சிப்பிப்பாறை நாட்டு நாய்களை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கல்லூரி மாணவர்
உடுமலை நவ.10- நாய்கள் என்றாலே காத தூரம் ஓடும் இன்றைய இளைய தலைமுறையினர் இடையே வித்தியாசமாக சிப்பிப்பாறை நாய்களை வளர்த்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் உடுமலை அருகே உள்ள விளமரத்துப்பட்டியைச் சேர்ந்த காவிய தர்ஷன் ராமசாமி ,இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சிப்பிப்பாறை நாய் குறித்து காவிய தர்சன்கூறியதாவது சிப்பிப்பாறை நாய்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனமாகும் .வேட்டை நாய் காவல் நாய் விசுவாசம் நாய் ஆகும். இந்த நாய் வேட்டையில் திறமை வாய்ந்தது. காவலுக்கு சிறந்த நாய் மேலும் குடும்பத்துடன் நெருங்கி பழகுவது போன்ற அம்சங்களைக் கொண்டது .இந்த நாய்கள். தவிர சிப்பிப்பாறை நாய்கள் ராணுவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன அவைகளின் வீரம் விசுவாசம் புத்திசாலித்தனம் எல்லாம் ராணுவத்திற்கு தேவையான குணங்கள் இவை இராணுவ தளங்களை காவல் காக்க பயன்படுகிறது. மேலும் வேட்டை திறமை ராணுவத்துக்கு உதவியாக இருக்கிறது. மேலும் ராணுவத்துக்கு தேவையான பொருள்களை தேடி கண்டுபிடிக்கவும் உதவுகிறது .எனவே இவை இராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தவிர விவசாயத்திலும் உதவி வருகின்றன. இவைகள் விவசாய நிலங்களை காவல் காப்பதுடன் வேட்டை திறமையால் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை தடுக்கவும் உதவுகிறது. மேலும் கால்நடைகளை காவல் காக்கின்றன. இந்த நாய்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் அவைகளுக்கு சிறுவயதிலேயே பயிற்சி கொடுக்க வேண்டும். தவிர அவைகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் சத்தான உணவு கொடுக்க வேண்டும் அவைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் நாய்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளை கொடுப்பதால் அவைகள் பல்வேறு வேலைகளை செய்கின்றன. மேலும் அவைகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுத்தமான சூழ்நிலையில் வளர்க்க வேண்டும்.
சிப்பிப்பாறை நாய்கள் உயரம் 60 -65 சென்டிமீட்டர் எடை 25 - 35 கிலோவும் ஆயுள் 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும் நாய் நிறம் சாம்பல் பழுப்பு கருப்பு நிறங்களில் இருக்கும். இவை வேட்டைக்கு சிறந்த நாய்கள் ஆகும்.
இந்த வகை நாய்களை வாங்கும் போது நாயின் வயது இனம் ஆரோக்கியம் பயிற்சி குறித்து கவனிக்க வேண்டும்.
சிப்பிப்பாறை நாய்கள் விலை ரூ 5ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் கிடைக்கிறது.இனம் பயிற்சி அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவர் கல்லூரி படிப்போடு சிப்பிப்பாறை நாய் வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் சிப்பிப்பாறை குட்டி நாய்களையும் ஆர்வமுடன் கேட்பவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.தவிர
மேலும் நாட்டு கோழி. சேவல்களையும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நாய் இனம் தற்போது அதிகமாக வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டப்படுவதில்லை இதனால் இது அழிந்து வரும் நிலையில் உள்ளது எனவே. இந்த நாயின் திறமை மற்றும் இதன் தகுதிக்காவது இந்த நாயை இனவிருத்தி செய்து பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் நம்மோடு ஒன்றியிருக்கும் இந்த நாய் இனத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.📚🖋️🎙️🌈🏠🤝




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக