செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கேள்வி : வீட்டுக் கடன் திட்டத்தில் உங்கள் பணத்தை எப்படி சேமிக்கலாம்..?



என் பதில் :


ஒவ்வொருவருடைய வாழ்விலும் வீடு என்பது ஒரு அடிப்படை வசதி என்பதுடன் ஒரு வீட்டைச் சொந்தமாக்குவது பொதுவாக அனைவரின் கனவுகளிலும் ஒன்று. நம்முடைய நிதிநிலைகள் பலமாக இல்லாத நேரங்களில் வீட்டுக் கடன்கள் நம் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க உதவுகின்றன. இன்றைய நிலையில் வீட்டுக்கடன் வாங்குவது எளிதாகிவிட்டாலும், இதனைத் திருப்பிச் செலுத்துவதில் நம்முடைய கஷ்டம் நமக்குத் தான் தெரியும்.

வீட்டுக் கடனும்.. வங்கிகளும்.. இந்நாளில் பெரும்பாலான வங்கிகள் பல்வேறு விதமான வீட்டுக் கடன் திட்டங்களில் மக்களைக் கவரும் விதமாக அவர்களின் வீட்டுக் கனவை பூர்த்திச் செய்ய வழங்குகின்றன. அவை ஒருபுறம் கனவாக இருந்தாலும் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டுக்கடன்கள் ஒரு மிகப்பெரிய சுமையை நம் மீது சுமத்துகின்றன.

நிலையான வட்டி வகிதம்.. வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவை வங்கிகளுக்கு மாறும் தன்மையுடைய வட்டி வீதத்தை (Floating Intrest rates) விளக்கிக் கொள்ளுமாறும் உண்மையான வட்டியை மட்டுமே வசூல் செய்ய அறிவித்துள்ளது.

உறுதி செய்துகொள்ளவும்... வட்டி விகித முறையை மாற்றியதன் மூலம் அபராதத் தொகையை நீக்கியது மட்டும் அல்லாமல் கடன் பெற்றவர்கள் பணத்தைச் சேமிக்கவும் வழி செய்துள்ளது. மேலும் கடன் வாங்கும் போதே வட்டி விகித முறையை உறுதி செய்துகொள்வது உத்தமம்.

சம்பள கணக்கு... உங்கள் கடன் தவணையை உங்கள் சம்பள வங்கிக் கணக்கில் இணைப்பதன் மூலம் அதைச் செலுத்துவதைக் குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் குறிப்பிட்ட தேதியில் தேவையான அளவு பணத்தை உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

ப்ரிபே முறை... தற்போது வங்கிகளில் வீட்டுக்கடன்களில் ப்ரிபே (Prepaying) எனப்படும் முன்கூடியே செலுத்தும் வசதியையும் அளிக்கின்றன. இதன் படி ஒருவர் தான் பெற்ற கடனை முன்கூடியே கூடச் செலுத்தலாம். இதன் மூலம் கடனை செலுத்தும் தவணைக்காலம் மற்றும் வட்டியும் குறையும்.

வரவுத் தொகை இந்த முன்கூடியே செலுத்தும் வசதி மூலம் வரவுத் தொகை ஏதாவது மீதம் இருந்தால் அதனைத் திரும்பப் பெறவும் (Withdrawal) செய்யலாம். ஆனால் குறைந்த வட்டி போன்ற வசதிகளை இது குறைக்கும். இந்த வசதி அடிப்படைப் வட்டி விகிதத்தில் 25-50 புள்ளிகள் அதிகம் செலுத்துவதன் மூலம் கிடைக்கும். இந்த அடிப்படை சாதாரண வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விடச் சற்று அதிகம்.

நன்றி ...

சிவக்குமார் . V. K
Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

 கேள்வி : தந்தை-மகன் உறவு ஆழமானது. இலகுவில் காட்சிப்படாதது.

 இவ்உறவில், உங்களது வீட்டிலுள்ள இருவருக்குமான நெறுக்கம் எவ்வாறு காணப்படுகிறது?


என் பதில் : 


ஆமாங்க. தந்தை மகன் உறவு ஆழமானது. இந்த மகன் என்ற உறவு.. அதில் ஒட்டிக் கொண்டிருக்கிற உணர்வு…வார்த்தையில் விவரிக்க முடியாதது.


பிரசவ வலியில் மனைவி பிரசவ வார்டுக்குள் சென்றிருக்கிறார். ஐயோ நல்லபடியாக பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுமே. என்று ஒரே பதற்றம். கை கால்கள் நடுக்கம். அந்த நேரத்தில் இறைவனிடம் கூட என்ன முறையிட வேண்டும் என்பது கூட புலப்படவில்லை. பயம் பயம். மனத்துக்குள் ஒரே..திக்.திக்.டாக்டர் வெளியில் வந்து.. கொஞ்சம் சிக்கலாக தான்இருக்கிறது. இரண்டு உயிரில் ஒன்றைத்தான் காப்பாற்ற முடியும். உங்களுக்கு எந்த உயிர் வேண்டும் என்று கேட்கிறார்? ஏதோ காகிதத்தில் கையெழுத்து வாங்குகிறார்..?


ஆம்பளை நீ அழலாமா? என்று சொல்லிப் பாருங்கள். முடியாதுங்க முடியாது! அந்த சமயத்தில் அந்த டாக்டர்தான் தெய்வமாக கண்ணுக்குத் தெரிந்தார். எவ்வளவுதான் நானும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இருப்பேன். என்னால் அதற்கு மேல் அடக்க முடியல. வாயைத் திறந்து கத்தாமலே.. தாரை தாரையாக கண்ணீர் வடிக்கிறேன். அந்த டாக்டரை கையெடுத்து கும்பிட்டபடியே…எனக்கு பெரிய உசுரு வேணுமுங்க. என்று கூறுகிறேன்.


இந்த மாதிரி கஷ்ட நிலையில்.. எனக்கு அவரைத் தெரியும், இவரை தெரியும், எங்கிட்ட அவ்வளவு இருக்கு, இவ்வளவு இருக்கு,நான் நெனச்சா.. என்றெல்லாம் யாரும் பேச முடியாதுங்க. யாரோ நம்மை நெருப்பில தூக்கி வீசுன மாதிரி.. மனசுக்குள் அவ்வளவு போராட்டம், தவிப்பு இருக்கும். அரை மணி நேரம் கடந்திருக்கும். நர்சம்மா.. வெளியே வந்து உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கான்_என்று சொல்றாங்க! நான் ஓடிச் சென்று குழந்தையை பார்க்கிறேன். 


டாக்டரம்மா கையில் குழந்தை. இரண்டடி தூரம் தான் இடைவெளி. 5000 மைல் வேகத்தில் எனது கண்கள் குழந்தையை காண ஆவலோடு…அதே ஆவலோடு கண்கள் மனைவியை தேடுகிறது. முதலில் நான் பார்த்தது. மனைவியை. அவரின் சிரிப்பை. இரண்டாவது பார்த்தது. இல்லை இல்லை கேட்டது. எனது மகனின் அழுகுரல். மூன்றாவதாக தான் குழந்தையின் முகத்தை காண்கிறேன். திடீர்னு ஏதோ தங்கப் புதையல் கிடைத்து_நான்கோடீஸ்வரன் ஆகி விட்டது போல அவ்வளவு சந்தோஷம்ங்க. பட்ட கஷ்டத்துக்கு-பலன் கைமேல கிடைத்தது போல்.. பரவசம், சந்தோசம், குதூகலம், கொண்டாட்டம்.


ஐந்து நிமிடத்திற்கு முன்…ஒரே துக்கமாக இருந்தவன். இப்போது ஏகபோக கும்மாளம் கூடி வர_ஆர்ப்பாட்டம் ஆனவன்ஆனேன்.


இந்த விஷயம் நடந்து..13 வருஷம் ஆச்சு. இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. என் மகனை பார்க்கும் போதெல்லாம்.. என் வயிற்றில் பாலை வார்த்தவனே..என் ராசா! என்றுதான் எண்ணத் தோன்றும்! இப்படி முதல் பார்வையிலேயே.. ஆனந்த வெள்ளத்தை அள்ளித் தந்தவன் அவன் அன்றோ. அப்படி இருக்க_அவனுக்கும் எனக்கும் இருக்கிற நெருக்கம்.. 

சொல்லியா தெரிய வேண்டும்!!

நன்றி ......https://youtu.be/tX8o4efyMPg

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

 அருமை ...நன்றி மாப்பிள ..ஒரு நேர்காணல் உங்களிடம் எடுத்துவிடலாம் மாப்பிள 


கடைசி வாரிசு என்கின்ற போது எத்தலப்ப நாயக்கர் வம்ச வழியில் 2 ஆண் வாரிசு 1 பெண் வாரிசு ஆண் வாரிசுக்கு கல்யாணம் ஏதும் இல்லாமல் பெண் வாரிசு கட்டிக்கொடுத்த இடத்திற்கு இந்த ஆண் வாரிசு இருவரும் வந்து விட்டார்கள் அந்த ஆண் வாரிசு பெயர் ஒன்று நடராஜர் பாண்டியன் இன்னொன்று செல்லப்பாண்டியன் அந்தப் பெண் வாரிசு பெயர் வேலு தாய் அம்மா அந்த வம்சாவளியில் நாங்களும் பயணிக்கிறோம் மாமா ஆண் வாரிசுக்கு ஏதாவது கல்யாணம் இருந்திருந்தால் நாங்கள் பயணிக்க வேண்டிய அவசியமில்லை ஆண் வாரிசுக்கு கல்யாணம் எதுவும் இல்லாததால் நாங்கள் பயணிக்க வேண்டும் அவசியம் உள்ளது மாமா

 கேள்வி : பிள்ளைகளிடமிருந்து பெரியவர்கள் என்ன கற்றுக்கொள்ள முடியும்?


என் பதில் : 


ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர நினைக்கிறேன்.

பார்மர் மாவட்ட ஆட்சியர் சிவபிரசாத் நகட்டே ஒரு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் சிறார்கள் சிலர் மணல் வீடு கட்டி விளையாடுவதைப் பார்த்தார்.

உடனே, வண்டியை நிறுத்தச் சொன்ன அவர், சிறார்கள் கட்டிய வீட்டைப் பார்வையிட்டார். வீட்டோடு சேர்த்து அவர்கள் சாலையும் போட்டிருந்தது அவரை வியப்புக்குள்ளாக்கியது.


அவர்களின் புத்தாக்கத்தைப் பாராட்டி ஐநூறு ரூபாய் அளித்து, தங்களின் குழந்தைப்பருவத்தை இப்படியே உயிர்ப்புடன் வைத்திருக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.

பிறகு அவர்களின் புத்தாக்கத்துக்கு பின்னாலான காரணம் அவருக்கு புரிய வந்தது. அதாவது அவர்களின் கிராமத்தில் சாலையே இல்லை. அந்தத் தேவையை விளையாட்டில் பூர்த்தி செய்திருக்கின்றனர் அந்த சிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்திற்கு ஒழுங்கான சாலை வசதி செய்து தருவதாக அந்த சிறார்களிடம் உறுதியளித்தார்.

பிள்ளைகளும் வாழ்க்கைப் பாடங்கள் சொல்லித் தரலாம். எல்லாரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.


நன்றி ..


ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

 கேள்வி : வீடு வாங்கியவுடன் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன என்று கூறமுடியுமா சார் ...?


என் பதில் : 


வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். 

சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!

பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்: 

ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. 

டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்: 

இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும். 

வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்: 

வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர்மார்க் மிகவும் அவசியம்: 

ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள் 

இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்: 

ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.

வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்: 

வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள் 

குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்: 

நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.

சிவக்குமார்........ 

வீட்டு கடன் பிரிவு 

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

Email:siva19732001@gmail.com 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Siva shyam Associates 

Coimbatore,Pollachi, Udamalpet

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

❤ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ❤....19.09.2021

 

❤ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ❤....
19.09.2008..(உடுமலைப்பேட்டை-லட்சுமி மருத்துவமனை )
இன்றைய நாள் ..எனக்கு தூங்கா மலரும் இரவு.,
ஆம்., என் ஷ்யாமின் .,
முகம் மலர்ந்த சத்தம்..,!!!
ஷ்யாமின் பிறந்த தினம் முதலே உற்சாகம் தொற்றி கொண்டது ...பிறந்த உடன் பிஞ்சு கரங்களை பிடித்து பார்க்கும் பொழுது பட்டாம்பூச்சியின் மெல்லிய இதழ்கள் போன்று மிருதுவாக இருக்கும் ..இரண்டு கைகளில் மெல்லிய வெல்வெட்டு துண்டுடன் மார்போடு அனைத்துக்கொண்டு ஒரு கையினால் ஷ்யாமின் தலையை கீழே சாயாமல் சிமிட்டும் கண்கோளடு பார்ப்பது ஒருமுறை தான் ..வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும் ..
குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள் குளமாக்கி கொண்டே இருக்கும் ...
நான் வீட்டில் இருந்தால் நான் தான் அவன் உலகம் ...மாலைநேரம் வந்தால் எப்படியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுருப்பான் ..இரண்டு சக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் பட்டாம்பூச்சி சிறகுகள் விரித்து பயணம் செய்துவருவோம் ..வடவள்ளி ..சுற்றி இருக்கும் பைமெட்டல் பேரிங் வழியாக வடவள்ளி பேரூந்துநிலையம் வழியாக கஸ்தூரிநாயக்கன் பாளையம் சென்று வான ப்ரஸதா மற்றும் தியான ப்ரஸதா வழியாக இயற்கை கொஞ்சும் மரங்கள் ..அதை ஒட்டிய விவசாய தோட்டங்கள் வழியாக வீடுவந்து சேர்வோம் ..அப்பொழுதும் வீட்டிற்க்குள் போக மனம் வராது..உன்னுரு ரௌண்ட பா ..ப்ளீஸ் ..ப்ளீஸ் கொஞ்சும் கெஞ்சல்கள் நினைவுகள் மலருந்துகொண்டே இருக்கும் ..
காலையில் அப்பா ஆய் வருதுப்பாவில் ஆரம்பித்து இரவு சிறு சிறு கதைகள் பேசி தூங்கவைப்பது வரை அவனுக்கு எல்லாமே நான் தான்.....அதுவும் தொட்டில் குழந்தையாக இருக்கும்பொழுது இரண்டு மணிநேரம் ..மூன்று மணிநேரம் தொட்டில் ஆட்டிவிட்டு கைவலிக்கிறது என்று மெதுவாக தூக்கிட்டானா என்று பார்த்தால் கொட்ட கொட்ட முழித்து பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருப்பான்...அதைப்பார்த்தவுடன் கைவலிக்க தொட்டிலாட்டியது எல்லாம் வலியும் மறந்துவிடும் ..
மொபைலில் டாக்கிகங் டாம் பொம்மையை காணும் பொழுதெல்லாம் மகனின் நினைவுகள் வந்து செல்லும் எனக்கு இப்படியிருக்க..எனது கணிணியில் விவரம் தெரியும் பொழுது அவனுக்கு பிடித்த கதை பாடல்கள் ..அதிகம் குழந்தை பாடல்கள் மலையாள மொழியில் அதிகம் இருந்தது ...சிரித்துக்கொண்டு இருப்பான் ..என்னுடைய இரவு நேர அலுவுலக பணியை கொஞ்சம் காலம் ஆக்கிரமித்துக்கொண்டான் ..
பணியின் காரணமாக மகனை பிரிந்திருக்கும் நாட்கள் மகனின் நினைவுகள் வரும் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது...ஆனால் மகனுக்கு என் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் அவனுக்கு கஸ்டமாய் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.....
ஷ்யாமுக்கு நான் தான் அகிலமும் என்னை பிரிந்திருக்கும் காலங்கள் அது இன்னும் பெரும் துயரத்தை தந்திருக்கும்......
ஒரு தந்தையைப் பொருத்த வரை மகனின் இளவயது குறும்புகள் பேச்சுக்கள் என்பது நினைத்து நினைத்து குதூகலப்படும் விஷயம். எங்கேனும் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே பெற்ற மகனும் அவனது குறும்புகளும் மனதில் தோன்றி ஒரு புன்சிரிப்பை தற்செயலாக செயலாய் வரவழைக்கும்.
எப்பொழுது சனி ..ஞாயிறு தினங்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம் நானும் ,ஷ்யாமும் ..கோவையின் சனிக்கிழமை காலை துவங்கும் நேரு மைதானம் ..வ .உ .சி ,மைதானம் ..GE DE நாயுடு அருங்காட்சியகம் ,GE DE Car அருங்காட்சியகம் ..மதியம் கீதா கபே ..மதிய உணவு ..சிறுது நேரம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் படிக்கும் புத்தக அலமாரி ..மாலை நேரம் வா .உ சி சிறுவர்பூங்காவில் சுற்றி குதிரை சவாரி ...சிறுவர் பூங்காவில் சென்று ..தூரி விளையாட்டு ,சறுக்கு விளையாட்டு ..வீடு வந்து சேர்வதற்கு உற்சாகம் மிகுதியாக இருக்கும் ..ஆனால் ஷியாம் ..இன்னும் கொஞ்சம் விளையாடி விட்டு செல்லலாம் என்று அடம் ..பின் சமாதான படுத்தி அழைத்துவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ..இப்பொழுது வளர்ந்துவிட்டான்..நண்பர்கள் வட்டம் சேர்கிறது ..வாழ்க்கை சூழல் ..பிறந்தது முதல் ..10 வயது வரைதான் அப்பாவின் தேவை ...நாமும் அதற்கு தகுந்த முறையில் தூரத்தில் இருந்து நம் கண் அசைவில் மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..வளர்கிறான் என்று மனதை நாம் தான் கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளவேண்டும் ..
என்னதான் இருந்தாலும் அந்த சிறுவயது நினைவுகள் மலர்ந்துகொண்டே இருக்கும் ..உள்ளே பொங்கி வரும் அன்பு பாசம் காதல் எல்லாவற்றையும் பெரும் போராட்டத்தோடு அடக்கிக் கொண்டு வெளியில் கடுமையும் கண்டிப்புமாக மகனை பெரிய ஆளாக்கத் துடிக்கும் ஒவ்வொரு தந்தையின் கஷ்டமும் அரை பிரசவத்திற்கு சமம்....தற்காலங்களில் நம்மை சுற்றி நடக்கும் சூழ்நிலைகள் ..பாசம் நேசம் ..சொந்தங்களின் உறவுமுறை ,நண்பர்கள் வட்டம் ..கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதா ..இல்லை இன்னும் பாசப்பிணைப்புகள் கூடுமா ...
வாழக்கை பயணம் நகர்கிறது ..ஷியாம் பிறந்தது முதல் சுற்றுப்பயணங்கள் கோவை ..பெங்களுரு ..திருவனந்தபுரம் ..உடுமலை .சேலம் ....ஓட்டன்சத்திரம் ..தேனீ ..போடி ...என ..கார் பயணங்கள் .அதிகம் ஷியாம் மன தையரியத்துடன் வெளி உலக தொடர்பு வளர்வதற்கு மிக பயனுள்ளதாக இருந்தது ..
குழந்தை வளர்ப்பு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும்,
கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!
❤இன்றோடு 14 வயது முடிந்து 15 வயதை தொடும் ஷ்யாமுக்கு என் அன்பு பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
...👍👍🎂🎂🌱🌳❤
🌷என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..🌱

புதன், 15 செப்டம்பர், 2021

 மிகவும் அவசரமாக இரத்தம் தேவை 


பெயர்: 


வயது: 


எதற்கு:


இரத்த வகை: 


தேவை:


இடம்:


தேதி/நேரம்:


தொடர்பு கொள்ள தொலைபேசி எண் :-


Verified by MCC BLOOD DONORS

திங்கள், 13 செப்டம்பர், 2021

 கேள்வி : "பஞ்சாயத்து அப்ரூவல் மட்டும் பெற்ற மனைப் பிரிவில் மனைகளை வாங்கலாமா ? அது சட்டப் படியானதா ?"


என் பதில் :

.
"வாங்கக்கூடாது .அது சட்டப்படியானது இல்லை!" .
.
THE TAMIL NADU PANCHAYAT BUILDING RULES, 1997
(G.O.Ms.No.255, Rural Development (C2) 18th August 1997).
.
Rule 3. Application for approval of layout of sites:-
.
(1) No owner or other persons shall layout a street, lane, passage or pathway or sub-divide or utilize the land or any portion or portions of the same on the site or sites for building purposes until a layout plan has been approved by the Executive authority who shall get prior concurrence of the Director of Town and Country Planning or his authorized Joint Director or Deputy Director of Town and Country Planning for such approval.
.
அதாவது நகர் ஊரமைப்புத் துறை (DTCP or Directorate of Town and Country Planning ) யின் approval பெற்றபிறகு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஒப்புதல் வழங்கவேண்டும் ..
.
இருப்பினும் மனை வாங்கு முன்பு விற்பவரிடமோ அல்லது சம்பத்தப்பட்ட DTCP அலுவலகத்திலோ ஒரிஜினல் வரைபடத்தின் நகலினை வாங்கி மனை எண் மற்றும் அளவுகளை உறுதி செய்து கொள்ளவேண்டும்.மேலும் நேரில் சென்று பார்த்து குறிப்பிட தூரங்களில் ரயில் /பேருந்து நிலையம் ,கல்லூரிகள் போன்ற கட்டுமானங்கள் உள்ளதா என உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும் .
.
நீங்கள் மேற்படி மனைப்பிரிவின் approval எண்ணைக் குறிப்பிட்டு, நகல் வேண்டி விண்ணப்பித்தால் வரைபடத்தின் நீள அகலத்திற்கேற்ப கட்டணம் செலுத்த தெரிவித்து(Generally between Rs.300 and 1000) அரசு கடிதம் வரும் .அதில் கண்டுள்ள முறையில் கட்டணம் செலுத்தி அசல் ரசீதுகளை அனுப்பிவைத்தால் உங்கள் வீடு தேடி ஒரிஜினல் வரைபடத்தின் நகல் வரும் .
நகர் ஊரமைப்பு துறையில் ஒப்புதல் பெறப்பட்ட மனைப்பிரிவுகளில் நீங்கள் வீட்டடி மனை வாங்கினால்- தார் சாலை, கழிவுநீர் வாய்கால், மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் உங்களுக்கு கிடைப்பதுடன், எளிதான வங்கிக்கடன் வசதியும் கிடைக்கும்.
மேலும் நிலம் கையப்படுத்துதல் சட்டத்தில் இருந்து உரிய பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்கும். அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் நீங்கள் மனை வாங்கினால் சாலை கழிவு நீர் வாய்கால் மின் இணைப்பு கட்டிட வரைபட அனுமதி வங்கிக்கடன் வசதி எளிதாக கிடைக்காது.
மேலும் உங்கள் மனை தொடர்பான சட்டரீதியான பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்காது. பல ஆண்டுகளாக வீட்டடி மனை வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்ற உங்களின் கனவு, எப்போது வேண்டுமானாலும் நிர்மூலம் ஆகலாம்.
எனவே, கவனம் தேவை.
.
ஓடி உழைத்து வாழ்நாளில் ஒரு வீடு கட்டப்போகிறோம் ! அதற்காக ஒரு சில மணித்துளிகளை ஒதுக்கி அரசு ஆவணங்களை பெற்று உறுதி செய்துகொள்ளுதல் நலம்தானே ....
Sivakumar.V.K

Home Loan Consulatant
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு ஆலோசகர்
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

 கேள்வி :  மருத்துவ படிப்பு முடிந்து, அரசு மருத்துவர் வேலை எப்படி வாங்குவது? அதற்கு என்ன தேர்வு எழுத வேண்டும்? அதற்கு காலம் உண்டா ?சார்..


என் பதில் :


தமிழக அரசு மருத்துவமனையில் வேலைக்கு மருத்துவர்கள் சேர.வேண்டும் எனில் அவர்கள் எம்ஆர்பி என்ற மெடிக்கல் ரெக்ரூட்மன்ட் போர்ட் நடத்தும் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்..


MEDICAL SERVICES RECRUITMENT BOARD(MRB)

http://www.mrb.tn.gov.in/notifications.html


பின்னர் தரவரிசை பட்டியலை எம் ஆர்பி வலைதளத்தில் வெளியிடுவார்கள்.. அதன் அடிப்படையில் கவுன்சலிங் என்ற கலந்தாய்வு க்கு அழைக்கப்படும்.. இப்படியே தற்போது தமிழகஅரசு மருத்துவமனையில் மருத்துவர்களை பணியில் அமர்த்துகின்றனர்.


முது நிலை படிப்பு படித்த ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் என்றால்.. நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி .. பணியமர்வு ஆணை கொடுக்கப்படும்..பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் வேலை செய்வார்கள் .


அதே போல்.. அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பு முடிந்ததும்.. மூன்று வருடங்கள்.. ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும் என்ற பிணை உத்தரவு உள்ளது.. 


வேண்டுமெனில்.. மூன்று ஆண்டுகள் முடிந்ததும் வேலையை தொடர்ந்து செய்யலாம் அல்லது வேறு வேலைக்கோ..வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கோ சென்று விடுவார்கள்..

நன்றி ....


சனி, 11 செப்டம்பர், 2021

 இன்று அருமையான பயணம் -11-09-2021

தென்கொங்கு பாளையக்காரர் ஏர்மாநாயக்கர்  (நீர்மேலாண்மை )

வழிபட்ட கோவில்களுக்கு சென்று அருமையான தரிசனம் ...

அர்த்தநாரிபாளையம் ஸ்ரீ அழகு திருமலராயப் பெருமாள்  ...

ஜல்லிபட்டி ..மஞ்சநாயக்கனுர்  அமணேஸ்வரர் ஸ்வாமி ..

பூவலபருத்தி நடுகற்கள் வழிபாடு ...

மனநிறைவான ஆன்மீக பயணம் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681

திங்கள், 6 செப்டம்பர், 2021

 இத்தனை கால வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது,

மரியாதை, அங்கீகாரம் போன்ற விஷயங்கள் எல்லாம் தானாக நம்மைத் தேடி வருவதல்ல. நாமாக இறங்கி அடித்துப் பிடுங்க வேண்டிய விஷயங்களாக மாறி விட்டன. அதற்கு பல மோசமான தந்திர அரசியல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியொரு மோசமான கலாசாரத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்படியெல்லாம் கேவலமான தந்திரங்கள் செய்துதான் அந்த மரியாதை, அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றால், அப்படிப்பட்ட பொறுப்புகள் ,பதவிகள் எனக்கு தேவைப்படாது ,எனக்குத் தேவையும் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பவன், பிழைக்கத் தெரியாதவனாக, இளிச்சவாயனாக பார்க்கப்படுகிறான்.என்பது தான் வேதனையான விஷயம் ...

வெள்ளி, 3 செப்டம்பர், 2021


நல்லாசிரியப் பெருந்தகைகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்🥰


உடுமலைப்பேட்டை மண்ணையும் ஊரையும் அறிவியல் துறையில்  உலகறியச் செய்திட்ட அறிவியலாளர் ஆசிரியர் கெழுதகை நண்பர் கண்ணபிரான் அவர்களுக்கும்


வரலாற்றுச் சிறப்புமிக்க உடுமலை பாரதியார் நூற்றாண்டு பள்ளியின் தமிழாசிரியர் வே.சின்னராசு அவர்களுக்கும்  இந்த 2021 ஆம் கல்வி ஆண்டின் மாநில நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்;டு  அறிவிக்கப்பட்டுள்ளனர்.


ஆசிரியப் பெருந்தகைகளின் அளப்பரிய பணிகளை அவ்வப்பொழுது செய்யாமல் அன்றாடம் செய்து வரும்  அரும்பெரும் ஆற்றலாளர்கள்.


இரு நல்லாசிரியப் பெருந்தகைகள் இருவரும்   ...🥰🥰தளி ஜல்லிபட்டி (தளி எத்தலப்பர் ,சின்ன கரட்டுப்பெருமாள் -ஆசீர்வாதங்கள் )கிராமத்தின் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமை🥰🤝 ..மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் 👍🙏🙏🌈🌈🌧️🌧️🌧️



என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -

9944066681..