திங்கள், 5 மே, 2025

பண்ணைக்கிணறு அருகில் நவகண்டம் மற்றும் ஆநிரைகளுக்கான கற்சிலை

 பண்ணைக்கிணறு அருகில் நவகண்டம் மற்றும் ஆநிரைகளுக்கான கற்சிலை

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் உடுமலையைச் சுற்றி பல்வேறிடங்களில் இருக்கும் பழங்காலக் கற்சிலைகளைப் பார்த்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பண்ணைக்கிணறு அருகிலிருக்கும் பீக்கல்பட்டி பகுதியில் அப்பம்மா, அவ்வதாத்தா எனும் மூத்தோர் முன்னோர்களைக் குறிக்கும் நடுகற்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.


இது நாயக்க மன்னர்கள் காலத்தில் நிகழப்பட்ட நிகழ்த்துகளுக்காக வைக்கப்பட்ட புடைப்புச்சிற்பம். சுமார் நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட இச் சிற்பபத்தில் வீரன் ஒருவன் விலங்குகளைத் தாக்குவது போன்றும் இன்னொரு கையில் துப்பாக்கி ஏந்திய நிலையிலும் அருகில் பெண் உருவம் கொண்ட புடைப்புச்சிற்பமும் இருக்கின்றது. இதன் அடிப்பாகத்தில் முயல், நாய், மான் போன்ற புடைப்புச் சிற்பங்களும் இருக்கின்றது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறும்போது,
இன்னொரு கல்லில் நவகண்டம் எனப்படும் போருக்கு செல்லும்போதோ, அல்லது மன்னர்களுக்காகவோ, தலைவனுக்காகவோ ஒருவன் தன்னுடைய சிரத்தை, தானே அறுத்து கொள்ளும் நவகண்டம் சிலையும் இங்கே இருக்கிறது.
மார்கழி, தை மாதங்களில் பண்ணைக்கிணறு, முக்கூடு ஜல்லிபட்டி, புதுப்பாளையம் என அருக்pலிருக்கும் ஆநிரை மேய்க்கும் மக்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
பொதுவாக மாலைகோயில் என்பது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கூறப்படுவது என்னவென்றால் மெட்ராத்தி, கோட்டமங்கலம், எலையமுத்தூர், புதுப்பாளையம், பண்;ணைக்கிணறு, கரப்பாடி போன்ற பகுதிகளில் சமூக வாழ்வினை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சமூக அடுக்குகள் ஏழு, அல்லது ஒன்பது, அல்லது அதற்கு மேலான அடுக்குகளில் உயரமான கற்தூண்கள் காணப்படும். இதனைப் போரில் இறந்தவர்கள் நினைவாக வழிபடும் மாலகோயில் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஜோத்தம்பட்டி பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நடுகற்கள் வெட்ட வெளியில் இதே போன்று இருக்கின்றது. இதனை அந்த மக்கள் எல்லைக்கருப்பணசாமி,வேட்டைக்கருப்பணசாமி, எல்லைத் தெய்வங்கள் என வழிபடுகின்றனர். ஊரின் எல்லையில் பெரும் போர் நிகழ்ந்து அதனால் பெரும்பாலான மக்கள் இறந்து பட்டுள்ளதே இந்த செவி வழிச் செய்தியாக அறிந்து கொள்ளவேண்டும்.
அதே போன்று இந்த பீக்கல்பட்டி பகுதியிலும் இருபதிற்கும் மேற்பட்ட நடுகற்கள் நடப்பட்டு இதனைத் தம் முன்னோர் என்றும் போரில் இறந்தவர்கள் என்றும், மாலகோயில் என்றும் வழிபடுகின்றனர். மேலும் கால்நடைகளுக்காகத் தம் உயிரைத் துறந்தவர்கள் அல்லது உயிரை மீட்டவர்கள் என்றும் பொருள் கொள்ள முடிகிறது.
எப்படியிருப்பினும் பழங்கால நிகழ்வுகளையும், கால்நடை மேய்ச்சல் தொழிலையும், உயர்வாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதும், கால்நடைகளுக்காகத் தம் உயிரையும் கொடுத்து மீட்டுள்ளனர் என்பதையும் இதன் வழி அறிந்து கொள்ள முடிகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருட்செல்வன், சிவகுமார் ஆகியோர் களப்பணி மேற்கொண்டு ஆவணப்படுத்தினர்.
செய்தியை சிறப்பாகப் பதிவு செய்த அனைத்துப் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி
உடுமலை வரலாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக