திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சொந்தங்களுக்கு வணக்கம்.

 சொந்தங்களுக்கு வணக்கம்.

கடந்த 16 வருடங்களாக உங்களுக்கெல்லாம் ஓரளவுக்கு அறிமுகமான என்றும் அன்புடன் சிவக்குமார் 

உங்களைப் போலவே கஷ்ட நஷ்டங்கள், துயரங்கள் மற்றும் சந்தோசங்கள் என்று வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து அவற்றினை தாக்குப்பிடித்து விழுந்தும் எழுந்தும் மேடேறி சமூகத்தில் இயங்கும் ஒரு சராசரி மனிதன் நான்.

இன்றளவும் எனது வாழ்க்கையில் சந்தித்த சில ஆச்சரியங்கள், முன்னேற்றங்கள் எதிர்பாராமல் கிடைத்த உதவிகள் ஆகியவற்றிற்கெல்லாம் விடைகள் இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

அவற்றில் சில அமானுஷ்ய நிகழ்வுகள். பிரமிப்பும், ஆச்சரியமும் மூட்டுபவை.

அவ்வாறான சம்பவங்களை இன்றளவும் உங்களுடன் எழுத்தில் பகிர்ந்து இருக்கிறேன்.

ஆனால் தற்செயலாக கிடைத்த சில அறிவுரைகள், பரிகாரங்கள் ஆகியவற்றை கடைப்பிடித்திருக்கிறேன். அவற்றினால் நிரம்பவும் பலன் அடைந்து இருக்கிறேன்.ஆனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.

எனக்கு கிடைத்த சில நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணம்.

நம்பிக்கை உள்ளவர்கள் தொடரலாம். நம்பாமல் நகைப்பவர்கள் சற்று விலகிச் செல்லலாம்.

எழுத்தில் பகிர்வதனால் இங்கே யார் ஒருவருக்கும் எந்த விதமான இடையூறும் இல்லை.

இது போன்ற விஷயங்களை நம்பிக்கையுடன் பின்பற்றும் சொந்தங்களுக்கு ஏதேனும் ஒரு துளி அளவு பலன் கிடைத்தாலும் எனக்கு சந்தோஷமே!...என்றும் அன்புடன் சிவக்குமார் .....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக