வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இன்றைய பூவலபருத்தி D .சுரேஷ் -S கார்த்திகா அவர்களின் குடும்ப விழா ....





 இன்றைய பூவலபருத்தி D .சுரேஷ் -S கார்த்திகா அவர்களின் குடும்ப விழா ....

இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகளை காலையில் முடித்தவுடன் .அருமை மாப்பிளை செந்தில்ராம் உடன் உடுமலையின் மேற்கே இருக்கும் ஆனைமலை பாதையில் பசுமை நிறைந்த தென் மேற்கு மழை சாரலுடன் சுரேஷ் கார்த்திகா அவர்களின் புதல்வி தீப்ஸிகா பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு பயணமானோம் ..சாலையின் பசுமை நிறைந்த தென்னைகளின் நடுவே தகவல்களை பரிமாறிக்கொண்டே பயணம் செய்தது .விடுமுறை தினம் என்பதால் பாதையில் வால்பாறை செல்லும் இன்றைய தலைமுறை பருவ வயது குழந்தைகள் இரு சக்கர வாகனங்களில் பரந்த படி பயணம் செய்துகொண்டு இருந்தனர் ...

விழா நடக்கும் கமலம் மஹாலுக்கு சென்றவுடன் எங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ..நம்ம  வங்கி  மாப்பிள ஜெயராம் நான்கு சக்கர வாகனம் நம்மை முதலில் வரவேற்றது ....


முதலில் நம்ம வரவேற்ற சுரேஷ் கார்த்திகா குடும்பம் பெரியவர்களுடன் நம்மை வரவேற்றது மிக்க மகிழ்ச்சி ..ராஜாவூர் மாப்பிள ஈஸ்வரன் மாப்பிளை நீண்ட மாதங்களுக்கு பிறகு சந்தித்ததால் இன்றய வனத்துறை பற்றி சிறு சிறு தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .

வங்கி மாப்பிள ஜெயராம் உள்ளூரில் இருந்தாலும் வேலை பணி காரணமாக நேரில்  சந்திக்கும் வாய்ப்பு குறைவு .நேரில் சந்தித்து இன்றைய வங்கி களில் புது புது திட்டங்களை பற்றி தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .பயனுள்ளதாக இருந்தது .

மின் பொறியாளர் கார்த்திக்குமார் மாப்பிளை அடிக்கடி மூன்று மாவட்டங்களுக்கு அடிக்கடி வேலை பளு காரணமாக பயணம் செய்து கொண்டே இருப்பதால் நேரில் பார்த்து  பேசும் வாய்ப்பு கிடைத்தது .மின் அமைப்பு  பராமரிப்பு பணி மற்றும் புதிய நிறுவனங்கள் மற்றும் வீட்டு பணி களில் இன்று இருக்கும் புதிய மின் மாற்றிகள் பற்றி தகவல்களை கூறினார் ..இதை ஏன் அவரிடம் கேட்டேன் என்றால் அடிக்கடி என் வாடிக்கையாளர்களை பார்த்து பேசும்போது இது போன்ற தகவல் அவர்கள் வீடு கட்டுவதற்கு பயணம்படும் என்பதால் ...

விழா மேடைக்கு செல்வதற்கு செல்லும் வழியில் பொள்ளாச்சி கல்லூரி பேராசிரியர்  தெய்வா பாப்பா சந்தித்தது மிக்க மகிழ்ச்சி பாப்பாவின் வீட்டின் காதணி விழா  நிகழ்வுக்கான அழைப்பை சொல்லிவிட்டார் நேரில் .மகிழ்ச்சி .


விழா மேடைக்கு அருகே செல்லும்பொழுது நம்ம கரப்பாடி சசி வர்மா மாப்பிளையை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி .இன்றைய பொள்ளாச்சியில் நடத்திவரும் ஆப்செட் பிரின்டிங் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை பற்றி .இன்றைய விழாக்களுக்கு அச்சு அடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை ,டிசைன் பற்றி பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம் நன்றிகளும் பாராட்டுகளும் .இதற்கு இடையில் எரிசனம்பட்டி அரசு பேருந்து திருப்பூர் நடத்துனர்  தம்பியை பார்த்து பேசியது பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை அசைபோட்டது மகிழ்ச்சி .

எட்டயபுரம் ஜமீன் உசிலம்பட்டி திருப்பூர் கார்த்திக் ஸ்மார்ட் தம்பியை நீண்ட மாதங்களுக்கு பிறகு சந்தித்து பேசி விழா மேடையில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம் ....

பில்லவா நாயக்கன் சாலையூர் தம்பி  சதீஷ்குமார் காட்பாடி அருகே இருக்கும் வேலூரில் இந்திய அளவில் வளர்ச்சி  பெற்ற வட மாநிலபன்னாட்டு  கோழிப்பண்ணை நிறுவனத்தில் பணியாற்றும்  தம்பியை சந்தித்து நிறுவனம் மேற்கொள்ளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கறிக்கோழிகள் பற்றி பல சுவாரிஸ்யமான தகவல்களை பரிமாறினார் ...நன்றிகள் .

இன்று புங்கமுத்தூர் ஊர் நாயக்கர் மல்லிகை மல்லசீலன் மாப்பிளையை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி .இன்றய விவசாயம் பற்றியும் இன்றைய நம் கோவில்களை பற்றியும் பேசிக்கொண்டோம் ..

மத்திய விருந்து அரங்கில் சென்று மதிய உணவு பீன்ஸ் பொரியல் .வெஜிடபிள் பிரியாணி ,பூசணி அல்வா ,புளிக்குழம்பு ,சாம்பார் சாதம் அனைத்து உணவுகளும் அருமையான விடுமுறை விருந்து அருமையான நாவுக்கு இனிமையாக இருந்தது .விருந்தில் கோவை தம்பி வைரம் தயாரிக்கும் எமரால்டு நிறுவனத்தில் பணியாற்றும் தம்பியுடன் நீண்ட நேரம் மதிய உணவு அருந்திக்கொண்டே தகவல்களை பரிமாறிக்கொண்டோம் .இன்றைய வைரம் தயாரிக்கும் புது புது டிசைன் ,புதிய தொழில் நுட்பங்கள் பற்றி விவாதிக்கொண்டோம் .தம்பியின் மனைவியும் கோவையில் மருந்து விற்பனை நிறுவனம் நடத்திக்கொண்டுள்ளார் ...மருந்து நிறுவனம்பற்றி .கோவையில் துடியலூர் .கவுண்டம்பாளையம் பகுதிகள் பற்றி பேசியது .நான் கோவையில் பணியாற்றி போது கொங்குநாடு கல்லூரி ,துடியலூர் ஏடு எழுதும் வீடு பற்றி செய்திகளை மலரும் நினைவுகளாக மனதில் நிழலாடியது தம்பியை இன்று சந்தித்தது பயன் உள்ளதாக இருந்தது .

இன்றைய விழாவில் தென்மேற்கு மழை மதியம் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வெளியே பெய்துகொண்டு இருந்தது ..விழா அரங்கில் கம்பளப்பட்டி மைக் செட் தாத்தாவுடன் இன்றைய காலம் மைக் செட் பணி எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்று கேட்டவுடன் தாத்தா அவர்கள் கம்பளப்பட்டி பூவலபருத்தி .மஞ்சநாயக்கனுர் ,அர்தநாரிபாளையம் ,தொண்டாமுத்தூர் பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் ,சொந்தங்கள் இன்றளவும் அழைத்துக்கொண்டு உள்ளது என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..

விழா அரங்கில் இருந்த கிளம்பும்போது ஜெயராம் மாப்பிள்ளை  அழைத்தார் இங்க வாங்க உங்களை பார்க்க ஒரு சொந்தம் இருக்கிறார் என்றார் ..நேரில் பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் முகம் மறந்துவிட்டது ..குமணன் வாழ்ந்த பகுதி ரெட்டையம்பாடி புலவர்கள் வாழ்ந்த பகுதி வரலாற்று சிறப்பு பெற்ற பழனி ரெட்டையாம்படி வாடிப்பட்டி பாப்பா தங்கமான முதுகலை கணிதம்  பட்டம் பெற்ற தங்கரத்தினம் பாப்பா வை சந்தித்தது மிக்க மிகிழ்ச்சி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது பாப்பாவை சந்தித்தது ..உடுமலை பெண்கள் கல்லூரி ஜீ வீ ஜீ விசாலாட்சி கல்லூரியில் முதுகலை கணிதம் பட்டம் பெற்று தற்பொழுது நூல் நூற்பாலையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் ..நீண்ட நேரம் இன்றய நூற்பாலை நிறுவன பணிகள் பற்றி .புதிய ஏற்றுமதி கொள்கை ,புதிய மாற்றங்கள் பற்றி விவாதித்து மிக்க மகிழ்ச்சி ....

இன்றய சுதந்திர தின நாள் மற்றும் சுரேஷ் கார்த்திகா குடும்ப விழா வில் கலந்துகொண்டு சொந்தங்களை சந்தித்தது பயனுள்ள விழாவாக  அமைந்தது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் -9944066681




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக