வியாழன், 24 மார்ச், 2016
திங்கள், 7 மார்ச், 2016
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
வியாழன், 11 பிப்ரவரி, 2016
புதன், 3 பிப்ரவரி, 2016
திங்கள், 18 ஜனவரி, 2016
வெள்ளி, 1 ஜனவரி, 2016
செவ்வாய், 15 செப்டம்பர், 2015
சேலத்து முத்துபிள்ளை....இப்போது உடுமலையின் தத்துப்பிள்ளை ...
"சாதனை என்பது எல்லைகோடு ,அதில் அடங்கி போவதில் இல்லை எனக்கு ஈடுபாடு...இன்னும் வளர்வதே என்பாடு " -முனைவர் க .இந்திரசித்து (கைபேசி -9944309188)
சேலத்து முத்துபிள்ளை....இப்போது உடுமலையின் தத்துப்பிள்ளை ...
முனைவர் க .இந்திரசித்து அவர்கள் ,உடுமலை வித்தியாசாகர் கலைஅறிவியல் கல்லூரி,மற்றும் அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி செய்து இப்போதுஓய்வு பெற்று வருகிறார் ...தமிழ்க்கு ஏது ஓய்வு ....!!!!!!
முனைவர் க .இந்திரசித்து அவர்கள் இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டு உள்ளார்,எட்டு நூல்களை பதிப்பித்து வெளிட்டுள்ளார் .ஒரு பன்னாட்டு கருத்தரங்கினையும்,எட்டு தேசிய கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார் .
ஏழு முனைவர் பட்ட மாணவர்களுக்கும் ,நாற்பது நான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் ,வழிகாட்டியாக இருந்து வருகிறார் .இவருடைய தமிழ்ப் பணியை பாராட்டி மலேசியா ,சிங்கப்பூர் ,பனாமா நாடுகளில் இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் பரிசும் ,விருதுகளும் வழங்கியுள்ளன .இருபத்து ஒன்பது ஆண்டுகளாக சங்க இலக்கிய மன்றத்தையும் ,இருபத்து ஒன்று ஆண்டுகளாக தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பேரவையினையும் பொறுப்பேற்று நல் வழியில் நடத்தி வருகிறார் ...
முனைவர் க .இந்திரசித்து அவர்கள் தற்பொழுது எழுதிய
"தளி எத்தலப்ப மன்னர்" -நூல் அறிமுகம் ,
முனைவர் த .அருள்சோதி எழுதிய
"பகுத்தறிவுப் பாவலர் உடுமலை நாராயணகவி "
என இரு நூல்கள் வெளியிட்டு விழா ...
விழா முன்னிலை :
உடுமலை வழக்கறிஞர் -சோமசுந்தரம் ,அவர்கள் ,
நீதி அரசர் -தங்கராசு,அவர்கள் (பணி நிறைவு பெற்ற மாவட்ட நீதிபதி )-தேனி
திருமதி -வே .தெய்வநாயகி -தலைவர் ,தளி பேரூராட்சி
உடுமலையின் இரு பெரும் வரலாற்றுத் திருவிழா..
வரும் நாள் -20.09.2015 ஞாயிறு மாலை 4.30 மணி ...இடம் :பத்மாஸ்ரீ நாகராட்சி திருமண மண்டபம் -உடுமலைபேட்டை ...வாரீர் ....வாரீர் ....வாரீர் ...

திங்கள், 14 செப்டம்பர், 2015
வெள்ளி, 6 மார்ச், 2015
மேடை பேச்சு......
இன்று கொங்கு நாடு கல்லூரியின் சிறப்பு அழைப்பாளராக நானும் என் நண்பர் பிரபு அவர்களும் சென்றிருந்தோம்...பள்ளி மற்றும் கல்லூரி என்றாலே பயம் கலந்த மரியாதை...மனதில் ஓட்டிகொள்கிறது...நாமும் கல்லூரி வாழ்கையை கடந்தவர்கள் தானே .. கல்லூரியின் படிக்கட்டில் ஏறும் போதே ஒரு மாணவர் வணக்கம் சார்.......!!!!!! ஒருஇழு ..இழுத்து சொன்னார்...இருந்தாலும் பயத்தை வெளி காட்டிகொள்ளக்கூடாது என்று நடையை கட்டினோம் ..அதற்குள் நண்பர் வணிக மேலாண்மை துறை தலைவர் அவருடைய அறைக்கு அழைத்து கொண்டு போய்விட்டார்...பல பள்ளியில் ஆசிர்யர்களுக்கு என் துறை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்சிகள் போதுகூட இந்த பயம் வருவதில்லை ...கல்லூரி என்றலே கொஞ்சம் ஜெர்க் ஆகிறது ..வணிக மேலாண்மை மாணவர்கள் பரஸ்பரநிதி ,தனி நபர் வருமானம், வீட்டுகடன் ,வாகனகடன் ,கல்வி கடன் ,காப்பீடு ,வைப்புத்தொகை ,இத்தனையும் பாடப்புத்தகத்தில் படித்ததை இன்று நடை முறை வாழ்க்கையோடு பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டார்கள் ...எதிர் காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி பெற போகிறோம் என்று இருந்த பயத்தை கொஞ்சம் போக்கினோம்...பேச வாய்ப்பு அளித்த கொங்கு நாடு கலை கல்லூரி-க்கும் வணிக மேலாண்மை துறை தலைவர் திரு.பிரபாகர் கந்தசாமி அவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் என் நன்றிகள்.. .
செவ்வாய், 25 நவம்பர், 2014
புதன், 19 நவம்பர், 2014
மாவீரர் விருப்பாட்சி கோபால்நாயக்கர் நினைவு விழா (25-11-2014)
விடுதலை
வீரர் கோபால் நாயக்கர் ( விருப்பாட்ஷி ஜமீன்)
விருப்பாட்ஷி
ஜமீனின் 19-ஆம் பாளையக்காரராக திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் (1763-1801) பட்டமேற்று, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து
வந்தார். இவர் பதவிக்கு வந்து பத்தாம் ஆட்சியாண்டில் இருந்தே வெள்ளைக் கும்பினி அரசுக்கும், இவருக்கும் பனிப்போர் ஆரம்பமாகியது.
1772-ல் முத்து வடுகநாதரை ஆங்கில அரசு படுகொலை செய்தது. ஆதரவிழந்த அவரது மனைவி வேலுநாச்சியாரையும்
மகள் வெள்ளச்சி நாச்சியாரையும் விருப்பாட்சி அரண்மனையில் எட்டு ஆண்டுகள் அனைத்து வசதிகளையும்
செய்து சொந்த சகோதரி போல பாதுகாத்து வந்தார்.
1800-ல் கோவையில் தென்னிந்தியப் புரட்சி நடைபெறுவதற்கு கோபால் நாயக்கர்
தளகர்த்தராக விளங்கினார். திண்டுக்கல் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை நிறுவி அதன் தளகர்த்தராக
விளங்கினார். துண்டாஜி வாக், கேரளவர்மா, தீரன் சின்னமலை, திண்டுக்கல் லக்கமநாயக்கர், தள எதுலப்ப நாயக்கர் ஆகியோர் இதன்
மற்ற உறுப்பினர்களாவர்.
மொகரம்
பண்டிகையன்று கோவையில் உள்ள ஆங்கிலக் கோட்டையைத் தகர்த்து, அதை மீட்பது என்று திட்டம் தீட்டப்பட்டது.
03-06-1800 என்ற நாள் குறிக்கப்பட்டது. விருப்பாட்சியில் இருந்து படைகள் அனுப்பப்பட்டது.
கோவையில் வழக்கத்தை விட வீரர்கள் அதிகமாக இருப்பதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள்
மொகரம் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னர், புதிய ஆட்களை கைது செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் நிலை குலைந்த வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
வீரபாண்டிய
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பு அவரது சகோதரர் ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார். கோபால் நாயக்கர் அவரை மீட்பதற்கான திட்டத்தையும், பண உதவிகளையும் செய்து தன்னுடைய
படை வீரன் பொட்டிப் பகடை தலைமையில் முந்நூறு வீரர்களை அனுப்பி, ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோரையும் அவருடன்
இருந்த பதினைந்து வீரர்களையும் மீட்டனர். (1801 பிப்.12) இது வெள்ளையருக்கு கடுங்கோபத்தை
ஏற்படுத்தியது.
கோபால்
நாயக்கரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்ட வெள்ளையர்கள், மற்ற பாளையக்காரர்களிடம் இருந்து
உதவி வராதவாறு பிரித்தனர். ஊமைத்துரையையும், மருது பாண்டியர்களையும் திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற பகுதிக்கு
விரட்டினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பெரும் படையைத் திரட்டினர். 1801 மார்ச்
17-ஆம் நாள் லெப்டினட் கின்னஸ் தலைமையில் ஆங்கிலப் படை விருப்பாட்சியைத் தாக்கியது.
கோட்டை முழுமையாக முற்றுகை இடப்பட்டது.
சரணடையுமாறு
வெள்ளைக் கும்பினி அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, 72 வயதான கோபால் நாயக்கர் சுரங்கப்பாதை
வழியாக தன் நம்பிக்கைக்குரிய வீரர்களுடன் தப்பி கருமலைக் காட்டுக்குள் மறைந்து விட்டார்.
கோட்டையில் இருந்த கோபால் நாயக்கர் மனைவி பாப்பம்மாள், ஊனமுற்ற 14 வயது மகன் பொன்னப்ப
நாயக்கர், கோபால்
நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கரின் மகள்கள் பொன்னம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு
திண்டுக்கல் மலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
போர்க்களத்தில்
மறைந்து விட்ட கோபால் நாயக்கரின் தலைக்கு 2000 ரூபாயை விலையாக வைத்தனர். (இன்றைக்கு
அதன் மதிப்பு சுமார் 4 கோடி) கருமலைக் குன்றுகளில் தங்கியிருந்த கோபால் நாயக்கரை அவரது
எதரிகள் காட்டிக் கொடுத்தனர். 1801-ம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் கோபால் நாயக்கர் கைது
செய்யப்பட்டார். 4 மாதம் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டார். 1801-ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 21-ம் நாள் விருப்பாட்சிக் கோட்டை முன்பு தூக்கிலிடப்பட்டார். கோட்டை
முற்றிலும் அழிக்கப்பட்டு அங்கு ஆமணக்கு விதை விதைக்கப்பட்டு வருடாவருடம் கும்பினி
அரசுக்கு ஆமணக்கு வருமானம் எவ்வளவு என்று கணக்கு காட்டப்பட்டது.
Note:
விடுதலைப் போராட்டத்தில் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால்
நாயக்கரின் பங்கு விடுதலைக்காக தனித்தனியாகப் போராடிக்கொண்டிருந்த பாளையக்காரர்களை
ஒன்றிணைக்க முயற்சித்தவர்களில் முக்கியமானவர்
விருப்பாச்சி கோபால் நாயக்கர். திப்பு சுல்தான், மருதுபாண்டியர், கன்னட துந்தாசிவாக்கியர், மலபார் கேரளவர்மன் ஆகியோர் இணைந்து
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் திட்டமிட்டனர். இதற்கு தீபகற்பக் கூட்டமைப்பு
என்று பெயர். 1799-ம்
ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும் ஆங் கிலேய அதிகாரி பானர்மேன், 'இதுபோலத்தான் நீங் களும் தூக்கிலிடப்படுவீர்கள்’ என்று எச்சரிக்கை செய்தபிறகும் எதிர்ப்பைக்
காட்டினார். அதன்பிறகு இவரும் கைது செய்யப்பட்டு திண்டுக்கல்லில் 1801-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மக்கள்
மறந்துபோன தியாகிகளில் ஒருவர் கோபால் நாயக்கர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)