சனி, 12 ஏப்ரல், 2025

குலதெய்வம் அறிவியல் உண்மை

 


குலதெய்வம் அறிவியல் உண்மை

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா…..?
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
நன்றி - - - - சித்தர் அறிவியல்

வியாழன், 10 ஏப்ரல், 2025

கேள்வி : வீடு கட்டுபவர்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?

 


கேள்வி :  வீடு கட்டுபவர்கள் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?


பதில் : 

வீடு கட்டும் போது பலரும் செய்யும் சில தவறுகள் என்னுடைய அனுபவத்தில்:

1. திட்டமிடாமல் தொடங்குவது

பலரும் சிறந்த ஒரு திட்டம் இல்லாமல் நேரடியாக வேலைக்கு இறங்கிவிடுகிறார்கள். வீட்டு வடிவமைப்பு, பட்ஜெட், மற்றும் தேவையான அனுமதிகள் போன்றவை தெளிவாக இருந்தால்தான் வேலை விரைவாகவும், பொருளாதார ரீதியாகவும் செழிக்க முடியும்.

2. கணக்கற்ற செலவு செய்யுதல்

ஆரம்ப கட்டத்தில் சரியாக கணக்கிடாமல் பிறகு செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். உபயோகப்படும் பொருட்கள், வேலைக்காரர்கள், மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவற்றை சரியாக திட்டமிட வேண்டும்.

3. தகுதியற்ற தொழிலாளர்களை நம்புவது

சிறந்த வேலைப்பாடும், நிலைத்தன்மையும் தரும் தொழிலாளர்களை தேர்வு செய்யாமல், குறைந்த செலவுக்காக அனுபவம் குறைவானவர்களை தேர்வு செய்வதால் பின்னர் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

4. கட்டுமான தரத்தை அலட்சியமாக பார்க்குதல்

சிலர் நல்ல தரமான கான்கிரீட், மண், சிமெண்ட் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குறைந்த தரத்திலான பொருட்களை வாங்குகிறார்கள். இது வீட்டின் ஆயுளை குறைக்கும்.

5. மழைநீர் வடிகால், அடித்தளத் திட்டங்களை ஏளனமாக பார்ப்பது

அடித்தளத்தில் சரியான தண்ணீர் வடிகால் ஏற்பாடுகள் இல்லாவிட்டால், நீர் கசியல் பிரச்சனை மற்றும் தரை நனைவு ஏற்படும்.

6. சட்ட மற்றும் அனுமதிகளை புறக்கணித்தல்

அரசின் கட்டுமான விதிமுறைகளை பின்பற்றாமல் வீடு கட்டினால், பின்னர் சட்டப்பிரச்சனைகள் வரலாம்.

7. நல்ல வடிவமைப்பை பின்பற்றாதது

சரியான உள்ளமைப்பு, வெளிச்சம், காற்றோட்டம் போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் வீடு கட்டினால், வசதியாக இருக்காது.

இவை எல்லாம் அனுபவத்தில் பார்த்த தவறுகள். சரியான திட்டமிடல், தரமான வேலை, மற்றும் அறிவார்ந்த செலவினம் மூலம் சிறப்பான வீடு கட்டலாம்!

V K சிவக்குமார் 

வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் 

9944066681

 

எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் அருளும் அருள்மிகு ஸ்ரீ சென்றாயபெருமாளின் நாமம் போற்றுவோம்.🤝📚✍️🙏🙏 சென்றாயப் பெருமாளின் சிறப்பு இதுவே...

 எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் அருளும் வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ சென்றாயபெருமாளின் நாமம் போற்றுவோம்.🤝📚✍️🙏🙏 சென்றாயப் பெருமாளின் சிறப்பு இதுவே...

புள்ளியியல் துறை இணை இயக்குநர் (பணி ஓய்வு )

🥰
M வீர சின்னம்மாள் புரம் 🥰
மரிகுண்டு 🥰
தேனி மாவட்டம் ...🤝👍
வைஷ்ணவம் மிக துடிப்போடு வாழும் கிராமங்களில் கம்பள கிராமங்கள் முக்கியமானவை.எங்கு பார்த்தாலும் திரு நாமமும்.. கோவிந்தா கோசமும்..
மாமா அவர்களின் வைஷணவ பாடல்களையும் ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் ..
சென்றாய பெருமாள் கோவிலில் பாடியது இன்று உலகம் முழுக்க முக நூலிலும் ..வாட்ஸப்பிலும் ..யூடூப்பிலும் ...தொழில்நுட்பம் மூலம் பயணிப்பது மிக்க மகிழ்ச்சி ..
எனக்கு அறிமுகப்படுத்திய அன்பழகன் சாமிக்கண்ணு அண்ணாருக்கு நன்றிகள் 🙏.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🥰📚✍️🙏


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தாலுக்கா கோட்டைப்பட்டி ...
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் மிகவும் சிறப்பான முறையில் சாமி அழைப்பு, தேவராட்டங்கள், சொந்த பந்த உறவுகளின் அன்பு, பாசம் கலந்த பகிர்வுகள்.
அடடா.
கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களின் அடிபிறலாத ஒற்றுமை.
காவல்துறையே தேவையில்லை.
அவர்களே காவலர்கள்.


எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் அருளும் அருள்மிகு ஸ்ரீ சென்றாயபெருமாளின் நாமம் போற்றுவோம்.🤝📚✍️🙏🙏
சென்றாயப் பெருமாளின் சிறப்பு இதுவே...

தேவராட்டலு,கும்மி, சேவாட்டலு இதுபோன்று நமக்கான கலைகள் பெரிதும் கொண்டாடப்படுகின்றது.
பூப்பல்லக்கில் கடவுள் வரும்போது கூட கூடியிருக்கும் அனைவரும் இறைவனின் ஆட்டத்தை மிகவும் பக்தியோடு பார்க்கின்றார்கள் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல்.
குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக வருவதால் அலப்பறைகள் இருப்பதில்லை
நீண்ட நாள் கழித்து சந்திக்கும் உறவுகளின் அதீத ஆனந்தம்
காதருகே எப்போதும் ஒலிக்கும் நம்முடைய தெலுங்கு மொழி❤️
கூட்டத்தில் யாரென்று தெரியாதவராக இருந்தாலும் முன்னே செல்பவர் மீது தோளில் கை வைத்து நடக்கும் அரவணைப்பான அனுபவம்🥳
கூட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கும் போதே தெரிந்த முகத்தை கண்டவுடன் மேலும் பிரகாசமடையும் முகமலர்ச்சி😘
ஊருக்கு ஒச்சேதிக்கி தெருவு தெலேதா நிக்கு என்று கண்டிப்புடன் வரவேற்கும் உறவுகள்😁
மா மாம கூத்துரு தா ஊடு கொச்ச நாளா தைய்யாலு மாட்லாடாப்புமு என்று தன்னுடைய மாமா மகள்களை சண்டை இருந்தாலும் சிலரிடம் அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அறிமுகப்படுத்தி வைப்பது🥰
ஒரே அந்தரு மனி மாச்சுலு எதினு மனி மாட்லுன கேலி சேசேத்துரா என்று புதிதாக கோயிலுக்கு வரும் நம் இளைஞர்களிடம் பெரியவர்கள் எச்சரிக்கை கொடுப்பது😂
எண்ணா இங்க கொச்சம் கூடு தீசிக்க என்றவுடன் சாலு பொண்ணு என்று கூறிவிட்டு பக்கத்திலிருக்கும் மைத்துனர்களிடம் அதி ஓட்டி லேது பாவா மரதாளம்மா ஈ ஊருன தா உண்டினி அந்து போயி கூடு தாவலட்ட நெஸ்ஸா உண்டது அதிதா சாலுட்ட செப்பேத்தி என்று உண்மையைக் கூறுவது😜🤣
மொத்தத்தில் உறவுகளின் சங்கமமாய்,
உணர்வுகளின் வெளிப்பாடாய் இந்த திருவிழா இருப்பது அதையெல்லாம் நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது என எல்லாமே இறைவன் கொடுத்த வரம்🙏😘.
சாமிநாதன் நாதன் ...🥰📚✍️


ஒரு திருவிழா.🥰🙏
திருவிழா முழுவதும் ஒரே சாதி
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய நிகழ்ச்சி
யாருமே மது அருந்தவில்லை,
பெண்களை கேலி செய்யும், பாலியல் சீண்டல் இருக்காது
செயின் பறிப்பு, திருட்டு சம்பவமே நடக்காது..
நூற்றுக்கணக்கான போலீஸ் தேவைப்படும் இது போன்ற திருவிழா க்களில் வெகு சில காவலர்கள் அதுவும் formality க்கு
ஆயிரக்கணக்கான வேன் பஸ்கள்.. சின்ன இடையூறு பொது சொத்து சேதம் இல்லை..
இவ்வளவு ஆயிரம் மக்கள் கூடினால் பக்கத்தில் இருக்கும் எதாவது சாதி யை வம்பு செய்ய தோன்றும், நம்ம கெத்த காட்ட நினைப்பது சாதிய மனநிலை ஆனால் அது போல சின்ன சம்பவம் கூட இல்லை..
நாயக்கமாருங்க திருவிழா ப்பா.
அவங்களுக்குள்ளயே அவங்களே கட்டுப்பாடா இருப்பாங்க என்று போலீஸ் கள் கூறும் நிகழ்ச்சி
பிற சமூகம் இவ்வளவு திரளாக கூடும் போது அச்சம் கொள்ளும்.. இங்கோ அவர்களே வரவேற்று மகிழ்கிறார்கள்.
அப்படி இப்படி எதாவது இளைஞர்கள் செய்ய நினைத்தாலும்..
பெரியவர்கள் நம்ம சனமே கட்டுப்பாடு தான் மெயின்.. என்று அடக்குவது.
பழைய பாரம்பரியம், சமூக கலைகள் என ஊர் வித்தியாசம் இல்லாமல் கூடி ஆடுவது..
பெண் கொடுப்பது, எடுப்பது என பேச்சுக்கள் ஒரு பக்கம்..
கோவிந்தா கோவிந்தா என்ற கோசமும்.. உண்மையான பக்தியும்..
சுய ஒழுக்கமும்.. சமூக கட்டுப்பாடும்..
ரத்தத்திலேயே ஊறிய இனம் ராஜகம்பளம் இனம்..
பகவான் கிருஷ்ணன் பிறந்த சமூகம் என்றுமே இதில் வழுவில்லாமல் வாழுவோம்.. 🙏🙏🥰🤝😍












ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

 உடுமலைப்பேட்டை பெரியகோட்டை அம்மன் ட்ராவெல்ஸ் அதிபர் M சந்திரசேகரன் -C பொன்னுத்தாய் அவர்களின் அன்பு செல்வன் C .அருண்குமார்  MBA -D விஜயலட்சுமி ,B .Sc  B .Ed (மருங்காபுரி ) ,புதுமண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள் .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

மருங்காபுரி ஜமீன் லட்சுமி அம்மாள் மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு.வ.இலட்சுமி அம்மணி (1894 – 1971)

 மருங்காபுரி ஜமீன் லட்சுமி


அம்மாள் மருங்காபுரி ஜமீன்தாரனி கி.சு..இலட்சுமி அம்மணி (1894 – 1971)

திருச்சி மாவட்டம்மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரிஇது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டதுஇத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர்இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்துஅந்தப் புலியைக் குத்திக் கொன்றதால்புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமையோடு அழைத்துவருகின்றனர்மக்கள் நலன்குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளதுஇந்தப் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது.

இவர் 1894-ல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார்தமிழ்ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்புபெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்ததுஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால்பொருட்பால் என இரு பால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார்காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார்.


tmvkv சிவ சண்முக பூச்சிய நாயக்கர் ,trk குமார விஜய பூச்சிய நாயக்கர்

குளவாய் பட்டி வடக்கு தெரு ,மருங்காபுரி