திங்கள், 19 மே, 2025

சல்லிப்பட்டி வம்ச பூர்வீக வரலாறு:-

 சல்லிப்பட்டி வம்ச பூர்வீக வரலாறு:-

பொள்ளாச்சி தாலுகா சல்லிப்பட்டி பாளையக்காரரான எரம நாயக்கரின் வம்சாவழி வரலாறு எதுவென்றால்:-
முற்காலத்தில் யாதவ குலத்தில் தோன்றிய ஒன்பது கம்பளத்துள் தொட்டிய கம்பள சாதியில் பிறந்த குச்சில பொம்ம நாயக்கன் காலத்தில் வடக்கில் டில்லி பாதுஷ்ஷா சீமையில் இருந்த குறுச்சி எனப்பட்ட பாளையத்தை குச்சில பொம்ம நாயக்கர் ஆண்டு வந்தார். அப்போது கம்பளத்தார் பெண்னை மணந்துக்கொள்ள பாதுஷ்ஷா விரும்பி கம்பளத்தாரிடம் பெண் கேட்டு வந்தார் ஆனால் துலுக்கருக்கு பெண்னை திருமணம் செய்துவைக்க கூடாது என்ற வைராக்கியத்தல் இருந்த கம்பளத்தார்கள் இனி வடதேசத்தில் இருந்தால் பாதுகாப்பில்லை என்று உணர்ந்தனர் எனவே ஒரே இரவில் பிற தேசங்களுக்கு சென்று வேண்டும் என முடிவெடுத்து பெருங்கூட்டமாக கம்பளத்தார்கள் சென்றுக்கொண்டிருக்கும் ஆறு குறுக்கிட்டது. அச்சமயம் அந்த ஆற்றை கடக்க புங்க மரங்கள் ஒன்றாக சாய்ந்து பாலம் போல் அமைந்து ஆற்றை கடக்க உதவியது. எனவே புங்கமரத்தை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட கம்பளத்தார்கள் விஜயநகரம் வந்தடைந்தனர்.
புங்கன் மரம்
அக்காலத்தில் விஜயநகரபட்டிணத்து அரசராக இருந்த புக்க ராயர் கம்பளத்தார்கள் வந்த செய்தியை அறிந்து அவர்களை சந்தித்தார் கம்பளத்தார்களின் சாகசம் மற்றும் வீரம் முதலிய குணங்களை தெரிந்துக்கொண்ட ராயர் கம்பளத்தார்களை விஜயநகரத்திலேயே தங்க உத்தரவிட்டு அவர்களூக்கு தேவையான வசதிகளை செய்துக்கொண்டிருந்த சமயத்தில் விஜயநகரின் அரசரான கொல்லவார் குல புக்கராயர் சல்லிப்பட்டி பாளையத்தின் மூதாதையரான குச்சில பொம்ம நாயக்கரிடம் அவரின் வரலாறு குறித்து கேட்டு அறிந்துக்கொண்டதில் குச்சல பொம்மர் மிகுந்த கம்பீரமும் விரமும் உடையவர் என ராயர் அறிந்துக்கொண்டு அவரை தனது சமஸ்தானத்தில் பணி அமர்த்தினார். அதற்கு பிறகான நாட்களில் இராயரின் பட்டத்து குதிரையை டில்லி துலுக்கரின் ஆட்கள் கடத்தி சென்று விட்டனர். இதன் காரணமாக வருந்தமடைந்த ராயர் தனது மக்களை அழைத்து பட்டத்து குதிரையை யார் மீட்டு வருகிறாரரோ அவர்களுக்கு பெரும் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார் அப்போது குச்சில பொம்ம நாயக்கர் நான் குதிரையை மீட்டு வருகிறேன் என வெற்றிலையை வாங்கிக்கொண்டு வீர ஆவேசமாக கிளம்பி டில்லியை அடைந்து அங்கு சிறைப்பட்டிருந்த பட்டத்து குதிரையை மீட்டு இரவோடு இரவாக விஜயநகரம் வந்து சேர்ந்து குதிரையை ராயர் சமஸ்தானத்தில் ஒப்படைத்தார். இதனால் மன மகிழ்வு கொண்ட ராயர் குச்சல பொம்ம நாயக்கருக்கு சகல வெகுமதிகளும் கொடுத்து மேலும் ஒரு கிராமம் மற்றும் உம்பளிக்கையும் கொடுத்து கௌரவித்தார்.
பிறகாக விஜயநகரத்தில் ராயரை எதிர்த்து சில பளையக்காரர்கள் கிளர்ச்சி செய்தனர் அதை அடக்க ராயர் குச்சல பொம்ம நாயக்கரை அனுப்பினார். தனது பராக்கிரமத்தால் கிளர்சியாளர்களை ஒடுக்கி அவர்களை ராயர் சமஸ்தானத்திற்கு அடிபணிய வைத்தார் இதனால் சந்தோஷமடைந்த ராயர் குச்சில பொம்ம நாயக்கரை அழைத்து விஜயநகரத்தின் சில்லரை பாளையக்காரர்களுக்கெல்லாம் தலைவராக நியமித்தார் மேலும் அவருக்கு விருதுகளாக:-
காண்டா மணி
* பல்லாக்கு
* உபய சாமறம்
* சகசம்பு குடை
* பூசக்கிர குடை
* பசவசகறடால்
* சங்குசக்கிர டால்
* சந்திரகாவி டால்
* மகரடால்
* கருட டால்
* அனுமன் டால்
* பறாங்குசடால்
* பஞ்சவர்ண டால்
* வெள்ளபக்ற டால்
* ஆனைமேலம்பாறி
* ரணபாஷிங்கம்
* கமட்டசறம்
* முத்துச் சறம்
* வீரசங்கிலி
* பாறினிகளம்
* சாமதொரோஹா வெண்டயம்
* சோமத்தலை
* வீரகண்டாமணி
இவ்வாறு பல விருதுகள் கொடுத்து பாளையக்காரர்களுக்கு எல்லாம் முதன்மைகாரன் என்னும் கிறீட்டாதிபதி பதவியும் கொடுத்து
ஆனை மேல் அம்பாரி
* ஆணைமேல் பேரிக்கை
* ஒட்டிகை மேல் நகாறு
* எறுத்து மேல் தம்பட்டம்
* நவபத்து சங்கீத வாத்தியங்கள்
* ஆணை மேல் அம்பாரி
* குதிரை
முதலான பரிசுகளும் தந்து யானை மேல் அமரவைத்து நகர் வளம் வரச்செய்து பாளையக்கார்களின் முதன்மை காரராக பட்டம் கட்டினார். அந்த நாள் முதல் வட பிரதேசத்து சில்லரை பாளையங்களுக்கெல்லாம் முதன்மைகாரராக சகல அதிகாரங்களுடன் விளங்கினார்.
சல்லிப்பட்டி பாளையம் உருவான வரலாறு:-
குச்சில பொம்ம நாயக்கரின் மகன் பரப்பேதாதுல நாயக்கர் இவருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர் அவர்கள்:-
1, எத்துல முத்தே நாயக்கர்
2, எரம நாயக்கர்
இவர்கள் ராயர் சமஸ்தானத்தில் அதிகாரங்கள் பெற்றவர்களாக இருந்த காலத்தில் ராயர் அவர்கள் தென்னாட்டிற்கு கம்பளத்தார்களை அனுப்பி அங்கு அவர்களுக்கு பாளையங்கள் கொடுத்து பாளையக்காரர்களாக ஆக்கினார். அப்போது தான் இளையவனாகிய எரம நாயக்கருக்கு நல்லுறுக்க நாட்டில் அக்கா தங்கச்சி மலைக்கு மேற்கு குடமறுக்கு சீத்தகல்லுக்கு கிழக்கு தளவாயி பேட்டை கரைக்கு தெற்கு முதுவர் சீமை எல்லை எடமலைக்கு வடக்கு இவ்விடங்களுக்கு உட்பட்ட மற்றும் காளைமலைக்கு உட்பட்ட 11காத தூரத்திற்கு உட்பட்ட பாளையத்திற்கு எரம நாயக்கரை பளையக்காரராக ராயர் நியமித்து உத்தரவிட்டார். ராயரின் ஆணைப்படி எரம நாயக்கர் நல்லுறுக்கு நாட்டில் உள்ள அழகாபுரிக்கு வந்து சேர்ந்தார். ராயர் கூறியபடியே தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் குளங்கள் வெட்டி, சல்லிப்பட்டி என்னும் ஊரை உருவாக்கி அவ்வூருக்கு உட்பட்ட 14 கிராமங்களுக்கும் பாளையக்காரராக சகல மரியாதைகள் மற்றும் விருதுகளுடன் முடிசூட்டிக்கொண்டார்.
அந்த நாள் முதல் சாலிவாகன சகாப்தம் 1268 முதல் 1723 வரை 455 வருடங்களாக எரம நாயக்கர் வம்சம் சல்லிப்பட்டி பாளையத்தை ஆண்டுவந்தனர்
சல்லிப்பட்டி பாளையத்தின் வம்சாவழிகள்:-
1, எரம நாயக்கர் - (30 வருடங்கள் பட்டமிருந்தார்)
2, சம்பால நாயக்கர் - (24 வருடங்கள் பட்டமிருந்தார்)
3, சகசம்பால நாயக்கர் - (18 வருடங்கள் பட்டமிருந்தார்)
4, மயிலப்ப நாயக்கர் - (14 வருடங்கள் பட்டமிருந்தார்)
5, குறிச்சி நாயக்கர் - (32 வருடங்கள் பட்டமிருந்தார்)
6, கதிர் நாயக்கர் - (27 வருடங்கள் பட்டமிருந்தார்)
7, கணகாண்டி நாயக்கர் - (19 வருடங்கள் பட்டமிருந்தார்)
8, ரணவீராண்டி நாயக்கர் - (22 வருடங்கள் பட்டமிருந்தார்)
9, அமனாண்டி நாயக்கர் - (... வருடங்கள் பட்டமிருந்தார்)
10, சல்லி வீரப்ப நாயக்கர் - (26 வருடங்கள் பட்டமிருந்தார்)
11, கும்மன நாயக்கர் - (... வருடங்கள் பட்டமிருந்தார்)
12, பெரியமலையாண்டி நாயக்கர் - (9 வருடங்கள் பட்டமிருந்தார்)
13, ராமலிங்கமலையாண்டி நாயக்கர் - (24 வருடங்கள் பட்டமிருந்தார்)
14, சின்னமலையாண்டி நாயக்கர் - (15 வருடங்கள் பட்டமிருந்தார்)
15, அமணலிங்கம நாயக்கர் - (26 வருடங்கள் பட்டமிருந்தார்)
16, லிங்காண்டி நாயக்கர் - (12 வருடங்கள் பட்டமிருந்தார்)
17, நல்லமுத்து நாயக்கர் - (29 வருடங்கள் பட்டமிருந்தார்)
18, அமணாண்டி நாயக்கர் - (19 வருடங்கள் பட்டமிருந்தார்)
19, வேங்கடபதி நாயக்கர் - (40 வருடங்கள் பட்டமிருந்தார்)
20, ரங்கப்ப நாயக்கர் - (30 வருடங்கள் பட்டமிருந்தார்)
21, பெரிய நல்லமுத்து நாயக்கர் - (10 வருடங்கள் பட்டமிருந்தார்)
சல்லிப்பட்டி பாளையக்காரர்கள் பற்றிய குறிப்புகள்:-
முதலாம் பட்டக்காரரான எரம நாயக்கர் காலத்தில் பாலாற்றின் கரையின் தெற்கு மலைமேல் கதரனாய பொருமாள் எழுந்தருளி இருப்பதை அறிந்து பங்குனி மாதம் மலையை சுற்றி தேரோட்டம் நடத்தினார். மேலும் சல்லிப்பட்டி கிராம தேவதை கோவில்களுக்கு மானியங்கள் வழங்கினார். அவர் வாழ்ந்த காலத்தில் ஊர் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினார்.
இரண்டாம் பட்டக்காரர் சாம்பல நாயக்கர் காலம் முதல் பதினெட்டாம் தலைமுறையான அமணாண்டி நாயக்கர் காலம் வரை அதிகாரத்துடனும் ஆயுதங்களுடனும் ஆளும் சமஸ்தான அரசர்களுக்கு கட்டுப்பட்டு வரிப்பணத்துடன் ஆண்டுக்கு ஒரு யானை விதம் வழங்கி வந்துள்ளனர். ஆளும் அரசர்களுக்கு அன்புக்கு பாத்திரமாக இருந்து சல்லிப்பட்டி பாளையத்தை ஆண்டு வந்துள்ளனர்.
ஐதர் அலி
பத்தொன்பதாம் பட்டமான வேங்கடபதி காலத்தில் மைசூர் அரசன் ஜதர் அலி அரண்மனை ஆணைப்படி 1000 மைசூர் வீரர்கள் 500 சல்லிப்பட்டி வீரர்களுடன் பாலக்காட்டு ராஜாவின் மீது வேங்கடபதி போர் தொடுத்தார் போரில் பாலக்காட்டு படைகளை வீழ்த்தி, அரண்மனையையும் கைப்பற்றி வெற்றிப்பெற்று வீரமரணம் அடைந்தார்.
இருபதாம் பட்டம் ரங்கப்ப நாயக்கர் காலத்தில் அப்போதைய மைசூர் அரசன் திப்பு சுல்தான் அரண்மனைக்கு 9010 வரி பணம் ஆண்டு 1க்கு செலுத்தி வந்து 14 கிராமங்களை கொண்ட சல்லிப்பட்டியை ஆண்டுவந்தார்.
21ம் பட்டமான பெரிய நல்லமுத்து நாயக்கர் ஆங்கிலேய சர்காருக்கு வரி செலுத்தாமல் போராடி வந்தார். பின்பு நல்லமுத்து நாயக்கர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்தவரை ஆங்கிலேய அரசு பிடித்து குற்றவாளியாக அறிவித்து அவரை கொலை செய்தது. பின்பாக நல்லமுத்து நாயக்கரின் மகன் மற்றும் அவர் சார்ந்த மக்களை திண்டுக்கல்லில் சிறைவைத்தது. அவருடைய மகனுக்கு மட்டும் மாதம் 1விறகம் என்ற அளவில் பணம் தந்து உதவியது.

வெள்ளி, 16 மே, 2025

உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன் ( போட்டோ டிஜிட்டல் ராஜேந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..

 உடுமலைப்பேட்டை ..வெனசபட்டி ஆரம்பப்பள்ளி சுவேதா ராஜேந்திரன் ( போட்டோ டிஜிட்டல் ராஜேந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..






ந்திரன் )-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை ..


5 -வகுப்பு குழந்தை செல்வம்  சுவேதா விஞ்ஞானியிடம் கேட்ட கேள்வி ...

முன்னேறிய நாடுகளில் இந்திய உலக அளவில் 6 வது இடத்தில் இருக்கிறது  என்று பேசினீர்கள் ..நமது நாட்டில் ஏழைகள் இன்னும் இருக்கிறார்களே என்று கேட்டார் ..

-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை  பதில் ...

ஏழைகள் இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா வாசிங்டன் லும் இருக்கிறார்கள் ..வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறார்கள் ..அங்கு ஏழைகள் இருப்பது தெரியாது ..நமது நாட்டில் வெளிப்படையாக தெரிகிறது பதில் அளித்தார்

கேள்வி 2...

5 -வகுப்பு குழந்தை செல்வம்  சுவேதா ..நமது நாட்டில் பிளாஸ்டிக் கலாச்சாரத்தை எப்படி மட்டுப்படுத்தவது ..அதற்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா ?


-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை  பதில் ...

அறிவியல் திட்டங்கள் இருக்கிறது ..இங்கே  என் மேடை முன்னே வாட்டர் பாட்டில் இருக்கிறது ..தவறுதான் ..நம் வசிக்கும் இடங்கள் ..பள்ளி ..கல்லூரி ..ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தவேண்டும் ..உங்களை போன்ற கேள்விகள் ...நடைமுறை படத்த ஆவணசெய்வோம் என்றார் ..கேள்வி கேட்ட சுவேதா என் பாராட்டுக்கள் என்றார் ..

அறிவியலிலும் ..சுற்றுப்புற சூழலிலும் நல்வழி காட்டும் வென்சபட்டி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு நன்றிகள் ..உடுமலை கலிலியோ  அறிவியல் கழகத்திற்கும் நன்றிகள் ..

அன்று அறிவியல் விஞ்ஞானியிடம் இயல்பாக கேள்வி கேட்டு பதில் தெரிந்த கொண்டு குட்டி குழந்தை தான் இன்று பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற அழகான குழந்தைச்செல்வம் சுவேதா ராஜேந்திரன் பாப்பாவிற்கு கல்வியிலும் .பொருளாதாரத்திலும் உயர வாழ்த்துக்களும் என் அன்பு நன்றிகளும் .....



குறிப்பு : கம்பள விருட்சம் அறக்கட்டளை என்ன செய்கிறது என்று கேள்வி  கேட்ட மேன்மக்களுக்கு ...கம்பள சமுதாயம் தாண்டி பொருளாதாரத்திலும் ..கல்வியிலும் ..பொது தளத்தில் பயணிக்கிறது தற்பொழுது ...நம் கோவை திருப்பூர் மாவட்ட கம்பள சமுதாய மக்களை இப்படி பயணிக்க வைக்கிறது ...இந்த அறிவியல் நிகழ்வில் நம் சொந்தம் என்று தெரியாது ..இதை செய்தியாக பதிவிட்ட பின் தான் தம்பி ராஜேந்திரன் இந்த பாப்பா யாருனு தெரியுமா அண்ணா என்றார் .தெரியாது இந்த பாப்பா தான் நிகழ்ச்சிக்கு வந்ததில் மிக தைரியமாக தனது கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றார் .அப்படி என்றேன் ..இந்த பாப்பா தான் என் பொண்ணு நா என்றார் ..

குஜ்ஜ பொம்மு ராக்ஸ் சுவேதா ராஜேந்திரன் ................
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


செவ்வாய், 13 மே, 2025

செல்வசென்ராயப்பெருமாள் கோயில் சின்ன நெகமத்தில்


 செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.

கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1 கல்வெட்டின் காலம்

கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம்” எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கல்வெட்டு

கல்வெட்டு-மூன்று பகுதிகளாக

2 நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்

கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

3 முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்

மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர் (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

4 வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி

ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.

5 பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

1. பாளையக்காரர் கொண்டம நாயக்கர்

2 அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்

3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.

6 கோயிலின் பழமை

திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

7 சில செய்திகள்

· கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.

· இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

· கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் ”பிளாக் பர்ன்” (Black Burn) மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.

· சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 📚📚📚✍️✍️✍️✍️

ஞாயிறு, 11 மே, 2025

பெரியகோட்டை ஆவுல்குட்டை தம்பி ஜோதிமுத்து காளான் வளர்ப்பில்

 நேற்று உழவர் சந்தைக்கு மூன்று  நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம் நேற்று உடுமலை பெரியகோட்டை ஆவுல்குட்டை தம்பி ஜோதிமுத்து  சந்தித்தேன் ..புதிதாக வீட்டுமுறை காளான் வளர்ப்பில் ஆர்வத்துடன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் சொல்லி கொண்டுருந்தார் ..தனது ஆர்வத்தை அப்பொழுதே வாழ்த்துக்கள் சொன்னேன் ..இன்று தம்பியை உடுமலையில் உழவர் சந்தையில் தனது மதிப்புக்கூட்டு பொருளான காளான் விற்பனை செய்வதை பார்த்தது மிக்க மகிழ்ச்சி ..தம்பியிடம் பேசியபோது  இதன் நன்மைகளை விரிவாக எடுத்துரைத்தார் ..

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..

காளான்கள் உணவுகள் மற்றும் பக்க உணவுகளுக்கு சுவையைச் சேர்ப்பதற்காக அறியப்படுகின்றன. ஆனால், இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது தெரியுமா.?

உண்மையில், அவை பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று கூறப்படுகின்றன.

காளான் குறைந்த கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். அவை எந்த உணவுமுறைக்கும் சிறந்த கூடுதலாகும்

 எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

காளான்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பொருட்களையும் செயல்படுத்துகிறது, இது கட்டி உயிரணுக்களின் வளர்ச்சி உட்பட தொற்று மற்றும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் திறனை மேம்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

 பொட்டாசியம் ஒரு தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும், இது உங்கள் உடல் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. காளான்கள் இந்த கனிமத்தில் நிறைந்திருப்பதால், அவை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். அவை இதய நோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கலாம்.

 வைட்டமின் டி சப்ளை

வைட்டமின் டி 2, வைட்டமின் டி வகை, உங்கள் எலும்புகளை வலுவாகவும், தசைகள் சரியாகவும் செயல்பட வைக்கிறது. நமது வைட்டமின் D இன் பெரும்பாலானவை விலங்குகள் சார்ந்த மூலங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் நல்ல பழைய சூரிய ஒளியில் இருந்து வருகிறது. காளான்களில் எர்கோஸ்டெரால் உள்ளது, இது புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது வைட்டமின் டி ஆக மாறும்.

மூளை ஆரோக்கியம்

காளான்களின் ஊட்டச்சத்து மதிப்பு உங்கள் மூளையை லேசான அறிவாற்றல் குறைபாட்டிலிருந்து பாதுகாக்க உதவும். பாலிபினால்கள் மற்றும் சில ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த காளான்கள் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதய பிரியர்களுக்கு காளான் ஒரு வரப்பிரசாதம். அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான கலவைகள் உங்கள் இரத்த நாளங்களில் பிளேக் உருவாவதைத் தடுக்க உதவும் . கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவாக இருக்கும் போது இறைச்சிக்கு பதிலாக சுவையான, குறைந்த சோடியம் காளான்களை மாற்றவும்.

குடல் ஆரோக்கியம் மேம்படும்

உங்கள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை சமநிலைப்படுத்தவும், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டவும் தேவையான பொருட்கள் காளான்களில் உள்ளன. உங்கள் செரிமான அமைப்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்ணும் சத்தான உணவு உங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்த காளான்கள் உதவும்.

எடை இழப்புக்கு உதவும்


காளான் நிறைந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் இணைந்து எடையைக் குறைக்க உதவும். காளான்களின் சுவையானது உங்களின் கூடுதல் உப்பு தேவையை குறைக்கலாம், இது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதன் நன்மைகளை அழகாக எடுத்துரைத்தது மிக்க மகிழ்ச்சி .தம்பிக்கு காளான் விற்பனையில் முன்னேற வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு மனநிறைவோடு இல்லம் திரும்பினேன் .

தொடர்பு எண் :ஜோதிமுத்து .9787949226..தேவைப்படுவோர் வாங்கி பயன்பெறலாம் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681.