புதன், 13 நவம்பர், 2024

நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி

 நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி வேதனை


''ஆயிரக்கணக்கான மக்கள் துணிச்சலுடன் போராடி உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தனர். இந்த வரலாறு குறித்து நாம் இன்னும் படிக்கவில்லை,'' என கவர்னர் ரவி கூறினார்.


சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: 2021 ல் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலை நான் கேட்டேன். அதற்கு தமிழக அரசு 30 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது. நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.


ஆங்கிலேயர்கள் நமது சுயகவுரவத்தை அழித்தனர். பிரிட்டனில் பாதிரியாராக இருந்த ஜேம்ஸ் மில் என்பவரை அழைத்து இந்தியாவின் வரலாற்றை ஆங்கிலேயர்கள் எழுத வைத்தனர். அவர் இந்தியாவிற்கு வராமலேயே, ' இந்தியர்கள் அனைவரும் கோழைகள். அடிமைகளாக இருக்க தகுதி பெற்றவர்கள். ஆண்மையற்றவர்கள்' , ' ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள்' என புத்தகம் எழுதினார் 🥰செய்திக்கதிர் 📗✒️🎙️📡


இந்த புத்தகம் தான் ஆங்கிலேயர்களின் பாட புத்தகமாக இருந்தது. இந்தியாவில் பணிபுரிய விரும்பிய ஆங்கிலேயர்கள் இந்த புத்தகத்தை படித்தனர். படித்ததை வைத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து பணியாற்றினர். ஆங்கிலேயர்கள் நடத்திய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த புத்தகம் தான் பயன்படுத்தப்பட்டது.


இந்தியர்கள் யார் என்ற சுய கவுரவத்தை அழிக்க சதி செய்து ஆங்கிலேயர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். பல தலைமுறைகள் கடந்தும், மக்கள் இதனை நம்ப துவங்கினர். இதை படித்தே பட்டம் பெற்று ஆங்கிலேயர்கள், கிழக்கு இந்திய நிறுவனங்களில் பணியாற்றினர். நமது கல்வி முறை, தொழிலை அவர்கள் அழித்ததால், நமது மக்கள் கிழக்கு இந்திய கம்பெனியை சார்ந்து இருந்தனர். இதனால், வேலைக்கு செல்ல நமது மக்கள் இந்த பாடத்தையே படித்தனர்.இன்றும் நாம் அதில் இருந்து விடுபடவில்லை. நமது மண்ணில் ஆங்கிலேயர்களை சிறந்தவர்களாக பார்க்க வைக்கப்பட்டனர். பல்கலைகள், கல்லூரிகளில் எம்.ஏ., மற்றும் பி.ஏ., பட்டங்களில் கலாசாரம், வரலாறு, அரசியல் அறிவியல் பாடதிட்டத்தில் ஆங்கிலேயர்களை பற்றியும், அவர்களை புகழ்ந்தும் கற்பிக்கப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி கற்பிக்கப்படவில்லை.


20ம் நூற்றாண்டில் திராவிட தலைவர்களை பற்றி சொல்லப்படுகிறது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இல்லை. இன்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என நமது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 'நாம் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள். அனைத்தும் நமது தவறு. நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் நல்லதை செய்தனர்' என சொல்லிக் கொடுக்கின்றனர்.


ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி தங்களது உயிரை தியாகம் செய்தனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் இணைந்தனர்.


19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் 10 லட்சம் மக்களை அடிமைகளாக மாற்றி பர்மா, மலேஷியா, இலங்கை , பிஜி, மொரிஷியசுக்கு அழைத்துச் சென்று தங்களது நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வைத்தனர். இது பற்றி பாடப்புத்தகத்தில் இல்லை. ஆனால், 'ஆங்கிலேயர்கள் வந்த 19ம் நூற்றாண்டு சிறந்த காலம். அவர்கள் தான் சமூக நீதியை கற்றுக் கொடுப்பதாக' இன்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.


நமது கதாநாயகர்கள், தியாகிகள், உயிர் தியாகம் செய்தவர்களை மறந்தால் அந்த சமூகத்திற்கு எதிர்காலம் கிடையாது. அந்த சமூகம் நன்றியற்ற சமுதாயம் ஆகும். அந்த நன்றியற்ற சமூகம், நன்றியற்ற மக்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது.


நமது மண்ணில் ஆயிரக்கணக்கானோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களை கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துள்ளனர். நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பது குறித்து நாம் இன்னும் படிக்க வேண்டி உள்ளது. உண்ணாவிரத போராட்டம் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்ததாக கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

 


💖அப்பா❤️

*அம்மா, கொஞ்சம் தாகத்துக்கு ஜலம் குடிச்சுக்கோ, வெய்யில் வேற இன்னிக்கு அதிகமா இருக்கு என்று தனது 75 வயது அம்மாவை அக்கறையோடு கேட்டான் ரகுராமன்.*

அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு போயிடலாம் என்றாள் அம்மா.

பேங்க் மேனேஜரைப் பார்த்து வாரிசு சர்டிபிகேட், பாஸ்புக் கூடவே ஒரு கவரிங் லெட்டர் எல்லாம் கொடுத்து விட்டு, "எங்க அம்மா சகுந்தலா பெயரில் எல்லாம் மாத்திடுங்க சார்," என்றான் ரகுராமன்.

பிறகு கொஞ்சநேரம் காத்திருந்தான்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான். அப்பா இறந்து போய் இந்த 45 நாட்களில் அம்மா ரொம்பவும் ஆடித்தான் போயிட்டா.

"அம்மா கவலைப் படாதேம்மா" என்று ரகுராமனும் அவன் மனைவியும் அடிக்கடி சொல்லி அவளை ஒருவாறு தேர்த்தி இப்போதுதான் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆகஸ்ட் மாசக் கடைசியில் மகன் வாசுவுக்கு உபநயனம் செஞ்சுடலாம்னு அப்பாவிடம் ஏப்ரல் மாதமே நாள் பார்க்கச் சொல்லி இருந்தான் ரகுராமன்.

விஷயத்தைக் கேட்டவுடன், பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம்போய் நல்ல நாள் பார்த்துக் குறிச்சுக் கொண்டு வந்தார் அப்பா.

அப்போது தெரியாது ரகுராமனுக்கு அடுத்த மாசமே அப்பா போயிடுவார்னு.

"ரகு, நீ பணம் எதுவும் கொண்டுவர வேண்டாம், என் பேரன் வாசுவை மட்டும் இங்கக் கூட்டிண்டு வா, எல்லா செலவையும் நான்தான் செய்வேன்" என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.

பென்ஷன் பணம், நிலத்தில் கிடைக்கும் கொஞ்ச மகசூல் பணம் இதெல்லாம் சேர்த்து வெச்சிருப்பாரோ. ஒரு வீடு ஊர்ல இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகைப் பணம் நேராக பேங்குக்கு வர்றமாதிரி பேசி வெச்சிருந்தார் அப்பா.

"லாக்கர்ல அதிகம் பொருட்கள் இல்ல, எதுக்கு வேஸ்ட்டா அதுக்கு வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்கணும்" னு அம்மா சொன்ன போது, "இருக்கட்டும் நம்ம பையன் சீக்கிரம் நகைகள் வாங்கிண்டு வந்து அடுக்குவான், இருக்கட்டும்" னு சொன்னார்.

"ரொம்ப தைரியமான மனிதர் என் அப்பா" என்று ரகுராமன் மனதுக்குள் தன் அப்பாவைப் பற்றி சிலாகித்துக் கொண்டான்.

பி காம் படிச்சு முடிச்சு ஆறு மாதத்துக்குப் பிறகு TVS கம்பெனி, சோளிங்கர் பிராஞ்சுல வேலை கிடைச்சு லெட்டர் வந்தவுடன், மாயவரம் ரயில்வே ஜங்க்ஷனுக்குப் போய் செங்கல்பட்டுக்கு டிக்கெட் போட்டு வந்தார் அப்பா.

"நேரா செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போ அங்கேர்ந்து சோளிங்கர்க்கு பஸ்ல போயிடலாம். மெட்ராஸ் பொய் சோளிங்கர் போனா 3 மணிநேரம் டைம் வேஸ்ட்" என்றார். பிறகு, "செங்கல்பட்டு ஸ்டேஷன்ல இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல நரசிம்ம விலாஸ் னு ஒரு ஹோட்டல் இருக்கு, பேர பார்த்துட்டு அது சைவ ஹோட்டல் னு நெனைச்சு போயிடாதே பேர அப்படி வெச்சு ஏமாத்தறான். அது அசைவ ஹோட்டல், நன்னா விசாரிச்சுட்டு நல்ல ஹோட்டலாப் பார்த்து சாப்பிடு" என்றார்.

முதல் மாசம் சம்பளம் வாங்கினவுடன் ரகுராமன் பெயரிலேயே ஒரு பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதாமாதம் சம்பள பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர்.

இன்று ரகுராமனுக்குத் திருமணமாகி 15 வருடம் முடிந்த நிலையில், பிள்ளைகள் படிப்பு, நகர வாழ்க்கையில் வாடகை, இதர செலவுகள் என்று நிறைய செலவுகள்.

எந்த மாதமும் அப்பா ரகுவிடம் செலவுக்கு பணம் எடுத்துக்கொடு எனக் கேட்டதேயில்லை. மாறாக தீபாவளி, சங்கராந்தி, கார்த்திகை தீபம், ஆடிப் பெருக்கு என்று எல்லாருக்கும் டிரஸ் வாங்கி அனுப்புவதும் "டவுன்ல இதெல்லாம் உனக்கு செய்ய நேரமே இருக்காது" என்று அம்மா பக்ஷணங்கள் செயது அனுப்புவதும் வருஷா வருஷம் நடந்த நிகழ்வுகள்.

அப்பாவும் அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அனுப்பி வைப்பான் ரகு. ஒவ்வொரு முறையும் பேரனுக்குச் செயின், மோதிரம், சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார் ரகுராமனின் அப்பா.

அவருக்கு செலவுக்கு இருக்கான்னு எப்போதாவது கேட்கும்போது "நிறைய இருக்கு, கவலைப் படாதே பகவான் குடுக்கறதை பத்திரமா வெச்சு செலவு பண்ணனும்"னு சொல்வார்.

"சார், மேனேஜர் கூப்பிடறார்" என்று வங்கி ஊழியர் கூப்பிட நினைவுக்கு வந்தான் ரகுராமன். அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே போனான்.

"உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல ஒரு லட்சத்து எழுபதாயிரம் இருக்கு, அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா", என்றார். ரகு, "சரி" என்றான்.

அம்மாவோ உடனே, "அது வாசுவின் உபநயனத்துக்கு நீ எடுத்துக்கோ அதுக்குத் தான் உங்க அப்பா வெச்சிருந்தார்" என்றாள். இந்த நிலைமையில் உபநயனம் எப்படிம்மா என்றதற்கு "அது எப்போ செய்தாலும் இந்தப் பணத்துலதான் செய்யணும், அதுதான் அப்பாவோட ஆசை" என்றாள் ரகுராமனின் அம்மா.

ரகு, "அம்மா சரி போவோம்"னு கிளம்ப வங்கி மேனேஜர், "லாக்கர்ல எதுவும் பார்க்கலியா" என்றார்.

"அதை மறந்தே போய்ட்டோம், சரி அதுல வெள்ளி டம்ளர் வெள்ளி சொம்பு தான் இருக்கும்"னு ரகுராமன் சொன்னான்.

எதற்கும் பார்க்கப் போனார்கள்.

அப்பா வைத்திருந்த லாக்கர் சாவியைப் போட்டுத் திறந்து பார்த்தபோது உள்ளே 2 பேப்பர்க் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவை அந்த பேங்க்கின் ஷேர் பத்திரங்கள். 500 ஷேர்கள். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு. எல்லாவற்றையும் அம்மா பெயருக்கு வாங்கி வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட 5 லட்சம் ருபாய் மதிப்புக்கு.

மேலே ஒரு கடிதம். அதில் "என் காலத்துக்குப் பிறகு என் மனைவி சகுந்தலாவுக்கு இந்த ஷேர்கள் உபயோகமாகட்டும்"னு என்று சுருக்கமாக எழுதி இருந்தார் அப்பா.

அதற்கும் கீழே ஒரு சுருக்குப் பையில் என்னவோ இருந்தது, என்ன என்று பார்த்தால் ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!

அவற்றைப் பார்த்த பிறகு ரகுவுக்குத் துக்கம் அடக்கமுடியவில்லை.

பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு பிளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான் ரகு.

சற்றுத் தள்ளி நின்றிருந்த வங்கி மேனேஜர், "ரகுராமன் சார், தண்ணீர் குடிங்க" என்று ஆசுவாசப்படுத்தினார்.

அம்மாவைப் பார்த்தான் ரகு. அவள் கண்களிலும் சில துளி கண்ணீர் இருந்தது. ரகுராமனுக்கு அம்மா ஆறுதல் சொன்னாள்.

வீட்டுக்கு வரும் வழியில் ஆட்டோவில் வரும்போது அம்மாவிடம் கேட்டான் ரகுராமன்.

"எனக்குன்னு ஒரு செலவு கூட வெக்கலியே அப்பா... உனக்குக் கூட பேங்க் ஷேர் அஞ்சு லட்சத்துக்கு வாங்கி வெச்சுட்டுப் போய்ட்டார்.

அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்துண்டிடுருக்கு, எனக்கு செலவு எதுவும் வைக்கலியே" என்றான் அம்மாவின் கரத்தை பிடித்துக் கொண்டு

*"அதாண்டா அப்பா" என்றாள் ரகுவின் அம்மா.*

*அப்பா இறந்தபிறகே உலகம் அவரைப் புரிந்துகொள்கிறது.*

*தாய் பத்துமாதம் சுமந்தாள் என்றால், தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் மனதிலும் தோளிலும் சுமக்கிறான்

நன்றி.. திரு.குமார் சுப்ரமணியம்

செவ்வாய், 12 நவம்பர், 2024

பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்

 


பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்  வெளியீட்டு விழா என்பது வழக்கமான புத்தக வெளியீடூ விழா அல்ல, நவீன வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்நாள்.


இந்திய முதல் சுதந்திர போர் சிப்பாய்கலகம் அல்ல. பாஞ்சாலங்குறிச்சி போர்கள் தான் என்பதை ஆவணப்படுத்திய விழா. வரலாற்றில் இடம்பெறுவதும், வரலாற்றை மாற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அத்தகைய நிகழ்வை, தன் வாழ்வில் கொண்ட கொள்ளைகளில் ஒன்றாக கடைசி வரை நின்று வென்று, இந்திய வரலாறுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழுக்கும், சந்ததியினருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல் வெளியீட்டு விழா மூலம் நடத்தி காட்டியிருக்கும் அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள், சரித்திரத்தின் பக்கங்களில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமானவர்.


தமிழக ஆளுநர் மாளிகையில், மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களது பொற்கரங்களால் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூலை வெளியிட்டது முதல் அந்த புத்தகத்தை எழுதி தொகுத்தது வரை அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் பணியை பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் பிறக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


வரலாற்றில், பாஞ்சாலங்குறிச்சியும், வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரும் உச்சரிப்பும் இன்றி எப்படி இந்தியாவின் வீரத்தையும், விடுதலை போராட்டத்தையும் பேச முடியாதோ, அது போல,  பாஞ்சாலங்குறிச்சிக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் புகழ் சேர்கின்ற "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு பணியை செய்து முடித்த அண்ணன் திரு.பெ.செந்தில்குமார் அவர்கள் இன்றியும் இனி நவீன வரலாற்று பக்கம் நகலாது. 


வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்! பரவட்டும் பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூல்! பேசட்டும் பெ.செந்தில்குமார் எழுத்துக்கள்!


வாழ்த்துக்களுடன்...

அன்புத்தம்பி : ஆ.வள்ளிராஜ்

 கேள்வி :

வங்கியில் நாம் அடுத்த அடுத்த உயர் பதவிகளை அடைவது எப்படி
என் பதில் :🥰👍📡🌈🏡
இன்று வங்கி பணியில் 6 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இன்று சென்னையில் பயிற்ச்சியை முடித்துக்கொண்டு புதிதாக உதவி மேலாளர் பதவியை அடைந்த இருக்கும் வங்கி அதிகாரி உடுமலை ஜெயராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்றைய இளைஞர்கள் பலர் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர்.
ஏனெனில் ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ,வங்கி பணியில் தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் .
அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரே பொழுதில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல.
இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது
இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்: *
தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும். மொழி அறிவும் இருக்க வேண்டும்.
* தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
* மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.
* தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.
* ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
* நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.
* நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
* வழக்கமான செயல்களில் நிலைத்தன்மை இருக்க வேண்டும்.
முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும், நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.
வங்கி பணி வாடிக்கையாளர் சேவை என்பதால் பொறுமையும் ,சகிப்புத்தன்மையுடன் ,பணியாற்ற வேண்டியது முக்கியமானது .
வாழ்த்துக்கள் ..நன்றி
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
(Home Loans,Home Loans To NRIs,9944066681 👍💦⛈️📚🖋️👍🏡🙏

 மனசுவிட்டுப் பாராட்டுங்க!

❤
ஆன்ட்ராய்டு செல்பேசியில் விதவிதமான ரீல்ஸ்கள் வருகின்றன. மகள்கள் பாடல் நிகழ்ச்சியில் அருமையாகப் பாடி அசத்துகிறார்கள். அரங்கமே எழுந்து கை தட்டுகிறது! பெற்றோர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள். கண்ணீர் மல்க மகள்களை அரவணைக்கிறார்கள். இன்னொரு ரீல்ஸில், நீயா நானா பேச்சில், எங்களை அப்பாக்கள் தொடக்கூட செய்வதில்லை... அப்பாவின் தொடுகைக்காக... தலைகோதலுக்காக... அரவணைப்புக்காகத் தவிக்கிறோம் என்கிறார்கள் மகள்கள்! என்னவொரு விந்தை!

நாம் அனைவருமே தனித்தனி மனிதர்கள் தான்... அதுமட்டுமல்ல, உணர்வுள்ள மனிதர்கள்! பாசம், பரிவு, காதல் போன்ற உணர்வுகள் தான் நம்மை ஒருங்கிணைக்கின்றன. இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தான் சமூகத்தின் பார்வை, தோல்விகள், தேடல்கள், இயந்திரத்தன வாழ்க்கை எனப் பல்வேறு காரணிகள் குறுக்கே நிற்கின்றன. இவற்றைத் தாண்டி நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அங்கே ஓர் பிணைப்பு உருவாகிறது. நாம் நம் குழந்தைகளுக்காகவோ... குழந்தைகள் தங்கள் பெற்றோருக்காகவோ எவ்வளவோ செய்தாலும், பொதுப்பார்வையில் அவை அனைவரும் செய்யக்கூடியது தானே என்பதாக இருந்தாலும், அதற்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையை உணர்ந்து பாராட்டும்போது... தட்டிக்கொடுக்கும்போது அங்கே ஓர் முழுமை, நிறைவு கிடைக்கிறதல்லவா? அது தான்... அதுக்காகத்தான் இந்த ஓட்டமெல்லாம்! ❤

கடந்த நான்கைந்து மாதங்களாக மகளின் கல்விக்கடனுக்காகத் தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தேன். இன்றுதான் அதன் நிறைவுப்பகுதியை எட்டினேன். இதேபோன்ற அலைச்சலை பத்தாண்டுகளுக்கு முன் வீட்டுக்கடனுக்காக அலைந்தபோது அனுபவித்திருக்கிறேன். இப்போது மீண்டும் அதேபோன்ற அனுபவம். எனது அக்கவுண்ட் உள்ள செங்குன்றம் வங்கிக்கிளையில், கல்விக்கடன் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் வங்கி அலுவலரை சந்திப்பதற்காகவே மூன்று முறைக்கு மேல் அலுவலகத்துக்கு பெர்மிஷன் போட்டு வங்கிக்கு சென்றுவர வேண்டிய நிலை. அதன்பின் மகளோடு இணைந்து வங்கிக்கு சென்று வங்கிக்கடன் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடிப்பதற்குள் வங்கியில் ஆடிட்டிங் வந்து, வங்கி மேலாளர் மாற்றப்பட்டு, தற்காலிக மேலாளர், அடுத்த மேலாளர் என்று மூன்று மேலாளர்களைப் பார்த்தாச்சு! அதன்பின் வங்கிக்கடன்களை ப்ராசஸிங் செய்யக்கூடிய மைய வங்கிக்கு சென்று, ஒருவழியாக அதற்கான அனைத்து வேலைகளையும் முடிச்சாச்சு!

இதற்காக இன்றைய தினம் மகளை அழைத்துக்கொண்டு, உடன்வந்த கனமழையையும் அழைத்துக்கொண்டு டூவீலரில் நீண்ட தூரம் பயணித்து, ஐய்யப்பன்தாங்கலிலுள்ள மைய வங்கியில், உரிய அலுவலர் வருவதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, அதன்பின், வடிவேலு சொல்வதுபோல் மடுவுக்கு ஒரு கையெழுத்து என்பதாக பக்கம் பக்கமாக கையெழுத்துகளைப் போட்டு முடித்து, ஒருவழியாக வங்கிக்கடனுக்கு ஓகே வாங்கியாச்சு! இந்த கல்விக்கடனுக்காக அலைந்த ஒவ்வொரு நாளிலும், அலுவலகத்தில் பெர்மிஷன், மகளின் கல்லூரியில் விடுப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துச் செல்வதும்... இடையே செல்பேசியில் கல்விக்கடன் ப்ராசஸ் குறித்து வங்கி அலுவலரிடம் செல்பேசியில் விசாரிக்கும்போது, ஒருவித ஒவ்வாமையோடு அவர்கள் தரப்பில் அரையுங்குறையுமாகப் பதில் வருவதும்... அதையும் பொறுத்துக்கொள்ளும் தருணங்களிலெல்லாம்... எப்படி இப்படி நான் மாறிப்போனேன் என்று என்னையே நான் ஆச்சர்யமாகக் கேட்டுக்கொள்வேன்!

தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக... முன்னேற்றத்துக்காக... அவரவர் வருமானத்துக்கேற்ப... வாழ்க்கைச்சூழலுக்கேற்ப... ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொருவகையில் மெனக்கெடுகிறார்கள்... தங்கள் சக்திக்குட்பட்டோ, மீறியோ தங்கள் பிள்ளைகளுக்காக முடிந்ததை செய்துகொடுக்கிறார்கள். இது தானே பெற்றவர்களின் கடமை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம் தான். கடமையை கடமையே என்று செய்வது வேறு, உளப்பூர்வமாக மெனக்கெடுவதென்பது வேறு... ஒவ்வொரு முறையும் பிள்ளைகளுக்காக ஒன்றை செய்யும்போது, அது, பிள்ளைகளுக்கு பிடித்த சமையலாகவும் இருக்கலாம்... பிள்ளைகளுக்கு பிடித்ததாக எடுக்கும் உடுப்பாகவும் இருக்கலாம்... அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை நிறைவேற்றுவதாக இருக்கலாம்... அதை பிள்ளைகளுக்காக செய்து தரும்போது பெற்றோரின் மனதுக்குள் ஓர் நெகிழ்ச்சி ஏற்படும்... அதை வெறும் கடமை என்று சொல்லிவிட முடியாது! அதற்கும் மேலான உணர்வு! அப்போது பிள்ளைகளோ, மற்றவர்களோ பாராட்டுகிறார்களோ இல்லையோ, மனசாட்சி பாராட்டும்! அது ஓர் நெகிழ்வான அனுபவம்! ❤

அதேபோல் பிள்ளைகள் தரப்பிலும், படிப்பு, விளையாட்டு, வீட்டுப்பணிகள், சமூகப்பணிகளென ஒவ்வொன்றிலும் ஏதேனுமொன்றை அருமையாக, மெனக்கெடலோடு செய்துமுடிக்கும்போது அவர்களுக்குத் தேவை ஓர் பாராட்டு! சின்னதாக தலைகோதல்! அரவணைப்பு! இங்கே அனைவருமே பெரிதாக சாதித்துவிட முடியாது... அது பெற்றோரானாலும், பிள்ளைகளானாலும்... ஆனபோதும், ஒருவருக்கொருவர் பாசப்பிணைப்போடு, அன்போடு செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் பாராட்டும்போது, அத்தனை மன வலியும், உடல் வலியும் பறந்துபோகும்... மறந்துபோகும்! ❤

இதைத்தான் குறுந்தொகை பாடலொன்றில், கூடலூர் கிழார்,
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே" எனக் குறிப்பிடுகிறார்.

இதன் அர்த்தத்தை சுருக்கமாகச் சொல்வதானால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த தலைவி, தனிக்குடித்தன வாழ்க்கையில், மிகவும் சிரமப்பட்டு கணவனுக்காக மோர்க்குழம்பு செய்து உணவு படைக்க, அதை உண்ட கணவன், "நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது" என்று பாராட்டவும், சமையலுக்காக அவள் பட்ட சிரமத்தையெல்லாம் மறந்து, முகம் மலர்வாள் என்கிறார். (அது சங்க காலச்சூழல்... இன்றைய காலத்தில் சமையலில் கணவனும் பங்கெடுப்பதே சுவை) இம்புட்டு தாங்க வாழ்க்கை! ❤

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

திங்கள், 4 நவம்பர், 2024

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...








 குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பயணம் ...

வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.
சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
சனீஸ்வர பகவான்
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.
ஆடித்திருவிழா..
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்புப் பூஜை, திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும். சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு, லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம், சோனைக் கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு சிறப்புப் பூசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
வழிபாடுகளும் சிறப்புகளும்..
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்
பயண வசதி
தேனி அல்லது சின்னமனூர் நகருக்குச் செல்ல வேண்டும். குச்சனூருக்கு தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆன்மீக பயணங்கள் மனதிற்கு இனிமையானவை ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681