வியாழன், 28 பிப்ரவரி, 2019


விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது ...என் அனுபவத்தில் பதிவிடுகிறேன் ...

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி என் அனுபவத்தில் பதிவிடுகிறேன் ...

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி"

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

நன்றி.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019




பிறந்த நாளில்  நினைவு கூறவேண்டும் 
உந்தன் நினைவை , நிழலை,   பெருமையை 
சொல்லவேண்டுமென்பதற்காகவே  பிறந்தநாள் வருகிறது 
என்ன சொல்லி வாழ்த்துவது 
சமூகத்தில் உயர்ந்த தலைவர்களைப் போல்
சமூகத்திற்காகப் பாடாற்றிய தலைவர்கள் போல் 
என்றெல்லாம் பேசாமல்  உன்னைப்போல் மற்றவர்கள்
பின்தொடர்;ந்து வரவேண்டும் 
கம்பளத்து விருட்சத்தின் கம்பீரமான வாரிசுகளில் 
கண்கண்ட வாரிசாக  கண்முன்னே வளரும் 
தேவராட்டத்தின் கலையுலக வாரிசு, 
வாழ்த்துவோம் உந்தன் பிறந்த நாளில்
செல்வங்கள் அனைத்தும் பெறவேண்டும்
பேறுகள் அனைத்தும் பெறவேண்டும்
மனமகிழ்வேடு மனநிறைவோடு 
வாழ்வாங்கு வாழ்க 
வாழ்த்துகின்றேன். உந்தன் பிறந்த நாளில்
என் இனிய மகள் ..நிவேதாவிற்கு  கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஆஸ்கர் விருது கிடைத்ததை காட்டிலும் பெண்களிடம் ஏற்படும் விழிப்புணர்வுதான் மகிழ்ச்சி: அருணாசலம் முருகானந்தம் பேட்டி

பெண் இயக்குநர் எடுத்த ‘பீரியடு எண்ட் ஆப் சென்டென்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. வடமாநிலத்தில் உள்ள கிராமத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்னை இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை பி.என். புதூரை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் கண்டுபிடித்த மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் முக்கிய அம்சமாக இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிராமப்புற பெண்களுக்கு இந்த இயந்திரம் எந்தளவுக்கு உதவியாக இருக்கும் என்பது இப்படத்தில் கூறப்பட்டுள்ளது. 

கோவை அருணாசலம் முருகானந்தத்தின் கதை மூலமாக இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:நாப்கின் பயன்பாடு குறித்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை விட இந்த படம் விருது பெற்றதன் மூலமாக பெண்களிடையே ஏற்படும் நாப்கின் விழிப்புணர்வு தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி

91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா :

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது "பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்." படத்திற்காக ரெய்கா செஹ்டாப்ச்சி, மெலிசா பெர்டான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


பீரியட் படம், கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

நான்கு வருடங்களுக்கு முன் கோவை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழுப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்ட அவரிடம் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ....(புகைப்படம் -அருணாச்சலம் முருகானந்தம் ..அப்சல் நூர் ...சிவக்குமார் )

In a rural village outside Delhi, India, women lead a quiet revolution. They fight against the deeply rooted stigma of menstruation. "Period. End of Sentence." -- a documentary short directed by Rayka Zehtabchi -- tells their story. For generations, these women didn't have access to pads, which lead to health problems and girls missing school or dropping out entirely. But when a sanitary pad machine is installed in the village, the women learn to manufacture and market their own pads, empowering the women of their community. They name their brand "FLY," because they want women "to soar." Their flight is, in part, enabled by the work of high school girls half a world away, in California, who raised the initial money for the machine and began a non-profit called "The Pad Project."


Director:

 Rayka Zehtabchi

Stars:

 AjeyaAnitaGouri Choudari....
Indian co-production Period. End of Sentence won the Academy Award in the Best Documentary (Short Subject) category. Directed by Iranian-American filmmaker Rayka Zehtabchi, the film follows the women of Hapur district near Delhi fighting the stigma over menstruation by using a sanitary pad-making machine.
Co-producer Guneet Monga was elated upon winning the award. “To Every Girl On This Earth... Know That You Are A Goddess...” she tweeted.
Guneet Monga
Born21 November 1983 (age 35)
ResidenceMumbai
NationalityIndian
Occupationfilm producer,
CEO Sikhya Entertainment



தளி  பாளையத்தை உயிர்ப்பிக்கச் செய்த  மெட்ராத்தி திரு .விஜயகுமார்  பாளையக்காரருக்கு நன்றி
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட கால ஆய்வுப்பணியில் பலமுறை பார்த்தும் நேர்காணல் செய்யப்பட்டது. கடந்த மே  18 ல்  நமது தென் கொங்கு நாட்டின் விடுதலைப்போர் நூல்  வெளியீட்டிற்குப் பிறகு மெட்ராத்தி பாளையக்காரர் தளிஎத்தலப்ப மன்னரின் அருமை பெருமைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது,   தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்களை  சந்தித்து வலியுறுத்துவதாகச் சொன்னதின் பேரில்  கடந்த கிழமை சட்டமன்றத்தில்  அறிவிப்புக்குப் பிறகு நேரில் சந்தித்து வலியுறுத்தியமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

புதன், 20 பிப்ரவரி, 2019


என்னத்த சம்பாதிச்சு...என்னத்த பொழச்சு...(வா .மணிகண்டன் )


எங்கள் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார். எட்டாவது மட்டுமே ஏழெட்டு முறை படித்தார். பள்ளிக்காலங்களில் அவரது அப்பா குனிய வைத்துக் கும்மியதை பார்த்திருக்கிறேன். சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறாத மண்டை அவருக்கு. திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போய்விடுவார். விஷமருந்தி உயிர் பிழைப்பார். இப்படியான பல வித்தைகளுக்குப் பிறகு இப்பொழுது உள்ளூரில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். கெட்ட நேரத்திலும் நல்ல நேரம்- தண்ணீர் வற்றாத பூமி அது. பெரிய மனுஷ தோரணைதான். ஆனாலும் ஐடி, பெங்களூரு, சென்னை என்றால் காதில் புகை வரும் மவராசனுக்கு. எதையாவது சொல்லிக் கடுப்பேற்றுவார்.

சுற்றி வளைத்து ‘சம்பளம் ஒரு லட்சம் வருதா?’ என்பார். இது வரைக்கும் முப்பது தடவையாவது பதில் சொல்லியிருப்பேன். அடுத்த முறை பார்த்தாலும் அதையேதான் கேட்பார்.  ‘என்னதான் சம்பாதிச்சு என்ன பண்ணுறது?’ என்று முடித்து நம் முகத்தை சோகமாக்கிப் பார்க்க வேண்டும். அதிலொரு சந்தோஷம் அவருக்கு. இருபது வருடங்களுக்கு முன்பு பரவலாக நிலவிய வன்மம் இப்பொழுது ஐடி துறையினர் மீது இல்லை.  ஐடி துறையினர் மீதான வயிற்றெரிச்சல் முழுவதும் இப்பொழுது அரசுத்துறை மீது விழுந்துவிட்டது. ஐடிக்காரர்களைப் பார்த்தால் பாவப்படுகிறவர்கள்தான் அதிகம். ஆனால் இப்படியான அரை மண்டைகளும் கணிசமாகத் தேறுவார்கள். 

சில நாட்களுக்கு முன்பாக, குடும்பத்தோடு அவரது தோட்டத்துக்கு சென்றிருந்தோம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ‘கோழிக்கூட்டுக்குள்ள அடைச்சு வெச்ச மாதிரி வெச்சிருப்பீங்க...பசங்க வானத்தையாவது பார்த்திருப்பாங்களா?’ என்றார். சுள்ளென்றாகிவிட்டது. ‘வக்காரோலி..வானத்தைக் கூட பார்த்திருக்கமாட்டாங்களா?’ என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. விழுங்கிக் கொண்டேன். நம்மைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளுவதில் அவ்வளவு சந்தோஷம். பற்களை வெறுவிக் கொண்டிருந்தேன். 

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தைகளை விட்டுவிட்டு நம்மிடம் வந்து  ‘இனி ஐடி அவ்வளவுதானாமா’ என்றார். அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் உள்ளூரச் சந்தோஷம். அவனுக்கு ஏன் சந்தோஷம் கொடுக்க வேண்டும்? ‘அப்படியெல்லாம் இல்லைங்க..ஆட்களுக்கான தேவை இருந்துட்டேதான் இருக்குது’ என்று சொன்னால் ‘ஆனா என்ன வாழ்க்கைங்க அது..நாலு சுவத்துக்குள்ள? சொந்தபந்தம்ன்னு எதுவுமில்லாம’என்றார். அதற்கு மேலும் வம்பிழுக்க விரும்பினால் இழுக்கலாம். ஆனால் வாயைக் கொடுத்துவிட்டு நாம்தான் கடி வாங்க வேண்டும். ‘ஆமாங்க...விதி’என்று சொல்லிவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் தப்பித்துக் கொள்வேன். ஆனால் அவருக்குள் இருக்கும் வில்லன் என்றைக்கும் ஓய்வெடுப்பதேயில்லை.

ஏழெட்டுப் பேர் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். ‘நாம இங்க கறக்கற பால்ல எல்லாச் சத்தும் இருக்குது..ஆனா பாருங்க..இருக்கற சத்தைப் பூரா உறிஞ்சி பாக்கெட்ல அடைச்சு கோயமுத்தூர்ல இவங்க கைக்கு வெறும் சக்கையா போவுது..அதைத்தான் இவங்க குழந்தைகளுக்குக் கொடுக்கறாங்க...’ இதோடு நிறுத்தினால் தொலையட்டும் என்றுவிட்டு விடலாம். என் முகத்தையே பார்த்தபடிக்கு ‘அதான் நம்ம பசங்க தெம்பா இருக்குதுக..இவங்களை மாதிரி இருக்கிறவங்க பசங்க நோஞ்சானுகளா இருக்குதுக’ என்றார்.  கடுப்பாகாமல் என்ன செய்யும்? மகியை அழைத்து ஓங்கி மூக்கு மீது ஒரு குத்துவிடச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வீடு திரும்பும் போது அம்மாவிடம் ‘இனி எப்பவாச்சும் இந்த ஆகாவழி மூஞ்சில முழிக்க சொன்னீங்கன்னா எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்குங்க’ என்று எரிந்து விழுந்தேன். ஆனால் அம்மாவுக்கு அதெல்லாம் பிரச்சினையில்லை. ‘நீ என்னமோ பெரிய இவங்குற...அவன் வாயை அடக்கத் தெரியாதா? என்ரகிட்ட வந்து லொள்ளு பேசிட்டு இருக்கிற’ என்றார். முன்னால் போனால் கடிக்குது. பின்னால் போனால் உதைக்குது கதை.

சாலையில் போகிறவனையெல்லாம் பார்த்து யாருக்கும் பொறாமை வருவதில்லை. அம்பானி எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் நமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஆனால் நாம் பார்க்கும்படி வளர்ந்த மனிதர்கள் நன்றாக இருக்கும் போது அல்லது நன்றாக இருப்பதாகக் கருதிக் கொள்ளும் போதுதான் பொறாமை வருகிறது. அது உறவுக்காரனாக இருக்கலாம், எதிர்வீட்டுக்காரனாக இருக்கலாம், உடன் படித்தவனாக இருக்கலாம். தாம் பொறாமைப்படுகிறவர்களோடு தம்மையுமறியாமல் தம் நிலையை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். அவர்களை ஏதாவதொரு வகையில் நேரடியாகவோ அல்லது அடுத்தவர்களிடமோ மட்டம் தட்டி மனம் குதூகலிக்கிறது. ‘உன்னைவிட ஏதாவதொருவகையில் நான் நன்றாக இருக்கிறேன்’ என்று இறுமாப்பு எய்தி ஒரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த உளவியல் பிரச்சினைதான் பலரையும் அமைதியற்றவர்களாக்குகிறது. 

மேற்சொன்ன உறவுக்காரர் மீது பரிதாபம்தான் வர வேண்டும். அப்படி பரிதாபப்பட்டுவிட்டால் நாம் பக்குவமடைந்துவிட்டோம் என்று அர்த்தம். ம்க்கும். எரிச்சல்தான் மிகுகிறது. இன்னொரு உறவுக்காரர் இருக்கிறார். ஆசிரியர். தொழில்தான் ஆசிரியர். நானும் தம்பியும் சிறுவர்களாக இருந்த போது அம்மாவிடம் வந்து ‘வேலைக்குப் போற பொம்பளைங்க வளர்த்தும் குழந்தைகள் உருப்படுவதற்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு’ என்று பேசிவிட்டுச் சென்றுவிட்டார். வெகு காலத்திற்கு எங்களைத் திட்டும் போதெல்லாம் ‘அந்த வாத்தியார் சொன்னது மாதிரியே நடந்துடும் போலிருக்கே’ என்று அம்மா மூக்கால் அழுவார். இன்றைக்கும் அந்த மனுஷன் திருந்தவில்லை. ஏதாவது குசலம் பேசிக் கொண்டிருக்கிறார். 

எதிரிகளாக இருந்தால் பிரச்சினையே இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். இப்படியான உறவுக்காரர்கள்தான் பெரும் தலைவலி. முகத்தில் அடித்த மாதிரி பேசவும் முடிவதில்லை. முதல் அரைவேக்காட்டுக்குத்தான் ஒரு பாம் வைத்துவிட்டு வந்திருக்கிறேன். மகி அருகில் வரும் போது என்.டி.டி.வி செய்தி தளத்தை மொபைலில் எடுத்துக் கொடுத்தேன். இதை ஏன் அப்பன்காரன் இப்பொழுது கொடுக்கிறான் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடாளுமன்றக் கூட்டணி பற்றிய செய்தி அது. அவனுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் குறித்தெல்லாம் அரைகுறையாகத் தெரியும். ஏதோ முக்கியமான செய்தி போல இருக்கிறது எனத் தலைப்புச் செய்தியை மட்டும் வாசித்துவிட்டு ‘பார்லிமெண்ட்டுக்குத்தான் மே மாசம் எலெக்‌ஷனா? பிஜேபிக்கு அதிக எம்.பி வந்தா மோடி பிரதமர்..இல்லன்னா ராகுல் காந்தி...சரிங்களாப்பா?’ என்றான். அரைவேக்காட்டுக்கு காதில் விழுந்தது உறுதியானவுடன் ‘ஆமாம்ப்பா..நீ போயி விளையாடு’ என்று அனுப்பிவிட்டேன்.

முகத்தை பாறை மாதிரி வைத்துக் கொண்டு ‘பையன் என்ன படிக்கிறான்?’ என்றார். 

‘நாலாவது’

‘எந்த ஸ்கூலு?’ என்பது அடுத்த கேள்வி. 

இது போதும். இனி குழந்தைகளை விட்டுவிடுவான். நம்மை மட்டும்தான் வம்புக்கு இழுப்பான். அதற்கும் ஒரு பாம் தயாரிக்க வேண்டும். அயோக்கிய ராஸ்கல்!

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

வரலாற்று பதிவுகள் ....என்றும் அழிவதில்லை ...ஏராம் வயல் ..(பொன்னலம்மன் சோலை வழி )
அணைக்கரைப் பாறை
கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், இராவணாபுரம் குழந்தைவேலு, தமிழ்ப்பல்கலை-கல்வெட்டு ஆய்வு மாணவர் சமத்தூர் இரமேஷ் ஆகியோர் திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆய்வு நோக்கில் களப்பயணம் மேற்கொண்டபோது, அணைக்கருகில் இருக்கும் இராமன் என்பவர், அருகில் அணைக்கரை என்னும் இடத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாகத் தகவல் தரவே, அவரோடு சென்று பார்வையிட்டனர். திருமூர்த்தி அணைக்கருகில் சற்றுத் தொலைவில் தடுப்பணை ஒன்று உள்ளது. அப்பகுதி அணைக்கரை என்றும், அங்குள்ள பாறை அணைக்கரைப் பாறை என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிறிய தடுப்பணை; அதை ஒட்டியுள்ள ஒரு பாறையில் கல்வெட்டு அமைந்துள்ளது. கல்வெட்டின் அருகிலேயே, அதன் வலப்புறத்தில் பாறையில், சூலத்தின் புடைப்புச் சிற்ப்மும் செதுக்கப்பட்டுள்ளது.
பாறையின் சரிவான பகுதியில், ஓரளவு சமதளமாக உள்ள பரப்பில், ஆறுவரிகளில் கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன. பாறையின் மேலேயே கோடுகளால் நீள்சதுரம் ஒன்றை அமைத்து, அச்சதுரப் பரப்புக்குள் ஆறுவரிகளில் கல்வெட்டைச் செதுக்கியுள்ளனர். கல்வெட்டில் அணையைக் கட்டியவர் யார் என்னும் குறிப்பு உள்ளது. நாயக்கர் கால இராயர் மாயண நாயக்கர் என்பவரின் தளவாயாக இருந்த வாயண நாயக்கர் இந்த அணையைக் குரோதன ஆண்டு சித்திரை மாதம் பத்தாம் தேதி கட்டியதாகக் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் பழங்கால எழுத்து வடிவத்தை நோக்கும்போது, கல்வெட்டு கி.பி. பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதலாம். தமிழகத்தில், மதுரையைத் தலைநகராகக்கொண்டு நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிய விசுவநாத நாயக்கர், அவரது தளவாயும்(படைத்தளபதி), பிரதானியும்(முதலமைச்சர்) ஆன அரியநாத முதலியுடன் இணைந்து ஆட்சி நிருவாகத்தைப் பாளையங்களாகப் பிரித்தார். பாளையங்கள் உருவாக்கத்தில் பெரும்பங்கு அரியநாத முதலியையே சாரும். விசுவநாத நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1529-1564. எனவே, பாளையக்காரர் அமைப்பு கி.பி. 1564-ஆம் ஆண்டுக்கு முன்பே நடைமுறையில் வந்துள்ளதால், கல்வெட்டின் காலத்தைக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு என்று கொள்ளும் வாய்ப்பு மிகுதி. கல்வெட்டில் சக ஆண்டு, கலியாண்டு ஆகிய விவரங்கள் தரப்படவில்லையாதலாலும், அறுபதுவட்டத் தமிழ் ஆண்டான குரோதன ஆண்டு, தை மாதம் பத்தாம் நாள் என்னும் செய்தி தரப்பட்டுள்ளதாலும், கி.பி. பதினாறாம் ஆண்டில் வருகின்ற குரோதன ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1565 என்றோ, அல்லது அதை அடுத்து வருகின்ற கி.பி. 1625 என்றோ கொள்வது பொருத்தமாகலாம். எனவே, கல்வெட்டு ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை என்றும், தடுப்பணையும் நானூறு ஆண்டுகள் பழமையானது என்றும் கருதலாம். அணையைக் கட்டுவித்தவர் பெரும்பதவியில் (தளவாய்ப் பதவி) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுப்பாடம்
1 குறோதந வருஷம் சித்திரை
2 மாத்ம் 10 உ இந்த அணை
3 இராயதருவுக்க(ள்)
4 மாயண நாயக்கர்
5 தளவாய் வாயண நா
6 யக்கர் தன்மம்....
நன்றி :படம் ...தகவல் ...உதவி ..தென்கொங்கு சதாசிவம்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

வியாழன், 14 பிப்ரவரி, 2019

எனது அன்பு நண்பர் .வா மணிகண்டன் அவர்களின் பதிவு ...



பொம்முவிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் வரை

பெல்லாரி நாடு - இன்றைய கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்குமான எல்லையில் அந்தக் காலத்தில் ஒரு குட்டி நாடு. வானம் பார்த்த பூமி. அந்த நாட்டைச் சார்ந்தவர் பால்ராஜா. அரசராக இருந்தவராம்.  ஒரு சமயம் அந்த பிரதேசத்தில் மிகக் கடுமையான பஞ்சம் வந்துவிட்டது. குடிக்கவும் நீரில்லாத வறட்சி. பால்ராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலை.

அதே சமயத்தில் அந்தப் பகுதியில் கோலாச்சிக் கொண்டிருந்த ஓர் இசுலாமியனுக்கு பால்ராஜா நாயக்கர் குடும்பப் பெண் மீது கண் விழுகிறது. ஆள் விட்டுக் கேட்டுப் பார்க்கிறான் அந்த முகமதியன். அதுவே அந்தக் காலத்தில் பெரிய மரியாதைதான். அவன் யாரையும் கேட்காமல் கொத்திக் கொண்டு போயிருக்க முடியும். ஒருவேளை நாயக்கர் முடியாது என்று சொன்னால் அடுத்ததாக அவன் அதைத்தான் செய்திருப்பான். ஒரு பக்கம் பிழைக்கவே வாய்ப்பில்லாத பஞ்சம்; இன்னொரு பக்கம் இசுலாமியன். இனி இந்த நாட்டில் நமக்கு வேலையில்லை என்று முடிவு செய்கிறார் பால்ராஜா. ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, குடும்பத்தோடும் சுற்றத்தோடும் இரவோடிரவாக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். 

இச்சம்பவம் இன்றைய தேதிக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஆறு மாதங்கள் நடந்த பிறகு தெற்கில் கடல் பகுதியை அடைகிறார்கள். இனி இங்கேயே தங்கிக் கொள்ளலாம் என சாலிகுளத்தில் கொட்டகை அமைத்து உறவுகளோடு வாழத் தொடங்குகிறான் பால்ராஜா. சாலிகுளம் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பால்ராஜாவின் மனைவி பெயர் லக்கம்மாள். இவர்களுக்கு நிறையக் குழந்தைகள். எட்டாவது பிறந்தவன் பெயர் பொம்மு. பதினைந்து பதினாறு வயது ஆகியிருந்தது. கெட்டிக்காரன். 

எப்படி கெட்டி என்று கேட்டால் அதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. பால்ராஜா குடும்பத்தினர் சாலிக்குளம் வந்து ஐந்தாறு ஆண்டுகள் கழிந்த பிறகு நள்ளிரவில் கள்ளர் கூட்டமொன்று கால்நடைகளைத் திருடிக் கொண்டு சாலிக்குளம் வழியாக வருகிறது.  அரவம் கேட்ட பொம்மு ‘இந்த நேரத்தில் யார் போகிறார்கள்’ குடிசையை விட்டு வெளியில் வந்து பார்க்கிறான். திருடர்கள் என்பதைப் புரிந்து கொண்ட பொம்மு சப்தமிடுகிறான். அப்பொழுது கள்ளர்கள் ‘அட சின்னப்பையன்’ என்று நினைத்துத் தாக்க முற்படுகிறார்கள். இருபது வயது கட்டிளங்காளையான பொம்மு ஒரே ஆளாக பனிரெண்டு கள்ளர்களையும் அடித்து வீழ்த்தி, ஊர்க்காரர்களை அழைத்துக் கள்ளர்களைக் கட்டிப் போடுகிறான் பொம்மு. விடிந்த பிறகு இந்தச் செய்தி அக்கம்பக்கமெல்லாம் பரவுகிறது. அப்படித்தான் பொம்மு என்பவன் கெட்டிக்கார பொம்முவாகி பிறகு கெட்டிபொம்மு என்றாகிறான்.

எங்கேயிருந்தோ வந்த தெலுங்குக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் எப்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையத்துக்காரன் ஆனான்?

அதே தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளத்துக்குப் பக்கத்தில் வீரபாண்டியபுரம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு ஜெகவீரபாண்டியன் என்றவொரு சிற்றரசன் இருந்தான். அந்தக் காலத்தில் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களுக்கு பகைமை இருந்து கொண்டேயிருக்கும் அல்லவா? அப்படி புதியம்புத்தூர், ஆரைக்குளம் ஆகிய ஊர்க்கார அரசர்களுடன் பகை முற்றுகிறது. இந்த ஊர்கள் எல்லாமே இன்றைக்கும் இருக்கின்றன. ஜெகவீரபாண்டியனின் அரசனாக இருந்த சங்கரசிங்குவுக்கு கெட்டிபொம்மு பற்றிய செய்தியை யாரோ முன்பாகவே சொல்லியிருக்கிறார்கள். அமைச்சர் மன்னரிடம் பொம்முவைப் பற்றிச் சொல்லி ‘அவனை நம்ம படையில் வைத்துக் கொண்டால் நமக்கு வலு கூடும்’ என்கிறான். ஜெகவீரபாண்டியன் ஆள் அனுப்பி பொம்முவை அழைத்து வரச் சொல்லி அவனிடம் பேசுகிறான். பொம்முவுக்கும் சம்மதம்தான்.

போருக்குத் தயாரானது வீரபாண்டியபுரம். எதிரி ஊர்க்காரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து படை திரட்டி வந்தார்கள். ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மோதிக் கொண்டார்கள். எதிர்த்து நின்றவன் கெட்டிபொம்மு. இருபத்தோரு வயதுடையவன். ‘சின்னப்பையன்’ என்றுதான் எதிரிகள் இருவரும் களமாடினர். ஆனால் இரண்டு பேர்களின் படைகளும் தோற்றுச் சிதறின. அதிலிருந்தே ஜெகவீரபாண்டியனுக்கு அணுக்கமானவனாகிவிட்டான் கெட்டிபொம்மு. வாரிக்கொடுத்து தனது பக்கத்திலேயே வைத்துக் கொண்டான் அவன். ஜெகவீரபாண்டியனுக்கு வாரிசுகள் யாருமில்லையாம். அதனால் கெட்டிபொம்முவையே அரசனாக்குகிறான். பெல்லாரியிலிருந்து வந்தவன் திருநெல்வேலிச் சீமையில் சிற்றரசனாக முடி சூடிக் கொண்டான்.

நாடு கிடைத்த பிறகு தமக்கேற்ற ஒரு கோட்டையை அமைக்க விரும்பினான் கெட்டிபொம்மு. அதற்கான இடம் தேடிக் கொண்டிருந்தவனிடம் வேட்டைக்காரர்கள் சிலர் வந்து ஒரு கதையைச் சொன்னார்களாம். ஒரு முயலை வேட்டைக்காரர்களின் ஏழு நாய்கள் துரத்திச் சென்ற போது வெகு தூரம் ஓடிய முயல் ஓரிடத்தில் எழுந்து நின்று நாய்களை மிரட்டியதாகச் சொல்லியிருக்கிறார்கள். வீரம் மிகுந்த அந்த இடம்தான் கோட்டை கட்டி வாழத் தகுந்த இடம் என்று அந்த இடத்தைச் செப்பனிட்டு கோட்டை கட்டி தம்முடைய தாத்தா பாஞ்சாலன் பெயரில் பாஞ்சாலன் குறிச்சி என்று பெயரிட்டான் கெட்டிபொம்மு.

தம்முடைய ஆள் ஒருத்தன் மன்னராகிவிட்டது கேள்விப்பட்ட சுற்றத்தார் எல்லாருக்கும் வெகு சந்தோஷம். வடக்கே தெலுகு தேசத்திலிருந்து கூட்டம் கூட்டமாகத் தெற்கு நோக்கி வந்து பாஞ்சாலங்குறிச்சியில் குடியேறினர் கம்பள நாயக்கர் வகையறா. ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்ட நாயக்கமார்கள். அப்படி வந்தவர்களுக்கெல்லாம் வாழ்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்தான் கெட்டிபொம்மு. ‘கொடுத்தால் கட்டபொம்மு கொடுக்க வேண்டும்; விளைந்தால் கரிசல் காடு விளைய வேண்டும்’ என்ற சொலவடையும் உருவானது. 

இந்தக் கெட்டிபொம்முதான் முதல் மன்னன். இவனுக்குப் பிறகு நாற்பத்தியேழாவது பட்டம்தான் கயத்தாறில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

தொடரும்.

(பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதி, தற்போது திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் தேடிப்பிடித்து மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது. (உயிர்மை பதிப்பகம் வெளியீடு))

எம்.வி.வெங்கட்ராம் எழுதிய  ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்: வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற புத்தகமும் உதவியது)

சனி, 9 பிப்ரவரி, 2019

...உடுமலைப்பேட்டை பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு.....
 பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழைக்காலத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, அணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தியது, உடுமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை திருமூர்த்தி மலையிலிருந்து பாலாறு உருவாகி, சமவெளிப்பகுதிக்கு செல்கிறது. பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணை கட்டும் முன், பாலாற்றில் சென்ற தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மேடான பகுதியிலிருந்து வரிசையாக கீழ்நோக்கி ஏழு குளங்கள் அமைக்கப்பட்டு, தற்போதும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியகுளத்தில், நீர் மட்டத்தை அளக்க முற்காலத்தில், அமைக்கப்பட்ட கல்மானி தற்போதும் உள்ளது.இதே போல், குளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில், திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாற்றின் குறுக்கேயும், தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருமூர்த்திமலை பகுதியில், கண்டிமுத்து ,கார்த்திக் குமார் ,  சிவக்குமார் உட்பட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், மொடக்குப்பட்டி ரோட்டில், பாலாற்றின் கரையில் இருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. அருகில், தளி பாளையக்காரர் சிலையுடன், பாறையில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டில், அணை கட்டப்பட்ட ஆண்டு, மறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் தளி பாளையக்காரர் எர்ரமநாயக்கர் என்பவரால், அணை கட்டப்பட்டு, பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பணை போன்ற இந்த அணை சுவர்கள் இடிந்து ஓடையில் கிடக்கின்றன.
ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'தளி பாளையக்காரர் காலத்தில், பல்வேறு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, திருமூர்த்தி அணையின் கழிவு நீர் ஓடையாக மாறியுள்ள பாலாற்றின் கரையிலுள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. சிலை காலப்போக்கில் சேதமடைந்துள்ளது. அப்பகுதி எர்ரம நாயக்கரின் பெயரால், ஏராம் வயல் என அழைக்கப்படுகிறது. அங்குள்ள சிலைக்கு குறிப்பிட்ட நாட்களில், மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் நீர் பாசன முறைகள் சிறப்புற்றிருந்தது இத்தகைய கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது'

நன்றி :தினமலர் ...
வரலாறு தெரியவேண்டும் எதற்காக?

கல்வி சமூகத்திற்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பாடுபடும் நல் உள்ளங்களே,
வரலாறு எதற்காக?
,
இன்றைய கல்வி முறையைக் கொண்டுவர இதற்கு முன் இருநூறு ஆண்டு கால கல்வி வரலாறு  காரணமாக இருந்தது.

இன்றைய நீர்மேலாண்மையைக் கொண்டு வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே வரலாறு கண்ட கரிகாலன் கொண்டு வந்தது உலகத்திற்கான நீர் மேலாண்மை, ஆயிரம் மருத்துவமனைகள் இங்கு கொண்டு வந்து நோய்கள் தீர்க்க பாடுபட்டாலும் இன்று நிலவேம்பு கசாயம் கொடுக்கச் சொன்னது எந்த வரலாறு தெரியுமா?
ஏட்டுக்கல்வி , கணிப்பொறிக்கல்வி என எந்தக் கல்வி வந்தாலும் அத்தனைக்கல்வி கேள்விகளுக்கும் முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமை பேசுவதுஎந்த வரலாறு?
நீங்களும், நானும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில்  பணம் சம்பாதித்து விடலாம் ஆனால் நாம் செலவழித்த, சேர்;ந்துப் படித்த அழகானநினைவுகளை எதன் அடிப்படையில்  படைத்திருப்பாய், ஒரு மனிதன் நடப்பதற்கு முன்னோக்கிச்செல்கிறான்,  ஒடுவதற்கு முன்னோக்கி செல்கிறான் ஆனால்
ஆனால் உயரமாகச் செல்வதற்கும், பந்தயத்தில்  அடுத்தவர்களை முந்துவதற்கும்  ஏன் பின்னோக்கிச் சென்று முன்னோக்கி ஓட வேண்டும்,
ஏனெனில் பத்தடி பின் சென்றால் ஐந்தடியேனும் உயரம் செல்லலாம்,  இருபதடி பின் சென்றால் ஆறடி உயரம் செல்லலாம்.

வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நீங்கள் பின்னோக்கிச் செல்கின்றீர்களோ, அதைவிட இருமடங்கு தூரம் முன்னோக்கி செல்வதற்கான அளவே வரலாறு
இந்த வரலாறு சமூக வரலாறு, பொருளாதார  வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, இன வரலாறு, நீங்கள் கூறும் அத்துனை நிகழ்வுகளும் வரலாறே,
சுருக்கமாகச்சொன்னால்  இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு மக்கள் வரலாறு யாரும் இதுவரைக்கும் படைத்ததில்லை,

இதுவரைக்கும் நமக்குச் சொல்லப்பட்ட வரலாறு  ஒரு கருத்தியல் அடிப்படையில், ஒரு தரப்பட்ட பார்வையின் அடிப்படையில், ஒரு குறித்தசமூகத்தின் அடிப்படையில், ஆனால் உடுமலை வரலாறோ இன்று லட்சக்கணக்கான மனித உள்ளங்களில் பேட்ட பாடலாகவும், திருமூர்த்தி மலை மண்ணு பாடலாகவும் வலம்வந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் எவ்வளவு தான் அள்ளிக்கொடுத்தாலும் இந்த மண்ணின் மனத்திற்கும் ஊரின் பாசத்திற்கும்  ஈடாகாது, எங்க மக்கள் எங்களுக்கு உசிரு,  இந்த மண்ணே எங்களுக்கு பாசம்.  தொடரும் உடுமலை வரலாறு  அனைவருக்காகவும், உங்களு;காகவும்,தொடர்ந்து பேசும் . . .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681👍🐘🐘🐘💓💓🌷🌷

புதன், 6 பிப்ரவரி, 2019


  • Karthic SR:கம்பளவிருட்சம் குழுமம் ...
    கீர்த்திவீரர் எத்திலப்ப நாயக்க மாமன்னரின் பிறந்தநாள் விழா சிறப்புத் தொகுப்பு :::
    வீர பராக்கிரம செயல்களை செய்து வெற்றிகளை ஈட்டும் 
    சத்திரிய புருஷர்களுக்கு
    பெரும்பாலும் மாவீரன் என்ற சொல்லாடலே பயன்படுத்துவது நம் முன்னோர் வழி வழியாக போற்றி வந்த மரபு
    ஆனால் நம் குல நாயகனான எத்தலப்ப நாயக்கருக்கு
    கீர்த்தீ வீரன் என்ற பெயர் வர காரணம்??
    சுதேச உணர்விக்காகவும்
    கப்பம் கட்டும் அடிமை முறையை அறுத்தெரியவும்
    தனது பரம்பரை வாழ்ந்த மண்ணில் அந்நியன் (ஆங்கிலேயன்)
    அதிகாரம் செய்வதையும் தன் இனமான பாளையக்காரர்களை உயிர்ச்சேதம் செய்த சர்வ வல்லமை பொருந்திய ஆங்கிலேய அரச பிரதிநிதியை தூது வந்த வெள்ளையனை தூக்கிலிட்டு எதிர்ப்பு தெரிவித்த ஒரே ஒரு பாளையக்காரர் என்பதாலும்
    வீரம் விவேகம் மதியூகம் நிறைந்த தந்திரப்போர்முறைகளில் ஒப்பாரும் மீட்பாரும் இல்லை என்ற சொல்லாடலுக்கு இணங்க வாழ்ந்தவர் என்ற காரணங்களுக்காகவே
    கீர்த்தி வீரர் என்ற சிறப்பு வாய்ந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது
    எத்திலப்ப நாயக்கரின் பராக்கிரமத்தை பறைசாற்றும் விதமாக செவி வழி செய்தி ஒன்று எங்கள் குல முன்னோர்களால் கூறப்படுகிறது
    காலத்தின் மாறுதல் மற்றும் சாம்ராஜ்ய விரிவாக்கப் படையெடுப்பு போன்ற காரணங்களால்
    எத்திலப்ப நாயக்கரின் ஆட்சிப் பகுதிகள் மைசூர் சுல்தானின்
    அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு திரையும் வரியும் செலுத்தும் பாளையமாக இருந்துவந்துள்ளது
    சுதேச உணர்வை வெளிப்படுத்த விரும்பிய எத்திலப்ப நாயக்கர் மைசூர் அரசருக்கு திரை செலுத்த மறுக்கிறார்
    சுல்தானின் கோபத்திற்கு இலக்காகிய எத்திலப்ப நாயக்கர் சுல்தானின் வற்புறுத்தலின் காரணமாக மைசூர் சுல்தானை காணச்செல்கிறார்
    அங்கு நடைபெற்ற விவாதத்தின் விளைவாக
    இரும்பினாற் வார்க்கப்பட்ட குதிரையை
    தனது மந்திர சக்தியினால் உயிர்பித்து சிரைசேதத்திலிருந்து தப்பித்ததுடன் திரை வரி செலுத்தா தனி நாடு என்ற பெருமையுடன் பல பரிசுகள் அளித்து மைசூர் சுல்தான் சிறப்பித்தாக செவி வழி செய்தி்களும் நிலவுகின்றன..