- Karthic SR:கம்பளவிருட்சம் குழுமம் ...கீர்த்திவீரர் எத்திலப்ப நாயக்க மாமன்னரின் பிறந்தநாள் விழா சிறப்புத் தொகுப்பு :::வீர பராக்கிரம செயல்களை செய்து வெற்றிகளை ஈட்டும்
சத்திரிய புருஷர்களுக்கு
பெரும்பாலும் மாவீரன் என்ற சொல்லாடலே பயன்படுத்துவது நம் முன்னோர் வழி வழியாக போற்றி வந்த மரபு
ஆனால் நம் குல நாயகனான எத்தலப்ப நாயக்கருக்கு
கீர்த்தீ வீரன் என்ற பெயர் வர காரணம்??
சுதேச உணர்விக்காகவும்
கப்பம் கட்டும் அடிமை முறையை அறுத்தெரியவும்
தனது பரம்பரை வாழ்ந்த மண்ணில் அந்நியன் (ஆங்கிலேயன்)
அதிகாரம் செய்வதையும் தன் இனமான பாளையக்காரர்களை உயிர்ச்சேதம் செய்த சர்வ வல்லமை பொருந்திய ஆங்கிலேய அரச பிரதிநிதியை தூது வந்த வெள்ளையனை தூக்கிலிட்டு எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஒரு பாளையக்காரர் என்பதாலும்
வீரம் விவேகம் மதியூகம் நிறைந்த தந்திரப்போர்முறைகளில் ஒப்பாரும் மீட்பாரும் இல்லை என்ற சொல்லாடலுக்கு இணங்க வாழ்ந்தவர் என்ற காரணங்களுக்காகவே
கீர்த்தி வீரர் என்ற சிறப்பு வாய்ந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளதுஎத்திலப்ப நாயக்கரின் பராக்கிரமத்தை பறைசாற்றும் விதமாக செவி வழி செய்தி ஒன்று எங்கள் குல முன்னோர்களால் கூறப்படுகிறது
காலத்தின் மாறுதல் மற்றும் சாம்ராஜ்ய விரிவாக்கப் படையெடுப்பு போன்ற காரணங்களால்
எத்திலப்ப நாயக்கரின் ஆட்சிப் பகுதிகள் மைசூர் சுல்தானின்
அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு திரையும் வரியும் செலுத்தும் பாளையமாக இருந்துவந்துள்ளது
சுதேச உணர்வை வெளிப்படுத்த விரும்பிய எத்திலப்ப நாயக்கர் மைசூர் அரசருக்கு திரை செலுத்த மறுக்கிறார்
சுல்தானின் கோபத்திற்கு இலக்காகிய எத்திலப்ப நாயக்கர் சுல்தானின் வற்புறுத்தலின் காரணமாக மைசூர் சுல்தானை காணச்செல்கிறார்
அங்கு நடைபெற்ற விவாதத்தின் விளைவாக
இரும்பினாற் வார்க்கப்பட்ட குதிரையை
தனது மந்திர சக்தியினால் உயிர்பித்து சிரைசேதத்திலிருந்து தப்பித்ததுடன் திரை வரி செலுத்தா தனி நாடு என்ற பெருமையுடன் பல பரிசுகள் அளித்து மைசூர் சுல்தான் சிறப்பித்தாக செவி வழி செய்தி்களும் நிலவுகின்றன..
புதன், 6 பிப்ரவரி, 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக