புதன், 20 மார்ச், 2019

உடுமலைப்பேட்டை .....கல்திட்டை பாறைகள் பயணம்...(பாலா )
.பயணங்கள் முடிவதில்லை....மதகடிப்புதூர் ..சின்னார் ..தூவானம் ...ஆலம்பட்டி ..மறையூர்

                                         திருச்சியிலிருந்து நான், கண்ணன், தமிழகன் ஐயா ஆகிய மூவரும் காலை ஐந்து மணிக்குக் கிளம்பி பழனி சென்று அங்கிருந்து நாராயணமூர்த்தி அவர்களையும் சேர்த்துக்கொண்டு உடுமலைப்பேட்டையை நோக்கிப் பயமானோம். முதல்நாளே வந்து திருப்பூரில் தங்கியிருந்த சுகவன முருகன், வீரராகவன் ஐயா, சதாசிவம் ,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொதிகை அச்சகம் -அருட்செல்வம் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,சிவக்குமார் ஆகியோர் வேனில் 15 பேர்கொண்ட குழுக்களாக உடுமலைப்பேட்டையிலிருந்து  எங்களுடன் இணைந்துகொண்டனர். ஐவர் மலை ,மதகடிப்புதூர் பாறை ஓவியங்களை பார்வையிட்டு ,பயணத்தை தொடர்ந்தோம் ..அமராவதி அணைக்கு செல்லும் சாலையின் இடப்புறம் சாலை வழியாக  அனைவரும் மறையூர் பயணமானோம்.

அமராவதி அணைக்கு இடப்புறம் பிரிகிற இடத்தில தமிழக வனத்துறை செக்போஸ்ட் ஒண்ணு இருக்கு. அங்கே காரை நிறுத்தி அவங்க வெச்சிருக்கிற லெட்ஜர்ல பேரு அட்ரஸ் வண்டி விவரங்கள் எழுதிட்டு தான் போகணும். அது ரிசர்வ் ஃபாரஸ்டுங்கறதாலும், யானைகளின் வாழ்விடம்ங்கறதாலும் இந்தக் கெடுபிடிகள்.  அங்கே இருக்கிற ஃபாரஸ்ட் ஆஃபீசர்ஸ் சுருக்கமான இன்ஸ்டிரக்ஷன்ஸ் தர்றாங்க. மெதுவா போங்க, காரில் பாட்டு சவுண்டா வெக்காதீங்க, ஹாரன் அடிக்காதீங்க, யானைகளை பார்த்தா டென்சன் ஆகாதீங்க. காரை ஆஃப் பண்ணிட்டு கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டுட்டு சைலண்டா இருங்க. யானை பாட்டுக்கு போயிரும்னாங்க. தனியா போவாதீங்க, எதாவது ஒரு வண்டியோட சேர்ந்தமாதிரி போங்கன்னு என்னமோ போருக்கு போற ரேஞ்சுக்கு அனுப்பி விட்டாங்க. ஏற்கனவே பயமில்லாமல் இருந்த நமக்கு இப்போதுதான் பயமெடுக்க ஆரம்பித்தது.  வண்டி ஓட்டுநரைக் வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேரவேண்டிய இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். ஆங்காங்கே அவர்களை வளப்படுத்தவும் வேண்டியுள்ளது.

              செக்போஸ்ட் வரைக்கும் நன்றாகஇருந்த சாலை, அதுக்கப்புறம்  மோசமா இருந்தது. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் எங்களை ‘அன்புடன்’ வரவேற்றது. நாங்க பயத்தோடயே போனோம். ரெண்டு பக்கமும் அடர்த்தியான காடு. நடுவில் சின்னதா மேடும் பள்ளமும் குண்டும் குழியுமான ரோடு. 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளாக போகவேண்டும் எச்சரிக்கைப் பலகைகளும், அப்பகுதியில் வாழும் விலங்குகளைப்பற்றியும் ஆங்காங்கே எழுதிப்போட்டிருந்தனர். யானைகள் ரெண்டு பக்கமும் இருக்கும் , அப்பப்போ சாலையைக்கடந்து மறுபக்கம் போவும்னு சொல்லியிருந்தாங்க. அதனால ஒவ்வொரு திருப்பத்திலும், திரும்பனதும் யானை நின்னிட்டு இருக்குமோன்ற பயத்திலேயே வண்டி ஓட்டிட்டுப் போனோம்.

      தமிழக கேரள எல்லை வந்ததும் அங்கே  இரண்டு செக்போஸ்ட்.. தமிழ்நாட்டோடது ஒண்ணு, கேரளாவோடது இன்னொண்ணு. தமிழ்நாட்டு செக்போஸ்ட்டில் திரும்பவும் ஒருமுறை டீட்டெயில்ஸ் எண்ட்ரி பண்ணனும். தமிழ்நாடு செக்போஸ்ட் முடிஞ்சு 100 மீட்டர்லேயே கேரளா செக்போஸ்ட்.அங்கேயும் ஒரு எண்ட்ரி. நிறுத்திவைக்கப்பட்ட வண்டிகளின் மேற்கூரைகளின் மீது குரங்குகள் தாவி உணவுப் பொருட்களைத் தேடுகின்றன. எங்க வண்டிக்குள் எட்டிப் பார்த்த குரங்கு ஒன்று என்ன நினைத்ததோ ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டது.

             தமிழக பகுதிகளில் தான் யானை நடமாட்டம் அதிகம். எல்லாமே சமதளமான இடங்கள், ரெண்டுபக்கமும் காடு, இது மலை பகுதி தான். ஆனால் ரெண்டே ரெண்டு ஹேர்பின் பெண்டு தான். மத்தபடி வளைஞ்சும் நெளிஞ்சும் கிட்டத்தட்ட நேரா மேலேறும் ஒற்றை ரோடு தான். அதனால் யானை நடமாட்டம் அதிகம். ஆனால் கேரளா செக்போஸ்டில் இருந்து மேலே போற ரோடு முழுக்க மலைப்பாதை. ஒருபக்கம் மலைப்பாறை, மறுபக்கம் அதல பாதாளம். அதனால் யானை வர வாய்ப்பே இல்லை.  ஒருபக்கம் பள்ளத்தாக்கு என்கிற பயத்தை தவிர வேறே எதுவும் இல்லை.

            அழகுன்னா அழகு, அப்படியொரு அழகு. விதம் விதமான மரங்கள், பறவை சத்தம் , சில்லென்ற காற்று, அருகே வந்து விளையாட்டுக் காட்டும் மேகங்கள் என்று இவையெல்லாம் சேர்ந்து மறக்க முடியாத பயணமாக மாற்றிவிட்டது.

                மறொரு செய்தி கேரளாவைப் பொறுத்தவரை, எல்லா சாலைகளிலும், முறையான தெளிவான அறிவிப்புப் பலகை வெச்சிருக்காங்க. யாரையும் வழி கேட்டு தொந்தரவு செய்ய தேவையில்லை. ஒவ்வொரு சாலை பிரிவு, ஜங்க்சன், ஊர், கிராமம், எல்லாத்தை பத்தியும் தெளிவா போர்டுகள் வெச்சிருக்காங்க.அது என்னமோ தெரிலைங்க நம்ம ஊர்ல "இந்த ரோட்ல போனா மூணாரு வரும் " அப்படிங்கர ரேஞ்சுலேயேதான் மூணாரு பத்தி நம்ம ஆளுகளுக்கு தெரிஞ்சிருக்கு . ஏன் என்று தெரியவில்லை? நம்ம ஊர்க்காரர்கள் அந்த பக்கம் எட்டியே பார்த்ததில்லை .(ஹி...ஹி... நானும் அப்படித்தான் இன்னும் மூணாறே போனதில்லை)

                                மறையூர் கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தின் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இது இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ளஒருஇடமாக விளங்குகின்றது. உடுமலைப்பேட்டையிலிருந்து  கிலோமீட்டர்  தொலைவில் மறையூர்  அமைந்துள்ளது. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் அமைந்த ஒரே பகுதி இதுவாகும். பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும் இப் பகுதியின் கற்காலம் முதலான வரலாற்றைக் கூறி நிற்கின்றன.

           மறையூர் என்னும் பெயர் மறை , ஊர் என்னும் இரண்டு சொற்களால் ஆனது. மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுதியில் வாழ்ந்திருந்ததால் இதற்கு மறையூர் எனப் பெயர் வந்தது என்பது மரபு வழிக் கதை. எனினும் வரலாற்று அடிப்படையில் இதற்கு ஆதாரங்கள் இல்லை.

         மலைகள் நிறைந்த பகுதியாகையால் மலையூர் என்பது திரிந்து மறையூர் ஆகியிருக்கலாம் என்றும், மலைகளால் மறைக்கப்பட்டிருக்கும் ஊர் என்ற வகையில் மறையூர் என்று பெயர் பெற்றது என்றும், கிறிஸ்தவ ஆண்டு முறைத் தொடக்கத்தில் மறவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததனால், மறவூர்,மறையூர் ஆனது என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

              இந்த பகுதி முழுவதுமே கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுக்காவுக்கு உட்பட்டதுன்னாலும், பெரும்பாலானோர் தமிழர்கள் தான். எல்லாருமே தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகள், தமிழகத்தில் வேலை கிடைக்காமல் இங்கே வந்து பிழைப்பை நடத்துவோர்ன்னு தான் இருக்காங்க. எல்லாருமே தமிழ் பேசுறாங்க. இந்தத் தேவிகுளம் தாலுகாவை தமிழ்நாட்டோட சேர்க்கணும்னு பெரிய போராட்டமே 1956ல் நடந்தது. ‘பீர்மேடு, தேவிகுளம் போராட்டம்’ னு சொல்லப்படும் அந்த போராட்டம் மிக பிரபலம். ஆனால் கடைசி வரைக்கும் அந்த போராட்டம் வெற்றிபெறலை.

"தேவியாவது குளமாவது எல்லாமே இந்தியாவுலதானே இருக்குன்ணேன்...."

என்று காமராஜர் சொல்லிவிட்டார். தேவிகுளமும்,பீர்மேடும் கேரளாவுக்கே போயிருச்சு. ஆனாலும், எல்லா இடத்திலும் தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் இருக்கு. கேரள அரசின் அறிவிப்பு பலகைகளும் கூட தமிழில் இருக்கு. வியாபாரம், கடைகள், கைத்தொழில், விவசாயம்,தோட்டத்தொழில், ஹோட்டல். இது தான் அங்கே இருக்கிற பிழைப்பாதாரங்கள்.
               குறிச்சிக்கோட்டையை கடந்தபோது ‘ஒம்பதாறு’  என்ற ஊரைப் பார்த்த உடன் என் கணித மூளை வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒம்பதாறுக்கும் மூணாறுக்கும் இடையே  ‘ஆறாறு’ என்று ஒரு ஊர் வருமே என்று கேட்டேன்.

‘அப்படி ஒரு இடம் கிடையாது’ என்று 'சீரியசாக' பதில் வந்தது.

‘என் கணிதம்’  தோல்வியடைவதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே சின்னாறு கடந்ததும் மலை உயரமும் மலையாளமும் தொடங்கியது.

                கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு நட்சத்திர ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. காரணம் இந்த வனப்பகுதியில் உள்ள சீதோஷண நிலை நட்சத்திர ஆமைகள் வளர்வதற்கு ஏற்றதாக அமைந்து உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள் பிடிப்பட்டால் அவைகள் சின்னார் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம்.

                மறையூருக்கு சற்று முன்பாகவே சாலையின் வலதுபுறத்தில் ஆலம்பெட்டி பாறைஓவியங்கள் என்ற அறிவிப்புப் பலகையும் சில வாகனங்களும் தெரிந்தன. அங்கிருந்து ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வதற்கு குரும்பர் இன பழங்குடிகள் உள்ளனர். அரசே இவர்களுக்கான வேலைவாய்பாக இதை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு ஆளுக்கு 225 ரூபாய் வாங்குகிறார்கள், அதில் கூட்டிப்போகும் குரும்பருக்கு ஒரு பகுதியும், குரும்பர் இன முன்னேற்றத்திற்காக ஒரு பகுதியும் ஒதுக்கிக்கொள்கிறார்கள்.

  இதுபோன்ற திட்டத்தை தமிழகத்திலும் பாறைஓவியங்கள் போன்ற தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு பழங்குடிகளைப் பயன்படுத்தினால். பார்க்கப் போகிறவர்களுக்கும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பாகவும் திகழும் என்று எனக்குத் தோன்றுகிது.

 குரும்பர்கள் நாகராஜ், பழனிச்சாமி ஆகிய இருவரும் நம்மை பாறைஓவியங்கள் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். மலைமீது ஏறும்போது முதலில் டோல்மென்ஸ்(DOLMENS) எனப்படும் கல்திட்டைகள் நிறைய தென்பட்டன. கல்திட்டைகள் என்பவை பெருங்கற்காலத்தில் (MEGALITHIC AGE)வாழ்ந்த மக்கள் ஈமச்சடங்குகள் செய்யும் இடமாகும்.

 மலையேறி நடந்து செல்லும் வழியில் இவை நிறைய தென்பட்டன. நாங்கள் சென்ற வழியில் இருந்த ஒரு அருவியின் இடதுபுறத்தில் உள்ள பாறையில் ஓவியங்கள் உள்ளதை நாகராஜ் நமக்கு காண்பித்தார். அவ்ஓவியங்களில் இரண்டு மனிதர்கள் நிற்பது போன்ற நிலையிலுள்ள மூன்று இடங்களிலும், மான்போன்ற விலங்குகளும் சில குறியீடுகளும் காணப்படுகின்றன.

 இவையனைத்தும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சில உருவங்கள் கருப்பு நிறத்தில் காணப்பட்டாலும் அவை வெள்ளை நிறத்தில் வரையப்பட்டவையே, அவ்விடத்தில் சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட புகையால் அவை கருமையானத் தோற்றமளிக்கலாம்.
    ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குச் செல்லும்போது நாகராஜ், பழனிச்சாமி இருவரிடமும் மாறி மாறி குரும்பர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை நிலைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டேயும் அதற்கு அவர்களின் பதிலை பதிவு செய்துகொண்டேயும் வந்தோம்.ஒரு மலையின் உச்சியை அடைந்தபோது பழனிச்சாமி தொலைவில் கையைக்காட்டி

"அங்க தூரமா பாருங்க அந்த மலையில வீடுங்க இருக்கு தெரியிதா?"

எனக்கேட்டதும் நாங்கள் எல்லோருமே அவர்காட்டிய திசையில் பார்த்தபோது அங்கு குடியிருப்பு பகுதி இருப்பதை நன்றாக பார்க்க முடிந்தது.

"அதுதான் சார் எங்க ஊரு ஆலம்பட்டி"

     இங்கு இருக்கும் பாறைஓவியங்கள் ஆலம்பட்டி ஓவியங்கள் எனஅழைக்கப்பட காரணம் இவ்வூரின் பெயரே. எப்பொழுதும் ஒரு பாறைஓவியத்தை அதன் அருகிலுள்ள ஊரின் பெயரால் அழைப்பது மரபு. வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தில் உள்ள பெயர் பலகையில் 'ஆலம்பெட்டி ' என்று எழுதிப்போட்டிருந்தனர், மலையாளிகளுக்கு 'பட்டி' என்றால் கொஞ்சம் அலர்ஜி என்பதாலோ என்னவோ ! ! !

                மலைகளுக்கிடையே சென்ற ஒத்தையடிப்பாதை வழியே அழைத்துச் சென்றவர்கள், ஒரு மலைச் சரிவில் பெரிய பாறைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த குகைபோன்ற இடத்தினருகே வந்ததும், அனைவரையும் அருகே வரச்சொல்லி அங்கு வரையப்பட்டிருந்த சிவப்பு நிற ஓவியங்களைக் காட்டினார்கள். அப்பகுதியின் மொத்த நீளம் 60 அடியும் உயரம் 20 அடியும் இருக்கும். இயற்கையாகவே மூன்று பகுதிகளாக உள்ள இந்த பாறைகளில் செங்குத்தாக, சமமாக உள்ள பாறைப்பகுதிகளில் இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் இரண்டு மான்கள் மேய்ந்துக் கொண்டிருப்பது போன்ற ஓவியம் அளவில் பெரியதாகவும், அழகாகவும் வரையப்பட்டமை நமக்கு வியப்பை வரவழைத்தது. ஏனெனில்  அவ்வளவு உயரத்தை அடைந்து அங்கு காலத்தை வெல்லும் இத்தகைய ஓவியங்கலை வரைவதென்பது எளியவேலையல்ல என்பது புரிகிறது.

 மற்றொரு பாறையில் யானையோ அல்லது மாடோ செந்நிறத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ளது. இது சற்று சிதைந்த நிலையிலுள்ளதால் இதுபற்றி தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அடுத்தப் பாறையில் பெரிய உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் இல்லை என்றாலும் சிறிய அளவிலான வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் காணப்படுகின்றன. மேலும் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள எறும்புத்தின்னி, ஆமை, தேன்கூடு, மரம் முதலிய உருவங்களையும் காணமுடிகிறது.இவற்றில் எறும்புத்தின்னி, ஆமையின் ஓவியங்கள் மிக நன்றாக வரையப்பட்டுள்ளன.    இவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டு கிளம்பினோம். அடுத்து நம்மை வேறுஒரு மலைக்கு அழைத்துச் சென்றார்கள்,

  மீண்டும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நடந்தோம். தொலைவில் ஒரு மலையைக்காட்டி அங்குதான் போய்கொண்டிருக்கிறோம் என்றார்கள்.இப்போது தொலைவில் பார்த்த மலையின் மேல் பகுதியில் நின்றுகொண்டிருந்தோம். அங்கிருந்து பார்க்கும்போது சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளும் தெளிவாகத் தெரிந்தன. காலையில் நாங்கள் வண்டியில் வந்த சாலை பச்சை வனத்தில் கருமையான மலைப்பாம்பு படுத்துக்கிடப்பது போல தெரிந்தது. மதிய நேரம் ஆகிவிட்டதால் பசியெடுத்தது, ஆனால் எப்போதும் போலவே இம்முறையும் கிளம்பும் ஆர்வத்தில் உணவை எடுத்துவர மறந்துவிட்டோம். காலை உணவு உண்ட உணவகத்தில் எதற்கும் இருக்கட்டுமேயென்று பத்து சப்பாத்தி ஒரு தாளில் மடித்து வைத்தது நினைவில் வந்தது.  பிறகு அங்கேயே சாப்பிட முடிவெடுத்து சப்பாத்தியுடன் அவரவர்கள் எடுத்துவந்த பிஸ்கட்,, கடலைமிட்டாய், காராச்சேவு முதலியவற்றை உண்டு பசியாறிக்கொண்டோம்.

 இந்த ஓய்வு நேரத்தில் நாகராஜ், பழனிச்சாமி ஆகியோரிடம் குரும்பர்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றைக் கேட்டறிந்துக் கொண்டு அவற்றைப் பதிவும் செய்துகொண்டோம். நாங்கள் உட்கார்ந்திருந்த மலையில் சரிவில் சில ஓவியங்கள் இருப்பதாகவும் ஆனால் அங்கு செல்வது ஆபத்து என்றும் வேண்டுமானால் எங்களில் வயதில் குறைந்தவரும் வேகமாக மலையேறுபவரும் ஆபத்தென்றால் ஓடித்தப்பிக்கத் தெரிந்தவருமான ஒருவரை மட்டும் அழைத்துச் செல்ல சம்மதித்தனர். பின்பு அர்களாகவே கண்ணனை தேர்ந்த்தெடுத்து  அவரை நாகராஜ் கூட்டிச்செல்வதாக முடிவெடுத்தனர். நாங்கள் எல்லோரும் எங்களிடமிருந்த கேமராக்களை அவரிடம் கொடுத்தனுப்ப, சரிவில் இறங்கிய அவர்கள் எங்கள் பார்வையிலிருந்து மறைந்தனர்.

 மலைப்பகுதிகளில் நீண்டதொலைவில் நடக்கும் தருனங்களில் , சிறிது ஓய்வெடுத்தாலும் அது நமக்கு புத்துணர்ச்சியையூட்டும். அரைமணி நேரமிருக்கும் போன இருவரும் வந்துவிட்டார்கள். அத்துடன் முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்க ஆம்பித்தோம்.

   வந்த வழியிலேயே இறங்காமல் வேறு பாதையில் கூட்டிப்போனார்கள் எனவே எங்கள் வண்டி நின்ற இடத்தை விட்டு சற்றுத்தள்ளியே சாலையை அடைந்தோம். வரும் வழியில் அவர்கள் இருவரும் காட்டில் உள்ள மூலிகைககளைப் பற்றியும், அவர்களின் மருத்துவ அறிவுப் பற்றியும் கூறிக்கொண்டே வர அனைத்தையும் பதிவு செய்துக்கொண்டோம்.

 மலையிலிருந்தபோது தொலைவிலுள்ள மலையைக் காட்டி அங்கு மற்றொரு பழங்குடி இனம் முதுவன் வசிப்பதாகவும் அவர்கள் எப்போதுமே தலையில் முண்டாசுக் கட்டியிருப்பார்கள் என்றும் எக்காரணம்கொண்டும் அதை கழற்றமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்கள். கீழே இறங்கிவரும்போது சாலையின் ஓரமாக அவர்கள்சொன்ன அடையாளத்தில் ஒருவர் சென்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிச்சென்று அவருடன் பேச ஆரம்பித்தோம்.  

அவர் முதுவன்தானாம், தனது பெயர் .......       என அறிமுகப்படுத்திகொண்ட அவர் முதுவன் இனத்தைப்பற்றி விரிவாகவே பேசினார். முதுவன்கள் அந்தக் காலத்தில் சாமி சிலைகளை முதுகில் சுமந்து  சென்றவர்களாம், இப்போதும் தங்கள் குழந்தைகளை முதுகில் துணியால் கட்டி சுமந்து செல்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளனராம். அவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டிருந்தபோது, வனத்துறை ஜீப் ஒன்று அருகில் வந்து நின்றது. நாம் கையில் மைக்கெல்லாம் வைத்திருப்பதைப்பார்த்த அந்த வனத்துறை அதிகாரி நம்மை பத்திரிக்கைகக்காரர்கள் என்று நினைத்திருப்பார்போல

" ட்ரைபில் பீப்பிள்ச டிஸ்டர்ப் பண்ணாதீர்கள் "

என்று கூற ,நமக்கும் அது சரியெனப்பட அத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டு, நாகராஜ் மனைவி கொடுத்த சூடான சுவையான தேநீரின் சுவையை நாக்கிலும் நாகராஜ், பழனிச்சாமி ஆகியோரின் நினைவுகளை மணத்திலும் தாங்கியவாறு மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

             உடுமலைப்பேட்டை - மூனார் சாலையில் மறையூருக்கு முன்பாக 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது “அழிஞ்சுவாடு” என்னும் சிற்றூர். இங்கு கல்திட்டைகள்(Dolmens) நூற்றுக்கணக்கில் இருப்தாக கூறி சதாசிவம் நம்மை அங்கு அழைத்துச் சென்றார்.
மன்னிக்கவும் சொல்ல மறந்துவிட்டேன் இந்த மொத்த பயணத்தையும் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தியவர் இந்த சதாசிவம், அவருக்கு நம் அறிவோம் அறிவிப்போம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

 இங்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கல்திட்டைகள் இங்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பாவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. ரஷ்யா, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும், பெருமளவில் காணப்படுகின்றன.

இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்லறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். இத்திட்டைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு அடுத்த பிறவியில் தேவைப்படும் உணவுப்பொருட்கள் , அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருப்பார்கள்.

 தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கல்திட்டைகள் பரவலாக காணப்படுகின்றன. கொடைக்கானல் காட்டுப்பகுதியில் மச்சூர், சோலைக்காடு, வில்பட்டி, பெருமாள் மலை, செண்பகனூர், தாண்டிக்குடி ஆகிய இடங்களில் இத்தகைய கல்திட்டைகள் காணப்படுகின்றன. இத்தகைய வரலாற்று சின்னங்களின் மூலமாக அவை உருவாகப்பட்ட காலத்திய சூழல்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகளை நாம் மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், கிருஷ்ணகிரியிலும், கொடைக்கானலிலும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்திட்டைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு மடங்கு எண்ணிக்கை கூட தற்போது இல்லை. மேலும் பல பதுகைகள் சிதைக்கப் பட்டுவருகின்றன. கல்திட்டைகள் அமைந்துள்ள பகுதிகளைக் காணும் பொழுது, அவைகள் எவ்விதமான பாதுகாப்புமின்றி உள்ளன. தொல்லியல் துறையின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதில் அந்த பகுதியின் முக்கியத்துவம், அவைகளின் பின்னணி உள்ளிட்ட எந்த செய்திகளும் இடம்பெறவில்லை.

                  அந்த இடங்கள் பெரும்பாலும் மறைவாக உள்ளதால், எவ்விதமான இடையூறும் இல்லாமல், மது அருந்துவதற்கு ஏதுவான இடமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடங்களைச் சுற்றிலும் காலி மது பாட்டில்கள் கிடக்கின்றன. ஒரு திட்டையில் இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகள், சமையல் பாத்திரங்களையெல்லாம் பார்த்தோம். குடும்பமே நடத்துகிறார்கள் போலிருக்கிறது. இதுவே அயல்நாடுகளில் உள்ள இத்தகைய கல்திட்டைகள் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப்படுகின்றன.

                   பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பாடங்களை இணைத்தல், அதற்கென தனி பாட வேளைகளை கட்டாயமாக்குதல், பள்ளி, கல்லூரி சுற்றுலாவில், பெரிதும் கவனிக்கப்படாத தொன்மையான இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும் வகையில் அரசுகள் உத்தரவு பிறப்பித்தல், பொதுமக்களுக்கும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகேயுள்ள பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குதல்  போன்ற  செயல்பாடுகள் மூலமாக நம் முன்னோர்களின் பழைய வரலாற்று எச்சங்களை நம் அடுத்த தலைமுறைக்கும் நிச்சயமாகக் கொண்டு செல்ல முடியும்.

            மேற்கே சூரியன் மறைய ஆரம்பித்தது. எங்கள் திட்டத்தில் மறையூரிலுள்ள பாறை ஓவியங்களைப் பார்க்க வேண்டியிருந்ததுது. அதை மற்றொரு பயணத்தில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

              மறையூரின் மற்றொரு சிறப்பு அங்கு ஓடும் ஜீப்புகள முன் கண்ணாடியின் மேலாக உள்ளங்கை அளவுக்கு பார்டர் , நடுவில் வெவ்வேறு பெயர்கள் எழுதிய ஜீப்புகள் மறையூருக்கும் மூணாறுக்குமாக டிரிப் அடிக்கின்றன.கேரளாவில் பஸ்களின் பெயரை பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளின் பெயரை பஸ்களுக்கும் வைத்திருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன்.

 ஜீப்புகளும் விதிவிலக்கல்ல என்று அவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகிறது. வாடிக்கையாகப் பயணம் செய்பவர்களை பற்றி ஓட்டுநர்களும் , ஓட்டுநர் மற்றும் ஓனர்களைப் பற்றி பயணிகளும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். குடும்ப விவகாரம் கூட தெரிந்து வைத்திருக்கிறது.

‘’உன் சம்சாரம் பிரசவத்துக்குப் போச்சே வந்திருச்சா?’’ என்கிற ரீதியிலான் கேள்வியும் பதில்களும் அவர்களிடையே இயல்பானது.தங்களது தோராயமான நாற்பது கிலோமீட்டர் பாதையில் உண்ணி அச்சன் வீடு எங்கே இருக்கிறது என்றும் சேட்டன் மாஸ்டர் வீடு எங்கே இருக்கிறது என்றும் ஜீப் ஓட்டிகள் அறிவார்கள்.

         இறங்கிவரும் வழியில் சாலையில் யானைகளைப் பார்க்க வாய்ப்புள்ளதாக சதாசிவம் கூற வண்டியே பரபரப்பானது. அனைவரும் இங்கும் அங்குமாக துளாவ ஆரம்பித்தனர். ஒரே மயான அமைதி.

திடீரென வீரராகவன் ஐயா கத்தினார்

 "அதோ".

ஆமாம் சாலையின் இடதுபுறத்தில் ஒரு யானை தன் குட்டியுடன் நின்றுக் கொண்டு எங்கள் வண்டியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 நாங்கள் சிரித்துவிட்டோம்.ஆமாம் அது கேரள வனத்துறையினர் வைத்திருந்த ஆளுயர 'பேனர்'. ஏனோ அன்றைக்கு யானைகள் நீர் அருந்திவிட்டு குடும்பத்துடன் சாலையைக் கடக்கும் அழகுக் காட்சியை காண முடியாமல் போய்விட்டது.

                ஒரேஒரு காட்டுப்பன்றி்தான் சாலையைக் கடந்தது அதுவும் எங்கே நாம் பார்த்துவிடப் போகிறோமே என்று வேகமாகவேறு ஓடிவிட்டது. ரொம்ப ஆர்வத்தில நண்பர் ஒருவர்  'ஒரு வேளை சின்ன யானை குட்டியாக இருக்குமோ?' என்று கேட்டுவைத்து எங்களை திடுக்கிட வைத்தார். ஒருவழியாக செக்போஸ்ட் வந்து நாங்கள் எங்கள் வண்டியில் திருச்சியை நோக்கியும் மற்றவர்கள் அவர்கள் வண்டியில் திருப்பூரை நோக்கியும் பயணமானோம்.

               பயணம் ...ஆம்... இந்த ஒற்றைச் சொல்லில்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. நாமிருக்கும் இப்புவி சூரியனை சுற்றிப் பயணித்துக் கொண்டிள்ளளது. அதில் இருக்கும் நாமோ அதனுள்ளே பயணிக்கிறோம். என்னைப் பொருத்தவரை பக்கத்துத் தெருவுக்குப் போவதே பயணம்தான். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம். அதனால்தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் அடுத்தப் பயணத்தில் சந்திப்போம்...

பயணங்கள் தொடரும்...

திங்கள், 18 மார்ச், 2019

குழந்தைகளின் முன்னேற்றம் ....

பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்ட‍ங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வருகிறானே! அப்போது ஆரம்பிக்கும் இந்த போராட்ட‍ம் அவன் மரணப்படுக்கையில் படுக்கும்போதுதான் ஓய்ந்து போகும்.

ஒரு குழந்தை, தனது தாயின் கருவரையில் இருந்து வெளியேறிய பிறகு அந்த‌ தாயின் மடியிலும், தந்தையின் மார்பிலும் படுத் துறங்கி, விளையாடி மகிழ்ந்த காலத்தி லிருந்து மெல்ல‍ மெல்ல‍ விடுபட்டு, பள்ளிப் பருவம் அடைகிறது. இந்த பள்ளிப் பருவத்தில், குழந்தை கள் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள‍ அல்ல‍து தெரிந் து கொள்ள‍ அதீத ஆர்வமாக இருப்பார்கள்.

அக்குழந்தையின் பெற்றோரோ! மாநிலத்திலேயே சிறந்த ஒரு தனியார் பள்ளியை தேர்ந்தெடுத்து, அதில் தனது குழந்தைக்கு இடம் கிடைக்க‍ தவமாய் தவமிருந்து கடன்பட்டு, அல்ல‍ல்பட்டு, ஒரு பெருந்தொகையை செலுத் தி, அக்குழந்தையை பள்ளியில் சேர்த்து விடுவர். அப்ப‍டி சேர்த்து விடப்படும் குழந்தை, விளையா ட்டிலோ, அல்ல‍து கலையிலோ, அல்ல‍து இசையிலோ ஆர்வம் கொண்டு கற்க விரும்புவர். இன் னும் சொல்ல‍ப் போனால், சிறு சிறு கண்டு பிடிப்புகளை அவர்களே சுயமாக சிந்தித்து, இளம் விஞ்ஞானிகளாக கூட இருப்ப‍ர். அத்த‍கைய குழந்தைகள் தனது திறமைகளை, முதலில் தனது பெற்றோரிடம் தான் காட்டுவர். அப்போது அவர்களது ஆர்வத்தை புரிந்து கொண்டு, அவர்களை மென்மேலும் ஊக்கு விக்க‍ வேண்டும். அதை விடுத்து, “இதை யெல்லாம் உன்னை யார் செய்ய‍ சொன்ன‍து. போன் எக்ஸாமில் நீ 80 மார்க் எடுத்த, வர்ர எக்ஸாம்ல நீ 100 எடுக்க‍ வேண்டாமா? நீ இப்ப‍டி படிக்காம கண்டதை செய்து கொண்டு இருந்தால் எப்படி மார்க் எடுப்பாய்? இதற்காகவா உன்னை ஊரிலேயே சிறந்த அந்த தனியார் பளியில் சேர்த்து, ஆயிரமாயி ரமாய் கொட்டி அழுதேன்!” என்று அவர்க ளை கடிந்து கொண்டு, அவர்களது கண்டு பிடிப்பு க்களை அல்ல‍து திறமைகளை ஏளனம் செய்வ‌தும், அவர்களை உதாசீனம் செய்வதும் எந்த விததில் நியாயம்?

குழந்தைகளை ஒரு வியாபாரப் பொருளாக, பெற்றோர்கள் பார் க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்க‍ வேண்டும். கல்வி என்பது இன்றைய உலகில் அவசியமான ஒன்றுதான்! அதற் காக அந்த குழந்தையை எந்நேரமும், நீ இதைப்படி, அதைப் படி நச்சரித்துக் கொண் டே இருந்தால், அவர்களது மனதில் அந்த கல்வியின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மையும் உருவாகி, பிற்காலத்தில் தனக்கு விருப்ப‍ம் இல்லாத துறையில் பணியாற்றிக் கொண் டு ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம் என்ற ஒரு அலட்சியப்போக்கு ஏற்பட்டு, வாழ்க்கையில் சாதிக்க‍ வேண்டும் என்ற முனைப்பின்றியும், தனது சிறுவயதில் தனது திறமைகள் அத்த‍னையும் ஒடுக்க‍ப்பட் டுவிட்டதே! என்ற ஏக்க‍மும் அதனால் உண்டாகும் மன அழுதத்திற்கும் ஆட்பட்டு நடை பிணமாக‌ வாழ வேண்டிய நிலைக்கு தள்ள‍ப்படுவார் கள். இவ்வ‍ளவு ஏன்? சிறு வயதில் தனது திறமைகளை அங்கீகரிக்காத அவனது பெற்றோர் களான உங்கள் மீது அவன் மனதில் ஆழ பதிந்து போன ஏக்க‍ங்களும் துயரங்களும், கோவமாக வெளிப்பட்டு உங்களையே கூட அவன் வெறுக்க‍ வாய்ப்பு ஏற்படும்.

கல்வியை ஆர்வமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இதில் எந்தவிதமான சங்கடமுமில்லை. ஆனால், கல்வியை தவிர இதர பிரிவுகளில் தங்களது தனித்திறமையை காட்டும் மாணவர்களுக் கு, அவர்கள் விருப்ப பிரிவை, முத ன்மையாக கொண்டும், கல்வியை இரண்டாம் பட்சமாக ஏற்று, அவர் களது தனித்திறமையுடன் கல்வி யிலும் சிறந்து விளங்கச்செய்ய‍ லாம்.

கூடுகட்டி முட்டை இட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள் கூட, தனது குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைக்கும் வரைதான் எங்கிருந் தோ தான்கொண்டு வந்த உணவை தனது அலகால் தனது குஞ்சு களுக்கு ஊட்டிவிடும்.அந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்து விட்டால், தான் உணவூட்டுவதை நிறுத்திவிட்டு, அந்த குஞ்சுப் பறவைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க் குமாம். கீழே விழுந்த குஞ்சுப்பறவை யோ தான் எங்கே கீழே விழு ந்து பல அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில் தனது சிறகுகளை படபட விரித்து பரந்து விரிந்து கிடக்கும் வானில் பறந்து செல் லுமாம்.ஏனோ இந்த மனிதன் மட்டும்தான்! தனது குழந்தைகள், தனக் கென ஒரு துறையை தேர்வுசெய்து அதில் முன் னேற விரும்பி தனது சிறகுகளை விரி த்து, வானில் பறக்க‍ முற்படும்போது, பெற்றோர்கள் அந்தக் குழந் தையின் சிறகுகளை ஒடித்துவிட்டு, தனது சிறுகுகளை விரி த்து அடைகாத்து வருவதுதான் வேடிக்கையி லும் விநோதம்.குழந்தைகள், தாங்கள் முன்னேற, ஒரு துறையை தேர்ந்தெடுக் கும்போது, அந்தக்குழந்தைகளை ஊக்கு வித்து, அவர்களுடன் நட்பு பாராட்டி, அத்துறையிலேயே அவர்க ளுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து, ஒரு நல்ல‍ சாதனையாளனாக உருவாக‌ பெற் றோர் தங்களது முழு ஒத்துழை ப்பை வழங்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள், பிற்காலத்தில் தங்களது வாழ்க்கையில்  வெற்றிகள் பல குவித் து, முழு மன நிறைவுடன் சாதனை கள் பல படைப்பது திண்ண‍ம்!.

எனது இனிய நண்பர் வினோத் (அதிஷா என்பது புனைபெயர் )..கோவையில் இருக்கும்பொழுது ..தினகரன் நாளிதழில் பணியபுரியும் பொழுது முதல் சந்திப்பு ..புத்தக விழாக்கள் பொழுது சந்திப்புகள் நிகழும் ......கடந்த 10 வருடங்களாக ...





அதிஷா 

ஞாயிறு, 17 மார்ச், 2019

நண்பன் ....(டெக்சாஸ் டு கோவை )


சிவா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது மணி 9.30. ஆங்காங்கே படுத்திருந்த சிலர், காபிக் கோப்பையைக் கையில் பிடித்தபடி நடந்துகொண்டிருந்த பயணிகள், ‘ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு’ குரல்கள், `தண்ணி பாட்டில் வாங்கிட்டு வரட்டுமாடி’ கொஞ்சல்கள், அவசர நடையில் இருப்பவர்களை இலகுவாகக் கடந்தபடி சுமையுடன் ஓடிக்கொண்டிருக்கும்  போர்ட்டர்கள்... எல்லா வற்றையும் தாண்டிப் பத்தாம் நம்பர் பிளாட்பாரத்தை அடைந்தான்.

சேரன் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்டு கோச் நிரம்பி வழிந்தது. அதற்கடுத்தது HA 1... A1 என்று ஆரம்பித்தன கோச் எண்கள். மொபைலைத் திறந்து எஸ்ஸெம்மெஸ்ஸை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். B2 - 24 என்றது ஐஆர்சிடிசி-யின் குறுஞ்செய்தி. ஒவ்வொரு பெட்டியையும் வேடிக்கை பார்த்தபடி B2 கோச்சில் சிவா ஏறும்போது மணி 9.45. இன்னும் 25 நிமிடங்களில் கோவையை நோக்கிப் புறப்பட இருந்தது ரயில்.

வெளியிலிருந்து உள்ளே வந்ததும், ஏசி கோச் இதம் தந்தது. 24-ம் எண்ணைத் தேடியபடியே ரயில்பெட்டிக்குள் நடந்தான். குழந்தை ஒன்று ஜன்னல் இருக்கைக்கு சண்டையிட்டுக்கொண்டிருந்தது. `சீட் மாத்திக்கலாமா?’ என்று ஓர் இளைஞனைக் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.  பெரும்பாலும் எல்லார் கையிலும் மொபைல். அதில் பலரது காதில் இயர்போன். 24-ம் எண் சைடு பர்த்தில், மேலே இருந்தது. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு ஷோல்டர் பேகை மேலே வைத்தான். ஏறி, இருக்கையில் இருந்த பெட்ஷீட்டை விரித்துகொண்டான். இருந்த சின்னத் தலையணையோடு பேகையும் தலைக்கு வைத்துப் படுத்துக்கொண்டு, மொபைலை எடுத்து, நெட்ஃப்ளிக்ஸைத் திறந்து, கொரியன் சீரிஸை விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தான்.
 
சில நிமிடங்களுக்குப் பிறகு ரயில் புறப்பட்டதா என்று பார்க்க கண்களைத் தாழ்த்தினான். இன்னமும் ஆட்கள் ஏறிக்கொண்டிருந்தனர். மணிபார்த்தான். 10.05. இயர்போனைக் காதிலிருந்து எடுத்து, தண்ணீர் பாட்டிலைத் தேடும்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“நான் போய்ட்டு மெசேஜ் பண்றேன். நீங்க கெளம்புங்க.  என்னமோ மொதவாட்டி நான் ஊருக்குப் போறமாதிரி நின்னுட்டே இருக்கீங்க. சொன்னா கேளுங்க. கெளம்புங்க. அஞ்சு நிமிஷத்துல வண்டி எடுத்துருவான்... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கிளம்புங்க...”

சிவாவின் காதுகள் அந்தக் குரலை உள்வாங்கி மூளைக்கு அனுப்பியது. மூளை அது ரம்யாவின் குரல்தான் என்று உறுதிசெய்தது.  நான்கு வருடங்களுக்குப் பிறகு ரம்யாவின் குரலைக் கேட்கிறான் சிவா. அதே மாடுலேஷன். அதே  ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

ரம்யா...!

“ஹேய்ய்... சிவா நாம லாஸ்ட் இயர் இன்டர்காலேஜ் காம்பெடிஷன்ல பார்த்திருக்கோம்ல? பி.எஸ்.ஜி. காலேஜ்தானே நீ? செம்ம டான்ஸுடா.”

கல்லூரி இறுதியாண்டில், ஒரு இன்டர்காலேஜ் விழாவில் ரம்யா சிவாவிடம் பேச ஆரம்பித்தது இப்படித்தான். ஆறு மாதங்கள் மிக நன்றாகவே போனது. அவள் ஹிந்துஸ்தான் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துக்கொண்டிருந்தாள். நன்றாகப் பாடுவாள். படிப்பாள். இருவருக்கும் ஒரு கதையில் நாயகன் - நாயகிக்குத் தேவையான எல்லாப் புரிதல்களும் பிடித்தங்களும் இருந்தன.

கல்லூரிப்படிப்பு முடிந்து ஒரு வருடம் இருவரின் நட்பும் தொடர்ந்தது. ரம்யா நடுவில் கீரநத்தம் செஸ் ஐடி பார்க்கில் வேலைக்குச் சேர்ந்தாள். சிவாவுக்கு ஹோப் காலேஜ் டைடல் பார்க்கில் ஒரு கம்பெனியில் வேலை. திடீரென்று அழைப்பாள்.

“சிவா... எங்க இருக்க? வீட்டுக்கு வா. ப்ரூக்ஸ் போலாம். படத்துக்குப் போகணும்.”

சிங்காநல்லூர் தாண்டி வெள்ளலூர் ரோட்டில் நான்கு கிலோமீட்டருக்கு அப்புறம் சிவா வீடு.  சாய்பாபா காலனி தாண்டி, கவுண்டம்பாளையம் போகும் வழியில் S, Q, W என சிக்கலான எழுத்துகளாக வளைந்து வளைந்து செல்லும் தெருக்கள் தாண்டி ரம்யா வீடு.

மாங்கு மாங்கு எங்கு பைக்கில் விரைவான். இருவரும் படத்துக்குப் போய் ஐபாகோவில் ஐஸ்க்ரீம் எல்லாம் முடித்துவிட்டு, வீட்டில் விட்டுவிட்டு வருவான். வாரம் இரண்டு மூன்று நாள்களாவது குறும்படத் திரையிடல், ஃப்ரெண்ட்ஸ் மீட்,  சினிமா என்று எங்காவது சந்திப்பது தொடர்ந்தது. அவளது பிறந்தநாளுக்கு கிஃப்ட் கொடுத்தபோது கைகள் நீட்டி அணைத்துக்கொண்டு ‘நீ ஸ்பெஷல்டா’ என்றதில் காதலை சிவா  உணர்ந்தான்.

ஒரு வருடத்தில் வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். ரம்யாவுக்கு அவள் தாய்மாமன் என்றால் அவ்வளவு பிரியம். அவர் திருமணமாகி திருப்பூரில் ஒரு கார்மென்ட் ஃபேக்டரி வைத்திருந்தார். அங்கிருந்து டிஷர்ட் எல்லாம் வாங்கி வந்து தருவாள். அந்தத் தாய்மாமன் ஒரு விபத்தில் இறந்துவிட, சுக்குநூறான ரம்யாவை தினமும் சந்தித்துத் தேற்றிக்கொண்டிருந்தான். இருவருக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது அந்தக் காலகட்டத்தில்தான். அப்போதெல்லாம் தூக்கமில்லாமல்  தவிப்பாள். இவனை அழைத்து, எதாவது பேசிக்கொண்டிருக்கச் சொல்வாள். இவன் அன்றைக்குப் படித்த புத்தகம், சினிமா என்று எதையாவது பேசுவான். “நான் பேசிட்டே இருக்கேன். உனக்கு தூக்கம் வந்தா தூங்கிரு. உன்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இல்லைன்னா நீ தூங்கிட்டன்னு புரிஞ்சுக்கிறேன்” என்பான் சிவா. அப்படிப் பல நாள்கள் அவளுடனே இருந்ததைப்போல உணர்ந்திருந்தான். ஆறுமாதங்கள் கழித்து அவள் பழையபடி ஆனாள். மீண்டும் சினிமா, குறும்படங்கள் என்று வார இறுதிகள் கழிய... இவனும் அவளுடனான நெருக்கத்தை ரகசியமாக ரசித்துவந்தான். அந்தக் குறிப்பிட்ட நாள் வரும்வரை.

ரஹ்மான் கான்செர்ட் ஒன்று கோவையில் நடந்தது. அவள் வெறிகொண்ட  ரஹ்மானிச ரசிகை.

``டிக்கெட் வேணும் சிவா... ரொம்ப நாளா ட்ரீட் கேட்கறீல்ல? டிக்கெட் மட்டும் வாங்கிக் குடுத்துடு. சண்டே நைட் ‘பைக் & பேரல்’ போறோம். டீல்?”

எப்படியோ யார் யாரையோ பிடித்து, இரண்டு டிக்கெட் வாங்கி அவளைப் பார்த்துக் கொடுத்ததும் கத்திய கத்தலில் ப்ரூக் ஃபீல்டே திரும்பிப் பார்த்தது.

“ஏய்.. எதுக்கு இப்படிக் கத்தற? எல்லாரும் பார்க்கறாங்க...”

“கார்த்திக்குக்கு ஒரு ரஹ்மான் லைவ் கான்செர்ட் போகணும்கறது வாழ்நாள் கனவு. டிக்கெட்டே கெடைக்காதுன்னு புலம்பினான். வாங்கிக் காட்டறேன்னேன். அதான் இவ்ளோ ஹேப்பி. நீ ஸ்பெஷல்டா” என்று இப்போதும் கட்டிக்கொண்டாள். சிவாவுக்கு எல்லாம் இருளாய்த் தெரிந்தது. அப்படியானால் அந்த ரெண்டாவது டிக்கெட் கார்த்திக்குக்கா?

கார்த்திக்?

ஒரே ஒருமுறை இன்ட்ரோ கொடுத்திருக்கிறாள். அவள் பக்கத்துவீட்டுக்காரன். குடும்ப நண்பன். பெங்களூரில் ஐடி வேலை.

ரம்யா சாதாரணமாகச் சொன்னாள். “சின்ன வயசுல இருந்து அவனைப் பிடிக்கும்டா.”

``யூ மீன்... ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?”

ரம்யா வராத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டவளாய்க் குனிந்தாள். அவளுக்கு அது செட்டே ஆகவில்லை!

“சொல்லவே இல்லையே நீ?”

“இல்ல சிவா... நான் லவ் பண்றேன். அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல. இப்ப நான் பாக்கற புராஜெக்ட் முடியப்போகுதுன்னு அவன்கிட்ட எங்கப்பா சொல்லியிருக்கார். உடனே அவன்  எனக்கும் பெங்களூர்ல - அவன் வொர்க் பண்ற கம்பெனிலயே - வேலை ஏற்பாடு பண்ணியிருக்கான். இப்ப நான் பாக்கறதவிட டபுள் சாலரி. ரெண்டு வாரத்துல இன்டர்வ்யூ. பெங்களூர்க்கு ஸ்லீப்பர் பஸ்லதான் போறோம். கரெக்டா  நாங்க போற அன்னைக்கு அடுத்தநாள் அவனுக்கு பர்த்டே. நைட் 12 மணிக்கு பஸ்ல வெச்சுதான் சொல்லப்போறேன். உன்கிட்டதான் மொதல்ல சொல்றேன். ஏன்னா நீ எப்பவுமே ஸ்பெஷல்” என்றாள்.

‘போடீ!’ என்று ஓங்கி அறையலாம்போல இருந்தது இவனுக்கு.

`இவளுக்கு டிக்கெட் புக் செய்ய, கூப்பிடும்போதெல்லாம் ஓடிப்போய் நிக்க, ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்க, தலைவலிக்குது என்றாலே டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி அழைத்துச்செல்ல... ‘வர்ற வழில சானிடரி நாப்கின் வாங்கிட்டு வாடா’ என்று சொல்வது உட்பட எல்லாவற்றுக்கும் நான்... லவ் பண்ண மட்டும் கார்த்திக்.’

“அவன்கூட இருந்தா ஒரு தனி ஃபீல். என்ன சொல்றதுன்னு தெரியல. அவன் மங்குணி. வேலை வேலை வேலைதான். கம்ப்யூட்டரைப் பிரிச்சு மேய்வான். எங்க ரெண்டு ஃபேமலிக்குமே லைட்டா ஒரு ஐடியா இருக்கு. சின்ன வயசுல இருந்து ஃபேமலி ஃப்ரெண்ட்ஸ் வேற.”

அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க “ஒரு அர்ஜென்ட் வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். அந்த ஒன்றரை வருட நாள்களில் சிவா, அப்படி அவளை சடாரென்று விட்டுப் புறப்படுவது அதுதான் முதல்முறை.

வீட்டுக்கு வந்ததும் அவளிடமிருந்து வாட்ஸ் அப் மெசேஜ் வந்திருந்தது. வேண்டுமென்றே அதைப் பார்க்காமல் விட்டான். பிறகு போனை எடுத்து ஆன்லைனில் இருப்பதாய்க் காட்டிக்கொண்டான். ஆன்லைனில் இருந்தும் அவளது மெசேஜைப் பார்க்காமல் இருப்பதை அவள் அறியட்டும் என நினைத்தான். இன்னமும் அவன் மனது நிலைகொள்ளாமல் தவித்தது. இப்போது அவள் மெசேஜுகளைப் பார்த்தான்.

 - என்னாச்சுடா உனக்கு?

 - எவ்ளோ சந்தோஷமா உங்கிட்ட ஷேர் பண்ணினேன்.

 - அப்டியே அம்போனு விட்டுட்டுப் போய்ட்டல்ல? திரும்ப வீட்டுக்குப் போக டாக்ஸிக்குக் காசிருக்கான்னுகூட நீ கேட்கலல்ல? உன்கூட வந்தா எப்பவும் நீ இருக்கன்ற தைரியத்துல வெறுங்கையோடதானே வருவேன்?

`அடே இளிச்சவாயா!’ என்பதைத்தான் இந்தப் பெண்கள் எத்தனை விதங்களில் அழகாகச் சொல்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டான் சிவா.

மெசேஜைப் பார்த்த ப்ளூ டிக் அவளுக்குத் தெரியட்டும். பதில் சொல்லாமல் இருப்போம். கிடந்து தவிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான் சிவா. ஆனால் அவளை ஆன்லைனில் காணவில்லை. வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறுவதும் மீண்டும் வாட்ஸ் அப் வந்து அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்ப்பதுமாய், சிவாதான் நிலைகொள்ளாம லிருந்தான்.

இரண்டு மணிநேரத்தில் குறைந்தது ஐம்பது முறைக்கு மேல் போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான். இரண்டு மணிநேரம் கழித்து,  அவளிடமிருந்து, `நீ என்னமோ சரியில்லை. நாளைக்குப் பேசறேன் உன்கிட்ட. எகெய்ன்... யூ ஆர் ஆல்வேஸ் ஸ்பெஷல் டு மீ. குட்நைட்’ என்ற மெசேஜ் வந்திருந்தது. அடுத்தநாள் அவள் அழைத்தபோது ‘will call later’ என்று மெசேஜ் அனுப்பினான். வெட்டியாக இருந்தாலும் பிஸி என்றான். சரியாக மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பாமல் இருந்தான். அவள் நேரடியாகக் கிளம்பி சிவாவின் வீட்டுக்கு வந்து வெளியே அழைத்துச் சென்றாள். “நீயே என்னைப் புரிஞ்சுக்கலைன்னா வேற யார் புரிஞ்சுப்பா?” என்று சண்டை போட்டாள். ‘உனக்கு என் ஃபீல் புரியவே இல்லையா ரம்யா?’ என்று கத்தவேண்டும் போலிருந்தது சிவாவுக்கு. கார்த்திக் இவர்களைவிட ஏழு வயது சீனியர். நிச்சயம் இவனைவிட அவளுக்குப் பொருத்தமாக இருப்பான் எனும் உண்மைவேறு சிவாவை அசைத்துப் பார்த்தது. பத்துவருட எக்ஸ்பீரியன்ஸ். சீனியர் புராஜெக்ட் மேனேஜர் வேறு. நிச்சயம் இவளுக்கு பெங்களூர் வேலை உறுதி.

அதற்குப் பிறகு இரண்டு வாரங்களில், அவளை அழைக்கும்போது கால்வெய்ட்டிங் வந்தால், சிவாவுக்கு கார்த்திக்கின் முகம் வந்து போகும். அவள் ஆன்லைனில் இருந்து, ப்ளூ டிக் வரவில்லை என்றால் கார்த்திக் மனதுக்குள் உருவமாய் வந்து சிரிப்பான். அப்படியே ப்ளூ டிக் வந்து 30 செகண்டுக்குள் அவளிடமிருந்து பதில் வரவில்லையென்றால் கை பரபரக்கும். ஃபேஸ்புக்கில் கார்த்திக் என்ற பெயரில் இருக்கும் எல்லாரையும் சல்லடை போட்டுத் தேடினான். அவளது ஃப்ரெண்ட்லிஸ்ட்டை இரண்டு மணிநேரம் குடைந்தான். அவளது கார்த்திக்கின் ஐடி எது என்று தெரியவில்லை. எதற்கோ அவள் சிவாவை அழைத்து யோசனை கேட்டபோது  “கார்த்திக்கிட்டயே கேளேன்” என்று சண்டை போட்டான்.

இனி அவள் தனக்கானவளாக மாறப்போவதே இல்லையென்று புரிந்துகொண்டான் சிவா.  “வர்ற சண்டே  ரஹ்மான் கான்செர்ட்... அடுத்த சண்டே பெங்களூர்” என்று அவள் அத்தனை சந்தோஷமாகப்  பகிர்ந்துகொண்டபோது, “என்னை விட்டு அவன்கூடப் போறது உனக்கு ஃபீலே ஆகலையா?” என்று கேட்டான்.

“என்னடா பேசற நீ? நீ வேற அவன் வேறடா. என் லைஃப்ல நீ, அவன் எடத்துக்கு வரலாம். ஆனா உன்னை மாதிரி எல்லாமுமான நண்பனா கார்த்திக்கால மாறவே முடியாது. நீ எப்பவுமே ஸ்பெஷல்” என்றாள். அவள் ‘நீ ஸ்பெஷல்’ என்றாலே இவனுக்குள் எரிச்சல் மூண்டது. பேசிக்கொண்டிருக்கும்போதே போனை நோண்டிக்கொண்டிருந்தது இவனுக்குள் வெறியைத் தூண்டியது. மீண்டும் பலமாக சண்டை ஆரம்பிக்க, அவளும் கோபித்துக்கொண்டு ‘என்னைக்காச்சும் உன்னை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கேனா?’ என்று கேட்டு சண்டை பிடிக்க... பொது இடத்தில் ‘போடீ...’ என்று திட்டிவிட்டு வந்துவிட்டான். அவள், இவன் முதுகில் சொன்ன ‘கெட் லாஸ்ட்’ இவனுக்குக் கிணற்றுக்குரலாய்க் கேட்டது.

அதன்பிறகு அவளை மொத்தமாகத் தவிர்த்தான். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், கால் என்று எல்லாவற்றிலும் பிளாக் செய்தான். ஆபீஸில் ரொம்பநாள் அவர்களாகவே கேட்டுக் கொண்டிருந்த ஆன்சைட்டை ஓகே செய்து டெக்ஸாஸுக்குப் பறந்தான். முழுவதுமாக வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ரம்யாவின் அத்தியாயம் தன் வாழ்வில் முடிந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.

 டெக்ஸாஸில் இருந்தபோது வாரத்துக்கு ஒருமுறை அம்மா அப்பாவிடம் ஃபேஸ்டைமில் பேசுவான். ஆறுமாதங்கள் சென்றிருக்கும்.  ஒருமுறை அம்மா “வீடியோ கால்ல வாடா” என்றாள். எப்போதாவதுதான் அவளாகக் கேட்பாள். சரி என்று வீடியோ கால் செய்தான். இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு, “டேய் ஒருநிமிஷம் யார் வந்திருக்காங்கன்னு பார்டா” என்றாள் அம்மா. டக்கென்று அம்மாவின் முதுகுக்குப் பின்னாலிருந்து ரம்யா வந்தாள். ஒருநிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் சிவா.

“அடேய் கோவக்காரா” என்றாள் ரம்யா. “எல்லாத்துலயும் பிளாக் பண்ணிட்டா சரியாப்போய்டுமா? உலகம் ரொம்பச் சின்னதுடா!” என்று சிரித்தாள். முன்னைவிட சற்றுப் பூசலாகத் தெரிந்தாள். “என் மெய்லுக்குக்கூட நீ ரிப்ளை பண்லைல்ல?” என்றாள்.

நான்கு மாதங்களுக்கு முன் அவளிடமிருந்து மின்னஞ்சல் வந்தது நினைவுக்கு வந்தது.  அப்போதிருந்த கொலவெறி மைண்ட்செட்டில் திறக்காமலே கிடப்பில் போட்டு அப்படியே விட்டுவிட்டான்.

ரம்யா திரும்பி அம்மாவிடம் “அம்மா... ப்ளீஸ்ஸ்ஸ்...” என்றாள். அம்மா புரிந்துகொண்டவளாக “தனியா பேசறியா... சரி கண்ணு...” என்று நகர்ந்து சென்றாள்.

“பாரு. அவங்க வயசுக்கு அவங்க எவ்ளோ புரிஞ்சு நடந்துக்கறாங்க. நீ ஏண்டா இப்படி இருக்க? ஏன் என்னை மொத்தமா அவாய்ட் பண்ற?” என்று கேட்டாள் ரம்யா.

“ப்ச்... விடுப்பா... சொல்லு” என்றான் முழுதாக கோபம் தணியாததைக் காட்டிக்கொள்ளும் குரலில்.

“கண்ண மூடு.”

“எதுக்கு?” என்று கேட்டான்.

``கண்ணமூடு. நான் சொல்றப்ப திற” என்றாள்.

கண்களை மூடினான். அவளிடமிருந்து  “இப்ப தொற” என்ற குரல் கேட்டதும் திறந்தான். வீடியோ காலிங் திரையை முழுவதும் மறைத்தபடி  `கார்த்திக் Weds ரம்யா’ என்றெழுதப்பட்ட திருமணப்பத்திரிகை இருந்தது. சில நொடிகளில், பத்திரிகை விலகி ரம்யா தன் முகம் காட்டினாள்.

“வீட்ல எல்லாரும் காலைல ஈச்சனாரில போய் மொத பத்திரிகை வைக்கறாங்க. நீ நம்பமாட்ட. நான் உடனே உங்கம்மாட்ட வந்து உனக்கு இன்னைக்கு வீடியோ கால் பண்ணச் சொன்னேன். உனக்குத்தான் மொத பத்திரிகை. இன்னும் உங்கம்மாக்குக்கூட ஏன் வந்திருக்கேன், எதுக்கு உன்கிட்ட பேசறேன்னு தெரியாது. நீ எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்டா” என்றாள்.

இவனுக்கு முன்பைப்போல கோபமோ ஆற்றாமையோ எதுவுமே இருக்கவில்லை. தன் மனது அமைதியாக இருப்பதைக் கண்டு அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. “கல்யாணத்துக்கு நீ நிச்சயம் வரணும். வர்லைன்னா கொன்னுருவேன்” என்றாள். போகப்போவதில்லை என்றாலும் அப்போதைக்கு சிரித்து “டிரை பண்றேன் ரம்யா” என்றான்.  

அடுத்தநாள் மீண்டும் மனது முன்பைப்போல கேள்விகள் கேட்க ஆரம்பித்தது. மண்டை குடைய, தன்னை ஏன் நிராகரித்தாள் என்பதை மனது அலைபாய்ந்தது. அம்மாவிடம் ``நான் வர்றது கஷ்டம்மா... இப்ப லீவே கேக்க முடியாது. நீ வேணா போய்ட்டுவா. அவளைப் பத்தி என்கிட்ட எதும் பேசாத” என்று சொல்லிவிட்டான்.  மீண்டும் சில மாதங்களிலேயே அவள் நினைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான். இரண்டு வருடங்கள் கழித்து ஒருமுறை கோவை வந்தான். அப்போதும் நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரையும் பார்த்துவிட்டுச் சென்றான். அப்போது நண்பர்களுடன் கழித்த ஒரு  நல்லிரவில் மட்டும் ரம்யா பற்றிய பேச்சு வந்து சென்றது. பெங்களூரிலிருந்து அவர்கள் சென்னைக்கு மாற்றலாகி செட்டில் ஆகிவிட்டார்கள் என்பதை அறிந்தான். ஆனால் கவனமாக, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அதைக் கடந்தான்.

அந்த வீடியோ காலுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்குப் பின் இன்றைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துதான் அவள் குரல் கேட்கிறான் சிவா. ரயில் இப்போது புறப்பட்டது. தனக்கடுத்த வரிசையில் சைடு பர்த்தில் கீழே இருந்தாள் ரம்யா. பேசுவதா வேண்டாமா என்று குழம்பினான். பிறகு தவிர்க்கலாம் என்று முடிவுசெய்து அமைதியாக மொபைலைக் கையில் எடுத்தான்.

சில நிமிடங்களிலேயே டிடிஆர் வந்து கைநீட்டினார். பர்ஸைத்தேடி, பான்கார்டை எடுத்து நீட்டினான். அப்போது அவருக்குப் பின்னால் வந்து, ரம்யா தன் ஐடி கார்டுடன் நின்றதைக் கவனித்தான். மிகச்சரியாக டிடிஆர், ரம்யாவை மறைத்துக்கொண்டிருந்தார்.  டிடிஆர் இவனது ஐடி கார்டை, வாங்கிச் சரிபார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்தார். அவர் இவனிடம் கார்டை நீட்டும்போது கொஞ்சம் நகர்ந்ததில், பின்னால் நின்றுகொண்டிருந்த ரம்யா சிவாவைக் கவனித்துவிட்டாள்.

“ஹேய்ய்ய்ய்ய்... சிவா...” என்றவள் டெசிபல் குறைத்து “வாட் எ சர்ப்ரைஸ்!” என்றாள். அவளது ஹேய்ய்ய்ய்க்கு விழித்து, நிமிர்ந்த சில கண்களிடம் சைகையிலேயே ஸாரி சொன்னவள் சிவாவை `இறங்கு இறங்கு’ என்று கைகாட்டிக்கொண்டே டிடிஆரிடம் கார்டை நீட்டி, சரிபார்த்து வாங்கிக்கொண்டாள்.

பொது இடம் வேறு. என்ன சொல்வதென்று குழம்பிய சிவா, தவிர்க்க முடியாமல் இறங்கினான். “இங்க வா” என்று உரிமையாய் அவன் கைபிடித்து அவளது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தாள்.

கொஞ்சநேரம் அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள சிரமப்பட்டான் சிவா. பாரதிராஜா, பாலுமகேந்திரா தொடங்கி மணிரத்னம், கௌதம் மேனன் என்று பலரும் காதல் காட்சிகளுக்கு ரயிலை சம்பந்தப்படுத்துவதில் ஏதோ நிஜம் இருப்பதாய் அந்த நிமிடத்தில் தோன்றியது அவனுக்கு. ஜன்னலுக்கு வெளியே உலகம் நகர்ந்து கொண்டிருந்தது. எதிரில் அமர்ந்திருந்த ரம்யாவின் கண்களில் கோடிசூர்யப்பிரகாசம்.

``ஒருநிமிஷம் இரு” என்றவள் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தாள். “கார்த்திக்... யு நோ ஹூம் ஐ மெட் இன் டிரெய்ன் நவ்... உன்னால கெஸ் பண்ணவே முடியாது” என்றாள்.

“சிவாவா?” என்றான் கார்த்திக் எதிர்முனையில்.

“ஹைய்ய்ய்யோ... ஹைய்ய்யோ... எப்படி கார்த்திக்?” என்று ஆச்சர்யம் கூட்டினாள் ரம்யா.

“வேற எதுக்கு உன் குரல் இவ்ளோ எக்ஸைட் ஆகப்போகுது?” என்றவன் “சிவாட்ட குடு” என்றான்.

சிவா முழுதாகப் புன்னகைக்காமல், மொபைலை வாங்கினான்.

``ஹலோ கார்த்திக், எப்டி இருக்கீங்க?”

“ஹாய் சிவா... பரவால்லியே, பேசறீங்க. அநியாயத்துக்கு இன்ட்ரோவெர்ட்னு கேள்விப்பட்டேன். டெக்ஸாஸ்ல இருந்து எப்ப வந்தீங்க? எவ்ளோ நாள் டிரிப்?”

 “நேத்துதான். மூணுவாரம் இருக்கேன் கார்த்திக்.”

“ஏன் கோவை நேரா போகாம சென்னை டு கோவை?”

“சென்னை ஆபீஸ்ல  ஒருநாள் அபீஷியல் வேலை இருந்தது. அத முடிச்சுட்டு அப்டியே வந்தேன். ஒரு டிரிப் ஆபீஸ் செலவு!”

“ரிட்டர்ன் சென்னைல இருந்தா... இல்ல...”

“இன்னும் டிசைட் பண்ல கார்த்திக்.”

“ஓகே... சென்னைல இருந்துன்னா ஒருநாள் முன்னாடி வந்துரணும். எங்ககூட இருந்துட்டு அப்றம் போலாம்” என்றான் கார்த்திக்.

“ஷ்யூர்” என்றவன் மொபைலை ரம்யாவிடம் கொடுத்தான். “ரொம்ப பயந்துட்டே வழியனுப்பினியே... இனி நிம்மதியா தூங்கு. என் ஸ்பெஷல் ஃப்ரெண்ட் இருக்கான்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் ரம்யா.

``உன்னைப் பத்தி நிறைய சொல்லியிருக்கேன் கார்த்திக்கிட்ட. சரி, நீ சொல்லு... எப்படி இருக்க? எப்ப கல்யாணம்? யாரையாச்சும் பார்த்துட்டியா?” என்று கேள்விகளை அடுக்கியவள், “நீ எங்க பார்த்திருக்கப்போற...” என்று பேச்சை நிறுத்தினாள்.
சிவா அமைதியாக நகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சிவா...”

“சொல்லு...”

“ஏன் என் கல்யாணத்துக்கு வர்ல? ஓகே. அவ்ளோ செலவு பண்ணி வரமுடியாது.  அட்லீஸ்ட் ஒரு விஷ் கூடவா பண்ணத் தோணல?”

சிவா அமைதியாக இருந்தான். அவளை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். என்னதான் அவள் மெதுவான குரலில் பேசினாலும் அந்த இரவின் அமைதிக்கு ஒலி அடங்கவில்லை.

``எனக்குக் கல்யாணமாகி நாலு வருஷமாச்சு சிவா. நீயும் வெளிநாடெல்லாம் போய் வேலை செஞ்சுட்டிருக்க. இனியும் இப்படி எதையும் எக்ஸ்ப்ரஸ் பண்ணாமயே இருக்கப்போறியா?”

சிவா தீர்மானித்தான். இந்த இரவில்... இந்த ரயிலில் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் போதுமென்று தோன்றியது.

“ரம்யா... நான் உன்னை லவ் பண்ணினேன்னு உனக்கு ஃபீல் ஆகவே இல்லையா?”

“இல்லையே. மொதல்ல நீ உன் லவ்வை எக்ஸ்ப்ரஸ் பண்ணியிருக்கியா?”

“உன்கூடப் பழகின ஒன்னரை வருஷத்துல நீ கூப்டப்பலாம் வந்து நின்னது... உனக்கு என்னவும்னா மொத ஆளா நீ எனக்குக் கூப்டறதுலாம்?”

 “அது கேர். அக்கறை. காதல்னு அதை நான் எப்படி எடுத்துக்கறது? நீ சொன்னியா?”

“சொன்னாத்தான் தெரியுமா?”

“ஆமா. சொன்னாத்தான் தெரியும்” தீர்க்கமாகச் சொன்னாள் ரம்யா. “அந்த ஒன்னரை வருஷத்துல எப்பவாச்சும் நீ என்கிட்ட சண்டை போட்டிருக்கியா சிவா? நான் வரச்சொல்லி வராம இருந்திருக்கியா? நான் பண்றது எதாவது பிடிக்கலைன்னு சொல்லியிருக்கியா? அதாவது கார்த்திக் மேல எனக்கு லவ் இருக்குன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி?”

சிவா முழித்தான்.  இல்லையே என்று தலையாட்டினான்.

“இல்லைல்ல? என்கிட்ட எதுக்குமே நீ கோவிச்சுக்கிட்டது இல்லை. சண்டை போட்டதில்லை. `வா’ன்னா சொன்ன நேரத்துக்கு வந்திருக்க. அப்படி இருக்கற ஒருத்தனை எப்படி என்னால லவ்வரா நினைச்சுக்க முடியும். உலகத்துலயே பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கற ஒருத்தனாலதான் அப்படி எல்லாம் நடந்துக்க முடியும். தவிரவும் எப்பவுமே உன் ஃபீலிங்ஸை நீ எக்ஸ்ப்ரஸ் பண்ணினதில்லை நீ. ஆனா அதான் நீ. அதான் உன் ஸ்பெஷாலிட்டி. ஒண்ணு சொல்றேன் சிவா. இந்த உலகத்துல கார்த்திக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. சிவா கிடைக்கறதுதான் ஒரு பொண்ணுக்கு ரொம்பக் கஷ்டம். பாதி சிவாக்களை இவங்களே கார்த்திக் ஆக்கிக்கறாங்க. கார்த்திக்கா ஆக முடியாத சிவாக்கள் என்னத்தையோ இழந்துட்டதா ஃபீல் பண்ணிக்கிட்டுத் திரியறாங்க. அவங்களுக்குத் தெரியறதில்லை... கார்த்திக்கைவிட சிவா ஸ்பெஷல்னு!”

சிவா இப்போது நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் பார்த்தான். நான்கு வருடங்களுக்கு முன்பும் சரி... இப்போதும் சரி. அவள் தெளிவுடன்தான் இருந்திருக்கிறாள் என்று தோன்றியது சிவாவுக்கு. இப்போது இன்னும் அதிக தெளிவு!

“நீ எனக்கு இப்பவும் எப்பவும்  அதே ஸ்பெஷல் சிவாதாண்டா. இன்னும் எத்தனை வருஷம் என்கிட்ட நீ பேசலைன்னாலும் நான் அதே மாதிரி உன்கிட்ட பேசமுடியும். நீ என்னை நேசிச்சதோ, அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணாம விட்டதோ, நான் கார்த்திக்கை லவ் பண்ணினதுக்கு இத்தனை வருஷம் ரியாக்ட் பண்ணினதோ எதையுமே நான் தப்பா சொல்லல. என்னால ரொம்ப நல்லா புரிஞ்சுக்க முடியுது. ஏன்னா, எனக்கு நீ எப்படியோ அப்படி உனக்கும் நான் ஸ்பெஷல் ஃப்ரெண்ட்தானே. அதைக்கூடப் புரிஞ்சுக்கலைன்னா எப்படி?”

இப்போது சன்னமாகப் புன்னகைத்தான். ``சரி... உனக்குக் குழந்தை?” என்றான்.

“ஒரு பையன். பேரு என்ன தெரியுமா?”

`சிவா’வாக இருக்காது என்று உறுதியாகத் தெரியும். ஆனாலும் என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.

“நண்பன்! தமிழ்ப்பேருதான் வைக்கணும்னு அவருக்கு ஆசை. பல பேருக்கு அப்பறம் இதை முடிவு பண்ணினோம். நண்பான்னு எல்லாரும் கூப்டுவாங்கல்ல? திட்றதுன்னாகூட ‘டேய் நண்பா’ன்னு கூப்டுத்தான் திட்டுவாங்க” சிரித்தாள். “எவ்ளோ ஸ்பெஷல் பேருல்ல!”

ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.

“அவனுக்குப் பாட்டின்னா உசிரு. போனவாரம் அம்மா வந்திருந்தாங்க. முந்தாநாள் அவங்க கெளம்பறப்ப அழுதான்னு, சொன்னாக் கேட்காம கூட்டிட்டுப் போய்ட்டாங்க. இன்னைக்கு அங்க போய் அம்மா அம்மான்னு அழுதிருக்கான். போய் ரெண்டு நாள் இருந்துட்டு நான் கூட்டிட்டு வரணும்.”

அதன்பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டி ருந்தார்கள். காலை ஆறு மணிக்கு அவள்தான் எழுப்பிவிட்டாள்.

“தூங்கவேல்லடா. ரொம்ப எக்ஸைட்டடா இருந்தது உன்னைப் பார்த்தது. வீட்டுக்கு வா. பையனப் பாரு. மறுபடியும் மூஞ்சியத் தூக்கிவெச்சுட்டுத்  திரியாதே. மொதல்ல அப்பாம்மா திட்றதெல்லாம் உன்கிட்ட புலம்பிட்டிருந்தேன். இப்ப கார்த்திக்கும் நண்பனும் பண்ற அழிச்சாட்டியமெல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணுவேன். அவ்ளோதான் வித்தியாசம். என் நம்பர் அதேதான். தயவுசெஞ்சு அன்பிளாக் பண்ணு, சரியா?” என்றாள்.

கோவை ரயில் நிலையத்திலிருந்து அவள் தனி டாக்ஸியில் செல்ல, இவனும் வீடு வந்து சேர்ந்தான்.

தூங்கி எழுந்ததும் சென்னை ஆபீஸுக்கு அழைத்தான்.

“ஹெச் ஆரைக் கனெக்ட் பண்ணுங்க.”

ஹெச் ஆர் லைனில் வந்தார். “சார்... நான் சிவா பேசறேன். நேத்து மீட் பண்றப்ப டெக்ஸாஸ்ல இருந்து சென்னை ஆபீஸுக்கு வர இன்டரஸ்ட் இருக்கறதா சொன்னேன்ல? வேணாம் சார். அதப்பத்தி இப்போதைக்கு வி.பி-கிட்ட எதும் பேச வேண்டாம். டெக்ஸாஸ்லயே இன்னும் ரெண்டு மூணு வருஷம் இருக்கேன். அப்பறம் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வேறு சில சம்பிரதாயமாகப் பேசிவிட்டு வைத்தான்.

``எந்திரிச்சுட்டியா” என்று அம்மா வந்தாள். “எத்தனை நாள் இருக்கப்போற?” என்று கேட்டாள்.

“மூணுவாரம்மா. கார் இருக்குல்ல? ஈவ்னிங் ரம்யா வீட்டுக்குப் போய் அவ பையன ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம். நீயும் வா. போறப்ப சென்னை போய்ட்டு அவங்க வீட்ல ஒருநாள் தங்கிட்டுப் போகணும்மா” என்றான்.
வலைப் பதிவுகளின் பிதாமகன்..வலைச்சரம் சீனா அய்யா 
வலைப் பதிவுகள் இன்றும் இருக்கிறதென்றால் இவர் தான் காரணம் –
‘வலைச்சரம்’ மூலம் வலைப்பதிவுகள் எழுதுபவர்களை ஊக்கப்படுத்தி, வலைப்பதிவுகளை உயிர்த்துடிப்புடன் காத்து வருகிறார்,
வலைச்சரம் மூலம் எழுத்தாளர்களானவர்கள் நிறைய நண்பர்கள்.
இளைஞர்களின் நண்பர்,
நிறைய இளைஞர்களுக்கு தொழில் முனைவுக்கு உதவியிருக்கிறார்,
இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாது என்பது இவருக்கு நிரம்பப் பொருந்தும்,
நிறைவான வாழ்வு,...
வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.
அன்பின் அப்பா !
அடியெடுத்து வைக்கையில்
விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
துணை நின்றாய் !
தோள் நின்ற தந்தைக்குத்
துணை நின்ற பொழுதுகளும்,
விரல் பிடித்த தந்தைக்கு
வழி காட்டிய நினைவுகளும்,
தனித்திருக்கும் போதிலும்
நினைத்து மகிழ ஆசை !
மாறும் பிறவி யாவினிலும்
மகளாய்ப் பிறக்க ஆசை !
Miss you Appa.....
இந்தக் கவிதையை எழுதியவர் (தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றார்) இன்று காலையில் எழுதியிருக்க என் பார்வையில் சில மணி நேரத்திற்கு முன் தான் முகநூல் வாயிலாகத் தெரிந்தது.  எழுதியவர் பெயர் திருமதி சுஜாதா.  அவர் அப்பாவின் பெயர் சிதம்பரம்.   
இந்தப் பெயர் சொன்னால் பலருக்கும் தெரியாது.  சீனா என்றால் கொஞ்சம் பேருக்குத் தெரியும்.  வலைச்சரம் சீனா அய்யா என்றால் உலகமெங்கும் வாழும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் குறிப்பாக இணையத் தொடர்பில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரிந்த பெயர் தான்.  
சீனா அய்யா காலமான செய்தி சில மணி நேரத்திற்கு முன் தான் எனக்குத் தெரிய வந்தது.  
மற்றொருமொரு சோகம்.  
சில நினைவுகள். பலவித எண்ணங்கள் படிப்படியாக ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கின்றது.
++++++++++++++++++
நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் அழைத்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு கட்சி அடிப்படையில் பலரும் பொளந்து கட்டிக் கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒருவர்  தன் தரப்பு நியாயமாகச் சிலவற்றை எழுதியிருந்தார்.
"பலரும் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றி எழுதுகின்றார்கள். 
எழுதுகின்றவர்கள் எவரும் களத்தில் இல்லை என்பதும் அவர்களுக்கு இங்குள்ள எதார்த்தம் புரியவில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.  காரணம் நான் களத்தில் இருப்பதால் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவாகச் சொல்ல முடியும்.  ஒரு வாரம் முழுக்க என் பெயர் பத்திரிக்கையில் வர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டும்.  அதுவே தொலைக்காட்சி மற்றும் ஏனைய மீடியா உலகில் என் பெயர் வர வேண்டுமென்றால் பத்தாயிரம் செலவழித்தே ஆக வேண்டும்.  இது தான் உண்மை.  காரணம் மீடியா என்றால் பணம்.  பணம் மட்டுமே மீடியா" என்று எழுதியிருந்தார்.  
இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் சீனா அய்யா இறந்துவிட்டார் என்ற செய்தியை நான் வாசித்த போது இவர் நினைத்து இருந்தால், நிச்சயம் பல வழிகளில் சம்பாரித்து இருக்க முடியும்? 
காரணம் இணைய உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.  
குறிப்பிட்ட நபர்கள் நடத்தி வந்த வலைச்சரம் என்ற தளம் இவரிடம் வந்து சேர்ந்தது.  தன்னுடைய வயது மூப்பு, உடல் நலப் பிரச்சனைகள் என்று ஆயிரம் இருந்தாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் ஆசிரியர் பொறுப்பு கொடுத்துக் கௌரவித்தார்.   
முகநூல், ட்விட்டர் என்று தொடங்கி பத்தி எழுத்தாளராக வளர்ந்து எழுத்தாளர் ஆக வளர்ந்தவர்கள் பல பேர்கள்.  ஆனால் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் தன் தளம் யாராவது அறிமுகம் செய்துள்ளார்களா? என்று ஏங்கிப் பார்த்தவர்கள் எத்தனையோ பேர்கள்.?  எந்த லாப நோக்கமும் இன்றி, எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்தை மிகத் தெளிவாக அழகாக நடத்திய சீனா அய்யாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
++++++++++++++
நாலைந்து வருடத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பர் கூறிய வார்த்தையிது.  
"இங்கு எல்லோரும் அவசரப்பட்டு செய்தித்தளம், மற்ற தளங்கள் என்று தொடங்கி விடுகின்றார்கள்.  ஆனால் ஐந்தாண்டுகளில் அந்த தளம் காணாமல் போய்விடும்.  காரணம் நிதி பற்றாக்குறை, கவனிக்க ஆள் இல்லாதது, விருப்பங்கள் மாறிப் போய்விடுவது, அந்த தளத்தைப் படிக்க ஆள் வராமல் தேங்கிப் போய்விட அப்படியே போட்டு விட்டு நகர்ந்து விடுகின்றார்கள்.  அவர்களுக்கும் மன உளைச்சல் தான் மிஞ்சும்" என்றார்.  
கடந்த ஒன்பது வருட இணைய அனுபவத்தில் இதே போலப் பல தளங்களைப் பார்த்துள்ளேன்.  ஆனால் இன்றும் வலைச்சரம் உள்ளது.  ஒரே பிரச்சனை. மக்களின் மனோபாவம் மாறிவிட்டது.  தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வெவ்வேறு பாதைகள் உள்ளது.  
அதனால் வலைச்சரத்தில் எழுத விருப்பமில்லாமல் போய்விட்டது.  
சீனா அய்யாவிற்குப் பிறகு பிரகாஷ் இப்போது நடத்திக் கொண்டிருந்தாலும் பெரிய அளவுக்கு அதனைக் கொண்டு செலுத்த முடியாமைக்குக் காரணம் இப்போதைய சூழல் மாறிவிட்டது.  
அதாவது வலைச்சரம் என்பது பல நூறு பேருக்கு ஏணிப்படியாக இருந்தது. 
ஏணிப்படி மேலேறிப் பார்த்ததுண்டா? அது அப்படியேதான் இருக்கும்.  
சீனா அய்யாவும் அப்படித்தான்.  
அவர் இணைய உலகத்தில் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஏணிப்படியாக இருந்தவர்.  எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னுடைய ஓய்வு காலத்தைத் தமிழ் இணைய உலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த காரணமாக இருந்தவர்களில் இவரும் முக்கியமான ஒருவராக இருந்துள்ளார் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியும். 
+++++++++++++=
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பார்கள்.  நிச்சயம் சீனா அய்யாவின் மனைவி என்பவர் அய்யாவைக் கடைசி வரைக்கும் குழந்தை போலவே பார்த்துக் கொண்டிருந்தவர்.  
தனக்குத் தெரிந்த வகையில், தன்னால் முடிந்த வரையில், தனக்குப் பிடித்த துறையில் உழைத்துள்ளார். உண்மையாக வாழ்ந்துள்ளார்.
நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.  என் எழுத்துலக வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மற்றும் ஆசிர்வாதங்களும் உண்டு.  
அவர் ஆலமரம்.  வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும்.  நாம் கிளைகள்.  இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான். 
நான் உயிருள்ள வரைக்கும் சீனா அய்யா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்த எண்ணங்கள் என் மனதில் இருந்து கொண்டேயிருக்கும்.  குடும்பத்தில் பிறந்து இருந்தால் குடும்ப உறுப்பினரா? அவரும் தமிழ் இணைய குடும்பத்தில் நிரந்தர தலைவர் தான்.
அவரின் புகழும், நல்லெண்ணங்களும் அவர் தலைமுறையைக் காத்தருள வேண்டுகின்றேன்.
சீனா அய்யா மறைந்தாலும்(திரு Chidambaram Kasiviswanathan )..அவரிடம் கற்ற வாசிப்பு மறைய போவதில்லை ..
அவரின் ஆத்மா சாந்தியடைய ..என் ஆழந்த இரங்கல்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681







வெள்ளி, 15 மார்ச், 2019

.உடுமலை ..தளி ரோடு மேம்பாலம் ...இந்த புகைப்படம் எடுப்பதற்கு ..ஒரு வார காலம் ஆனது ...சரியாக .காலை 5.45.....சூரியன் ..சிலுவை ..வட்டத்துக்குள் எடுக்கவேண்டும் என்ற ஆசை ..இதை எடுப்பதற்கு காரணம் பொறுமை எனும் தாரக மந்திரத்தை படிப்பதற்கு .....

வியாழன், 14 மார்ச், 2019

கோவை ..ஓவியர் ஜீவானந்தன் ...அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......

கல்லூரி பருவத்தில் பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன். ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில். அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர் கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் ‘புரியவில்லை’, ‘ஏமாற்று வேலை’ என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வை யாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொட வில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம், அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன்.
இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!
என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத் திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள்.
ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங் களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ் செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சி களில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன் னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு கதவு களின் மீது காதல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!!!!
நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!
வயதானது...புரிந்துவிட்டதா என்ன?
ஓவியர் ஜீவானந்தன் ......
கோவை ..ஓவியர் ஜீவானந்தன் ...அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681


உங்களின் அன்பால் ...வலைபூக்கள் ...தமிழ் இந்து பத்திரிகை படித்தது சார் ...இன்னும் உங்களை ..கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை ..சிஃனலில் (அவிநாசி ரோடு ...)முதன்முறையாக சந்தித்து பேசியது நினைவில் ..மலரும் நினைவுகள் சார் ...
பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – அறிவுரைகளும்!ஆணாதிக்க சைக்கோக்களும்!!
– அதிஷா.--(பத்திரிகையாளர் )

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துறுப்பிடித்த அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே… ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்கு போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக்காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்கு போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்க கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்…  பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால் குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான்.  பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shamingஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்க கூடாது.
தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில் என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

– அதிஷா.(பத்திரிகையாளர் )

புதன், 13 மார்ச், 2019


கொங்கு மண்டலமும் குற்றங்களும்....


தமிழகத்திலேயே கோவையில்தான் கல்லூரி மாணவர்களிடையே மிக அதிகளவு கஞ்சாவும், போதை மாத்திரைகளும் கிடைப்பதாக ஒரு பேராசிரியர் சொன்னார். தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் அவர். மிகைப்படுத்திச் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் விசாரித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. மாணவர்களுக்கு எங்கிருந்தோ கஞ்சா கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலிருந்து மயக்க மருந்துகள் கடத்தப்பட்டு அவை ‘ஷாட்’களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுகிறது. மிகச் சாதாரணமாக எக்ஸ்டெஸி மாத்திரைகளை வாங்குகிறார்கள். இப்படி இன்னமும் நமக்குத் தெரியாதவையெல்லாம் மாணவர்களுக்குச் சாத்தியமான சமாச்சாரங்கள்.

தமிழகத்தில் மிக அதிகளவிலான பண மோசடிகள் நடக்கும் ஊர்களில் திருப்பூரும் ஒன்று. கடன் வாங்கிவிட்டு தலைமறைவாவது தொடங்கி, செக் மோசடிகள், கந்துவட்டி என பட்டியல் மிகப்பெரியது. கொங்குப்பகுதியைச் சார்ந்தவன் என்ற முறையில் ஊர் மீதான பெருமிதம் இருந்தது. இங்கேயிருக்கும் மக்கள் மரியாதை தெரிந்தவர்கள்; பண்பானவர்கள் என்கிற எண்ணமெல்லாம் நிறைய இருந்தது. இன்னமும் இருக்கிறதுதான். வெள்ளந்தியான மனிதர்களைப் பார்க்கும் போதும், கிராமங்களில் வேளாண்மை செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அதே பகுதியில்தான் பணமே பிரதானம் என்று எந்தவிதமான அறமும் இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் மிக வேகமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 

அறமில்லாத இடத்தில் எல்லோருமே வெட்டுப்படுவதுதான் நியதி. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

‘குற்றங்கள் எல்லா ஊர்களிலும்தான் நடக்கிறது. இன்றைக்கு ஒரு பிரச்சினை பூதாகரமானவுடன் இந்தப் பகுதியே அப்படித்தான்னு சொல்ல வேண்டுமா?’ என்று கோபம் வரத்தான் செய்யும்.  ஆனால் இதையெல்லாம் எப்பொழுது பேசுவது? ஒரு பிராந்திய மனநிலை என்றிருக்கிறதல்லவா? அங்கே நிலவும் பொது உளவியல் என்ன என்பது பற்றியதான விவாதங்கள் அவசியமில்லையா? புனிதமான பிம்பங்களை உடைத்து உண்மையிலேயே என்னதான் பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.  

நான்கு பேர்கள் நல்ல மனிதர்கள் என்றால் அதில் ஒருவராவது கபட எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மற்ற நான்கு பேர்களைப் போலவே அவர்களும் தும்பைப்பூ வெண்மையில் உடை தரித்து, ஆன்மிகம், கடவுள் எனப் பேசி மதத்தையும், சாதியையும், பணத்தையும் முகமூடியாகத் தரித்துக் கொள்கிறார்கள். மற்ற நான்கு பேர்களும் இவரை நம்பத் தொடங்குகிறார்கள். மற்றவர்களிடம் இந்த வேடதாரியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் பிற சல்லிகளும் அதே வேடங்களை இம்மி பிசகாமல் ஏந்திக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் யாரையும் நல்ல மனிதர் என்று நம்புவதைவிடவும், பார்க்க பாந்தமானவராக இருக்கிறார் என்று கருதுவதைவிடவும் ‘தமது எல்லாவிதமான குற்றவுணர்ச்சிகளையும் மறைப்பதற்கான வேடமாகவும், நியாயப்படுத்துதலாகவும் இப்படியொரு தோற்றத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பேசித் திரிகிறார்களோ’ என்று பதற்றமாக இருக்கிறது. அதற்கேற்ற வேடங்களில் பொருத்தமானவற்றை இந்தப் பகுதியே வழங்குகிறது.

அரிவாளை எடுத்து வெட்டி வீசுகிறவர்களைவிடவும் சாந்தமானவர்களாக நடிக்கிறவர்கள் பேராபத்துக் கொண்டவர்கள். கொங்கு மண்டலம் முழுக்கவும் அப்படியானவர்கள் விரவியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

இன்னொரு புள்ளியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அறம் சார்ந்து சம்பாதிப்பவர்களும் கூட ‘சம்பாதிப்பதெல்லாம் நம் பிள்ளைக்குத்தானே’ என்று  ஏகபோகமாக வாரி வழங்குகிறார்கள்.  அறம், வாழ்க்கை நெறிமுறைகள் என்பதையெல்லாம் தாண்டி ‘சந்தோஷமா இரு கண்ணு’ என்று தமது பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பணம் கொழிக்கும் ஓர் இளம் சமூகம் என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டுத் திரிகிறது.  ஒரு கூட்டத்தில் தீய வழிக்கான தேடல்களோடு இருப்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் போதாதா? இன்னமும் நான்கு பேர்களை வளைத்துக் கொள்வார்கள். பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. நாளை அவன் சம்பாதிக்கும் போது ‘எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்’ என்றே முழுமையாக நம்புகிறான்.

அரையும் குறையுமாக பிரச்சினைகள் பற்றித் தெரிய வந்தாலும் கூட ‘நம் பையன் இதைச் செய்ய மாட்டான்; நம் பொண்ணு இதைச் செய்ய மாட்டாள்’ என்று நம்புகிற பெற்றோர்களே அதிகம்.  அப்படியே நம்பினாலும் கூட ‘வயசு அப்படி..போகப் போக சரியாகிடும்’ என்று அதைவிடவும் அதிகமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம், கொழிக்கும் பணம், எதையும் மூடி மறைத்துவிட முடியும் என்கிற தைரியம், கட்டற்ற சுதந்திரம், காமம், போதை, தொழில்நுட்பம் என பல தரப்பும் ஒரு தலைமுறையையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பணம் இருந்தால் பிற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என இன்னொரு கூட்டம் இதே மண்ணில்தான் மேற்சொன்ன எல்லாவற்றையும் தமக்கு ஏற்றபடி வளைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல வாய் நிறைய மரியாதையோடு அழைக்கும் மனிதர்கள் மட்டுமே நிறைந்த பிரதேசமாக இல்லை. மோசடிக்காரர்களும், அதிகார வெறி கொண்டவர்களும், சாதியப் பித்து ஏறியவர்களும், மதத் துவேஷம், இவற்றையெல்லாம் வர்த்தமாக்கத் தெரிந்து கொண்டவர்களும் நிறைந்து பெருகிக் கொண்டிருக்கும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது கொங்கு மண்டலம். இப்படியான அயோக்கியர்கள் அத்தனை பேருக்கும் நன்கு வேடம் அணியத் தெரிகிறது. அதே மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அன்பு குழையப் பேசத் தெரிகிறது. இப்படியான சூது நிறைந்த மனிதர்கள் சேர்ந்து ஒரு பகுதியின் பிராந்திய மனநிலையைக் கட்டமைக்கிறார்கள். ‘எந்த வரைமுறையில்லாமல் சம்பாதிக்கலாம். சம்பாத்தியம் மட்டுமே முக்கியம்’ என்று பிறரையும் நம்ப வைக்கிறார்கள். இங்கு நிலவும் நிலைகுலையச் செய்யும் மோசடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் இப்படிக் கட்டமைக்கப்படும் பொது உளவியலே முழுமையான காரணம் என்று தீர்க்கமாக நம்பலாம். ‘புதுக்கோட்டையிலும் ராமநாதபுரத்திலும் கொலை செய்தவனெல்லாம் தப்பிச்சு வந்து இங்கே பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான்; அதனால்தான் குற்றச் செயல்கள் அதிகமாகிவிட்டன’ என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதும் கூட ஒருவிதமான தப்பித்தலே. நாம் எல்லாவிதத்திலும் சரியாக இருக்கிறோமா என்றும் யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது. 

கடந்த தலைமுறை வரைக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு செகளரியங்கள் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பணம் கொடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களும், கார்களும் கேட்காமலே கிடைக்கவில்லை. நீதி போதனை பேசினார்கள். திருக்குறளும், அறநெறிகளும் கற்பிக்கப்பட்டன. குடிப்பது அவமானம் என்ற பிம்பம் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயப்பட வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அதுதான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது.  இன்றைக்கு எல்லாவற்றையும் உடைத்து வீசியிருக்கிறோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண் என பிறரை அளவுகோலாக வைத்துத்தான் நம்முடைய முடிவுகள் இருக்கின்றன. ஆசிரியர்கள், பள்ளிகள் என்பதைவிடவும் தொழிலும் வருமானமுமே உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடுகளுமில்லாதவர்களுக்கு எதைப் பற்றிய யோசனையுமில்லாமல் போய்விடுகிறது. பின்விளைவுகள் பற்றியக் கவலையே இல்லாமல் ஆகிவிடுகிறது.

கட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தே தீர வேண்டும். நம்மை நம் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று குறைந்தபட்சமாகவாவது சிந்திக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் நெறிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் சூழல் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. எந்தவிதமான சுய உணர்வுமில்லாமல் ஓடுகிற வேட்டை நாயாக இந்தப் பகுதி மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

மாற்றம் வரும் ...நம்பிக்கை தானே வாழ்க்கை .....மீண்டுவிடுவோம் ...

செவ்வாய், 12 மார்ச், 2019

இன்று மாலை உடுமலைப்பேட்டையில்  ..இராமய்யர் திருமணமண்டபத்தில் நடந்த திருமணநிகழ்வு ...நமது சொந்தம் "பொம்முராஜ் -கீர்த்திகா -மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ..
நம் தம்பிகள் ,மாப்பிள்ளைகள் ,நமது சொந்தங்களின் கலகலப்பான பேச்சுக்களின் ஊடே ...உரையாடல்கள் ...மூன்று மணிநேரம் கடந்தது தெரியவில்லை ..மகிழ்ச்சி ...

ஞாயிறு, 10 மார்ச், 2019

உலக அதிசயங்கள் 7...??!! 🤔🤔💓💓💓🌱🌱🌷🌷

ஒரு வகுப்பில் ஆசிரியர் 👍👍பிள்ளைகளை உலகின் சிறந்த ஏழு அதிசயங்களைப் பட்டியலிடச் சொன்னார்.

பிள்ளைகள் அனைவரும் எழுதிக் கொடுத்துவிட்டனர். அவர்களின் கணிப்புப் படி கீழ்க்கண்டவை உலக அதிசயங்கள் வரிசைப் படி.

1.எகிப்தியப் பிரமிடுகள்.
2.தாஜ்மஹால்
3.கிரேண்ட் கேன்யான் (Grand Canyon )
4.பனாமா கால்வாய்
5.எம்ப்பையர் ஸ்டேட் கட்டிடம். (Empire State Building )
6. செயின்ட் பீட்டர் பேஸிலிக்கா (வாடிகன்)
7. சீனப் பெருஞ்சுவர்

ஒரே ஒரு குழந்தை மட்டும் இன்னும் முடிக்கவில்லை;யோசித்து யோசித்து எழுதிக் கொண்டிருந்தான் . ஆசிரியர் அருகில் சென்றார்

" ஷியாம் சுதிர் ..! என்ன ஆயிற்று ஏன் இன்னும் முடிக்கவில்லை?

"என்ன சார் செய்வேன்? ஆனடவனின் படைப்பில் அதிசயங்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றில் எனக்கு அதிசயமாகத் தோன்றியவை களைப் பட்டியலிட்டு விட்டேன். சரிதானா எனப் பார்த்துச் சொல்லுங்கள்." என்றான் .

ஆசிரியர்  ஷியாம் சுதிர் பட்டியலை வாசித்தார்.

ஷியாம்வின்  பட்டியல் இதோ:

என்னைப் பொருத்தவரை இந்த ஏழும்தான் கடவுளின் படைப்பில் அதிசயங்களாகக் கருதுகிறேன்.

1. பார்க்க முடிவது (ஒருநாளைக்குக் கண்களில் கர்சீஃபைக் கட்டிக்கொண்டிருந்து பாருங்கள்)

2.கேட்க முடிவது (ஒருநாளைக்குக் காதில் பஞ்சு வைத்துப் பாருங்கள்)

3.தொட்டு உணர முடிவது ( கற்பனை செய்து பாருங்கள் உங்கள் 6 மாதக் குழந்தை உங்களைத் தொடுவதை உணரமுடியாவிட்டால் எப்படியிருக்கும் என்று)

4.சுவையை உணர முடிவது ( பிரியாணிக்கும் கம்மங்கூழுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தால் எப்படியிருக்கும்)

5.சிந்திக்க முடிவது (இதை விடாய் பெரிய தணடனை இருக்கமுடியுமா?)

6.சிரிக்க முடிவது (எவ்வளவு சந்தோஷப்பட்டாலும் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை. சிரிப்பு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் மனிதனுக்கு?

7.அன்பு செலுத்துவது( ஒரு நாய்க்குட்டி வளர்த்துப்பாருங்கள் அன்புக்கு அர்த்தம் தெரியும்)

வகுப்பில் ஒரே அமைதி (pin-drop silence). ஆசிரியர் மெதுவாகக் கைதட்டினார். புரிந்ததும் எல்லாக் குழந்தைகளும் ஒவ்வொருவராகக் கை தட்ட ஆரம்பித்தன.

வகுப்பே கைதட்டிப் பாராட்டியது ஷியாம் சுதிர்வை.

எல்லோரும் யோசிப்பது போலவே யோசிக்க வேண்டுமா என்ன? உங்களில் உங்களுள் தனித்து  யோசியுங்கள். புதுப் புது விஷயங்கள் புரிய வரும்.

 புதுப் புது  ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அர்த்தங்கள் தோன்றும்...👏👏👍👍💓💓
🌱🌱என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷🌷

சனி, 9 மார்ச், 2019

பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . !
– அனஸ் சுல்தானா....

பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே.

நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது தான் வெளிவாசிப்பின் (out of syllabus) தேவைகளை உணர்ந்து எங்கள் பகுதியில் உள்ள ஒரு அரசு நூலகத்தில் உறுப்பினரானேன். எதை எதை வாசிப்பது என்று கூட தெரியாமல்,கண்டதை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊர் நூலகத்தில் பேப்பர் படிக்க தான் கூட்டம் வருமே தவிர,புத்தகம் படிக்க வெல்லாம் பெரிசா இருக்காது.அதனாலே எல்லா புத்தகங்களும் புத்தம் புதுசாகவே இருக்கும்.ஒன்றிரண்டு நபர்கள் படித்தாலே அது அதிசயம்.

ஆனால் அந்த நூலகத்தில் அடுக்கி வைத்திருந்த வரிசைகளில் ஒரேயொரு புத்தகம் மட்டும் கந்தல் கந்தலாக இருந்தது. அந்த புத்தகத்தை நானும் வாசிப்பதற்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அப்போது அந்த நூலகர் புத்தகத்தின் முன்னட்டையை பார்த்துவிட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். என்னமோ இதுல வேறுபல சமாச்சாரங்கள் தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து படிக்க ஆரம்பித்தேன். மிருகங்கள்,பறவைகள்,மனிதர்கள் எல்லாரையும் பற்றிய சின்ன சின்ன பாலியல் கதைகளாக அதில் தொகுக்கப்பட்டிருந்தது. அப்புறம் தான் அந்த புத்தகத்தின் பெயர் ‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்று அச்சிட்டிருப்பதை பார்த்தேன். எழுதியவர் கி.ராஜநாராயணன் என்றிருந்தது. (தமிழ் இலக்கிய உலகம் சுருக்கமாக அழைக்கும் கி.ரா இவர் தான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.)

அதில் ஒரு கதை: ‘ஒரு காளையும் பசு மாடும் ஒரு ஓரமா ஒதுங்குச்சாம். அப்போ அந்த பசு மாட்டு மேல ஒரு காக்கை உக்காந்துட்டு இருந்துச்சாம். திடீர்ன்னு அந்தக் காளை மாடு பசு மாட்டு மேல ஏற, என்னடா இந்தக் காளை பண்ணுதுன்னு அந்த காக்க குனிஞ்சு பாக்க, அந்த காக்கா பசுமாட்டு வைத்துக்குள்ள போய்யிடுச்சி!’ என்று ஒரு கதை. அதே போல  ‘வெற்றிலைக்கு பெண் உறுப்பின் வாசனை வரும்’ என்று மற்றொரு கதையை வாசித்துவிட்டு ஒரு மாதிரி ஆகிப்போனதால் அப்படியே வைத்துவிட்டேன். (பின்பு பல நாள் கழித்து தான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன்.)

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்று தானே நினைக்கிறீர்கள்! வேறு என்ன பாலியல் கல்வி பற்றி எளிமையாக விளக்குவதற்கு தான். நம் இலக்கியங்கள் பலவும் நம் மனிதர்களின் பாலியல் உணர்வுகள், தேவைகள், கற்பனைகளைக் கொண்டே உருப்பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது அதன் தேவை நவீனமயமாக்கப்படும் போது கலாச்சாரச் சீர்கேடு என்ற பதட்டத்திற்குள்ளாகிறார்கள் பழமைவாதிகள். பாலியல் கல்வி என்ற வார்த்தையை வெறும் உடல் உறவை மட்டுமே சொல்லிக்கொடுப்பது என்று புரிந்து கொண்டதால் தான் அதை பற்றி பொதுவெளியில் நாம் விவாதிக்க முன்வருவதில்லை.

சில வருடங்களுக்கு முன்பு சேலத்தில் இளம் பெண்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஒரு கூட்டத்தில் நான் கலந்துக்கொள்ள நேர்ந்தது. அப்போது அங்கு 300 இளம் பெண்களும் 30 ஆண்களுமாக பங்கேற்றோம். ‘பெண் உடலைப் பற்றி அறிவோம்’ என்கிற தலைப்பில் ஒருவர் பேச ஆரம்பித்த பொழுது அங்கிருந்த 30 ஆண்களும் வெளியேற எழுந்தோம். ஆனால் அந்த வகுப்பு எடுத்தவர் ஆண்கள் யாரும் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை, சொல்லப்போனால் பெண்களை விட நீங்கள் தான் அவர்களின் உடலை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்தார். அப்போது அவர் அந்த இளம் பெண்களை நோக்கிக் கேட்ட முதல் கேள்வியே எத்தனை பேர் உங்கள் பெண் உறுப்பை நீங்களே தொட்டுப் பார்த்து இருக்கின்றீர்கள் என்று கேட்டார்.அங்கு இருந்த 300 பேர்களில் வெறும் 20 பேர்கள் தான் ஆம் என்று பதில் சொன்னார்கள். மற்றவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் கீழே இறக்கிய தலையை மேலே கூட தூக்கிப் பார்க்கவில்லை. அதில் பெரும்பாதி பேர் அச்சத்தாலும் கூச்சத்தாலும் சொல்லவில்லை என்று வைத்துக்கொண்டாலுமே கூட மீதி நபர்கள் உண்மையாகவே தன் பெண் உறுப்பைப் பார்க்க வேண்டும் என்ற அந்த யோசனையே அவர் கேட்கும் முன்பு வரை அவர்களுக்கு எழவில்லை என்று தான் புரிந்துகொள்ள முடிந்தது. தன் பெண் உறுப்பில் clitorius, vagina, urethral opening , labia majora, labia minora போன்ற பகுதிகள் இருக்கின்றன என்பதைக் கூட அறியாத நிலையில் தான் பல பெண்கள் இருப்பதைப்போல அவர்களும் இருந்தார்கள். இதை விடப் பெரிய அறியாமை என்னவென்றால் ஆண்களில் பல பேருக்கு பெண் உறுப்பில் இரண்டு துளைகள் இருக்கும்,அதில் ஒன்றில் தான் அவர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்களைப் (ஆண்கள்) போலவே பெண்களுக்கும் சிறுநீரும் விந்தனுவும் ஒரே துளையின் வழியாகத்தான் வெளியேறுகின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். (அதனால் இன்றும் ‘எப்படி மச்சான் urine போற இடத்துல எல்லாம் வாய் வைக்க முடியும்?’ என்றும் கேட்கும் ஆண்கள் தான் அதிகம்.)

இப்படித்தான் ஆண்கள் உடலைப் பற்றி பெண்களுக்கு தெரியாமலும்,பெண்கள் உடலமைப்பைப் பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ளாமலும் இருந்து வருகிறோம். குறைந்த பட்சம் நம் பள்ளிக் கல்வியில் இருக்கும் Reproductive Organ பற்றிய பாடத்தைக்கூட நம் ஆசிரியர்கள் நடத்தத் துணியாமல் தவிர்க்கிறார்கள். என்பது தான் வேதனையான விஷயம். எனது 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இந்தப்  பகுதியை நடத்தாமல், ‘இதிலிருந்து எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள்,’ என்று என் அறிவியல் ஆசிரியை சொல்லிவிட்டு, மாறாக ‘இந்திந்த சாப்டர்களில் இருந்து இத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்பார்கள் அல்லது சாய்ஸ்ல விட்டிடலாம்,’ என்று சொல்லி அதை மட்டும் படித்தால் போதும் என்று சொல்லிக்கொடுத்து, அந்த ஒரு பக்கத்தை மட்டும் முழுமையாக நடத்த மறுத்துவிடுவார்கள்.

பின்பு 11ஆம் வகுப்பில் நடந்தது இன்னும் மோசம். நான் படித்தது ஆண்கள் மேல்நிலை பள்ளி என்பதால் உயிரியல் (Biology) பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உயிரியல் வாத்தியார் ஆணுறை (condom) பயன்படுத்துவது எப்படி என்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார். கம்பியூட்டர் சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கும் ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களையும் இந்த வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. நமது பாடத் திட்டம் கூட, இந்த குரூப் மாணவர்களுக்கு ஆணுறை அணிய அவசியம் வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஏனென்று இன்னும் கூட விளங்காத சங்கதியாகவே இருக்கிறது.

மேலை நாடுகளில் சொல்லித்தரப்படும் பாலியல் கல்வியில் மூன்றில் ஒரு பகுதியைக்கூட இங்கு சொல்லிக்கொடுத்தால் போதுமானது. அப்படி செய்தால் தான் இளம் தலைமுறை தங்கள் வாழ்க்கையில் எதிர் நோக்கி சந்திக்க வேண்டிய உடலியல் பிரச்சனைகளுக்கு அவர்களுக்கு அவர்களாகவே குறைந்த பட்சமேனும் சரிசெய்துகொள்ளமுடியும்.

இளவயதில் ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும் பாலியல் சந்தேகங்களும் பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை பற்றி கவலைக் கொள்ளாமல், ஒரு உயர்கல்வி எப்படி ஆரோக்கியமாக அமையமுடியும். இந்த அடிப்படையான தேவையைப் பற்றி ஒரு அறிவார்ந்த சமூகம் விவாதித்திட வேண்டும்.