உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா .......2019
என் சிறுவயது எங்கள் ஊர் மாரியம்மன் தேர் திருவிழா நினைவுகள் பசுமையாக இருக்கிறது ,,,அடுத்தவாரம் நேன்பு சாட்டுகிறார்கள் என்றால் உற்சாகம் மனதில் கரைபுரண்டு ஓடும்..செவ்வாய் கிழமை மாரியம்மன் கோவிலில் கம்பமம் போட்டால் சிறியவர்கள் என்றால் சிறிய வெண்கல சொம்பு அல்லது சிறிய மண்பானை வேம்பம் தளைகளுடன் நீரை தலையில் வைத்துகொண்டு தளி ரோட்டில் குட்டை திடல் வழியாக மாரியம்மன் கோவில் சென்று கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு மாரியம்மனை தரிசித்திவிட்டு குட்டை திடலை நோக்கி வருவோம் ..வரும் வழியில் சொம்பில் கொஞ்சம் தீர்த்ததத்தை வேம்பம் தளைகளை முக்கி தெரிந்த நண்பர்களின்மேல் தெளித்து விட்டுவெயிலின் தாக்கத்தை தனித்து கொண்டு வருவோம்.மாலை நேரம் என்பதால் கூட்டம் அலைமோதும் . பீ .வீ கோவில் வழியெங்கும் பொம்மைகடைகள் வீதி இருமருங்கும் நிறைந்து இருக்கும்.2 ரூபாய் வாட்சை வாங்கி கட்டிக்கொண்டும் ,,பெரிய பலூன் வாங்கி காற்றில் பறக்க விட்டுக்கொண்டும் ,உப்பு மிளகாய் போட்ட மாங்காய் வாங்கி சுவைத்து விட்டு கண்ணில் நீர் வழிய ...குட்டையில் பெரிய ராட்டினங்களில் 16 ரவுண்டு அடித்துவிட்டு வயறு குலுங்க இறங்குவோம் . மறந்து போன பொம்மலா டங்கலை மறக்காமல் அதில் சொல்லும் நீதி கதைகளை பார்த்துவிட்டு மன நிம்மதியுடன் வெளியே வருவோம் .கரணம் தப்பினால் மரணம் என்கிற பைக் மட்டும் கார் விளையாட்டை மரண பயத்தில் நின்று பார்க்கும்போது எங்கே நாம் அவர்கள் விளையாடும் மரண குழியில் விழுந்துவிடுவோமோ திரில்லிங்கோடு பார்த்துவிட்டு கிழே இறங்கிவருவோம்.மாரியம்மன் தேர் திருவிழா நினைவாக போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்து பிரேம் செய்து வீட்டில் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் வைத்துகொண்டு நண்பர்களுக்கு காண்பித்து மகிழ்வோம் . குட்டைதிடலில் ஆறு மணிநேரம் சுற்றிவிட்டு ..இரவு பாட்டு கச்சேரி ரஜினி ,கமல் பாடல்களையும் ,எம் ஜி ஆர் ,சிவாஜி பாடல்களை ஒன்று விடாமல் கேட்டு விட்டு தூக்க கலக்கத்தில் அசதியுடன் தூங்கிவிடுவோம்..தேர் ஓடும் நாளில் எங்கள் சொந்தங்கள் எல்லாம் வந்துவிடுவார்கள் அன்று கிடாவெட்டி சமைத்து சாப்பிட்டு கதைகள் பேசிவிட்டு மதியம் தேர் பார்க்க கிளம்பிவிடுவோம்...
இன்றைய காலச் சூழ்நிலையில் மறந்து போன நினைவுகள் ..இப்போது எல்லாம் குழந்தைகளை அழைத்து கொண்டு வேக வேகமாக விமானத்தை பிடிக்க நேரம் ஆனது போல் சுற்றி காண்பிக்கறோம்.தவறாமல் குட்டை திடலில் ரங்க ராட்டினங்களில் செல்பி படம் பிடித்து வாட்ஸ் அப்பில் ,முகனூலில் பின்னூட்டம் இட்டு மகிழுந்துகொள்கிறோம்..தேர் தள்ளி கொண்டு வரும் யானையின் பெயர் கூட இப்போது தெரிந்துகொள்கிறோம்.. உடுமலை பிறந்து வளர்ந்து தற்போது வெளி நாடு ,வெளி மாநிலங்களில் வசித்து கொண்டு இருக்கும் நண்பர்கள் எல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியோடு மாரியம்மன் தேர் திருவிழாவை பெரு மூச்சுடன் நினைவுகளை தங்கள் மனைவி ,குழந்தைகளுடன் மனதை தேற்றி கொண்டு அசுர கால வேகத்துடன் வாழ்கையை நகரத்து வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டோம்.... அனைவருக்கும் எங்கள் மாரியம்மன் தேர் திருவிழாவை கண்டுகளித்த பக்த கோடிகளுக்கு வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..வாட்ஸஅப்ப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக