செவ்வாய், 3 ஜூன், 2025

ஜோதிடம் ....

 ஜோதிடம் ....

எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள விரும்புவது மனித இயல்பு.

சரி. உங்கள் எதிர் காலம் பற்றி அல்லது உங்கள் இறப்பு பற்றி தெரிந்து கொண்டால் என்ன ஆகும்.

நல்லதாக இருக்கும் பட்சத்தில் மனம் கும்மாளம் இடும்.

அவ்வாறின்றி உங்கள் வாழ்க்கை மோசமாக இருக்கும் இதில் கண்டம் இப்படி இந்த வயதில் இந்த மாதிரி இறப்பீர்கள் என்று தெரிந்தால் வாழ்க்கை முழுவதும் நரகம்.

இது இரண்டிலும் பாதிப்பு உண்டு. தனது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மமதை ஒருவன் மனதில் தோன்றினால் அவன் யாரையும் மதிக்க மாட்டான்.விநாசகாலே விபரீத புத்தி. இந்த எண்ணமே அவனது வாழ்க்கையை அழித்துவிடும்.

அதேபோல் தனது வாழ்க்கையை நன்றாக இருக்காது தன் மரணம் இப்படித்தான் இருக்கும் எனாறு மனிதனுக்கு தெரியவந்தால்…

எப்படியும் நமது வாழ்க்கை இப்படித்தான் நமது முடிவும் இப்படித்தான் இருக்கும் இனி நாம் இறப்பிற்குள தனது சந்ததிகள் நன்றாக இருக்க அவன் எத்தகைய செயலையும் செய்வார்கள்.

முற்காலத்தில் அரசர்கள் தங்களது இராஜ்யத்தை நடத்த மந்திரிகள் மற்றும் ஆலோசனை கூற ராஜகுரு இருப்பார்கள். இவர்கள் ஆருடம் மூலம் இது இப்படி இருக்கும் ‌இப்படி செய்யவேண்டும் என்று கூறுவது வழக்கம். அந்த இராஜகுருவின் கல்வி அறிவு என்ன? அவர் யாரிடம் இதைக் கற்றார் என்று யாரும் கேட்பதில்லை. அரசனே அவர்களை நம்பும் போது மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று காலம் காலமாய் யுகம் யுகமாய் இந்த ஆரூடம் , ஜாதகம் இவைகள் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நம்பிக்கை அவர்கள் இரத்தத்தில் ஊறியது. இந்த நம்பிக்கையை மீறி முடிவெடுக்க அஞ்சினர். ஜாதகம் பார்க்காமல் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடத்தி பால் அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படின் தான் ஜாதகம் பார்க்காமல் வந்ததன் காரணமாக இது நிகழ்ந்தது என்று நம்பத்தொடங்கி அதை தன் சந்ததிகளும் அறிய செய்தனர்.

ஆதிகாலத்தில் சூரியன், சந்திரன் இவைகளைப் பற்றிய புரிதல் இல்லை. ஏன் அமாவாசை மற்றும் பௌர்ணமி நிகழ்கிறது கிரணங்கள் தோன்றும் போது தீடீரென சூரியன் மறைவது அல்லது சந்திரன் மறைவது அவர்கள் மனதில் இனம் புரியாத பயத்தை தோற்றுவித்து இருக்கலாம். அதனால் அதற்கு அஞ்சி வாழ்ந்தனர். ஏதோ நடக்கிறது அதன் ‌காரணம் என்ன வாக் இருக்கும் என்று புரியாமல் வாழ்ந்து வந்தனர்

மெல்ல மெல்ல வளர்ந்த கல்வி அறிவு அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை ஊக்குவித்து பூமி சந்திரன் மற்றும் இதர கோள்கள் அவற்றின் இயக்கம் ஆகியவற்றை கண்டறிந்து இதனா காரணமாக இது நிகழ்ந்தது என்று கூறி மக்கள் மனதில் இருந்த அச்சத்தை போக்கினர்.....

நன்றி ..

அமுதன் .த 


தொடர்பு எண் : 9626585316....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக