வெள்ளி, 24 டிசம்பர், 2021

மனைவி.......!!

 மனைவி.......!!

எங்கோ பிறந்து வளர்ந்து திருமணம் என்ற ஒரு வாழ்க்கை உறவின் நூலின் வழியாக வாழ்வின் இறுதி வரை வரும் அவளின் நிஜமான தியாகம்

மறைக்கப்படுகிறது மறக்கப்படுகிறது.....!

பிறக்க வைத்து வளர்த்து

அவள் உடலை மறைக்க உடைகள் பல வாங்கித் தந்து அவளது பசிக்கு உணவு தந்து அவளை பத்திரமாகத் தூங்க வைத்து

அவளுக்கு இதுவரை அவளது உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தந்த அவளது பெற்றோர்கள்....!

சிறுவயதில் இருந்து அவளுக்கான சந்தோசங்களே வருத்தங்களையும் உணவு உடை இடம் பாதுகாப்பு எனப் பகிர்ந்த சகோதர சகோதரிகள் என அனைத்தும் ஒரு நாளில் விட்டு வரும் அவளின் தியாகம் இது பாதியே....இன்னும்..தொடரும்.?

கணவனுக்கு உடலும் மனமும்

தந்து அவன் வாழ அவனுக்கான வாழ்நாள் முழுவதும் அவனது பசி தீர்க்க உணவு சமைத்துப் பரிமாறி அவன் உடுத்தும் உடைகள் வாஷ் செய்து.....!

அவனது கரு எனும் குழந்தையை வயிற்றில் சுமந்து மூச்சு விடும் நொடிகளும் மிகப்பெரும் அவஸ்தையாக அதன் பின் அந்தக் கருவான குழந்தையைப் பெற்று எடுக்கும் ஜீவிதம் எனும் ஜனன மரண வலிகளே உணரும் தருணம் அவள் மனதில் வரும்

அந்த நொடி பெண் பிறப்பு என்பது

மிகச் சரியான ஒரு தவறான பிறப்பு என்று அவள் உணர்வாள்..!

வீட்டு வேலைகள் அதை செய்து முடித்த உடல் வலிகள் தொடர்ந்து கொண்டே ஒரு மனைவி கணவனுக்கு செய்யும் புனிதமான தாம்பத்யம் எனும் உடல் தேவைகள் சில நேரங்களில்

அதைச் சரி வர செய்ய முடியாமல்

(மாதவிடாய்) எனும் பெண்மையின் சாபமான இயற்கை வலிகளில்

அவஸ்தைப்பட்டு சொல்ல முடியாமல் அதனால் ஏற்படும் மனதின் வலிகள்....!

காலம் எனும் மாற்றத்தால் கூட மாற்ற முடியாது.....!

தன் மனைவியின் உடலை அடிக்கும் முன் ஒரு நொடி யோசிக்க வேண்டும்.....!

தன் வயிற்றுப் பசி தீர்க்க உணவு சமைத்து நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கும் உடல்

தன் உடல் காமப்பசி தீர்க்க மனம் தரும் இந்த உடல் தன் கருவான பேர் சொல்லும் சந்ததியே அவளது வயிற்றில் சுமந்த அந்த உடல் தனக்காக தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களையும் சந்தோசங்களையும் சரிபாதியாக பங்கிட்டு உடன் வரும் அவளது உடலுக்கு நாம் அவளை அடிப்பது சரியா என்று......!

இந்த உலகில் பாசத்தை வெல்ல முடியாத முதல் உறவு தாய் ஆனால் அந்த தாயயே மிஞ்சிடு்ம் உறவு மனைவி மட்டுமே....!

ஒரு தாய் வாழ்நாள் காலம் முழுவதும் உடன் வர முடியாது. கருவி்ல் சுமந்து பெற்று எடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் பாசம் நிகரற்றது.நாம் இறந்தாலும் அழுவது பாசத்தின் வெளிப்பாடு தெரியாத பேசாத பார்க்காத

நம்மை ஒரு திருமணம் என்று

ஒருநாளின் உறவில் அறிமுகமாகி

நாம் இறந்தாலும் அவளது வாழ்வின் இறுதி வரை நினைத்து துடிக்கும் உறவு மனைவியின் பாசத்தின் உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று....!

ஒரு ஆணின் வாழ்வில் வாழ பெரும்பங்கு தாய் பாதி மனைவி. பாதி தாயின் துணை பாதிவரை மனைவியின் துணை அவன் வாழ்வின் இறுதி வரை

மனைவி ஒரு கணவனுக்கான

கடவுள் தந்த இன்னோரு கடவுள்..!!

எனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்கு நான் தரும் சிறு மரியாதை......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக