சனி, 10 நவம்பர், 2018

திருமண வாழ்த்து 11.11.2018....கம்பள விருட்சத்தின் விதைகள் 
உடுமலைப்பேட்டை ...மாலைநேரம் குளிர் காற்றுடன் ஆனைமலைப்பாதையில் தென்னைமரங்கள் சூழந்த பசுமைநிறந்த தோட்டங்களின் வழியாக ...ஆஞ்சிநேயர் குடியிருக்கும் மலை அடிவாரத்தில் ...எத்தலப்ப மன்னர் அரசாண்ட மலை பகுதியின்  அடிவாரத்தில் 
உடுமலை கரட்டுமடம்
நாச்சிமுத்துக்கவுண்டர் & சரோஜினியம்மாள்
திருமண மண்டபத்தில்
கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள
செல்வன்:- பார்த்திபன்
&
செல்வி:- ஜோதிலட்சுமி
ஆகியோரின் திருமண விழாவில் நம் சொந்தங்களுடன் ,நம் மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன்,கம்பளவிருட்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் அதிகம்  கலந்துகொண்டு மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும்
பரிமாறிக்கொண்டோம்...மகிழ்ச்சி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் அறக்கட்டளை
www.kambalavirucham.in 
மணமாங்கள்யம் கம்பள திருமண இணையதளம் 
www.manamangalyam.in 
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 
  

வெள்ளி, 9 நவம்பர், 2018

கோவையின் தன்னம்பிக்கையின் மனிதர் ..திரு .மாதவன் ....

ரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.!

அரை நூற்றாண்டுகால வாழ்க்கையில் பிரபல மெத்தை நிறுவனமான கர்ல்ஆன்-ல் ரூ650 சம்பளத்தில் ஷிப்ட் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து சுமார் 3 தசாப்தங்கள் பணியாற்றி, பல லட்சம் சம்பளம் வாங்கும் தலைவர் பதவியை அடைந்த பின்னர், தனது 55வது வயதில் கே.மாதவன் அவர்கள் ஒரு தைரியமான முடிவை எடுத்து அவரது மனைவியை ஆச்சரியப்படுத்தினாலும், அதை அவரும் முழுவதுமாக ஒப்புக்கொண்டார். கர்ல்ஆன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவெடுத்த மாதவன், இருவருடன் இணைந்து கோயம்பத்தூரில் நஷ்டத்தில் இயங்கி வந்த ஸ்பிரிங் மெத்தை நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டனர்.

எனது வாழ்வில் இரண்டாவது முறையாகச் சரியான முடிவு எடுத்துள்ளதாக மனைவி கூறியதாக சிரிக்கும் மாதவன், சந்தேகமே வேண்டாம் முதலாவது சரியான முடிவு அவரைத் திருமணம் செய்தது தான் என்கிறார்.

மாதவன் மனைவி

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அப்போது மேலாளராகப் பணியாற்றிய அவரின் மனைவி, கர்ல்ஆன் நிறுவனத்தின் விற்றுமுதல்-ஐ ரூ30 லட்சத்தில் இருந்து ரூ550 கோடியாக உயர்த்தியதில் தனது கணவரின் பங்கை நன்கு தெரிந்துவைத்திருந்தார். பூச்செட்டியில் வளர்க்கப்பட்ட ஆலமரம் போன்றவர் எனக் கூறும் அவரது மனைவி "நீங்கள் காட்டில் வளர்ந்து உங்களது விழுதுகளை ஆழ அகலத்திற்குப் பரப்ப வேண்டும்" எனக் கூறுகிறார். கர்ல்ஆன் நிறுவனத்தை விட்டு வெளியேறும் அவரது திட்டத்தில் ஏதேனும் சிறு சந்தேகம் இருந்திருந்தாலும், மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்பு அவையாவும் காற்றில் கரைந்துபோயிருக்கும்.

வாழ்வின் கடினமான பகுதி

கர்ல்ஆன் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மாதவன் தனது பாதுகாப்பு வட்டத்தில் இருந்து வெளியே வந்து, தனது வாழ்வின் கடினமான பகுதியில் தொழிலாளி என்பது மாறி தனது தொழில்முனைவோர் என்ற பயணத்தை துவங்கினார். அப்போது அவரது குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடமையும் இருந்தது . அந்தச் சமயத்தில் தான் அவரது மூத்த மகன் மின்னணு பிரிவில் பொறியியல் படிப்பை முடித்திருந்தார். இளைய மகன் பொறியியல் படிப்பில் சேரவிருந்தார். ஆனால் தொழில்முனைவோராக தன்னால் சாதிக்க முடியும் என உறுதியாக நம்பினார் மாதவன். அவரது இந்த அதீத நம்பிக்கைக்குக் காரணம், இந்தத் துறையில் அவரது அபரிமிதமான அனுபவமும், பெங்களூரில் 32 பணியாளர்களுடன் சிறு நிறுவனமாகத் துவங்கி, தற்போது மெத்தை தயாரிப்பு துறையில் முதன்மையாகத் திகழும் கர்ல்ஆன் நிறுவனத்தின் வளர்ச்சியும் தான்.

 ஊக்கமூட்டும் பேச்சாளர்

"தொழில் துவங்குபவர்கள் ரிஸ்க் எடுப்பதாகக் கூறவேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்து. நீங்கள் செய்வதை கச்சிதமாகச் செய்தால் ஆபத்து என்பதே இல்லை" எனக்கூறும் மாதவன் தொழிலையும் கவனித்துக்கொண்டு, இந்தியா முழுவதும் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் வலம் வருகிறார். "நீங்கள் எதைச் செய்தாலும் அதில் சிறப்பானவராக இருக்க வேண்டும் மற்றும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும் என்பது தான் எனது அறிவுரை. செய்வதைச் சிறப்பாக செய்தால்,அது எதுவாக இருந்தாலும் வெற்றி நிச்சயம் என ஊக்கமளிக்கிறார்.

பெப்ஸ்

 பதினோரு ஆண்டுகள் கழித்து, தற்போது ரூ325 கோடி விற்று முதல் உள்ள பெப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனராக உள்ளார் மாதவன்.பிரபல மெத்தை பிராண்டாக உள்ள பெப்ஸ், 30% வளர்ச்சி விகிதத்தில்,600 பணியாளர்கள்,6000 சில்லறை விற்பனை டீலர்கள் மற்றும் இந்தியாவின் 56% ஸ்பிரிங் மெத்தை சந்தை என ஆலமரமாகப் பரந்துவிரிந்துள்ளது. "தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ1500கோடி" எனக் கூறுகிறார் 68 வயதான மாதவன். 2005ல் கோயம்புத்தூரில் செயல்படும் பெப்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக ஓசுரை சேர்த்த மெத்தை வர்த்தகர் சங்கர் ராம் கர்ல்ஆன் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்தார். ஸ்பிரிங் மெத்தை தயாரிக்கும் கர்ல்ஆன், ரப்பர் மெத்தை தயாரிக்கும் பெப்ஸ் நிறுவனத்தை வாங்க ஆர்வம் செலுத்தவில்லை.அதனால் தானே அந்நிறுவனத்தல வாங்க முடிவு செய்த சங்கர், தான் 1980ல் கர்ல்ஆன் உடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட காலம் முதல் அறியும் ப மாதவனையும் அதில் இணைய வற்புறுத்தினார்.

 மற்றொரு கர்ல்ஆன்

"யோசிக்க சில காலம் வேண்டும் எனக்கூறினார் மாதவன். எனவே நானும், மஞ்சுநாத்தும்(பெப்ஸ் நிறுவனத்தின் 3வது இணைநிறுவனர்) சேர்ந்து ரூ3.25 கோடிக்கு பெப்ஸ் நிறுவனத்தை வாங்கினோம். பின்னர் ரூ40 லட்சம் முதலீடு செய்து மாதவனும் எங்களுடன் இணைந்தார்" என்கிறார் சங்கர். தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை தற்செயலான ஒன்று எனக்கூறும் மாதவன், சங்கர்.தன்னை இந்நிறுவனத்திற்கு அழைக்கும் முன்னர் தனியாக தொழில் துவங்கும் யோசனையே இல்லை என்கிறார். அப்போதே 55 வயதான நிலையில், வாழ்க்கையின் மீதி பகுதியையும் கர்ல்ஆனிலேயே கழிக்க நினைத்தேன்."மற்றொரு கர்ல்ஆன்-ஐ உருவாக்க உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை" என மாதவனிடம் கூறியுள்ளார் சங்கர்.

 மில்லியன் மெத்தைகளை விற்ற மாதவன்

மாதவன் பெப்ஸ் நிறுவனத்தில் இணைந்த பின் நிகழ்ந்தவை வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தச் சமயத்தில் இந்தியாவின் மெத்தை சந்தையில் ஸ்பிரிங் மெத்தைகள் 2% இருந்தநிலையில், தேங்காய், பருத்தி மற்றும் நுரை மெத்தைகளே ஆதிக்கம் செலுத்தின. எனவே இதில் உள்ள வாய்ப்புகளைப் புரிந்துகொண்ட இவர்கள் அதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். சர்வதேச தரம் கொண்ட மெத்தைகளைச் சலுகை விலையில், அதன் நன்மைகளை மற்ற மெத்தைகளின் டீலர்களிடம் விளக்கிக்கூறி, வாடிக்கையாளர்களை ஈர்த்தனர்.இது தவிர்த்து புதிய லோகோ, விதவிதமான பிளாஸ்டிக் கவர்கள், கவர்ந்திழுக்கும் பேக்கிங் என பல்வேறு வியாபார யுக்திகளைக் கையாண்டார் மில்லியன் மெத்தைகளை விற்ற மாதவன்.

30க்கும் மேற்பட்ட பொருட்கள்

2006 ல் வெறும் இரண்டு பொருட்களை தயாரித்த பெப்ஸ் நிறுவனம் தற்போது தலலயணை, போர்வை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறது."எங்களிடம் சொசுகு பொருட்கள் ரூ9500 -ரூ22,000 வரையிலும், அமெரிக்க தரத்திலான பொருட்கள் இந்திய நிலவரத்திற்கு ஏற்ப ரூ25000லிருந்து 45000 வரையும், மருத்துவ சம்பந்தப்பட்ட பொருட்கள் ரூ30000 -40000 வரையிலும் தருவதாக கூறுகிறார் மாதவன். மேலும் மேல்பட்ட வாடிக்கையாளர்களுக்கான சொகுசு பொருட்கள் ரூ55000 முதல்1.5 லட்சம் என்ற விலை வரையிலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் இந்நிறுவனத்தின் சில்லறை வர்த்தக கடைகள் புதுவடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் பெப்ஸ் நிறுவனத்தின் 125 கடைகளில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைமான மெத்தைகள் அனுபவித்துப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் மாதவன். இந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி நிறுவனம் கோயம்புத்தூரில் 3லட்சம் சதுரடியில் 11 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த இயந்திரங்களுடன் அமைந்துள்ளது. அது தவிர டெல்லி, டெல்லி, கொல்கத்தா நகரங்களில் சிறு அலகுகளும் உள்ளது.   ராமாயண ,மகாபாரத கதைகள் பெங்களுரில் ஐஐஎஸ்சி நிறுவனத்தில் ஆய்வக உதவியாளராக பணியாள்றிய மாதவனின் தந்தைக்கு 8 பிள்ளைகள்.சாதாரண பள்ளியில்ஏழாம் வகுப்பு வரை கன்னட மீடியாமில் படித்த மாதவன், மல்லேவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்து ஆங்கில மீடியமில் படித்தார். அவரின் தான் இவருக்குத் தினமும் கூறும் ராமாயண ,மகாபாரத கதைகளே வாழ்வில் இவ்வளவு தூரம் சாதிக்கக் காரணம் என்கிறார் மாதவன்.

படிப்பு

பெங்களுர் மத்திய கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்த மாதவன்,கொல்கத்தாவில் உள்ள செருப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ250 சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து 1976-77 ஆண்டுகளில் கர்ல்ஆன் நிறுவனத்தில் துணை கண்காணிப்பாளராகச் சேர்ந்தார். ரூ6500 கோடி மெத்தை சந்தை மாதவனின் நுணக்கமான அறிவுத்திறன் மற்றும் அனுபவத்தின் காரணமான பெருநிறுவன ஏணியில் வேகமாக ஏறினார்.அதே சமயம் பகுதி நேரமாக பாலிமர் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டமும், ஐஐஎஸ்சியில் ஜெனரல் மேனேஜ்மென்ட் பட்டமும் பெற்றார். கர்ல்ஆன் நிறுவனத்தின் பொது மேலாளர் பதவியை அடைந்தவுடன், எம்பிஏ படிக்க விரும்பிய இவர், எஸ்பி இன்ஸ்டியூட் ஆப் மேனேஸ்மெண்ட்டில் சேர்ந்து படித்தார்.தொடர்ந்து 36 மாதங்கள் வெள்ளிக்கிழமை இரவு மும்பை பயணித்து வார இறுதியில் கல்லூரியில் படித்து மிண்டும் தமிழகம் வருவார். அந்த மேலாண்மை படிப்பின் மூலம் ரூ6500 கோடி மெத்தை சந்தையை தனது கையில் வைத்துள்ளார் மாதவன்.

நன்றி :ஒன் இந்தியா -கோவை 
திரு .R .முருகேசன் -K பவித்ரா ...மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
இடம் :சோமவாரப்பட்டி ...கருவண்டராயர் வீரசுந்தரி திருக்கோவில்
நாள் :11.11.2018..நேரம் :காலை 7.மணிக்கு மேல் 8.30 குள்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..
www.kamabalavirucham .in
மணமாங்கலயம்  ...
www.manamangalayam.in

சார்பாக வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
உடுமலைப்பேட்டை
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 

புதன், 7 நவம்பர், 2018

வீட்டுக்கடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்

வீடு கட்ட அல்லது மனை வாங்க விரும்புபவர்கள் வங்கி கடனுக்கு விண்ணப்பம் செய்யும்போது கடன் பெறுபவரின் சுய விபரங்களோடு பல சான்றுகளையும் கொடுக்கவேண்டும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் பற்றி பார்க்கலாம்.
பொதுவான சான்றுகள்
• வயதை குறிப்பிடும் சான்று
• இருப்பிடத்திற்கான சான்று
• விண்ணப்பிப்பவர் பெறும் வருமானத்திற்கான அத்தாட்சி
• கடந்த 6 மாத காலத்திற்கான வங்கி ‘ஸ்டேட்மெண்ட்’
• விண்ணப்பிப்பவர்களது ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படங்கள்
ஆகியவை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பொதுவாக கொடுக்க வேண்டியவையாகும். மேலும் ஒருவர் மாதாந்திர சம்பளம் பெறுபவரா, சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்பவரா என்பதை பொறுத்து வெவ்வேறான சான்றுகள் தர வேண்டும்.
மாத சம்பளம் பெறுபவர்கள்
• ‘சாலரி ஸ்லிப்’ மற்றும் பார்ம்–16ஏ
• ‘ரேஷன் கார்டு’, ‘பான் கார்டு’, தொலைபேசி கட்டண ரசீதுகள் அல்லது மின்கட்டண ரசீதுகளின் ‘ஜெராக்ஸ்’ நகல்கள்
• மற்ற அசையா சொத்துக்கள் பற்றிய சான்றுகள்
• ஆயுள் காப்பீட்டு செய்திருந்தால் அதற்கான ‘பிரிமியம்’ செலுத்தியதற்கான ரசீதுகள்
• ஆறு மாதங்களுக்கான ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’ மற்றும் தேவையான அளவு புகைப்படங்கள்
தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள்
• எவ்வகை தொழில் அல்லது வியாபாரம் என்பது பற்றிய தகவல்கள்
• வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்கள்
• அங்கீகரிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட்ட 3 வருட வருமான வரி கணக்கு அறிக்கைகள்
• ‘அட்வான்ஸ் டாக்ஸ் பேமெண்ட்’ செலுத்தி இருந்தால் அதற்கான ஜெராக்ஸ் நகல்கள்
• தொழில் வரி செலுத்தி வருவது பற்றிய சான்றுகள்
• பிற வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அதன் விபரங்கள்
• அத்துடன் ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’, குடும்ப அட்டை, தொலைப்பேசி கட்டண ரசீது, ‘இன்சூரன்ஸ்’ போன்ற பொதுவான தகவல்களும் அவசியம்.
சொந்த இடத்தில் வீடு கட்டும்போது..
• இடத்தின் ஒரிஜினல் பத்திரங்கள்
• வீடு கட்ட சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்று
• இடத்திற்கு 30 வருடங்களுக்கான வில்லங்க சான்று
• உச்ச வரம்பு சட்டத்துக்கு உட்பட்ட நிலம் என்பதற்கான சான்று
• சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் அளிக்கப்பட்ட கட்டுமான அங்கீகாரம்
• நிலத்திற்கான சொத்து வரி செலுத்திய ரசீதுகள்
• அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வல்லுனரால் தரப்பட்ட கட்டுமான அமைப்புகள் மற்றும் செலவுகள் பற்றிய விபரம்
கட்டுனரிடமிருந்து வீட்டுமனை பெறப்பட்டிருந்தால்..
• கட்டுனரோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரிஜினல் ஆவணங்கள்
• வீட்டு மனைக்கான ஒரிஜினல் பத்திரங்கள் மற்றும் சொத்து வரி செலுத்திய சான்றுகள்
• ‘இன்டெக்ஸ்–2’ எனப்படும் இடம் பற்றிய சகல தகவல்களும் அடங்கிய பதிவேடு. அதில் சொத்து பற்றிய விவரம், அமைந்துள்ள இடம், நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் விற்பனை செய்தவர் யார், வாங்கியவர் யார், சொத்து மதிப்பு போன்றவை இடம் பெற்றிருக்கும்.
• விவசாய விளைநிலம் அல்ல என்பதற்கான சான்று
• கட்டுமானத்திற்காக சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்று
• 30 வருடங்களுக்கான வில்லங்க சான்றிதழ்
• கட்டுனருடன் செய்து கொண்ட கட்டுமான ஒப்பந்தம்
• சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் அளிக்கப்பட்ட அங்கீகாரம்
கூட்டுறவு சங்க அமைப்புகளிடமிருந்து மனை பெறப்பட்டிருந்தால்..
• மனை உரிமையாளருக்கு சங்கத்தில் உள்ள பங்குகள் விபரம்
• அமைப்பால் அளிக்கப்பட்ட ஒதுக்கீடு பற்றிய விபரம்
• பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள்
• அமைப்பின் நடைமுறை விதிகள் பற்றிய குறிப்புகள்
• சங்கத்திடமிருந்து பெற்ற தடையில்லா சான்று

• இவை தவிர மற்ற வழக்கமான அனைத்து ஆவணங்களும் தேவைப்படும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..

வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

சனி, 3 நவம்பர், 2018

நீர்மானி ....

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது ...உடுமலை சுற்றி இருக்கும் குளங்கள் மழை நீர் ததும்பும் ...நீரின் அளவை அளக்க அப்பொழுதே ..நம் பாளையக்காரர்கள் குளத்தில் தேங்கும் நீரின் அளவை நீர்மானி என்ற நடுகல்லை கண்டுபிடித்து இருக்கிறார்கள் ..கல்வெட்டுகளாக தற்பொழுதும் மறையாமல் இருக்கிறது ..ஆவண படுத்துவதற்கு நம் இளைய சொந்தங்கள் அளப்பரிய வரலாற்று ஆவணத்தை பாதுகாக்க மிகந்த அக்கறை கொள்கிறார்கள் ...வழிகாட்ட இப்பொழுதெல்லாம் தலைவர்களை தேடுவதில்லை ..தங்களுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்று உணரும் தருணம் ...வாழ்த்துக்கள் ... ..Ram ...Journlist

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

ஜெகஜாலக் கில்லாடிகள்

(வா .மணிகண்டன் ..)

எங்கள் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். வீட்டில் மனைவி முறுக்கு சுட்டுக் கொடுத்தால் கொண்டு போய் விற்று வருவதுதான் அவரது வேலை. ருசி நன்றாக இல்லை என்றோ அல்லது நன்றாக இருக்கிறது என்றோ யாராவது சொன்னால் அப்படியே வந்து மனைவியிடம் சொல்லிவிடுவார். அவர் சரி செய்து கொள்ள வேண்டும். முறுக்கு பற்றிய டெக்னிக்கல் அறிவு எதுவும் வணிகருக்கு இல்லை. ஆனால் புதிய கடைகளைக் கண்டறிவது, விலை நிர்ணயம் செய்வது என சகலத்திலும் வணிகர் கில்லாடி. மனைவிக்கு வீட்டை விட்டு வெளியில் போகத் தெரியாது. ஆனால் இப்படியே கணவனும் மனைவியுமாக கோடிகளைச் சம்பாதித்து விட்டார்கள்.

இந்தக் கதை இருக்கட்டும்.

எட்டு வருடங்களுக்கு முன்பாக கூகிள் நிறுவனமானது சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த மென்பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்திக் கொண்டிருந்த ITA Matrix என்ற நிறுவனத்தை வாங்கியது. எதற்கு கூகிள் சம்பந்தமில்லாமல் இதை வாங்குகிறது என்று பலரும் கேள்வியெழுப்பினார்கள். ஆனால் அதன் பிறகு கூகிள் பல புதிய சேவைகளை வழங்கத் தொடங்கியது. உதாரணமாக விமானத் தாமதங்களை முன் கூட்டியே கணிப்பது, பயணத் திட்டமிடல்களுக்கு உதவுவது- இப்படி வரிசையாக அடுக்கலாம். எல்லாமே பயணம் சம்பந்தப்பட்டது.

இன்றைக்கு சில்லறை வணிகத்தில் அமேசானை அடித்துக் கொள்ள ஆள் இல்லையோ- இந்திய அண்ணாச்சி கடைகள் வரைக்கும் அது விட்டு வைக்கவில்லை. அதே போல கூகிள் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. பயணத்துறையில் கூகிள் முழு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் சில ஆண்டுகளில் இதன் வீச்சை புரிந்து கொள்ள முடியும்.

அமேசான், கூகிள் போன்ற நிறுவனங்களின் வல்லாதிக்கம் என்பது அரசியல்/வணிகம் சம்பந்தப்பட்டது. அப்படி வல்லாதிக்கத்தைச் செலுத்த தொழில்நுட்பம் அவசியமல்லவா? முறுக்குக்கடைக்காரரின் மனைவி பலமாக இருந்து, முறுக்கும் சுவையாக இருந்தால்தான் வணிகர் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும். அதே போலத்தான் அமேசானாக இருந்தாலும் சரி; கூகிளாக இருந்தாலும் சரி தமது தொழில்நுட்பம் வலுவாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.

அமேசான் சில்லறை வணிகத்தில் எவ்வாறு வெற்றி பெற்றது?

முதலில் மக்களுக்கு எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு தேவையானவற்றை தமது வலைத்தளம் மூலம் செய்தது. பின்னர் அதன் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரக் கூடிய  விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாற்றி அதன் மூலம் மேலும் வளர்ச்சி அடைந்தது. மூன்றாவதாகத் தகவல், தகவல், மேலும் தகவல். ஒவ்வொரு வாடிக்கையாளரின் அத்தனை தகவலையும் சேகரித்தது. அடுத்த கட்டம்தான் முக்கியமானது. சேகரித்த தவலை எப்படி தொழில் விருத்திக்குப் பயன்படுத்துவது? வாடிக்கையாளர் எந்தப் பொருளைத் தேடுகிறார். எப்படி இருந்தால் வாங்குகிறார். எந்த வகையான பொருட்களை தவிர்க்கிறார் என அத்தனை தகவல்களையும் பகுத்துத் தொகுத்தது. அதுதான் டேட்டா அனலிடிக்ஸ். ஒரே தடவையில் இந்த வேலை முடிந்துவிடுவதில்லை. தொடர்ந்து உருவேற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். (continuous measurement, innovate/improvize). அதைத்தான் இந்த ஜெகஜாலக் கில்லாடி நிறுவனங்கள் செய்கின்றன.

இந்த நுட்பத்தைத்தான் கூகிளும் செய்கிறது. அமேசானும் செய்கிறது.

கூகிள் நிறுவனத்திடம் ஏற்கனவே மிகுதியான தகவல் இருக்கிறது - மக்கள் கூகிள் மூளும் தேடும் தகவல்கள், ஜிமெயில் மூலம் பயணம் குறித்த விவரங்கள் என என்னைப் பற்றியும் உங்களைப்பற்றியும் நமக்கே தெரியாத பல விஷயங்கள் கூகிளுக்குத் தெரியும் . இந்தத் தகவல்களையெல்லாம் தன்னுடைய தொழில் விருத்திக்குப் பயன்படுத்துகிறது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் எப்பொழுதாவது கோவா போகலாம் என்று ஒரு முறை கூகிளில் தேடி பிறகு விட்டுவிடுங்கள். அதன் பிறகு அது நம்மை வலை வீசிக் கொண்டேயிருக்கும். கோவா செல்வதற்கான சலுகையுடன் கூடிய விமான டிக்கெட், தங்கும் விடுதி வரைக்கும் எல்லாவற்றையும் கவர்ச்சியாகக் காட்டும். ஒருவனைக் கவிழ்க்க வேண்டுமானால் முதலில் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும். அதில் இந்த நிறுவனங்கள் கில்லாடிகள்.

இதையெல்லாம் பார்த்துத்தான் பல ஹோட்டல் மற்றும் விமான நிறுவனங்கள் ஏற்கனவே பெருந்தகவல் (பிக் டேட்டா) மற்றும் செயற்கை அறிவுத்திறம் (Artificial Intelligence) சார்ந்த முதலீடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். காலங்காலமாக இந்தத் துறையில் இருப்பவர்கள் பயணியர் குறித்து பெருமளவிலான தகவல் இருக்கும். அதை தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் ஒரு பலனுமிருக்காது. இன்னும் பத்தாண்டுகளில் ‘இங்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும்’ என அமர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைகிறது என்று மட்டும் கவனியுங்கள். காலி செய்துவிடுவார்கள்.

எல்லாமே தகவல்தான். அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

அமேசான்,  ஹோல் புட்ஸ் (Whole foods), மோர் சூப்பர் மார்கெட் முதலிய நிறுவனங்களை வாங்கியது போல கூகிளும் பயணத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களைக் கபளீகரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கலாம் என்று நினைப்பவர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் வளர்ந்தால் போதும். விற்றுவிட்டு பெருந்தொகையைக் கண்ணில் பார்த்துவிடலாம்.

தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் இரண்டும் செய்த பின்னர் தான் தகவல் பகுப்பாய்வு செய்து அதில் இருந்து பயனுள்ள தகவல்களை எடுக்க முடியும்.

கட்டுரை ஆக்கம்: கீதா சுரேஷ்.

தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் குறித்த கேள்விகளை  கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்: geethashdp@gmail.com

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
இணைய தகவல் :கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம் .
உடுமலைப்பேட்டை
www.kambalavirucham.in



வெள்ளி, 2 நவம்பர், 2018


தேவராட்டம்....

முனைவர் ஆ.சண்முகம் பிள்ளை
உதவிப் பேராசிரியர்
நாட்டுப்புறவியல் துறை

கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சார்ந்த ஆண்கள் ஆடுகின்ற ஆட்டம் ‘தேவராட்டம்’ எனப்படுகிறது. தேவர்களை வணங்கி ஆடுகின்ற ஆட்டம் என்பதால் தேவராட்டம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

தேவராட்டத்தின் தோற்றம் குறித்த கதை அக்கலைஞர்களிடம் வழக்கில் உள்ளது. இக்கதை தேவராட்டத்தை ஆடும் கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்களுடன் தொடர்புடையது.

கலைக்கோட்டு மாமுனிவரின் மகள் ஆண் உறவின்றி புத்திரப் பேறு வேண்டும் எனத் தந்தையிடம் வரம் கேட்டாள். அவர் அவருக்கு எலுமிச்சம் பழம் ஒன்றைக் கொடுத்தார். அப்பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் எலுமிச்சம் பழத்தைக் கண் பழம் என்றும் அழைப்பர். தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அக்குழந்தையின் மரபினர் கண்பழத்தார் – கம்பழத்தார் எனப் பெற்றனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது.

தேவராட்டத்தின் தோற்றம் குறித்த வேறு ஒரு கதையும் உள்ளது. ஏழு உலகங்களையும் படைத்த பின்னர் சிவபெருமானும் பார்வதியும் தேவர் உலகில் வீற்றிருந்தார்கள். அப்போது தேவர் உலகை உருவாக்கிய சிற்பி விஸ்வகர்மா புதிய இசைக் கருவி ஒன்றைப் படைத்தார். அது உடுக்கையைப் போன்று இருந்தது. ஆனால் உடுக்கையைவிட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த இசைக்கருவியைத் தேவர்களிடம் கொடுத்து இசைக்கும்படி சொன்னார். தேவர்கள் அந்தக் கருவியை ‘தேவதுந்துபி’ என்று அழைத்தனர்.

தேவர்கள் அந்த இசைக் கருவியை இயக்க முயன்றனர் முடியவில்லை. அதை இயக்க யாருமே முன்வராத நிலையில் சிவனுக்கு மாலை கட்டும் பண்டாரம் வந்தார். அவர் சிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு தேவதுந்துபியை இயக்கினார். அந்தக் கருவியின் தாளத்திற்கேற்பத் தேவர்களும் ஆடத் தொடங்கினர். அந்த ஆட்டம் தேவராட்டம் எனப் பெயர் பெற்றது.

தமிழகத்தில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக் கலை அதிகமாகக் காணப்படுகிறது.

தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை. அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்குக் காணப்படுகிறது.

இடையில் சாதாரணமாக உடுத்தும் வேட்டி, கைகளில் சிறிய துணி, கால்களில் சலங்கை, தலையில் தலைப்பாகை, சலங்கை மணிகளை நீளமாக நூலில் கோத்துக் காலில் கட்டிக் கொள்கின்றனர்.

இவ்வாட்டத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை. இசைக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஆட்டமாக உள்ளது. உறுமி என்னும் இசைக் கருவி இந்த ஆட்டத்தின் போது இசைக்கப்படுகிறது. இதனைத் ‘தேவதுந்துமி’ என்று கம்பளத்து நாயக்கர் அழைப்பர். இக்கருவி வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது. நடுவில் குறுகியும் ஓரங்களில் பருத்தும் காணப்படும். ஆட்டிக்குட்டியின் தோலைப் பயன்படுத்தி இக்கருவியை உருவாக்குகின்றனர். இடப்பக்கத் தோலில் வளைந்த நொச்சி குச்சியை அழுத்தி இழுத்து ஓசை எழுப்புவர். வலப்பக்கத் தோலில் வளைந்த விராலி அல்லது புரசன் குச்சியைப் பயன்படுத்தி அடித்து ஒலி எழுப்புவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ‘மாலா’ என்னும் பிரிவினர் இக்கருவியை இசைக்கின்றனர்.

இவ்வாட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடலசைவுகளைக் கவனித்து அவனைப் பின்பற்றி ஆடுவார்கள். தேவராட்டத்தில் இருபத்தி மூன்று ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுவர். நிலுடிஜம்ப்பம், சிக்கு ஜம்ப்பம் என்பன போன்ற பெயர்களால் ஆட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுக்கள் மாற்றமடைகின்றன. பெண்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்.

தேவராட்டத்தில் பதினெட்டு அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் என்று கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன் மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த 72 அடவுகளும் ஆறு சப்தக் கூறுகளை உடையவை. ஒவ்வொரு அடவும் தனித்தனியே ஆடப்படும் போது இந்த ஆறு ஒலிக் கூறுகள் மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இக்கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்த கம்பளத்து நாயக்கர்களின் இனக்குழு ஆட்டமாகத் தேவராட்டம் கருதப்படுவதால் இக்கலை ஆந்திராலிருந்து தமிழகத்திற்கு வந்ததாகக் கருதலாம். இந்த ஆட்டத்தைப் பிற சாதியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடுவதில்லை. கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய ஒக்கலிகள், குறும்பைக் கவுண்டர் ஆகிய சமுகத்தவரிடையேயும் இக்கலையைக் காணமுடிகிறது. ஆந்திரத்தைச் சார்ந்தவர்கள் ‘தேவுடு ஆட்டம்’ என்று தேவராட்டத்தைக் குறிப்பிடுவர்.

கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வியல் சடங்குகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பூப்புச் சடங்கில் பதினாறாம் நாள் பெண்ணை மந்தைக்கு அழைத்துச் சென்று சடங்குகளைச் செய்து விட்டு வீட்டிற்கு வருகையில் தேவராட்டம் ஆடப்படுகிறது. மணமகனைக் குதிரையில் வைத்து திருமண ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது தேவராட்டம் ஆடப்படுகிறது. மணப் பெண் சில சடங்களைச் செய்து முடித்து விட்டு வீடு திரும்பும் போது இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இறப்பு நிகழ்வில் பதினாறாம் நாள் மந்தையிலிருந்து வீடு திரும்பும் போது இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

ஆடி மற்றும் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சக்கம்மா வழிபாட்டின் போது தேவராட்டம் நிகழ்த்தப்படுகிறது. வீரபாண்டியிலுள்ள கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று இரவில் பல ஊர்களைச் சார்ந்த கம்பளத்து நாயக்கர்களும் வந்து தேவராட்டம் ஆடுவர்.
நன்றி ...
தமிழ்நாட்டுக் கலை / கோயில் / விழா ...
www.tamilvu.org/ta/tdb-tdbindex-tdbindex-04-340501
இணையதகவல் ....கம்பளவிருட்சம் அறக்கட்டளை 

புதன், 31 அக்டோபர், 2018

Karthic KVT:

வளரும் தொழில் முனைவோர் வரிசையில்
அடுத்த நம் சொந்தம் :-

SPM TRANSPORT ...

சிவா என்றும் spm என்றும் நட்புவட்டத்திலும் தொழில்சதுரங்கத்திலும்
அழைக்கப்படும்
பரமசிவன் .S

உடுமலையை அடுத்த சோமவாரபட்டியை பூர்வீகமாக கொண்டிருப்பினும் தற்போது இடம்பெயர்ந்து தொழில்செய்வது தீபாலபட்டி

நமது அறக்கட்டளையின் ஆரம்பகால கட்டமைப்பில் இருந்தே நம்முடன் கரம்கோர்த்து அறம் செய்து வந்தாலும்
திருமணகோலத்தில் முறைப்படி அறக்கட்டளையில் இணைந்த முத்தான முதல் தம்பதி எனும் பெருமைக்கு சொந்தக்காரர்

பாரம்பரியமான குடும்பத்தில் கடைக்குட்டியாய் தோன்றி
பள்ளிப்படிப்புடன் ஏட்டுக்கல்வியை
நிறுத்தி தனது அனுபவம் மற்றும்
திறமையால் தற்போது
இரு கனரக வாகனத்தின் உரிமையாளராய் இயங்கிவருபவர்

மோட்டார் மற்றும் வாகனத்துறையில் அதிகம் ஆர்வம் பெற்று விளங்கினும்
விவசாயத்திலும் அதிக அக்கறையுடன் ,பொறுப்புடன் செயல்படும் இளைஞர்

நமது பண்ணை மற்றும் தொழிற்கூட தயாரிப்புகளை ஓரிடத்துலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பிவைக்க தயங்காமல் தொடர்புகொள்ளலாம்

இவரின்  தொடர்பு எண்:
 9842173809

 8778879195...

இங்ஙனம் .
கார்த்தி SR ..
கம்பளவிருட்சம் தொழிலசார்பு குழுமம்
www .kambalavirucham .in
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
www.manamangalayam.in
உடுமலைப்பேட்டை ..
இராஜகம்பளாதார் தேவராட்டம் ...

கிராமத்தில் அழுத்தமாக ஒலிக்கும் உறுமி சத்தம். ஆட்டக்காரர்களின் அசைவில் அத்தனை ரம்மியமாக வெளிப்படும் சலங்கை ஒலிச் சத்தம். இசையும், நடனமும் ஒருங்கே சேர்ந்த அழகிய நாட்டுப்புறக்கலை. கிராமங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆடி தமிழர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடுகின்றனர். பாரம்பரியம் மாறாத இந்த தேவராட்டக் கலை உடுமலைப்பகுதியின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம்.
தை மாதம் துவங்கும் பொங்கல் விழாவிற்கு உடுமலை பகுதி கிராமங்கள் மார்கழி மாதத்திலேயே தயாராகின்றன. அடர்ந்த பனியை அகற்றி அனலாக உருமிஇசை ஒலிக்கிறது. கொட்டும் பனியில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தேவராட்டம் எனப்படும் உருமி ஆட்டம், சலங்கை மாடு மறித்தல் (சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டங்களை பார்ப்பது மிகவும் அலாதியான அனுபவங்களில் ஒன்று.
தேவராட்டத்திற்காக இரவு நேரங்களில் இசைக்கும் உருமி கிராமம் தோறும் மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் எதிரொலிக்கும். தேவராட்டம் என்பது தேவர்களால் (கடவுளால்) ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும்போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷச காலங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.
தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குத் தேவையான உடற்பயிற்சிகளின் வெளிப்பாடாகவும் உள்ளது.
தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் மினு மினுப்பான தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப சுதி ஏற்றப்படுகிறது.
தேவராட்டம் ஆடப்படும்போது, ஊதப்படும் ஒவ்வொரு விசில் சத்தத்திற்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்களுக்கு விருந்து.
ஆட்டத்தின் துவக்கத்தில் மெதுவாக துவங்கும் அடவு மாற, மாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்குச் செல்கிறது. ஆட்டம் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும்போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது.
இதன் அசைவுகள் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் அசைத்துப் பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாத பனி இரவில் முன் பனி காலத்தில் ஆடப்படுகிறது.
தை பிறந்ததும் ஆட்டக்காரர்கள் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயிலுக்கு சலங்கை மாடு புடைசூழச் சென்று தேவராட்டம் ஆடி தங்களது மார்கழி மாத ஆட்ட விரதத்தை முடிக்கின்றனர். இது இப்பகுதி மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிகழ்வாக இருக்கிறது.
இந்த கலை அழியாமல் இருக்க உடுமலைப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜல்லிப்பட்டி, தளி, பெரிய கோட்டை, கம்பாளப்பட்டி போன்ற கிராமங்களில் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்போது தேவராட்ட பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 29 அக்டோபர், 2018

திரு .ரவிச்சந்திரன் ....திரு .மதன்குமார் ....
கரப்பாடி...உடுமலைப்பேட்டை
R M Collections  ...பூசாரிப்பட்டி  ...

கரப்பாடி ...அழகிய தென்னைமரங்கள் சூழந்த பசுமை மரங்கள் நிறைந்த கிராமம் ...ரவிச்சந்திரன் மாப்பிள்ளையின் பிறந்த ஊர் பள்ளிக்கல்வி முடித்தவுடன் ..பின்னலாடை திருப்பூரின் வாசம் தொற்றிக்கொண்டது ..ஒரு சிறு பின்னலாடை நிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து படி படியாக தொழிலை கற்றுக்கொண்டு ..கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பகுதி நேர கல்லூரியில் ஆடை வடிவைமைப்பு தொழில் கல்வி கற்றுக்கொண்டு .தன் தனிப்பட்ட நுண்ணவரிவு கொண்டு புது புது டிசைன்களை உருவாக்கி ..தான் நினைத்து ஆடை வடிவைமைப்பு மூலம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி உரியது ..வளர்ச்சிக்கு உரிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் மூலமும் ...அழகான இன்றைய இளைஞர்களுக்கு விரும்பும் வகையில் பனியன்களை தயாரித்து ..விற்பனை செய்வது மகிழ்ச்சி ..இதை சந்தைப்படுவதற்கு ..பிளிப்கார்ட் ..அமோசான் ..போன்ற தொழில்நுற்பங்களை பயன்படுத்தி விற்பனை செய்வது கேட்டு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..அதுவும் நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முறை வியாபாரங்களை அவ்வளவு எளிதில் செய்யமாட்டார்கள் ...மாப்பிள்ளையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையுடன் வியாபார போட்டி களத்தில் ..எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வளர்ந்து வருவது ..நமது சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் ..நம் சமுதாயத்திற்கு மாப்பிள்ளையின் பங்கு ..வளரும் இளைய சொந்தங்களுக்கு ஆலோசானைகள் வழங்கி வளர வழிசெய்யவேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை ..அதற்கு கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம் ..உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உங்களின் பொன்னான வியாபார கருத்துக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது ..உங்களின் பணிநேரம் போக ..பொன்னான விலைமதிப்பு மிக்க நேரத்தை  வரும் மாதங்களில் ஒருமணி நேரம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் .இது நம் சமுதாய சொந்தங்களுக்கு பெரிதும் உதவும் ..உங்களின் நண்பர் சொந்தம் மதன்குமார் அவர்கள் .,..தற்பொழுது புதிதாக துவங்கி நல்லமுறையில் பூசாரிப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் ...கடையில் வித விதமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகான நவநாகரீக உடைகள் அருமையாக உள்ளது ...அதுவும் கிராமத்து மண் கமழும் தாராபுரம் சாலையில் அமைந்த இருப்பது மகிழ்ச்சி ..கடையை தம்பி ..மதன்குமார் அவர்கள் வெகு சிறப்பாக நடத்தி வருவது மகிழ்ச்சி ...

தம்பி மதன்குமார் அவர்கள் பொறியியல் படித்திவிட்டு கடையை நிர்வகித்திருப்பது அருமை ..நம் கம்பள இளைஞர்கள் சுய தொழில் இறங்கி இருப்பது வளரும் .வரும் இளைய தலைமுறை குழந்தைச்செல்வங்களுக்கு தன்னம்பிக்கையளிக்கிறது ...தம்பி மதன்குமார் அவர்களின் தொழில் திறனை ..வரும் நாட்களில் தனிப்பதிவில் பதிவிடுகிறேன் ..விருட்சத்தின் விதைகளாக வளர்ந்து வர வாழ்த்துகிறது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
உடுமலைப்பேட்டை ...
www.kambalavirucham .in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு






சனி, 27 அக்டோபர், 2018

என் அருமை உடுமலைப்......பேட்டை ...பெரிய.......கோட்டை ...நவீன்குமார் மாப்பிள்ளைக்கு. 

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Intro
Life Goes Nothing..first and last cry in between days to live to smile. ☺
Works at Aquasub Engineering
Student
Studied at Mech at kit coimbatore
Studied at DME in rmptc clg
Went to oxford hr sec school...

Life Goes Nothing..first and last cry in between days to live to smile. ☺
Works at Aquasub Engineering
Student
Studied at Mech at kit coimbatore
Studied at DME in rmptc clg
==========================================

என் அருமை காளாஞ்சிப்பட்டி பொம்மு ராஜ்    மாப்பிள்ளைக்கு  ... என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Intro
Studied at Christian College of Engineering and Technology
Went to Christian College Of Engineering & Technology

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681
கம்பளவிருட்சம் அறக்கட்டளை 
உடுமலைப்பேட்டை ..
திரு .அருண்ராஜ் -மாலதி -மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்வு
உடுமலைப்பேட்டை ..

இன்று மாலை எனது நண்பர் கேரள தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் ..மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்றிருந்தது மிக்க மகிழ்ச்சி ..
என் ஆசிரியர் நண்பர்கள் குமரலிங்கம் ஆசிரியர் திருநீலகண்டன் ,ஓவிய ஆசிரியர் மதன்குமார் ,
பெதப்பம்பட்டி என் .வீ .பள்ளி ஆசிரியர் நண்பர்கள் சக்திவேல் ,ஆசிரியர் முருகேஷ் அவர்கள் ,
பொட்டிநாயக்கனூர் தலைமை ஆசிரியர் சீத்தாராமன் அவர்கள் ,
ஓட்டுநர் ஆண்ட்ரு அவர்கள் ,எனது பள்ளி தோழர் கண்ணன் அவர்கள் ,
A .நாகூர் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் ..ஆகியோருடன் சந்தித்து கலந்துரையாடியது பயனுள்ள திருமணவிழாவாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி

ஆசிரியர் நண்பர் முருகேஷ் அவர்கள் திருமண வரவேற்பு விழாவில் பாடல்கள் பாடியது மிக அருமை ..ஆசிரியர் நண்பரின் வகுப்பில் பாடம் எடுத்து தான் பார்த்துஇருக்கிறேன் ..பக்கத்தில் உக்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் ..அவரது தொலைபேசியில் இருந்த பாடல் ஒலித்தது ..பாடல் அருமை என்று பாராட்டினேன் ..நானும் ஓரளவுக்கு பாடுவேன் என்றார் ..பாடுங்களேன் ஆசிரியர் நண்பர் திடீர் என்று அழைத்து மைக் கொடுத்து எங்களுக்காக பாடுங்களேன் என்று கேட்டுக்கொண்டோம் ..அருமையான குரல்வளம் ஒரு மணிநேரம் அழகான பாடல்கள் பாடி திருமண சொந்தங்களை மகிழ்வித்தது அருமை ..ஆசிரியருக்குள்  இப்படி ஒரு திறமை என்று நேரில் பார்த்து பாடிய பாடல்கள் அருமை ..உங்கள் குரல் வளத்திற்கு பாராட்டுக்கள் ...

திரு .அருண்ராஜ் -மாலதி -மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..



வெள்ளி, 26 அக்டோபர், 2018

சிலம்பாட்டம் ...

"சிலம்பம்" என்ற சொல் "சிலம்பல்'' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்" என்ற பெயருண்டு.

கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்" என்ற பெயர் ஏற்பட்டது. 

திருக்குறளில் "கோல்" என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே"என்ற வரிகள் மூலம், "தண்டு" என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.


இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது
You Tube...காணொளி..ஷியாம் சுதிர் சிவக்குமார்  ..தகமை .காம் (thagamai .com )