திங்கள், 6 டிசம்பர், 2021

கேள்வி :  கோவையில்  அபார்ட்மெண்ட் வாங்குவதை விட வளரும் சிறு நகரங்களில் , மற்ற அடுக்கு நகரங்களில் வீடு வாங்குவது லாபகரமானதா?

(சென்னையை தவிர ...)


என் பதில் : 


முதலீடு செய்ய வாங்குவதாக எடுத்துக் கொண்டு பதிலளிக்கிறேன்.


 இரண்டுக்கும் பொதுவான ஒரு எச்சரிக்கை நீங்கள் அங்கு இல்லாத பட்சத்தில் அபார்ட்மெண்ட் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டு நிர்வாகம் செய்ய உங்களுக்கு நம்பிக்கையான ஒருவர் இருக்க வேண்டும்.


கோவை  அபார்ட்மெண்டின் நன்மைகள்


தேவை அதிகம் இருப்பதால் வாடகைக்கு விடுவது சுலபம்

வாடகை அதிகம் கிடைக்கும். மேலும் அட்வான்ஸ் பத்து மாத வாடகை கிடைக்கும்.

அபார்ட்மெண்ட் பராமரிப்பு செலவு பெரும்பாலும் வாடகைதாரரையே சேரும்

பெரும்பாலும் மாத சம்பளம் வாங்குபவர்களாக இருப்பதால் வாடகை வாங்குவதில் பிரச்சினை இருக்காது

வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் அடைப்பது சுலபம்.


அபார்ட்மெண்ட்டின் பிரச்சினைகள்


வாடகைதாரர் அபார்ட்மெண்ட் விதிமுறைகளை மீறி நடந்தால் நீங்கள் பஞ்சாயத்துக்கு போக வேண்டும்

சரியான கண்காணிப்பு இல்லை என்றால் வாடகைதாரர் சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய வாய்ப்புள்ளது

குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அபார்ட்மெண்ட் விலை குறைய வாய்ப்புள்ளது

நீங்கள் நினைத்த படி மாறுதல் செய்ய முடியாது

இதே இரண்டாம் நிலை நகரங்களில் தனிவீடாக வாங்கினால்


நிலமதிப்பு உயர உயர உங்கள் முதலீடு வளரும்
நிலம் உங்கள் சொந்தமாகையால் உங்கள் தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யலாம். 

உதாரணமாக முதல் மாடி கட்டி வாடகைக்கு விடலாம்

சிறு நகரத்தில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் வீட்டின் மீது ஒரு கண் வைத்திருப்பர். ஆகவே வாடகை தாரர் தவறாக நடக்க வாய்ப்பு குறைவு
வீட்டு வரி குறைவு.


அதேசமயம் கீழ் கண்ட பிரச்சினைகளும் உள்ளது


சிறு நகரத்தில் வீட்டு வாடகை குறைவாகவே கிடைக்கும்
அட்வான்ஸ் தொகையும் குறைவு

வாடகைதாரர் மாத சம்பளம் வாங்காத பட்சம் சில சமயம் வாடகை நிலுவை ஆக வாய்ப்புள்ளது

பெரும்பாலும் பராமரிப்பு செலவு வீட்டு சொந்தக்காரர் தலையில் விழும்
இவற்றை சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

நன்றி ..

நன்றி ...

சிவக்குமார் .V. K 

Sivakumar.V.K

Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


1 கருத்து: