திங்கள், 31 ஜூலை, 2017

 மகிழ்ச்சி ...


இன்று மாதக்கடைசி கடுமையான பணிசூழலிலும் ...நம் பண்பாட்டு கழக சொந்தங்களோடு சென்று மடத்துக்குளம் திரு .ஜெயராம கிருஷ்ணன் அவர்களை ...தளி எதுலப்ப மன்னரின் மணிமண்டபம் கட்டுவதற்காக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .அதற்கு அவர் தக்க ஆவணங்கள் ,வரலாற்று ஆவணங்கள் கொண்டு வந்து தாருங்கள் ..இதை சட்டசபையில் பேசி கோரிக்கைவைத்து அதற்கான முயற்ச்சியை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ...

பண்பாட்டு கழக மாநில அமைப்பு செயலர் -திரு .அம்போதி அவர்களுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை செல்வத்தை ..நிர்மலா பாலகுமார் மருத்துவமனையில் பார்த்தது பெருமகிழ்ச்சி ....

நம் பண்பாட்டு கழக இளைஞர் அணி தலைவர் .திரு .கருணாநிதி அவர்களை ...சிறு விபத்தால் சிறு காயங்களுடன் மயிரிழையில் தப்பித்தவரை பார்த்து ஆறுதல் அளித்து வந்தோம் ..

நம் கம்பள விருட்சம் உறுப்பினர் ..நம் சொந்தம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி ஈடுபட்டிருக்கும் ..காவல்துறையில் பணியில் சேரவிருக்கும் திரு .நந்தகோபால் அவர்களை நம் மடத்துக்குளம் mla திரு .ஜெயராம கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடவைத்தது பெரு மகிழ்ச்சி ...

ஞாயிறு, 30 ஜூலை, 2017



கம்பள விருட்சம் குழுமம் ....ஒருவருடம் முடிந்து ஆலமரமாக தன் கிளைகளை பரப்பிக்கொண்டுஇருக்கிறது ....பீனிக்ஸ் பறவையாக தன் இறகுகளை விரித்து ....இன்னும்  வேகம் கூடும் நம் இளையதலைமுறை வளர்ச்சி...ஆக்கபூர்வமான செயல்பாடுகளோடு ..... நன்றி B V B நந்தாகோபால் மாப்பிள்ளைக்கு

சனி, 29 ஜூலை, 2017

....
வேம்பு சதுக்கம் ....(உடுமலை -அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி )..தற்போது பழமையும் ,புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றது ,ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற மேடை அமைப்பு தற்போதும் இருந்து வருகிறது.அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தன...வகுப்பு அறையில் இருந்து வரிசையாக வேம்பு சதுக்கத்திற்கு வருவோம் ..வந்து நின்றவுடன் கொஞ்சம் சல சலப்பு பேச்சு வந்துகொண்டுஇருக்கும் ...நம்ம  ஆசிரியர் யாரவது சும்மா மொத்து மொத்து முதுகில் அடி விழும் சத்தம் கேட்டு பின்விழும் சத்தம் கேட்காமல் இருக்கும் அப்படியொரு  அமைதிநிலவும் ... வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் எண்ணி என் கண்களை கண்ணீர் மறைகின்றது .வேம்பு சதுக்கத்தில் உரையாற்றிய வர்கள் நீதியரசர் திரு .மோகன் ,ச.ராமலிங்கம் ,முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா ,திரு.கே.எ .மதியழகன்..திரு.கிருபானந்த வாரியார் ..ஆகியோர் ஆவார்கள். பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி கவுண்டர் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் என் மனதில் நிழலாடுகிறது...
என் அன்பு நண்பரின் வா .மணிகண்டன் அவர்களின் பதிவு ..நமது சமுதாய கம்பள விருட்சம் அறக்கட்டளையை ...இப்படித்தான் கொண்டுபோகவேண்டும் ....என்ற ஆவலுடன் ...நம் சொந்தங்களின் ஒத்துழைப்போடு கொண்டுபோகவேண்டும் ...வாழ்வது ஒருமுறை ...நம் எதிர்கால நம் குழந்தைகளின் நலனுக்காக ...

சூப்பர் 16

சூப்பர் 30 ஆனந்த் குமார் மீது எப்பொழுதுமே மிகுந்த மரியாதை உண்டு. பீஹார்காரர். கணிதத்தில் கெட்டிக்காரர். பட்டப்படிப்பு முடித்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கும் இடம் கிடைக்கிறது. ஆனால் அப்பா இறந்துவிட பொருளாதாரச் சூழலின் காரணமாக சேர முடியாமல் போகிறது. பீஹாரிலேயே தனிப்பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங்கியவர் ஆரம்பித்ததுதான் சூப்பர் 30. அவரது பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் முப்பது பேருக்கும் ஒரு வருடத்திற்கு தங்குமிடம் உணவு என எல்லாமும் இலவசம். ஆனந்தின் அம்மாதான் சமையல் செய்கிறார். இப்படி ஒவ்வொரு வருடம் தேர்ந்தெடுக்கப்படும் முப்பது மாணவர்களுக்கும் இந்தியாவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு பயிற்சியளிக்கிறார். இதுவரை நானூற்றைம்பது மாணவர்களுக்கு பயிற்சியளித்து முந்நூற்று தொண்ணூறு பேர்களை ஐஐடிக்குள் அனுப்பியிருக்கிறார். இந்த வருடம் முப்பது பேருமே ஐஐடியில் சேர்ந்திருக்கிறார்கள்.

லேசுப்பட்ட காரியமில்லை. அத்தனையும் ஆனந்த்குமாரின் சொந்தச் செலவு. அவரை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என வெகு நாளாக ஆசை. செய்யப் போகிற காரியத்துக்கான வடிவம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. எத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது, எந்தவிதமான பயிற்சியளிப்பது என்பது மாதிரியான தெளிவின்மை இருந்தது. இப்பொழுது நேரம் கனிந்திருக்கிறது. மாணவர்களைத் தங்க வைத்து உணவளித்துப் பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவர்களை செதுக்க முடியும். கால்நடை மருத்துவம், மீன்வளத்துறையியல், பொறியியல், பி.ஏ தமிழ், டிப்ளமோ, ஐடிஐ என பல்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சூரக்குட்டிகள் இவர்கள். நிசப்தம் மூலமாக படித்துக் கொண்டிருப்பவர்கள். பெற்றோர் வாய்க்கப்படாதவர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நாடோடிகளின் பிள்ளைகள் எனக் கலந்த கூட்டம். அவர்களிலிருந்து பதினாறு பேர்கள். 
சூப்பர் 16. பதினாறு என்ற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு மாணவர்கள் கூடலாம் குறையலாம். இவர்களுக்கு வருடம் முழுமையும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும். ஆங்கிலம், தன்னம்பிக்கை, உலகை எதிர்கொள்ளல் என்று பல்வேறு வகையான பயிற்சிகள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள். தொடர்ந்து பயிற்சியாளர்கள் வருவார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், பத்திரிக்கையாளர்கள் என்று கலவையானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்முடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக வருகிறவர்கள். ஒவ்வொருவரிடமும் வருடத்தில் அவர்களின் ஒரேயொரு நாளைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகத் திட்டம். ஒரு மாதம் வெளியிலிருந்து வருகிறவர்கள் பயிற்சியளிப்பார்கள். அடுத்த மாதம் நான் பயிற்சியளிப்பதாகத் வடிவமைத்து வைத்திருக்கிறோம். 
பயிற்சியாளர்களின் செயல்திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்துகிறார்களா என்ற கண்காணிப்பும் உண்டு.
ஏன் இந்தப் பணியைச் செய்கிறோம்? எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்? வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கும் நமக்குமிடையில் ஒருவிதமான புரிதலும் நட்பும் உறவும் உருவாவதற்காகத்தான் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் நான் அவர்களோடு பேச விரும்புகிறேன். இப்பொழுதே வாரத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவருடனுடம் பேசாமல் இல்லை என்றாலும் இன்னமும் நெருங்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் நெகிழ்த்தி வடிவமைத்தல்தான். 
ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசியதிலிருந்து இந்த பதினாறு பேருக்குமே ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறது. வெளியிடங்களில் பேச முடிவதில்லை, மொழிப்பிரச்சினை, தன்னம்பிக்கைக் குறைவு என்று எதையாவது சொல்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறவர்கள். அப்படி வெளிப்படையாகச் சொல்வதுதான் அவர்களின் பலமே. அதைச் சரி செய்து தருவதுதான் இத்தகைய தொடர்ச்சியான பயிற்சிகளின் நோக்கமும் கூட. இவர்களில் பலருக்கும் தெளிவான இலக்கு இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்குக் ஏற்ப சிலருக்கு ஏற்கனவே வழிகாட்டிகள் இருக்கிறார்கள். மீதமிருப்பவர்களுக்கான வழிகாட்டிகளைப் படிப்படியாக ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தீவிரமாகச் செய்யும் போது வழிகாட்டிகளும் அதே அளவு தீவிரத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சரியாக அமையும். 
இத்திட்டம் குறித்து இனி தொடர்ந்து அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நிசப்தம் செயல்பாட்டில் இது அடுத்த கட்டம்.
பதினாறு மாணவர்கள் என்பது முதல் வருடத்திற்கு அதிக எண்ணிக்கைதான். தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும். ஆனால் பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. தெளிவான திட்டம் இருக்கிறது. செயல்படுத்திவிட முடியும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ‘ஐஐடி’ என்பது மாதிரியான ஒற்றை நோக்கமில்லை. வெறுமனே வேலைக்குச் செல்லுதல் என்பது மாதிரியான தட்டையான இலக்கும் இல்லை. ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம்.

வியாழன், 27 ஜூலை, 2017

விமான விபத்து -சில உண்மைகள்!
திடீரென விமானங்கள் நடுவானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸி'ல் 23 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.
விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவ்வொரு மார்க்கத்திற்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்க தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானத்திற்கும், நிரந்தர கடல் வழி கப்பலுக்கும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிறந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்த வேண்டும்.
பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும், விரிந்து கிடக்கும் கடல் தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.
உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடுக்கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ்) அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது.
அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது.
முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூறப்படும் பகுதிகள் உள்ளது. இது பற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.
வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். சில சமயங்களில் கட்டுபாட்டு அறை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது.
இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடுவார்.
அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ரக எமெர்ஜென்சி'க்கு பயன்படுத்த இருக்கும்.
வெற்றிடத்தில் விமானம் நுழையும் போது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.
மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என மற்றொரு விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார்.
நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுப்பாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள்.
அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திற்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal'லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode'டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள்.
விமான தடத்தில் திடீரென சிறிய வெற்றிடம் வரும் போது திடீரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடீரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


என் அன்பு நண்பர் ...பிரகாஷ் ராமசாமி ...வடவள்ளி கோவைக்காரர் ....
இந்த முறை இந்தியாவிலிருந்து திரும்பி வந்த போது, கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தேன். குழந்தை முன்னால் எமோஷன் காட்டக்கூடாது என்று.. உபர் வருவதற்குள், வெப் செக் செய்து..டாக்குமெண்ட்ஸ் மொபைல், இந்த ஊர் ரெஸிடண்ட் ஐடெண்டிடி, சிம், பாஸ்போர்ட் இத்யாதிகளை அடுக்கி வைத்துவிட்டு.. கிளம்ப ஆயத்தமானபோது.. எங்கிருந்தோ வெளியிலிருந்து வந்து.. 'என்னோட அப்பா' என்று கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுத்த மகனை.. அப்படியே அணைத்துக்கொண்டேன்.
இருவரும் ஒரு மெல்லிய உணர்வால் புரிந்து கொண்டோம்.. இது தாற்காலிக பிரிவு என்று. கன்னத்தில் முத்தமிட்டபோது.. கீழே..காடி ஆகயா என்று அனிருத்தின் நண்பன் சொல்ல.. பை என்று எல்லோரிடம் சொல்லிவிட்டு கீழே லிப்டில் போக..
காரில் லக்கேஜை வைத்துவிட்டு.. கதவை பிடித்து மேல் நோக்கி பார்த்தேன்.. அவளின் கை மட்டும் தெரிந்தது. கையசைத்துவிட்டு, திரும்பி லேசாய் கண்ணை துடைத்துக்கொண்டு ஏறும்போது.. டாட்.. ப்பா.. என்று கீழே படியில் வந்ததால் ஏற்பட்ட மூச்சு வாங்கலோடு மீண்டும் அணைத்துக்கொண்டான். அழாதப்பா.. லவ் யூ என்ற போது.. அவனின் அழகிய முகம் எனக்கு கலங்கலாய் தெரிந்தது.
கட்டிக்கொண்டு பை சொன்ன கையை முத்தமிட்டு.. கைகாட்டியபின்.. கார் சரேலென திரும்பியதில் மறைந்தும்போனான். கர்ச்சீபால் கண்ணை துடைத்துக்கொண்ட போது.. அந்த இக்பால் என்ற உபர் ட்ரைவர்..'ஏக்கி பேட்டா ஹை க்யா..' என்றான்.
அன்போடு வாழ்தல் வரம்..❤️❤️


Mr .என்ஜினீயர் .திருப்பதி தேவராஜன் மாப்பிள நம்ம கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் பற்றி 5 பக்கம் அருமையான வரலாற்று தகவல்களை தந்துள்ளார் ...அதை ஒரு புத்தகமாக நம்ம கம்பள விருட்சம் அறக்கட்டளை முலமாக வெளியிடப்படும் ...அதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டுஉள்ளேன் ...வரும் வருமானத்தை நம்ம அறக்கட்டளைக்கு வழங்கப்படும் ...

செவ்வாய், 25 ஜூலை, 2017

தனிஒருவன் .....அச்சம் தவிர் ...ஷியாம் -ன் பாடல் ...

நம்மீது அன்புசெலுத்துபவர்கள் ....என்றும் கூடவே இருக்கிறார்கள் ....


இந்த நம் சைனிக் பள்ளியின் டாக்குமெண்டரி பார்க்கும்பொழுதெல்லாம் ...என் கனவுகளும் .என் செல்ல ஷ்யாமின் கனவுகளும் நொறுங்கு போய்விட்டன ...

கோவையில் இருந்து மாதம்  ஒரு  முறை ஞாயிறு மாலை நானும் ,ஷ்யாமும் அமராவதி சென்று இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் உரையாடி பழக்கபடித்துக்கொண்டு ...11 வயது ஆகும்போது ஷ்யாமை ராணுவ பள்ளியில் சேர்வதுக்கு பயிற்சி எடுத்ததுதான் நினைவில் வந்துபோகும் ...

திங்கள், 24 ஜூலை, 2017

முதல் மாத சம்பளத்தை வாங்கிவிட்டீர்களா..? இதை இப்போதே செய்துவிடுங்கள்..!

உங்கள் முதல் சம்பளம் உங்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தைத் தருவதோடு, உங்களுடைய சுய மரியாதையையும் தன்னம்பிக்கையையும் உயர்த்துகிறது. உங்கள் முதல் மாத சம்பளத்தை வாங்கியவுடன் வழக்கமாக நீங்கள் செய்ய நினைக்கும் முதல் விஷயம் உங்களுக்கு அல்லது உங்கள் பெற்றோர்களுக்குச் சில பரிசுகளை வாங்குவதாக இருக்கும் அல்லது நண்பர்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்வீர்கள்.

ஒரு வேலைக் கிடைத்து, உங்கள் முதல் மாத சம்பளத்தை வாங்கும்போது பொருளாதார ரீதியாக நிறைவடைந்த ஒரு வாழ்க்கையை நோக்கிய தொலைநோக்குக் கண்ணோட்டத்தையும் முதல் படிகளையும் எடுத்து வைக்க வேண்டிய காலமாகும். உங்கள் கனவுகளான சொந்தமாக ஒரு வீடு, கார், பைக் மற்றும் பலவற்றை வாங்குவதற்கான அடித்தளமிடுவதற்கு இது சரியான நேரமாகும்.


நீங்கள் முதல் மாத சம்பளத்தை வாங்கும்போது செய்யவேண்டிய ஐந்து விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஒரு நிதி சார்ந்த சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

முதல் சம்பளம் என்பது நம் அனைவருக்குமே மிகவும் சிறப்பானது. முதல் சம்பளத்திலிருந்து பொழுதுபோக்குகளுக்காக நீங்கள் அதிக அளவு செலவழிக்கலாம். நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உங்களுக்குப் பிடித்தமான உணவுக் கூடங்கள் உங்கள் முதல் சம்பளத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் இதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். மேலும் வருங்காலத்திற்காகச் சேமிப்பதைத் தொடங்குங்கள். இதர விஷயங்களுக்குச் செலவழிப்பதற்கு முன் சேமிப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். இவை அனைத்திற்கும் முன்னால் ஒரு சேமிப்பு இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள்.


2.ஒரு பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்.
.

ஒரு வரவு செலவு திட்டமானது உங்கள் செலவுகளைத் திட்டமிடுவதற்கு உதவுகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெறும் சம்பளப் பணத்தைக் கணக்கிடுங்கள். அத்தியாவசிய செலவுகளான வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவுகள், உணவுக்கான செலவுகள் போன்ற அனைத்தையும் பட்டியலிடுங்கள்.

இந்தச் செயல் உங்களுடைய வருமானத்தையும் செலவுகளையும் நீங்கள் புரிந்து கொள்வதற்கு உதவிக்கரமாக இருக்கும். மேலும் இது தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்கு வாய்ப்பைத் தரும்.


3.உங்களுக்கு ஒரு காப்பீடு எடுங்கள்

முதலில் உங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். வேலைக் கிடைத்தவுடன் ஒரு நீண்ட காலத்திற்கான ஆயுள் காப்பீட்டை உடனடியாக வாங்குங்கள். இளம் வயதிலேயே காப்பீட்டுத் திட்டத்தை வாங்கினால், அது மலிவாகக் கிடைக்கும்.

காப்பீட்டுத் திட்டம் என்பது மிகப்பெரிய பொருளாதார அவசர நெருக்கடி நிலைகளான விபத்து, கடுமையான நோய்கள், அல்லது இறப்பு ஏற்பட்டாலும் கூட அவற்றின் செலவுகளைக் கவனித்துக் கொள்ளும். உங்களைக் காத்துக் கொள்ள மருத்துவக் காப்பீட்டை வாங்கலாம். மேலும் இது உங்களைச் சார்ந்திருப்பவர்களைப் பாதுகாக்கும் மற்றொரு வழியாகும்.


4.பங்கு சந்தைகளில் முதலீடு செய்யுங்கள்

நீங்கள் இப்பொழுதுதான் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய தொகையை ஒதுக்க முடியாது. தொடக்கக்கால முதலீட்டாளர்களுக்குப் பங்கு சந்தையில் முதலீடு செய்வது மிகவும் நல்லதாகும்.

சில மாதங்களுக்குப் பிறகு, பெருமளவுத் தொகையை உங்களால் சேமிக்க முடியும். எஸ்ஐபி திட்டத்தில் (முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம்) முதலீடு செய்யத் தொடங்குவது வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல பயன்களைத் தரும்.

5.ஓய்வுக் காலத்தைத் திட்டமிடுங்கள்

ஓய்வுக் காலத்திற்காக எவ்வளவு முன்னதாக நீங்கள் திட்டமிட தொடங்குகிறீர்களோ அவ்வளவு நற்பயன்களை வருங்காலத்தில் பெற முடியும். பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்கான பொது வைப்பு நிதி திட்டங்களைக் கொண்டிருக்கின்றன.

உங்கள் நிறுவனம் உங்களுக்கு வருங்கால வைப்பு நிதியை அளிக்கவில்லை என்றால் நீங்களே ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடங்கி விடலாம். உங்கள் வாழ்நாளில் சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வுக் காலத்திற்கான திட்டமிடுதலைத் தொடங்குதல், நீங்கள் எடுக்கும் சிறந்த நிதி சார்ந்த முடிவாக இருக்கும்.


எனக்கு எல்லாம் இந்த மாதிரி சேமிப்பு பழக்கவழக்கங்களை செல்லித்தர ஆளில்லாமல் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் ...இம்ம் ..நீங்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள் ...சொல்லிக்கொடுக்க நான் இருக்கிறேன் ...

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com👍💐💐💐💐💐💐
இந்த வருடம் என்னுடைய இலக்கு 50........

1.வேலைவாய்ப்பு
2.திருமணம்
3.சொத்து
4.வாகனம்

நம் சமுதாய சொந்தங்களுக்கு இந்த நான்கும் அவர்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்த..இது என்னுடைய இலக்கு ..

இந்த வருடத்தில் ...வேலை வாய்ப்பு -16,திருமணம் -6,சொத்து -12,வாகனம் -22..இந்தநாள் முடிய பணி முடிந்து இருக்கிறது ...

  
Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........ 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

ஞாயிறு, 23 ஜூலை, 2017

கம்பள விருட்சக் குழுமம்:

நமது  பாளையக்காரர்கள் ஆண்ட சிஞ்சுவாடி கிராமத்தில் நடைபெற்ற 23.07.2017 தேதி ஞாயிறு காலை 10 மணி அளவில் நமது அறக்கட்டளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்று கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1.அருள்மிகு வல்லகொண்டம்மன் கோவில் நிலங்களை அரசு புறம்போக்கில் இருந்து கோவில் நிலமாக மாற்றுவதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு கொடுத்து அதன்படி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உடுமலை வட்டாச்சியர் பரிந்துரை செய்து உள்ளதற்கு அறக்கட்டளையின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறது .






2.விடுதலை போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் நினைவாக தமிழக அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது

3.நமது அறக்கட்டளையை மாவட்ட வாரியாக ,தொகுதி வாரியாக விரிவாக்கம் செய்வதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது

4.அறக்கட்டளையின் உறுப்பினர் அனைவரிடம் விண்ணப்ப படிவம் பூர்த்திசெய்து கோப்புக்கு சேர்க்கவேண்டியது .

5.புதிய உறுப்பினர்களை விரைவாக சேர்க்க அனைத்து உறுப்பினர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது .

6.அறக்கட்டளையைக்கு நன்கொடை பெறுவது என முடிவெடுக்கப்பட்டது .

7.நமது சமுதாயத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை ... J N பாளையம் திருமதி .செல்வராணி அவர்களுக்கு அரசு தொகுப்பு வழி நடத்துனர் என்ற விருது தமிழக அரசு சார்பில் அவரது குழுவிற்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நன்றி தெரிவித்து கொள்கிறது ..

வரும் மாதந்தரக்கூட்டம் அறக்கட்டளை ஆரம்பித்து ஒருவருடம் நிறைவுபெறுகிறது ..மிக சிறப்புடன் கொண்டாட திருமூர்த்தி மலை அருகே உள்ள கீர்த்தி வீரர் தளி எதுலப்ப மன்னரின் நினைவிடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ...


திங்கள், 17 ஜூலை, 2017

Karthic SR

கம்பள விருட்சக் குழுமம்:


நமது அறக்கட்டளையின் மாதாந்திர கலந்தாய்வு மற்றும் ஏலச்சீட்டு குலுக்கல் கூட்டம் எதிர்வரும் ஆடி  7ம் நாள் 23/07/2017 ம் நாள்
காலை 10 மணிமுதல் 2 மணிவரை
 பொள்ளாச்சி வட்டம் சிஞ்சுவாடி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள்கோவிலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நமது புரதான நினைவுச்சின்னங்களை பாதுகாத்து பராமரிக்கும் பொருட்டும்
சிஞ்சுவாடி என்பது மிகச்சரியான இடம்...

விருட்சத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விரைவு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் நிர்வாககுழு உறுப்பினர்களும் இதர ஆர்வமுள்ள உறுப்பினர்களும் பங்குபெற்று தங்களின் பொன்னான கருத்துக்களை எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


இவன்
  ஒருங்கினைப்புக்குழு
கம்பளவிருட்சம் அறக்கட்டளை

வியாழன், 13 ஜூலை, 2017

Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:
தீதும் நன்றும் பயன் தூக்கிப்பார்க்கும் கல்வி
கல்வியின்பால் மேம்பட்ட பொருளாதாரம்
பொருளாதாரம் மேம்படும்போதும் தடுமாறாத கட்டுக்கோப்பான பண்பாடு
 இவற்றை தாரக மந்திரங்களாக கொண்டு தமிழ்நாடு முழுதும் ஆங்காங்கே வளர்ந்து வரும் நம் கம்பளத்து இளைய சக்திகளை ஒருங்கினைத்து
முறைப்படி பதிவுபெற்ற அறக்கட்டளையான
கம்பளவிருட்சம் அறக்கட்டளை - தொழில்சார் கல்வி மேம்பாட்டுக்குழுமத்தின்
 நோக்கங்களும் விதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
  சமுதாயஒருங்கினைப்பில் ஆர்வமும் இனவளர்ச்சியில் ஈடுபாடும் கொண்ட கம்பளத்துசொந்தங்கள் அறக்கட்டளையில் தன்னை இனைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
அறக்கட்டளையின் நோக்கங்கள்:-

1. தமிழ்நாடு முழுதும் வாழும் இந்து - தொட்டியநாயக்கர் ராஜகம்பள இன மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான கல்விக்கூடங்கள்,  சமுதாய நலக்கூடங்கள், மருத்துவ மனைகள், விவசாயம் சார்ந்த
தொழில்கள், பண்ணைகள், தொழிற்கூடங்கள்,  நிதி நிறுவனம் போன்றவை அமைத்து பராமரித்து வர பாடுபடுதல்

2.நமது சமுதாய மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் திருமண தகவல் மையம் அமைத்து நமது இன ஆண்   பெண் நபர்களுக்கு நல்லதொரு மணமகள் , மணமகன் அமையவும்  அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் உதவுதல்

3.நமது இன மக்களுக்கு படித்த மற்றும் படிக்காத நபர்களுக்கு அவரவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை அமைத்துக்கொடுத்தல் அதற்காக தனி பிரிவு அமைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்ச்சி வகுப்புகள் நடத்துதல்

4.நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் ஜமீன்கள் அமைத்த பழம்பெரும் கோவில்களை புணரமைத்து பாதுகாத்தல் மற்றும் அதற்கான வரலாற்று புத்தகங்கள் வெளியிட்டு இனமக்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

5. அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பெருக்க தேவையான நன்கொடைகள் பெறுதல், சந்தா வசூலித்தல் ,மற்றும் இதர வழிகளில் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்களிடமிருந்து நிதிகளை பெறுதல்.

6. அறக்கட்டளைக்கு தேவையான அசையும்  அசையா சொத்துக்களை வாங்கவும், விற்கவும், குத்தகைக்கு மற்றும் வாடைகைக்கு விடுதல் அடமானம் வைத்து கடன் பெறுதல் மற்றும் அறக்கட்டளைக்கு தேவையான இதர காரியங்களை செய்தல்

7. கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்தும்,  ஏற்கனவே உள்ள கல்வி ஸ்தாபனங்களை ஏற்று நடத்துவது அவற்றை அபிவிருத்தி செய்வது போன்ற கல்விப்பணியை செய்வது

8.சிறந்த மாணவ மாணவியற்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் அவர்களின் மேற்படிப்பிற்கு வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கல்விப்பணியை செய்வது

9.ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளையோ அல்லது அதற்கான பண வசதிகளையோ செய்து கொடுப்பது

10.மேற்கண்ட நோக்கங்களுக்காக நிர்வாக குழு கூட்டம் கூட்டி அதற்கான ஆயத்த முடிவுகளை எடுப்பது

அறக்கட்டளை உறுப்பினர்கள்:-

அறக்கட்டளைக்கு மூலதன நன்கொடையாக 1000(ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தும் இந்து- தொட்டிய நாயக்கர் ராஜகம்பள இனத்தை சார்ந்த பதினெட்டு வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் அனைவரும் உறுப்பினராகும் தகுதியை பெறுவர்
அவ்வாறு மூலதன நன்கொடை செலுத்தும் நபர்களை அறக்கட்டளை நிர்வாக குழு பரிசீலனை செய்து தீர்மானம் இயற்றி உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம்
நிர்வாககுழுவிற்கு எந்த ஒரு நபரையும் காரணம் தெரிவிக்காமல் உறுப்பினராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் முழு அதிகாரம் உண்டு.  நிராகரிக்கப்படும் நபர் நிர்வாக குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கவோ நீதிமன்றம் செல்லவே முடியாது
நிர்வாக குழுவின் தீர்ப்பே இறுதியானது

2. இந்த அறக்கட்டளையின் எந்த ஒரு உறுப்பினரும்

(*) இந்து தொட்டியநாயக்கர் ராஜகம்பள இனத்தை சேர்ந்தவராக இல்லாத பட்சத்திலோ

(*) நெறிகேடான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டவராகவோ

(*) சமூக குற்றம் , தேசவிரோத குற்றங்களில் ஈடுபட்டாலோ

(*) புத்தி சுவாதீனமில்லாதவராக காணப்பட்டாலோ

(*) உறுப்பினர்களுக்கு அறக்கட்டளை நிர்ணயம் செய்யும் தொகையை செலுத்தாமல் இருந்தாலோ

(*) அறக்கட்டளையின் நலனுக்கு எதிராக செயல்பட்டாலோ

 நிர்வாக குழுவின் பெரும்பாண்மையான நபர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றி அந்த உறுப்பினர் நீக்கப்படுவார்
அவ்வாறு நீக்கப்படும் நபர் நிர்வாககுழுவின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது
நிர்வாககுழுவின் முடிவே இறுதியானது :

3. ஸ்தாபகர் அல்லது ஆரம்ப உறுப்பினர்கள் காலமாகிவிட்டாலோ அல்லது அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக இருந்தாலோ விலகும் நபர் பரிந்துரை செய்யும் நபரை ( ஆண்/ பெண்) அறக்கட்டளையில் சேர்த்துக்கொள்ளலாம் அவர் பரிந்துரை செய்யாதபட்சத்தில் நிர்வாககுழுவே மாற்று நபரை தேர்ந்தெடுக்கும் இதிலும் நிர்வாக குழுவின் முடிவே இறுதியானது.....🌿💐💐💐👍👍👍👍


வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன??? சூப்பரான திட்டம் தான்...

வீட்டுக் கடன்களில் இருந்து வீட்டை பாதுகாக்க காப்பீடை பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய காப்பீடு பெரும் பொழுது வீட்டுக்கடன் பெரிய தொகையாக இருக்கும் போது, அதை வாங்கியவர் இறந்தாலும் கூட கவலைப்பட தேவையில்லை. அப்படி கடன் வாங்கியவர் இறக்கையில் அவர் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அந்த கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. வீட்டுக்கடனும் முழுவதுமாக அடைபடாத நிலையில் கடனில் உள்ள வீட்டையும் வங்கி கையகப்படுத்தாது.

வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாடு??? ஆயுட் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பொதுவான காப்பீடு நிறுவனங்களும் இந்த விசேஷ திட்டத்தை வழங்க முடியும். காப்பீட்டு தொகையை முழுவதுமாக கட்டியோ அல்லது ப்ரீமியம் முறையில் தொகையை பிரித்து கட்டியோ, உங்கள் வீட்டுக் கடனுக்காக இந்த காப்பீட்டை பெற முடியும். பொதுவாக வீட்டிற்காக எவ்வளவு கடன் வாங்கியிருக்கோமோ அதே தொகைக்கு தான் இந்த காப்பீட்டு தொகையும் அமையும்.

முடிவு உங்கள் கையில்.. ஒரு வேளை கடன் வாங்கியவரின் கையில் போதுமான தொகை இல்லையென்றால், உங்கள் வீட்டுகடன் தொகையை காப்பீட்டு ப்ரீமியத்தோடு சேர்த்து விடும் படி பல நேரங்களில் வங்கியே அறிவுறுத்துகின்றனர்.

இத்திட்டத்தில் உள்ள குறைகள் இந்த திட்டத்தில், மீதமிருக்கும் கடன் தொகைக்கு மட்டும் தான் ஒவ்வொரு வருடமும் ப்ரீமியம் தொகை கணக்கிடப்படும். இதுவே இந்த திட்டத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. அதனால் நீங்கள் கட்ட வேண்டிய கடன் தொகை குறைய குறைய உங்களின் ப்ரீமியம் தொகையும் குறையும்.

திட்டத்தின் பயன்கள் இந்த திட்டத்தின் படி, கடன் வாங்கியவர் இறந்து விட்டால், மீதமிருக்கும் வீட்டு கடனை அடைக்க காப்பீட்டு தொகை கொடுக்கப்படும். இருப்பினும் ப்ரீமியம் தொகை அதிகமாக இருக்கும் வேளையில், கடன் வாங்கியவர் தீவிர நோய்வாய் பட்டாலோ அல்லது நிரந்தரமாக ஊனமடைந்தாலோ கடனை அடிக்க அவர் காப்பீடு நிறுவனத்தை நாடி வீட்டு கடனை அடைத்து விடலாம்.

ஆன்லைன் டெர்ம் திட்டம் இருப்பினும் சிறந்த திட்டத்துக்காக ஒப்பிடுகையில் டெர்ம் திட்டம் தான் சிறந்தாதாக விளங்குகிறது. தங்கள் வீட்டு கடனுக்காக காப்பீடு எடுக்க விரும்புபவர்கள், உருமாறும் விசேஷ வீட்டு கடன் பாதுகாப்பு திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரே தவணையில் பிரீமியத்தை அளித்திடும் ஆன்லைன் டெர்ம் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

சிறந்தது தான்... வருடாந்திர புதுபிக்கப்படும் பாலிசி வீட்டுக்கடன் பாதுகாப்பு திட்டத்தை விட அதிக விலை உயர்ந்ததாக இருக்கும். அதற்கு காரணம் உங்கள் பாலிசியின் தொகை அதிகமாக இருப்பதாலேயே. அதனால் ஒரே தவணையில் பிரீமியத்தை அளித்திடும் டெர்ம் திட்டமே பரிந்துரைக்கப்படுகிறது.

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

செவ்வாய், 11 ஜூலை, 2017






ட்ட்ரூஊஊஊம் ... ட்ட்ரூஊஊஊம் ... போகட்டும்... போகட்டும் .. ரைஐஐஐஐட்....

கோயம்முத்தூர் ...உடுமலைப்பேட்டை ...ஜல்லிபட்டி ...திருமூர்த்திமலை ....காளாஞ்சிப்பட்டி ...

மூன்று நாள் விடுமுறை. மகனை எங்கேனும் அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்பியபொழுது, சந்தைமயமாக்கப் பட்ட கேளிக்கை கூடாரங்களுக்குச் செல்ல விருப்பமில்லை. மாறாக இயற்கைச் சூழலும் , எதார்த்தமும் கலந்த ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றியது. அதனால் எனது விருப்பத் தேர்வாக, அருகாமையில் இருந்த ஒரு விவசாயப் பண்ணைக்குச் சென்றோம். விவசாய முறையைப் பார்க்க வேண்டும் என்கிற எனது நெடுநாள் ஆசையும் நிறைவேறியது.

பண்ணை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடியபொழுது நம் நாட்டு விவசாய முறைக்கும்  உள்ள வேறுபாடுகள் குறித்து ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது. அவர் சொன்னார். 200 ஏக்கர் பண்ணை, அதில் இருபது ஏக்கர் நிலத்தை குழந்தைகள் கேளிக்கை மற்றும் பார்வைக்கு ஒதுக்கியுள்ளனர். அதில் பல்வேறு கால்நடைகள், முயல்கள், பறவைகள் மற்றும் குதிரைகளும் இடம்பெற்றிருந்தன.. தங்கள் குழந்தைகளுடன் வந்து அங்கே மகிழ்ச்சியுடன் நேரம் செலவிடுவதைப் பார்க்கிற பொழுது அவர்களுக்கு வேளாண் தொழிலின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் புரிந்தது.

பண்ணையில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எனது கண்ணைக் கவர்ந்தது அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்த பெர்குசன் டிராக்டர். காரணம் இந்த டிராக்டருடன் எனது பால்ய நினைவுகள் பல பின்னிப் பிணைந்துள்ளன. எனக்கு வியப்பு என்னவென்றால், இங்கே நான் பார்த்த டிராக்டர் அதன் வடிவமைப்பில் எவ்வித மாறுபாடும் இன்றி அப்படியே நூறு சதம் நம் ஊரில் சிறுவயதில் பார்த்த எம்.எப். டிரக்டர் போன்றே இருந்தது.. இது எப்படியும் 30-40 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். எனவேதான் ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள் போலும்.

எது எப்படியோ, இதைப் பார்த்த மாத்திரத்தில் எனக்குள் ஒரு குதூகலம் பிறந்துவிட்டது. ஏறி அமர்ந்து ஆசை தீர ஆராய்ந்து, பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்ந்தேன். எங்கள் ஊர்ப் பக்கம் 25 ஆண்டுகள் முன்பு வரை இத்தகைய டிராக்டர்கள் அரிதினும் அரிது. எருது பூட்டி தான் உழுவார்கள். அண்மைக் காலம் வரையிலும் , எருது உழவுதான் ஆழமான உழவு என்கிற நம்பிக்கை இருந்து வந்துள்ளது. ஒரு பழமொழி கூட உண்டு... அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே சிறந்தது என்பார்கள். வேகமாக வளர்ந்து வரும் இன்றைய அவசர பொருளாதார நிலையில் உழவுக்கே மதிப்பு குறைந்துவருகிற பொழுது ஏர் பூட்டி உழுது விவசாயம் செய்வதற்கு விவசாயிக்கு ஏது அவகாசம்! எருதுகள் மறைந்து வாடகைக்கு டிராக்டர் அமர்த்தி உழும் நிலை முற்றிலுமாக மாறியதை என் வயதிற்கே, என் கண்முன்னாலேயே பார்க்க நேர்ந்தது.

இந்தத் தொடரின் ஆரம்ப காலத்தில் தான் விவசாயத்தை பிரதான தொழிலாகச் செய்து வந்த எனது தாத்தா வீட்டில், அந்த டிராக்டர் வாங்கினார்கள். அந்த கிராமத்திலேயே அதுதான் முதலோ அல்லது இரண்டாவதோ டிராக்டர். அடேங்கப்பா.. எது எத்தகைய ஒரு திருவிழாவாக இருந்தது என எண்ணிப் பார்க்கிறேன். உரலில் பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் ஆட்டி , அதைத் தன் காளைகள் பருகிக் களைப்பாற, அதன் கழுத்து மணிகள் ஒலிப்பதை தேவலோக இன்னிசையாகக் கருதி , கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்தவாறு முகமலர்ந்து துயில் கொண்ட அந்த விவசாயியின், நிம்மதியான தூக்கத்தை மட்டுமின்றி வழி வழி பேணிப் பாதுகாத்து வந்த தன் வேளாண் வாழ்க்கை முறையையே உழுப்ப வந்த , நவீனமயமாக்கலின் முதல் பெருங் கரங்கள் தான் இந்தப் பேரியந்திரங்கள்.

அப்போது ஒரு டிராக்டர் வைத்திருப்பது கவுரவங்களில் தலையாயதாகக் கருதப் பட்டது. உழவுக்கு மட்டுமின்றி குல தெய்வம் கோவில்களுக்கு, சினிமாக்களுக்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி என நல்லது கெட்டது களுக்கு, சில சமயங்களில் அரசியல் கூட்டங்களுக்கும் கூட்டமாகச் செல்வதற்கும் அவை பெருந்துணையாக இருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இன்றைக்கு நமக்கு கார் எப்படியோ அதைப் போல அல்லது அதற்கும் மேலாக அன்றைக்கு விவசாயிக்கு டிராக்டர். அப்போது வெளிவந்த படிக்காதவன், வேலைக்காரன், இதுதாண்டா போலீஸ் படங்களுக்கு டிரக்டர் கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த கிராமமும் சென்றபொழுது நானும் போனது நினைவிருக்கிறது!

தன் குடும்பத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு காது குத்தி, கடா வெட்டி, சிகை மழித்துக் கொண்டாடுவதைப் போல புதிதாக வந்த அந்த டிராக்டரையும் தன் குடும்பத்தின் புதுவரவாக நடத்தினார்கள். எங்கள் வீட்டில் டிராக்டர் வாங்கியதும் முதன் முதலாக அவர்கள் மேற்கொண்ட பயணம்,தளி அருகே உள்ள திருமூர்த்தி மலை   கோவிலுக்கு. வாங்கிய டிராக்டர் நலமாக இருக்க, அதன் மூலம் விவசாயம் செழிக்க, திருமூர்த்தி  அருள் வேண்டி, ஒரு ஆட்டுக் கிடாய் படையல் இடுவாதாக நேர்ந்துகொண்டு, வளர்த்து வைத்திருந்தார்கள்.

அன்றைய தினம், சுற்றம் சூழ பெண்டிர் குழந்தைகள் அனைவரும் டிராக்டரின் டிரைலரில் ஏற்றி அமர்த்தப் பட்டனர். அதில் நானும் ஒருவனாக , அந்த ஆட்டுக்கிடாய் அருகில் அமர்ந்திருந்தேன். ஆண்களில் நான்கைந்து பேர் இஞ்சினில் அமர்ந்து வருவர். மற்றவர்கள் பேருந்திலோ அல்லது தங்கள் மொபெட் வாகனங்களிலோ வந்து சேர்வர். சுற்றிலும் பெண்கள் கெக்கலி கொட்டி ஊர்கதை உலகக் கதைகளை மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு வர , 15 கிலோமீட்டர் பயணம், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில், வழி நெடுகிலும் தூக்கியடிதுக் கொண்டு, ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போலத் தொடர்ந்து, கோவில் வந்து சேர்ந்தோம். அங்கே பூசாரி ஒருவர் வந்து டிராக்டருக்கு மாலை, மரியாதை, பூஜை, புரஸ்காரம் எல்லாம் செய்து முடித்த பிறகு எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிடாவெட்டு நடந்தது.

விசேச ஒன்றுகூடல் போல இருந்ததால் அவரவர் ஆங்காங்கே பலகதைகள் பேசிக் கொண்டிருக்க, நான் ஒதுங்கி ஆடு வெட்டிக் கூறுபோடுவதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெட்டிக் கொண்டிருந்த எம்பெருமாள் ஒரு கையில் மீசையை திருகி விட்டுக் கொண்டு, மறுகையில் ஆடுத் தலையை தூக்கி காட்டியவாறு, என்னடா விளையாடாம இதப் போயி இவ்வளவு ஆர்வமா பாத்துகிட்டு இருக்க.. எனக் கூறியவாறு அதன் மூளையை வெட்டி எடுத்தார். இந்த பாத்தியா இதுதான் மூளை. நமக்கும் மண்டைக்குள்ள இப்பிடித்தான் இருக்கும். இது இல்லன்னா கழுதைய சோலி முடிஞ்சதுன்னு அர்த்தம் எனக் கூறி சிரித்துக் கொண்டே, அருகில் இருந்த ஒருவனை அழைத்தார். அவனிடம் இந்தாடா இந்த மூளைக் கறிய சின்னப் பயலுக்கு வறுத்துக் கொடு எனக் கட்டளையிட்டார். அவன் ஒரு வாணலியை சூடேற்றி, நல்லெண்ணெய் விட்டு, மஞ்சள், மிளகு உப்பு போட்டு இன்ஸ்டண்டாக வறுத்துக் கொடுத்தான். உருகி ஓடிய கொழுப்புடன் சேர்ந்து மிளகு மனம் கமழ மூளைக் கறி நாக்கில் உருகி, தொண்டையைக் கடந்து, வயிற்றில் நிலை கொண்டது நினைவிருக்கிறது.

என்னிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தன் வேலையில் மும்முரமாக இருந்த எம்பெருமாள், டவுன் பள்ளிக்கூடத்துல படிக்கிற, நல்லா மூளைய வளத்து , ஒரு டாக்டராவோ, கலெக்டராவோ வரணும் . அதான் உனக்கு மூளக் கறி கொடுத்திருக்கேன் கேட்டியா.. என்றார். பின்னர் ஒருகணம் யோசித்துவிட்டு, கலெக்டர் வேணாம்டா .. தண்ணி வரல, கரண்டு வரல்லன்னு ஒரே அக்கப்போரு .. நீ ஒரு நல்ல டாக்டரா வரணும். ஆபரேசனா பண்ணி அறுத்து எறியணும் பாத்துக்க எனக் கூறிவிட்டு, வெறித்தனமாக ஒரு கறித்துண்டை அறுத்து சட்டியில் வீசினார். வெகுளியான அந்த மனிதர்களை இன்று எண்ணிப் பார்த்தாலும் சிலிர்த்துப் போகிறேன்.

ஒரு பக்கம் பெரிய சமையல் நடந்து முடிந்திருந்தது. வரிசயாக பந்தியில் அமர்ந்து இலையில் பரிமாறினார்கள். சாப்பிட்டதும் இளைப்பாறினார்கள். ஒரு சில ஆடவர்கள் தூரத்தில் இருந்த ஒரு ஆலமர நிழலில் மதுப்புட்டியுடனும் சீட்டுக் கட்டுகளுடனும் ஒதுங்கி மறைந்தார்கள். மாலை ஆனதும் ஊர் திரும்ப ஆயர்த்தமானோம். மறுபடியும் அதே டிரெய்லர் இருக்கை. கிளம்பும்போழுதே லேசாக இருட்டத் தொடங்கி விட்டது. பின்னர் பாதி வழியில் ஒரு அடிகுழாய் அருகில் வண்டி நின்றது. ஹெட் லைட் வெளிச்சத்தில் முன்னே வட்டமாக அமர்ந்து, மீதமிருந்த உணவை இரவு உணவாக உண்டு , அடிகுழாயில் கைகழுவிக் கொண்டு புறப்பட்டோம். ஊர் வந்து சேர்ந்த பொழுது நான் நன்றாக தூங்கிவிட்டேன் போலும். மறுநாள் விழித்துப் பார்த்த பொழுது எங்கே இருக்கிறோம் என உணர ஒருசில நிமிடங்கள் தேவைப்பட்டது.

அந்த வயதில் சாலையில் ஒரு டிராக்டர் போனால், விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் நாங்கள், அதன் பின்னாலே ஓடி, டிரைலரில் தொத்திக் கொள்வோம். யாராவது பெரியவர்கள் பார்த்து ´´ ஓடுற வண்டியில இப்படி ஏறுரீங்கலேடா .. விழுந்து கையக் கால ஒடச்சுக்காதீங்கடா எனத் திட்டுவார். உடனே நாங்கள் ´´ ஏ ... காத்தடிக்குது கமலடிக்குது தாத்தாவை தூக்கியடிக்குது... ஏ.... ´´ என்று எதையாவது கத்திக்கொண்டு ஓடுவோம். அவர் கடுப்பாகி, குரங்குப் பயலுகளா எனக் கத்தியவாறு கையில் பிரம்புடன் கொஞ்ச தூரம் விரட்டுவார்.

வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் நிறுத்தி வைக்கப் பட்ட டிராக்டரில் ஒரு செட்டாக பஸ் கண்டக்டர் விளையாட்டு விளையாடுவோம். எங்கள் டிராக்டர் என்பதால் கவுரவமான டிரைவர் சீட்டு எனக்குக் கிடைத்துவிடும். பின்னர் வளர்ந்து 12-14 வயதில் இந்த டிராக்டரை எப்படியாவது ஒட்டிவிட வேண்டும் என்கிற ஆசை தணலாக எரிந்து கொண்டிருந்தது. இதற்காகவே டிராக்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் எனது மாமாவிற்கு உதவியாக ஸ்பானர் எடுத்துக் கொடுப்பது, கிரீஸ் கன் எடுத்துக் கொடுப்பது, டிஸ்டில் வாட்டர் பாட்டில் எடுத்து வருவது, பின்னால் கழப்பை சரியாக பூட்டுண்டு விட்டதா எனப் பார்த்துச் சொல்வது போன்ற சில்லறை வேலைகளை வலிந்து செய்திருக்கிறேன். பல சமயங்களில் கொடுக்க மாட்டார். சில நேரங்களில் அவரது கடைக்கண் அருட்பார்வை பட்டு, உழவு முடிக்கிற வேளையில், அரை பாத்தியோ , கால் பாத்தியோ, கொஞ்ச நேரம் ஓட்டக் கொடுப்பார். அதுதான் நான் முதன் முதலாக இயக்கப் பயின்ற நான்கு சக்கர வாகனம்.

இதில் ஒரு எதார்த்தத்தைக் கவனித்தேன். புதிதாக வாங்கிய மாருதி 800  காரில் முதன் முதலாக குடும்பத்துடன் செல்வது இந்தப் பண்ணைக்குத்தான். வரும் வழியில் அந்தக் காரின் நேர்த்தி, தொழில்நுட்பம், சொகுசு குறித்து வியந்தவாறு ஓட்டிக் கொண்டு வந்தேன். வந்த இடத்தில் நான் முதன் முதாலாக ஓட்டிப் பழகிய வாகனத்தைப் பார்க்கிறேன். என்ன விந்தை இது?!


என்னதான் ஒய்யாரமாக மாருதி 800 வை ஓட்டிக் கொண்டு வந்தாலும், அன்றைக்கு வாழ்வைப் போராட்டமாகக் கொண்டிருந்த அந்த எளிமையான மனிதர்களின் தாக்கத்திலும் பராமரிப்பிலும் வளர்ந்ததுதானே எனது சிந்தனை, செயல், வாழ்க்கைதரம் எல்லாம் என்கிற உண்மை தோன்றி இனித்தது. அந்த கிராமியச் சூழலும், எதார்த்த வாழ்க்கை கொண்ட அதன் மனிதர்கலும், தந்த அனுபவங்கள்தான் என் வாழ்வில் நான் பெற்ற விலைமதிப்பற்ற பொக்கிசங்களாகக் கருதி நான் மகிழ்வது!

ட்ட்ரூஊஊஊம் ... ட்ட்ரூஊஊஊம் ... வழி.. வழி.... போகட்டும்... போகட்டும் .. ரைஐஐஐஐட்....

கோயம்முத்தூர் ...உடுமலைப்பேட்டை ...ஜல்லிபட்டி ...திருமூர்த்திமலை ....காளாஞ்சிப்பட்டி ...

ஞாயிறு, 9 ஜூலை, 2017

இன்று ஜல்லிபட்டியிலிருந்து ...நானும் ,பாவலர் பழனிசாமி ...தளி எத்தலப்ப மன்னரின் ....தளி சுற்றி இருக்கும் பாளையக்காரர்கள்  கோவிலின் ஆங்காங்கே சிலைகள்,தளி சிதிலடைந்த பாளையக்காரர்கள் அரண்மனை  இடங்களை குறிச்சிக்கோட்டை வருவாய் ஆய்வாளர்(Revenu Inpector )திரு .விஷ்ணு  அவர்களுக்கு பார்வையிட வழிசெய்தோம்....ஆய்வாளர் சேலத்தை சேர்ந்தவர் ...முனைவர் இந்திரசித்து அவர்களின் கனவு வீண்போகவில்லை ....உடுமலை வரலாற்று மையத்தின் பணி சரியான தொலைநோக்கில் சென்றுகொண்டிருக்கிறது ... 


வெள்ளி, 7 ஜூலை, 2017

நேரு ராஜ் ....

மேட்டுப்பாளையம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் .

குழந்தைகளுக்கு நேரு மாமா என்றவுடன் நினைவுக்கு வருவது நமது ஜவஹர்லால் நேரு அவர்கள்தான் ..

 மேட்டுப்பாளையம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் நண்பர் நேரு ராஜ் ....

மனதில் எந்த கள்ளம் ,கபடம் , இல்லாத வெள்ளந்தியான நட்புடன் பழகுபவர் .முதன் முதலில் மேட்டுப்பாளையத்தில் நான் பணிபுரியும் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் சந்தித்தேன் ...வாழ்க்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் நேரு நண்பரிடம் சிலமணிநேரங்கள் பேசினாலே போதும் ...மனதில்  மகிழ்ச்சியுடன் அந்த நாளை கொண்டாடலாம் ..அந்த அளவுக்கு சிரித்த முகத்துடன் பேசுபவர் .இவருடன் களப்பணியில் பணியாற்றும் போது அந்த நாள் செல்வதே தெரியாது ...பணியில் ஒரு மகிழ்ச்சியுடன் ,அந்த நாள் வியாபாரத்தை முடித்து கொண்டுவருவார் ...நமக்கும் தொழில் நுணுக்கத்தை கற்று தருபவர் ...

மேட்டுப்பாளையத்தில் இவரை தெரியாத நண்பர்களே வெகு குறைவு ..
இவரை சுற்றி இருக்கும் நண்பர்களும் ,பணியாளர்களும் ,உயர் அதிகாரிகளும் ,தொழிலதிபர்களும் ,கவுன்சிலர் முதல் தமிழக முதல்வர் வரை ...நட்புவட்டங்களுடன் புன்னைகையுடன் வலம்வருபவர் ...


என் இனிய நண்பர் ....நேரு ராஜ் ..அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
 
Sivakumar.V.K








(Home Loans,Home Loans To NRIs) 
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com