கேள்வி : தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடு எது என்று கூறமுடியுமா ..?
என் பதில் :
பங்குச்சந்தை வேண்டாம், பாதுகாப்பான முதலீடு எதாவது நல்ல வட்டிவிகிதத்தில் வேண்டும் என கேட்டால் எதுவுமே இல்லை என்பதுதான் நிஜம்.
வங்கிகளில் 5.5%வட்டிக்கு பக்கமாக கொடுக்கிறார்கள். ட்ரிபிள் ஏ ரேட்டட் பாண்டுபத்திரங்களில் 6% வருகிறது. கொஞ்சம் ரேட்டிங் குறைவான கம்பனிகளில் 10% வருகிறது. ஆனால் அவற்றில் முதலீடு செய்யமுடியுமா என்பது பயமான விசயம்தான்
பாண்டு மியூச்சுவல் பண்டுகளில் போடலாம் என்றால் வட்டிவிகிதம் அதிகரித்தால் முதலீட்டின் அசலே குறையும் வாய்ப்பு உண்டு.
மேலும் 5% வட்டி என்கையில் பணவீக்கம் 5% என்றால் நமக்கு நிகர இழப்புதான்
அதனால் பணத்தை சேமிக்க நல்லவழி வீட்டுகடன் வாங்குவதுதான்
எட்டு சதவிகிதம் வட்டி. பணவீக்கம் 5% என்கையில் நாம் 3% வட்டிதான் கொடுக்கிறோம். சில ஆண்டுகளில் பணவீக்கம் 7% ஆக கூட இருக்கும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீடுவாங்கினேன். வீட்டுக்கு கட்டும் ஈ.எம்.ஐ தொகையை விட அபார்ட்மெண்ட் வாட்கைகள் 50% குறைவு
பத்தாவது ஆண்டில் இ.எம்.ஐ தொகை அதேதான். ஆனால் வாடகைகள் ஈ.எம்.ஐயை விட 50% கூடுதலாகிவிட்டன.
எல்லா ஊரிலும் இதுதான் நிலவரம் என சொல்லமுடியாது. ஆனால் வட்டிவிகிதம் இப்படி தரைமட்டத்தில் இருக்கையில் குறைந்தவட்டியில் வீட்டு கடன்வாங்குவதுதான் நல்ல சேமிப்பு 🙂
நன்றி
சிவக்குமார் V K
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக