உடுமலைபேட்டை அரசு கல்லூரி ...பொன்விழா ஆண்டு -1971-2021..
தொடக்கம்
கம்பள சொந்தங்களை முதல் பட்டதாரிகள் உருவாக்கிய கல்லூரி
வேதியல் பட்டதாரி செந்தில்குமார் ...
வழக்கறிஞர் சிவரஞ்சனி
வாழ்த்துக்கள்
கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..
உடுமலைப்பேட்டை
மனைவி.......!!
எங்கோ பிறந்து வளர்ந்து திருமணம் என்ற ஒரு வாழ்க்கை உறவின் நூலின் வழியாக வாழ்வின் இறுதி வரை வரும் அவளின் நிஜமான தியாகம்
மறைக்கப்படுகிறது மறக்கப்படுகிறது.....!
பிறக்க வைத்து வளர்த்து
அவள் உடலை மறைக்க உடைகள் பல வாங்கித் தந்து அவளது பசிக்கு உணவு தந்து அவளை பத்திரமாகத் தூங்க வைத்து
அவளுக்கு இதுவரை அவளது உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தந்த அவளது பெற்றோர்கள்....!
சிறுவயதில் இருந்து அவளுக்கான சந்தோசங்களே வருத்தங்களையும் உணவு உடை இடம் பாதுகாப்பு எனப் பகிர்ந்த சகோதர சகோதரிகள் என அனைத்தும் ஒரு நாளில் விட்டு வரும் அவளின் தியாகம் இது பாதியே....இன்னும்..தொடரும்.?
கணவனுக்கு உடலும் மனமும்
தந்து அவன் வாழ அவனுக்கான வாழ்நாள் முழுவதும் அவனது பசி தீர்க்க உணவு சமைத்துப் பரிமாறி அவன் உடுத்தும் உடைகள் வாஷ் செய்து.....!
அவனது கரு எனும் குழந்தையை வயிற்றில் சுமந்து மூச்சு விடும் நொடிகளும் மிகப்பெரும் அவஸ்தையாக அதன் பின் அந்தக் கருவான குழந்தையைப் பெற்று எடுக்கும் ஜீவிதம் எனும் ஜனன மரண வலிகளே உணரும் தருணம் அவள் மனதில் வரும்
அந்த நொடி பெண் பிறப்பு என்பது
மிகச் சரியான ஒரு தவறான பிறப்பு என்று அவள் உணர்வாள்..!
வீட்டு வேலைகள் அதை செய்து முடித்த உடல் வலிகள் தொடர்ந்து கொண்டே ஒரு மனைவி கணவனுக்கு செய்யும் புனிதமான தாம்பத்யம் எனும் உடல் தேவைகள் சில நேரங்களில்
அதைச் சரி வர செய்ய முடியாமல்
(மாதவிடாய்) எனும் பெண்மையின் சாபமான இயற்கை வலிகளில்
அவஸ்தைப்பட்டு சொல்ல முடியாமல் அதனால் ஏற்படும் மனதின் வலிகள்....!
காலம் எனும் மாற்றத்தால் கூட மாற்ற முடியாது.....!
தன் மனைவியின் உடலை அடிக்கும் முன் ஒரு நொடி யோசிக்க வேண்டும்.....!
தன் வயிற்றுப் பசி தீர்க்க உணவு சமைத்து நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கும் உடல்
தன் உடல் காமப்பசி தீர்க்க மனம் தரும் இந்த உடல் தன் கருவான பேர் சொல்லும் சந்ததியே அவளது வயிற்றில் சுமந்த அந்த உடல் தனக்காக தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களையும் சந்தோசங்களையும் சரிபாதியாக பங்கிட்டு உடன் வரும் அவளது உடலுக்கு நாம் அவளை அடிப்பது சரியா என்று......!
இந்த உலகில் பாசத்தை வெல்ல முடியாத முதல் உறவு தாய் ஆனால் அந்த தாயயே மிஞ்சிடு்ம் உறவு மனைவி மட்டுமே....!
ஒரு தாய் வாழ்நாள் காலம் முழுவதும் உடன் வர முடியாது. கருவி்ல் சுமந்து பெற்று எடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் பாசம் நிகரற்றது.நாம் இறந்தாலும் அழுவது பாசத்தின் வெளிப்பாடு தெரியாத பேசாத பார்க்காத
நம்மை ஒரு திருமணம் என்று
ஒருநாளின் உறவில் அறிமுகமாகி
நாம் இறந்தாலும் அவளது வாழ்வின் இறுதி வரை நினைத்து துடிக்கும் உறவு மனைவியின் பாசத்தின் உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று....!
ஒரு ஆணின் வாழ்வில் வாழ பெரும்பங்கு தாய் பாதி மனைவி. பாதி தாயின் துணை பாதிவரை மனைவியின் துணை அவன் வாழ்வின் இறுதி வரை
மனைவி ஒரு கணவனுக்கான
கடவுள் தந்த இன்னோரு கடவுள்..!!
எனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்கு நான் தரும் சிறு மரியாதை......
கேள்வி : தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடு எது என்று கூறமுடியுமா ..?
என் பதில் :
பங்குச்சந்தை வேண்டாம், பாதுகாப்பான முதலீடு எதாவது நல்ல வட்டிவிகிதத்தில் வேண்டும் என கேட்டால் எதுவுமே இல்லை என்பதுதான் நிஜம்.
வங்கிகளில் 5.5%வட்டிக்கு பக்கமாக கொடுக்கிறார்கள். ட்ரிபிள் ஏ ரேட்டட் பாண்டுபத்திரங்களில் 6% வருகிறது. கொஞ்சம் ரேட்டிங் குறைவான கம்பனிகளில் 10% வருகிறது. ஆனால் அவற்றில் முதலீடு செய்யமுடியுமா என்பது பயமான விசயம்தான்
பாண்டு மியூச்சுவல் பண்டுகளில் போடலாம் என்றால் வட்டிவிகிதம் அதிகரித்தால் முதலீட்டின் அசலே குறையும் வாய்ப்பு உண்டு.
மேலும் 5% வட்டி என்கையில் பணவீக்கம் 5% என்றால் நமக்கு நிகர இழப்புதான்
அதனால் பணத்தை சேமிக்க நல்லவழி வீட்டுகடன் வாங்குவதுதான்
எட்டு சதவிகிதம் வட்டி. பணவீக்கம் 5% என்கையில் நாம் 3% வட்டிதான் கொடுக்கிறோம். சில ஆண்டுகளில் பணவீக்கம் 7% ஆக கூட இருக்கும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீடுவாங்கினேன். வீட்டுக்கு கட்டும் ஈ.எம்.ஐ தொகையை விட அபார்ட்மெண்ட் வாட்கைகள் 50% குறைவு
பத்தாவது ஆண்டில் இ.எம்.ஐ தொகை அதேதான். ஆனால் வாடகைகள் ஈ.எம்.ஐயை விட 50% கூடுதலாகிவிட்டன.
எல்லா ஊரிலும் இதுதான் நிலவரம் என சொல்லமுடியாது. ஆனால் வட்டிவிகிதம் இப்படி தரைமட்டத்தில் இருக்கையில் குறைந்தவட்டியில் வீட்டு கடன்வாங்குவதுதான் நல்ல சேமிப்பு 🙂
நன்றி
சிவக்குமார் V K
கேள்வி : வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?
என் பதில் :
வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன.
மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும்.
உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும்.
உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது.
வீட்டுக் கடன்: வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது. முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது? முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது.
ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும்.
முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்: கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது.
வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
நன்றி ..
சிவக்குமார் VK
மையவாடி ஜமீன் வழிபட்ட கோவில்-உடுமலைப்பேட்டை -மையவாடி .
என் வாழ்நாளில் ..பாலமன்னா குலம் வழிபடும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தேன் ...அருமையான வீரக்கம்பங்கள் ...சிறப்பு பூஜை ..பொங்கல் வைத்து வழிபட்டார்கள் ...இதன் சிறப்பு மையவாடி ஜமீன் வழிபட்ட கோவில் ...கோவிலை சுற்றியும் போர்நினைவு நடுகற்கள் ...நேற்று அருமையான தரிசனம்
தென்கொங்கு நாட்டின் தொன்மங்கள் ..
நன்றி .. ..
அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடுத்த கட்ட நகர்வைத்தருவது ,ஆனால் எங்களது அறக்கட்டளையின் துணைத்தலைவருக்கு தம் சமூகப்பணிக்கும் அரசியல் பணிக்கும் மாற்றத்தைக் கொடுத்தது.
அரசியலுக்காக சமூகப் பணியாற்றும் இம்மண்ணில் சமூகத்திற்காக அரசியல் களம் கண்டு.... ஆதாயமின்றி இன்றளவும் பாடாற்றும் உடுமலை வரலாற்று செல்வத்தின் அரசர்,
தமிழுக்காகத் தலை கொடுத்த குமணன் மண்ணில் மொழிக்காகப் போராடி சிறை கண்ட மொழிப்போர் ஈகி வெ.காளியப்பனின் தலைமகனுக்கு அடுத்த மகன்,
மண்ணின் மைந்தன் சாதிக்பாட்சாவை சரியாக இனம் கண்டு மனிதப்புனிதர் எனும் பட்டத்தைத் தந்திட்ட மனிதப் புனிதரின் அன்பில் விழைந்த பாசமலர்,
உடுமலை வரலாற்றில் உயிர்ப்பான நாயகருக்கு உரிமையுடன் கூறும் மண நாள் வாழ்த்து.. வாழ்க.. வாழ்வாங்கு வாழ்க...🥰🥰🙏🙏🙏🙏⛱️
மகிழ்ச்சி ...
இன்று கோவையில் குடும்ப நண்பர் தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் .நல்லாசிரியர் விஜயலக்ஷ்மி அவர்களின் புதல்வி அனு அவர்களின் .குமரகுரு பொறியியல் கல்லூரிக்கு .
இந்த ஆண்டு தங்கள் துறைசார்ந்த தலைமைபொறுப்பு ஏற்கும் விழாவிற்கு அழைப்பின் பேரில் சென்று கலந்துகொண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ..
இன்று ஆளுமை மிக்க துறை சார்ந்த கல்லூரி பேராசிரியர்கள் சந்தித்து உரையாடியது .தற்பொழுது உள்ள கல்வி ..வேலைவாய்ப்பு பற்றி தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டது எனக்கு மிகவும் உதவியது .குடும்ப நண்பரின் புதல்வி அனு அவர்கள் காக்னிசண்ட் பன்னாட்டு நிறுவனத்தில் பணியும் கிடைத்து உள்ளது .
குறிப்பு : நான் பணியாற்றிய நிறுவனத்தில் இந்த கல்லூரிக்கு தொழில்துறை சார்ந்து என் மதிப்பு மிக்க வாடிகையாளர்கள் அடிக்கடி சந்தித்து இருக்கிறேன் .தற்பொழுதும் இங்கு பணிபுரிந்துகொண்டுள்ளார்கள் .இன்று நீண்ட வருடங்களுக்கு பின் கல்லூரி வளாகத்தை சுற்றி பார்த்தது ..மலரும் நினைவுகளாக பசுமையாக என் மனதில் பதிந்து சென்றது ...
நன்றி .என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கேள்வி : ஒருவர் என்னை அவமானப்படுத்தும் போது அல்லது வேண்டுமென்றே காயப்படுத்தும் நான் எப்படி அதை கையாளுவது?
என் பதில் :
அவமானப்படுத்தும் போது அல்லது வேண்டுமென்றே காயப்படுத்தும் போதும் தாங்கள் அமைதியாக அவ்விடத்தை விட்டு செல்வதுதான் சரி.
அதனால் ரோசம் இல்லாதாவன் என்றோ அல்லது எதிர்த்து செயல்பட இயலாதவன் என்றோ நினைத்தாலும் சரி விலகிவிடுவது நல்லது.
இது போன்ற ஜென்மங்களிடம் நாம் பட வேண்டியது எல்லாம் போன ஜென்மத்து பந்தம் என்று நினைத்து விட வேண்டும்.
அவர்களால் பின்னால் ஏற்பட போகும் பிரச்சனைகள் ஏதும் நமக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கு கடவுள் நமக்கு நல்லது செய்துள்ளார் என்று நினைத்துவிட வேண்டும்.
நன்றி
கேள்வி : கோவையில் அபார்ட்மெண்ட் வாங்குவதை விட வளரும் சிறு நகரங்களில் , மற்ற அடுக்கு நகரங்களில் வீடு வாங்குவது லாபகரமானதா?
(சென்னையை தவிர ...)
என் பதில் :
முதலீடு செய்ய வாங்குவதாக எடுத்துக் கொண்டு பதிலளிக்கிறேன்.
இரண்டுக்கும் பொதுவான ஒரு எச்சரிக்கை நீங்கள் அங்கு இல்லாத பட்சத்தில் அபார்ட்மெண்ட் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டு நிர்வாகம் செய்ய உங்களுக்கு நம்பிக்கையான ஒருவர் இருக்க வேண்டும்.
கோவை அபார்ட்மெண்டின் நன்மைகள்
தேவை அதிகம் இருப்பதால் வாடகைக்கு விடுவது சுலபம்
வாடகை அதிகம் கிடைக்கும். மேலும் அட்வான்ஸ் பத்து மாத வாடகை கிடைக்கும்.
அபார்ட்மெண்ட் பராமரிப்பு செலவு பெரும்பாலும் வாடகைதாரரையே சேரும்
பெரும்பாலும் மாத சம்பளம் வாங்குபவர்களாக இருப்பதால் வாடகை வாங்குவதில் பிரச்சினை இருக்காது
வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் அடைப்பது சுலபம்.
அபார்ட்மெண்ட்டின் பிரச்சினைகள்
வாடகைதாரர் அபார்ட்மெண்ட் விதிமுறைகளை மீறி நடந்தால் நீங்கள் பஞ்சாயத்துக்கு போக வேண்டும்
சரியான கண்காணிப்பு இல்லை என்றால் வாடகைதாரர் சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய வாய்ப்புள்ளது
குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அபார்ட்மெண்ட் விலை குறைய வாய்ப்புள்ளது
நீங்கள் நினைத்த படி மாறுதல் செய்ய முடியாது
இதே இரண்டாம் நிலை நகரங்களில் தனிவீடாக வாங்கினால்
கேள்வி : ELSS Mutual Fund_ல் (Lumpsum ரூபாய் 1லட்சம்) சுமார் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். எந்த ஃபண்ட் ஹவுஸ் எனக்கு சிறந்த வருமானத்தைத் தரும்?
என் பதில் :
முதலில் ELSS fund இல் 3 வருடங்கள் Lock in period இருப்பதை அறிந்து கொளுங்கள்,
இரண்டாவதாக தற்பொழுது உள்ள சந்தை நிலவரப்படி Lump sum ஆக ஒரு லட்சத்தை முதலீடு செய்வது சிறந்த வழிமுறை அல்ல,
நீங்கள் ஒரு லட்சத்தை 12 பங்காக (₹ 8,333) பிரித்து மாதம் ஒருமுறை முதலீடு செய்வது சிறப்பு,
உங்களுக்கான பரிந்துரை
1)Mirae Asset tax saver fund direct growth
2) Canara robeco equity tax saver fund direct growth
இவ்விரண்டு mutual fund ம்
சிறந்த செயல்திறன் கொண்டவை, இருப்பினும் அவ்வப்போது சோதனை செய்து கொள்வது நல்லது...
நன்றி ...
சிவக்குமார் .V. K