#உடுமலை அருகே பாளையத்துக்காரர்களின் தளபதிகள் வழிபட்ட தாய்த்தெய்வம்
ஞாயிறு, 17 நவம்பர், 2024
#உடுமலை அருகே பாளையத்துக்காரர்களின் தளபதிகள் வழிபட்ட தாய்த்தெய்வம்
சனி, 16 நவம்பர், 2024
1. கோட்டமங்கலம். அக்கு, தார்ச் சாலையிலிருந்து ஒரு கல் தொலைவில் புன்செய் நிலத்திடையே காணப்பட்டவை இரு கல்திட்டைகள். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒரு வகை. ஆங்கிலத்தில் “DOLMEN“ எனக் குறிப்பிடுவர். பெரும் பெரும் பலகைக் கற்களை வீடு போல இணைத்த ஓர் அமைப்பு. செவ்வக வடிவிலானது. முன்புறம் சிறிய அளவிலான இரண்டு பலகைக் கற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இடையில் வீட்டின் நுழைவாயில் போன்று இடைவெளி. நேர் பின்புறம் ஒரு ஒற்றைக் கல் பலகை. இவ்விரண்டு அமைப்பும் செவ்வகத்தின் அகலப் பக்கங்கள். செவ்வகத்தின் நீளப்பக்கங்கள் இரண்டிலும் இரண்டு நீளமான பெரிய பலகைக் கற்கள். இவற்றின் மேலே கூரைப்பகுதியில், ஆமையின் முதுகில் காணப்படும் ஓடு போன்றதொரு மிகப்பெரிய பலகைக் கல். செவ்வகப் பரப்பை முழுதும் மூடுகின்ற வகையில் மூடுகல். உள்ளே காணப்படும் அறை போன்ற இடம், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, இறந்தவர் எலும்புகள், பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வைத்து வழிபடும் இடம். இக்கல்திட்டையை அடுத்து அருகிலேயே மற்றொரு கல்திட்டை இருந்தது. இதில், மூடுபலகைக் கல்லில் ஒரு பெரிய வட்டமான துளை காணப்படுகிறது.
2.மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை ஆய்வு செய்யப்பட்டது.மடத்துக்குளம் அருகே, கிழக்கு நீலம்பூர் விளை நிலம் உள்ள பகுதியில் மிகப்பழமையான கல்திட்டை உள்ளது. இது குறித்து, தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடுமலை ஜிவிஜி கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்ந்த செல்வராஜ், வளவன், அருள் செல்வன், ராபின் ஆகியோர் இதை ஆய்வு செய்தனர்இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்கள் நினைவாக கல்திட்டை அமைப்பது வழக்கம். சங்ககாலத்திற்கு முன்பே, பாலக்காட்டு கணவாய் பகுதியில் நீர் வழித்தடத்தில் வர்த்தகம் நடந்துள்ளது.இதில் ஈடுபடும் வணிகர்கள், தரை வழியில் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வடபூதி நத்தம், கண்ணாடிப்புத்துார், ஐவர்மலை, சின்ன கலையம்புத்துார் வழியாக பாதை இருந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயணித்த வணிகர்கள் அல்லது இனக்குழுக்களை சார்ந்தவர்கள் போர் காரணமாகவோ அல்லது இதர தாக்குதல் காரணமாகவோ இந்த இடத்தில் இறந்திருக்கலாம். அவர்கள் நினைவாக இந்த கல்திட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தடி உயரம், மூன்று அடி அகலமுள்ள பலகை வடிவ கற்களை பயன்படுத்தி, சதுர வடிவில் அறை போன்ற கட்டமைப்பு உருவாக்கியுள்ளனர். இதே அளவுள்ள கற்களை மேற்கூரையாக அமைத்துள்ளனர். இதுஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.இவ்வாறு, கூறினர்.நமது சொந்தங்கள் மாநில ,மத்திய கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கும்
நமது சொந்தங்கள் மாநில ,மத்திய கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கும் சொந்தங்கள் .நமது வளரும் சொந்தங்களை உறுப்பினராக்கி பொறுப்புகளில் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று கூறமுடியுமா ? ஆய்வு தகவலுக்கு வேண்டும்
1.முத்துசாமி .ம தி மு க ..பெதவை ,உடுமலைப்பேட்டை
2.பரமேஸ்வரி ,அ தி மு க ..ஒன்றிய கவுன்சிலர் சித்தார்பட்டி
3. அரண்மனைசுப்பு@ V.சுப்புராஜ்..அ தி மு க .தேனி மாவட்டம்,போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதி,பொதுக்குழு உறுப்பினர்
4 முருகன் மல்லையன் . தர்மலிங்கபுரம் ,பாஜக முன்னால் இராணுவப்பிரிவு தேனி மாவட்டச்செயலாளர்.(Rtd) INDIAN NAVY தேனி.
5.கொம்பேறிபட்டி ரெங்கமலை அவர்கள் ,
காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர்.....
6.அய்யலுகிருஷ்ணா சித்துவார்பட்டி,
வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பாளர்
7. D.வேல்முருகன் பந்துவார்பட்டி அஇஅதிமுக தேனி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு மாவட்டத்தலைவர்.
8. S.ரமேஷ்பாபு தேனி அஇஅதிமுக தேனி மேற்கு மாவட்டச்செயலாளர்
(இணை)
9.P.ராஜபாண்டியன்
அதிமுக IT விங்க் ஒன்றியசெயலாளர்
வைகை சீரங்கபுரம்,ஆண்டிபட்டி
10.மரிக்குண்டு திரு.செல்வம் அஇஅதிமுக ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய பொருளாளர் ,ஆண்டிபட்டி
11.உப்புக்கோட்டை*திரு.ராமகிருஷ்ணன் BA.BEd.*
மதிமுக போடி ஒன்றியகழக செயலாளர்.தேனி
பெரியகுளம் ஒன்றிய செயலாளர்
12. T. வெள்ளைச்சாமி அ தி மு க 16 A.வாடிப்பட்டி
13. S.லிங்கம்மாள் அ தி மு க ஒன்றிய செயலாளர்
தர்மலிங்கபுரம்
P. வேலாம்பட்டி K.செல்வராஜ் நாயக்கர் BA
மதிமுக வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர்
14.பெரியகோட்டை J.நாகராஜன்.
A.D.M.K.
திருப்பூர் மேற்கு மாவட்ட
அண்ணா தொழிற்சங்க துணை செயளாலர்
15.பெரிய கோட்டை N.சாவித்திரிநாகராஜ் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய இணை செயலாளர்
16.M.தினேஷ் குமார்
பா.ஜ.க- திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் - O.B.C. அணி
வெள்ளி, 15 நவம்பர், 2024
கம்பளத்தார் வாழ்வியல் ... காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை.....
கம்பளத்தார் வாழ்வியல் ...
வியாழன், 14 நவம்பர், 2024
udumalai varalaru tourisum parts
.1 கோட்டமங்கலம் கல்திட்டை
2. நீலம்பூர் கல்திட்டை
3. பெரியபாப்பனூத்து கல்திட்டை
4. கொங்கல் நகரம் நெடுங்கல்
5. சோமவாரப்பட்டி கண்டியம்மபன் கோயில்
6. கல்லாபுரம் அன்னகத்துப் பாலம்
7. மதகடிபுதூர் பாறை ஓவியங்கள்
8. கொழுமம் வீரசோழீஸ்வரர் கோயில்
9. கடத்தூர் மருதீசர் கோயில்
10. சோழமாதேவி குங்குமவள்ளி கோயில்
11. கணியூர் பாறைக் கோயில்
12. காரத்தொழுவு சிவன் கோயில்
13. கண்ணாடிப்புத்தூர் சிவன் கோயில்
14. கொமரலிங்கம் கரி வரதராஜ பெருமாள் கோயில்
15. காண்டூர் கால்வாய் சுத்துக்கோயில்,
16. திணைக்குளம் ஆண்ட்ரோ கேதீஸ் தூக்கிலிட்ட இடம்
17. பண்ணைக்கிணறு மால கோயில்
18. எலையமுத்தூர் மாலகோயில்
19. கோட்டமங்கலம் மாலகோயில்
20. மெட்ராத்தி மால கோயில்
21. மெட்ராத்தி கல்வட்டம்
22. கெடிமேடு புதிர்நிலைக்கற்கள்
23. உடுமலை நாராயணகவி மணிமண்டபம்
24. திருவள்ளுவர் திருக்கோட்டம்
25. உடுமலை தாகூர் பில்டிங்
26. உடுமலையின் பெரிய கடை
27. உடுமலை திருப்பதி
28. தளி எத்தலப்பர் சிலை –நகராட்சி
29. அமராவதி அணை
30. முதலைப்பண்ணை
31. திருமூர்த்தி வீழ்ச்சி
32. அனுசுயாதேவி கோயில்
33. திருமூர்த்தி அணை
34. அயிரை மலை (எ) ஐவர் மலை
35. கொழுமம் (ரெட்டையம்பாடி) கற்திட்டை
36. பொண்ணிகாட்டுதுறை
புதன், 13 நவம்பர், 2024
High Net Worth Individuals (HNIs)
High Net Worth Individuals (HNIs) are individuals with a high net worth, typically above a certain threshold, such as ₹2 crores in India. They are distinguished from other retail segments based on their net wealth, assets, and investible surplus.
Characteristics of HNIs:
1. High investible surplus: ₹2 crores or more in India.
2. Significant net worth: ₹25 lacs to ₹2 crores in India.
3. Ultra High Net Worth Individuals: net worth of $30 million or more.
Growth of HNIs in India:
1. India recorded the highest growth in Ultra High Net Worth Individuals among BRICS nations.
2. The number of Ultra HNIs in India reached 7,850.
3. India has the highest number of women millionaires, with total fortunes of $95 million.
Factors contributing to the growth of HNIs in India:
1. Positive trends in the stock market.
2. Growth in real estate.
3. Increase in gross national income.
4. Consumption and capitalization.
Wealth management services for HNIs:
1. Private banks.
2. Mutual funds.
3. Investment banks.
4. Commercial banks.
5. Insurance companies.
6. Brokerages.
Parameters for HNIs to manage their wealth portfolio:
1. Investments.
2. Capital protection.
3. Tax planning.
4. Credit planning.
5. Inheritance planning.
VK Sivakumar
Home Loan Consultant
9944066681
(Tirupur, Coimbatore, Pollachi, Udamalpet)
நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி
நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி வேதனை
''ஆயிரக்கணக்கான மக்கள் துணிச்சலுடன் போராடி உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தனர். இந்த வரலாறு குறித்து நாம் இன்னும் படிக்கவில்லை,'' என கவர்னர் ரவி கூறினார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: 2021 ல் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலை நான் கேட்டேன். அதற்கு தமிழக அரசு 30 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது. நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.
ஆங்கிலேயர்கள் நமது சுயகவுரவத்தை அழித்தனர். பிரிட்டனில் பாதிரியாராக இருந்த ஜேம்ஸ் மில் என்பவரை அழைத்து இந்தியாவின் வரலாற்றை ஆங்கிலேயர்கள் எழுத வைத்தனர். அவர் இந்தியாவிற்கு வராமலேயே, ' இந்தியர்கள் அனைவரும் கோழைகள். அடிமைகளாக இருக்க தகுதி பெற்றவர்கள். ஆண்மையற்றவர்கள்' , ' ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள்' என புத்தகம் எழுதினார் 🥰செய்திக்கதிர் 📗✒️🎙️📡
இந்த புத்தகம் தான் ஆங்கிலேயர்களின் பாட புத்தகமாக இருந்தது. இந்தியாவில் பணிபுரிய விரும்பிய ஆங்கிலேயர்கள் இந்த புத்தகத்தை படித்தனர். படித்ததை வைத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து பணியாற்றினர். ஆங்கிலேயர்கள் நடத்திய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த புத்தகம் தான் பயன்படுத்தப்பட்டது.
இந்தியர்கள் யார் என்ற சுய கவுரவத்தை அழிக்க சதி செய்து ஆங்கிலேயர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். பல தலைமுறைகள் கடந்தும், மக்கள் இதனை நம்ப துவங்கினர். இதை படித்தே பட்டம் பெற்று ஆங்கிலேயர்கள், கிழக்கு இந்திய நிறுவனங்களில் பணியாற்றினர். நமது கல்வி முறை, தொழிலை அவர்கள் அழித்ததால், நமது மக்கள் கிழக்கு இந்திய கம்பெனியை சார்ந்து இருந்தனர். இதனால், வேலைக்கு செல்ல நமது மக்கள் இந்த பாடத்தையே படித்தனர்.இன்றும் நாம் அதில் இருந்து விடுபடவில்லை. நமது மண்ணில் ஆங்கிலேயர்களை சிறந்தவர்களாக பார்க்க வைக்கப்பட்டனர். பல்கலைகள், கல்லூரிகளில் எம்.ஏ., மற்றும் பி.ஏ., பட்டங்களில் கலாசாரம், வரலாறு, அரசியல் அறிவியல் பாடதிட்டத்தில் ஆங்கிலேயர்களை பற்றியும், அவர்களை புகழ்ந்தும் கற்பிக்கப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி கற்பிக்கப்படவில்லை.
20ம் நூற்றாண்டில் திராவிட தலைவர்களை பற்றி சொல்லப்படுகிறது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இல்லை. இன்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என நமது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 'நாம் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள். அனைத்தும் நமது தவறு. நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் நல்லதை செய்தனர்' என சொல்லிக் கொடுக்கின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி தங்களது உயிரை தியாகம் செய்தனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் இணைந்தனர்.
19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் 10 லட்சம் மக்களை அடிமைகளாக மாற்றி பர்மா, மலேஷியா, இலங்கை , பிஜி, மொரிஷியசுக்கு அழைத்துச் சென்று தங்களது நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வைத்தனர். இது பற்றி பாடப்புத்தகத்தில் இல்லை. ஆனால், 'ஆங்கிலேயர்கள் வந்த 19ம் நூற்றாண்டு சிறந்த காலம். அவர்கள் தான் சமூக நீதியை கற்றுக் கொடுப்பதாக' இன்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.
நமது கதாநாயகர்கள், தியாகிகள், உயிர் தியாகம் செய்தவர்களை மறந்தால் அந்த சமூகத்திற்கு எதிர்காலம் கிடையாது. அந்த சமூகம் நன்றியற்ற சமுதாயம் ஆகும். அந்த நன்றியற்ற சமூகம், நன்றியற்ற மக்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது.
நமது மண்ணில் ஆயிரக்கணக்கானோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களை கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துள்ளனர். நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பது குறித்து நாம் இன்னும் படிக்க வேண்டி உள்ளது. உண்ணாவிரத போராட்டம் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்ததாக கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
💖அப்பா❤️
*அம்மா, கொஞ்சம் தாகத்துக்கு ஜலம் குடிச்சுக்கோ, வெய்யில் வேற இன்னிக்கு அதிகமா இருக்கு என்று தனது 75 வயது அம்மாவை அக்கறையோடு கேட்டான் ரகுராமன்.*
அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு போயிடலாம் என்றாள் அம்மா.
பேங்க் மேனேஜரைப் பார்த்து வாரிசு சர்டிபிகேட், பாஸ்புக் கூடவே ஒரு கவரிங் லெட்டர் எல்லாம் கொடுத்து விட்டு, "எங்க அம்மா சகுந்தலா பெயரில் எல்லாம் மாத்திடுங்க சார்," என்றான் ரகுராமன்.
பிறகு கொஞ்சநேரம் காத்திருந்தான்.
அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான். அப்பா இறந்து போய் இந்த 45 நாட்களில் அம்மா ரொம்பவும் ஆடித்தான் போயிட்டா.
"அம்மா கவலைப் படாதேம்மா" என்று ரகுராமனும் அவன் மனைவியும் அடிக்கடி சொல்லி அவளை ஒருவாறு தேர்த்தி இப்போதுதான் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள்.
ஆகஸ்ட் மாசக் கடைசியில் மகன் வாசுவுக்கு உபநயனம் செஞ்சுடலாம்னு அப்பாவிடம் ஏப்ரல் மாதமே நாள் பார்க்கச் சொல்லி இருந்தான் ரகுராமன்.
விஷயத்தைக் கேட்டவுடன், பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம்போய் நல்ல நாள் பார்த்துக் குறிச்சுக் கொண்டு வந்தார் அப்பா.
அப்போது தெரியாது ரகுராமனுக்கு அடுத்த மாசமே அப்பா போயிடுவார்னு.
"ரகு, நீ பணம் எதுவும் கொண்டுவர வேண்டாம், என் பேரன் வாசுவை மட்டும் இங்கக் கூட்டிண்டு வா, எல்லா செலவையும் நான்தான் செய்வேன்" என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.
பென்ஷன் பணம், நிலத்தில் கிடைக்கும் கொஞ்ச மகசூல் பணம் இதெல்லாம் சேர்த்து வெச்சிருப்பாரோ. ஒரு வீடு ஊர்ல இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகைப் பணம் நேராக பேங்குக்கு வர்றமாதிரி பேசி வெச்சிருந்தார் அப்பா.
"லாக்கர்ல அதிகம் பொருட்கள் இல்ல, எதுக்கு வேஸ்ட்டா அதுக்கு வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்கணும்" னு அம்மா சொன்ன போது, "இருக்கட்டும் நம்ம பையன் சீக்கிரம் நகைகள் வாங்கிண்டு வந்து அடுக்குவான், இருக்கட்டும்" னு சொன்னார்.
"ரொம்ப தைரியமான மனிதர் என் அப்பா" என்று ரகுராமன் மனதுக்குள் தன் அப்பாவைப் பற்றி சிலாகித்துக் கொண்டான்.
பி காம் படிச்சு முடிச்சு ஆறு மாதத்துக்குப் பிறகு TVS கம்பெனி, சோளிங்கர் பிராஞ்சுல வேலை கிடைச்சு லெட்டர் வந்தவுடன், மாயவரம் ரயில்வே ஜங்க்ஷனுக்குப் போய் செங்கல்பட்டுக்கு டிக்கெட் போட்டு வந்தார் அப்பா.
"நேரா செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போ அங்கேர்ந்து சோளிங்கர்க்கு பஸ்ல போயிடலாம். மெட்ராஸ் பொய் சோளிங்கர் போனா 3 மணிநேரம் டைம் வேஸ்ட்" என்றார். பிறகு, "செங்கல்பட்டு ஸ்டேஷன்ல இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல நரசிம்ம விலாஸ் னு ஒரு ஹோட்டல் இருக்கு, பேர பார்த்துட்டு அது சைவ ஹோட்டல் னு நெனைச்சு போயிடாதே பேர அப்படி வெச்சு ஏமாத்தறான். அது அசைவ ஹோட்டல், நன்னா விசாரிச்சுட்டு நல்ல ஹோட்டலாப் பார்த்து சாப்பிடு" என்றார்.
முதல் மாசம் சம்பளம் வாங்கினவுடன் ரகுராமன் பெயரிலேயே ஒரு பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதாமாதம் சம்பள பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர்.
இன்று ரகுராமனுக்குத் திருமணமாகி 15 வருடம் முடிந்த நிலையில், பிள்ளைகள் படிப்பு, நகர வாழ்க்கையில் வாடகை, இதர செலவுகள் என்று நிறைய செலவுகள்.
எந்த மாதமும் அப்பா ரகுவிடம் செலவுக்கு பணம் எடுத்துக்கொடு எனக் கேட்டதேயில்லை. மாறாக தீபாவளி, சங்கராந்தி, கார்த்திகை தீபம், ஆடிப் பெருக்கு என்று எல்லாருக்கும் டிரஸ் வாங்கி அனுப்புவதும் "டவுன்ல இதெல்லாம் உனக்கு செய்ய நேரமே இருக்காது" என்று அம்மா பக்ஷணங்கள் செயது அனுப்புவதும் வருஷா வருஷம் நடந்த நிகழ்வுகள்.
அப்பாவும் அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அனுப்பி வைப்பான் ரகு. ஒவ்வொரு முறையும் பேரனுக்குச் செயின், மோதிரம், சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார் ரகுராமனின் அப்பா.
அவருக்கு செலவுக்கு இருக்கான்னு எப்போதாவது கேட்கும்போது "நிறைய இருக்கு, கவலைப் படாதே பகவான் குடுக்கறதை பத்திரமா வெச்சு செலவு பண்ணனும்"னு சொல்வார்.
"சார், மேனேஜர் கூப்பிடறார்" என்று வங்கி ஊழியர் கூப்பிட நினைவுக்கு வந்தான் ரகுராமன். அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே போனான்.
"உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல ஒரு லட்சத்து எழுபதாயிரம் இருக்கு, அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா", என்றார். ரகு, "சரி" என்றான்.
அம்மாவோ உடனே, "அது வாசுவின் உபநயனத்துக்கு நீ எடுத்துக்கோ அதுக்குத் தான் உங்க அப்பா வெச்சிருந்தார்" என்றாள். இந்த நிலைமையில் உபநயனம் எப்படிம்மா என்றதற்கு "அது எப்போ செய்தாலும் இந்தப் பணத்துலதான் செய்யணும், அதுதான் அப்பாவோட ஆசை" என்றாள் ரகுராமனின் அம்மா.
ரகு, "அம்மா சரி போவோம்"னு கிளம்ப வங்கி மேனேஜர், "லாக்கர்ல எதுவும் பார்க்கலியா" என்றார்.
"அதை மறந்தே போய்ட்டோம், சரி அதுல வெள்ளி டம்ளர் வெள்ளி சொம்பு தான் இருக்கும்"னு ரகுராமன் சொன்னான்.
எதற்கும் பார்க்கப் போனார்கள்.
அப்பா வைத்திருந்த லாக்கர் சாவியைப் போட்டுத் திறந்து பார்த்தபோது உள்ளே 2 பேப்பர்க் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவை அந்த பேங்க்கின் ஷேர் பத்திரங்கள். 500 ஷேர்கள். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு. எல்லாவற்றையும் அம்மா பெயருக்கு வாங்கி வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 5 லட்சம் ருபாய் மதிப்புக்கு.
மேலே ஒரு கடிதம். அதில் "என் காலத்துக்குப் பிறகு என் மனைவி சகுந்தலாவுக்கு இந்த ஷேர்கள் உபயோகமாகட்டும்"னு என்று சுருக்கமாக எழுதி இருந்தார் அப்பா.
அதற்கும் கீழே ஒரு சுருக்குப் பையில் என்னவோ இருந்தது, என்ன என்று பார்த்தால் ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!
அவற்றைப் பார்த்த பிறகு ரகுவுக்குத் துக்கம் அடக்கமுடியவில்லை.
பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு பிளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான் ரகு.
சற்றுத் தள்ளி நின்றிருந்த வங்கி மேனேஜர், "ரகுராமன் சார், தண்ணீர் குடிங்க" என்று ஆசுவாசப்படுத்தினார்.
அம்மாவைப் பார்த்தான் ரகு. அவள் கண்களிலும் சில துளி கண்ணீர் இருந்தது. ரகுராமனுக்கு அம்மா ஆறுதல் சொன்னாள்.
வீட்டுக்கு வரும் வழியில் ஆட்டோவில் வரும்போது அம்மாவிடம் கேட்டான் ரகுராமன்.
"எனக்குன்னு ஒரு செலவு கூட வெக்கலியே அப்பா... உனக்குக் கூட பேங்க் ஷேர் அஞ்சு லட்சத்துக்கு வாங்கி வெச்சுட்டுப் போய்ட்டார்.
அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்துண்டிடுருக்கு, எனக்கு செலவு எதுவும் வைக்கலியே" என்றான் அம்மாவின் கரத்தை பிடித்துக் கொண்டு
*"அதாண்டா அப்பா" என்றாள் ரகுவின் அம்மா.*
*அப்பா இறந்தபிறகே உலகம் அவரைப் புரிந்துகொள்கிறது.*
*தாய் பத்துமாதம் சுமந்தாள் என்றால், தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் மனதிலும் தோளிலும் சுமக்கிறான்
நன்றி.. திரு.குமார் சுப்ரமணியம்
செவ்வாய், 12 நவம்பர், 2024
பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்
பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல் வெளியீட்டு விழா என்பது வழக்கமான புத்தக வெளியீடூ விழா அல்ல, நவீன வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்நாள்.
இந்திய முதல் சுதந்திர போர் சிப்பாய்கலகம் அல்ல. பாஞ்சாலங்குறிச்சி போர்கள் தான் என்பதை ஆவணப்படுத்திய விழா. வரலாற்றில் இடம்பெறுவதும், வரலாற்றை மாற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அத்தகைய நிகழ்வை, தன் வாழ்வில் கொண்ட கொள்ளைகளில் ஒன்றாக கடைசி வரை நின்று வென்று, இந்திய வரலாறுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழுக்கும், சந்ததியினருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல் வெளியீட்டு விழா மூலம் நடத்தி காட்டியிருக்கும் அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள், சரித்திரத்தின் பக்கங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமானவர்.
தமிழக ஆளுநர் மாளிகையில், மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது பொற்கரங்களால் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூலை வெளியிட்டது முதல் அந்த புத்தகத்தை எழுதி தொகுத்தது வரை அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் பணியை பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் பிறக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வரலாற்றில், பாஞ்சாலங்குறிச்சியும், வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரும் உச்சரிப்பும் இன்றி எப்படி இந்தியாவின் வீரத்தையும், விடுதலை போராட்டத்தையும் பேச முடியாதோ, அது போல, பாஞ்சாலங்குறிச்சிக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் புகழ் சேர்கின்ற "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு பணியை செய்து முடித்த அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் இன்றியும் இனி நவீன வரலாற்று பக்கம் நகலாது.
வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்! பரவட்டும் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்! பேசட்டும் பெ.செந்தில்குமார் எழுத்துக்கள்!
வாழ்த்துக்களுடன்...
அன்புத்தம்பி : ஆ.வள்ளிராஜ்
கேள்வி :
மனசுவிட்டுப் பாராட்டுங்க!










