செவ்வாய், 12 நவம்பர், 2024

பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்

 


பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்  வெளியீட்டு விழா என்பது வழக்கமான புத்தக வெளியீடூ விழா அல்ல, நவீன வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்நாள்.


இந்திய முதல் சுதந்திர போர் சிப்பாய்கலகம் அல்ல. பாஞ்சாலங்குறிச்சி போர்கள் தான் என்பதை ஆவணப்படுத்திய விழா. வரலாற்றில் இடம்பெறுவதும், வரலாற்றை மாற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அத்தகைய நிகழ்வை, தன் வாழ்வில் கொண்ட கொள்ளைகளில் ஒன்றாக கடைசி வரை நின்று வென்று, இந்திய வரலாறுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழுக்கும், சந்ததியினருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல் வெளியீட்டு விழா மூலம் நடத்தி காட்டியிருக்கும் அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள், சரித்திரத்தின் பக்கங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமானவர்.


தமிழக ஆளுநர் மாளிகையில், மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது பொற்கரங்களால் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூலை வெளியிட்டது முதல் அந்த புத்தகத்தை எழுதி தொகுத்தது வரை அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் பணியை பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் பிறக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


வரலாற்றில், பாஞ்சாலங்குறிச்சியும், வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரும் உச்சரிப்பும் இன்றி எப்படி இந்தியாவின் வீரத்தையும், விடுதலை போராட்டத்தையும் பேச முடியாதோ, அது போல,  பாஞ்சாலங்குறிச்சிக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் புகழ் சேர்கின்ற "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு பணியை செய்து முடித்த அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் இன்றியும் இனி நவீன வரலாற்று பக்கம் நகலாது. 


வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்! பரவட்டும் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்! பேசட்டும் பெ.செந்தில்குமார் எழுத்துக்கள்!


வாழ்த்துக்களுடன்...

அன்புத்தம்பி : ஆ.வள்ளிராஜ்

 கேள்வி :

வங்கியில் நாம் அடுத்த அடுத்த உயர் பதவிகளை அடைவது எப்படி
என் பதில் :🥰👍📡🌈🏡
இன்று வங்கி பணியில் 6 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இன்று சென்னையில் பயிற்ச்சியை முடித்துக்கொண்டு புதிதாக உதவி மேலாளர் பதவியை அடைந்த இருக்கும் வங்கி அதிகாரி உடுமலை ஜெயராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்றைய இளைஞர்கள் பலர் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர்.
ஏனெனில் ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ,வங்கி பணியில் தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் .
அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரே பொழுதில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல.
இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது
இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்: *
தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும். மொழி அறிவும் இருக்க வேண்டும்.
* தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
* மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.
* தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.
* ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
* நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.
* நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
* வழக்கமான செயல்களில் நிலைத்தன்மை இருக்க வேண்டும்.
முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும், நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.
வங்கி பணி வாடிக்கையாளர் சேவை என்பதால் பொறுமையும் ,சகிப்புத்தன்மையுடன் ,பணியாற்ற வேண்டியது முக்கியமானது .
வாழ்த்துக்கள் ..நன்றி
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
(Home Loans,Home Loans To NRIs,9944066681 👍💦⛈️📚🖋️👍🏡🙏

 மனசுவிட்டுப் பாராட்டுங்க!

❤
ஆன்ட்ராய்டு செல்பேசியில் விதவிதமான ரீல்ஸ்கள் வருகின்றன. மகள்கள் பாடல் நிகழ்ச்சியில் அருமையாகப் பாடி அசத்துகிறார்கள். அரங்கமே எழுந்து கை தட்டுகிறது! பெற்றோர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள். கண்ணீர் மல்க மகள்களை அரவணைக்கிறார்கள். இன்னொரு ரீல்ஸில், நீயா நானா பேச்சில், எங்களை அப்பாக்கள் தொடக்கூட செய்வதில்லை... அப்பாவின் தொடுகைக்காக... தலைகோதலுக்காக... அரவணைப்புக்காகத் தவிக்கிறோம் என்கிறார்கள் மகள்கள்! என்னவொரு விந்தை!

நாம் அனைவருமே தனித்தனி மனிதர்கள் தான்... அதுமட்டுமல்ல, உணர்வுள்ள மனிதர்கள்! பாசம், பரிவு, காதல் போன்ற உணர்வுகள் தான் நம்மை ஒருங்கிணைக்கின்றன. இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தான் சமூகத்தின் பார்வை, தோல்விகள், தேடல்கள், இயந்திரத்தன வாழ்க்கை எனப் பல்வேறு காரணிகள் குறுக்கே நிற்கின்றன. இவற்றைத் தாண்டி நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அங்கே ஓர் பிணைப்பு உருவாகிறது. நாம் நம் குழந்தைகளுக்காகவோ... குழந்தைகள் தங்கள் பெற்றோருக்காகவோ எவ்வளவோ செய்தாலும், பொதுப்பார்வையில் அவை அனைவரும் செய்யக்கூடியது தானே என்பதாக இருந்தாலும், அதற்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையை உணர்ந்து பாராட்டும்போது... தட்டிக்கொடுக்கும்போது அங்கே ஓர் முழுமை, நிறைவு கிடைக்கிறதல்லவா? அது தான்... அதுக்காகத்தான் இந்த ஓட்டமெல்லாம்! ❤

கடந்த நான்கைந்து மாதங்களாக மகளின் கல்விக்கடனுக்காகத் தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தேன். இன்றுதான் அதன் நிறைவுப்பகுதியை எட்டினேன். இதேபோன்ற அலைச்சலை பத்தாண்டுகளுக்கு முன் வீட்டுக்கடனுக்காக அலைந்தபோது அனுபவித்திருக்கிறேன். இப்போது மீண்டும் அதேபோன்ற அனுபவம். எனது அக்கவுண்ட் உள்ள செங்குன்றம் வங்கிக்கிளையில், கல்விக்கடன் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் வங்கி அலுவலரை சந்திப்பதற்காகவே மூன்று முறைக்கு மேல் அலுவலகத்துக்கு பெர்மிஷன் போட்டு வங்கிக்கு சென்றுவர வேண்டிய நிலை. அதன்பின் மகளோடு இணைந்து வங்கிக்கு சென்று வங்கிக்கடன் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடிப்பதற்குள் வங்கியில் ஆடிட்டிங் வந்து, வங்கி மேலாளர் மாற்றப்பட்டு, தற்காலிக மேலாளர், அடுத்த மேலாளர் என்று மூன்று மேலாளர்களைப் பார்த்தாச்சு! அதன்பின் வங்கிக்கடன்களை ப்ராசஸிங் செய்யக்கூடிய மைய வங்கிக்கு சென்று, ஒருவழியாக அதற்கான அனைத்து வேலைகளையும் முடிச்சாச்சு!

இதற்காக இன்றைய தினம் மகளை அழைத்துக்கொண்டு, உடன்வந்த கனமழையையும் அழைத்துக்கொண்டு டூவீலரில் நீண்ட தூரம் பயணித்து, ஐய்யப்பன்தாங்கலிலுள்ள மைய வங்கியில், உரிய அலுவலர் வருவதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, அதன்பின், வடிவேலு சொல்வதுபோல் மடுவுக்கு ஒரு கையெழுத்து என்பதாக பக்கம் பக்கமாக கையெழுத்துகளைப் போட்டு முடித்து, ஒருவழியாக வங்கிக்கடனுக்கு ஓகே வாங்கியாச்சு! இந்த கல்விக்கடனுக்காக அலைந்த ஒவ்வொரு நாளிலும், அலுவலகத்தில் பெர்மிஷன், மகளின் கல்லூரியில் விடுப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துச் செல்வதும்... இடையே செல்பேசியில் கல்விக்கடன் ப்ராசஸ் குறித்து வங்கி அலுவலரிடம் செல்பேசியில் விசாரிக்கும்போது, ஒருவித ஒவ்வாமையோடு அவர்கள் தரப்பில் அரையுங்குறையுமாகப் பதில் வருவதும்... அதையும் பொறுத்துக்கொள்ளும் தருணங்களிலெல்லாம்... எப்படி இப்படி நான் மாறிப்போனேன் என்று என்னையே நான் ஆச்சர்யமாகக் கேட்டுக்கொள்வேன்!

தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக... முன்னேற்றத்துக்காக... அவரவர் வருமானத்துக்கேற்ப... வாழ்க்கைச்சூழலுக்கேற்ப... ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொருவகையில் மெனக்கெடுகிறார்கள்... தங்கள் சக்திக்குட்பட்டோ, மீறியோ தங்கள் பிள்ளைகளுக்காக முடிந்ததை செய்துகொடுக்கிறார்கள். இது தானே பெற்றவர்களின் கடமை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம் தான். கடமையை கடமையே என்று செய்வது வேறு, உளப்பூர்வமாக மெனக்கெடுவதென்பது வேறு... ஒவ்வொரு முறையும் பிள்ளைகளுக்காக ஒன்றை செய்யும்போது, அது, பிள்ளைகளுக்கு பிடித்த சமையலாகவும் இருக்கலாம்... பிள்ளைகளுக்கு பிடித்ததாக எடுக்கும் உடுப்பாகவும் இருக்கலாம்... அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை நிறைவேற்றுவதாக இருக்கலாம்... அதை பிள்ளைகளுக்காக செய்து தரும்போது பெற்றோரின் மனதுக்குள் ஓர் நெகிழ்ச்சி ஏற்படும்... அதை வெறும் கடமை என்று சொல்லிவிட முடியாது! அதற்கும் மேலான உணர்வு! அப்போது பிள்ளைகளோ, மற்றவர்களோ பாராட்டுகிறார்களோ இல்லையோ, மனசாட்சி பாராட்டும்! அது ஓர் நெகிழ்வான அனுபவம்! ❤

அதேபோல் பிள்ளைகள் தரப்பிலும், படிப்பு, விளையாட்டு, வீட்டுப்பணிகள், சமூகப்பணிகளென ஒவ்வொன்றிலும் ஏதேனுமொன்றை அருமையாக, மெனக்கெடலோடு செய்துமுடிக்கும்போது அவர்களுக்குத் தேவை ஓர் பாராட்டு! சின்னதாக தலைகோதல்! அரவணைப்பு! இங்கே அனைவருமே பெரிதாக சாதித்துவிட முடியாது... அது பெற்றோரானாலும், பிள்ளைகளானாலும்... ஆனபோதும், ஒருவருக்கொருவர் பாசப்பிணைப்போடு, அன்போடு செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் பாராட்டும்போது, அத்தனை மன வலியும், உடல் வலியும் பறந்துபோகும்... மறந்துபோகும்! ❤

இதைத்தான் குறுந்தொகை பாடலொன்றில், கூடலூர் கிழார்,
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே" எனக் குறிப்பிடுகிறார்.

இதன் அர்த்தத்தை சுருக்கமாகச் சொல்வதானால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த தலைவி, தனிக்குடித்தன வாழ்க்கையில், மிகவும் சிரமப்பட்டு கணவனுக்காக மோர்க்குழம்பு செய்து உணவு படைக்க, அதை உண்ட கணவன், "நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது" என்று பாராட்டவும், சமையலுக்காக அவள் பட்ட சிரமத்தையெல்லாம் மறந்து, முகம் மலர்வாள் என்கிறார். (அது சங்க காலச்சூழல்... இன்றைய காலத்தில் சமையலில் கணவனும் பங்கெடுப்பதே சுவை) இம்புட்டு தாங்க வாழ்க்கை! ❤

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

திங்கள், 4 நவம்பர், 2024

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...








 குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...

வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.
சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
சனீஸ்வர பகவான்
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.
ஆடித்திருவிழா..
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்புப் பூஜை, திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும். சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு, லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம், சோனைக் கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு சிறப்புப் பூசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
வழிபாடுகளும் சிறப்புகளும்..
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்
பயண வசதி
தேனி அல்லது சின்னமனூர் நகருக்குச் செல்ல வேண்டும். குச்சனூருக்கு தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆன்மீக பயணங்கள் மனதிற்கு இனிமையானவை ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி, தேவதானப்பட்டி, மஞ்சள் ஆறு ..பயணம் .....

 


மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி,

தேவதானப்பட்டி, மஞ்சள் ஆறு ..பயணம் .....
மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.பகைவர்கள் வெல்லும் சக்தியை இத்தலத்து அம்பாள் தருகிறாள்.தவிர திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம்.புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் இங்கு உண்டு.
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதே இதற்கு காரணம். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.
இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது, என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது.
அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கற்பகிரக கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது.துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது.
திருவிழா காலத்தில் சேரும் இந்த 50 பானை நெய் வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.
தல விருட்சம் : மூங்கில் மரம்
தீர்த்தம் : மஞ்சள் ஆறு
Location: தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது.
மஞ்சளாறு அல்லது வத்தலகுண்டு ஆறு என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓடும் வைகையின் ஒரு துணையாறு ஆகும். பழனி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து குன்னுவாரன்கோட்டை அருகே வைகையில் கலக்கிறது.
மொத்தம் 470 ச. கி.இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும் கொண்டுள்ளது .
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.
ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.
அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.
வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும்.
வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.
அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.
கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும்.
இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள்.
முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.
இனிமையான பயணம் ..நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🥰🙏🙏📗🖋️🖋️📡🎙️💦🌧️🌴💦🌾🏡🚗🚗🚗