வியாழன், 31 அக்டோபர், 2024

800 வருடங்கள் பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்!

800 வருடங்கள் பழமையான மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்! 


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி எனும் ஊரில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்.பெரியகுளம் மஞ்சள் ஆறும் ,,, 


மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி அந்தப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டுவந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர் . இந்த ஜமீனில்  இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக  தினமும் அனுப்பி வைக்கப்படும் அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.


உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து  ஜமீன்தாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஜமீந்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் ஜமீன்தார்  சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அசரீரியில்  தான் இந்தப் பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறள் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்தப் பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை  வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் ,


அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும்  இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இது வரை யாரும் சென்றதில்லை எனவும் கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.


இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக ஸ்தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசிதிபெற்று விளங்குகிறது.


மஞ்சளாறு ஆறும் அணை வரலாறு .


 காமாட்சியம்மன் கோவிலைப் பற்றிச் சொல்லும்போது மஞ்சளாற்றைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். கோடை மலையில் உற்பத்தியாகும் தலையாற்றிலிருந்து பிரிந்து  கீழே வருகின்ற ஆறுதான் மஞ்சளாறு.

கொடைக்கானல் செல்லும்போது போகிற வழியில் டம்டம் பாறைக்கருகில் இறங்கி இயற்கை அழகை ரசித்து மலைப்புறத்தில் பார்த்தீர்கள் என்றால் உருக்கிய வெள்ளியைக் கொட்டுவது போல் தூரத்தில் ஒரு பிரமாண்டமான நீர்வீழ்ச்சி தெரியும். அதன் பெயர்தான் தலையாற்று அருவி. அதனைப்பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்த டம்டம் பாறையென்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.

மதுரையின் கலெக்டர் மற்றும் வெள்ளைக்கார உயர் அதிகாரிகள் தங்கள் கோடைக்காலத்தை தாங்க முடியாமல் கண்டுபிடித்த கோடை வாசஸ்தலம்தான் கொடைக்கானல். கோடைக்கானல் தான் கொடைக்கானல் என்றும் ஆங்கிலத்தில் கொடைக்கனால்  என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல முடியாது .ஏற்கனவே மலைவாழ் மக்களும் நம் மலையைச் சார்ந்து வாழும் தமிழ் மக்களும் சிறிய அளவாக இருந்தார்கள். வெள்ளைக்காரன் இந்த இடத்தைப் பார்த்து அசந்துபோய் இங்கே விடுதிகள் பங்களாக்களை உருவாக்கி கோடைக்காலத்தில் இங்கு. வந்து தங்க ஆரம்பித்தார்கள் .அதன்பின் இதன் எதிர்காலத்தை உணர்ந்து கொண்ட ஜெயராஜ் நாடார் அவர்கள் இங்கு பல இடங்களை வாங்கிப்போட்டு பல பெரும் தங்குமிடங்களை கட்டினார். இன்னும் கொடைக்கானலில் ஜெயராஜ் நாடாரும் அவருடைய குடும்பத்தாரும் அமைத்த பல விடுதிகளைப் பார்க்கலாம். இதன்மூலம் நல்ல பொருளீட்டினார்கள்.

இந்தக் குடும்பம்தான் SGJ  என்ற பஸ் நிறுவனங்கள் மூலம்  கொடைக்கானலுக்கு பல பேருந்துகளை ஆரம்ப காலத்தில் இயக்க ஆரம்பித்து இன்றுவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் பணிமனைகள் இருக்கின்றன. இவை பெரியகுளம், மதுரை, தேனீ, திண்டுக்கல் என்று பல பகுதிகளை இணைக்கின்றன. பெரியகுளத்தில் இருந்த ஜெயா தியேட்டர், மதுரையில் இருந்த ஜெயராஜ் தியேட்டர், பெரியகுளத்தில் இயங்கும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர்  கல்லூரி போன்ற பல நிறுவனங்கள் இவர்களுக்குச் சொந்தமானது.எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ சென்றுவிட்டேன்.

ஆம் அப்படி அங்கு தங்கியிருந்த வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.


அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.

கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும். இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள். முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.

அணையின் அருகில் கும்பலாகத் தெரியும் வீடுகள் தான் தேவதானப்பட்டி.
இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும்  கொண்டுள்ளது .

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.

மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.

ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.

அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.

வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும்.  வாய்க்காலின் குறுக்கே உள்ள சாலையைக்கடக்க வாய்க்கால் பாதாள ஸ்லூஸ் மூலமாக அடுத்த பகுதிக்கு   செல்லும். இதில் நீர் சுழன்று செல்லும்.  தண்ணீர் இங்கே அதி வேகத்துடன் சுழன்று செல்வதால் அதில் மாட்டுபவர்களை இழுத்துச்சென்று உள்ளே போய்ச் செருகிவிடும்.

டாம்டாம் பாறை வழியே செல்லும் டிரைவர்கள் அங்கு நிறுத்தி பழம், பூ வைத்து கும்பிட்டுச் செல்வார்கள் ஏனென்றால் அதற்கு ஒரு திகில் கதை இருக்கின்றது.

தீபாவளி நாளில் ஆன்மீக பயணமாக சென்று வந்தது சிறப்பு ...



என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 


ஞாயிறு, 27 அக்டோபர், 2024




 இளங்கலை பொறியியல் பட்டதாரி க்கு வாழ்த்துக்கள் ...

உடுமலைப்பேட்டை உடுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், சாந்தாமணி தம்பதியின் மகன் சண்முகப்பிரபு. சமீபத்தில், கணினி அறிவியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார் (BE CSE 🎓 ). இது தனிப்பட்ட மைல்கல் மட்டுமின்றி, மாப்பிள்ளையின் பொறியாளர் பட்டம்  ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவும் நிறைவேறியது. சண்முகப்பிரபு மாப்பிளை கம்பள சமுதாயத்தில்  அவரின் பரம்பரையில்  முதல் பட்டதாரி 🎓நமது கம்பள சமுதாயத்தில் அதுவும் ஆண்கள் கல்வியில் பட்டம் பெறுவது ஒரு மைல் கல் ..ஏன் என்றால் கல்வியில் பெண்கள் தான் இளநிலை ,முது நிலை பட்டதாரிகள் அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறார்கள் ..இன்று இந்த மாப்பிள்ளைகள் போன்று கல்வியிலும் .வேலைவாய்ப்பிலும் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது  .மாப்பிளையுடன் கலந்துரையாடியபோது மாப்பிள்ளையின் முக்கிய நோக்கம் நம் கம்பள சமுதாயத்தை அடுத்த முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது என்று கூறியுள்ளார் .இது போன்று நமது சமுதாயத்தில் ஆண் குழந்தை செல்வங்கள் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும் அதிக அளவில் வரவேண்டும் என்னுடைய ஆசை ...

என் அன்பு வாழ்த்துக்களும் நன்றி ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் .

உடுமலைப்பேட்டை 




உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பெருமையுடன் வழங்கும்


தளி எத்தலப்ப மன்னர்


ஆவணப்படம்


 உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர்

தலைவர் திரு. தி.குமாரராஜா, துணைத்தலைவர் வி.கே.செல்வராஜ், சி.ராஜசுந்தரம்

செயலாளர் வி.கே.சிவகுமார், இணைச்செயலாளர் ராபின், அருள்கணேசன், மதிப்புறு தலைவர்கள்

முனைவர் கு.மூர்த்தீஸ்வரி, முனைவர் மா.மதியழகன், திருமதி.வை.விஜயலட்சுமி, முனைவர் ஹேனா ஷெர்லி, 

எழுத்து, எண்ணம் மற்றும் கருத்துருவாக்கம்  அருட்செல்வன்.

நன்றி . 

பாவலர் பழனிசாமி,  திருமலையம்மாள் ஜல்லிபட்டி

திரு.சுபாஸ் கிருஷ்ணசாமி, சித்திரச்சோலை, உரல்பட்டி.

வியாழன், 24 அக்டோபர், 2024

கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல் ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ..

கோவை சிவக்குமார் 🌈🥰🙏 அவர்களின் பதிவும் ..அவர்களை தொடர்ந்து .K N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவும் ..அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர்-நாமக்கல்  ) அவர்களின் பதிவும் ...திருமண பதிவுகள் சிந்திக்க வேண்டிய நம் சமுதாய சொந்தங்கள் ....


 அன்பார்ந்த நமது சொந்தங்களுக்கு வணக்கம் அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள் நான் பார்த்த வகையில் எல்லா ஊர்களிலும் 25க்கு மேல் முப்பது வயதுக்கு மேல் மணப்பெண்கள் நிறைய உள்ளனர் இன்னும் திருமணம் ஆகாமல் காரணம் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை எதார்த்தமான நிலையில் எல்லோரும் ஐடி பணியில் ஒரு லட்சம் ஒன்றரை சுமார் 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் இருந்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றனர் அவர்கள் எதிர்பார்ப்பை நான் குறை சொல்லவில்லை ஐடி வேலையில் நமது மாணவர்களுக்கு தற்போது தான் படித்து வருகின்றனர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஐடி பணியில் உள்ளனர் மற்ற இளைஞர்கள் எல்லாம் நல்ல வேலையில் மாற்றுப் பணிகள் உள்ளனர் அவர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை அதனால் நிறைய இளைஞர்கள் ஊருக்கு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 30 வயது 35 வயது என்று நிறைய பேர் உள்ளனர் திருமணமாகாமல் இதே போல் 80களில் 90களில் நினைத்திருந்தால் ஒரு தலைமுறையை இருக்காது அதனால் மணப்பெண்களின் பெற்றோர்கள் நல்ல மாப்பிள்ளை நல்ல வேலை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் பெண் தர வேண்டும் மேலும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறார்கள் சொந்த வீடு தோட்டம் என்று சில பேர் கூறுகிறார்கள் விவசாயம் செய்யும் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணே கிடையாது என்கிறார்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் டிரைவர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் எங்கே போவது இப்படியே விட்டால் கண்டிப்பாக நிறைய பேர் திருமணம் ஆகாமல் பெண்களும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் எதார்த்தமான நிலையை உணர்ந்து எல்லோரும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் யாரையும் குற்றம் சொல்லவில்லை இப்படியே போனால் நமது கம்பனத்தை இனமான இளைஞர்கள் நிறைய பேர் திருமணமாக முன் தன் வாழ்க்கை இழந்து விடுவார்கள் பெண்களும் நிறைய முதிர் கனிகளாக உள்ளனர் எதிர்பார்ப்புகளோடு திருமணமாகாமல் உள்ளார் அவர்களும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்📗✒️✒️🎙️📡📡கோவை சிவக்குமார் 🌈🥰🙏

K .N .நாகராஜ் கரூர் அவர்களின் பதிவு ....

ஜாதகத்தை தூக்கிக்கொண்டு திரியும்வரை இந்த மாதிரி பிரச்சனைகள் தலை விரித்தாடத்தான் செய்யும்...


எனக்கு கல்யாண பொருத்தம் பார்க்கலே.

2 பொம்பளபுள்ளே 1 பையன்னு ஜாம் ஜாம் னு வாழத்தான் செய்யறேன்...


பெரிய பொண்ணு B.sc Gold medal, MBA Anna University Top 50 Rank Holder...

Poly Technic முடிச்ச பையனுக்குதா கொடுத்தேன் 

லட்டு மாதிரி 2 ஆம்பள பசங்க இப்போ...

S.R Fibers , S.R.smal scale industries nu    தேங்காய் நார் மட்டை கம்பெனி, கயிறு திரிக்கிற மெஷின்கள் னு வாழ்க்கையை அழகழகா நடத்துறாங்க... 

படிப்பென்னங்க படிப்பு...

 Understanding தா முக்கியம்.

நாங்களும் சம்மந்தகாரங்களும் ஒன்னா உட்கார்ந்து ஜாதகம் பார்த்தது கிடையாது. இரண்டு சம்மந்திகளுக்கும் பிடிச்சிபோச்சு கல்யாணம் முடிச்சுட்டோம்...

மனங்கொண்டதே மாங்கல்யம்...


இரண்டாவது பொண்ணு B.E (ECE)  first class 8.9  percentage

மாப்பிள்ளை வீட்டுக்காரர் திருப்திக்கு ஜாதகம் கேட்டாங்க னு 23 வயசுல குறிப்பை வெச்சு ஜாதகம் எழுதி வாங்கி தந்தேன் அவ்வளவுதான்

அவங்களும் சரின்னாங்க 

17.09.23 ல கல்யாணம் ஜாம் ஜாம் னு முடிச்சு 28.09.24 மஹாலட்சுமியே பேத்தியா பொறந்திருக்கா

2வது மாப்ளே B.Sc (Jio fiber le Dindigul and Theni Districtக்கு fiber Engineering incharge MNC Co.)  


நான் சொல்ல வர்றது என்னன்னா ஜாதகம் தேவையில்லை... சாதகமான முடிவுகளை எடுக்கற பெற்றோரா இருந்து பிள்ளைகளுக்கு காலாகாலத்துலே கல்யாணம் செஞ்சு வைங்க... இப்போ இருக்கிற கால கட்டத்துக்கு டெஸ்ட் டூப் பேபி னு கையை பிசைய வெச்சுடாதீங்க 

அப்புறம் முதலுக்கே மோசமாகி அடுத்த ஜாதிலே ஓடிப்போயிடுச்சு னு நடைபிணமா வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும். 

அப்புறம் நாமும் தலைநிமிர்ந்து நடக்க முடியாம, நம்ம பிள்ளைகளையும் அடுத்த ஜாதிலே போயிடுச்சே னு கௌரவத்தை வாரி கொடுத்திட்டு... அவங்களப்பார்த்தும் நாம சந்தோசப்பட முடியாம, வம்ச விருத்தி இல்லாம நாசமா போறதுக்கு பதிலா.... 10, 12வது பையன் படிச்சிருந்தா போதும்... நம்ம பிள்ளை அவ குடும்பத்தை வாழ வெச்சுடுவா னு நம்பிக்கைகளை அனைத்து பெற்றோரும் பெற்றிடுவதே ஆகச் சிறந்த தீர்வுகளாக இருக்குமென என்னளவுக்கு நம்புகிறேன்


இந்த 54 வயசுலயும் தட்டு தடுமாறி தமிழில் டைப் பன்றேன்னா எனது சமுதாயம் நான் பெற்ற நம்பிக்கைகளை அவர்களும் பெற்று தனது சந்ததியினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க...

 மேலும் மேலும் கால தாமதப்படுத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்


பொம்பள பிள்ளைகளை எவ்வளவு படிக்க வைக்க பிரயத்தனப்பட்டீர்களோ அதே அளவு கல்யாணம் செய்து கொடுப்பதில் மூன்று மடங்கு மும்முரம் காட்டுங்கள்...


யார் குடும்பத்தையோ தழைக்க செய்வதற்குதான்  உங்களுக்கு கடவுள் பெண் பிள்ளைகளை பரிசளித்தார் என்பதை மனதில் நிறுத்தி...

எது எதுக்கு செல்லம் கொடுக்கனுமோ அது அதுக்கு கொடுங்கள்...

எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டீங்கனா  நீங்களே அந்த பிள்ளையின் இளமை வாழ்க்கையை சீர் செய்ய தவறிவிட்டீர் என்பதை எதிர்காலம் உங்களுக்கு எடுத்துரைக்கும் என சங்கடத்தோடு பதிவை விதைக்கிறேன்...


முளைப்பதும்  அழுகுவதும் அழுவதும் அவரவர் வினைப்பயனே...


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


" மனம் கொண்டதே மாங்கல்யம் " 


நித்தியத்துவம் பெற்ற வார்த்தைகள் .. 


தனக்கு நிகராக அல்லது தன்னை விட ஒருபடி மேலே வரன்களை எதிர்பார்க்கும் சூழலே இங்கு 30 வயதை கடந்தும் பலர் மணமாகமல் இருப்பதற்கு முதற் காரணம் 

பாலின விகிதம் நேரேதிராக குறைந்து வரும் காலத்தில் இனி திருமணம் என்பதே பலரது வாழ்வில் எட்டாக்கனி என்பதுதான் எதார்த்தம்...

நம் சமுதாயதிற்கு ஜாதகம் தேவையில்லை ஏனெனில்  நாம் செய்வது காந்தர்வ மனம், தாலி எடுத்து கொடுப்பது மட்டுமே பழங்கால வழக்கம், ஆகையால் சமுதாய பெண்கள் எப்படி விக்ரம் காலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே காந்தர்வமனம் போல் நமது சமுதாய திருமணத்திற்கு எதுவும் அவசியம் இல்லை எக்காலத்திலும், ஆனால் ஜாதகமும்  பொய்யல்ல ஜாதககாரர் சொல்லும் கணிப்பு பொய்யான இருக்கலாம் (90 நாள் ஜாதகம் கற்று நானும் ஜாதககாரர் என்றால் எப்படி விளங்கும்) ஜாதகம் முழுக்க முழுக்க அறிவியல் (கதிர் வீச்சு) (blackhole, waves, eclipse, luner eclipse etc...)என பல சம்பந்தப்பட்ட விசியம் , எனவே ஜாதகம் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்தால் போதுமானது...

திண்டுக்கல் கரூர் திருச்சி மாவட்ட கம்பளத்தார்களிடையே பெரும்பாலும் ஜாதகம் இல்லாமலே அங்கங்கே சொந்தத்திலயே மணம் முடித்து கொள்கிறார்கள்...

5,6வருடங்களில் சிறு மாற்றம் நிகழ்ந்து வருகிறது...குறிப்பாக 

பால்ய விவாகங்கள் குறைந்து விட்டன என்றே சொல்லலாம் 


ஆக இத்தனை வருட கால திருமணங்கள் எதுவுமே ஜாதகத்தை பார்த்து நடைபெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்தானே...


அதனால்தான் ஜாதகத்தை காரணம்காட்டி திருமணங்களை தள்ளி வைக்காதீர்கள் என்பதை அனுபவ எதார்த்தங்களோடு உடன்படுகிறேன் ...


ராசி பொருத்தம் பார்க்கப்பட்டு செய்து கொண்ட திருமணங்கள் எத்தனையோ முன்னுக்குப்பின் முரணாக முட்டிக்கொண்டு முழிபிதுங்கி நிற்பதை கண்ணார பார்க்க முடிகிறதல்லவா 


கணவன் மனைவி விசயங்களுக்குள் மூன்றாம் நபர் மூக்கை நுழைத்தாலே பிட்டுக்கொண்டு போய்விடுமென்பதுதான் உண்மையிலும் உண்மை...

பெற்றவர்களாயினும் இவர்களின் விசயங்களுக்குள் தலையிடக்கூடாது என்பதே என் நிலைப்பாடும்கூட...


இயற்கையின் நியதிப்படி அதிகப்படி ஒரு பத்து நாளில் சரியாகி விடும் அல்லது சரியாக்கி கொள்வார்கள்...


கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளுக்குள் பெற்றோர்களோ மற்றவர்களோ தலையிடும்பொழுது பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வேதனைப்படுத்தி விடுகிறது 


சில நேரங்களில் நியாயம் பேசியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு கணவன் மனைவி ராசியாகிப் போய்விடுவார்கள்...


துரதிர்ஷ்டவசமாக வசமாக மற்றவர்களே இவர்களின் பிரிவுகளுக்கு காரணகர்த்தா ஆகிவிடுகிறார்கள்...


ஆக இவர்கள் தங்களை தாங்கலே நிரபராதி ஆக்கிக்கொள்வதற்காக ஜாதகத்தை கையிலெடுத்து சாதகமாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விருப்பமின்றி அதன்மேல் பழிபோட்டு விலகிக்கொள்ள விருப்பம் கொள்கிறார்கள்


ஜாதகம் பார்த்தோம் பையன் ராசி நேரம் சரியில்லை பிள்ளை பிறந்த நேரம் சரியில்லே னு வேக்கானம் பேசுறாங்க


நான் தெரியாமத்தேன் கேட்கிறேன்

மத்ததெல்லாம் முன்கூட்டியே சொல்லத் திறமை இருக்கிற 

எந்த ஜாதகக்காரனாவது உங்க பிள்ளைக்கு இந்த புள்ளதான் பிறக்கும்  இந்த நாளில்தா பிறக்கும் இந்த நட்சத்திரத்தில்தான் பிறக்கும் னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்

சொல்லிட்டார்னா அவரு ஜாதகக்காரரு 


அந்த ஆளு பொழப்பே அல்லோலங்கடி  போடுதாம் 

ஜாதகக்காரன் சொன்னான் ஜோசியக்காரன் சொன்னானு பய பிள்ளைகளை பயமுறுத்தாதீங்க 


அவங்கவங்க வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு ரெண்டு குடும்பமும் ஒத்துப்போனா... பையனுக்கும் பொண்ணுக்கும் பிடிச்சுப்போனா காலா காலத்திலே கல்யாணத்தை பண்ணி வெச்சு பேரப் பிள்ளைகளை கொஞ்சறதுக்கு பாருங்க



நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா  (இல்லை)

என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?


உண்மையான சத்தியவாக்கு எனில்


உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...


ஜாதகம்  என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்...  இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...


🙏🏼🙏🏼🙏🏼

நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா  (இல்லை)

என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா...?


உண்மையான சத்தியவாக்கு எனில்


உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் கடவுள் கையில்தானே ... ஆம் நம்புங்கள் கடவுளை அல்லது பித்ருக்களை அல்லது குல தெய்வங்களை...


ஜாதகம்  என்பது நமக்கு சாதகமா இருந்தாதான் ஜாதகம்...  இல்லாட்டி பாதகம் நமக்குத்தா.... நம்ம பிள்ளைகளுக்குதான்...


🙏🏼🙏🏼🙏🏼


அன்புத் தம்பி ராஜேஷ் கண்ணன் (வழக்கறிஞர் ) அவர்களின் கருத்துப்பதிவை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்...


நாம  கோவில்லே போய் தாலி கட்டினாலே குத்தம் வாங்குறவங்க ...

அது எப்பேர்பட்ட கோவில் சாமியா இருந்தாலும் ...


இங்கென்னடான்னா 

ஜாதகம் ஜாதகம் னு

சாக்குபோக்கு காமிச்சுகிட்டு அரை கிளவிக ஆகாம கல்யாணம் செஞ்சு தரமாட்டேன் னு போஸ்டர் போட்டுட்டு இருக்காங்க னு கவலைப்படறேன் தம்பி...


🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

இதுலே மாப்பிள்ளை வீட்டு கூத்து அதுக்கு மேல...


பையன் படிச்சிருக்கானாம் 

பைனான்ஸ் கம்பெனில வேலை பார்க்காராம் 

பெங்களூர் ஆந்திர பம்பாய் னு லைன் போட்டிருக்கானாம் 

I T field லே லட்சத்தில் சம்பளம் வாங்கறாராம் 


படிச்ச பொண்ணா, கொஞ்சம் வசதியா, அண்ணன் தம்பி இருந்தா பரவால்லயாம்,  அக்கா தங்கச்சி இல்லாம இருக்கனுமாம் ஒத்த பொம்பள புள்ளையா வேணூமாம்  வேணுமாம் னு தேடி தேடி பொண்ணு பார்க்க இவரு பார்த்த பொண்ணுக எல்லாம் கல்யாணமாகி ... புள்ள குட்டியோடு வர ...

(இவருக்கு எங்கெல்லாம் போய் பொண்ணு கேட்டாகளோ...அந்தந்த பொண்ணுகளுக்கு அடுத்தடுத்து கல்யாணம்)

 இவருக்கு இன்னும் பொண்ணு தேடிட்டே இருக்காகளாம்பா 

வருசம் ஏழாகுது 

(திருநள்ளாறு திருமணஞ்சேரி, திரு நாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் னு சுத்தி சுத்தி காலெல்லாம் வலிக்க)

இவக ஜாதகக்காரருக்கே இன்னும் என்னென்ன கோவிலிருக்கு னு இன் ஸ்டா வாட் சப்பு பேசு புக்கு னு பஞ்சாங்கத்தை தாண்டி தேடுறாராம்)

உருப்படியா தேடினபாட்டைக் காணோம்...

அடிக்கடி சேவ் பண்ண வேண்டி இருக்கு

வெள்ளை முடிக்கும்

கல்யாணத்துக்கும்.....


இந்த பாவ கணக்கு எங்கே தொடங்குச்சு தெரியுமா...? பொண்ணு வீட்டுக்காரன் பெருசா செய்ய மாட்டான்,  அவங்க நமக்கு ஈக்கிவளா இல்லே, நிறம் கம்மியா இருக்கு, அப்பன்காரன் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுறான், அம்மாக்காரிக்கு இஷ்டம் இல்லபோல தெரியுது னு நீங்களா கற்பனை பண்ணிட்டு வேண்டாம் பார்த்துக்கலாம் னு வந்தீங்கல்லே அங்கன தொடங்குச்சு...


கூட்டி கழிச்சு பாருங்க

கணக்கு சரியா வரும்


நல்ல பதிலை சொல்லி விடுறோம்னு வந்தீங்கல்லே 


அதுதா தொரத்துது னு சொல்லத்தோனுது


உங்கிரகம் சரியில்லே இல்லே


உஞ்சாதகக்காரன் சரியில்லே தெரிஞ்சுக்கோ

உனக்கு சுய புத்தியில்லே 


சொல்றவன் 2000 சொல்வான்

செலவழிச்சிட்டே இரு


கட்டம் சரியில்லே

விட்டம் சரியில்லேனுட்டு


😁😁😁

தாங்கள் கருத்து 100 % உண்மையே.....

காந்தவர்வ திருமணம் செய்தால் எவ்வளவு பெரிய தோஷமும் போகும்.....

மேலே உருமி முழங்க பச்சை பந்தலில் ஆண் தாலி எடுத்து கொடுத்து பெண்கள் மணமகளுக்கு தாலி கட்டினாலும் அந்த திருமணம் சிறப்பாக வாழும் என்பதே உண்மை.....

இதற்கு ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்பதே உண்மை..


திருமண பதிவுகள் கலந்துரையாடல் அருமை ..வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..நன்றிகள் ..





KVE வாட்சப் குழுவின் பயன்கள்...

 KVE வாட்சப் குழுவின் பயன்கள்...


முகமறியா எத்தனையோ சொந்தங்களோடு 

எனை இணைத்து விட்டிருக்கிறது.

இதனுள் பயணிப்பவர்

அனைவரும் ரத்த உறவுகள்


அவர் என்னை அறியார் 

நான் அவரை அறியேன்

ஆனாலும் அவருக்காக 

நான் துடிக்கிறேன் 

எனக்காக அவர் துடிக்கிறார்

எப்படி வந்தது இந்த

ரத்த சொந்தம்

எவர் சொல்லி தந்தது

இந்த உணர்வு பந்தம்


இவர்களோடு நானும்

கருத்து 

போரிட்டிருக்கிறேன்

பூஜை அறைக்குள்

நுழைந்த குழந்தையை

செல்லமாய் தூக்கி

வெளியில் விடுகிற

பாவனையாய்

கடந்து செல்கிறார்களே 

எப்படி

சொல்லித்தர

நேரமில்லாமல் இல்லை;

சொல்லி ஒன்னும்

ஆகப்போறதில்லை

என்கிற

அனுபவ காயங்கள் போலும்...!


பக்குவங்கள் என்பது

இதுவென காட்டி

அமைதி காக்கிறார்களே

எவ்விதம்...?


இந்த காதுலே வாங்கி

அந்த காதுலே விடாம

தனக்குரிய புரிதல்களை

மெனக்கெட்டு எழுதுகிறார்களே 

எவ்வளவு பெரிய மனது

வேண்டும் அவர்களுக்கு...

மதித்தல் எவ்வளவு

மகத்துவம் வாய்ந்தது


இந்த குழுவிற்குள்

இழுத்து வரப்பட்டு

இணைக்கப்பட்ட

எண்ணற்ற கம்பளப் பற்றாளர்கள் அனைவருமே

முகநூல் பக்கங்களிலும்

வாட்சப் தளங்களிலும்

கம்பள சமுதாயத்தின் 

வளர்ச்சியைப்பற்றிய 

சிந்தனைகளை பகிர்ந்து கொண்டவர்கள் என்பதை

தெரிந்து கொள்ள முடிந்தது




இந்த குழுவில்

உள்ளவர்களில்

சென்னையில்

என்ன உதவி 

வேண்டுமானாலும்

செய்வதற்கு சிலர்

காத்துக் கொண்டிருக்கிறார்கள் 

தங்க வேல்களும்

செந்தில் வேல்களுமாக

சொந்தங்களே



கம்பளத்தானுக்கே உரிய

கர்ண கவசங்களோடு

உறவு வட்டம்

இதிலிருந்து ஒரு பங்கு 

துவங்கப்பட்டதுதான்

எனில் மிகையாகாது


பெரியாரு bearerகளுக்கும்

War Roomகாரங்களுக்கும்

யாரும் பிரச்சினை 

தீர்க்க முடியாத 

குழுவும் இதுதா....

குழு வரைமுறையும் 

அதே அதே அதே...


கம்பளத்து பெரியோர்கள்

அதாவது

அமைப்பு தலைவர்கள்

அனைத்து சங்கத்தினரும்

இணைந்திருப்பதும்

இங்கேதான்

இதுவும் மௌசுதான் போங்க 


உடுமலையை

மையப்படுத்தியே

உடும்புபிடியா 

இடுகிற பதிவுகள்

இங்கேதான்

அதிகம்


இந்த குழுவின் கேப்டன் சிவா பாவா

இரை தேடும் 

பறவை போல

பல்வேறு வகையான விசயங்களின்

பதிவுகள்...

பசியுள்ள பறவைகள்

பகிர்ந்து கொள்ளலாம்

வகை வகையாக

வரலாற்று ஆய்வுகள்,தரவுகள், களப்பணிகள் , கம்பள வரலாற்று கல்வெட்டு சான்றுகள் னு சொல்லிக் கொண்டே போகலாம்


நூலக வட்ட பதிவுகள்

மறந்து போயின போலும்


திருமதி Airtel  வரலட்சுமி அவர்களும் Entreprenuer பவித்ரா வேலுமணி அவர்களும் கம்பளத்து பெண்மணிகள் கண்மணிகள் என கலந்திருப்பதும் இந்த குழுதான்...


ஆகவே சொந்தங்களே

அரசியலுக்கு அப்பாற்பட்டு....


உறவுகளை மேம்படுத்தும் விதமான பதிவுகளை பதிந்து ஒற்றுமைக்கு வழிகாட்டியாக செயல்பட்டிட இக்குழுவை வேண்டிக் கொண்டு பாராட்டுதலை நிறைவு செய்கிறேன்.


🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼K N நாகராஜ் கரூர் 🤝🥰📡🎙️🤝🌈🍫💦

கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .

 கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .. (கார்த்தி SR - 9787923028)⛱👍..க்கு  என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...(உடுமலைப்பேட்டை )

வரலாறு .தொழில் .அரசியல் ..கவிஞர் .பேச்சாளர் ...எந்த துறையாக இருந்தாலும் பன்முக தன்மை கொண்டவர் ..❤T .கார்த்திக்குமார் ...🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 9787923028)⛱👍
















படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கம்பள தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து செயல்படுபவர் .

எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..

இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....

எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..

 எந்த ஒரு பணியாக இருந்தாலும் வேகம் ..வேகம் ..கொஞ்சம் அதிகம் ...ஏன் என்றால் இப்போது இருக்கும் காலகட்டம் அப்படி ...இந்த வளர்ச்சி கூட வேகத்தால் வந்தததாக கூட இருக்கலாம் ...கம்பள சமுதாயம் என்பதால் ..பாளையக்காரர்கள் அரசாண்ட பூமி இது ...ஆட்சி முறை முறையும் கூட ..சமுதாய நலன் சாராமல் ...பொதுநலம் சார்ந்து பணிபுரிவதால் இந்த வேகம் வேண்டும் என்பது சரியான திசை என்று சொல்லுவேன் ...மாப்பிள்ளை ஒரு பணியை எடுத்தால் அதை திறம்பட நிறைவேற்றி கொண்டுவருவது மிக சிறப்பு .. சமுதாய பற்று அதிகம் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொறுப்புமிக்க ஒருங்கிணைப்பாளர் (விருட்சம் )..அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஆதாரத்தை பெருக்குவது எப்படி என்று மாப்பிள்ளையிடம் தெரிந்து கொண்டேன் ..மாப்பிளை இந்த பணி செவ்வனே நிதிப்பற்றாக்குறை காலத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கி ..மாத ,வருட சந்தாவை ,நிறைவேற்று கொண்டு வருவதற்கும் குழுவிற்கு தேவையான புதிய தொழில் முனைவோர் ,தற்பொழுது யார் யார் வியாபாரம் ,எந்ததெந்த துறையில் நம் பணியில் இருப்பவர்களை சொந்தங்களை கண்டறிந்து ஒருங்கிணைப்பு செய்து அறக்கட்டளையை நிர்வகிப்பவர்

கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,ஒருங்கிணைப்பாளராக உடுமலைப்பேட்டை K .வல்லகொண்டாபுரம் தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் ... பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக , தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக .... கம்பளத்து சொந்தங்களின் "அன்பு" செல்லப்பிள்ளையாக நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக .. என் அருமை மாப்பிளைக்கு கம்பள விருட்சக் குழுமம் சார்பாக 🌷🌷🎂🎂என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🌾🌾... என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681👍⛱⛱