செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

 கல்லாக நிற்கும் நீராணிக்கர்களும், மடையர்களும், கரையார்களும்


ஏழுகுளப்பாசனமும் நிர் மேலாண்மையும் என்ற தலைப்பில் கரையார், நீராணிக்கர்கள், மடையர், குறித்தான பல்வேறு செய்திகளை உடுமலை வரலாற்றில் நூல் பதிவிட்டிருந்தோம்.

இதுநாள் வரை பெரியகுளத்திற்கு அருகில் இருந்த கற்சிலை தற்போது நீராணிக்கர் எனவும், மடையர் எனவும் கரையார் எனவும் கண்ணுக்குத் தெரிந்து பதிவு
செய்துள்ள செய்தியாளர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இது போன்ற ஒட்டுக்குளம், செங்குளம். அம்மாபட்டிகுளம், கரிசல் குளம், பூசாரி நாயக்கன் குளம் , வலையபட்டி வதூத் குளம் என ஒவ்வொரு நீர்;த்தேக்கத்தை ஒட்டியும் இது போன்ற சிலைகள் இருப்பதை இனிமேலும் கண்காணித்து பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

இன்றைய தினமலர்
( விரிவான செய்திகள் உடுமலை வரலாறு ஏழுகுளப்பாசனத்தில் உள்ளது )

உடுமலை வரலாறு 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..

 வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..

வரலாறு என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலை


பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .
தொன்று தொட்டு இன்று வரை வாழந்து வரும் பல்வேறு இனக்குழுக்கும் .தன் குடி பெருமைகளை அடுத்துவரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஓர் வகையில் வரலாறு வாயிலாகவோ ,அல்லது தனது பூர்விக பெருமைகளை பறைசாற்றும் கதைப்பாடல்கள் வாயிலாகவோ ,அல்லது படிக்கவழக்கம் ,பண்பாடு நடைமுறைகள் இவற்றில் கோலோச்சும் குலா தெய்வ வழிபாடுகள் மூலமாகவோ வெளிப்படுத்த விரும்புகின்றன .ஆக தனது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் காரணிகளில் ஒன்றக குலதெய்வ வழிபாடும் உள்ளது .
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும் வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...
இத்தகைய குலதெயவ வழிபாடுகள் (அ )வழிபாட்டு முறைகள் அது சார்ந்த இனக்குழுவை நெறிப்படுத்துவ தோடில்லாமல் அவர்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் காரணிகளில் ஒன்றகவும் அமைகிறது .
மேலும் நம் இந்திய தேசம் மட்டுமில்லாது பல அந்நிய தேசங்களிலும் இத்தகைய குல தெய்வ வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளது .
பெரும்பாலும் மறைந்த முன்னோர்கள் அல்லது வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் வழிபாடே குலதெய்வ வழியாக மாறியதாக சங்க இலக்கிய குறிப்புகளும் தெரியப்படுகின்றன .
தற்பொழுது நாம் கொண்டிருக்கும் வரலாறுகளில் பெரும்பான்மை யானவை பல அந்நிய தேசத்தவரால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன அதன் காரணமாகவே அவர்கள் பதிவுசெய்யத் தவறிய பல வரலாறுகளும் அச்சூலில் உண்மைத்தன்மைகளும் தற்பொழுது கல்வெட்டுகள் வழியாகவும் அவர்கள் இனம் சார்ந்த (அ )இடம் சார்ந்த கதைப்பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது ,அந்நியன் போற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கிவைப்பது அறிவுடைமையாகாது .
ஸ்ரீ மஹாகணமும் மேன்மையும் பொருந்திய ஒன்பது கம்பளத்துக்கும் கட்டுப்பட்ட சத்தியந் தவிரதவர்களான ,சன்ன மாடு ,சலியெருது ஆயர்குழல் ,இரத்தினகம்பளி ,பிடிசெம்புக்கும் உடையவரும் ,புலிமீசையில் ஊசலாடுகின்ற பெரியோர்களும் ,பாலவார் குலா பன்னிரெண்டு தண்டிக்காரருமான
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி பாலம்
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல பாலம்
8.சல்லூறு பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்
ஆகிய 12 குல தண்டிகை காரர்கருக்கும் அவர்களுக்கு முரசாக விளங்கிய
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்
அகியோர்களுக்கும் ,அவர்களின் உறவின் முறையாக விளங்கிய
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்
ஆகியோர்களுக்கு தாய் கோவிலாக விளங்கிய முந்தைய கோயம்பத்தூர் ஜில்லா ,உடுமலைப்பேட்டை தாலுகா ,கோட்டமங்கலத்தில் ஆதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வம் .வல்லகொண்டம்மன் என்றும் அழைக்கபடும் கோவிலைப்பற்றிய சிறு தொகுப்பே இந்நூல் பாளையக்காரர்களாலும் ,மேற்கண்ட ஜமீன்தார்களாகும் ,சீரோடும் ,சிறப்போடும் வழிவழியாகவும் ,வாழையடி வாழையாகவும் ,வம்ச தவறாமாலும் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில் ,

வியாழன், 13 பிப்ரவரி, 2025

உப்பு பற்றி நீங்கள் அறியாத சுவரசியமான தகவல்கள் சில…


 உப்பு பற்றி நீங்கள் அறியாத சுவரசியமான தகவல்கள் சில…

"Salary Credited" எனும் மெசேஜ் கண்ணில் படும்போது வரும் ஆனந்தத்திற்கு ஈடுண்டா? ஆனால், இந்த Salary அல்லது சம்பளம் எனும் வார்த்தை நம் காதில் விழும்போது நாமெல்லாம் உப்பைத்தான் நினைவுகொள்ளவேண்டும். ஏன் தெரியுமா? இந்த இரண்டு வார்த்தைகளும் உப்பிலிருந்துதான் பிறந்துள்ளனவாம். பண்டையகாலத்தில் உப்பு மிகவும் அரிதானவோர் பொருளாக கருதப்பட்டதால் வெண் தங்கம் (White Gold) என்று அழைக்கப்பட்டது. பண்டைய ரோமர்கள் தமது படைவீரர்களுக்கு உப்பினையே கூலியாக வழங்கியுள்ளனர். அதனை “Salarium” எனும் லத்தீன் வார்த்தையால் குறிப்பிட்டுள்ளனர். Salarium எனும் லத்தீன் வார்த்தையே பின்னாளில் “Salary” என மாற்றமடைந்துள்ளது.

அதேபோன்றே உப்பு உற்பத்தித்தொழிலை அடிப்படையாக வைத்துதான் சம்பளம் எனும் சொல்லே உருவானதாகவும் சொல்லப்படுகின்றது . உப்பினை உற்பத்தி செய்யும் களத்திற்கு பெயர் “அளம்” . பண்டையகாலத்தில் இந்த அளத்தில் வேலை பார்ப்போருக்கு கூலியாக “சம்பா” அரிசியே கொடுக்கப்பட்டதால். அப்படி " அளத்தில் கிடைத்த சம்பா " சம்பா - அளம்” என்பது காலப்போக்கில் சம்பளம் என மருகியது எனக்கூறப்படுகின்றது .

இப்படிப்பட்ட உப்பின் வணிகத்திற்காக உலக நாடுகளுக்கிடையே ஏகப்பட்ட போர்கள் நடந்துள்ளன. உப்பின் மீது போடப்பட்ட வரிகளுக்காக எத்தனையோ போராட்டங்கள் புரட்சிகள் வெடித்துள்ளன. அதுமட்டுமா? இன்று உப்பின் வணிகம் காப்பிரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றபின் அதில் ஏராளமான உணவரசியல்களும் நுழைந்துவிட்டன. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் அயோடின் குறைபாடுடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக மக்களுடைய அன்றாட உணவில் எப்படியாவது அயோடினை சேர்த்தாகவேண்டும் என யோசித்த அமெரிக்க அரசு அதற்காக தேர்ந்தெடுத்த பொருள் "உப்பு" அப்போதுதான் உப்பில் “அயோடின் கலந்த உப்பு“ எனும் புதிய முறை உருவானது .

கடைசியில் அயோடின் கலந்த உப்புதான் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தேவை என்பதுபோல் இந்த அயோடின் உப்பு வணிகம் பரப்பப்பட்டது. "உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா?" போன்ற விளம்பரங்களின் பின்னால் இருக்கும் வணிக நோக்கம் தெரியாமல் நாமும் அதை வாங்கி வயிற்றில் கொட்டிக்கொள்கின்றோம்.

மனிதன் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது அவனது உடல் இயக்கத்திற்கு தேவையான உப்பானது அவன் வேட்டையாடும் விலங்கின் இறைச்சியிலிருந்தே கிடைத்தது. ஆனால், அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்தபின் உப்பு என்பது தனியாக தேவைப்பட்டது. அப்போதுதான் அவன் உப்பை எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்கலானான். நெருப்பு, விவசாயம் என்பவற்றுக்கு அடுத்து மனிதனின் அடுத்தகட்ட பரிணாமம் உப்பைக் கண்டுபிடித்ததுதானாம் .

உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் நம் வியர்வையினூடாக உப்பு வெளியேற்றப்பட்டமையினால் நமது உடல் இயக்கத்தின் சமச்சீருக்கு உப்பு என்பது அதிகமாக தேவைப்பட்டது. ஆனால் இன்றோ உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துபோனதால் உப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கின்றது.

புதன், 5 பிப்ரவரி, 2025

Kambalapatti - Pollachi Kenderyiamman (Kendukattamman)

 Even as times change... the culture... and traditions... of the Kambala community remain unchanged. The Kambalapatti - Pollachi Kenderyiamman (Kendukattamman) Temple Festival is a testament to this. This three-day festival is a unique event that showcases the community's rich heritage and traditions.

The Kambala community, has been observing this festival for centuries. The community's ancestors migrated from the northern regions of India, specifically from the Pallari and Devakiri areas, to escape the Mughal invasions.








The festival is dedicated to the worship of Kenderyiamman, a deity revered by the community. The festivities begin with the ritual of seeking the deity's permission, which is obtained through a traditional ritual involving the playing of the 'Pulalanguzhal' (a type of flute).
The highlight of the festival is the re-enactment of the community's migration from the north. The devotees, dressed in traditional attire, carry the deity's idol on their shoulders and proceed to the riverbank, where they symbolically cross the river using a makeshift bridge made of punga trees.
The festival is a celebration of the community's rich cultural heritage and its traditions. It is a testament to the community's resilience and its ability to preserve its customs and traditions despite the passage of time.
The festival is organized by the Kambala community, with the support of the local administration and other stakeholders. It is a significant event in the cultural calendar of the region and attracts devotees and tourists from all over.
🌈🌈✒️✒️📗📗📡📡🎙️🥰🥰🌈

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

கம்பாலப்பட்டி -பொள்ளச்சி ..🥰

 காலங்கள் மாறினாலும் ...🥰

பண்பாடும் ...🥰

கலாச்சாரம் ..🥰

மாறாத கம்பள சமுதாய மக்கள் ....-🥰







கம்பாலப்பட்டி -பொள்ளச்சி ..🥰

பாரம்பரியம் பண்பாடு காக்கும்  

கெண்டேரியம்மன் (கெண்டுகாட்டம்மா) திருவிழா :

 ஓர் சமுதாய சூழலில் பாரம்பரியம் மங்கி  வரும் இக்கால கட்டத்தில் 

இன்றளவும் பழமை குன்றாமல் பெருவிழா பூண்டு பயபக்தியுடன் நடந்து கொண்டு வருகிறது இத்திருவிழா... 

 விழா சிறக்கும் இடமானது 

  ராஜ கம்பள மக்கள் வாழும்  ஒன்பது குலத்தவர்களையும்  தன்னுள்

அடக்கியாளும்  ஊரான  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள    தொண்டாமுத்தூர்  ஜமீன்க்கு உட்பட்ட  

ஊரான 

 கம்பாலப்பட்டி  

இங்கு தான்  இத்திருவிழா  கோலாகாலாமாக கொண்டாட படுகிறது... 

இந்த திருவிழாவானது மூன்று நாட்கள் நடை பெறுகிறது இங்கு கெண்டேரியம்மன் என்று அழைக்க கூடியா   கெண்டுகாட்டம்மாள் தாயாரும் 

மல்ல தாத்தையன்  ஆகிய இரு    தெய்வங்கள் ஆட்சி செய்கிறார்கள் 

 கெண்டேரியம்மன் கடவளானது...  வேகிளிவாரில் ஒரு உட் பிரிவான  இர்ரின்னா   குலத்தவருக்கு ஆதி தல குல தெய்வமாக  விளங்குகிறது... 

இந்த மக்கள் ஆண்டு பல காலம் முன்னரே  ஆந்திரா கர்நாடக மைய பகுதியான  பல்லேரி , தேவகிரி பகுதிகளிலும்  வாழ்ந்து வந்த மக்களாவர்கள் அங்கு  முகலாய படை எடுப்பின் போது நகர்ந்த     மக்கள் எப்படியான சோதனைகளை சந்தித்தினர் என்றும் அவர்களை எப்படி இக்கடவுள் கட்டி காத்து பாதை காட்டியாக செயல் பட்டு  ஆற்றங்கரைகளை கடந்து வர உறுதுணையாக  இருந்தன போன்ற அறிய வகை செய்திகளும் ஆச்சார்ய மூட்டுகிற  வகையில்  திருவிழாவும் கூடி ஒரு வித்தியாசமானதாக நடந்து கொண்டு உள்ளது எனில் பிரமிக்க வைக்கவே செய்கிறது நம்மை...

 இக்குல மக்கள் வடக்கு பகுதிகளை விட்டு நகரும் போது அப்போதைய  முகலாய படை (டெல்லி சுல்தான்கள்)அவர்கள் டெல்லியில் இருந்து தென் பகுதிகளில் படை எடுக்க முக்கிய காரணம் இங்கு விளைந்தும் சேர்த்தும் வைத்து இருந்த அரசர்களின்  பொன், பொருள் , வைரம், வைடூரியம் , ஐம்பொன் சிலைகள் போன்றவைகளை முக்கிய இடம் பிடித்தன  இவற்றை கொள்ளை அடிக்கவே தென் மார்க்கமாக படை எடுத்த வந்துள்ளார்கள் அப்பொழுது இம்மக்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து வர இககுல தெய்வங்கள் துணையாகவும் பக்க பலமகாவும் நின்று அவர்களிடம் இருந்து காத்து இவர்களின் வழிதுணையாகவும்  ஆற்றங்கக்கரையை கடக்க புங்க மரங்களை ஆற்றின் மேல் சாய்த்து இவர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது எனவும் இவர்கள் ஆற்றங்கரையை கடந்து வந்த பின் அம்மரங்கள் எழுந்து நின்று கொள்கின்றன போன்ற காட்சிகளை இந்த திருவிழாவுல் கண்கூடாக காண முடிகிறது... 

அப்பொழுது இங்கு எந்த ஒரு சத்தமும் நிகழ்வது இல்லை உறுமி போன்ற எந்த ஒரு இசைகருவியும் இசைக்க படுவது இல்லை 

 இந்த கோவிலில் திருவிழா முறை படி சாட்ட படுகிறது

அப்பொழுது இருந்து இம்மக்கள்  சுத்தமாக கடும்  விரதத்துடன்  உள்ளார்கள் யாருக்கும்  தண்ணிர் கூட குடுப்பது இல்லை இவர்களும்  வெளியில் தண்ணீரோ உணவு அருந்துவோ மாட்டோம் என்கிறார்கள்

திருவிழா நடத்த முறை படி அக்கோவிலின் முன் ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்து கொள்கிறார்கள் கம்பளி போர்வை போட படுகிறது முறை படி அனைவரும் சிறு குழந்தை முதல் பெரிய ஆடவர் வரை மேல் சட்டையை அகற்றியும் தலையில் மேல் துண்டை சுற்றி உருமாவாக உருவாக்கி கொள்கிறார்கள்  பெண்களும் மேலாடை அணியாமல்  கூடைகள் (தேவரு கெப்பலு) வைத்து வரிசையாக அமர்ந்து அக்கடவுளிடம்  உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது கறுப்பு கம்பளி மீது  அமர்ந்து புல்லாங்குழல் மூலம் கடவுளிடம் உத்தரவு கேட்கிறார்கள் அப்பொழுது உத்தரவு வாங்குவதற்க்குள் அவர்களை அழுகையில்  நனைத்து விடுகிறது.. புல்லாங்குழல் ஊதும் போது கட்டிகொள்கிறது சத்தம் வராமல் அப்படியெனில் உத்திரவு பிறப்பிக்க பட்டதாக கருதுகின்றனர் ஊர் மக்கள் 

உத்திரவு கொடுக்கும் வரை அவ்வளவு ஒரு அமைதி நிலவுகிறது ஊர் முழுக்க புல்லாங்குழல் சத்தம் மட்டுமே ஒளித்து  மனதை மதி மயங்க வைக்கிறது... 

உத்தரவு கிடைத்த பின் அமைதியாக   கோவிலில் அலங்கரித்து வைத்துள்ள  தெய்வங்களை எடுத்து கொண்டு  நகர்கிறார்கள் அப்பொழுது முகலாய குதிரை  படை போன்ற வேடமிட்டு ஊரை வளம் வருகிறார்கள்  இத்தெய்வங்கள்  முன்னே செல்ல பின்னே அவர்கள்  வருகையும் ஊரை மிளிர வைக்கிறது... 

 பின்னர்  இம்மக்கள் ஆற்றங்கரையை கடந்து தெற்கு திசை வந்து  விட முகலாய படை வடக்கு திசை நோக்கியே   சென்று விடுகிறார்கள்   

தெற்கு  திசை நோக்கி வந்து    ஊர் மந்தையில் நீண்ட வரிசையில்  ஒன்பது குலத்தவரும் பொங்கல் வைத்து கரும்பு பந்தல் இட்டு கொண்டு வந்த  சாமியை அதனுள் வைக்கிறார்கள்   பிறகு  தான் (சக்தி கும்பம்) தீர்த்தம் எடுத்து உறுமி முழங்க அருளுடன் வருகிறார்கள் பிறகு   திணை வகைகள் பூண்டு  மாவு செய்து  மாவிளக்கு எடுக்குறார்கள் 

 இறுதி நாளில்  சாமியை கோவிலிற்கு எடுத்த செல்லவும் உத்தரவு கேட்கிறார்கள்  அப்பொழுது வரம் வேண்டி ஊர் மக்கள் அக்கடவுளை மனமுருக வேண்டி வரம் கேக்கிறார்கள் புல்லாங்குழல் மூலம் உத்தரவு கிடைத்த  பின்னர் அம்மக்கள் மகிழ்ச்சி பொங்க மனம் குளிர வேண்டி கொள்கிறார்கள்  உத்திரவு கிடைக்க கால தாமதமானால் அழுது புலம்புகிறார்கள் 

 பார்க்கும் போதே உடல் அசைவுகள் அனைத்தும்   மெய் சிலிர்க்க வைக்கிறது... 

அந்த காலங்களில் அறிவியல் வளர்ச்சி பெறாத போது தாம்பால தட்டில் உலக்கையையோ அல்லது கடப்பாரையையோ நிற்க வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் நின்றால் கிரகணம் தொடங்கிவிட்டதாகவும், கீழே சாய்ந்துவிட்டதால் கிரகணம் முடிந்து விட்டதாகவும் மக்கள் கணித்து வந்தனர்

  பய பக்தியுடன்   திருவிழா நடந்து முடிவு பெறுகிறது பாரம்பரியம் பண்பாடு மறையாமல் இன்றளவும் சீரும் சிறப்போடு வெகு விமர்சையாக  இத்திருவிழாவை நடத்தி கொண்டு  உள்ளார்கள்  கம்பால பட்டி ஊர் மக்கள் ... 

பகிர்வு : 

வரலாற்று தகவல்கள் சேகரிப்பு பிரிவு 

கம்பள விருட்சம் அறக்கட்டளை

(தொழில் சார் கல்வி மேம்பாட்டு குழுமம் )

நன்றிகள் ....பொறியாளர் கார்த்தி SR ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ..ஊடகவியலாளர் செந்தில்ராம் .கணினித்துறை ஜனா ஹரிகரன் ,பிரபாகரன் .ஜிலேபிநாயகன்பாளையம்  கோபாலகிருஷ்ணன் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681📗🖋️🥰🤝👍🙏🌴⚔️🏹🌾📡🎙️

சனி, 1 பிப்ரவரி, 2025

 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான முக்கிய சிறப்பம்சங்கள் என் பார்வையில் 


- *வரி நிவாரணம்*: ₹12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும் ஆண்டுக்கு ₹12 லட்சம் சம்பாதிக்கும் நபர்களுக்கு ₹80,000 ¹ வரிச் சலுகை கிடைக்கும்.

- *கடன் உத்தரவாதக் காப்பீடு*: நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ₹10 கோடியாகவும், தொடக்க நிறுவனங்களுக்கு ₹20 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

- *கடன் பெறுவதற்கான எளிதான அணுகல்*: MSME களுக்கு மலிவு விலையில் கடன்களை எளிதாக்குவதற்கு மேலும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், அத்துடன் வட்டி விகிதங்களைக் குறைக்கப்படும்.

- *கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை*: MSME களுக்கு பிணையமில்லாத கடன்களை வழங்குவதற்காக நுண் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் (CGTMSE) விரிவாக்கம் ².

- *தேசிய உள்கட்டமைப்பு குழாய்வழி*: நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மின்சார இயக்கம் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற புதிய துறைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது ¹.

- *டிஜிட்டல் பொருளாதாரம்*: செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் புதுமைகளுக்கான ஊக்கத்தொகைகள், அத்துடன் வலுப்படுத்தப்பட்ட சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பு ².


இந்த அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வரிவிதிப்பு எளிமைப்படுத்துதல் மற்றும் MSME கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான கடன் அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சிவக்குமார் VK 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை 

 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் என் பார்வையில் மதிப்பாய்வு 

முக்கிய சிறப்பம்சங்கள்

வரி நிவாரணம்*: ₹12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை, மேலும் ஆண்டுக்கு ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ₹80,000 வரிச் சலுகை கிடைக்கும்.

புதிய வரி முறை*: 5% முதல் 30% வரை விகிதங்களுடன் திருத்தப்பட்ட வரி விகித அமைப்பு.

உள்கட்டமைப்பு மேம்பாடு*: சாலைகள், ரயில்வே மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ₹11,11,111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

- *வேலைவாய்ப்பு மற்றும் திறன்*: ஐந்து ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரதமரின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஐந்து திட்டங்களின் தொகுப்பு ¹.

- *உள்ளடக்கிய மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி*: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கும், பழங்குடி சமூகங்களுக்கான முயற்சிகளுக்கும் ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு ¹.


துறை வாரியான ஒதுக்கீடு

விவசாயம்*: விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு ¹.

கல்வி*: கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 13% அதிகரித்துள்ளது ¹.

சுகாதாரம்*: சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ₹37,000 கோடி ஒதுக்கீடு ¹.

பாதுகாப்பு*: பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 10% அதிகரித்துள்ளது ¹.


பிற முயற்சிகள்

- *நகர்ப்புற மேம்பாடு*: பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கான முத்திரை வரி குறைப்பு, மற்றும் 100 வாராந்திர 'ஹாட்கள்' அல்லது தெரு உணவு மையங்களை உருவாக்குதல் ¹.

ஆற்றல் பாதுகாப்பு*: அணுசக்தி, பம்ப் செய்யப்பட்ட சேமிப்புக் கொள்கை மற்றும் எரிசக்தி தணிக்கைக்கான முயற்சிகள் .

சுற்றுலா*: ஒடிசாவில் சுற்றுலா வழித்தடங்களின் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு 

சிவக்குமார்  VK 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை