புதன், 17 டிசம்பர், 2025

வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?

 வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?

வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன.
மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும்.
உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும்.
உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது.
வீட்டுக் கடன்: வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது. முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது? முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது. ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும்.
முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்: கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
Sivakumar.V.K
(Home Loans & Car Loans )

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

இன்றைய கல்லூரி நண்பர்கள் சந்திப்பு 30 வருடங்கள் கடந்து ...

 இன்றைய கல்லூரி நண்பர்கள் சந்திப்பு 30 வருடங்கள் கடந்து ...

இன்று காலை கல்லூரி நண்பர்கள் சந்திப்பு திருமூர்த்தி அணை  கால்வாய் கரையில் கல்லூரி நண்பர் குருவாயூரப்பன் பண்ணை தோட்டத்தில் அருமையான சந்திப்பு ....அருமையான தோட்டக்கலை நிபுணர் ..பண்ணை தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்து . தற்பொழுது உள்ள விவசாய நடைமுறைகளை கொண்டு தொலைநோக்கு திட்டங்களுடன் விவசாய துறையில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் கால்பதித்து வளர்ந்து வருபவர் ..அவருடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...

கல்லூரி நண்பர்கள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது ..பேராசிரியர்  வசந்தகுமார் பேசியது மிக்க மகிழ்ச்சி ..இன்றைய இளைய தலைமுறையினர் கல்வியில் முன்னோக்கு திட்டங்களுடன் படித்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை அவர்களே தேடிக்கொள்கின்றனர் ..அவர்களுக்கு நண்பர்கள் போல சில ஆலோசனைகளை மட்டும் நம் கூறினாலே அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர் கூறியது மிக்க மகிழ்ச்சி ..அதே போல் பேராசிரியர் மனோகரன் அவர்களும் அதே போல் முன்மொழிந்தார் ...நன்றிகள் பல ...

மணிகண்டன் ....திருப்பூர் என்றாலே இவரின் ஹோம் தியேட்டர் வீடு தான் ஞாபகம் வரும் ..இவரின் பணி இன்று வீடு கட்டும்பொழுதே சமையல் அறை புத்தக அறை போன்று ஹோம் தியேட்டர் க்கு அறை இந்த காலகட்டத்தில் வீட்டில் தேவையான பொழுதுபோக்கு அறையாக வாழ்வில் இடம்பெற்று விட்டது ..இவரின் பணியின் மூலம் பல வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றி வருகிறார் .இன்றய தொழில்நுட்பம் குறித்து தகவல்களை பரிமாறிக்கொண்டார் ..நன்றிகள் .

தொடரும் கல்லூரி நண்பர்களின் சந்திப்பு  பதிவு .....நாளை ..






செவ்வாய், 9 டிசம்பர், 2025

Periods நேரத்தில் Napkin பயன்

 Periods நேரத்தில் Napkin பயன்படுத்துவதில் தொடைகளுக்கு நடுவே எரிச்சல், இரவு நேரங்களில் PAD விலகுவதால் ஆடைகளில் கறை , கூடுதலாக கால் வலி என படுத்தி எடுத்த நேரத்தில் இந்த Period Panty சொர்க்கமாக இருக்கிறது.

Panty போன்று இதை அணிந்து கொள்ள முடிவதால் தனியாக Nap

kin வைக்க அவசியமில்லை. Light Weight ஆக அதே சமயம் நடுவில் இருக்கும் பஞ்சு Soft ஆக இருப்பதால் Napkin போன்ற உணர்வே தோன்றவில்லை. இரவு நேரங்களில் உடைகளில் கறையும் படிவதில்லை🥰இதே Whisper Brand Napkin கொஞ்சம் Dry ஆக இருந்தது. ஆனால் இந்த Panty சூப்பர். ஒரு முறை பயன்படுத்திவிட்டு dispose பண்ணிடலாம்.
இத்தனை வருடத்தில் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது❤️
Tampons, Mensural Cup லாம் எனக்கு செட் ஆகவில்லை.கணவர் தான் ஆன்லைனில் தேடி தேடி இதை எனக்கு அறிமுகப்படுத்தினார். 6 Pieces விலை 300.
நீங்களும் Try பண்ணி பாருங்க.

வியாழன், 4 டிசம்பர், 2025

வெங்கிடுசாமி பெரியப்பா ..அருமையான சொந்தம் பந்தமும் ....இன்றும் ..


 வெங்கிடுசாமி பெரியப்பா ..அருமையான சொந்தம் பந்தமும் ....இன்றும் ..

என் தாய் தந்தையின் உற்ற நண்பர் சொந்தமும் ...எங்கள் தாய் தந்தை திருமணம் தளி ஜல்லிபட்டியில் எங்கள் அம்மாவின் வீட்டில் நடந்தது ..அப்பா எரிசனம்பட்டி  பில்லவா நாயக்கன் சாலையூர்  எனது அப்பா சிறுவயதில் தாய்தந்தை இழந்து ..பெரியகோட்டையில் எங்கள் அத்தை வீட்டில் வளர்ந்தார் ..திருமணத்திற்கு தளி ஜல்லிபட்டியில் மாப்பிள்ளை வீடு என்று வெங்கிடுசாமி பெரியப்பா  அவர்களின் வீட்டில் இருந்து தான் அழைத்து வந்தார்கள் ..எங்கள் அம்மா .எங்கள் பெரியம்மா  அவர்களின் குடும்ப சொந்தங்களாக செல்ல பிள்ளையாக சிறு வயது முதல் வளர்ந்தார்கள் ..எப்போதும் இவரை சந்திக்க சென்றாலும் ..அம்மா .மற்றும் உடன் பிறந்த சொந்தங்களை கேட்டு நலம் விசாரித்து கொண்டு இருப்பார்கள் ....

இது போன்ற சொந்தங்கள் அமைவது வரம் .......இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியப்பா அவர்களுக்கு ....

என்றும் அன்புடன் ..உடுமலை சிவக்குமார் 

கார்த்திகை மழை கண்டு கண் விழிக்கும் பெருமைமிக்கது செங்காந்தள் மலர்.

 


கா
ர்த்திகை மழை கண்டு கண் விழிக்கும் பெருமைமிக்கது செங்காந்தள் மலர்.

 

இது ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் உள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மழைக் காலத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கும் கார்த்திகை பூ செங்காந்தள். இம்மலர் குறித்து தமிழ் இலக்கியங்கள் சிறப்பாகப் பேசுகின்றன.

தமிழகத்தின் மாநில மலராகவும், தமிழ் கடவுள் முருகபெருமான் பிறந்த மாதத்தில் இந்த மலர் பூப்பதனால் முருகக் கடவுளுக்குப் பிடித்த மலர் என்ற சிறப்பினையும் இது பெறுகிறது. தமிழ் நிலத்தையும், தமிழர்தம் வீரத்தையும் குறியீடாகக் கொள்ளப்படுகின்ற கார்த்திகை பூக்களை போருக்குச் செல்லும்போது பண்டைய தமிழ் மன்னர்கள் மாலையாக அணிந்து கொண்டார்கள் என்கிறது சங்க நூல்கள். சிலப்பதிகாரத்தில் இந்தப் பூவின் இதழ்களை பெண்களின் அழகிய விரல்களோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருப்பார்கள்.

தீச்சுடர் போல் காட்சி அளிக்கும் செங்காந்தள் மலர் செடியின் வேர் பகுதியை கண் வலி கிழங்கு, கலப்பை, வெண்தோன்றி, கார்த்திகை கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர் செடியின் அனைத்து பாகங்களிலும்கோல்ச்சிசின்' என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் வேர் நச்சுத்தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம் மேல் பட்டால் சருமத்தில் அரிப்பு உண்டாகும். இந்தக் கிழங்கில் உள்ளகோல்ச்சிசினும்', 'சூப்பர்பைனும்' மருத்துவக் கூறுகளாகும்.

இந்தச் செடியின் கிழங்கில் இருந்து புதிய கொடிகள் கிளை விட்டுப் படரும். இலைகளின் நுனி நீண்டும், சுருட்டும் பற்று கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றை பற்றிப் பிடித்து வளரக்கூடியது. இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடனும், பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம் மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் வெண்காந்தள், செங்காந்தள் என்று இரு வேறு மலர்களாக வர்ணிப்பார்கள்.

திங்கள், 24 நவம்பர், 2025

குழந்தைகள் சுவற்றில் வரையும் வண்ண வண்ண ஓவியங்கள் ...

 குழந்தைகள் சுவற்றில் வரையும் வண்ண வண்ண ஓவியங்கள் ...

நேற்று நண்பரின் வீட்டுக்கு ஒரு நிகழ்வுக்காக சென்று இருந்தேன் ..நம்மை சுற்றி இருக்கும் பார்வையில் காண. சிறு வயதில் செய்த சில சில குறும்புகளுடன் வீட்டின் சுவற்றில் அழகான வண்ண வண்ண ஓவியங்கள் மனதில் நிழலாடிய வண்ண வண்ண ஓவியங்கள் மனதில் ......


குழந்தைகள் சுவரில் வரையும் ஓவியங்கள் பொதுவாக அவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் மற்றும் வெளிப்பாட்டின் அடையாளமாக அமைகின்றன. இவற்றில் குழந்தைகள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள் மற்றும் கற்பனையான வடிவங்கள் போன்றவற்றை அவர்கள் வரைகின்றனர். இந்த ஓவியங்கள் பெரும்பாலும் மெல்லிய கோடுகளால் வரையப்பட்டு, குழந்தைகளின் வண்ணமயமான கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. 
  • படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன்: குழந்தைகள் சுவர்களில் வரையும் ஓவியங்கள் அவர்களின் கற்பனைத்திறனின் வெளிப்பாடாக அமைகின்றன. அவர்கள் வரையும் படங்கள் யதார்த்தமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, அவை அவர்களின் மனதில் உருவான கற்பனைகளின் பிரதிபலிப்பாகும்.
  • பல்வேறு கருப்பொருள்கள்: குழந்தைகள் பொதுவாக விலங்குகள், பூக்கள், வீடுகள், சூரியன் மற்றும் மேகங்கள் போன்ற இயற்கை காட்சிகளை வரைகின்றனர். மேலும், அவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பலவிதமான உருவங்களையும், வடிவங்களையும் ஓவியங்களாக உருவாக்குகிறார்கள்.
  • கலை வளர்ச்சி: சுவர்களில் ஓவியம் வரைவது குழந்தைகளின் கலை வளர்ச்சிக்கு ஒரு சிறந்த வழியாகும். இது அவர்களுக்கு பல்வேறு வண்ணங்கள், கோடுகள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்த உதவுகிறது.
  • கவனிப்பு: சில சமயங்களில், குழந்தைகள் தங்கள் ஓவியங்களை வரைவதற்கு மெல்லிய கோடுகளைப் பயன்படுத்துவார்கள். இது அவர்களுக்கு வரையும்போது கோடுகளை சரியாக அமைக்கவும், தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யவும் உதவுகிறது.
  • சுவரில் வரைவதன் முக்கியத்துவம்: இது குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன், அவர்கள் சுவரில் வரைவதைத் தடுக்காமல், அவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான தனி இடத்தை வழங்குவது மிகவும் முக்கியமானது. இது அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, படைப்பாற்றலை மேம்படுத்த உதவுகிறது. ......

எண்ணற்ற வெள்ளைத் தாள்கள் கலர் பென்சில்கள் உங்கள் குழந்தையின் முன் இருக்கட்டும். குழந்தை முன் ஏதாவது வரையுங்கள் . இது என்ன என்று கேளுங்கள். எதைச் சொன்னாலும் கை தட்டுங்கள். இது தொடரந்தால் குழந்தை கிறுக்க ஆரம்பித்து விடும்.

6 வயது ஆனவுடன் ஓவியப் பள்ளியில் சனி ஞாயிறு வகுப்புகளில் சேருங்கள். எண்ணற்ற புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள். ஓவியம் பழகிவிடும்.


எத்தனை பேருக்கு தெரியும் நம் தாத்தா ,பாட்டிகள் தன் பேரக்குழந்தைகள் வரையும் ஓவியங்கள் தன் குழந்தை பருவ வெளிப்பாடுகளே .....என்று ......


என்றும் அன்புடன் சிவக்குமார் ....




சனி, 22 நவம்பர், 2025

2009ல் அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது.

 அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது...

2009ல் அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது.
அதைப் பற்றி பேசினால் எல்லாருக்கும் முதல் 15 நிமிடங்கள்தான் நினைவில் உள்ளது. அதில் வயதான ஒரு கியூட் கபிள் — அழகான வாழ்க்கை வாழ்ந்து, பிறகு கணவனை விட்டுவிட்டு மனைவி இறந்துவிடுகிறார். மிக உருக்கமாகவும், அழகாகவும் இருந்ததால் அந்த 15 நிமிடங்கள்தான் எல்லாருக்கும் நினைவில் இருக்கிறது. அதன்பின் மொத்தப் படத்தையும் மறந்துவிட்டார்கள் போல.
பிளாஷ்பேக்கில் மனைவியுடன் தென்னமெரிக்காவுக்கு உள்ள நீர்வீழ்ச்சி—Paradise falls— சென்ற கணவன் கார்லிடம், மனைவி எலீ “இங்கே நம் வீடு இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்” எனச் சொல்லியிருப்பார். அதனால் கார்ல் வீட்டை முழுக்க ஹைட்ரஜன் பலூன்களால் நிரப்பி, வீட்டோடு சேர்ந்து தென்னமெரிக்கா நீர்வீழ்ச்சிக்கு பறக்கிறான்.
எதிர்பாராமல் ஒரு அனாதை சிறுவன் (ரஸ்ஸெல்) வருகிறான். ஒரு வித்தியாசமான பெரிய பறவை. ஒரு நாய். பாதி பலூன்கள் உடைந்து வீடு தரைக்கு அருகே வந்துவிடும். ஆனால் கார்ல் கயிற்றை கட்டி வீட்டை நீர்வீழ்ச்சியை நோக்கி இழுத்துக்கொண்டு நடக்கிறார்.
ஆனால் அவர் மறந்துவிட்டது— இப்போது அவரை நம்பி இருக்கும் உயிர்களை. சிறுவன் ரஸ்ஸல், பறவை, நாய் என அவருடன் உடன் பயணிக்கும் மனிதர்களின் தேவைகளை. மனைவியை இழந்த சோகத்தையும், கடந்த கால நினைவுகளையும் மறக்க அவர் வீடு, பொருட்கள், பழைய கனவுகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிடுகிறார். மனிதர்கள் நிகழ்காலத்தில் தங்களின் கடமைகளையும், தனக்காக காத்திருக்கும் மனிதர்களையும் புறந்தள்ளிவிட்டு, முன்பு வாழ்ந்த ஒரு வாழ்க்கைக்கும் அதில் இருந்த இறந்துபோன மனிதர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதையே கார்லின் துயரம் காட்டுகிறது.
தற்காலத்தில் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று
"எதுக்கப்பா இத்தனை குடிக்கறே?"
"என் வாழ்வின் பழைய சோகங்களை மறக்க.."
"ஆனால் இப்ப உனக்கு ஒரு மனைவி, குழந்தைகள் இருக்காங்க. அவர்களுக்கு நீ இப்ப கொடுக்கும் துயரத்துக்கு அவர்கள் எத்தனை குடிக்கணும்?
மீண்டும் கார்லுக்கு போவோம்.
நிகழ்காலத்தில் காத்திருக்கும் மனிதர்களையும், கடமைகளையும் புறக்கணித்து, கடந்த காலத்தின் நிழல்களைப் பிடித்து வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை கார்லின் துயரம் காட்டுகிறது.
படத்தின் இறுதியில், கார்ல் மிகப் பெரிய முடிவெடுக்கிறார்.
மனைவியுடன் வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு பொருளையும் எடுத்தெடுத்து வெளியே வீசத் தொடங்குகிறார்.
பொருட்கள் போகப் போக வீடு லேசாகி மேல் பறக்கத் தொடங்குகிறது.
அந்த மாற்றம் ஒரு சின்னம் —
பழைய நினைவுகளை, முடிந்து போன பந்தங்களை விட்டால் தான் வாழ்க்கை மீண்டும் பறக்கும்.
கடைசியில் வீட்டை அருவிக்கரையில் நிறுத்திவிட்டு, அதோடு வாழ்ந்த கனவை நிறைவேற்றிவிட்டு, கார்ல் தனது புதிய நண்பர்களுடன் அமெரிக்கா திரும்புகிறார்.
புதிய வாழ்க்கையை ஏற்கிறார்.
கடந்த காலம் அழகானது, ஆனால் அதிலேயே சிக்கிக்கொள்ளக்கூடாது
உங்கள் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை — புதிய உறவுகள், புதிய நட்புகள் காத்திருக்கின்றன.
Carl-ன் வாழ்க்கை 70க்கு பிறகு தான் ஆரம்பிக்கிறது. Russell, Dug, Kevin—அவர்களை சந்தித்த பிறகு வாழ்க்கையின் இரண்டாவது கட்டம் துவங்குகிறது.
கார்ல் வீட்டை விடாமல் இருக்க காரணம், அவரது துயரத்தை அவர் விடாமல் இருந்ததுதான். ஆனால் எலீ விரும்பியிருக்கபோவது அந்த அருவிக்கரையில் தனியாக கார்ல் தன் வாழ்வை வாழ்வது அல்ல
Ellie விரும்பியிருந்தது —
Carl மீண்டும் புன்னகைப்பதை.
அது தான் அவர் இறுதியில் செய்கிறார்.
~ நியாண்டர் செல்வன்