புது வீடு கட்டும்போது மின் இணைப்புகள் எப்படி இருக்கவேண்டும்....
மின்சாதன பணிகளில் ஈடுபட்டு இருக்கும் உடுமலை மின் பொறியாளர்கள் கார்த்திக்குமார் சண்முகம் மாப்பிள்ளைகளுடன் கலந்து உரையாடி போது கிடைத்த தகவல்கள் .
வீடு மின் ஒயர் பலன்கள் ..நான் இதுவரையில் எழுதிய பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து புரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தை வைத்து எழுதியவைகள் என்பதை தெரிவித்து அந்த வரிசையில் இந்த தொடர் பதிவையும் எழுதுகிறேன். இது ஒரு எலெக்ட்ரிகள் ஒயரிங் தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒயரிங் செய்வதற்கு 1/8", 2/18", 3/18" மற்றும் 1/20", 3/20" என்று பல வகையான ஒயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது,
1/18" இதில் 18 என்ற எண் ஆனது ஒயரின் உள்ளாக இருக்கக்கூடிய மின்சாரம் செல்லும் கம்பியின் பருமன் ஆகும். மேலும் கேஜ் என்பார்கள் (18 கேஜ் என்று சொல்வார்கள் ).
1 என்ற எண் ஆனது 18 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் ஒரு கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.
இதே போன்று தான் 2/18", 3/18", 1/20", 3/20" எல்லாமே ஆகும்.
3/20" என்பது மேலே சொன்னதைப் போன்றே 20 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் மூன்று கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக இருக்கிறது என்று அர்த்தம் ஆகும்.
நாம் மின்சாரம் கடத்தும் கம்பியை கையால் தொட்டால் உயிருக்கு ஆபத்து ஏர்படும் என்வே தான் ஒயர் என்ற இன்சுலேசன் அமைப்பிற்கு உள்ளாக கம்பி இருப்பது போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சரி அது என்ன இன்சுலேசன் என்ற கேள்வி எழுகிறதா இதோ பதில்:
நாம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இன்சுலேட்டர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மின் கடத்தா பொருள்கள் அனைத்தும் இன்சுலேட்டர்கள் என்று சொல்லலாம்.
உதாரணமாக:
கண்ணாடி, பிளாஸ்டிக்குகள், பேப்பர், பீங்கான், நன்றாக காய்ந்த மரக்கட்டை, ரப்பர் வகை மற்றும் காட்டன்கள். இவை அனைத்திலும் மின்சாரம் பாயாது. இதையே நாம் இன்சுலேசன் என்று சொல்கிறோம்.
சரி இனி விட்டதிலிருந்து தொடருவொம்,
இப்படி 1, 2, 3..... என்று கம்பிகள் இல்லாமல் அதற்கு பதிலாக அதிகமான பல சிறு சிறு கம்பிகள் உள்ள ஒயர்களும் இருக்கிறது. இதனை மல்டிபிளக்ஸ் ஒயர் என்று கூறவேண்டும்.
அதிக பருமன் உள்ள ஒயர்களை வாங்கும் போது sq.mm (ஸ்கொயர் எம் எம்) என்று சொல்லித் தான் வாங்க வேண்டும்.
உதாரணமாக:
16 sq.mm, 18 sq.mm, 20 sq.mm கொடுங்கள் சார் என்று கேட்டு வாங்க வேண்டும்.
மின்சாரத்தின் அளவைப் பொருத்தும், பயன்படுத்தும் மின் சாதனத்தின் மின்சார அளவைப் பொருத்து மட்டும் தான் நாம் ஒயரை வாங்க வேண்டும்.
கவணிக்க வேண்டியது:
கம்பியின் கேஜ் அதிகமாக இருந்தால் கம்பியின் பருமன் சிறியதாக இருக்கிறது என்று அர்த்தம். கம்பியின் கேஜ் குறைவாக இருந்தால் கம்பியின் பருமன் பெரியதாக இருக்கிறது என்று அர்த்தம்.
கம்பியின் பருமன் பெரியதாக இருந்தால் அதிக அளவு மின்சாரம் குறைந்த வேகத்தில் பாயும். கம்பியின் பருமன் சிறியதாக இருந்தால் குறைந்த அளவு மின்சாரம் அதிக வேகத்தில் பாயும்.
(தோட்டங்களில் பயன்படுத்தும் மோட்டார் பைப்புகளை நினைத்துப் பார்த்தல் தெளிவாகப் புரியும். பைப்பின் அளவு சிறியதாக இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் வேகமாக வரும். பைப்பின் அளவு பெரியதாக இருந்தால் தண்ணீர் அதிக அளவு தண்ணீர் குறைந்த வேகத்தில் வரும்.)
கம்பியின் பருமன் அதிகமாக இருந்தால் (கேஜ் எண் குறைவு) மின்தடை (resistance) குறைவாக இருக்கும் அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்லும்.
கம்பியின் பாருமன் குறைவாக இருந்தால் (கேஜ் எண் அதிகம்) மின்தடை (resistance) கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி என்றால் கரண்ட் ஆனது குறைவாகச் செல்லும்.
வீட்டில் மின் ஒயர்கள் பலன்களாவன, மின்சாரத்தை பாதுகாப்பாக கடத்துவது, உபகரணங்களை இயக்குவது, மின் அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்ட ஒயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் தீ விபத்துகளைத் தடுப்பது, மற்றும் தரமான மின் இணைப்பை உறுதி செய்வது. சரியான வண்ண குறியீட்டுடன் கூடிய ஒயர்களைப் பயன்படுத்துவது, பராமரிப்பை எளிதாக்கும், மற்றும் மின்சார இணைப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
வீட்டு மின் ஒயர்களின் முக்கிய பலன்கள்:
- மின் ஒயர்கள் மின்சாரத்தை மின் நிலையத்திலிருந்து வீடு வரை, மற்றும் வீட்டில் உள்ள வெவ்வேறு சாதனங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றன.
- ஃபேன், விளக்குகள், குளிர்சாதன பெட்டி போன்ற வீட்டின் மின் சாதனங்கள் அனைத்தும் ஒயர்கள் மூலம் மின்சாரம் பெற்று செயல்படுகின்றன.
- சரியான தடிமனும் தரமும் கொண்ட ஒயர்களைப் பயன்படுத்துவது, அதிக மின் அழுத்தத்தால் ஒயர்கள் சூடாகி தீவிபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
- தரமான மின் ஒயர்களைப் பயன்படுத்துவது, மின்சாரம் சீராக பாய்வதை உறுதிசெய்து, சாதனங்களின் செயல்திறனை அதிகரிக்கிறது.
- வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஒயர்கள், ஒரு மின்சுற்றின் எந்தப் பகுதிக்கு செல்கிறது என்பதைக் குறிக்கின்றன. இது பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளை எளிதாக்குகிறது.
- குறிப்பிட்ட மின்சாதனங்கள் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு ஒயர்களைத் தேர்வு செய்வது அவசியம்.
- அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு தடிமனான ஒயர்களையும், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு மெல்லிய ஒயர்களையும் பயன்படுத்த வேண்டும்.
- தரமான மற்றும் நம்பகமான பிராண்டுகளின் மின் ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும்.
- மின்சார குறியீடுகளின்படி, வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஒயர்கள், மின்சாரத்தை கடத்தும் மற்றும் தரை இணைப்புக்கானவை என்பதை புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.
தொடரும்..................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக