் கைப்பற்றினார். கோட்டைக் காவல்தலைவர்களான லெப்.சால்மர்சும் லெப். நாஷும் சிறைபிடிக்கப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கொண்டு செல்லப்பட்டனர். போரின் இறுதியில் பிரித்தானியர் வென்றாலும் போர் முடிவடைந்ததும் திப்பு சுல்தானுக்கே திருப்பப்பட்டது  1799இல் திப்பு சுல்தானின் தோல்விக்கும் இறப்புக்கும் பிறகு கோயம்புத்தூர் பிரித்தானியர் கீழ் வந்தது. 1800இல் இது பாளையக்காரர் ஆட்சியில் வந்தது; பாளையக்காரர் போர்களில் கோவை முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது.
1865இல் கோயம்புத்தூர் அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராயிற்று

அரசி விக்டோரியா காலம் - சேர் ராபர்ட்டு இசுடேன்சு.

கோயம்புத்தூர் நகராட்சி 1866இல் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக இராபர்ட் இசுடேன்சு பதவியேற்றார்.இசுடேன்சு பல நூற்பாலைகளை நிறுவி கோயம்புத்தூரின் விரைவான தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கினார். 1871இல் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூரின் மக்கள்தொகை 35,310 ஆக இருந்தது; சென்னை மாகாணத்தின் பத்தாவது பெரிய நகரமாகவும் இருந்தது.

1876-78இன் பெரும் பஞ்சத்திலும் 1891-92ஆம் ஆண்டு வறட்சியிலும் கோயம்புத்தூர் பாதிக்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 30 பேர் உயிரிழந்தனர்; கோயம்புத்தூர் மத்திய சிறை, கத்தோலிக்க திருச்சபை தேவாலயம் மற்றும் பல கட்டிடங்கள் சேதமுற்றன.

விரைந்த வளர்ச்சி

1920களில் கோயம்புத்தூரில் துணித் தயாரிப்பு மிக விரைவான வளர்ச்சியைக் கண்டது. 1930களில் மும்பையில் துணித் தயாரிப்பாலைகள் முடங்கியதும் பகுதியான வளர்ச்சிக்கு அடிகோலிட்டது. 1934இல் கட்டபட்ட மேட்டூர் அணை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது. தொடர் வண்டி, சாலை இணைப்புகள் மேம்படுத்தப்பட்டதால் சரக்குப் போக்குவரத்து எளிதாயிருந்தது. 1911-1921 காலகட்டத்தில் அரசு உதவிய கடன்களுடன் கட்டப்பட்ட 15,000க்கும் மேலான பாசனக் கிணறுகள் பெரும் வறண்ட நிலப்பகுதிகளை வேளாண்மைக்குத் தகுதியாக்கிற்று. [19] தென்னிந்தியாவில் திரைப்படத்துறை துவங்கிய காலத்தில் கோயம்புத்தூரில் பல படம்பிடி தளங்கள் துவங்கப்பட்டன. 1935இல் இரங்கசாமி நாயுடு சென்ட்ரல் படம்பிடி தளத்தையும் 1945இல் எஸ். எம். சிறீராமுலு நாயுடு பட்சிராசா படம்பிடி தளத்தையும் நிறுவினர்.[20]

1910இல் காளீசுவரா மில்லும் சோமசுந்தா மில்லும் நிறுவப்பட்டன. 1911இல் பெரியநாயக்கன்பாளையத்தில் லட்சுமி ஆலைகள் நிறுவப்பட்டன. 1930களில் பல துணித்தயாரிப்பு மற்றும் நூற்பாலைகள் நிறுவப்பட்டிருந்தன....

உடுமலையில் புதைந்திருக்கும் வரலாற்று சின்னங்கள்: இணைய தளத்தில் வெளியிட கோரிக்கை

உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை காக்கவும், இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் வகையிலும், திருப்பூர் மாவட்ட இணைய தளத்தில் வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் குறித்த தகவல்களை திரட்டி, மாவட்ட இணைய தளத்தில் சேர்க்க, கலெக்டர் சமயமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த இணைய தளத்தில், உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சமணர்கள் கால கல்வெட்டு உள்ளது. பல அடி உயரத்துக்கு உள்ள கல்வெட்டில் சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததை குறிக் கும் வகையில் நிலா மற்றும் கமண்டலத்துடன் கூடிய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் இருபுறங்களிலும் அதிகளவில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள மிக பழமையான கல் வெட்டு, தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியின் தொன் மையை விளக்கும் வகையில் உள்ள இக்கல்வெட்டை இணைய தளத்தில் வெளியிடுவதன் மூலம் இப்பகுதியின் பழமை வெளிப் படும். தகவல்களை இணைய தளத்தில் வெளியிடுவதால் கல் வெட்டு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் வாய்ப்புள்ளது
பழமைவாய்ந்த குடிமங்கலம் சோழிஸ்வரர் கோவில், கோட்டமங்கலத்தில் உள்ள சிற்பங்கள் நிறைந்த கல்தூண், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் ஆகியவற்றையும் இணைய தளத் தில் வெளியிட இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு உயிர் இழந்த, தளி பாளையக்காரர் எத்தலப்பன் வம்சாவளியினர் சிலைகள், திருமூர்த்தி மலை காண்டூர் கானல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்கு போராடிய எத்தலப்பன் வரலாறு குறித்து, திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரியாத நிலை உள்ளது.
இச்சிலைகள் குறித்த விழிப்புணர்வு கிடைக்க, மாவட்ட இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளின் வரலாறு தெரியவருவதுடன் வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். எனவே, உடுமலை பகுதியில் உள்ள பழமையான சின்னங் களை மாவட்ட இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருடகம்பம் ...திருமூர்த்தி மலை -வரலாறு

 .நமது சொந்தம் மதிப்புக்குரிய பெரியவர் .உடுக்கம்பாளையம் ரங்கசாமி நாயக்கரை சந்தித்தோம் ..அவர் கூறிய தகவல் ..திருமூர்த்தி மலை கருட கம்பம் ...கார்த்திகை திருவிழா அன்று உடுக்கம்பாளையத்தில் இருந்து விளக்குக்கு எண்ணெய் எடுத்து கொண்டு ஊர் நாயக்கர் முறைப்படி விளக்கு ஏற்றுவது மரபு ...இதுவும் நம் வரலாற்று தேடலில் களப்பணியில் கடந்த மூன்று வருடங்களாக கூறிய தகவல் சரியாக வருகிறது ...இன்று வரலாற்று தேடலில் இன்னும் தகவல் கிடைத்துக்கொண்டே உள்ளது ... ...இது எல்லாம் தனிப்பட்ட தேடல் அல்ல நமது சமுதாய சொந்தங்களின் முழு ஓத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது ..நம் வழிகாட்டிய யாக உள்ள நம் சமுதாய தலைவர்கள் .இளைய சொந்தங்களின் ஆர்வம் ,நம் சமுதாயம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்ல மனம் படைத்தவர்கள் ..எதிர்கால நம் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் வேண்டும் முழு மனதுடன் ,ஒத்துழைப்புடன் பணியாற்றி ...தகவல்களை திரட்டி கொடுத்து கொண்டுருக்கும் நம் சமுதாய சொந்தங்களுக்கும் ...வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...அன்புடன் ..சிவக்குமார்
9944066681...வாட்ஸாப்ப் எண் ..
www.kambalavirucham.in,
www.manamangalayam.in,
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 

சனி, 17 நவம்பர், 2018

கண்டன போராட்டம் அன்பு உறவுகளுக்கு நமது ராஜகம்பள சமூகத்தின் கலைநடன பாரம்பரிய பெயரான தேவராட்ம் என்பதனை திரு. கே.ஈ.ஞானவேல்ராஜா திரைப்படத்தயாரிப்பாளர் ஸ்டுடியோ கீரின் 2 ஆவது தளம் 13ஃ6 தணிகாசலம் ரோடு தி.நகர் சென்னை -600 007 2. திரு.முத்தையா இயக்குநர். 3. திரு.கௌதம் கார்த்திக் நடிகர் சென்னை ஆகியோர் சேர்ந்து உருவாக்கியுள்ள சினிமா படத்திற்கு தேவராட்டம் என்று சூட்டியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேற்படி படத்தின் டீசரைப்பார்த்த போது அதில் வன்முறையைத் தூண்டும் விதமாகஅமைந்துள்ளது. அந்த படத்திற்கு சமூகத்தின் கலை நடன பாரம்பரிய பெயரான தேவராட்டம் என சூட்டியிருப்பதை கண்டித்து அதனை திரைப்படத் தணிக்கைக்குழு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் , இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்படத் தணிக்குழு,தமிழக முதலமைச்சர், தமிழக துணை முதலமைச்சர் , தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை , மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை மேற்படி தேவராட்டம் எனும் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் வேதனைக்குரியதாகும். எனவே. நமது சமூக நாயக்கர் மற்றும் நாயுடு சமூகத்தைச் சார்ந்த அனைத்து சங்கங்கள் அறக்கட்டளை, அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து வருகின்ற 25.11.2018 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி சுமாருக்கு உடுமலைப்பேட்டை குட்டைத்திடலில் அமைதியான முறையில் நமது கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம் நமது குல நடன கலையான தேவராட்டத்தை உறுமியுடன் சேர்ந்து ஆடியும் அதே சமயம் மேற்படிபெயரை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றக்கோரியும் ஒரு கண்டன போராட்ட நடத்த உள்ளோம். அது சமயம் நமது நாயக்கர் மற்றும் நாயுடு சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்ததந்த ஊர்கில் உள்ள தேவராட்டக்கலைஞர்களையும் உறுமியுடன் சேர்ந்து அழைத்து வந்து தவறாது கலந்து மேற்படி தேவராட்டத்தை நடத்திக்கொடுக்கும்படி அன்புடன்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்றும்சமூக உணர்வுடன் கம்பள விருட்ச அறக்கட்டளை, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, விடுதலை களம், நாயக்கர் சேனா, கீர்த்தி வீரப்ப எத்தலப்ப நாயக்கர் பேரவை, எட்டயபுரம் சுற்றுவட்டார 18 ஊர்கள், மற்றும் நாயக்கர் நாயுடு இன இளைஞர்கள், சில்லவார் ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சென்னை.மற்றும் இன மக்கள் அனைவரும் வருக ..

வெள்ளி, 16 நவம்பர், 2018

கார்த்தி SR ...மாப்பிள ..கம்பள விருட்சம் ..மற்ற சமுதாயத்தாரும் ..உங்கள் அறக்கட்டளையில்  இணைந்து செயல்பட விரும்பிகிறேன் ..அதற்கான வழிமுறைகள் என்ன என்று கேட்கிறார்கள் ...எப்படி சொல்வது ..இது எங்கள் சமுதாயத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை ..எங்கள் சமுதாய இளைய சொந்தங்களுக்கு கல்வி ..வேலைவாய்ப்பு ..வரலாறு ..பண்பாடு .கலாச்சாரம் ..போன்ற  ..வளர்ச்சிக்கான வழிகாட்டலுக்காக ஆரம்பித்தது ..என்று பதில் அளித்து வருகிறேன் ..நம் சமுதாய சொந்தங்களை விட ..மற்ற சமுதாயத்தினரிடம் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் பணிகள் செய்தி சென்று சேர்ந்திருக்கிறது  கேட்பது மகிழ்ச்சி ...
வளர்வோம் ..விருட்சத்தின் விதைகளைகளாக ..கிளைகளாக ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை 

செவ்வாய், 13 நவம்பர், 2018

கம்பளத்து நாயக்கர் - தேவராட்டம் - வழிபாட்டு முறைகள்

கலையும் வழிபாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றின் மூலம் ஒரு சமூக மக்களின் கலாச்சாரப் பரிவர்த்தனைகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒரு சமூகத்திற்கு உரிய கலையானது எப்படி அனைவருக்கும் பொதுவானக் கலையாக மாறிய முறையினையும் அச்சமூகத்தின் வழிபாட்டு முறையானது மற்ற சமூகத்தில் இருந்து வேறுபடும் நிலையையும் இக் களாய்வுக் கட்டுரை எடுத்துரைக்க முயலுகிறது.

களம்

எங்கு பார்த்தாலும் கருவேலமுள் மரங்களும் கானல் அலைகளுமாய் கண்ணில் தென்படும் பகுதிதான் வானம் பார்த்த பூமியான கரிசல் நிலம். அந்நிலத்தில் பயிரிட்டு மகசூல் எடுத்தல் என்பது இயற்கையோடு போராடி வெற்றி பெற்றால் தான் உண்டு. அத்தகைய சூழலில் வாழ்பவர்கள் தான் கரிசல் மக்கள். வாழ்க்கை விளையாத இடத்தில் கலைப்பயிரின் விளைச்சலானது எந்த நிலத்திலும் இல்லாத மகசூலைப் பெறும் பூமியாகும். கலையினை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள கம்பள நாயக்கர்களின் கலை வாழ்வை அறியும் நோக்கில் ஜமீன் கோடாங்கிப்பட்டியை களமாகக் கொண்டு தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

கம்பள நாயக்கர்கள்

விளாத்திக்குளம் தாலுகாவில் அமைந்துள்ள ஜமீன் கோடாங்கிபட்டி, தங்கம்மாள்புரம், புதூர், நாகலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தான் கம்பளத்து நாயக்கர்கள். ஜமீன் கோடாங்கிப்பட்டி என்ற ஊரின் பெயரைக் கேட்டு பயணச்சீட்டு வாங்கும்பொழுது பக்கத்து இருக்கையில் உள்ளவர் பார்வையை ஆய்வாளரின் மீது வேறு விதமாகச் செலுத்துகிறார். ஏன் எனக் காரணம் அறியும் போது அவ்வூரில் பில்லி, சூனியம், மை வைத்தல் தொழில் அதிகமாக உள்ளதால் அதனை நினைத்துக் கொண்டு அப்பயணி என்னைப் பார்த்தார் என்பதை அறிய முடிந்தது. இவர்களின் பூர்வீகம் என்று அறியும்போது கி.ரா. மற்றும் பா. செயப்பிரகாசம் நயக்கர், ரெட்டியார் உயர்சாதி மக்கள் ஆந்திரநாட்டில் இருந்து வந்தனர் என்பதை கோபல்லகிராமம், தெக்கத்தி ஆத்மாக்கள் படைப்புகள் மூலம் அறிய முடிகின்றது. அதுபோல் கம்பளத்து நாயக்கரின் பூர்வீகம் இங்கு இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.

இவர்கள் பேசும் மொழியானது தெலுங்காகும். கிராமத்திற்குள் (ஜமீன் கோடாங்கிப்பட்டி) நுழைந்த உடனே தெலுங்கு வார்த்தைகள் சரளமாய் காதில் பாய்கின்றது. ஜமீன் கோடாங்கிப்பட்டியில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் அம் மக்களை முன்னிருத்தியே கட்டுரையில் பேசப்படுகிறது. இவர்கள் ஒன்பது கம்பளத்து நாயக்கர் பரம்பரையில் வந்தவர்கள். வரலாற்றுப் பூர்வமாக அறியும் போது விஜயநகர அரசின் ஆட்சியில் தான் இவர்களுக்கு அதிகமான சலுகைகள் இடம், பொருள் எனச் செயற்கரிய உதவிகளைப் பெற்றனர்.

கம்பளத்து நாயக்கர்களின் வீட்டுக் கூரையானது கூம்பு வடிவத்தில் கம்மந்தட்டையினால் வேயப்பட்டுள்ளது.

கம்பளத்து நாயக்கர்களின் குடும்ப வாழ்வானது கூட்டுக் குடும்ப முறையினைக் கொண்டது. இங்கு நாட்டாமை பதவி இல்லாமல் குலகுரு பதவி உள்ளது. குருவின் கட்டளை தான் அவர்களின் வேதவாக்காக உள்ளதை அறிய முடிந்தது. இவர்களின் பெயர்கள் குலதெய்வப் பெயர்களாக உள்ளது. இன்றைய நவீன காலத்திலும் அப்பணசாமி, பொம்மம்மா, சீலாத்தா எனப் பெயர்களைச் சூட்டுகின்றனர்.

விவசாயம், குறிபார்த்தல் போன்றவற்றை ஆண்கள் செய்கின்றனர். பெண்கள் தீப்பெட்டித் தொழில் விவசாயம் போன்றவை செய்கின்றனர். மாடு, ஆடு போன்ற கால்நடை வளர்ப்புதான் இவர்களின் பொருளாதாரக் காரணிகளாக உள்ளன. வீடுகளில் கிளி வளர்க்கின்றனர். பள்ளிக் கல்வியுடன் முடித்துக் கொள்வதால் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். குலதெய்வத்திற்கும் குருவாக்கிற்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதால் பெரும்பான்மையான மக்கள் போதை பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர்.

திருமண முறை

கம்பளத்து நாயக்கர்களின் திருமண முறையினைப் பற்றி ஒரு குறு ஆய்வே செய்யலாம். அந்தளவிற்கு அவர்களின் திருமணமுறை உள்ளது. சுமார் இருநாட்கள் திருமணச் சடங்கு முறை நிகழ்கிறது. சடங்குகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளில் நடைபெறுகிறது. திருமணத்தில் குடிசை மாற்றுச் சடங்கானது முக்கிய இடம் வகிக்கிறது. இனி கம்பள சமூகத்தின் கலையினை விரிவாக அறியலாம்.

கரிசல் நிலத்தில் ஒயிலாட்டம், தேவராட்டம், இராசா ராணி ஆட்டம் பிரசித்தி பெற்றவை. இதில் தேவராட்டம் என்பது கம்பளத்து நாயக்கர்களுக்கு மட்டுமே சொந்தமானக் கலையாகும். கம்பளத்து நாயக்கர்கள் கலையை உயிராக மதிக்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சிகளிலும் தேவராட்டம் தவறாமல் நடைபெறுகின்றது. இவ்வூரில் (ஜமீன் கோடாங்கிபட்டி) ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கூட ஏதாவது ஒரு நாட்டுப்புற இசைக்கருவியை நன்கு கையாளத் தெரிந்துள்ளதைக் காணமுடிந்தது. உருமி மேளத்தை ஒரு சிறுவன் கையாளும் முறையினைக் கண்டு வியப்பாக இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் தேவராட்டம் இந்த சமூகத்திற்கே உரிய கலையாக இருந்ததால் மற்ற நிலத்து மக்கள் அதனை அறியாதவர்களாக இருந்தனர். சமூகக் கண் கொண்ட சில பெரியவர்கள் அக்கலை நம் சமூகத்திற்கு மட்டும் இருந்தால் அழியும் சூழல் உருவாகும். எனவே மற்ற மக்களுக்கு பரப்ப வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தனர். குலகுரு, அவருடம் இருக்கும் மற்ற பெரியவர்கள் இக்கருத்தினைக் கேட்டு நீண்ட சிந்தனைக்குப் பின் சில கட்டுப்பாடுகளுடன் மற்ற மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

1. நிகழ்ச்சி எந்த இடத்தில் நடைபெற்றாலும் குல குருவை அழைத்துச் செல்ல வேண்டும்.

2. நிகழ்ச்சி குல குருவுக்கு என்பது கலைஞர்களுக்கு மட்டும் தெரியும். பார்வையாளர்கள் தமக்குத்தான் இந்நிகழ்ச்சி என்ற நினைப்பை உருவாக்கிவிடுகின்றனர். தேவராட்டப்பாடல்கள் தெலுங்கில் பாடப்படுகின்றன.

இச்சமூக மக்கள் எந்தச் செயலைத் துவங்கும் முன்பும் தங்கள் குலதெய்வத்தை (சக்கம்மா) வேண்டிய பின்னரே அதில் ஈடுபடுகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் தங்களது சமூகத்தையும் குலதெய்வத்தையும் தெலுங்கில் பாடிய பின்னரே நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். தேவராட்டம் மொத்தம் முப்பத்திரண்டு அடவுகளைக் கொண்டு ஆடப்படுகிறது. இசைக்குத் தக்கவாறு நடன அசைவுகள் உள்ளது. ஒவ்வொரு அடவுக்கும் ஒவ்வொரு அசைவுடன் ஆடுகின்றனர். கீழே மூன்று அடவுகளின் இராகங்களைக் காணலாம்.

தான...னான னான

னான ணன்னானே னான

டக் டகடி டீம்.......(1)

தான னா தான ணா ன

தான ணாரி னான னான

டட்ட கோ டட்ட

டட்ட கோ டட்ட.......(2)

தன்ன னன்ன னானே ணன்ன னா னானே

னன்ன னான னானே ணன்ன னன்ன னானே

டக் டக்டக் டகடி டக்

டக் டக்டக் டகடி டட்...(3)

இதற்குத் தகுந்தாற்போல அடவுகளை மாற்றி ஆடுகின்றனர். சேவைக்குரிய ஆட்டமாக ‘‘டக் டகடி டட்டகடி’’ என்ற இசையுடன் ஆடப்படுகிறது.

வழிபாட்டு முறைகள்

கரிசல் நில மக்கள் பெரும்பான்மையாக குலதெய்வ வழிபாட்டினைக் கொண்டுள்ளார்கள். கம்பள சமூகமும் குலதெய்வ வழிபாட்டில் மூழ்கியவர்களாக உள்ளனர். கம்பள மக்கள் சக்கம்மா, சீதலம்மா, பொம்மம்மா, நரசம்மா, வடக்குத்தி அம்மா போன்ற பெண்தெய்வங்களையும், வீரபுத்திரசாமி, பொம்மசாமி போன்ற ஆண் தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஜமீன் கோடாங்கிப்பட்டியில் மட்டும் பதினைந்து குலதெய்வங்கள் உள்ளன.

இச்சமூக மக்களின் கோவில் பொங்கலானது சித்திரை மாதம் நடைபெறுகிறது. கோவிலில் காப்புக் கட்டியவுடன் விரதம் இருக்கத் தொடங்குகின்றனர். பொதுவாகக் கோவில்களில் பீடத்தைச் சுற்றி சுற்றுச் சுவர்கள் இருக்கும். ஆனால் இச்சமூக மக்களின் பெண் தெய்வமான சக்கம்மாவிற்கு சுவர் இல்லாமல் இலந்தைமுள் கொண்டு சுற்றிலும் போடப்பட்டுள்ளது. (சக்கம்மா உருவம் இவ்வழிபாட்டில் மாடு முக்கியப் பங்கினை வகிக்கிறது. எட்டு நாட்கள் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வழிபாட்டின்போது ஆணும், பெண்ணும் சட்டை போட மாட்டார்கள் பெண்கள் மாராப்பினைச் சேலையால் மறைத்துக் கட்டியிருப்பார்கள். ஒன்பது வசிய முறை உள்ளது. ஒவ்வொரு வசிய முறை ஓதும் போதும் மூன்று ஐந்து என ஓதி குலகுரு கட்டளை இடுவார். அதன்படி சடங்கு நடைபெறும்.

இச்சடங்கில் வல்லையப் பூசை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இப்பூசையில் கொழுக்கட்டை இடம்பெறுகிறது. இப்பூசையை நிகழ்த்த வயதுக்கு வராத ஏழு பெண் குழந்தைகளை அழைத்து ஆவாரஞ்செடி கொண்டு பெருக்கி பசுஞ்சாணத்தால் மெழுகி மஞ்சள்பொடி கொண்டு ஒன்பது கோடுகள் போடப்படுகின்றன அதில்தான் கம்மங் கொழுக்கட்டையை (வல்லையம்) வைத்து பழம் தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இவ்வழிபாட்டுச் சடங்கினை வைப்பவர்கள் மற்ற வீடுகளுக்கும் செல்லமாட்டார்கள். மற்றவர்களை வீட்டிற்கு அழைத்து வரவும் மாட்டார்கள். இச்சமூகத் தெய்வங்களுக்கு மது ஆகாது. மது, மாது, சூது இம்மூன்றையும் இச்சடங்கு நிகழ்த்துபவர்கள் விட்டுவிட வேண்டும். இச்சமூக மக்களுக்கு குலதெய்வம் பற்றிய நம்பிக்கையில் ஆழ்ந்து இருப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் அறிய முடிகின்றது.

வானம் பார்த்த வறண்ட கரிசல் பூமியில் வாழும் கம்பளநாயக்கர்களின் மொழி நிலை, அடையாளங்கள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை மற்ற நில, சமூக மக்களிடமிருந்து பெரிதும் வேறுபடுவதை அறிய முடிந்தது. அதற்கு மேலாக தனிச் சொத்தாக இருந்த தேவராட்டத்தினை அனைத்து மக்களும் அறிந்த பொதுச்சொத்தாக மாற்றிய பெருமை இம்மக்களுக்கே உரியதாகும்.

தகவலாளிகள்

1. கலைமாமணி குமாரராமன், 66 (கம்பள நாயக்கர்) கலைஞர், ஜமீன் கோடாங்கிபட்டி.

2. ராஜேஸ்வரி, 52 (கம்பள நாயக்கர்) கூலி, ஜமீன் கோடாங்கிப்பட்டி.

3. ஜெகஜோதி, 40 (கம்பள நாயக்கர்) தீப்பெட்டித் தொழில், ஜமீன் கோடங்கிப்பட்டி.

4. அப்பணசாமி, 20 (கம்பள நாயக்கர்) கலைஞர், விளாத்திக்குளம்.

5. அமுதவேல், 65 (கம்பள நாயக்கர்) குறிபார்ப்பவர், ஜமீன் கோடாங்கிப்பட்டி.

6. பொம்மம்மா, 56 (கம்பள நாயக்கர்) கூலி, விளாத்திக்குளம்.

7. சரஸ்வதி, 36 (கம்பள நாயக்கர்) விவசாயம், விளாத்திக்குளம்

களாய்வாளர் த.பூவை சுப்பிரமணியன், பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர். ''பா. செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்கள் வாழ்வியல்'' எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார்.👍👍🌱🌱🌱🌱

ஞாயிறு, 11 நவம்பர், 2018

இன்று அருமையான கம்பளத்தார் வரலாற்று சிறப்புமிக்க தென்னிலை கிராமத்தை நோக்கிய பயணம் அருமையாக அமைந்தது ..நம் மாப்பிள்ளை செந்தில்குமார் கண்ணுசாமி  குடும்பத்தார் குழந்தைச்செல்வம்  குடும்ப நிகழ்வுக்காக சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி ..

இங்கு அமையபெற்ற குல கடவுலானவர்கள் 
ஸ்ரீ நாகமுத்தையா 
ஸ்ரீ பொம்மையா, ஜக்கமா, காட்டம்மா, ஏடு கண்ணக்கலா 
(சப்த கன்னிகள்), 
சளி எருது சன்ன மாடு குட்டை கோவில் ,
காவல் தெய்வம் 
ஸ்ரீ பல்ல குடும்பன் 
வெகு நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஓர் வரலாற்று தகவலுடன் உங்களுடன் இனைவது மகிழ்ச்சியளிக்கிறது..
இன்றைய வரலாற்று தகவலானது மிகவும் சிறப்புற்று விளங்கும் ஆலயமான காடாரா பொம்மு மக்களாகிய பாலமன்னா வகையில் ஒன்றான கெங்கிசி பாலமுடையது...
இந்த ஆலயமானது சேர வள நாட்டின் தலை நகரான செஞ்சிற்கு (கரூவூர்) தென் கோடி முனையும் பாண்டியர்களின் பள்ளநாட்டின் (வேடசந்தூர்) வட பகுதியில் காவேரி ஆற்றங்கரையின் அருகாமையில்
வேலம்பாடி மந்தையில் ஏழு ஆலயங்களை தன்னகத்தே கொண்டு ஒருங்கே அமைய பெற்ற ஓர் இடம் தான் ஸ்ரீ நாகமுத்தையா திருக்கோவில்..
இவ்விடமானது சுமார் 300 ஆண்டு காலத்திற்கு மேல் பழமை வாய்ந்த மாலை மேடு என்னும் பெயரால் தற்போது அழைக்கப்படும்
இக்கோவிலானது
அரவக்குறிச்சி க்கு மேற்கே 3 மைல் தொலைவில் அமைய பெற்று தன்னுள் குடி கொண்ட வாசலை கிழக்கு முகமாகவும்
காவல் தெய்வமான
ஸ்ரீ பல்ல குடும்பன் கோவில் வாசலை மேற்கு முகமாகவும் கொண்டு காட்சி அளிக்கிறது...
இங்கு அமையபெற்ற குல கடவுலானவர்கள்
ஸ்ரீ நாகமுத்தையா
ஸ்ரீ பொம்மையா, ஜக்கமா, காட்டம்மா, ஏடு கண்ணக்கலா
(சப்த கன்னிகள்),
சளி எருது சன்ன மாடு குட்டை கோவில் ,
காவல் தெய்வம்
ஸ்ரீ பல்ல குடும்பன்
ஆகியோரை உள்ளடக்கியது
தல வரலாறு :
காடாரா பொம்மு, மக்களானவர்கள்
மாட்டு மந்தைகளை தன்னகத்தே கொண்டு வட பகுதியை விட்டு தெட்சணம் நோக்கி பாண்டிய நாட்டு வழியாக நகர்ந்தவர்கள் தன்னுள் கொண்ட மாட்டு மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு ஏற்ற இடம் தேடியும் அங்கங்கே தங்கு பயணமாக நகர்ந்த காலத்தில் வட பகுதி விட்டு தென் பகுதியின் எல்லையான பெத்த கொண்ட (கொல்லிமலை) எட்டியவுடன் மாடுகளுக்கு பஞ்சம் தீர்க்கவும் அங்கே சிறு காலம் தங்கி மாடுகளை பராமரித்து வந்த இவர்கள் வறட்சி அதிகமாக தென் கோடி பகுதிகளை நாடி செல்ல தொடங்கியவர்கள் அம்மலையின் தென் மேற்கு துருவத்தில் நடை பயணமாக செல்லும் போது அங்கங்கே மாட்டு மந்தைகள் சிறு குன்றின் மேல் அடைபட்டு செல்லும் போது அங்கு கோவில் எழுப்பி விட்டு சென்றார்களாம் அப்படி உருவாக்க பட்ட கோவில்கள் சில சங்கர் மலை , தேவர் மலை கோவில்களை அமைத்து விட்டு நடைபயணத்தை தொடங்கிய மக்கள் ஒரு பிரிவு தெற்கு நோக்கியும் ஒரு பிரிவு தென் மேற்கு துருவமாக ஆனைமலை காடுகளை நோக்கி நகர்ந்த காலமது விடாமல் தூறும் தூரல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்த அவர்கள் அங்கே மாட்டு மந்தைகளை (அவல தொட்டி) போட்டு அங்கே வாழ்வை நடத்த தொடங்கினர்... அவர்களுடன் சேர்ந்துவந்த கப்பளமு (கம்பளம்) குஜ்ஜ பொம்மு,ஏறமாசி பொம்மு, கப்பராஜூ போகராஜுலு - கல் உடைத்து கோவில் கட்ட உதவும் ஒட்டர்கள், மாலவார் (உறிமிக்காரர்கள்) ஆகியோர் உடன் வந்தவர்களாவார்கள்..
மக்கள் கூட்டம் பேரு வாரியான பகுதிகளில் குடியேறி வாழ்க்கையை தொடங்கி மாட்டு மந்தைகளை (அவல தொட்டி) ஆனமல சோனா சீம... கானகத்தில் (காடுகளை உள்ளடக்கியது)
அங்கே மலை காடுகளில் மாடுகளை அடைத்து கொண்டு ஆண்கள் இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்லுதல் பெண்டு பிள்ளைகள் கலைகளாவான
கற்றும் கற்று கொடுத்தும் மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்
அங்கே மிகுந்த சில காலங்கள் கழித்து மீண்டும் புறப்பட்டு மக்கள் கிழக்கு நோக்கி பயணப்பட அதில் ஒரு பகுதி தென்னோக்கி நகர்ந்தார்களாம் ஒரு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து தாராபுரம் அடுத்த ஓட பட்டி மந்தைக்கு வந்த காடாரா பொம்மு மகனார் நாக முத்தையா அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கி விட ஏரமாசி பொம்மு காமட்டவா மக்கள் வட கிழக்கு பகுதி நோக்கி செல்லாலாயினர் சென்று கொண்டே இருக்கும் போது ஒரு இடம் மேப்பிலை பகுதியில் ஏறி திரும்பி பார்க்கும் போது இவர்கள் இங்கே இருக்க காமட்டவ்வா திரும்பி பார்த்த இடத்தை மல்ல நத்தம் எனவும் கூற பெற்றனர்... அவர்கள் வாழ்க்கையை தொடங்கி மாட்டு மந்தைகள் ஆனைமலை காடுகளிலே இருந்தது மாடுகளை அங்கே பட்டிகளில் வைத்து அங்கே பட்டியில் இருந்த நாக முத்தையா மாடுகளை மெய்ப்பதும் மலைகளில் வேட்டையாடுவதும் கனிகளை உண்பதும் வாரம் ஒரு முறை வீட்டிற்கு செல்வதும் வழக்கமாக கொண்ட அவர் ஒரு நாள் இரவு வேலை அங்கு மலைபகுதியில்
மக்களில் சிலர் அவரை அடித்து போட்டு விடா ... மாட்டு மந்தியின் கோவு (சலி எருது சன்ன மாடு ) இதை கண்டு கண் கலங்கி பட்டியை விட்டு எகிறி குதித்து மக்கள் வாழ்ந்த பகுதிக்கு வந்து சேர கண்ணீருடன் நிற்க ஒரு மாடு மட்டும் வருவதை கண்ட மக்கள் மேல பகுதிக்கு சென்று பார்கையில் அவர் இறந்து விடவே அங்கு இருந்து மாடுகளை ஓட்டி கொண்டு அவரையும் எடுத்து கொண்டு வந்தனார்களாம் அவர் சிதை மூட்டபட்டார்
பின்னால் அவர் மனைவியார் கணவனை இழந்த பின் தானும் தீபண்டம் இறங்க
வேண்டும் என்று எண்ணி அங்கு இருந்து தீயிற்கு கவுடு ஒருவரை நாட யார் என்ன வென்று விசாரித்து பின் விளக்கமறிந்து அவரின் உறவினர்களை
அழைத்து ஏரமாசி பொம்மு மக்கள் வந்து அவர்க்கு சிதை மூட்டினார்களாம் அவ்விடத்தில் பின்னாளில் அவர்களின் மக்கள் அங்கே இருந்து பிரிந்து சென்றார்களாம் நாட்திசைகளிலும் அவர்கலாய் ஒன்று இணைந்து கோவில் கட்ட வேண்டும் என்று இருவரும் மக்களின் கனவில்ள் கூறவே அங்கே கோவில் எழுப்பப்பட்டதாம் அவையே மாலைமேடானாது..
அவர்களுக்கு கோவில் கட்ட அவர்களின் மக்கள் (மகன்கள்)
நாட் திசையில் இருந்தும் ஒன்று கூடி கோவில் கட்ட தொடங்கிய பின் கோவில் கட்டியும் முடிக்க பட்டது கோவிலுக்கு வேண்டிய சிந்தங்கள் (நடுக்கல்) வைக்கும் பனி இருக்க உத்தரவுக்கு காத்திருந்தனர் ...
அங்கு இருந்து வட முகமான பெத்த கொண்ட
(கொல்லி மலையில்)
இக்கோவிலுக்கான சிந்தங்கள் பிறந்திட்ட தகவலை அம்மலை பக்கத்தில் உள்ள சக்தி மிக்க கோடாங்கி நாய்க்கர் கனவில் கூற அவரும் இங்கே நாடி வந்து தகவலைக் கொடுக்க மக்கள் அனைவரும் ஏழு மாட்டு வண்டிகள் பூண்டு சென்று அங்கு அருள் அழைத்து அவற்றை கண்டறிந்து
(பொன்ன மாகுலு )
எடுத்து ஏழு வண்டிகளில் ஏற்றி கொண்டு வந்தவர்கள் காவிரி ஆற்றங்கரையில் மாடுகள் இழுக்க முடியாமல் இருக்க பக்கத்தில் எருமை மாடு கட்டி ஏர் உழுது கொண்டு இருந்த ஒரு பிரத்திவானிடம் போய் எருமை மாடுகளை கேட்க அவன் தர முடியாது ஏர் உழுதல் நின்று விடும் என்று கூறி பனியை தொடர காவடிகளை முறித்து கொண்டு வந்து அந்த எருமை மாடுகள் இவ்வண்டியை இழுத்து சென்றதாம் பின்னே வந்த அவன் வண்டியின் சக்கரத்தில் சிக்கி விட அவரையும் தூக்கி வண்டியில் போட்டு கொண்டு கோவிலிற்கு வந்து சேர்ந்தார்களாம் வந்து சேருமிடத்தில் அவரும் உயிர் பிரியவே அவரை எதிர் நோக்கி காவல் தெய்வமாக வணங்க முடிவு எடுத்த பின் அவரின் மனைவியார் செய்தி கேட்டு வந்து சேர்ந்து அழுது புலம்ப ..
அப்பொழுது அருள் வாக்கொடுத்தாராம் பிறக்கும் குழந்தை ஆணாகா பிறக்கும் .. கம்பளத்து மக்களில் வளர்க்கும் எருமை மாடு காளை கன்று ஈன்றால் தானமாக உனக்கு அளிக்க படும் என்பதை
சொல் வாக்காக முன் மொழிந்தாராம் கப்பளமு ..
அதே போல ஆண் குழந்தை பிறந்தமையில் இன்றும் இந்த கோவில் குடி பாடுகள் வளரக்கும் எருமை மாடுகள் காளை கன்று ஈன்றால் அவர்களுக்கு கொடுக்கும் பழக்கம் கடை பிடிக்க படுகிறது...
இன்னும் இருப்பின்
சுருக்கமாக முடித்து கொள்கிறேன்
இவ்வழி மக்கள் இரண்டாயிரம் குடும்பங்களை உள்ளடகியவர்க்கள்
சேலம்,நாமக்கல்,கரூர், திருச்சி,திண்டுக்கல் பகுதிகளில் வாழ்கின்றனர்...
இவற்றுள் இருந்து பிரிந்து சென்ற பாலமன்னா
1. காணக பாலமு
2.காட்டேரி பாலமு
3.தம்மிசி பாலமு
ஆகும்...
இந்த கோவிலின் (பெத்தி இல்லு )
கோவில் வீடு
(5 வீடுகள் ) உள்ளடக்கியது
ஆர்கட்டுநாயக்கனூர் எனும் சிற்றூரில் அமைய பெற்றுள்ளது..
சிறப்பு வழிபாடுகள் :
கார்த்திகை தீபம், தை பொங்கல், ஆடி பேருக்கு,
சிவராத்திரி,
பிரிதி மாதம் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது..
இக்கோவலிற்கு கம்பளத்தார்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வந்து வணங்கி செல்கின்றனர்
அமாவாசை தினம் அன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
இங்கு வேண்டும் வரமும், குழந்தை பாக்கியம் இல்லாதர்கள் இங்கு வணங்கி பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது..

மிகவும் சக்தி வாய்ந்த ஓர் ஆலயமாக திகழும் இத்தலமானது அரசுடமை ஆக்க முறைப்பட்டு தோல்வியில் முடிந்ததால் கம்பளத்து கட்டு பாட்டிலே கோவில் இன்றளவுமுள்ளன...
நம் மாப்பிள்ளைகள் ...கார்த்தி SR ..திருப்பூர் திவான் கார்த்திகேயன் ..தம்பி பொன்தமிழரசன் ,தம்பி மைக்ரோ கார்த்தி ..ஆகியோருடன் வரலாற்று சிறப்புமிக்க கோவில் சென்று வந்தது வாழ்வில் மறக்கமுடியாத பயணம் ..இனி இங்கு எந்த விழாஎன்றாலும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்ற 
மறவாமல் இருக்கும் ..
நன்றி :கோவில் வரலாறு  அருமையாக தொகுத்து அளித்த ...பாலமன்ன மாப்பிள்ளை திருப்பதி தேவராஜன் -இயந்திரவியல் துறை ..கோடான கோடி நன்றிகள் 
கம்பளவிருட்சம் அறக்கட்டளை 
செயல்குழு உறுப்பினர் 
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
www.kambalavirucham.in  
உடுமலைப்பேட்டை