திங்கள், 16 டிசம்பர், 2024

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை 

மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்ட்டர் Madras Regiment Centr (MRC) , வெலிங்டன், குன்னூர், உதகமண்டலம் 

 




குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் , நம் நாட்டு ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா சிலை உட்பட ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



மேலும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு  2012 செப்., 26ல் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் ராணுவ மருத்துவமனை முன், திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ பாரதி கலைக்கூடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரால்  ஒற்றைக்கல் சிலை வடிக்கப்பட்டு. 7.5 லட்சம் செலவில் சிலை வைக்கப்பட்டது.  


 ''ராணுவத்திற்கு புண்ணிய பூமியாக உள்ள வெலிங்டன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாக உள்ளது" 


இங்கு வருடம் தோறும் வீரபாண்டிய கட்டபொம்மனின் ,  பிறந்த நாளையொட்டி அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


 திறப்புவிழா அன்று வெளிவந்த செய்தி குறிப்பு 


ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆறரை அடி சிலை வெலிங்டோனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்ஆர்சி) வளாகத்தில் இன்று (2012 செப்-26) திறக்கப்பட்டது. கட்டபொம்மன் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் தலைவராவார், மேலும் இப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்களில் முதன்மையானவர்.  இந்திய சுதந்திரப் போருக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் ஆங்கிலேயர்களுடன் போரை நடத்தினார். 1799 இல் கட்டபொம்மன் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது கோட்டை அழிக்கப்பட்டது மற்றும் அவரது செல்வம் பிரிட்டிஷ் இராணுவத்தால் சூறையாடப்பட்டது. சிலையை திறந்து வைத்து பேசிய எம்ஆர்சி கமாண்டன்ட் ஜே எஸ் யாதவ், இது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய ஒட்டுமொத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் செலுத்தும் மரியாதை என்று கூறினார்.



இது அவரின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் உள்ளது.



ஆகவே நாம் நம் சமுதாயத்தினர்  அனைவரும் அவரது மாண்பை பெருமை படுதும் விதத்தில் நடந்து கொள்வோமாக ,களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருப்போம் .



வரும் சனவரி 3 2025 வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாள் விழாவினை மிக சிறப்புடன் கொண்டாட திட்டமிடும் அனைத்து அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த  வாழ்த்துகள் 


 வெற்றிவேல்!!! 


 வீரவேல்!!! 


 வாழ்க கட்டபொம்மன் புகழ்!!! 


 வளர்க கம்பளத்தார் எழுச்சி!!! 



குறிப்பு:


இணைக்கப்பட்டுள்ள படம் MRC வளாகத்தில் எடுக்கப்பட்டது (15.12.24 அன்று )  உடன் MRC ன் முத்திரை / கொடி அமைப்பு / இராணுவ முத்திரை இடம்பெற்றிருக்கும்.


-கவின் சின்னுசாமி (Mr.Ck)

வியாழன், 12 டிசம்பர், 2024

அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்..!

 




அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்..!


வாழ்க்கைப் பயணத்தில் எது  நகர்கின்றதோ  இல்லையோ கட்டாயம் நேரம் நகர்கின்றது.


இந்த போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ப்பவர்கள் தாக்குப்பிடித்து நினைத்ததை சாதிக்க முயல்கிறார்கள். பலர் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள். அதற்கு தேவையான சில அடிப்படை விவரங்கள் குறித்து 🤝📗✒️🎙️📡


கனவு கண்டால் மட்டும் போதாது. கண்ட, காணும் கனவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்றுசிந்திக்க வேண்டியது முதல் படி.


அவ்வாறு சிந்தித்தால் மட்டும் போதாது. நம்மால் முடிய செய்ய  வேண்டியவை எவை என்பதை பட்டியல் போடவேண்டும்.


_அடுத்து போட்ட பட்டியலில் செயல்படுத்த வேண்டிய ஆதரவு எங்கிருந்து கிடைக்கும் என்ற விவரங்கள் குறித்து ஆராயந்து முடிவு செய்யவேண்டும்.


அவற்றைப்பெற தேவையான பணம், பொருள், ஆள் பலம், பெற வேண்டிய ஒப்புதல்கள் போன்ற அத்தியாவசிய  விவரங்கள் தயார் செய்யவேண்டும்.


அவற்றை அடைய  தேவையான நடவடிகைகள் காலம்  தாழ்த்தாமல், காலத்தை தள்ளிப் போடாமல் (without any delay / without postponing ) எடுப்பது முக்கியம்.


ஒருவேளை, அடுத்த கட்டத்திற்கு  நகர்வதற்கு தேவையான அறிவு, திறமை போதிய அளவு இல்லாவிட்டால் (adequate knowledge, skill) அதை எப்படி சரி கட்டுவது என்று யோசித்து முடிவு எடுத்துச் செயல் படுத்துபவர் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான தகுதியை பெறுகிறார்.


வெகுவேகமாக  செல்லும் தற்பொழுதிய சூழ்நிலையில் தோதானவர்களை  தேர்ந்து எடுத்து வேலையை பிரித்துக் கொடுத்து பெற்று முன்னேறுபவர்கள்  அடுத்த கட்டத்தில்.பயணம் செய்து  பலன்  தகுதி  பெற்றவர்கள் ஆகின்றனர். 


கால மாற்றத்திற்கு இடம் அளித்து அதன் உடன்  பயணிப்பது புத்திசாலிதனம் மட்டும் அல்ல, மாறி வரும் இன்றைய சூழ்நிலைக்கு அத்தியாவசியமும்  கூட.


அடுத்த கட்டத்திற்கு நகர துடிப்பவர்களுக்கு இது பற்றி நன்கு தெரியும். மேலும் அவர்கள் செயல்பாடுகள் அவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும்.


யோசனைகள் செய்வது மட்டும் அல்லாமல், பிறர் யோசனைகளை வரவேற்கவும் வேண்டும்.


யோசனை கூற முன் வருபவர்களை ஊக்குவித்து பாராட்டி பலன் பெற முயற்சி செய்யவேண்டும். 


பிறரின் யோசனையை உபயோகித்தாலோ, பின்பற்றினாலோ அத்தகையயை யோசனை அளித்தவருக்கு  உரிய மரியாதை, பாராட்டுத்தலுடன், பொறுத்தமான சன்மானம் அளிக்க  ஒரு பொழுதும் மறக்க கூடாது.


தனிப்பட்ட முயற்சியில் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது இயலாது என்பதை உணர்ந்து செயல்படுவது சால சிறந்தது.


முயற்சியுடன், கூட்டு முயற்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல பெரிதும் உதவும்  என்பது யதார்த்த வாழ்க்கை பகுதியின் உண்மை அம்சம் ஆகும்.


_*அடுத்த கட்டத்திற்கு செல்ல முற்படுவர்கள் செயல் பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது  அத்தியாவசியம் என்பதை.உணர்ந்து செயலில் பின்பற்ற வேண்டும்.📗✒️🎙️📡🤝🥰🌈🏠🏠🏠🏠⛱️⛱️⏳⏳🌳🌴🌱🎧

 ஜில்லென்ற மணம் (மனம்) 


கோவை  செல்ல உடுமலை  பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)

பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து

"தம்பி பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"

சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.

ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"

நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'

இல்ல நான் உக்காரணும்"

" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.

கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.

என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!

முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன். 

அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள்.

தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.

பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.

திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து

"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.

நான் எதுக்கு னு கேட்டேன்.

"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"

சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.

.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்

" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு

நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.

பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.

ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.

நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.

அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் ஜில்லென்ற மணம்தான் வீசியது......

புதன், 4 டிசம்பர், 2024

மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் துங்காவி பாளையக்காரர்


 மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் துங்காவி பாளையக்காரர்

🥰🥰📗✒️✒️
இந்திய விடுதலைப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்த பாளையக்காரர்; தளி எத்தலப்பர்.
இவர் குறித்தான விரிவான வரலாற்று ஆய்வு நூலை நமது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 2018 மே 19 மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களின் மண்ணின் மைந்தர் கால்நடைதுறை அமைச்சரால் வெளியிடப்பெற்றது.
இதைக் காலம் தாழ்ந்திக் கண்ணுற்ற 22 ஆவது தலைமுறையில் வாழும் துங்காவி பாளையக்காரரான ராஜராஜராஜேந்திர சீரஞ்சீவ சீலம நாயக்கர் (எ) நாகேந்திரன் என்பவர் பல்வேறு தேடல்களுக்குப்பிறகு வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலை கண்டிப்பாக வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதன் பேரில் நூல் இருப்பு இல்லாமையால் வேறு நபரிடமிருந்து பெற்று
இவருக்குக் கொடுக்கப்பட்டது.
இவரின் வரலாற்றுப் பின்னணியோடு தளி பாளையப்பட்டு வரலாறும் இணைந்திருப்பதும்,
தளி பாளையப்பட்டின் பெண்வாரிசாக துங்காவி பாளையம் இருந்ததையும், தற்போதும் அதற்குண்டான ஆவணங்களை மிகவும் பத்திரப்படுத்தி உயிர்ப்போடு வைத்துள்ளார்.
இவரின் தாத்தா பாளையப்பட்டு இருபதாவது தலைமுறை சிராஸ்தபதி யுவத்குமரன் எஜமான்ஸ்ரீ பெரியசாமி சீலமநாயக்கர் என்பதும்,
21 ஆவது தலைமுறையான இவரது தந்தையார்
சிராஸ்தபதி யுவக்குமரன் எஜமான் ஸ்ரீ மாணிக்கம் சீலம நாயக்கர் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கி உரைக்கிறார்.
மேலும், துங்காவி தனது வீட்டை (அரண்மனை) என்றே கூறி வருகிறார்.
தனது அரண்மனையில் தனது மூதாதையர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகளான வாள்களையும், வேல்களையும், சிறிய மற்றும் பெரிய அளவிலான போர்க்கருவிகளையும் இன்னமும் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகிறார்.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் எத்தனையோ பாளையப்பட்டுகள் இருந்ததாக வரலாறுகள் இருந்தாலும் இந்த துங்காவி பாளையப்பட்டில் மட்டுமேஆங்கிலேயருக்கு எதிரான போரில் இந்திய விடுதலைப்போரில் போர்க்கருவிகளை நாம் காண முடிந்தது.
இந்திய விடுதலைப்போரில் தமது பாளையப்பட்டு எதிர்த்து நின்று வீரச்சமர் புரிந்ததை பெருமையோடு பூரிப்போடு கூறுகிறார்.
சீலமநாயக்கன் என்பது தமது பாளையப்பட்டின் வம்சாவழிப் பெயர் என்றும் கூறுகிறார்.
மேலும், ஆங்கிலேயர்கள் தமது பாளையத்தில் வரி வசூலுக்கு வந்த போது பெரும் பஞ்சம் நிலவியது என்பதால் அந்த பாளையக்காரரை கைது செய்து ஆங்கிலேயர் கொண்டு செல்ல முயற்சித்த போது, அப்போதிருந்த பொதுமக்கள் தமது வீட்டில் இருந்த நெல்வளங்களையும்,
தாம் அணிகலன்களாக அணிந்திருந்த நகைகளையும் கழட்டிக்கொடுத்து வரிகளைப் பெற்றுக்கொண்டு
தமது துங்காவி பாளையக்காரரை கைது செய்வதிலிருந்து காப்பாற்றினர். அப்போது பாளையப்பட்டில் இருந்த மணியம் என்கிற கணக்குப்பிள்ளையின் ஒளிப்படத்தையும் வைத்துள்ளார்.
இதனால். துங்காவி பாளையக்காரர் அது முதல் பொதுமக்கள் மீது எந்தவிதமான வரிகள் விதிக்காமலும், நோய் நொடிகள் இல்லாமலும். பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து ஆட்சி செய்து வந்ததாகக்கூறுகிறார்
21 ஆவது தலைமுறையான திரு. நாகேந்திரன்.
இவரின் இந்த உயிர்ப்பான பாளையப்பட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தவும், அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்து கொடுக்கவும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த 22 ஆவது தலைமுறை
துங்காவி பெரிய ஜமீன் ராஜராஜராஜேந்திர சீர!!ஞ்சீவ சீலம நாயக்கர் (எ) நாகேந்திரன் அவரின் முயற்சி வெற்றி பெற உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கு நாட்டில் பாளையக்காரர்கள் எனும் ஆவணத்தில் மைவாடி , வேடபட்டி, சோத்தம்பட்டி, தொண்டாமுத்தூர் என அடுத்து வரும் கல்வியாண்டில் உயிர்ப்புடன் இருக்கும் பாளையக்காரர் எனுந் தலைப்பில் ஆவணப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர் அய்யா திரு. வி.கே. செல்வராஜ் அவர்களிடம் தமது பாளையப்பட்டுகளின் பாரம்பரியத்தை ஆவணங்களுடன் காட்டினார்.
மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் பாளையக்காரர் நாகேந்திரன் அவர்களை
வாழ்த்துவோம் பாராட்டுவோம்.🥰📗✒️🍬🍫

திங்கள், 2 டிசம்பர், 2024

மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே

மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே என்கிறார்-புரட்சியாளர் சேகுவேரா 


நல்ல நூல்களும் சிறந்த ஆசிரியர்களும்‌



நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் -நேரு


முத்து பவளம் சிற்பி வகையான மீன்கள் போன்றவற்றை தன்னகத்தே தாங்கி நிற்கும் சமுத்திரம் போன்றவை புத்தகங்களாகும் என்கிறார் காந்தியடிகள்


கூற்றுக்கிணங்க..


அருமைச் சகோதரர் உடுமலைப்பேட்டை சிவக்குமார் அண்ணன்

அவர்கள்

1.கரைவழி நாடும் நாகரீகமும்(வேளாண்மை)

2.கரைவழி நாடும் நாகரீகமும் (வரலாறு)

3.தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ஆகிய புத்தகங்களை எனக்கு கொடுத்திருந்தார்..


படித்ததில் -முதலில் புரிந்து கொண்டது திறந்த வெளியில் காற்றில் கலந்த வரலாறுகளை புத்தகங்களில் ஏற்றி ஆவணங்களாக வெளியிடுவது என்பது எவ்வளவு உழைப்பு

எவ்வளவு களப்பணி என்பதை ஆழமாய் அறிய நேர்ந்தேன்..

மேலும் புத்தக வெளியீட்டு விழா என்று ஏதாவது செய்தி வந்தால் அதை சாதாரணமாக கடந்து போனதுண்டு ஆனால் இந்த புத்தகங்களையெல்லாம் படிக்கின்ற போது 

அந்த வெளியீட்டு விழாவிற்கு வருமுன் அந்த புத்தகத்திற்கான உழைப்பை எண்ணி வியக்கின்றேன்.


மேலும் கரைவழி நாடும் நாகரீகமும் என்ற நூலில் குறிப்பிட்ட அந்த கோவில்களுக்கு சென்றிருக்கின்றேன் அதைப்பற்றிய வரலாறுகளை ஆவணமாய் படிக்கின்ற போது கடவுகளும் கோயில்களும் வரலாறுகளை தன்னகத்தே எவ்வளவு அழகாக தாங்கி இருக்கின்றது என்பதை அறிந்து வியந்து போனேன்..

மேலும் ..

வேளாண்மை

நெல் விவசாயம்,

நெற்கூடு,

போக்கியம் கந்தாயம்,

விவசாய தெய்வங்கள் 

விவசாய விழாக்கள்

கல்வெட்டு விவரங்கள்

கோயில் தல வரலாறுகளையெல்லாம் படிக்கின்ற போது அந்த நிகழ்வுகளுக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்ற உணர்வு ஏற்படுகின்றன.


தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூல் அந்த வரலாற்று காலத்திற்கே அழைத்துச்செல்லும் வண்ணம் எழுத்து வடிவமைப்பு அழகிய சொல்லாடல்களும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு 


ஒவ்வொரு புத்தகங்களும் 


ஒவ்வொரு பக்கத்தை திரும்பும் போதும் 


ஒரு ஆகச் சிறந்த வரலாறுகள் அமைந்திருப்பது உண்மையில் 

அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய

நூல்களாகும்..



மேலும் இதற்காக உழைப்பை நல்கிய 


உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ பொறுப்பாளர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்களே..


அருமைச்

சகோதரர்

சிவக்குமார் அவரின் வாயிலாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன்

எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த படைப்புகள் வர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..


என....

அனிதா ஜெயராமன்.📗✒️✒️✒️🎙️🎙️📡📡📡🌱🌳🌴🏘️🏡🏠🎧✈️



ஞாயிறு, 17 நவம்பர், 2024

#உடுமலை அருகே பாளையத்துக்காரர்களின் தளபதிகள் வழிபட்ட தாய்த்தெய்வம்

 #உடுமலை அருகே பாளையத்துக்காரர்களின் தளபதிகள் வழிபட்ட தாய்த்தெய்வம்

------------------------------------------------------------------






உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பாளையத்துக்காரர்கள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் அதிகளவில் உள்ளன. 15 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு பெருமளவில் இந்தப் பகுதிகளில் நாயக்கனூர், பாளையம் என்றும் ஊர்ப்பெயர் அமைந்தமைக்கான சான்றுகளை வரலாற்று ஆய்வாளர் திரு. கே.கே.பிள்ளை பதிவு செய்துள்ளார்.
அது போன்று இங்கு துங்காவி ஜமீன்தார் வாரிசுகள் வைத்திருக்கும் செப்பேட்டுப் பட்டயங்களில் பின்வருமாறு ஒரு சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகா மகாகனமும் மேன்மையும் பொருந்திய ஒன்பதுக்கும் சத்தியந்த வராரவராகிய சனவமாடு சலையெருது ஆயல் குழல் இரத்தின கம்பளி பிடி செம்புக்கு உடையவரான புவிமிசையில் ஊஞ்சலாடுகறி பெரியோர்களுக்கான பாலம் பன்னிரண்டு தண்டிகைக்காரருக்கும் 1.துங்காவி ஜமீன்தார், 2. நெகமம் ஜமீன்தார், 3. பெரியபட்டி ஜமீன்தார், இன்று இந்த கோவிலைச் சேர்ந்த தாய் உறவின் முறையார்களும் ஜோத்தம்பட்டி ஜமீன்தார் 5. தளி ஜமீன்தார், 6. ஆவலம்பட்டி ஜமீன்தார், 7. தொண்டாமுத்தூர் ஜமீன்தார், 8. சிஞ்சுவாடி ஜமீன்தார், 9. தாளக்கரை ஜமீன்தரர், இந்த பத்து பேர்களும் மேலே சொன்ன தேவதைக்கு வரி விகிதம் தலைக்கட்டு ஒன்றுக்கு ரொம்ப ஏழைகளுக்கு ஒரு ரூபாயும் கொஞ்சம் செல்வமுள்ளவர்களுக்கு தலைக்கட்டு ஒன்றுக்கு 5 ருபாய்கள் விகிதம் விதிக்கப்பட்டிருந்தது குறித்தும் பதிவுகள் உள்ளது.
மேலும் கோயில்கள் குறித்த பாடல்களில்
இம்மைச் செய்தது மறுமைக்காமெனும்
ஆறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன றவன் கைவண் மையே என்றும் அறிஞர்; பெருமக்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் 13 ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களுக்குப்பின் கொங்குப்பாண்டியரும் அதன் தென் கொங்கையே ஆண்டு வந்தனர் என்றும் இந்தக் கோயிலை பாண்டிக்கோயில் என்றும் தளவாய்கள் வழிபட்ட கோயில் என்றும் கூறப்படுகிறது. கோயிலுக்கு வெளியே இருக்கும் சிலையில் பாளையத்துக்காரர் காலத்தில் அரச குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் தளபதிகள் வழிபடுவது போன்று புடைப்புச்சிற்பங்கள் இருப்பதை வைத்துப் பார்த்தால் சுமார் 400 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சிற்றரசர்கள் காலத்தில் தளவாய்களாக அல்லது தானாதிபதிகளாக நாயக்கர் இருந்து வரி வசூல் செய்து கொடுத்து பாளையத்துக்காரர்களாக இருந்துள்ளனர் என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்தக் கற்கோயில் உள்ள கருப்பக்கிரகத்தில் எட்டுக்கை கொண்ட அம்மன் காலடியில் ஒரு அரசன் கீரிடத்தோடும் கையில் வாளும் கேடயமும் ஏந்தி அம்மனால் சம்ஹாரம் செய்யப்பட்டு கிடக்கிறான்.
மக்கள் இதை கருங்காளியம்மன் என்றும் காளியம்மன், வீரமாத்தியம்மன் என்றும் வழிபடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் வழிபாடு செய்யாமல் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர்.
தனியாக குல வழிபாடு என்று செய்வதாக யாரும் வருவதில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் தன்னார்வத்தோடு இந்தக்கோயிலை அமாவாசை, வெள்ளிக்கிழமை நாட்களில் வழிபாடுகள் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊருக்கு அருகில் வஞ்சிபுரம் எனும் பகுதியில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டது. மேலும் துங்காவி , இராமேகவுண்டன்புத}ர், வேடபட்டி, ஜோத்தம்பட்டி போன்ற பகுதிகளில் மாலகோயில் என்னும் பாளையத்துக்கார்களின் வழிபாட்டுச்சின்னங்களும், படிமங்களும் இருப்பதை வைத்துப்பார்த்தால் இது பாளையத்துக்காரர்கள் வழிபட்ட தெய்வம் என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் முனைவர் முனியப்பன்,பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமி. மற்றும் உடுமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுப்பேராசிரியர் முனைவர் ம.மதியழகன், வரலாற்றுப்பேராசிரியர் செ.ராபின் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சனி, 16 நவம்பர், 2024

1.  கோட்டமங்கலம். அக்கு, தார்ச் சாலையிலிருந்து ஒரு கல் தொலைவில் புன்செய் நிலத்திடையே காணப்பட்டவை இரு கல்திட்டைகள். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒரு வகை. ஆங்கிலத்தில் “DOLMEN“ எனக் குறிப்பிடுவர். பெரும் பெரும் பலகைக் கற்களை வீடு போல இணைத்த ஓர் அமைப்பு. செவ்வக வடிவிலானது. முன்புறம் சிறிய அளவிலான இரண்டு பலகைக் கற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இடையில் வீட்டின் நுழைவாயில் போன்று இடைவெளி. நேர் பின்புறம் ஒரு ஒற்றைக் கல் பலகை. இவ்விரண்டு அமைப்பும் செவ்வகத்தின் அகலப் பக்கங்கள். செவ்வகத்தின் நீளப்பக்கங்கள் இரண்டிலும் இரண்டு நீளமான பெரிய பலகைக் கற்கள். இவற்றின் மேலே கூரைப்பகுதியில், ஆமையின் முதுகில் காணப்படும் ஓடு போன்றதொரு மிகப்பெரிய பலகைக் கல். செவ்வகப் பரப்பை முழுதும் மூடுகின்ற வகையில் மூடுகல். உள்ளே காணப்படும் அறை போன்ற இடம், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, இறந்தவர் எலும்புகள், பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வைத்து வழிபடும் இடம். இக்கல்திட்டையை அடுத்து அருகிலேயே மற்றொரு கல்திட்டை இருந்தது. இதில், மூடுபலகைக் கல்லில் ஒரு பெரிய வட்டமான துளை காணப்படுகிறது.

2.மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை ஆய்வு செய்யப்பட்டது.மடத்துக்குளம் அருகே, கிழக்கு நீலம்பூர் விளை நிலம் உள்ள பகுதியில் மிகப்பழமையான கல்திட்டை உள்ளது. இது குறித்து, தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடுமலை ஜிவிஜி கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்ந்த செல்வராஜ், வளவன், அருள் செல்வன், ராபின் ஆகியோர் இதை ஆய்வு செய்தனர்இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்கள் நினைவாக கல்திட்டை அமைப்பது வழக்கம். சங்ககாலத்திற்கு முன்பே, பாலக்காட்டு கணவாய் பகுதியில் நீர் வழித்தடத்தில் வர்த்தகம் நடந்துள்ளது.இதில் ஈடுபடும் வணிகர்கள், தரை வழியில் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வடபூதி நத்தம், கண்ணாடிப்புத்துார், ஐவர்மலை, சின்ன கலையம்புத்துார் வழியாக பாதை இருந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயணித்த வணிகர்கள் அல்லது இனக்குழுக்களை சார்ந்தவர்கள் போர் காரணமாகவோ அல்லது இதர தாக்குதல் காரணமாகவோ இந்த இடத்தில் இறந்திருக்கலாம். அவர்கள் நினைவாக இந்த கல்திட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தடி உயரம், மூன்று அடி அகலமுள்ள பலகை வடிவ கற்களை பயன்படுத்தி, சதுர வடிவில் அறை போன்ற கட்டமைப்பு உருவாக்கியுள்ளனர். இதே அளவுள்ள கற்களை மேற்கூரையாக அமைத்துள்ளனர். இதுஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.இவ்வாறு, கூறினர்.




நமது சொந்தங்கள் மாநில ,மத்திய கட்சிகளில் பொறுப்புகளில் இருக்கும்


நமது சொந்தங்கள் மாநில ,மத்திய கட்சிகளில்  பொறுப்புகளில் இருக்கும் சொந்தங்கள் .நமது வளரும் சொந்தங்களை உறுப்பினராக்கி  பொறுப்புகளில் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று கூறமுடியுமா ? ஆய்வு தகவலுக்கு வேண்டும் 

1.முத்துசாமி .ம தி மு க ..பெதவை ,உடுமலைப்பேட்டை 

2.பரமேஸ்வரி ,அ தி மு  க ..ஒன்றிய கவுன்சிலர் சித்தார்பட்டி 

3. அரண்மனைசுப்பு@ V.சுப்புராஜ்..அ தி மு க .தேனி மாவட்டம்,போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதி,பொதுக்குழு உறுப்பினர்

4 முருகன் மல்லையன் . தர்மலிங்கபுரம் ,பாஜக முன்னால் இராணுவப்பிரிவு தேனி மாவட்டச்செயலாளர்.(Rtd) INDIAN NAVY தேனி.

5.கொம்பேறிபட்டி ரெங்கமலை அவர்கள் , 

காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர்.....


6.அய்யலுகிருஷ்ணா சித்துவார்பட்டி,

வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பாளர்


7. D.வேல்முருகன் பந்துவார்பட்டி அஇஅதிமுக தேனி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு மாவட்டத்தலைவர்.


8. S.ரமேஷ்பாபு தேனி அஇஅதிமுக தேனி மேற்கு மாவட்டச்செயலாளர்

(இணை) 

9.P.ராஜபாண்டியன் 

அதிமுக IT விங்க் ஒன்றியசெயலாளர்

வைகை சீரங்கபுரம்,ஆண்டிபட்டி

10.மரிக்குண்டு திரு.செல்வம் அஇஅதிமுக ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய பொருளாளர்  ,ஆண்டிபட்டி 

11.உப்புக்கோட்டை*திரு.ராமகிருஷ்ணன் BA.BEd.*

மதிமுக போடி ஒன்றியகழக செயலாளர்.தேனி

பெரியகுளம் ஒன்றிய செயலாளர் 

12. T. வெள்ளைச்சாமி  அ தி மு க 16 A.வாடிப்பட்டி 

13. S.லிங்கம்மாள்  அ தி மு க ஒன்றிய செயலாளர் 

தர்மலிங்கபுரம்

P. வேலாம்பட்டி K.செல்வராஜ் நாயக்கர் BA 

மதிமுக வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர்

14.பெரியகோட்டை J.நாகராஜன். 

A.D.M.K. 

திருப்பூர் மேற்கு மாவட்ட 

அண்ணா தொழிற்சங்க துணை செயளாலர்

15.பெரிய கோட்டை N.சாவித்திரிநாகராஜ் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய இணை செயலாளர் 

16.M.தினேஷ் குமார் 

பா.ஜ.க- திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் - O.B.C. அணி




வெள்ளி, 15 நவம்பர், 2024

கம்பளத்தார் வாழ்வியல் ... காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை.....


 கம்பளத்தார் வாழ்வியல் ...

காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும்
பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை.....
காலை 9-10.30 முகூர்த்த நேரத்தில் தேனியிலேயே அதி நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய திருமண மண்டபத்தில் நடந்த கம்பள சமுதாய ஜமீன்தார் வீட்டு திருமணம். போடி ஜமீன் தேவாரம் ஜமீன் சாப்டூர் ஜமீன் இனைந்து நடத்திய திருமணம்.
பல்வேறு புதுமைகள் புதுப்புது வசதிகள். நாகரீக வளர்ச்சி. பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வி.ஐ.பிகள் வருகை. ஆனாலும் பலருக்கும் ஆச்சரியம். மண்டபத்தின் விஸ்தாரமான மேடையில் கம்பள மணப்பெண் அமர்வதற்கு 12 கம்பங்களுடன் கூடிய பச்சைப்பந்தல். பாலமர கிளைகளும் சிகரமானு கிளைகளும் நிரவப்பட்ட பந்தல்.
மணமகன் அமர்வதற்கும் பாரம்பரிய பச்சைக்குடில். இரு குடிசைளுக்கு முன்பும் தோரண கம்பங்கள். ஐந்து உருமிகள் (தேவதுந்துமி) தவிர வேறு எந்த வாத்தியமும் கிடையாது. முதலில் மணமகன் வருகை. தலையில் உருமால் மார்பில் மஞ்சள் துணி கவசம். வலது தோளில் சக்க பந்த. இடுப்பில் வேஷ்டி. கையில் மூங்கில் கம்பு, போர்வாள். இதுவே மணமகனின் தோற்றம். அடுத்து மணமகள் வருகை. புத்தம்புதிய வெண்ணசீர முழு உருவத்தையும் நிறைத்து விட்டதால் வேறு எதையும் பார்க்க தேவையில்லாமல் போனது. திருமண சடங்குகள் அனைத்தையும் செய்தவர் சாலிபெத்த எனும் கம்பள பெரியவர்தானே தவிர பிராமண புரோகிதருக்கு அங்கு இடமில்லை.
திருமண சாலிகள் தொடங்கியது முதல் நிறைவுவரையிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய தேவராட்டம். தேவராட்டம் ஆடிய இளைஞர்கள் எல்லோருக்குமே தலையில் உருமால் இடுப்பில் வெள்ளை வேஷ்டி மட்டும். யாருமே சட்டை அணியவில்லை. ஆக கம்பள சமுதாய திருமணங்களைப் பொறுத்தவரை சாமானியர் ஆனாலும் ஜமீன்தார்கள் ஆனாலும் காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை. அவர்களின் பண்பாடும் கலாச்சாரமும் அசையவே இல்லை.

மீள் பதிவு ...நீதி அரசர் தங்கராஜ் அவர்களின் பதிவு ..

வியாழன், 14 நவம்பர், 2024

udumalai varalaru tourisum parts

.1 கோட்டமங்கலம் கல்திட்டை

2. நீலம்பூர் கல்திட்டை

3. பெரியபாப்பனூத்து கல்திட்டை

4. கொங்கல் நகரம் நெடுங்கல்

5. சோமவாரப்பட்டி கண்டியம்மபன் கோயில்

6. கல்லாபுரம் அன்னகத்துப் பாலம்

7. மதகடிபுதூர் பாறை ஓவியங்கள்

8. கொழுமம் வீரசோழீஸ்வரர் கோயில்

9. கடத்தூர் மருதீசர் கோயில்

10. சோழமாதேவி குங்குமவள்ளி கோயில்

11. கணியூர் பாறைக் கோயில்

12. காரத்தொழுவு சிவன் கோயில்

13. கண்ணாடிப்புத்தூர் சிவன் கோயில்

14. கொமரலிங்கம் கரி வரதராஜ பெருமாள் கோயில் 

15. காண்டூர் கால்வாய் சுத்துக்கோயில், 

16. திணைக்குளம் ஆண்ட்ரோ கேதீஸ் தூக்கிலிட்ட இடம் 

17. பண்ணைக்கிணறு மால கோயில்

18. எலையமுத்தூர் மாலகோயில்

19. கோட்டமங்கலம் மாலகோயில்

20. மெட்ராத்தி  மால கோயில்

21. மெட்ராத்தி கல்வட்டம்

22. கெடிமேடு புதிர்நிலைக்கற்கள்

23. உடுமலை நாராயணகவி மணிமண்டபம்

24. திருவள்ளுவர் திருக்கோட்டம்

25. உடுமலை தாகூர் பில்டிங்

26. உடுமலையின் பெரிய கடை

27. உடுமலை திருப்பதி

28. தளி எத்தலப்பர் சிலை –நகராட்சி 

29. அமராவதி அணை

30. முதலைப்பண்ணை

31. திருமூர்த்தி வீழ்ச்சி

32. அனுசுயாதேவி கோயில்

33. திருமூர்த்தி அணை 

34. அயிரை மலை (எ) ஐவர் மலை 

35. கொழுமம் (ரெட்டையம்பாடி) கற்திட்டை

36. பொண்ணிகாட்டுதுறை

புதன், 13 நவம்பர், 2024

High Net Worth Individuals (HNIs)


 High Net Worth Individuals (HNIs) are individuals with a high net worth, typically above a certain threshold, such as ₹2 crores in India. They are distinguished from other retail segments based on their net wealth, assets, and investible surplus.


Characteristics of HNIs:


1. High investible surplus: ₹2 crores or more in India.

2. Significant net worth: ₹25 lacs to ₹2 crores in India.

3. Ultra High Net Worth Individuals: net worth of $30 million or more.


Growth of HNIs in India:


1. India recorded the highest growth in Ultra High Net Worth Individuals among BRICS nations.

2. The number of Ultra HNIs in India reached 7,850.

3. India has the highest number of women millionaires, with total fortunes of $95 million.


Factors contributing to the growth of HNIs in India:


1. Positive trends in the stock market.

2. Growth in real estate.

3. Increase in gross national income.

4. Consumption and capitalization.


Wealth management services for HNIs:


1. Private banks.

2. Mutual funds.

3. Investment banks.

4. Commercial banks.

5. Insurance companies.

6. Brokerages.


Parameters for HNIs to manage their wealth portfolio:


1. Investments.

2. Capital protection.

3. Tax planning.

4. Credit planning.

5. Inheritance planning.


VK Sivakumar

Home Loan Consultant

9944066681

(Tirupur, Coimbatore, Pollachi, Udamalpet)

நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி

 நாம் படிக்காத சுதந்திர போராட்ட வரலாறு: கவர்னர் ரவி வேதனை


''ஆயிரக்கணக்கான மக்கள் துணிச்சலுடன் போராடி உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தனர். இந்த வரலாறு குறித்து நாம் இன்னும் படிக்கவில்லை,'' என கவர்னர் ரவி கூறினார்.


சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: 2021 ல் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலை நான் கேட்டேன். அதற்கு தமிழக அரசு 30 பேர் கொண்ட பட்டியலை வழங்கியது. நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளபோது, தமிழகத்தில் 30 பேர் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது.


ஆங்கிலேயர்கள் நமது சுயகவுரவத்தை அழித்தனர். பிரிட்டனில் பாதிரியாராக இருந்த ஜேம்ஸ் மில் என்பவரை அழைத்து இந்தியாவின் வரலாற்றை ஆங்கிலேயர்கள் எழுத வைத்தனர். அவர் இந்தியாவிற்கு வராமலேயே, ' இந்தியர்கள் அனைவரும் கோழைகள். அடிமைகளாக இருக்க தகுதி பெற்றவர்கள். ஆண்மையற்றவர்கள்' , ' ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள்' என புத்தகம் எழுதினார் 🥰செய்திக்கதிர் 📗✒️🎙️📡


இந்த புத்தகம் தான் ஆங்கிலேயர்களின் பாட புத்தகமாக இருந்தது. இந்தியாவில் பணிபுரிய விரும்பிய ஆங்கிலேயர்கள் இந்த புத்தகத்தை படித்தனர். படித்ததை வைத்து தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து பணியாற்றினர். ஆங்கிலேயர்கள் நடத்திய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த புத்தகம் தான் பயன்படுத்தப்பட்டது.


இந்தியர்கள் யார் என்ற சுய கவுரவத்தை அழிக்க சதி செய்து ஆங்கிலேயர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். பல தலைமுறைகள் கடந்தும், மக்கள் இதனை நம்ப துவங்கினர். இதை படித்தே பட்டம் பெற்று ஆங்கிலேயர்கள், கிழக்கு இந்திய நிறுவனங்களில் பணியாற்றினர். நமது கல்வி முறை, தொழிலை அவர்கள் அழித்ததால், நமது மக்கள் கிழக்கு இந்திய கம்பெனியை சார்ந்து இருந்தனர். இதனால், வேலைக்கு செல்ல நமது மக்கள் இந்த பாடத்தையே படித்தனர்.இன்றும் நாம் அதில் இருந்து விடுபடவில்லை. நமது மண்ணில் ஆங்கிலேயர்களை சிறந்தவர்களாக பார்க்க வைக்கப்பட்டனர். பல்கலைகள், கல்லூரிகளில் எம்.ஏ., மற்றும் பி.ஏ., பட்டங்களில் கலாசாரம், வரலாறு, அரசியல் அறிவியல் பாடதிட்டத்தில் ஆங்கிலேயர்களை பற்றியும், அவர்களை புகழ்ந்தும் கற்பிக்கப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி கற்பிக்கப்படவில்லை.


20ம் நூற்றாண்டில் திராவிட தலைவர்களை பற்றி சொல்லப்படுகிறது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இல்லை. இன்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என நமது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 'நாம் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள். அனைத்தும் நமது தவறு. நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் நல்லதை செய்தனர்' என சொல்லிக் கொடுக்கின்றனர்.


ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி தங்களது உயிரை தியாகம் செய்தனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் இணைந்தனர்.


19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் 10 லட்சம் மக்களை அடிமைகளாக மாற்றி பர்மா, மலேஷியா, இலங்கை , பிஜி, மொரிஷியசுக்கு அழைத்துச் சென்று தங்களது நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வைத்தனர். இது பற்றி பாடப்புத்தகத்தில் இல்லை. ஆனால், 'ஆங்கிலேயர்கள் வந்த 19ம் நூற்றாண்டு சிறந்த காலம். அவர்கள் தான் சமூக நீதியை கற்றுக் கொடுப்பதாக' இன்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.


நமது கதாநாயகர்கள், தியாகிகள், உயிர் தியாகம் செய்தவர்களை மறந்தால் அந்த சமூகத்திற்கு எதிர்காலம் கிடையாது. அந்த சமூகம் நன்றியற்ற சமுதாயம் ஆகும். அந்த நன்றியற்ற சமூகம், நன்றியற்ற மக்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது.


நமது மண்ணில் ஆயிரக்கணக்கானோர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களை கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துள்ளனர். நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பது குறித்து நாம் இன்னும் படிக்க வேண்டி உள்ளது. உண்ணாவிரத போராட்டம் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்ததாக கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரையும், ரத்தத்தையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

 


💖அப்பா❤️

*அம்மா, கொஞ்சம் தாகத்துக்கு ஜலம் குடிச்சுக்கோ, வெய்யில் வேற இன்னிக்கு அதிகமா இருக்கு என்று தனது 75 வயது அம்மாவை அக்கறையோடு கேட்டான் ரகுராமன்.*

அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு போயிடலாம் என்றாள் அம்மா.

பேங்க் மேனேஜரைப் பார்த்து வாரிசு சர்டிபிகேட், பாஸ்புக் கூடவே ஒரு கவரிங் லெட்டர் எல்லாம் கொடுத்து விட்டு, "எங்க அம்மா சகுந்தலா பெயரில் எல்லாம் மாத்திடுங்க சார்," என்றான் ரகுராமன்.

பிறகு கொஞ்சநேரம் காத்திருந்தான்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான். அப்பா இறந்து போய் இந்த 45 நாட்களில் அம்மா ரொம்பவும் ஆடித்தான் போயிட்டா.

"அம்மா கவலைப் படாதேம்மா" என்று ரகுராமனும் அவன் மனைவியும் அடிக்கடி சொல்லி அவளை ஒருவாறு தேர்த்தி இப்போதுதான் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆகஸ்ட் மாசக் கடைசியில் மகன் வாசுவுக்கு உபநயனம் செஞ்சுடலாம்னு அப்பாவிடம் ஏப்ரல் மாதமே நாள் பார்க்கச் சொல்லி இருந்தான் ரகுராமன்.

விஷயத்தைக் கேட்டவுடன், பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம்போய் நல்ல நாள் பார்த்துக் குறிச்சுக் கொண்டு வந்தார் அப்பா.

அப்போது தெரியாது ரகுராமனுக்கு அடுத்த மாசமே அப்பா போயிடுவார்னு.

"ரகு, நீ பணம் எதுவும் கொண்டுவர வேண்டாம், என் பேரன் வாசுவை மட்டும் இங்கக் கூட்டிண்டு வா, எல்லா செலவையும் நான்தான் செய்வேன்" என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.

பென்ஷன் பணம், நிலத்தில் கிடைக்கும் கொஞ்ச மகசூல் பணம் இதெல்லாம் சேர்த்து வெச்சிருப்பாரோ. ஒரு வீடு ஊர்ல இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வாடகைப் பணம் நேராக பேங்குக்கு வர்றமாதிரி பேசி வெச்சிருந்தார் அப்பா.

"லாக்கர்ல அதிகம் பொருட்கள் இல்ல, எதுக்கு வேஸ்ட்டா அதுக்கு வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகை கொடுக்கணும்" னு அம்மா சொன்ன போது, "இருக்கட்டும் நம்ம பையன் சீக்கிரம் நகைகள் வாங்கிண்டு வந்து அடுக்குவான், இருக்கட்டும்" னு சொன்னார்.

"ரொம்ப தைரியமான மனிதர் என் அப்பா" என்று ரகுராமன் மனதுக்குள் தன் அப்பாவைப் பற்றி சிலாகித்துக் கொண்டான்.

பி காம் படிச்சு முடிச்சு ஆறு மாதத்துக்குப் பிறகு TVS கம்பெனி, சோளிங்கர் பிராஞ்சுல வேலை கிடைச்சு லெட்டர் வந்தவுடன், மாயவரம் ரயில்வே ஜங்க்ஷனுக்குப் போய் செங்கல்பட்டுக்கு டிக்கெட் போட்டு வந்தார் அப்பா.

"நேரா செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போ அங்கேர்ந்து சோளிங்கர்க்கு பஸ்ல போயிடலாம். மெட்ராஸ் பொய் சோளிங்கர் போனா 3 மணிநேரம் டைம் வேஸ்ட்" என்றார். பிறகு, "செங்கல்பட்டு ஸ்டேஷன்ல இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல நரசிம்ம விலாஸ் னு ஒரு ஹோட்டல் இருக்கு, பேர பார்த்துட்டு அது சைவ ஹோட்டல் னு நெனைச்சு போயிடாதே பேர அப்படி வெச்சு ஏமாத்தறான். அது அசைவ ஹோட்டல், நன்னா விசாரிச்சுட்டு நல்ல ஹோட்டலாப் பார்த்து சாப்பிடு" என்றார்.

முதல் மாசம் சம்பளம் வாங்கினவுடன் ரகுராமன் பெயரிலேயே ஒரு பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதாமாதம் சம்பள பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர்.

இன்று ரகுராமனுக்குத் திருமணமாகி 15 வருடம் முடிந்த நிலையில், பிள்ளைகள் படிப்பு, நகர வாழ்க்கையில் வாடகை, இதர செலவுகள் என்று நிறைய செலவுகள்.

எந்த மாதமும் அப்பா ரகுவிடம் செலவுக்கு பணம் எடுத்துக்கொடு எனக் கேட்டதேயில்லை. மாறாக தீபாவளி, சங்கராந்தி, கார்த்திகை தீபம், ஆடிப் பெருக்கு என்று எல்லாருக்கும் டிரஸ் வாங்கி அனுப்புவதும் "டவுன்ல இதெல்லாம் உனக்கு செய்ய நேரமே இருக்காது" என்று அம்மா பக்ஷணங்கள் செயது அனுப்புவதும் வருஷா வருஷம் நடந்த நிகழ்வுகள்.

அப்பாவும் அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அனுப்பி வைப்பான் ரகு. ஒவ்வொரு முறையும் பேரனுக்குச் செயின், மோதிரம், சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார் ரகுராமனின் அப்பா.

அவருக்கு செலவுக்கு இருக்கான்னு எப்போதாவது கேட்கும்போது "நிறைய இருக்கு, கவலைப் படாதே பகவான் குடுக்கறதை பத்திரமா வெச்சு செலவு பண்ணனும்"னு சொல்வார்.

"சார், மேனேஜர் கூப்பிடறார்" என்று வங்கி ஊழியர் கூப்பிட நினைவுக்கு வந்தான் ரகுராமன். அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே போனான்.

"உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல ஒரு லட்சத்து எழுபதாயிரம் இருக்கு, அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா", என்றார். ரகு, "சரி" என்றான்.

அம்மாவோ உடனே, "அது வாசுவின் உபநயனத்துக்கு நீ எடுத்துக்கோ அதுக்குத் தான் உங்க அப்பா வெச்சிருந்தார்" என்றாள். இந்த நிலைமையில் உபநயனம் எப்படிம்மா என்றதற்கு "அது எப்போ செய்தாலும் இந்தப் பணத்துலதான் செய்யணும், அதுதான் அப்பாவோட ஆசை" என்றாள் ரகுராமனின் அம்மா.

ரகு, "அம்மா சரி போவோம்"னு கிளம்ப வங்கி மேனேஜர், "லாக்கர்ல எதுவும் பார்க்கலியா" என்றார்.

"அதை மறந்தே போய்ட்டோம், சரி அதுல வெள்ளி டம்ளர் வெள்ளி சொம்பு தான் இருக்கும்"னு ரகுராமன் சொன்னான்.

எதற்கும் பார்க்கப் போனார்கள்.

அப்பா வைத்திருந்த லாக்கர் சாவியைப் போட்டுத் திறந்து பார்த்தபோது உள்ளே 2 பேப்பர்க் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவை அந்த பேங்க்கின் ஷேர் பத்திரங்கள். 500 ஷேர்கள். ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு. எல்லாவற்றையும் அம்மா பெயருக்கு வாங்கி வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட 5 லட்சம் ருபாய் மதிப்புக்கு.

மேலே ஒரு கடிதம். அதில் "என் காலத்துக்குப் பிறகு என் மனைவி சகுந்தலாவுக்கு இந்த ஷேர்கள் உபயோகமாகட்டும்"னு என்று சுருக்கமாக எழுதி இருந்தார் அப்பா.

அதற்கும் கீழே ஒரு சுருக்குப் பையில் என்னவோ இருந்தது, என்ன என்று பார்த்தால் ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!

அவற்றைப் பார்த்த பிறகு ரகுவுக்குத் துக்கம் அடக்கமுடியவில்லை.

பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு பிளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான் ரகு.

சற்றுத் தள்ளி நின்றிருந்த வங்கி மேனேஜர், "ரகுராமன் சார், தண்ணீர் குடிங்க" என்று ஆசுவாசப்படுத்தினார்.

அம்மாவைப் பார்த்தான் ரகு. அவள் கண்களிலும் சில துளி கண்ணீர் இருந்தது. ரகுராமனுக்கு அம்மா ஆறுதல் சொன்னாள்.

வீட்டுக்கு வரும் வழியில் ஆட்டோவில் வரும்போது அம்மாவிடம் கேட்டான் ரகுராமன்.

"எனக்குன்னு ஒரு செலவு கூட வெக்கலியே அப்பா... உனக்குக் கூட பேங்க் ஷேர் அஞ்சு லட்சத்துக்கு வாங்கி வெச்சுட்டுப் போய்ட்டார்.

அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்துண்டிடுருக்கு, எனக்கு செலவு எதுவும் வைக்கலியே" என்றான் அம்மாவின் கரத்தை பிடித்துக் கொண்டு

*"அதாண்டா அப்பா" என்றாள் ரகுவின் அம்மா.*

*அப்பா இறந்தபிறகே உலகம் அவரைப் புரிந்துகொள்கிறது.*

*தாய் பத்துமாதம் சுமந்தாள் என்றால், தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் மனதிலும் தோளிலும் சுமக்கிறான்

நன்றி.. திரு.குமார் சுப்ரமணியம்