சனி, 10 செப்டம்பர், 2016

காடு என் வீடு .......

இன்று என் நண்பரின் மகன் பிறந்த நாள் விழாவை மகிழுச்சியுடன் கொண்டாட பக்கத்தில் இருக்கும் அமராவதி பழங்குடியினர் படிக்கும் மழலைச்செல்வங்களுடன் கொண்டாடியது அருமையான நிகழ்வாகவும் ,மனநிறைவாகவும் இருந்தது ...இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் மிகந்த அர்ப்பணிப்புடன் மிகந்த பொறுமையுடனும் இக்குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது கடவுளுக்கு செய்யும் நன்றியாக கருதுகிறார்கள் .

 மலைகளில் இயற்கையை காப்பாற்றி நம் உலகத்திற்கு வனவிலங்குகள் ,மரங்களை உயிர்ப்புடன் ,செழுப்புடனும் நம் வாழ இக்குழந்தைகளின்  பெற்றோர்கள் பணியாற்றி கொண்டுஇருக்கிறார்கள் .தன் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வியின் முக்கியத்தை அறிந்து  இச்சிறு வயதில் பெற்றோரை பிரிந்து கல்வி கற்றுகொண்டுஇருக்கிறார்கள். தன்நம்பிக்கையை நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்...நண்பரின் தன்னால் முடிந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு சிறு உதவியாக பிடித்த விளையாட்டு பொருட்கள் அன்புடன்  அளித்து வந்தோம் ..அருகில் இருக்கும் அமராவதி ராணுவப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் வருடம் ஒருமுறை வரும்போது இப்பள்ளிக்கு  ஒருமுறை விஜயம் செய்து வாருங்கள் உங்களுக்கும் மனநிறைவு கிடைக்கும்.    









   


வியாழன், 21 ஜூலை, 2016

மகிழ்ச்சியில் மட்டும் பங்கு கொள்ளும் நண்பர்களை விட கஷ்டகாலங்களில் ,துக்க காலங்களில் கூடவே இருக்கும் நண்பர்களால் தான் வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டு இருக்கிறது ...அந்த நண்பர்களில் ஒருவரில் இந்த நண்பனும் ஒருவர் ....என் இனிய நண்பன்  ....அப்சல்...க்கு அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மகிழ்ச்சி......
பொள்ளாச்சி சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .மாபெரும் கார் திருவிழா 
2016
ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள் ...விவசாயத்திற்கு மட்டும் அல்ல அனைத்து வர்த்தக வாகன வியாபாரத்திற்கும் தான் பொருந்தும் ..

 நம்ம பொள்ளாச்சியில்  நடைபெற்ற எங்களின்  சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .... மாபெரும் கார் திருவிழவிற்கு வந்திருந்த அனைத்து விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்..

இரண்டு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் அவர்களுக்கு தேவையான வாகனங்களையும் .புது வாகனங்களுக்கு முன் பதிவும் செய்தது மகிழ்ச்சியான தருணங்கள்.

இதில் கலந்துகொண்ட அனைத்து டீலர்களுக்கும் அருமையான வர்த்தக வியாபாரமும் ,முன்பதிவுமும் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

இத்திருவிழாவிற்கு வந்துஇருந்த பெரியவர்களைவிட சிறுவர்கள் கலந்துகொண்டு இத்திருவிழாவை மிகவும் சிறப்பித்தார்கள் ...சிறுவர்களின் புது திறனை அறிய அவர்களுக்கு ஓவிய போட்டியும் நடத்தி அவர்களுக்கு சிறு பரிசு பொருட்களும் அளித்தது அவர்களுக்கு ஊக்கப்படுத்தியதாக  இருந்தது...

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வாகனங்களை அளித்தது எங்களுக்கு மனநிறைவும் இருந்தது ..

எங்களுக்கு உறுதுணையாக இருந்த எங்களின் உயரதிகாரிகள்  .. .திரு .பாலசுப்ரமணியம்,கணேஷ் ,அவர்களும் மற்றும் எங்களின் ,பொள்ளாச்சி ,கோயம்புத்தூர் ,திருப்பூர் ,மேலாளர்களும் கூடவே இருந்தது  எங்களுக்கு மகிழ்ச்சியின் தருணங்கள்....

இதில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கும் ,அனைத்து டீலர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம் .  



















      





செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சேலத்து முத்துபிள்ளை....இப்போது உடுமலையின் தத்துப்பிள்ளை ...

"சாதனை என்பது எல்லைகோடு ,அதில் அடங்கி போவதில் இல்லை எனக்கு ஈடுபாடு...இன்னும் வளர்வதே என்பாடு "  -முனைவர் க .இந்திரசித்து (கைபேசி -9944309188)

சேலத்து முத்துபிள்ளை....இப்போது உடுமலையின் தத்துப்பிள்ளை ...

முனைவர் க .இந்திரசித்து அவர்கள் ,உடுமலை வித்தியாசாகர் கலைஅறிவியல் கல்லூரி,மற்றும் அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி செய்து இப்போதுஓய்வு பெற்று வருகிறார் ...தமிழ்க்கு  ஏது  ஓய்வு ....!!!!!!

முனைவர் க .இந்திரசித்து அவர்கள் இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டு உள்ளார்,எட்டு நூல்களை பதிப்பித்து வெளிட்டுள்ளார் .ஒரு பன்னாட்டு கருத்தரங்கினையும்,எட்டு தேசிய கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார் .
ஏழு முனைவர் பட்ட மாணவர்களுக்கும் ,நாற்பது நான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் ,வழிகாட்டியாக இருந்து வருகிறார் .இவருடைய தமிழ்ப் பணியை பாராட்டி மலேசியா ,சிங்கப்பூர் ,பனாமா நாடுகளில் இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் பரிசும் ,விருதுகளும் வழங்கியுள்ளன .இருபத்து ஒன்பது ஆண்டுகளாக சங்க இலக்கிய மன்றத்தையும் ,இருபத்து ஒன்று ஆண்டுகளாக தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பேரவையினையும் பொறுப்பேற்று நல் வழியில் நடத்தி வருகிறார் ...

முனைவர் க .இந்திரசித்து அவர்கள் தற்பொழுது எழுதிய

"தளி எத்தலப்ப மன்னர்" -நூல் அறிமுகம் ,

முனைவர் த .அருள்சோதி எழுதிய
"பகுத்தறிவுப் பாவலர் உடுமலை நாராயணகவி "




என இரு நூல்கள் வெளியிட்டு விழா ...

விழா முன்னிலை :
 உடுமலை வழக்கறிஞர் -சோமசுந்தரம் ,அவர்கள் ,
நீதி அரசர் -தங்கராசு,அவர்கள்  (பணி நிறைவு பெற்ற மாவட்ட நீதிபதி )-தேனி
திருமதி -வே .தெய்வநாயகி -தலைவர் ,தளி பேரூராட்சி 
 உடுமலையின் இரு பெரும் வரலாற்றுத் திருவிழா..

வரும் நாள் -20.09.2015 ஞாயிறு மாலை 4.30 மணி ...இடம் :பத்மாஸ்ரீ நாகராட்சி திருமண மண்டபம் -உடுமலைபேட்டை ...வாரீர் ....வாரீர் ....வாரீர் ...












   


வெள்ளி, 6 மார்ச், 2015

மேடை பேச்சு......
இன்று கொங்கு நாடு கல்லூரியின் சிறப்பு அழைப்பாளராக நானும் என் நண்பர் பிரபு அவர்களும் சென்றிருந்தோம்...பள்ளி மற்றும் கல்லூரி என்றாலே பயம் கலந்த மரியாதை...மனதில் ஓட்டிகொள்கிறது...நாமும் கல்லூரி வாழ்கையை கடந்தவர்கள் தானே .. கல்லூரியின் படிக்கட்டில் ஏறும் போதே ஒரு மாணவர் வணக்கம் சார்.......!!!!!! ஒருஇழு ..இழுத்து சொன்னார்...இருந்தாலும் பயத்தை வெளி காட்டிகொள்ளக்கூடாது என்று நடையை கட்டினோம் ..அதற்குள் நண்பர் வணிக மேலாண்மை துறை தலைவர் அவருடைய அறைக்கு அழைத்து கொண்டு போய்விட்டார்...பல பள்ளியில் ஆசிர்யர்களுக்கு என் துறை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்சிகள் போதுகூட இந்த பயம் வருவதில்லை ...கல்லூரி என்றலே கொஞ்சம் ஜெர்க் ஆகிறது ..வணிக மேலாண்மை மாணவர்கள் பரஸ்பரநிதி ,தனி நபர் வருமானம், வீட்டுகடன் ,வாகனகடன் ,கல்வி கடன் ,காப்பீடு ,வைப்புத்தொகை ,இத்தனையும் பாடப்புத்தகத்தில் படித்ததை இன்று நடை முறை வாழ்க்கையோடு பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டார்கள் ...எதிர் காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி பெற போகிறோம் என்று இருந்த பயத்தை கொஞ்சம் போக்கினோம்...பேச வாய்ப்பு அளித்த கொங்கு நாடு கலை கல்லூரி-க்கும் வணிக மேலாண்மை துறை தலைவர் திரு.பிரபாகர் கந்தசாமி அவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் என் நன்றிகள்.. .