உடுமலைப்பேட்டை .....
கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்றுபெயர் பெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரம் தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. உடுமலை நகரில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது.
தெற்கே லிங்கம் உள்ளது, இந்த நகரின் சிறப்பாகும். தளி பாளையப்பட்டு பொறுப்பில் இருந்து சித்தாண்டீஸ்வரர் கோயிலுக்கு பூமி தானமிடப்பட்டது, கோவிலை பராமரிப்பது முதலியவற்றை தெரிவிக்கும் செப்புபட்டையம் தளி பாளையப்பட்டு எத்தலப்ப நாயக்கரால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
கோயில்கடவு, கொழுமம், கணியூர், கடத்தூர், காரதொழுவு என பல்வேறு இடங்களில் மிகப் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது.
கிழக்கே தமிழனின் முதல் கடவுளான பழனி முருகன் எழுந்தருளியிருக்கும் பழனியும், மேற்கே ஆணைமலையில் உள்ள மாசாணியம்மணும் அமையப்பெற்றது.
1.
திண்டுக்கல் மற்றும் கோவை இடையே முக்கிய சாலையாக உள்ளது இந்த சாலை வர்த்தக ரீதியில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
2.
பழனியையும் பொள்ளாச்சியையும்
ரயில்வே பாதைமூலம் உடுமலை இணைக்கிறது.
3.
பழனி மற்றும் மதுரை, திருச்செந்தூர் ஆகிய வழித்தடத்திற்கு கேரளத்தவர்கள் உடுமலையை பிரதான பாதையாக பயன்படுத்துகின்றனர்.
4.
தமிழ்நாடு – கேரளா இணைக்கும் இடமாக உடுமலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
5.
பாலக்காடு – சென்னை ரயில் செல்லும் பாதையில் முக்கிய இடமாக உள்ளது நமது உடுமலைபேட்டை.
உடுமலைப்பேட்டை (உடுமலை)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும்.
இது antiguos காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு
பகுதியாக இருந்தது. இங்குள்ள ஐவர்மலை போன்ற இடங்களில்
சமணர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. 1960-களில் உடுமலை ஒரு
நகராட்சியாக மாறியது
நவீன கால வளர்ச்சி
·
நகராட்சி அந்தஸ்து: 1960-களில் உடுமலைப்பேட்டை நகராட்சியாக தரம்
உயர்த்தப்பட்டது.
·
விவசாயம் மற்றும் தொழில்: இப்பகுதி முற்காலத்தில் விவசாயம் மற்றும் பருத்தி நூற்பாலைகள் மூலம்
மிகப்பெரிய அளவில்
வளர்ச்சி பெற்றது.
·
காற்றாலைகள்: பாலக்காட்டுக் கهறுகளின் காற்று வளம் காரணமாக, இங்கு
காற்றாலைகள் மூலம்
மின்சாரம் தயாரிக்கும் தொழில்
மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை தந்துள்ளது.
உடுமலை
நீதிமன்றம்
சுற்றுவட்டரத்திலேயே
முதன்மையானது. குற்றம் என்றால் மேற்க்கே பாலக்காடு வரை நமது உடுமலை நீதிமன்றத்தையே நாடி வருவார்கள். இதனாலேயே, காலை 11.00 மணிக்கெல்லாம் அப்போதைய காலத்தில் நீதிமன்றம் தொடங்கிவிடும்.
புகழ்பெற்ற நபர்கள்
·
உடுமலை நாராயணகவி: தமிழ்த்திரைப்படப் பாடல்களின் தந்தை
என்று
போற்றப்படும் இவர்,
உடுமலைப்பேட்டை அருகில் உள்ள
பூவாளி
கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.
·
உடுமலைப் பேட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி:
வேம்பு சதுக்கம் தற்போது பழமையும், புதுமையும் சுமந்த கட்டிடங்களாக காட்சியளித்து
வருகின்றது, ஆனால் மிகவும் பழமையான வேம்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற மேடை அமைப்பு தற்போதும் இருந்து வருகிறது.
அதில் தான் பல ஆண்டுகளாக காலையில் பள்ளி ஆரம்பிக்கும்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பெருமக்களும்
கலந்து கொண்டு வழிபாட்டு கூட்டம் நடைபெற்று வந்தது. வகுப்பு அறையில் இருந்து வரிசையாக வேம்பு சதுக்கத்திற்கு வந்து நின்றவுடன் கொஞ்சம் சல சலப்பு பேச்சு சத்தம் வந்துகொண்டு
இருக்கும்.
நம்ம ஆசிரியர் யாரவது சும்மா மொத்துனா முதுகில் அடி விழும் சத்தம் கேட்டு பின்விழும் சத்தம் கேட்காமல் இருக்கும் அப்படியொரு அமைதிநிலவும். வேம்பு சதுக்கத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளை எண்ணி நமது கண்களை கண்ணீர் மறைக்கும்.
வேம்பு சதுக்கத்தில் உரையாற்றியவர்கள்:
·
நீதியரசர் திரு. மோகன்
·
ச.ராமலிங்கம்
·
முன்னால் சட்டத்துறை அமைச்சர் .திரு சாதிக் பாஷா
·
திரு.கே.எ .மதியழகன்.
·
திரு.கிருபானந்த வாரியார்.
பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் மரியாதைக்குரிய மறைந்த மேதை ர.கிருஷ்ணசாமி
கவுண்டர் பள்ளியை நடத்தி வந்த சிறப்பு எல்லாம் நமது மனதில் நிழலாடுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு தேர்வுநிலை அந்தஸ்து பெற்ற நகராட்சி உடுமலை மட்டுமே.
தாலூக்காக்களிலேயே அதிக கிராம ஊராட்சிகளைக் கொண்ட தாலூக்கா உடுமலை மட்டுமே.
கோவைக்கு அடுத்தபடியாக உடுமலை மின்பகிர்மான வட்டமே மிகப் பெரியது ஆகும்.
தென்னிந்தியாவில் சைனிக் எனும் இராணுவப் பயிற்சிப் பள்ளி உடுமலையில்(அமராவதி) மட்டுமே அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்த ஒரே ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உடுமலையில்(திருமூர்த்திநகர்) மட்டுமே உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் வனவளம் கொண்ட ஒரே பகுதி உடுமலை மட்டுமே..
அமராவதி,திருமூர்த்தி என இரு அணைக்கட்டுகளை அருகருகே பெற்றிருப்பதோடு செங்குளம்,ஒட்டுக்குளம் என நீர்வளம் கொண்டது உடுமலைப்பேட்டை.
சமமட்டக்கால்வாய் எனப்படும் காண்டூர் கால்வாய் மூலமாகவும்,அமராவதி ஆற்றின் மூலமும் அதிக பாசன வசதி பெறுவது உடுமலை பகுதி மட்டுமே..
தென்னைக்கு அடுத்தபடியாக பட்டுப்புழு வளர்ப்பிலும்,வெல்லம் தயாரிப்பிலும் சாதனை படைப்பது உடுமலைப் பகுதியே..
கரிசலில் பருத்தி அதிகம் விளைவதும் கொண்டைக்கடலை அதிகம் விளைவதும் உடுமலைப் பகுதியே..
கரும்பு ,வாழை அதிகம் விளைவதும் உடுமலைப் பகுதியில் மட்டுமே..
காற்று அதிகமாக வீசுவதும்,காற்றாலைகளுக்குட் பெயர் பெற்றதும் உடுமலைபேட்டையே.
திருப்பூர் மாவட்டத்தில் செழிப்பான விவசாயப்பகுதி உடுமலை மட்டுமே..
திருமூர்த்தி அருவி,தூவானம் அருவி,லக்கோம் அருவி (மறையூர்)எனப் பல அருவிகளைக் கொண்டது உடுமலை
நடுவீட்டில் மழை பொழியும் தொட்டிக்கட்டு வீடுகளைக்
கொண்டதும் உடுமலைப் பகுதி மட்டுமே.....
என்றும் அன்புடன் சிவக்குமார் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக