திங்கள், 16 டிசம்பர், 2024

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை 

மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்ட்டர் Madras Regiment Centr (MRC) , வெலிங்டன், குன்னூர், உதகமண்டலம் 

 




குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் , நம் நாட்டு ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா சிலை உட்பட ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



மேலும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு  2012 செப்., 26ல் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் ராணுவ மருத்துவமனை முன், திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ பாரதி கலைக்கூடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரால்  ஒற்றைக்கல் சிலை வடிக்கப்பட்டு. 7.5 லட்சம் செலவில் சிலை வைக்கப்பட்டது.  


 ''ராணுவத்திற்கு புண்ணிய பூமியாக உள்ள வெலிங்டன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாக உள்ளது" 


இங்கு வருடம் தோறும் வீரபாண்டிய கட்டபொம்மனின் ,  பிறந்த நாளையொட்டி அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


 திறப்புவிழா அன்று வெளிவந்த செய்தி குறிப்பு 


ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆறரை அடி சிலை வெலிங்டோனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்ஆர்சி) வளாகத்தில் இன்று (2012 செப்-26) திறக்கப்பட்டது. கட்டபொம்மன் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் தலைவராவார், மேலும் இப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்களில் முதன்மையானவர்.  இந்திய சுதந்திரப் போருக்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் அவர் ஆங்கிலேயர்களுடன் போரை நடத்தினார். 1799 இல் கட்டபொம்மன் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது கோட்டை அழிக்கப்பட்டது மற்றும் அவரது செல்வம் பிரிட்டிஷ் இராணுவத்தால் சூறையாடப்பட்டது. சிலையை திறந்து வைத்து பேசிய எம்ஆர்சி கமாண்டன்ட் ஜே எஸ் யாதவ், இது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய ஒட்டுமொத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் செலுத்தும் மரியாதை என்று கூறினார்.



இது அவரின் வீரத்தை பறைசாற்றும் விதத்தில் உள்ளது.



ஆகவே நாம் நம் சமுதாயத்தினர்  அனைவரும் அவரது மாண்பை பெருமை படுதும் விதத்தில் நடந்து கொள்வோமாக ,களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருப்போம் .



வரும் சனவரி 3 2025 வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாள் விழாவினை மிக சிறப்புடன் கொண்டாட திட்டமிடும் அனைத்து அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த  வாழ்த்துகள் 


 வெற்றிவேல்!!! 


 வீரவேல்!!! 


 வாழ்க கட்டபொம்மன் புகழ்!!! 


 வளர்க கம்பளத்தார் எழுச்சி!!! 



குறிப்பு:


இணைக்கப்பட்டுள்ள படம் MRC வளாகத்தில் எடுக்கப்பட்டது (15.12.24 அன்று )  உடன் MRC ன் முத்திரை / கொடி அமைப்பு / இராணுவ முத்திரை இடம்பெற்றிருக்கும்.


-கவின் சின்னுசாமி (Mr.Ck)

வியாழன், 12 டிசம்பர், 2024

அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்..!

 




அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்..!


வாழ்க்கைப் பயணத்தில் எது  நகர்கின்றதோ  இல்லையோ கட்டாயம் நேரம் நகர்கின்றது.


இந்த போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ப்பவர்கள் தாக்குப்பிடித்து நினைத்ததை சாதிக்க முயல்கிறார்கள். பலர் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள். அதற்கு தேவையான சில அடிப்படை விவரங்கள் குறித்து 🤝📗✒️🎙️📡


கனவு கண்டால் மட்டும் போதாது. கண்ட, காணும் கனவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்றுசிந்திக்க வேண்டியது முதல் படி.


அவ்வாறு சிந்தித்தால் மட்டும் போதாது. நம்மால் முடிய செய்ய  வேண்டியவை எவை என்பதை பட்டியல் போடவேண்டும்.


_அடுத்து போட்ட பட்டியலில் செயல்படுத்த வேண்டிய ஆதரவு எங்கிருந்து கிடைக்கும் என்ற விவரங்கள் குறித்து ஆராயந்து முடிவு செய்யவேண்டும்.


அவற்றைப்பெற தேவையான பணம், பொருள், ஆள் பலம், பெற வேண்டிய ஒப்புதல்கள் போன்ற அத்தியாவசிய  விவரங்கள் தயார் செய்யவேண்டும்.


அவற்றை அடைய  தேவையான நடவடிகைகள் காலம்  தாழ்த்தாமல், காலத்தை தள்ளிப் போடாமல் (without any delay / without postponing ) எடுப்பது முக்கியம்.


ஒருவேளை, அடுத்த கட்டத்திற்கு  நகர்வதற்கு தேவையான அறிவு, திறமை போதிய அளவு இல்லாவிட்டால் (adequate knowledge, skill) அதை எப்படி சரி கட்டுவது என்று யோசித்து முடிவு எடுத்துச் செயல் படுத்துபவர் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான தகுதியை பெறுகிறார்.


வெகுவேகமாக  செல்லும் தற்பொழுதிய சூழ்நிலையில் தோதானவர்களை  தேர்ந்து எடுத்து வேலையை பிரித்துக் கொடுத்து பெற்று முன்னேறுபவர்கள்  அடுத்த கட்டத்தில்.பயணம் செய்து  பலன்  தகுதி  பெற்றவர்கள் ஆகின்றனர். 


கால மாற்றத்திற்கு இடம் அளித்து அதன் உடன்  பயணிப்பது புத்திசாலிதனம் மட்டும் அல்ல, மாறி வரும் இன்றைய சூழ்நிலைக்கு அத்தியாவசியமும்  கூட.


அடுத்த கட்டத்திற்கு நகர துடிப்பவர்களுக்கு இது பற்றி நன்கு தெரியும். மேலும் அவர்கள் செயல்பாடுகள் அவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும்.


யோசனைகள் செய்வது மட்டும் அல்லாமல், பிறர் யோசனைகளை வரவேற்கவும் வேண்டும்.


யோசனை கூற முன் வருபவர்களை ஊக்குவித்து பாராட்டி பலன் பெற முயற்சி செய்யவேண்டும். 


பிறரின் யோசனையை உபயோகித்தாலோ, பின்பற்றினாலோ அத்தகையயை யோசனை அளித்தவருக்கு  உரிய மரியாதை, பாராட்டுத்தலுடன், பொறுத்தமான சன்மானம் அளிக்க  ஒரு பொழுதும் மறக்க கூடாது.


தனிப்பட்ட முயற்சியில் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது இயலாது என்பதை உணர்ந்து செயல்படுவது சால சிறந்தது.


முயற்சியுடன், கூட்டு முயற்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல பெரிதும் உதவும்  என்பது யதார்த்த வாழ்க்கை பகுதியின் உண்மை அம்சம் ஆகும்.


_*அடுத்த கட்டத்திற்கு செல்ல முற்படுவர்கள் செயல் பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது  அத்தியாவசியம் என்பதை.உணர்ந்து செயலில் பின்பற்ற வேண்டும்.📗✒️🎙️📡🤝🥰🌈🏠🏠🏠🏠⛱️⛱️⏳⏳🌳🌴🌱🎧

 ஜில்லென்ற மணம் (மனம்) 


கோவை  செல்ல உடுமலை  பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)

பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து

"தம்பி பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"

சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.

ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"

நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'

இல்ல நான் உக்காரணும்"

" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.

கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.

என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!

முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன். 

அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள்.

தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.

பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.

திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து

"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.

நான் எதுக்கு னு கேட்டேன்.

"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"

சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.

.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்

" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு

நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.

பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.

ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.

நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.

அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் ஜில்லென்ற மணம்தான் வீசியது......

புதன், 4 டிசம்பர், 2024

மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் துங்காவி பாளையக்காரர்


 மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் துங்காவி பாளையக்காரர்

🥰🥰📗✒️✒️
இந்திய விடுதலைப்போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்த பாளையக்காரர்; தளி எத்தலப்பர்.
இவர் குறித்தான விரிவான வரலாற்று ஆய்வு நூலை நமது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 2018 மே 19 மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களின் மண்ணின் மைந்தர் கால்நடைதுறை அமைச்சரால் வெளியிடப்பெற்றது.
இதைக் காலம் தாழ்ந்திக் கண்ணுற்ற 22 ஆவது தலைமுறையில் வாழும் துங்காவி பாளையக்காரரான ராஜராஜராஜேந்திர சீரஞ்சீவ சீலம நாயக்கர் (எ) நாகேந்திரன் என்பவர் பல்வேறு தேடல்களுக்குப்பிறகு வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலை கண்டிப்பாக வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதன் பேரில் நூல் இருப்பு இல்லாமையால் வேறு நபரிடமிருந்து பெற்று
இவருக்குக் கொடுக்கப்பட்டது.
இவரின் வரலாற்றுப் பின்னணியோடு தளி பாளையப்பட்டு வரலாறும் இணைந்திருப்பதும்,
தளி பாளையப்பட்டின் பெண்வாரிசாக துங்காவி பாளையம் இருந்ததையும், தற்போதும் அதற்குண்டான ஆவணங்களை மிகவும் பத்திரப்படுத்தி உயிர்ப்போடு வைத்துள்ளார்.
இவரின் தாத்தா பாளையப்பட்டு இருபதாவது தலைமுறை சிராஸ்தபதி யுவத்குமரன் எஜமான்ஸ்ரீ பெரியசாமி சீலமநாயக்கர் என்பதும்,
21 ஆவது தலைமுறையான இவரது தந்தையார்
சிராஸ்தபதி யுவக்குமரன் எஜமான் ஸ்ரீ மாணிக்கம் சீலம நாயக்கர் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கி உரைக்கிறார்.
மேலும், துங்காவி தனது வீட்டை (அரண்மனை) என்றே கூறி வருகிறார்.
தனது அரண்மனையில் தனது மூதாதையர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகளான வாள்களையும், வேல்களையும், சிறிய மற்றும் பெரிய அளவிலான போர்க்கருவிகளையும் இன்னமும் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகிறார்.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் எத்தனையோ பாளையப்பட்டுகள் இருந்ததாக வரலாறுகள் இருந்தாலும் இந்த துங்காவி பாளையப்பட்டில் மட்டுமேஆங்கிலேயருக்கு எதிரான போரில் இந்திய விடுதலைப்போரில் போர்க்கருவிகளை நாம் காண முடிந்தது.
இந்திய விடுதலைப்போரில் தமது பாளையப்பட்டு எதிர்த்து நின்று வீரச்சமர் புரிந்ததை பெருமையோடு பூரிப்போடு கூறுகிறார்.
சீலமநாயக்கன் என்பது தமது பாளையப்பட்டின் வம்சாவழிப் பெயர் என்றும் கூறுகிறார்.
மேலும், ஆங்கிலேயர்கள் தமது பாளையத்தில் வரி வசூலுக்கு வந்த போது பெரும் பஞ்சம் நிலவியது என்பதால் அந்த பாளையக்காரரை கைது செய்து ஆங்கிலேயர் கொண்டு செல்ல முயற்சித்த போது, அப்போதிருந்த பொதுமக்கள் தமது வீட்டில் இருந்த நெல்வளங்களையும்,
தாம் அணிகலன்களாக அணிந்திருந்த நகைகளையும் கழட்டிக்கொடுத்து வரிகளைப் பெற்றுக்கொண்டு
தமது துங்காவி பாளையக்காரரை கைது செய்வதிலிருந்து காப்பாற்றினர். அப்போது பாளையப்பட்டில் இருந்த மணியம் என்கிற கணக்குப்பிள்ளையின் ஒளிப்படத்தையும் வைத்துள்ளார்.
இதனால். துங்காவி பாளையக்காரர் அது முதல் பொதுமக்கள் மீது எந்தவிதமான வரிகள் விதிக்காமலும், நோய் நொடிகள் இல்லாமலும். பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து ஆட்சி செய்து வந்ததாகக்கூறுகிறார்
21 ஆவது தலைமுறையான திரு. நாகேந்திரன்.
இவரின் இந்த உயிர்ப்பான பாளையப்பட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தவும், அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்து கொடுக்கவும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த 22 ஆவது தலைமுறை
துங்காவி பெரிய ஜமீன் ராஜராஜராஜேந்திர சீர!!ஞ்சீவ சீலம நாயக்கர் (எ) நாகேந்திரன் அவரின் முயற்சி வெற்றி பெற உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கு நாட்டில் பாளையக்காரர்கள் எனும் ஆவணத்தில் மைவாடி , வேடபட்டி, சோத்தம்பட்டி, தொண்டாமுத்தூர் என அடுத்து வரும் கல்வியாண்டில் உயிர்ப்புடன் இருக்கும் பாளையக்காரர் எனுந் தலைப்பில் ஆவணப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர் அய்யா திரு. வி.கே. செல்வராஜ் அவர்களிடம் தமது பாளையப்பட்டுகளின் பாரம்பரியத்தை ஆவணங்களுடன் காட்டினார்.
மரபுகளை சமூகச் சீர்திருத்தத்தோடு கட்டுடைக்கும் பாளையக்காரர் நாகேந்திரன் அவர்களை
வாழ்த்துவோம் பாராட்டுவோம்.🥰📗✒️🍬🍫

திங்கள், 2 டிசம்பர், 2024

மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே

மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே என்கிறார்-புரட்சியாளர் சேகுவேரா 


நல்ல நூல்களும் சிறந்த ஆசிரியர்களும்‌



நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் -நேரு


முத்து பவளம் சிற்பி வகையான மீன்கள் போன்றவற்றை தன்னகத்தே தாங்கி நிற்கும் சமுத்திரம் போன்றவை புத்தகங்களாகும் என்கிறார் காந்தியடிகள்


கூற்றுக்கிணங்க..


அருமைச் சகோதரர் உடுமலைப்பேட்டை சிவக்குமார் அண்ணன்

அவர்கள்

1.கரைவழி நாடும் நாகரீகமும்(வேளாண்மை)

2.கரைவழி நாடும் நாகரீகமும் (வரலாறு)

3.தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ஆகிய புத்தகங்களை எனக்கு கொடுத்திருந்தார்..


படித்ததில் -முதலில் புரிந்து கொண்டது திறந்த வெளியில் காற்றில் கலந்த வரலாறுகளை புத்தகங்களில் ஏற்றி ஆவணங்களாக வெளியிடுவது என்பது எவ்வளவு உழைப்பு

எவ்வளவு களப்பணி என்பதை ஆழமாய் அறிய நேர்ந்தேன்..

மேலும் புத்தக வெளியீட்டு விழா என்று ஏதாவது செய்தி வந்தால் அதை சாதாரணமாக கடந்து போனதுண்டு ஆனால் இந்த புத்தகங்களையெல்லாம் படிக்கின்ற போது 

அந்த வெளியீட்டு விழாவிற்கு வருமுன் அந்த புத்தகத்திற்கான உழைப்பை எண்ணி வியக்கின்றேன்.


மேலும் கரைவழி நாடும் நாகரீகமும் என்ற நூலில் குறிப்பிட்ட அந்த கோவில்களுக்கு சென்றிருக்கின்றேன் அதைப்பற்றிய வரலாறுகளை ஆவணமாய் படிக்கின்ற போது கடவுகளும் கோயில்களும் வரலாறுகளை தன்னகத்தே எவ்வளவு அழகாக தாங்கி இருக்கின்றது என்பதை அறிந்து வியந்து போனேன்..

மேலும் ..

வேளாண்மை

நெல் விவசாயம்,

நெற்கூடு,

போக்கியம் கந்தாயம்,

விவசாய தெய்வங்கள் 

விவசாய விழாக்கள்

கல்வெட்டு விவரங்கள்

கோயில் தல வரலாறுகளையெல்லாம் படிக்கின்ற போது அந்த நிகழ்வுகளுக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்ற உணர்வு ஏற்படுகின்றன.


தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூல் அந்த வரலாற்று காலத்திற்கே அழைத்துச்செல்லும் வண்ணம் எழுத்து வடிவமைப்பு அழகிய சொல்லாடல்களும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு 


ஒவ்வொரு புத்தகங்களும் 


ஒவ்வொரு பக்கத்தை திரும்பும் போதும் 


ஒரு ஆகச் சிறந்த வரலாறுகள் அமைந்திருப்பது உண்மையில் 

அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய

நூல்களாகும்..



மேலும் இதற்காக உழைப்பை நல்கிய 


உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ பொறுப்பாளர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்களே..


அருமைச்

சகோதரர்

சிவக்குமார் அவரின் வாயிலாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன்

எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த படைப்புகள் வர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..


என....

அனிதா ஜெயராமன்.📗✒️✒️✒️🎙️🎙️📡📡📡🌱🌳🌴🏘️🏡🏠🎧✈️