செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

 கல்லாக நிற்கும் நீராணிக்கர்களும், மடையர்களும், கரையார்களும்


ஏழுகுளப்பாசனமும் நிர் மேலாண்மையும் என்ற தலைப்பில் கரையார், நீராணிக்கர்கள், மடையர், குறித்தான பல்வேறு செய்திகளை உடுமலை வரலாற்றில் நூல் பதிவிட்டிருந்தோம்.

இதுநாள் வரை பெரியகுளத்திற்கு அருகில் இருந்த கற்சிலை தற்போது நீராணிக்கர் எனவும், மடையர் எனவும் கரையார் எனவும் கண்ணுக்குத் தெரிந்து பதிவு
செய்துள்ள செய்தியாளர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இது போன்ற ஒட்டுக்குளம், செங்குளம். அம்மாபட்டிகுளம், கரிசல் குளம், பூசாரி நாயக்கன் குளம் , வலையபட்டி வதூத் குளம் என ஒவ்வொரு நீர்;த்தேக்கத்தை ஒட்டியும் இது போன்ற சிலைகள் இருப்பதை இனிமேலும் கண்காணித்து பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

இன்றைய தினமலர்
( விரிவான செய்திகள் உடுமலை வரலாறு ஏழுகுளப்பாசனத்தில் உள்ளது )

உடுமலை வரலாறு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக