வெள்ளி, 26 ஏப்ரல், 2019

உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா .......2019
என் சிறுவயது எங்கள் ஊர் மாரியம்மன் தேர் திருவிழா நினைவுகள் பசுமையாக இருக்கிறது ,,,அடுத்தவாரம் நேன்பு சாட்டுகிறார்கள் என்றால் உற்சாகம் மனதில் கரைபுரண்டு ஓடும்..செவ்வாய் கிழமை மாரியம்மன் கோவிலில் கம்பமம் போட்டால் சிறியவர்கள் என்றால் சிறிய வெண்கல சொம்பு அல்லது சிறிய மண்பானை வேம்பம் தளைகளுடன் நீரை தலையில் வைத்துகொண்டு தளி ரோட்டில் குட்டை திடல் வழியாக மாரியம்மன் கோவில் சென்று கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு மாரியம்மனை தரிசித்திவிட்டு குட்டை திடலை நோக்கி வருவோம் ..வரும் வழியில் சொம்பில் கொஞ்சம் தீர்த்ததத்தை வேம்பம் தளைகளை முக்கி தெரிந்த நண்பர்களின்மேல் தெளித்து விட்டுவெயிலின் தாக்கத்தை தனித்து கொண்டு வருவோம்.மாலை நேரம் என்பதால் கூட்டம் அலைமோதும் . பீ .வீ கோவில் வழியெங்கும் பொம்மைகடைகள் வீதி இருமருங்கும் நிறைந்து இருக்கும்.2 ரூபாய் வாட்சை வாங்கி கட்டிக்கொண்டும் ,,பெரிய பலூன் வாங்கி காற்றில் பறக்க விட்டுக்கொண்டும் ,உப்பு மிளகாய் போட்ட மாங்காய் வாங்கி சுவைத்து விட்டு கண்ணில் நீர் வழிய ...குட்டையில் பெரிய ராட்டினங்களில் 16 ரவுண்டு அடித்துவிட்டு வயறு குலுங்க இறங்குவோம் . மறந்து போன பொம்மலா டங்கலை மறக்காமல் அதில் சொல்லும் நீதி கதைகளை பார்த்துவிட்டு மன நிம்மதியுடன் வெளியே வருவோம் .கரணம் தப்பினால் மரணம் என்கிற பைக் மட்டும் கார் விளையாட்டை மரண பயத்தில் நின்று பார்க்கும்போது எங்கே நாம் அவர்கள் விளையாடும் மரண குழியில் விழுந்துவிடுவோமோ திரில்லிங்கோடு பார்த்துவிட்டு கிழே இறங்கிவருவோம்.மாரியம்மன் தேர் திருவிழா நினைவாக போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்து பிரேம் செய்து வீட்டில் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் வைத்துகொண்டு நண்பர்களுக்கு காண்பித்து மகிழ்வோம் . குட்டைதிடலில் ஆறு மணிநேரம் சுற்றிவிட்டு ..இரவு பாட்டு கச்சேரி ரஜினி ,கமல் பாடல்களையும் ,எம் ஜி ஆர் ,சிவாஜி பாடல்களை ஒன்று விடாமல் கேட்டு விட்டு தூக்க கலக்கத்தில் அசதியுடன் தூங்கிவிடுவோம்..தேர் ஓடும் நாளில் எங்கள் சொந்தங்கள் எல்லாம் வந்துவிடுவார்கள் அன்று கிடாவெட்டி சமைத்து சாப்பிட்டு கதைகள் பேசிவிட்டு மதியம் தேர் பார்க்க கிளம்பிவிடுவோம்...
இன்றைய காலச் சூழ்நிலையில் மறந்து போன நினைவுகள் ..இப்போது எல்லாம் குழந்தைகளை அழைத்து கொண்டு வேக வேகமாக விமானத்தை பிடிக்க நேரம் ஆனது போல் சுற்றி காண்பிக்கறோம்.தவறாமல் குட்டை திடலில் ரங்க ராட்டினங்களில் செல்பி படம் பிடித்து வாட்ஸ் அப்பில் ,முகனூலில் பின்னூட்டம் இட்டு மகிழுந்துகொள்கிறோம்..தேர் தள்ளி கொண்டு வரும்  யானையின் பெயர் கூட இப்போது தெரிந்துகொள்கிறோம்.. உடுமலை பிறந்து வளர்ந்து தற்போது வெளி நாடு ,வெளி மாநிலங்களில் வசித்து கொண்டு இருக்கும் நண்பர்கள் எல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியோடு மாரியம்மன் தேர் திருவிழாவை பெரு மூச்சுடன் நினைவுகளை தங்கள் மனைவி ,குழந்தைகளுடன் மனதை தேற்றி கொண்டு அசுர கால வேகத்துடன் வாழ்கையை நகரத்து வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டோம்.... அனைவருக்கும் எங்கள் மாரியம்மன் தேர் திருவிழாவை கண்டுகளித்த  பக்த கோடிகளுக்கு வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..வாட்ஸஅப்ப் 

வியாழன், 25 ஏப்ரல், 2019

நன்றிகள் ....

இன்று எனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எனது அருமை நண்பர்களுக்கும் .என் அருமை சொந்தங்களுக்கும் ,எனது  சொத்துக்களுக்கும் (வாடிக்கையாளர்கள் ),என்னுடன் நிழல் போன்று என்னுடன் பயணிக்கும் எனது தம்பிகள் ,மாப்பிள்ளைகளுக்கும்  எனது பணிவான நன்றிகள் ..வயது ஆகா ஆகா ...இளமையுடன் பொறுப்புகள் ..கூடுகொண்டேபோகிறது ..வருட வருடம் ..நட்புவட்டங்கள் ,சொந்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .பொருளாதாரம் ,வாழ்வியல் .சமுதாயம் ,வரலாறு சார்ந்த பணிகள் இன்னும் பொறுப்புடன் எனது தேடல்களை மேலும் கூட்டுகிறது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681






புதன், 24 ஏப்ரல், 2019


Home......Loans…..
Introduction:
Everyone has the dream of purchasing property. Home ... assist you to get the Home Loans deal. "Own House” is a life-time decision and have to be taken with a lot of planning and requires supporting finances.
What is a Home Loan ?
Home Loans is a secured Loan given against the security of a house / property which is funded by the banks and Housing Finance company.
The Home Loans taken by a buyer from the bank issued against the property / security intended to be bought on the part by the Buyer giving the banker a conditional ownership over the property i.e. if the Buyer is failed to pay back the loan, the banker can retrieve the lend money by selling the property.
Types of Home Loans
There are different types of Home Loans s available to cater Buyer’s different needs.
Home Purchase Loan is purpose of purchasing a new house.
Home Improvement Loan is for the renovation or repair of the home which is already bought
Home Extension Loan serves the purpose when the Buyer wants to extend or expand an existing home, like adding an extra room etc.
Home Conversion Loan is wherein the Buyer has already taken a Home Loans to finance his current home, but now wants to move to another home. The Conversion Home Loans helps the Buyer to transfer the existing loan to the new home which requires extra funds, so the new loan pays the previous loan and fulfills the money required for new home.
Home Construction Loan taken when the Buyer wants to construct a new home.
Land Purchase Loan which is taken to purchase a land for construction and investment purposes.
Documents required in Home Loans
Generally the documents required to processing your loan application are almost similar across all the banks; however they may differ with various banks depending upon specific requirement etc.
Following documents are required by financial institutions to process the loan application :
Age Proof
Address Proof
Income Proof of the applicant and co-applicant
Last 6 months bank A/C statement
Passport size photograph of the applicant and co-applicant
If Salaried
Employment certificate from the employer,
Copies of pay slips for last few months and TDS certificate
Latest Form 16 issued by employer Bank statements
If Self-employed
Copy of audited financial statements for the last 2 years
Copy of partnership deed if it is a partnership firm or copy of memorandum of association and articles of association if it is a company
Profit and loss account for the last few years
Income tax assessment order
Check the Loan Eligibility.
Based on Personal profile and Income proof and Property which you buy.
Home Loans Process
Applying for the Loan :
After you have selected your lender, you have to fill in the application form wherein the lender requires complete information about your financial assets and liabilities; other personal and professional details together with the property details and its costs.
Documentation and Verification Process :
You are required to submit the necessary documents to the bank which will be verified together with the details in the application.
Credit and default check :
Bank checks out the Buyer’s loan eligibility (through repayment capacity) and the amount of loan is confirmed. The Buyer’s repayment capacity is reached which is based on the income, salary, age, experience and nature of business etc. Bank also checks credit history through the Cibil Score which plays a critical role in deciding and approving your loan application. Low Credit Score implies that the bank upfront rejects your application on the basis of earlier credit defaults; on the other hand high credit score gives a green signal to your application.
Bank sanctions Loan and Offer letter to the Buyer :
After the credit appraisal of the Buyer bank decides the final amount and sanctions the loan, the bank further sends an offer letter to the Buyer which constitutes the details like rate of interest, loan tenure and repayment options etc.
Acceptance Copy to the Bank :
The Buyer needs to send an acceptance copy to the bank after the Buyer agrees with the terms and conditions in the offer letter.
Bank checks the legal documents:
The bank further asks the legal documents of property from the Buyer to check its authenticity so as to keep them as a security for the loan amount given. The next step involved is the valuation of the property by the bank which determines the loan amount sanctioned by the bank.
Signing of agreement and the loan disbursal : The Buyer signs the loan agreement and the bank disburses the loan amount.
Charges in Home Loans
Acquiring a Home Loans doesn’t only involve the cost of Home Loans interest rates but it also includes other charges and fee accompanying at various stages of taking the Home Loans . You must consider all these charges while comparing the cost structure across banks.
Following is the detailed fee structure incurred by banks at different loan stages:
Processing Charge :
It is a fee payable at the time of submitting the loan application to the bank which is normally non-refundable. The fee ranges between 0.5 per cent and 1 per cent of the loan amount.
Administrative Fee :
It is a fee incurred by banks at the time of loan sanction; there are few banks who have removed this fee so you must check it with all the banks.
Prepayment Penalties :
When the Buyer pre-pays the loan before the loan tenure, banks charge a penalty of the pre-paid amount.
Legal Charges :
Banks also incur some charges from the customer for legal and technical verification of the property.
Delayed payment Charges :
When there is a delay in the payment of your EMI, banks charge a late payment fee from the Buyer.
Cheque bounce charges :
Banks charges for every bounced cheque towards the loan payment because of lack of funds in your account.
Home Loans Criteria by various banks :
The Buyer’s eligibility of getting a Home Loans depend upon his/her repayment capacity and the banks establish this repayment capacity by considering various factors such income, spouse's income, age, number of dependants qualifications , assets, liabilities, stability and continuity of occupation and savings history.
Important Pointers in Home Loans to Increase your Loan Eligibility :
Credit History :
Your chances of getting a Home Loans are increased if you have a good credit history which is known by banks by checking the Buyer’s Cibil score. Now it is very hard to get a loan from another bank when you already have a bad debt with one bank.
Clubbing of income :
Your eligibility to take a Home Loans will augment when you club your income with your spouse’s income, bank in this case will calculate your eligibility on the basis of the clubbed income of both the applicants. You can club incomes of spouse, children and parents staying with you and having regular income.
Enhance your loan tenure :
Longer is the loan tenure, lower will be the EMIs which further increases the repayment capacity of the Buyer and in turn enhances the loan eligibility.
Step-up Loan :
In this type of loan EMIs remain low in the beginning and increase gradually as and when the Buyer’s spending power increases. Therefore lower EMIs in the initial years enhances the Buyer’s ability to pay and further increases the loan eligibility
Increase the down payment :
You must know that in a Home Loans finances only 80 to 85% for the property and the rest amount has to be funded by the Buyer. You should increase the down payment if you have more than required amount.
Final note :
The above mentioned informations are general observation on home loan. For specific details kindly contact the respective banks to get more clarity...
Regards...
V.K.Sivakumar
Mobile-9944066681
Mail Id.siva19732001@gmail.com
Whatsapp....9944066681
Coimbatore ...Pollachi...Udamalpet..

வெள்ளி, 19 ஏப்ரல், 2019


+2 முடித்தவுடன் ..என்ன படிக்கலாம் ...

”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.

புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.

வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.

அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பொறியியல் படிப்புகளைப் போல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் எம்.பி.பி.எஸ்-க்கு இல்லை. கட் ஆஃப் மதிப்பெண்கள் 195-க்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதற்கு அருகில் எடுப்பவர்கள் போட்டிகளை சமாளித்து தனியார் கல்லூரிகளில் இடம் பெறுவார்கள். மெரிட் தவிர, மேனேஜ்மென்ட் மூலம் ஸீட் பெறுபவர்களும் உண்டு.

பல லட்சங்கள் வரை செல்லும் கட்டணங்கள், ஐந்து வருட படிப்பில் இறுதி வருடம் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி போன்றவை இதற்கான பொது விதிகள். மேற்படிப்பு படிப்பவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம், கண் மருத்துவம் என வளமான எதிர்காலம் உண்டு என்பது கண்கூடு.

”நமது நாட்டில் பல் மருத்துவர்களுக்கான முக்கியத்துவமும் தேவையும் அதிகமாகி வருகிறது” என்று மத்திய சுகாகாரத்துறை அமைச்சர் அன்புமணிகூட சமீபத்தில் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பும் உலகளவில் பல் மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான முக்கியத்துவம் கொடுத்து, கிராமங்கள் வரை பல் மருத்துவ வசதியை எடுத்துச் செல்வது, இந்தத் துறையில் இன்னும் தேவையான விழிப்பு உணர்வைப் புகுத்துவது போன்ற திட்டங்களுக்கான ஆலோசனை களிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

படிப்பை முடித்த கையோடு வங்கியில் கடன் உதவி பெற்று, தேவையான இடவசதி, மருத்துவ உபகரணங்களுடன் கிளினிக்கை ஆரம்பித்து விடலாம். இதில் மேற்படிப்பான எம்.டி.எஸ் படித்தால், இன்னும் சிறப்பு.

மூன்று வருடப் படிப்பான இதில், நர்ஸிங்கை முடித்துவிட்டு, அதன் பின் சிறப்புப் படிப்புகளான ‘நியூரோ நர்ஸிங்’, ‘போஸ்ட் ஆபரேட்டிவ் நர்ஸிங்’ போன்றவற்றை எடுத்துப் படிக்கிறவர்களுக்கு, அதற்கான அங்கீகாரமும் தேவையும் கூடுகிறது. நர்ஸிங் படிப்புகளுக்கு வெளிநாடுகளிலும் மிகச் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது.
தனியார் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின் மூலமும், அரசு கல்லூரிகளில் செவிலியர் படிப்புக்கான தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நர்ஸிங்கில் டிப்ளமோ படிப்புகளும் பரவலாக வந்து விட்டன. இவற்றை முடித்து வேலையில் சேரும் பெண்கள் அதோடு தேங்கி விடாமல், வேலையில் இருந்து கொண்டே மேற்படிப்பையும் முடித்தால், நல்ல எதிர்காலம் உண்டு

படிப்புடன் கூடவே கற்பனைத்திறன், உலக நடப்பு அறிவு, ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இதில் அதிக வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

பத்திரிகை நிருபர், வானொலி நிலைய இயக்குநர், தொலைக்காட்சி செய்தி சேகரிப்பாளர், சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், விளம்பரப்பட இயக்குநர், அனிமேஷன் உள்ளிட்ட பலப் பல வேலைகள் இந்தத் துறை-யில் விரிந்து உள்ளன.
பி.எஸ்சி., விஸ்காம் பி.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் பி.ஏ., ஜர்னலிஸம் பாடப்பிரிவுகள் பல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ளது. இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தை படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஹோட்டல்களில், பி.ஆர்.ஓ., நிர்வாகம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு தரும் ‘ஃப்ரன்ட் ஆபீஸ்’ பாடப் பிரிவுகள், பராமரிப்பில் வேலை வாய்ப்பு தரும் ‘ஹவுஸ் கீப்பிங்’ பாடப் பிரிவுகள், உணவு உற்பத்தியில் வேலை வாய்ப்பு தரும் ‘குக் புரொடக்ஷன்’ பாடப் பிரிவுகள்.. என இதன் பாடத் திட்டமே வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது ஹோட்டல், ரெஸ்ட்டாரன்ட், ஃபாஸ்ட் ஃபுட், காஃபி ஷாப், மோட்டல் என பல பெயர்களில் பெருகி வரும் இந்த முதல் தர உணவகங்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிரம்பி உள்ளன.

ப்ளஸ் டூ-வில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப மூன்று வருடங்கள், நான்கு வருடங்கள் என கால அளவு மாறுபடும். இந்தப் படிப்பில் செறிவான ஆங்கில அறிவோடு இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு என வேற்று மொழி அறிவும் இருந்தால் மிக அதிக சம்பளத்தில் வேலையில் அமர முடியும்.

குறிப்பாக, பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் வெளிநாடுகளில் உள்ள பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தப் படுவார்கள்.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை, தரமணி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அரசால் நடத்தப்படும் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்’கள் உள்ளன. இதற்கு ‘ஆல்இண்டியா ஹோட்டல் மேனேஜ்மென்ட்’டால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மற்ற தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்-களில் பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வு மதிப்-பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சேலத்தில் உள்ள சேர்வராய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலிய பல கல்வி நிலையங்களில் இந்தப் பாடப்பிரிவு உள்ளது.

ஃபேஷன் டெக்னாலஜி படிப்புக்கு பன்னிரண்-டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இது கல்வி நிலையங்களைப் பொறுத்து மூன்று, நான்கு கால ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.

ஃபேஷன் டெக்னாலஜி படித்தவர்களுக்கு இந்திய தொழில் துறைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜவுளித் துறையில் அதிக அளவுல் வேலை வாய்ப்புகள் உள்ளன. தவிரவும், இந்திய ஆடைகளுக்கு உலகளவில் இருக்கும் வரவேற்பால் இவர்களுக்கு ஏற்றுமதி துறையிலும் வரவேற்பு உள்ளது.
ஃபேஷன் டிசைனிங்கில் பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தைப் படித்தவர்களும் சேரலாம். இது இளங்கலை, டிப்ளமா படிப்பாக வழங்கப்படுகிறது. இதில் இமேஜ் கல்சல்ட்டன்ட், ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர் உள்ளிட்ட பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘நிஃப்ட்’ (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி), உலகளவில் ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்று. சென்னை, பெங்களூரு, குஜராத்தின் காந்திநகர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்த கல்வி நிலையம் உள்ளது.

முக்கியமான விஷயம்.. இங்கெல்லாம் பொதுத் தேர்வு மதிப்பெண்களை விட அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதில் வெற்றி பெற்று அங்கு சேர்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
நிஃப்ட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் இயக்கும் ‘நிஃப்ட் – டி.ஈ.ஏ.’ கல்வி நிலையத்-திலும் ஃபேஷன் டிசைனிங் மூன்று ஆண்டுகளுக்கான டிப்ளமா கோர்ஸாக நடத்தப்படுகிறது.

நிஃப்ட் தவிரவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் வேறுபடும் என்பதால், அரசு அங்கீகாரம் பெற்ற தரமான கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

இவ்வாறு பணியில் சேர்ந்த பிறகோ, முன்னரோ தொடந்து இளங்கலை, முதுகலை படிப்பது, மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாக அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். டியூஷன் சென்டர் துவங்குவதன் மூலம் உடனடி வேலை வாய்ப்பைப் பெறலாம்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களிலும் அரசு ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் உள்ளன. தவிரவும் அரசு அங்கீகாரம் பெற்ற பல தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் இந்தக் கல்வி உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நீதிமன்றங்களில் பணிபுரிவதைத் தவிரவும், இப்போது இந்தத் துறையில் இன்னும் பல வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பி.எல்., முடித்தவர்களை தங்களுக்கான சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்கும் Buy Lasix ‘சட்ட ஆலோசகர்களா’க (லீகல் அட்வைஸர்கள்) பணியமர்த்திக் கொள்வதில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
இது தவிர பி.எல் படிப்புக்குப் பிறகு ஏ.சி.எஸ் (அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரி) கோர்ஸை படிப்பதன் மூலம், கம்பெனிகளுக்கென்று உள்ள சிறப்பு சட்டங்களைப் படித்து, அதற்கான வேலையில் அமர முடியும். இந்த ஏ.சி.எஸ் படிப்பில் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகும் சேர முடியும் என்றாலும், சட்டப் படிப்பை முடித்து விட்டு இந்த கோர்ஸை படித்தால் இதற்கான மரியாதை அதிகம்.

டெல்லியை தலைமையகமாகக் கொண்ட அமைப்பான ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா’வின் கிளைகள் நம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் உள்ளன. பிளஸ் டூ மற்றும் சட்டம் முடித்தவர்கள், இங்கு விண்ணப்பித்து, இந்தப் படிப்பில் சேரலாம்.
ஐந்தாண்டுப் படிப்பான பி.எல்&க்கு சட்டப் படிப்புக்கான ‘தமிழ்நாடு பொது கவுன்சிலிங்’ மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் சட்டப் படிப்பு உள்ளது.

வணிகவியல் தொடர்பான படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்-களிலும் இருக்கும் தேவையே இதற்குக் காரணம். பி.காம், பி.பி.ஏ., முடித்துவிட்டு உடனே வேலை தேடுவதைவிட, படிக்கும்போதே சி.ஏ. (சார்டர்டு அக்கவுன்டன்ட்), காஸ்ட் அக்கவுன்ட்ஸ், கம்பெனி செக்ரட்டரிஷிப் போன்ற வணிகவியல் தொடர்பான படிப்புகளைப் படிப்பது, வேலை வாய்ப்புகளை எளிதில் வசப்படுத்தும்.

இன்று இந்தப் படிப்புகளில் சேரும் பலரும், மேற்படிப்பாக எம்.பி.ஏ அல்லது எம்.சி.ஏ., படிக்கும் எண்ணத்தோடுதான் சேருகிறார்கள். அந்த கணிப்பு சரிதான். அதிலும் எம்.பி.ஏ.,வில் ரீடெயில் மேனேஜ்மென்ட், ஃபார்மா மேனேஜ் மென்ட், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற சிறப்புப் பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது, அதற்கான வேலை வாய்ப்பும் கூடுகிறது.

அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் இந்தக் கல்விக்கு, அந்தந்தக் கல்வி நிலையங்-களுக்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.பி.ஏ., ஆங்கிலம்: ஆங்கில இலக்கியம் படிப்பவர்களுக்குத்தான் இப்பொழுது பி.பி.ஓ (பிஸினஸ் பிராசஸ் அவுட்ஸோர்ஸிங்) துறையிலும், மொழிபெயர்ப்பு துறையிலும் வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. கூடவே, கைக்கடிகாரம் முதல் கணினி வரை மார்க்கெட்டில் விற்பனையாகும் பொருட்களை உபயோகிப்பது பற்றிய குறிப்புகள் அடங்கிய ‘பிரவுச்சர்’களுக்கு எழுத்தாக்கம் கொடுக்கவும் (டெக்னிகல் ரைட்டிங்), வெப் டிசைன் துறைகளில் எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஆங்கில இலக்கியம் முடித்தவர்களின் தேவையே அதிகம் நாடப்படுகிறது.எனவே நல்ல ஆங்கில அறிவு அமையப் பெற்றிருக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் உள்ளது.அதனால், இந்த இரு துறைகளுக்குமான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.

ஜூஸில் இருந்து ரெடிமேட் மாவு வரை சந்தையில் கொட்டிக் கிடக்கும் உணவுப் பொருட்களே இவற்றுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துகின்றன.
இவை தவிர ஆய்வகங்களிலும் மருத்துவமனைகளிலும் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை உள்ளது.

மேற்சொன்ன இரண்டு படிப்புகளிலும், எம்.எஸ்சி படிப்பதை விடவும், மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, மெடிக்கல் பயோடெக்னாலஜி.. என்று மருத்துவம் தொடர்பான மேற்படிப்புகளை படித்தால், மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். இதற்கு தற்போது அதிக தேவை இருக்கிறது.
பயோ டெக்னாலஜியும் மைக்ரோபயாலஜியும் தமிழகத்தின் பல கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவர, விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் குழுமம்
உடுமலைப்பேட்டை



காஞ்சனா படம் ....

காஞ்சனா படம் போஸ்டர் நம்ம அனுஷம் தியேட்டர் -இல் போஸ்டர் ஒட்டிருந்ததை பார்த்தவுடன் பழையநினைவுகள் ஓட ஆரம்பித்துவிட்டது ..

நானும் ஷ்யாமும் dvd இல காஞ்சனா முதன் முதலாக வந்தப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம் ..கொஞ்சம் பேய் படம் நம்மளுக்கு கொஞ்சம் பயமோ பயம் ...ஷியாம் அப்படி அல்ல ..அவங்க அம்மா மாதிரி ..தைரியம் கொஞ்சம் அதிகம் ...திரும்ப திரும்ப இந்த படத்தேயே பார்த்துட்டு இருக்கே ..பயமே இல்லையடா தம்பி என்றேன் ..ச்சே ச்சே பயமா எனக்கா ..என்றவாறே  கண் இமைக்காமல்படம்  பார்த்துக்கொண்டிருந்தார்.   கோவை BROOKFIELD   தியேட்டர் டிஜிட்டல் சௌண்ட்ல கேக்கலாம் தம்பி ..போலாமா என்றேன் ..நீங்க வேற டெய்லி வீட்டுல தான் காஞ்சனா படம்  டிஜிட்டல் ஒலி கேக்கறமே ..இதா வேற காசுகொடுத்து   அங்க வேற போய் அதைப் பார்க்கனுமா? என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்குறோம் ...லக லக என்று கையில் தோசைக்கரண்டியுடன் காஞ்சனா நிற்கிறார் ...அப்பறம் என்ன மீதி உங்கள் கற்பனைக்கு ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...



வியாழன், 18 ஏப்ரல், 2019

நான் கோவைக்கு எப்போதுசென்றாலும் எனக்கு பிடித்தமான .ஹோட்டல் .. ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.
தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டேன்.
Waiter அமைதியாக என்னிடம் கூறினார்.
Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chefஅவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.
நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பறிமானார்கள்.
Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.
அது தான் வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.
அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.
Do not worry.
The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை
Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
Stay blessed and enjoy your day.
Believe in The God.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.
When you are brutally broken down to pieces and still you give love and care to others.You yourself deserve an ocean of Love...
Trusted Taste....Trusted Friends..... Sivakumar Kumar — feeling happy at Haribhavanam....கோவை 

செவ்வாய், 16 ஏப்ரல், 2019


ஏன்? தனிநபர் கடனைத் தவிர்க்க வேண்டும்? காரணங்களும் தீர்வுகளும்
எந்தவித செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும்
கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது. மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம். எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது.
ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி…
தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதா ல் வட்டிவிகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில்தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.
உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறுவனங்கள் தங்களது தயாரிப் புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.
பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதிய தாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்தி விடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
நிதி ஆலோசகர் ..9944066681..

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

தாலி கயிறு ..மூணு முடிச்சு ..விளக்கம் ...

தாலி – மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.                                                                                                                                                          முதல் முடிச்சு – பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு – கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக   இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு – நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.                                                                                                                                     ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.                                                                                                                   பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

 ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.                
முதலாவது தாயின் ஆலோசனை.                                                                                        
2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.                                                                                                    
3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.
                                                                                                                             
 ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.                                                                                                                                                                                                                    அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.  
                                                                                             
இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.                                          
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம். முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்குஇரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..




செவ்வாய், 9 ஏப்ரல், 2019


ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…

எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஆண்களில் படிப்படியாக நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் கிருஷ்ணாசேஷாத்திரியிடம் பேசினோம்…

‘‘நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு கொள்கிறது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இயங்கத் தேவையான ஹார்மோன்களை ஒவ்வொரு நொடியும் உற்பத்தி செய்யக்கூடிய பல நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன. தைராய்டு, அட்ரினல் மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளில் உற்பத்தியாகி ரத்த ஓட்டம் அல்லது மற்ற உடல் திரவத்தின் வழியாக ஊடுருவி, உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு சென்று அவற்றின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தி உடையவை இந்த ஹார்மோன்கள். அதாவது உடல் எப்போது? என்ன செய்ய வேண்டும்? என்ற சமிக்ஞைகளைத் தரும் சிக்னல்களாக வேலை செய்கின்றன.

இவற்றில் மூளைக்குப் பின்னால் இருக்கும் பிட்யூட்ரி சுரப்பிதான் மற்ற நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்தக்கூடிய தலைமை வேலையைச் செய்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியம். பிறந்த குழந்தைக்குகூட தைராய்டு ஹார்மோன் குறைபாடு வரலாம். தைராய்டு ஹார்மோன் மூளை வளர்ச்சிக்கும் முக்கியமானது என்பதால் மூளைவளர்ச்சிக் குறைபாடு, குழந்தைகளின் கற்றல் திறன் பாதிப்பது போன்றவை ஏற்படலாம். தைராய்டு, பிட்யூட்ரி, அட்ரினல் மற்றும் இன்சுலின் ஹார்மோன்களால் வரக்கூடிய அனைத்து பிரச்னைகளும் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானது.

ஆண் பருவமடைவதில் உள்ள சிக்கல்கள்

பெண் பருவமடைவதை கொண்டாடும் அம்மாக்கள், பையன்களை கண்டுகொள்வதே இல்லை. ஆண்கள் பருவமடைவது சீக்கிரமாகவோ, மிகவும் தாமதமாகவோ நிகழ்வது அல்லது பருவம் அடைதலே நடக்காமல் இருப்பது போன்ற நிலைகள் உள்ளன. இதில் சீக்கிரமாக பருவமடைவதை Precocious puberty என்கிறோம். பிட்யூட்ரி சுரப்பி அதிகமாக வேலை செய்வதால், ஆண்களின் பருவமடையும் வயதான 9 வயதுக்கு முன்பே, மிக சீக்கிரமாகவே மீசை, தாடி மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்ச்சி, ஆணுறுப்பு வளர்வது போன்ற பருவமடைவதற்கான அறிகுறிகளில் வேகமான வளர்ச்சி காணப்படும்.

இந்த வளர்ச்சிகள் வேகமாக இருந்தாலும், உடல்வளர்ச்சி குறைந்து குள்ளமாக இருப்பார்கள். இதற்கு காரணம் பிட்யூட்ரி சுரப்பி அல்லது அட்ரினல் சுரப்பியில் கட்டி மற்றும் ஹைப்போ தைராடிசமாக இருக்கலாம். தாமதமாக பருவமடைதல் மற்றொரு நிலை. இந்த நிலையில் முகரும் தன்மை குறைபாடு, பிட்யூட்டரி மற்றும் அட்ரினல் சுரப்பு குறைவு, உயிரணுக்கள் மற்றும் கருமுட்டைகளை உற்பத்தி செய்யும் Gonads வெளிப்பாடு குறைவதாலும் தாமதமாக பருவமடைதல் ஏற்படுகிறது. ஆண்களுக்கான ஹார்மோன்கள் உற்பத்தி குறைவு மற்றும் ஆணுறுப்பு வளர்ச்சி இல்லாமல் இருப்பது. இது மூன்றாம் நிலை. உடலில் கொழுப்புத்தன்மை அதிகமாக இருப்பதால், ஆண்குறி உள்ளே அமுங்கிவிடும்.

இதை்தான் வளர்ச்சி இல்லை என்பார்கள். கொழுப்பை குறைத்தாலே இது தானாக சரியாகிவிடும். சில ஆண்களுக்கு Testosterone எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தியாகாமல் இருக்கலாம். ஆண்களுக்கான குரோமோசோம்களில் 46xy இருப்பதற்கு பதிலாக 46xxy என்று x குரோமோசோம் அதிகமாக இருப்பதால், விதைப்பை சிறிதாக இருப்பது உயிரணு உற்பத்தி குறைவு, ஆண்குறி வளர்ச்சியின்மை, பெண்களைப்போல மார்பகம் பெரிதாவது, பெண்களைப் போன்ற நடை போன்ற மாற்றங்கள் ஆண்களிடத்தில் இருக்கும். இதை கண்டுபிடிப்பதற்கு Testosterone பரிசோதனையும், FSH பரிசோதனையும் செய்வோம்.

இவையெல்லாம் விதைப்பையினுள் இருக்கும் பிரச்னைகள். சிலருக்கு விதைப்பையே வெளியில் வராமல் உள்ளிழுத்துக் கொண்டு இருக்கும். சிலருக்கு பிட்யூட்ரி சுரப்பி வேலை செய்யாமலோ, வளர்ச்சியில்லாமலோ இருக்கலாம். இதற்கு பரம்பரைத் தன்மையும் காரணமாகிறது. இதெல்லாம் பருவமடைவதில் ஆண் சந்திக்கும் பிரச்னைகளாகச் சொல்லலாம்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?

பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்னைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது. 
ஆண்கள் சந்திக்கும் பிற ஹார்மோன் பிரச்னைகள்…

வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.

இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.

ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டா?!

‘ஆண்ட்ரோபாஸ்’ என்ற வார்த்தை சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. வயதாவதால் ஆண்களின் பாலியல் செயல்பாடு குறையுமே தவிர, ஆண் ஹார்மோன் உற்பத்தி குறையுமா என்பது இன்னும் சர்ச்சை நிலையில்தான் இருக்கிறது. எல்லா ஆண்களுக்குமே ஆண் ஹார்மோன் உற்பத்தி குறைவதில்லை. எப்படி பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது இதயத்தைக் காக்கிறதோ, அதேபோல டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் ஆண்களின் இதயத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுவதால், குறைவாக இருப்பவர்களுக்கு இதை அதிகரிக்க சில சிகிச்சைகள் செய்கிறோம். ஆனால் ஆன்ட்ரோபாஸ் வருவதற்காக வாய்ப்பு இருக்கிறது.

திடீரென்று மாதவிடாய் வருவது நின்று பெண்களுக்கு மெனோபாஸ் வருவது மாதிரி, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்குமே தவிர இறுதிப்புள்ளி என ஒன்று ஏற்படுவதில்லை. அவ்வப்போது 80 வயதிலும் அப்பா ஆகும் செய்தியை படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆண்களின் 60, 70 வயதுகளில் உண்டாகும் மாற்றம்…

இந்த வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

பாலுணர்வை அதிகரிக்க அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி…

உடலுறவு கொள்வதன் தன்மை குறைவதற்கு பல காரணங்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையேயான நம்பகத்தன்மை, அன்பு, மன அழுத்தம் சம்பந்தப்பட்டது. ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு உடலுறவில் தன்னுடைய செயல்திறன் சரியில்லையோ என்று தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். தங்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஆண்மைக் குறைபாட்டைச் சரி செய்கிறோம்’ என்ற விளம்பரங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இனிமையான தாம்பத்ய வாழ்வுக்கு கணவன் மனைவிக்கிடையே நல்ல இணக்கமே போதும். அதற்கு கவுன்சிலிங்கே போதுமானது. இதுபோன்ற காரணங்கள் இல்லாமலும் உடலுறவு கொள்வதில் பிரச்னை தொடர்ந்தால் வயாக்ரா போன்ற சிகிச்சைகள் சரியானதுதான். ஆனால், இதய நோய் உள்ளவர்கள், குறிப்பாக நைட்ரேட் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் வயாகரா மாத்திரைகளை சாப்பிடக்கூடாது.
ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…


சனி, 6 ஏப்ரல், 2019

ஜேசிபி ...இயந்திரத்தின் கதை

எனக்கும் நம்ம மாப்பிள்ளை மனோகர் என்றால் ..மாப்பிள்ளையின் நினைவு தான் வரும் ...இயந்திரவியல் படித்த சர்வீஸ் என்ஜினீயராக உடுமலை ,தாராபுரம் ..பொள்ளாச்சி ..திண்டுக்கல் .கொடைக்கானல் .கேரளா ..பகுதி மூணார் ..பாலக்காடு பகுதிகளில் ஜேசிபி என்ஜின் சேவை என்றால் மனோகர் மாப்பிள்ளையை தான் நினைவுக்கு வருகிறார் ...இந்த துறைக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாக இந்த பணியில் அருமையான வாடிக்கையாளர்களை கொண்டு செவ்வனே பணிசெய்துகொண்டுள்ளார் ...

இவரின் வாடிக்கையாளர்கள் இவரின் தொழில் பக்தி கொண்டு தாமதமானாலும் பரவாயில்லை ..நீங்களே வந்து என்ஜின் பழுதுகளை நீக்கி கொடுங்கள் என்று கூறுவதை கேட்க்கும் பொழுது ..தன் பணியின் ஆர்வத்தை பார்த்து வியக்கமுடிகிறது நம்மால் ..வாழ்த்துக்கள் ..கடந்த முறை இவருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது ...இந்த இயந்திரத்தின் பலன்களை ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன் ..இருந்தாலும் களப்பணியில் நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு அளித்த மாப்பிளைக்கு நன்றிகள் ...

இதில் இன்னொரு விசயம்  எனக்கு புரிந்தது ..இந்த தொழிலை ..நம் வருங்கால சொந்தங்களுக்கும் இந்த துறையில் படித்த ..திறமை வாய்ந்த தம்பிகளை ,மாப்பிள்ளைகளை இனம் கண்டு அவர்களுக்கும் பயிற்சி அளித்து பணியை விரிவு படித்துக்கொண்டுள்ளது மகிழ்ச்சி ..இது தான் சமுதாய வளர்ச்சி ..தனிநபர் வளர்ச்சி ..இந்த மாதிரியான பணிகளை கற்றுக்கொடுப்பதற்கும் நல்ல மனம் வேண்டும் ...தற்பொழுது உள்ள சூழ்நிலைகள் அப்படி உள்ள காலத்தில் ..இந்த மாதிரியான பணிகள் அவரின் சிந்தனைகள் அருமையாக உள்ளது ...நம்ம மாப்பிள்ளைகளும் ..தம்பிகளும் ..எந்த ஒரு பணியென்றாலும் ..களத்தில் இறங்கி ஸ்மார்ட் போன் மாதிரி ..அவர்களின் பணிகளிலும் ஸ்மார்ட்ஆக உள்ளது பெருமையே ...

அதுவும் விடுமுறை தினம் என்றால் ..இயந்திரவியல் படித்தஇந்த பணியில் ஆர்வம் உள்ள  நம் தம்பிகளை அளித்துச்செல்வது கவனிக்கப்படவேண்டிய விசயம் ...

'பூமியை நகர்த்துபவர்கள்’ - எர்த் மூவிங் எக்யூப்மென்ட்ஸ் என்பதை இப்படிக்கூடச் சொல்லலாம். நம் நாட்டில் கட்டுமானத் துறை படுவேகமாக முன்னேறுவதற்கு இதுபோன்ற கட்டுமானத் துறை இயந்திரங்கள் முக்கியம்.
 அதில், முதல் இடம் வகிப்பது ஜேசிபி எனச் சொல்லப்படும் பேக்ஹோ லோடர் (BACKHOE LOADER) எனும் இயந்திரம். மேடோ, பள்ளமோ இந்த இயந்திரம் இருந்தால், சில மணி நேரத்தில் சாத்தியமாகிவிடும்!

 ஜேசி.பேம்ஃபோர்டு எஸ்கவேட்டர்ஸ் லிமிடேட் (J.C.Bamford Excavators Limited) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனத்துக்கு, நம் நாட்டில் ஹரியானா மாநிலத்தில் தொழிற்சாலை இருக்கிறது.
'உலகளாவிய அளவில் 66 ஆண்டுகளும், இந்தியாவில் 30 ஆண்டுகளும் அனுபவம் வாய்ந்த நிறுவனம் என்பதால், ஜே.சி.பி தயாரிப்புகள் அனைத்துமே பிரபலமானவை. பேக்ஹோ லோடரில் அதிகம் விற்பனையாவது 3டிஎக்ஸ் என்ற மாடல். இதன் 4.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் இன்ஜின், 2200 ஆர்பிஎம்-ல் 76 bhp சக்தியையும், 31.6 kgm டார்க்கை 1100 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. இந்த இயந்திரத்தின் முக்கியமான பாகம் ஹைட்ராலிக் பம்ப்தான். 3300 psi திறன்கொண்ட இது, 2200 ஆர்பிஎம்-ல் 110 lpm ஆயிலை செலுத்தவல்லது.
மண் அள்ள, குழி தோண்ட, பாறைகளை உடைக்க என்று பல்வேறு பயன்பாட்டுகளுக்கு ஏற்ப இதன் பக்கெட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இந்த வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை 24.55 லட்சம். இன்ஷூரன்ஸ் போன்றவற்றையும் சேர்த்தால், மொத்தம் 25 லட்ச ரூபாய். ஓர் ஆண்டு வாரன்டி உண்டு.
கடனுதவியில் இதை வாங்க வேண்டும் என்றால், வெறும் 15 சதவிகிதத் தொகையை, அதாவது மூன்றரை லட்சத்தை மட்டும் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லலாம். மாதந்தோறும் 55 ஆயிரம் வீதம் 3 வருடங்கள் இ.எம்.ஐ. செலுத்தினால், வாகனம் உங்களுக்கே சொந்தமாகிவிடும்.
தற்போது, மணிக்கு 700 ரூபாய் வாடகைக்குக் கிடைக்கிறது. எரிபொருள், ஆபரேட்டர் சம்பளம், பேட்டா எல்லாம் போக மணிக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் மாதம் 25 நாட்கள் வேலை கிடைத்தால்கூட, 60 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். இதன் ரீ-சேல் வேல்யூ மிக அதிகம் என்பதால், 3 ஆண்டுகள் கழித்துக்கூட 18 லட்ச ரூபாய்க்கு விலை போகும். ஆக, எப்படிப் பார்த்தாலும் இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. லாபம்தான் கிடைக்கும்''
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மழைக் காலத்துல பெருசா வேலை இருக்காது. மழைக் காலத்துக்குப் பிறகு வேலை அதிகமா இருக்கும். ..இன்னும் தகவல்களை மற்றெரு நாளில் பதிவிடுகிறேன் ..நன்றி 
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681



வியாழன், 4 ஏப்ரல், 2019

கோடைகாலம் குழந்தைகள் விளையாட்டு .......

பள்ளித்தேர்வு முடிந்து விட்டது. அனல்பறக்கும் வெயிலுக்குப் பயந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றனர். வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், ஒன்றரை மாத விடுமுறைக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் சேர பெற்றோர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுடன்  விளையாட்டுகளால் கோடை விடுமுறை காலத்தில் கூட்டம் நிரம்பி வழியும் என்றால், தெருக்களில் பெண் குழந்தைகளின் கூட்டம் அதைவிட அதிகமாக இருக்கும். கண்ணாமூச்சி குழந்தைகளுக்கு மிகப்பிடித்தமான விளையாட்டு. "கண்ணாமூச்சி ரே ரே, காதடைச்சா ரே ரே! ரெண்டு முட்டைய தின்னுட்டு மூனு முட்டைய கொண்டு வா" என்ற குழந்தைகளின் குதூகலத்தில் தெரு முழுவதும் மகிழ்ச்சி வழிந்தோடும். கூட்டம், கூட்டமாக குழந்தைகள் விளையாடும் விளையாட்டு "கொலை கொலையா முந்திரிக்கா". துண்டை பிரிமனை போலச்சுற்றி முதுகிற்குப் பின் போட்டு அவுட்டாக இந்த விளையாட்டின் போது படிக்கும் பாட்டு தான், "கொலை கொலையா முந்திரிக்கா- நரிய நரிய சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்-கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி".

சாக்பீசால் வட்டம் போட்டு அதற்கு நடுவில் புளியங்கொட்டைகளைப் போட்டு செதுக்கு முத்து விளையாடுவது, அதே புளியம்கொட்டைகளை வைத்து பல்லாங்குழி விளையாடுவது, ஆடு,புலி, ஆட்டம் விளையாடுவது, தாயம் விளையாடுவது, நொண்டி விளையாடுவது, பாண்டி விளையாடுவது, கயிறு கொண்டு தாவிக்குதிப்பது, நீச்சல் அடிப்பது, ராஜா-பொக்கா விளையாடுவது என பல விளையாட்டுகள் சிறுவர்களிடையே பிரபலம். கொஞ்சம் வெவரமான சிறுவர்கள் ஈ காசு விளையாடுவார்கள். தங்கள் கீழே போடும் காசில் ஈ உட்கார்ந்தால் ஜெயித்ததாக அர்த்தம். தோற்றவர் பிலிமோ, தீப்பெட்டி படமோ தரவேண்டும். தங்களுடைய காசில் ஈ உட்கார வேண்டும் என்பதற்காக மிட்டாய் தின்று விட்டு எச்சிலைத் தொட்டு காசு போட்டு ஏமாற்றவும் செய்வார்கள். இதைப் பார்த்து கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொண்டு வந்து காசைக் கழுவிவிட்டு போட்டி நடத்தவும் செய்வார்கள்.

அந்த காலத்தில் சிகரெட் அட்டையை வைத்து சிறுவர்கள் வெட்டுச்சீட்டு விளையாடுவது அதிகமாக இருக்கும். இதற்காக தளி பாதையில் காந்தி சவுக்கிலிருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் முடிய தீப்பட்டி அட்டைப்பெட்டி ..சிகரெட் பெட்டியை கலர் கலராக எடுத்து வைத்து கொண்டு மைதானத்தில் இந்த விளையாட்டுத் துவங்கி விடும். பாசின்சோ என்ற சிகரெட் அட்டைக்கு அப்போது அவ்வளவு மவுசு. இந்த அட்டைக்காக பெட்டிக்கடைகளுக்குச் சென்று காலிப்பெட்டிகளை எடுத்து வந்து பெருமை பொங்க காட்டுவதும் வீரம்கொள்ள நிகழ்வாக அப்போது கருதப்பட்டது. இந்த வெட்டுச்சீட்டுப் போட்டியில் பரிசுப்பொருளாக சினிமா பிலிம்களை வைத்து விளையாடுவார்கள். அதற்கு அடுத்து தெருவில் சிறுவர்கள் அதிகமாக விளையாடுவது கிட்டி தான். சிறு கம்பின் இருமுனையையும் ஊசியாக சீவி விட்டு, அதை பெரிய கம்பைக் கொண்டு கீந்தி விளையாடும் விளையாட்டு தான் இந்த கிட்டிப்புல்.

இது தவிர குண்டு விளையாடுவது ஒரு கோஷ்டிக்கு பிடிக்கும். குழிபறித்து குண்டு விளையாடுவது ஒரு வகை என்றால், நீண்ட தூரம் அடுத்தவனின் குண்டை அடித்துக் கொண்டே செல்வது "பூந்தா" என்ற விளையாட்டு. அடுத்து பம்பரக்கட்டை. இதற்காக நாட்டுக்கருவேலை மரத்தில் இருந்து கட்டையை சீவி பம்பரம் செய்வோம். இந்த கட்டையைக் கொண்டு செய்யப்பட்ட பம்பரங்களைக் கொண்டு விளையாடும்போது பலரின் பம்பரங்கள் உடைந்து போகும். ஆக்கர் வைக்காமலே குத்தும் குத்திலேயே பம்பரம் உடைந்து போகும் போது கதறும் சிறுவனின் தாயார் வந்து அவனது முதுகில் அறைந்து அழைத்துச் செல்வது வாடிக்கையான விஷயமாகும்.

ஒவ்வொரு வாரத்தின் ஞாயிறன்று தெருவில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பாட்டு, படிப்பு, நடனம், நாடகம் என விளையாட்டுப் போக்காக நடத்தப்பட்ட நிகழ்வுகளைப் பார்க்க அனைத்துப் பெற்றோர்களும் கூடுவதால் அன்றைய நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டுவிடும் எங்கள் தெரு. விடுமுறை நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலர், முறுக்கு, கடலைமிட்டாய் என வித்தியாசம் பார்க்காமல் வாங்கித்தருவார்கள். முறுக்கு என்றால் மாலை, கடலைமிட்டாய் என்றால் பாக்கெட், கலர் என்றால் லவ்வோ என வகை, வகையாக கவனிப்பு. இதற்காக பாட்டுப்போட்டிக்காக சினிமாப் பாடல்களைப் பாடிக்கொண்டே திரியும் குழந்தைகள் ஏராளம். நாடகம் என்றவுடன் குழந்தைகளுக்குள் பேசி ஸ்கிரிப்ட் உருவாகும். இதில் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் நடிப்பார்கள். இதனால் பள்ளியில் நடக்கும் நாடகங்களில் கலந்து கொள்வதற்கு நல்ல பயிற்சியாகவும் அமையும். ஆனால், தற்போது பள்ளிகளைத் தவிர ஆண், பெண் பேதமில்லாமல் பழக இடம் கிடைக்காமல் போய்விட்டது.

நமது பாட்டி, தாத்தா சொல்லித்தந்த விளையாட்டுக்களை மறந்து விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஒன்றரை மாதகாலம் தங்களுக்குப் பிடித்த விஷயத்தை, அதுவும் கற்க வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாப்பாட்டுக் கூடையோடு குழந்தைகள் செல்வதைப் பார்க்கையில் பயிற்சி என்பது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் பார்க்க முடிகிறது....இந்த கோடை விடுமுறையை பழைய நினைவுகளை நம் குழந்தைகளுடன் ..விளையாடவேண்டும் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்...

பெற்றோர் கவனத்துக்கு...

‘எப்போ பார்த்தாலும் தூக்கம்.... எழுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது’ என பெற்றோர் புலம்பியது அந்தக் காலம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தூக்கம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மொபைல், லேப்டாப், டி.வி என எந்நேரமும் ஏதோ ஒரு திரையில் ஆழ்ந்துகிடக்கிறார்கள். அதற்காக தூக்கத்தைத் தவிர்க்கிறார்கள்.

நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருந்துவிட்டு, சில மணி நேரமே தூங்கி எழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தூக்கம் என்பது மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அது குறையும்போது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படும். அதிலும் குழந்தைகளுக்குப் போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான பிரச்னைகளை சந்திப்பார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு ஏன் தூக்கம் அவசியம்?

தூக்கத்தின்போதுதான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.

சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.

அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல்.

பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு  9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை.

குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண்டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும்.

பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண்மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீனாகச் செய்யப் பழக்குங்கள்.

குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்சமின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள்ளுங்கள். தூங்குவதில் பிரச்சனை செய்கிற குழந்தைகளுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். படுக்கையில் இருந்தபடி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம்.

மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறைகளின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப்பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

உங்கள் குழந்தையை காலையில் எழுப்பும்போது அதிக சிரமமின்றி எழுந்துகொள்கிறார்களா என கவனியுங்கள். அப்படி எழுந்துகொண்டால் இரவில் நன்றாகத் தூங்கியிருக்கிறார்கள் என அர்த்தம். குழந்தைகள் போதுமான அளவு தூங்காமலிருக்க வெளிப்புறச் சூழல்கள் மட்டுமின்றி, உடல்ரீதியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம்.

எனவே, தூக்கத்தில் பிரச்னை இருக்கும் பிள்ளைகளின் தூக்கத்தை கவனியுங்கள். குறட்டை விடுகிறார்களா, இரண்டு மூச்சுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கிறதா, சுவாசப் பிரச்னைகளைப் பார்க்கிறீர்களா? மருத்துவரை சந்திக்க வேண்டியதன் அவசியம் உணர்த்தும் அறிகுறிகள் இவை.

தூக்கத்தில் நடப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றாலும் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னைகள் இருந்தால் குழந்தைநல மருத்துவரை அணுகுங்கள்.
பிற அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது......
5 வயது  குழந்தைகள் இருந்தால் நல்ல பலகதைகள் பேசி பெற்றோர்கள் உறங்க வைக்கலாம் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681