வியாழன், 19 மார்ச், 2026

பசும் பால் கறவை மாடு ....









 

பசும் பால் கறவை மாடு ....

பசும் பால் கறவை மாடு, பால் உற்பத்திக்காகவே சிறப்பாக வளர்க்கப்படும் பெண் மாடுகள் (கிர், சிவப்பு சிந்திஜெர்சிஹோல்ஸ்டீன்) ஆகும். இவை அதிக பால் மடி, மெல்லிய உடல் மற்றும் சீரான தீவன மேலாண்மை மூலம் தினசரி 5 முதல் 30 லிட்டருக்கும் அதிகமான பால் தருகின்றன. முறையான கறவை, சத்தான தீவனம் (மசால் புல்) மற்றும் சுகாதாரமான பராமரிப்பு, அதிக லாபத்திற்கு அவசியம்

 

முக்கிய கறவை மாடு இனங்கள்:

 

·         உள்நாட்டு இனங்கள்: கிர் (25-30 லி/நாள்), சிவப்பு சிந்தி (சராசரி 2000 கிலோ/பருவம்), தார்பார்க்கர் (6-8 லி/நாள்).

·         கலப்பின இனங்கள்: ஜெர்சி, ஹோல்ஸ்டீன்-ஃபிரீசியன்

கறவை மாடு வளர்ப்பு மேலாண்மை:

 

·         பால் கறத்தல்: காலை, மாலை என இரண்டு வேளையும் பால் கறப்பது அவசியம்.

·         தீவனம்: பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனம் (மசால், கொழுக்கட்டை புல்) வழங்க வேண்டும்.

·         சுகாதாரம்: பால் மடி, காம்புகள் மற்றும் தொழுவத்தை சுத்தமாக வைத்து, நோய் தாக்காமல் (மடிநோய்) பார்த்துக்கொள்ள வேண்டும்.

·         கன்று பராமரிப்பு: கன்று ஈன்ற 6 மணி நேரத்திற்குள் சீம்பால் (Colostrum) கன்றுக்கு அவசியம்

கறவை மாடு தேர்வு செய்யும்போது, அது தினமும் 5.5 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் திறனுடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கறவை மாடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பார்த்ததும் பிடிக்கனும்

சுழி பார்த்து வாங்குவது பாரம்பரிய முறை அது நமக்கு அவ்வளவாக தெரியாது🙄

2ம் அல்லது 3 ஆம் ஈற்று மாடாக இருக்க வேணரடும

மூக்கு பளபளவைன்று மென்மையாக இருக்க வேண்டும்

தோல் மிருதுவாக இருக்க வேண்டும்

முதுகுதண்டு வளையாமல் நேர்கோடாக இருக்க வேண்டும்

பிரகாசமான கண்கள் கொண்டவையாக இருக்க வேண்டும்

உடலமைப்பு முன்பக்கம் குறுகியும் பின்பக்கம் அகன்றும் இருத்தல் வேண்டும்

அடி வயிற்று இரத்த நாளம் வளமாக காணப்பட வேண்டும்

பால் மடு காம்புகள் சீராகவும் , ஒரே வளர்ச்சியுடனும் இருத்தல் வேண்டும்

எல்லா பால் மடு காம்புகளிலும் கறக்கும்போது பால் வர வேண்டும்

ஒரு மாட்டை ஒரு காளையுடன் இணைத்த பின்னர் அதன் கன்றுக்குட்டிகளையும் அதே காளையுடன் சேர்க்காமல் இருப்பது சால சிறந்தது

மரபில் மாற்றத்தால் பால் வளம் இல்லாமல் போகும்

நன்றி...

என்றும் அன்புடன் சிவக்குமார் 


வெள்ளி, 13 மார்ச், 2026

🏠🎙️டைல்ஸ் ராமு 🏠94425 18335🏠🌈📡..தம்பி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

🏠🎙️டைல்ஸ் ராமு 🏠94425 18335🏠🌈📡

..தம்பி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

டைல்ஸ் ராமு தம்பி அவர்களுடன் கலந்துரையாடும் போது ..20 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் பெற்ற அனுபுவ முறையில் கிடைத்த தகவல்கள் ....மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ....

வீட்டு டைல்ஸ் முறைகள் பற்றி .....






வீட்டு டைல்ஸ் (Tiles) முறைகள் தரை மற்றும் சுவர் வடிவமைப்பிற்கு நவீன, நீடித்த மற்றும் ஸ்டைலான தீர்வுகளை வழங்குகின்றன. செராமிக், போர்சிலைன், மார்பிள், கிரானைட், மொசைக் மற்றும் வுட்-லுக் டைல்ஸ் ஆகியவை முக்கிய வகைகள். இவை ஹால், சமையலறை, குளியலறை மற்றும் வெளிப்புற இடங்களுக்கு ஏற்ப, பளபளப்பான (Glossy) அல்லது மேட் (Matte) பூச்சுகளில் கிடைக்கின்றன.

முக்கிய டைல்ஸ் வகைகள் மற்றும் பயன்கள்:
  • செராமிக் டைல்ஸ் (Ceramic Tiles): சுவர்கள் மற்றும் குறைந்த பயன்பாடு உள்ள தரைகளுக்கு ஏற்றது.
  • போர்சிலைன் டைல்ஸ் (Porcelain Tiles): மிகவும் உறுதியானது; சமையலறை, குளியலறை மற்றும் வாகன நிறுத்துமிடங்களுக்கு (Parking) சிறந்தது.
  • வுட்-லுக் டைல்ஸ் (Wood-Look Tiles): மரத்தடி போன்ற வெப்பமான தோற்றத்தை (Warm look) குறைந்த செலவில் தருகிறது.
  • மொசைக் டைல்ஸ் (Mosaic Tiles): குளியலறை மற்றும் சுவர்கள் அலங்காரத்திற்கு (Backsplash) ஏற்றது.
  • பொருத்துதல் முறைகள் மற்றும் பராமரிப்பு:
    • பொருத்துதல் (Installation): சிமெண்ட் கலவை அல்லது நவீன டைல் பசைகளை (Tile Adhesive) பயன்படுத்தி, தரை சமமாக இருப்பதை உறுதிசெய்து பொருத்த வேண்டும்.
    • பராமரிப்பு (Maintenance): பளபளப்பான டைல்ஸை அடிக்கடி துடைக்க வேண்டும்; மேட் டைல்ஸ் அதிக பயன்பாடு உள்ள இடங்களுக்கு ஏற்றது.
    வடிவமைப்பு மற்றும் பாணிகள்:

  • நவீன வீடுகளில் பாரம்பரிய மற்றும் நவீன பாணிகளின் கலவை (Minimalism) பிரபலமாக உள்ளது, இது வீட்டிற்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது...கனவு இல்லம் என்பது எல்லாருக்கும் அமையவேண்டும் வாழ்த்துக்கள் ..
  • என்றும் அன்புடன் சிவக்குமார் -வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் .-9944066681

திங்கள், 9 மார்ச், 2026

ஜஸ்ட் ரிலாக்ஸ் பிளீஸ்: இரண்டு விதமான மக்கள்.!

 ஜஸ்ட் ரிலாக்ஸ் பிளீஸ்:

இரண்டு விதமான மக்கள்.!
1. வாழ்க்கையில ரொம்ப நல்ல நிலை வர்ற வரைக்கும், ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒண்ணுதான்.
ஆனா, அதுக்காக ரொம்ப அல்பத்தனமாகவும் போக கூடாது.! கடன் வாங்கி, லோன் வாங்கி கார் வாங்க வேண்டியதில்லை தான்.!
அது நமக்கு அவசியமில்லாமல், பகட்டுக்காக இருக்கும் பட்சத்திலும், நமது ப்ரொபஷனல் இமேஜ் ( ப்ரேக் ஈவன் எல்லாம் தாண்டிய பிறகு), மற்றும் பணி & வியாபாரத்துக்கு அது முக்கியம் எனில்,தவறு இல்லை என்பது விஷயம் தெரிந்தவர்களின் கருத்து.!
2. சில விஷயங்களும் & நேரங்களும் மிக தரமானதை நமக்கு, சொந்தமாக்கும் போது மனது அதீத உற்சாகம் அடைகிறது.!
2000 ரூபாய்க்கி ஷர்ட் வாங்கி போடுறது, திடீர்னு எப்போவாவது பர்ஸ்ட் கிளாஸ் ஏ.சி.ல ட்ராவல் பண்றது (அதுக்கு ப்ளேன்லயே பயணம் செய்யலாம்.!). வருஷத்துக்கு ஒரு தடவை நல்ல 5 ஸ்டார் ஹோட்டல்ல, ரெண்டு நாள் தங்கிட்டு வர்றது , இந்த மாதிரி விஷயங்கள்...யோசிச்சுப் பார்த்தா..."அட்டர் பணம் வேஸ்ட்" என்று தான் தோன்றும். ஆனால், மனதளவில் ரொம்ப புத்துணர்ச்சியாக உணர முடியும்.!
காரணம்...அருமை நண்பர் ஒருவர், பணியின் காரணமாக இவை இலவசமாக கிடைத்த போதும், சொந்தமா காசை செலவு பண்ணியும், இதே மாதிரி செய்யக் கூடியவர்.
என்ன காரணம் என்று கேட்டேன். "மாமூ , உலகத்துல "தி பெஸ்ட்" என்று சொல்லப்படும், நல்ல விஷயங்களை நம மட்டும் அனுபவிச்சா போதுமா.? குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் செலவிடவேண்டும்.!
நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு, நமக்கு 60 வயசுக்கு மேல‌ தான் ஓய்வுவும், மனசும் வரும்.! ஆனா, அனுபவிக்க தெம்பு கிடைக்காது..!!
சம்பாதிக்கிறதுல,ஒரு பகுதிய நமக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே செலவழிக்கிறேன்...என்றார். யோசிச்சு பார்த்தா சரித்தான்.!

காலைல பப்பேட் பிரேக் பாஸ்ட்,உலகத்துலேயே பெஸ்ட் சாப்பாடு எல்லாம் கிடைக்கும். இப்படி வருஷத்துல ஒரு தடவை, தனியா போய் வருகிறார்.! என்னப்பா, நீயா இப்படி..! "நாளைக்கு நாம பெரிய ஆளு ஆயிட்டா, நமக்கு வர்ற கெஸ்ட்டுக்கு இந்த மாதிரி செலவழிக்கும்போது மலைப்பா இருக்காது பாரு" ங்கிறார். இதுவும் சரித்தான்.!
4. மேல சொன்ன லிஸ்ட் மாதிரி ஆளுங்க எல்லாம் நல்லாத் தான் இருக்கிறாங்க. படிப்பு, வேலை, சம்பளம் ( வருமானம்)...இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.!
உடுமலைப்பேட்டை அமராவதி நதி கரையோரம் ,காவேரிக்கரை ஓரமாகவோ, திருநகர் தாண்டியோ அல்லது ஈ.சி.ஆர். ரோடிலயோ, இந்திரா நகரிலோ, அவினாசி ரோட்டிலோ நிலம் வாங்கி வீடு கட்டி இருக்காங்க.!. நமக்கு.! ஹௌசிங் லோன் அப்ரூவ் பண்ணவே, நூறு தரம் பேங்க் யோசிக்குது.! கேட்டால், வேணாம்.!
நம்பிக்கை இருந்தால்,நாமளும் இந்த மாதிரி முன்னேறி அனுபவிக்கலாம் என்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருத்தர் சொல்றாரு.! பார்க்கலாம்.ம்ம்ம்.

என்றும் அன்புடன் சிவக்குமார்

சனி, 7 மார்ச், 2026

பொறியாளர் திருமதி .காயத்திரி ஸ்ரீ ராமகிருஷ்ணன் .. BE -ராவணாபுரம் ...ஊராட்சி செயலாளர்

 பொறியாளர் திருமதி .காயத்திரி ஸ்ரீ ராமகிருஷ்ணன் .. BE -ராவணாபுரம் ...ஊராட்சி செயலாளர் 


ஊராட்சி செயலாளர் என்பவர் கிராம ஊராட்சியின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் முக்கிய அதிகாரியாவார். ஊராட்சித் தலைவருக்கு உதவியாகச் செயல்பட்டு, குடிநீர், சாலை, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துதல், நிதிநிலை அறிக்கை தயாரித்தல் போன்ற பொறுப்புகளை வகிக்கிறார். 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டத்தின்படி, இவர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்குகிறார். 

ஊராட்சி செயலாளரின் முக்கிய பணிகள்:

நிர்வாகம்: ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்துதல், பதிவேடுகளைப் பராமரித்தல்.

மக்களசேவை: குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் பொது சுகாதாரம் பராமரிப்பு.

திட்டங்கள்: மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு சேர்த்தல்.

நிதி: வரி வசூலித்தல், ஊராட்சி நிதியை நிர்வகித்தல்.

பணி கண்காணிப்பு: ஊராட்சித் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுதல். 

தம்பி ஸ்ரீ ராமகிருஷ்ணன் அரசு கல்லூரியில் பணியாற்றி கொண்டிருக்கிறார் .தம்பி அவர்களும்  காயத்திரி க்கு முழு சுதந்திரத்துடன் மிக முக்கிய பொறுப்பில் பணியமர்த்தி சிறுவயதில் ஆளுமை மிக்க பெண்மணியாக வலம் வருகிறார் மகளிர் தின வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் சிவக்குமார் 

மகளிர் தினம் மார்ச் 8... திருமதி .தனலட்சுமி சிவக்குமார் ..மருத்துவத்துறை ..படிப்பு செவிலியர் மருந்தாளுனர் .

 மகளிர் தினம் மார்ச் 8...

திருமதி .தனலட்சுமி  சிவக்குமார் ..மருத்துவத்துறை ..படிப்பு செவிலியர் மருந்தாளுனர் .



தனலட்சுமி சிவக்குமார்  அவர்கள் பூர்விகம் உடுமலை எரசினம்பட்டி சினாம்பட்டி கோவையில் மருந்தகம் சொந்தமாக வைத்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் ..மருந்தகம் வைப்பதற்கு முன் தனியார் மருத்துவமனையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து நேரம் மாறுதல் காரணமாக மருந்தகம் வைத்து தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கிறார் ..தங்கம் போன்ற கணவர் ..வைர நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தங்கராஜ் தம்பி அவர்கள் தனது முழு முயற்சியால் தனலட்சுமி அவர்கள் மருத்துவ துறையில் மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க சேவை மனமபான்மையோடு பணியாற்றுவது மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் 

என்றும் அன்புடன் சிவக்குமார் 

வெள்ளி, 6 மார்ச், 2026

மகளிர் தினம் மார்ச் -8 . பொன்னாலம்மன் சோலை-திருமூர்த்தி மலை -உடுமலைப்பேட்டை திருமதி அனிதா ஜெயராம் -BA, B Ed .,

 மகளிர் தினம் மார்ச் -8 .

பொன்னாலம்மன் சோலை-திருமூர்த்தி மலை -உடுமலைப்பேட்டை 

திருமதி அனிதா ஜெயராம் -BA, B Ed .,

விவசாய பணி

கறவை மாடுகள் 






செம்மறி ஆடு வளர்ப்பு

என விவசாய பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருபவர்..ஜெயராம் மாப்பிளைக்கு வங்கி பணியில் முழு சுதந்திரத்துடன் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர் ..நம் சமுதாய சொந்தங்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆலோசனை வழங்கி  அடுத்த தலைமுறையை உருவாக்குபவர் ...

என்றும் அன்புடன் சிவக்குமார் 

திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை)

 

திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை)






)

இவர் விவசாய பண்ணை நிறுவன மேலாளர் ,விவசாய தொழில்முனைவோர் ஆவார்,விவசாய பண்ணையில் தென்னை மரங்கள் ,மற்றும் ஊடுபயிர்கள் அதற்கு தகந்த ஆலோசனைகள் வழங்கி நீர் மேலாண்மையை கற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து இலாபத்துடன் மேலாண்மை செய்பவர் .குறைந்த இடத்தில நேரம் கிடைக்கும் பொழுது ,காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு தொழிலை கற்று நிர்வாகம் செய்து ஆலோசனை வழங்குபவர் .கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் ,மேலும் இவர் தன் கணவரின் டைல்ஸ் காண்டிராக்ட் தொழிலுக்கு பக்க பலமாக இருந்து கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாக செயல்படுபவர்